WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
கிரேக்கத்தில்
சர்வாதிகார
அச்சுறுத்தல்
Christoph Dreier
21 November 2011
வங்கிகளும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளும் கிரேக்கத்தில்
பாசிச
LAOS
உறுப்பினர்கள் அடங்கிய ஒரு
“தேசிய
ஐக்கிய”
அரசாங்கத்தை நிறுவியுள்ளது,
மற்றும் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியை பாதுகாப்பு
அமைச்சரகத்திற்குத் தலைமை தாங்க நியமித்துள்ளமையானது கிரேக்கம்
மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு தீவிர எச்சரிக்கையாக இதை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
நவம்பர்
17, 1973ல்
ஏதென்ஸில் பாலிடெக்னிக் மாணவர் எதிர்ப்புக்கள் நடந்ததற்கு
38
ஆண்டுகளுக்கு பின்
—
அமெரிக்க ஆதரவு பெற்ற கேணல்களின் ஆட்சிக் குழு இறுதியில் இதை
குருதி கொட்டி அடக்கியது
—
நிதிய மூலதனம் தொழிலாளர்களை நசுக்குவதற்காக,
மீண்டும் இராணுவ ஆட்சி அல்லது பாசிச சர்வாதிகாரத்தைச்
சுமத்துவது பற்றிப் பரிசீலிக்கிறது.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட
PASOK
யின் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ வங்கிகள் மற்றும்
ஐரோப்பிய நிறுவனங்களின் ஆணையின்பேரில் அவர் நடத்தி வந்த சிக்கன
நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை நசுக்குவதற்கு
இராணுவத்தை திரட்டியிருந்தார்.
ஆகஸ்ட்
2010
ல் வாகன சாரதிகள் தங்கள் தொழில் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதை
எதிர்த்து செய்திருந்த வேலைநிறுத்தத்தை இராணவ சிப்பாய்கள்
முறித்தனர்.
இந்த ஆண்டு அக்டோபர் மாதம்,
அரசாங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த குப்பைப் பிரிவுத்
தொழிலாளர்களை இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து
அவர்களை வேலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தியது.
பெப்ருவரி
4, 2011
ல் ஏதென்ஸ் நியூஸ் ஏஜென்ஸி இராணுவத்தின்
71வது
விமானப் படைப்பிரிவு சிக்கன எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுடன் ஒரு
மாதிரி மோதலை நடத்தின என்று தகவல் கொடுத்துள்ளது.
இப்பயிற்சியில்
“மோதும்
பிரிவுகளைக் கட்டுப்படுத்துல்”,
“மோதலைத்
தடுத்தல்”,
“கூட்டத்தை
அகற்றுதல்”
ஆகியவற்றிற்கான வழிவகைகள் இருந்தன.
அனைத்து ஜனநாயக உரிமைகளையும் அகற்றிவிட்டு இன்னும்
வெளிப்படையாக சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரலாமா என்பது பற்றி
ஆளும் வர்க்கத்திற்குள் அதிக மறைப்பு இல்லாத விவாதம் நடக்கிறது.
மே மாதம் ஒரு
CIA
அறிக்கை கிரேக்கத்தில் இராணுவ ஆட்சி மாற்றம் என்பது வரக்கூடிய
வாய்ப்புத்தான் என்று கூறியுள்ளது.
செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் கலகம்
செய்தனர்;
அதைத்தொடர்ந்து முழுநேரச் சிப்பாய்களின் தொழிற்சங்கமான அரச
ஆயுதப் படைகளின் ஆதரவு,
ஒத்துழைப்புச் சங்கமானது இராணுவம் அவருடைய கொள்கைகளை
“பெருகிய
கவலையுடன் கவனித்து வருகிறது”
என்று ஒரு கடிதத்தில் பாப்பாண்ட்ரூவை எச்சரித்தது.
பாதுகாப்பு மந்திரி பானோஸ் பெக்லிடிஸ் அதிகாரிகள்
“ஒரு
அரசிற்குள் ஒரு அரசு போல்”
செயல்பட்டுவருவதாகக் கண்டித்தார்.
பாப்பாண்ட்ரூ இராஜிநாமா செய்வதற்குச் சற்றுமுன்,
அவரும் பெக்லிடிஸும் ஆயுதப் படைகளின் முழு உயர்மட்ட
அதிகாரிகளையும் வேலைநீக்கம் செய்தனர்;
இது மிக நெருக்கமான ஆட்சிமாற்றம் தவிர்க்கப்பட்டது என்று பரந்த
முறையில் சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஒரு பெரிய இரு-நாள்
வேலைநிறுத்தம் ஏற்பட்டது;
ஐரோப்பிய ஒன்றியமும்,
சர்வதேச நாணய நிதியமும் ஏதென்ஸ் இன்னும் கடுமையான வேலை
நீக்கங்கள்,
ஊதிய,
ஓய்வூதிய வெட்டுக்களை மேற்கொள்ள வேண்டும் என்று புதிய
கோரிக்கைகளை முன்வைத்தன.
பாப்பாண்ட்ரூ புதிய சிக்கன நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள்
வாக்கெடுப்பு ஒன்று தேவை என்று கூறியதை எதிர்கொள்ளும் வகையில்
நிதியச் சந்தைகள் சீற்றமான எதிர்ப்புக்களைக் காட்டின.
வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து இராணுவத் தலைவர்களும் முந்தைய
புதிய ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்கள்.
இப்பொழுது புதிய ஜனநாயகக் கட்சி,
பாதுகாப்புத் துறையின் பொறுப்பைக் கொண்டுள்ளது,
புதிய பாதுகாப்பு மந்திரி டிமிட்ரிஸ் அவர்னௌபோலோஸ் அந்த
வேலைநீக்க முடிவுகளை மாற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தில்
LAOS
ஐச் சேர்க்கும் முடிவு குறிப்பிடத்தக்க வகையில்
அச்சுறுத்துவதாகும்.
இந்த நடவடிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கோ,
புதிய அரசாங்கம் அமைப்பதற்கோ கண்டிப்பாகத் தேவை என்பது இல்லை.
ஆனால் சர்வதேச நிதிய உயரடுக்கு மற்றும் கிரேக்க
முதலாளித்துவத்தின் புதிய ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஒரு
அரசியல் அடையாளத்தை அனுப்பும் வகையில்
LAOS
ஐச் சேர்த்துக் கொள்ளுவது என்னும் முடிவை எடுத்தனர்.
பாசிச உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுக்கப்படுகின்றன;
அவை மீண்டும்
“கௌரவம்
பொருந்தியதாக”
ஆக்கப்படுகின்றன;
ஏனெனில் இனவெறி,
தேசியவாதம் மற்றும் செமிடிய எதிர்ப்பு ஆகியவை மிகப்
பிற்போக்குத்தன,
சமூகத்தின் நோய்வாய்ப்பட்ட அடுக்குகளை தொழிலாள வர்க்கத்திற்கு
எதிராகத் திரட்டுவதற்குத் தளமாக ஆக்கப்படுகின்றன.
2000ம்
ஆண்டில் நிறுவப்பட்ட
LAOS
கிரேக்க தீவிர வலதின் குவிப்பு முனையாயற்று.
வெட்கம் கெட்ட முறையில் ஐரோப்பிய பாசிசத்தின் மரபார்ந்த
கருத்துக்களுக்கு அழைப்பு விடுத்தது.
நிறுவன மாநாட்டிற்குப் பின்
LAOS
ன் தலைவர் ஜோர்ஜ் கரட்ஜபெரிஸ்,
“நீங்கள்
முன்னேறுவதற்கு நீங்கள் யூதராகவோ,
ஓரினச் சேர்க்கையாளராகவோ அல்லது கம்யூனிஸ்ட்டாகவோ இருக்க
வேண்டும் என்று கூறுகின்றனர்.
நாம் இந்த மூன்றில் எந்த வகையும் இல்லை”
என்றார்.
LAOS “மேசன்கள்,
ஓரினச் சேர்க்கையாளர்கள்,
ஜியோனிசத்தை நம்பியிருப்பவர்கள் ஆகியோர் இல்லாத ஒரு
பாராளுமன்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்”
என்று அழைப்பு விடுத்தார்.
பலமுறையும்
LAOS
இராணுவச் சர்வாதிகாரம் தேவை என்று கூறியுள்ளது.
அதன் நிறுவன அறிக்கை இராணுவ அதிகாரிகள்,
திருச்சபை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றினால் அரசியல்
முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது.
இது சமூகநலச் செலவுக் குறைப்புக்களுக்கு ஆர்வத்துடன் ஆதரவு
கொடுப்பதுடன்,
ஐரோப்பிய ஒன்றியம் அக்டோபரில் உடன்பட்ட கிரேக்கக் கடன்
பகுதியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பதையும் எதிர்க்கிறது.
LAOS
ன் சித்தாந்தப் போக்கை இயற்றுபவர்களில் ஒருவரும்,
செமிட்டிய எதிர்ப்பாளரும் மற்றும் ஹோலோகாஸ்ட்டை மறுப்பவருமான
கோஸ்டாஸ் ப்ளவெரிஸ்,
2004
தேர்தல்களில் ஒரு முக்கிய வேட்பாளராக இருந்தார்.
அவருடைய மகன் அதனசியோஸ் பாராளுமன்ற உறுப்பினராக
2007ல்
பதவிக்கு வந்தார்.
2006ல்
கோஸ்டாஸ் ப்ளவெரிஸ் யூதர்கள்—முழு
உண்மை
என்ற புத்தகத்தை வெளியிட்டார்;
இதில் அவர் அடால்ப் ஹிட்லரைப் புகழ்ந்து யூதர்கள் அழிக்கப்பட
வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்.
நாசிக்களை இழிவுபடுத்திய மனிதர்களைவிடத் தாழ்ந்த தன்மை
உடையவர்கள்தான் யூதர்கள் என்றும் சித்திரிக்கிறார்.
தன்னை
“ஒரு
நாசி,
பாசிஸ்ட்,
இனவெறி கொண்டவர்,
ஜனநாயக விரோதி,
செமிடிய எதிர்ப்பு உடையவர்”
என்றும் அவர் விவரித்துக் கொள்கிறார்.
பொருளாதார அமைச்சரகத்தில் புதிய அரசச் செயலராக உள்ள அடோனிஸ்
ஜோர்ஜியடிஸ் இப்புத்தகத்திற்கு தொலைக்காட்சியில் நல்ல
விளம்பரம் கொடுத்து
“அதன்
செழிப்பான வாதங்களை”
உயர்த்திக் காட்டினார்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மறு எழுச்சி மற்றும் மக்களின்
அமைதியின்மை பெருக்கம் ஆகியவற்றின் ஆரம்பக் கட்டங்களுக்கு
இத்தகைய சக்திகளுக்கு ஊக்கம் கொடுப்பதுதான் நிதியப்
பிரபுத்துவத்தின் விடையிறுப்பு ஆகும்;
அரசியல் மறு எழுச்சி எகிப்திய புரட்சியில் தொடங்கி,
வெகுஜன ஆர்ப்பாட்டங்கள்,
வேலைநிறுத்தங்கள் என்று ஐரோப்பாவிலும்,
அமெரிக்காவில் வோல் ஸ்ட்ரீட் முற்றுகை என்றும் தொடர்கின்றன.
இராணுவ ஆட்சியானது எதிர்ப்பாளர்களை சிறையில் அடைத்து,
சித்திரவதை செய்து,
கொலையும் செய்வதைப் போல்,
முற்றுகை எதிர்ப்பாளர்களை மிருகத்தனமாக பொலிசார் அமெரிக்காவில்
அடக்குவது போல்,
ஐரோப்பா முழுவதும் ஆளும் வர்க்கம் வன்முறையால் அடக்குதல்,
பொலிஸ் அரச ஆட்சி இவற்றிற்கான தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல்கள் பெரும் அரசியல் ஒலிக்குறிப்பைக் கொண்டவை,
அதுவும் கிரேக்க மக்களின் பெரும் சோகம் ததும்பிய பின்னணியில்,
1967ம்
ஆண்டு சி.ஐ.ஏ.
மற்றும் நேட்டோ ஆகியவை ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவ
ஆட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்க இயக்க எழுச்சியை முன்கூட்டியே
தவிர்ப்பதற்காக ஜோர்ஜ் பாபடோபுலுஸ் தலைமையில் இராணுவ
ஆட்சிக்குழு ஆட்சி மாற்றம் செய்வதற்கு ஆதவைக் கொடுத்திருந்தன.
கேணல்கள் மிருகத்தனமாக தொழிலாள வர்க்க எதிர்ப்பு வெளிப்பாடு
ஒவ்வொன்றையும் நசுக்கினர்.
பல்லாயிரக்கணக்கான மக்களை அவர்கள் கைது செய்து,
சிறையிலடைத்து,
கைரோஸ்,
லெரோஸ் தீவுகளில் கொடும் சிறை முகாம்களையும் கட்டினர்.
கிரேக்க இராணுவ ஆட்சிக்குழுவின் பின்தோன்றல்களைப் பதவிக்குக்
கொண்டுவருவதின் மூலம்,
நிதியப் பிரபுத்துவம் கிரேக்கத்தில் மட்டும் இல்லாமல்,
ஐரோப்பாவிலும்,
உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்த்தை அச்சுறுத்துகிறது.
“இதே
போன்ற எதிர்ப்புக்களும் வேலைநிறுத்தங்களும் தங்கள் நாடுகளிலும்
நடக்கலாம் என்று ஐரோப்பியத் தலைவர்கள் அஞ்சுகின்றனர்”
என்று ஒரு முக்கிய ஐரோப்பிய தொழிற்சங்க ஆலோசகரான டிமிட்ரிஸ்
டிமிட்ரியடிஸ் துருக்கிய நாளேடான ஹுரியத் இடம்
தெரிவித்தார்.
இத்தகைய வருங்காலம்,
அதைத் தவிர்ப்பது எப்படி என்பதுதான் ஐரோப்பிய பொருளாதார
மற்றும் சமூகக் குழுவின் நவம்பர்
16ம்
தேதிக் கூட்டத்தின் விவாதத் தலைப்பாக இருந்தது என்றும் அவர்
கூறினார்.
“இப்பிரச்சினை
கிரேக்கத்துடன் மட்டும் தொடர்பு கொண்டது அல்ல”
என்றார் அவர்.
சர்வாதிகாரம் மீண்டும் எழுச்சிபெறக்கூடும் என்ற அச்சுறுத்தல்,
கிரேக்க இராணுவ ஆட்சி முறையின் வீழ்ச்சி,
போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினில் பாசிச ஆட்சிகளின் வீழ்ச்சி,
இன்னும் குறிப்பாக
1991ல்
சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிச ஆட்சித் தகர்ப்பு
ஆகியவற்றிற்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்கள்
வாஷிங்டனுடன் இணைந்து ஜனநாயக முதலாளித்துவத்தின் வெற்றியை
மேற்பார்வையிடும் என்னும் கூற்றுக்களுக்குப் பெரும் அடியைக்
கொடுக்கிறது.
மாறாக உலக முதலாளித்துவம் நெருக்கடிச் சேற்றில் ஆழ்ந்துள்ளது;
ஒவ்வொரு மேற்கு ஐரோப்பிய நாட்டின் அரசியல் அமைப்புமுறையும்
சரிவின் அச்சுறுத்தலைக் காண்கிறது;
முதலாளித்துவ ஜனநாயகம் உலகின் கண்ணெதிரிலேயே அழுகி நிற்கிறது.
கிரேக்கத்தில்
LAOS
க்கு ஊக்கத்தைக் கொடுக்கும் சர்வதேச நிதிய மூலதனத்தின் முடிவு
சர்வதேச முதலாளித்துவத்தின் ஜனநாயக உணர்வின் வீழ்ச்சிக்குச்
சான்றாக உள்ளது.
இந்த அச்சுறுத்துலுக்கு எதிரான போராட்டத்தில்,
கிரேக்கத் தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்தை மட்டும்
எதிர்கொள்ளவில்லை;
சமூக ஜனநாயகக் கட்சிகள்,
அவற்றின் துணைக் கோள்கள் என்று ஸ்ராலினிச,
பப்லோவாத இன்னும் பிற போலி இடது அமைப்புக்களின் அரசியல்
துரோகத்தையும் எதிர்கொள்கின்றன.
அரசு மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன்
தவிர்க்கமுடியாமல் பிணைந்துள்ள இவைகள் தங்களை ஆளும்
வர்க்கத்தின் முகவர் அமைப்புக்கள் என்பதை இன்னும் அப்பட்டமாகக்
காட்டிக் கொள்கின்றன;
புதிய அரசாங்கத்திற்கு எதிராக இச்சக்திகள் எவ்விதத் தீவிரப்
போராட்டத்தையும் நடத்தவில்லை.
நிதிய உயரடுக்கின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டம்
ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகப் பெருகும் தாக்குதல்களுக்கு
எதிரான போராட்டத்துடன் இணைந்து வருகிறது.
ஜனநாயக உரிமைகள் மீது உறுதிப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு,
அதைப் பாதுகாக்கும் திறன் உடைய ஒரே சமூக சக்தி தொழிலாள
வர்க்கம்தான்.
ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுத்தப்பட்டு
இணைக்கப்படுவதுதான் தேவையாகிறது;
அதைத் தொடர்ந்து ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ் அரசியல்
அதிகாரத்திற்கான போராட்டம் சுயாதீனமாக நடத்தப்படுவதும்
தேவையாகும். |