WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
Obama lays down the challenge to China
சீனாவிற்கு ஒபாமா
சவால்விடுகிறார்
By Peter Symonds
18 November 2011
நேற்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆஸ்திரேலியப்
பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை எழுச்சி பெற்று வரும்
சீனாவிற்கு எதிராக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின்
மேலாதிக்கத்தை மறுஉறுதி செய்யும் ஒரு ஆழ்ந்த இராஜதந்திர,
பொருளாதார,
மூலோபாயத் தாக்குதல் முறையைத்தான் அடையாளம் காட்டியது.
ஆஸ்திரேலிய வருகை ஒபாமாவின்
ஆசியா மீதான குவிப்பின் ஒரு பகுதி ஆகும்;
இது கடந்த வார இறுதியில் ஹோனோலுலுவில் ஆசிய பசிபிக் பொருளாதார
ஒத்துழைப்பு
(APEC)
மாநாட்டில் தொடங்கி நாளை கிழக்கு ஆசிய உச்சிமாநாடு
(EAS)
வரை தொடரும்.
பெய்ஜிங்கிற்கு தவறிற்கு இடமில்லாத வகையில் ஒரு செய்தியை
அனுப்பும் வகையில்,
ஒபாமா
“அமெரிக்கா
ஒரு பசிபிக் சக்தி,
இங்கு நீடித்திருப்பதற்குத்தான் உள்ளோம்”
என்று அப்பட்டமாக
அறிவித்தார்.
அவருடைய நிர்வாகம் மிகப் பெரிய செலவுக் குறைப்புக்களுக்குத்
தயாரித்து வருகையில்,
அமெரிக்க இராணுவப் பிரசன்னம் ஆசியாவில் “முன்னுரிமை பெறும்”
என்று ஒபாமா அறிவித்து,
“அமெரிக்க
இராணுவச் செலவுகளில் வெட்டுக்கள் என்பது—ஆசிய பசிபிக்கின் இழப்பில்—மீண்டும்
கூறுகிறேன்,
ஆசிய பசிபிக்கின் இழப்பில்—வராது”
என்றும் வலியுறுத்தினார்.
புதன்கிழமை ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஜூலிய கில்லார்டுடன்
ஒரு கூட்டுச் செய்தி மாநாட்டில் பேசிய ஒபாமா,
அமெரிக்க மரைன்களை வடக்கு ஆஸ்திரேலியாவில் தளம் கொள்ளுவதற்கான
திட்டங்களை அறிவித்தார்;
அதேபோல் ஆஸ்திரேலியத் துறைமுகங்கள் மற்றும் விமானத்தளங்கள்
கூடுதலான அமெரிக்கப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படவும்,
அமெரிக்க ஆஸ்திரேலிய இராணுவங்களுக்கு இடையே விரிவாக்கப்படவுள்ள
கூட்டுப் பயிற்சி,
செயல்முறைகளையும் அறிவித்தார்.
பாலித் தீவுகளுக்குப் பறந்து செல்லுமுன் வடக்கு நகரமான
டார்வினில் நேற்று ஆஸ்திரேலியத் துருப்புக்களின் மத்தியில்
பேசுகையில்,
ஒபாமா இத்தகைய உயர்நிலைப் பிரசன்னம் அமெரிக்க இராணுவ சக்தியை
தென்கிழக்கு ஆசியா முழுவதும் எடுத்துக்காட்டும் நோக்கத்தை
உடையது என்பதைத் தெளிவாக்கினார்.
“இப்பிராந்தியம்
உலகிலேயே மிக சுறுசுறுப்பான கடற்பாதைகள் சிலவற்றைக்
கொண்டுள்ளது;
அவைகள் நம் பொருளாதாரங்கள் அனைத்திற்கும் மிகவும் முக்கியமானவை.
நெருக்கடி காலங்களில்….
டார்வின் பெரும் பரபரப்பைக் கொள்ளும்”
என்று ஒபாமா அறிவித்தார்;
இது இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அமெரிக்க இராணுவத்தின்
முக்கிய தளமாகச் செயல்பட்டதை பற்றிய குறிப்பு ஆகும்.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் ஒபாமாவின் உரை,
அவரே விவரித்துள்ள,
மத்திய கிழக்கில் இருந்து ஆசியாவிற்கு என அமெரிக்கக்
கொள்கையின் குவிப்பு நகர்ந்துள்ள
“பரந்த
மாற்றத்தைக்”
காட்டியது.
ஆஸ்திரேலியாவுடன் வலுவான இராணுவ உறவுகள் என்பது “ஒரு “உறுதியான,
மூலோபாய முடிவின்”
ஒரு பகுதியாகும்….
இப்பிராந்தியத்தில் அது ஒரு கூடுதலான,
நீடித்த தன்மையை உருவாக்குவதில் பங்கைக்
கொண்டுள்ளது.”
சீனாவை எதிர்கொள்ளும் இந்த
“மாற்றம்”
அமெரிக்க ஆளும் வட்டங்களில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுடன்
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
சீனாவை ஆசியாவில் அமெரிக்க இழப்பில் தன் செல்வாக்கைப்
பெருக்கிக் கொள்ள அனுமதித்துள்ளது என்ற கவலைகளைத்தான்
பிரதிபலிக்கிறது.
தன்னுடைய நோக்கம்
“சீனாவைக்
கட்டுப்படுத்துவது அல்ல”
என்று வாஷிங்டன் கூறுகிறது;
ஆனால் தன் நிர்வாகத்தின் ஒவ்வொரு ஆசிய அரசாங்கத்துடனும்
வலுப்படுத்தும் உறவுகளைப் பட்டியலிட்ட ஒபாமாவின் உரை அந்த
முடிவிற்குத்தான் இட்டுச் செல்லும்.
ஜப்பானுடனான அமெரிக்க உடன்பாட்டை
“இப்பிராந்தியப்
பாதுகாப்பின் முக்கிய நிகழ்வு”
என்று அவர்
குறிப்பிட்டார்.
இந்தியா
“கிழக்கு
நோக்கிப் பார்க்கும் உறுதிப்பாடு,
ஒரு ஆசிய சக்தி என்னும்
முறையில் அதிக பங்கைக் கொள்ளுவது”,
சிங்கப்பூரில் அமெரிக்க போர்க் கப்பல்களை நிலைநிறுத்தச்
செய்வது,
பிலிப்பைன்ஸில்
“கப்பல்
வருகைகள்,
பயிற்சிகளை அதிகரிப்பது”
மற்றும் தென் கொரியப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் ஆகியவைகள்
அவரால் உயர்த்திக்காட்டப்பட்டன.
கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டிற்கு முன்னரே,
ஒபாமா தான்
“ஆயுதப்
பெருக்கம் மற்றும் பாதுகாப்பு,
தென் சீனக் கடலில்
ஒத்துழைப்பு உட்பட”
பல பிரச்சினைகளைப் பற்றிப் பேச இருப்பதாக அடையாளம்
காட்டியுள்ளார்.
தென் சீனக் கடல் பகுதியில் அதன் போட்டி பிரதேச உரிமைகளைப்
பற்றிய பன்முக விவாதங்கள் எதையும் தீவிரமாக சீனா எதிர்க்கிறது. “வெளிச் சக்திகளின்
குறுக்கீடு இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவாது”
என்று சீனாவின் உதவி வெளியுறவு மந்திரி லியு ஜேன்மின் இந்த
வாரம் எச்சரித்திருந்தார்.
சீனாவிற்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பு
(ASEAN)
உறுப்பு நாடுகளுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் ஒபாமா
நிர்வாகமானது தென் சீனக் கடல் பகுதி பற்றிய அழுத்தங்களை
உயர்த்தியுள்ளது.
வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸை இன்னும் கூடுதலான உறுதிகொண்ட
நிலைப்பாட்டை பூசலுக்குட்பட்ட கடற் பகுதிகளில் சீனாவிற்கு
எதிராக கடற்படை மோதல் நிகழ்வுகள் வரும் வகையில் எடுத்துக்
கொள்ளுமாறு அமெரிக்கா ஊக்கம் கொடுத்து வருகிறது.
அக்வினோ நிர்வாகம் ஆக்கிரோஷத்துடன் மேற்கு பிலிப்பைன்ஸ் கடல்
என்று இப்பொழுது அது அழைக்கும் பகுதியில் தன் நிலைப்பாட்டை
வலியுறுத்தி வருகையில்,
அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கிளின்டன்,
“அமெரிக்கா
எப்பொழுதுமே பிலிப்பனைஸ் உடன் இணைந்திருக்கும்,
உங்களுடன் நின்று போராடும்
என்பதை நான் கூற விரும்புகிறேன்”
என்று இந்த வாரம் கூறினார்.
இந்த வாரம் முழுவதும்,
ஒபாமா பலமுறையும் ஒரு முக்கிய சக்தியாக விளங்க விரும்பினால்,
சீனா
“சர்வதேச
விதிகளின்படி நடந்துகொள்ள வேண்டும்”
என்று அறிவித்தார்.
ஆனால்
“விதிகள்”
என்பவை வாஷிங்டனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணைக்கு
உட்பட்ட ஓர் உலக ஒழுங்கில் மற்ற நாடுகள் தாழ்ந்த பங்கைக்
கொண்டிருக்க வேண்டும் என்னும் வகையில் இயற்றப்படுகின்றன.
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பேசுகையில்,
ஒபாமா அமெரிக்கா தொடர்ந்து “சீனா சர்வதேச நெறிகளை நிலைநிறுத்த
வலியுறுத்தும்,
சீனாவை மக்கள் மீதும் அனைவருக்கும் பொருந்தும் மனித உரிமைகளை
மதிக்க வேண்டும்”
என்று வலியுறுத்தும் என்று அறிவித்தார்.
“மனித
உரிமைகள்”
என்பது சீனாவுடன் மோதலை அதிகரிக்கப் பயன்படுத்த விரும்பும்
ஒபாமாவின் கோட்பாட்டு ஆயுதம் ஆகும்.
ஜனரஞ்சகத் திருப்திக்காக,
“வரலாறு’’
சுதந்திர வேட்கை கொண்டவர்கள் பக்கம் உள்ளது—சுதந்திர சமூகங்கள்,
சுதந்திர அரசாங்கங்கள்,
சுதந்திரப் பொருளாதாரங்கள்,
சுதந்திர மக்கள் என.
வருங்காலம் அந்த உயர்சிந்தனைகளைக் கொண்டவர்களுக்குத்தான்
உறுதுணையாக நிற்கும்,
இப்பிராந்தியத்திலும்,
உலகம் முழுவதிலும்”
என்று அவர் அறிவித்தார்.
இத்தகைய கருத்துக்கள் முற்றிலும் இழிந்தவை.
ஒபாமா “தடையற்ற வணிகம்”
குறித்துப் பேசுகையிலேயே,
ஆசிய நாடுகள் மீது வணிக உடன்பாடு ஒன்றைச் சுமத்தும் நோக்கத்தை—பசிபிக்
கடந்த பங்காளித்தனம் என்பதை—கொண்டுள்ளார்;
இது அமெரிக்கப் பெருநிறுவனத்தின் நலன்களைப் பூர்த்தி செய்யும்
வடிவமைப்பைத்தான் முற்றிலும் கொண்டுள்ளது.
“தடையற்ற
பேச்சுரிமை”,
“கூடும்
உரிமை”
என்னும் அவருடைய குறிப்புக்கள் அமெரிக்க பொலிஸ் ஒவ்வொரு
நகரத்திலும் முற்றுகை இயக்க முகாம்களை அகற்றுவதில் மிருகத்தன
வலிமையை கையாள்கையில் வெற்றுத்தனமாகத்தான் ஒலிக்கின்றன.
இன்னும் அடிப்படையில்,
“ஜனநாயகம்”
என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழ் ஒரு கொள்ளை நலன்களைத்
தொடரும் கோஷமாக உள்ளது;
அமெரிக்கத் துருப்புக்கள் இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில்
நூறாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் நாட்டு உயிர்களைக்
குடித்ததிலிருந்தே இந்நிலைதான் உள்ளது. 1941க்கும்
1945க்கும்
இடையே அமெரிக்காவானது பசிபிக்கில் ஜப்பானிய
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிட்டு தன் ஆதிக்கம்
அப்பிராந்தியத்தில் நிலவ உறுதி செய்தது;
குறிப்பாக சீனா மீது.
1949ம்
ஆண்டு,
சீனப் புரட்சியானது அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரி சியாக்
கேய் ஷேக்கை அகற்றியபோது,
அமெரிக்கா தென் கொரிய சர்வாதிகாரத்திற்கு முட்டுக் கொடுத்து
நிறுத்தும் வகையிலும்,
பெய்ஜிங்கில் மாவோயிச ஆட்சியை உறுதிகுலைக்கும் வகையிலும் ஒரு
போரை நடத்தியது.
1960
களிலும்,
1970
களிலும்,
வாஷிங்டன் வியட்நாமில் இரண்டாவது நவ காலனித்துவப் போர் ஒன்றை,
அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும், “ஆசியாவில் கம்யூனிசத்தை”
கட்டுப்படுத்துவதற்கும் நடத்தியது.
இந்த ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொள்ளைச்
சான்றுகளைப் பாராட்டும் வகையில் ஒபாமா,
“டார்வின்
குண்டுவீச்சிலிருந்து பசிபிக் தீவுகளின் விடுதலை வரை,
தென்கிழக்கு ஆசியாவின்
அரிசி நிலங்களில் இருந்து குளிர்ச்சியான கொரியத் தீபகற்பம் வரை,
ஜனநாயகம் வாழ்வதற்காக பல தலைமுறை அமெரிக்கர்கள் இங்கு
பணிபுரிந்துள்ளனர்,
இறந்துள்ளனர்”
என்று அறிவித்தார்.
உண்மையில் அமெரிக்கா ஆசியாவில் சர்வாதிகாரங்களை ஒன்றன்பின்
ஒன்றாக ஆதரித்துள்ளது;
பிலிப்பைன்சின் இழிந்த மார்க்கோஸ் ஆட்சியில் இருந்து
இந்தோனிசியாவில் சுகர்ட்டோ இராணுவக்குழு ஆட்சி வரை;
இது குறைந்தபட்சம் அரை மில்லியன் தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி
உறுப்பினர்களைப் படுகொலை செய்து பதவிக்கு வந்தது.
தொடர்ச்சியான ஆஸ்திரேலிய அரசாங்கங்கள்—தொழிற்
கட்சி மற்றும் லிபரல்—அமெரிக்க
ஏகாதிபத்தியத்தை முழுமையாக ஆதரித்து வந்துள்ளன என்ற ஒரு
கருத்துத்தான் ஒபாமா கூறியவற்றில் உண்மையானது ஆகும்.
ஒபாமாவின்
“மனித
உரிமைகள்”
பற்றிய வனப்புரையில் எவரும் மயங்கிவிடத் தேவையில்லை.
இவருக்கு முன் பதவியில்
இருந்த புஷ்ஷைத் தொடர்ந்து இவரும் ஈராக்கில் நவ காலனித்துவ
ஆக்கிரமிப்பை நீட்டித்துள்ளார்,
ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் போரை விரிவாக்கம்
செய்துள்ளார்,
மேலும் ஐரோப்பியச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு லிபியா மீது
குண்டுத் தாக்குதல் நடத்தி திரிப்போலியில் ஒரு வாடிக்கை
ஆட்சியை நிறுவியுள்ளார்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவம்
விரிவாக்கப்படுவதில் பெருந்தன்மையான நிலைப்பாடு ஏதும் இல்லை.
அமெரிக்க ஏகாதிபத்தித்திற்கு சீனா அல்லது பிற போட்டி நாடுகள்
அதன் பசிபிக் மீதான ஆதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும்
சமாதானமான விருப்பம் ஏதும் கிடையாது;
இதற்காகத்தான் அது
70
ஆண்டுகளுக்கு முன்னரே போரிட்டது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வெளியுறவுக் கொள்கையில்
ஒபாமாவின் “மாற்றம்”
என்பது
“அமைதியான,
வளமான பிராந்தியம் மற்றும் உலகிலுள்ள மக்களின் கௌரவத்திற்கு”
புதிய சகாப்தத்தை திறக்கும் நிகழ்வு அல்ல;
மாறாக அமெரிக்காவிற்கும்
சீனாவிற்கும் இடையே மோதலையும் அழுத்தங்களையும் விரிவாக்கும்
தன்மையுடையதுதான்;
இது மனிதகுலத்தையே மற்றொரு பெரும் இராணுவக் காட்டுத்தீ என்னும்
இடரில் ஆழ்த்தும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. |