WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The German state and the neo-Nazi killings
ஜேர்மன் அரசும் நவ நாசிசக் கொலைகளும்
Ulrich Rippert and Alex
Lantier
18 November 2011
கடந்த இரு வாரங்களாக
ஜேர்மனியச் செய்தி ஊடகம் கடந்த
13
ஆண்டுகளாக ஜேனா
(Jena)
நகரில் மூன்று நவ நாசிசக் குழுக்களின் நடவடிக்கைகள்
பற்றிப் பரந்த தகவல்களைக் கொடுத்துள்ளன.
இக்குழுவினர் குறைந்தப்பட்சம்
10
துருக்கிய மற்றும் கிரேக்கக் குடியேறியவர்களையாவது
கொன்றுள்ளதுடன்,
பிற வன்முறைக் குற்றங்களையும் ஜேர்மனி உள்துறை உளவுத்துறை
அமைப்புக்களின் பார்வையிலேயே இதைச் செய்துள்ளன;
உளவுத்துறை அமைப்புக்களின் தீவிரமாக பரந்த தீவிர வலது
வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது,
அவற்றுள் ஒன்றுதான் ஜேனா குழுவாக செயற்பட்டுள்ளது.
மூன்று நவ நாசிச குழுக்களும்
1990களில்
அதிதீவிர வலதுசாரி
Thuringian Homeland Security (THS)
அமைப்பிலிருந்து உருவானவைகள்;
THS
இன் தலைவர் டிமோ பிராண்ட்
2001ல்
ஒரு இரகசிய முகவர் என்று அம்பலப்படுத்தப்பட்டார்.
Der Spiegel
இடம் அவர் ஏழு ஆண்டுகளாக
200,000
மார்க்குகளுக்கு மேல்
BVS
உளவுத்துறைக்கு உளவாளி என்ற முறையில் பெற்றதாகக் கூறினார்.
இப்பணத்தில் ஒவ்வொரு சென்ட்டையும் அவர் தீவிர வலதுசாரிக்
குழுக்களுக்கு நிதியளிப்பதில் செலவழித்தார்.
ஜேனாக் குழு
1998ல்
பொலிசார் அதன் உறுப்பினர்கள் ஒருவருடைய கார் தரிப்பிடம்
ஒன்றில் குண்டுத் தயாரிப்பு இடத்தைக் கண்டுபிடித்த பின்,
தலைமறைவுக் குழு ஆயிற்று.
அவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஒரு சர்வதேசப் பிடி ஆணையை
அவர்கள் எதிர்கொண்டாலும்கூட,
ஜேர்மன் அரசால் பிடிக்கப்படுவதை அடுத்துவந்த 13
ஆண்டுகள் அவர்களால்
தவிர்க்க முடிந்தது.
இக்காலக்கட்டத்தில் அக்குழுக்கள் குறைந்தபட்சம்
10
இனவெறி உந்துதல்
கொலைகளை நடத்தியுள்ளன.
ஜேர்மன் இரகசிய உளவுத்துறை முகவர்களால் ஊடுருவப்பட்டுள்ள தீவிர
வலது குழுக்கள் மூன்று பகிரங்க ஒற்றுமை இசை நிகழ்ச்சிகளுக்கு
ஏற்பாடு செய்யும் அளவிற்குச் சென்றன;
அவற்றில் கிடைத்த பணம் மூன்று பயங்கரவாதிகளிடம்
கொடுக்கப்பட்டது.
நவம்பர்
4ம்
திகதி ஜேனா குழு பற்றிய தகவல்கள் அம்பலமாயின;
இதன் உறுப்பினர்கள் இரண்டு
பேர் ஒரு வங்கிக் கொள்ளை நடந்த இடத்திலிருந்து தப்பியோடுகையில்
சுடப்பட்ட நிலைமையில் கண்டறியப்பட்டனர்.
ஜேர்மனின் பாதுகாப்புப் பிரிவினரின் உதவியில்லாமல் மூன்று ஜேனா
பயங்கரவாதிகள் இத்தனை காலம் பிடிபடாமல் தப்பியிருக்க முடிந்தது
என்பதை நம்புவது கடினம் ஆகும்.
ஹெசைன் இரகசியப் பிரிவு முகவர் ஆண்ட்ரீஸ் டி.
யின் பங்கு பெரும்
சந்தேகத்திற்கு உரியது ஆகும் அவர் சொந்தக் கிராமத்தில் அவருடைய
வலது கண்ணோட்டத்திற்காகக்
. “சிறிய
அடால்ப்”
என்று புனைபெயரில் அழைக்கப்பட்ட அவர்,
ஜேனா குழு நடத்திய கொலை
வேலைகளில் குறைந்தபட்சம் ஐந்திலேயாவது காணப்பட்டதாகக்
கூறுப்படுகிறது.
இதில்
2006ம்
ஆண்டு கசெலில் ஒரு இணையத்தள நிலைய உரிமையாளரை சுட்டதும்
அடங்கும்;
அங்கு அவர் ஒரு சாட்சி என்னும் முறையில் பொலிசாருக்கு சுயமாகத்
தகவல் கொடுக்க மறுத்தார்.
Bild.de
வலைத் தளம் மேற்கோளிட்டுள்ள “பாராளுமன்றக் கட்சிகள்”
அறிக்கைகளின்படி,
பல ஆண்டுகளாக ஆண்ட்ரீஸ் டி.யிடம்
கொடுக்கப்பட்டுள்ள வேலைகளில்
THS
உடைய தலைமறைவு முகவர்களைக் கண்காணித்தலும் அடங்கியிருந்தது.
பாதுகாப்புச் சேவைகளானது வன்முறை பாசிஸ்ட்டுக்களுடன் கொண்டுள்ள
தொடர்புகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பிய
முதலாளித்துவம் வாஷிங்டன் மற்றும் லண்டனுடன் ஒத்துழைத்துத்
தோற்றுவிக்கப்பட்ட ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளின் ஜனநாயக
விரோதத் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜேனா குழுவின் குற்றங்கள்,
அரசுடன் அதனுடைய தொடர்பு ஆகியவை இந்த வரலாற்றிலிருந்து
இயல்பாகவே வெளிப்படுகின்றன.
குளிர்யுத்தத்தின் முதல் ஆண்டுகளில் ஐரோப்பாவில் சோசலிசப்
புரட்சி என்னும் அச்சுறுத்தலை அவைகள் எதிர்த்துப் போராடுகையில்,
மேற்கத்தையச் சக்திகள் பல முன்னாள் நாசி அதிகாரிகளை ஜேர்மன்
அரசிற்கு தெரிந்தெடுத்து நியமித்தனர்.
ஜேர்மனிய உளவுத்துறைப் பிரிவுகளில் இது மிகவும் அதிகமாக
இருந்தது.
1950ல்
நேச நாடுகளால் குளிர்யுத்தத்தின் ஒரு கருவியென நிறுவப்பட்ட
இந்த அமைப்பு ஏராளமான முன்னாள் கெஸ்டோபோ உறுப்பினர்களைப்
பணியில் அமர்த்தியது;
அவர்கள் கம்யூனிஸ்ட்டுக்களைத் தங்கள் முக்கிய விரோதிகளாகக்
கண்டனர்.
2009ல்
“பழுப்புநிற
அறை ஆவிகள்”
என்ற தலைப்பில்,
கன்சர்வேடிவ்
Frankfurter Allefemeine Zeifung
எழுதியதாவது: “பல
SS, Gestapo
அதிகாரிகளுக்கு,
குடியரசின் தொடக்க ஆண்டுகள் தங்கள் பழைய தொழில் மீட்பின்
களிப்பான ஆண்டுகளாக இருந்தன.
அவர்களில் ஹிட்லரின் வெகுஜனக் கொலைக் கருவியில் தீவிரமாக
இருந்து குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தவர்கள்,
1949க்குப்
பின்னர் நிறுவப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுள் பாய்ந்து
நிலைபெறுவதில் வெற்றிபெற்றனர்.
கூட்டாட்சியின் மத்தியப் பொலிஸ் படை,
வெளிநாட்டு உறவுத்துறைச்
சேவை ஆகியவற்றிலும்
BVS
எனப்பட்ட கூட்டாட்சி உளவுத்துறை அமைப்பிலும்,
Wehrmacht, SS
ஆகியவற்றில் இருந்த பழைய தோழர்கள் தங்கள் நாசித் தத்துவத்தை
முதல்
20
ஆண்டுகள் பயிற்சி அளித்த காலத்தில் செயற்பாட்டு பாணியில்
உட்செலுத்தினர்.
நேச நாடுகள்
BVS
க்கு
1955ம்
ஆண்டில் ஜேர்மனிய அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டைத்
திருப்பிக் கொடுத்தபோது,
Adenauer
அராசங்கம்
Hubert Schrübbers
ஐ—நாசி
ஆட்சியில் ஒரு
SA
உறுப்பினராகவும் தலைமை வக்கீலாகவும் செயற்பட்டவர்
—
நிறுவனத்தை நடத்துவதற்குத்
தேர்ந்தெடுத்தது.
அவருடைய மேற்பார்வையில் பல முன்னாள்
SS
உறுப்பினர்கள்
BVS
முக்கிய பதவிகளை
கைப்பற்றியிருந்தனர்.
Schrübbers
இறுதியில் 1982ம் ஆண்டு அவருடைய
நாசிக் கடந்த காலம் வெளிப்பட்ட நிலையில்,
இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார்.
ஜேனா நவ நாசிசக் குழுவின் சான்றுகள் தெளிவாக்குவது போல்,
பாசிசத்திற்கும் ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளுக்கும் இடையேயான
அத்தொடர்புகள் இன்றளவும் தொடர்கின்றன.
இவைகள் ஜேர்மனியிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு
ஒரு தீவிர எச்சரிக்கையாக உள்ளன;
முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையே நிதிய மூலதனம்
கோரும் மிருகத்தன வெட்டுக்களைச் சுமத்துவதற்கு தேவையான
வலிமையைச் செயல்படுத்த இப்பிற்போக்கு சக்திகள்தான்
பயன்படுத்தப்படுகின்றன.
கிரேக்கத்தில் புதிய
“தொழில்நுட்பவாத”
ஆட்சி,
தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் செல்வாக்கற்ற சமூகநலச்
செலவு வெட்டுக்களைக் கட்டாயமாக செயல்படுத்துவதற்கு
சுமத்தப்பட்டுள்ள அரசாங்கம்,
கிரேக்கத்தின் பாசிச
LAOS
கட்சி உறுப்பினர்கள் பலரைக்
கொண்டுள்ளது.
ஒருவேளை இராணுவ சதி மூலம் ஆட்சிமாற்றம் ஏற்படலாம் என்ற
வதந்திகளுக்கு இடையே,
வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி பாதுகாப்பு அமைச்சரவையின்
பொறுப்பை எடுத்துக் கொள்ளுகையில்,
வங்கிகள் கோரும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் கிரேக்கத்
தொழிலாளர்கள் இப்பொழுது
1967
முதல்
1974
வரை கிரேக்கத்தை
CIA
ஆதரவுடன் ஆண்டுவந்த இராணுவ ஆட்சியின் வெளிப்படையான ஆதரவாளர்களை
கொண்ட அரசாங்கத்தை எதிர்கொள்கின்றனர்.
ஜேர்மனியில் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியுள்ள
நிரபராதியான மக்களை இரக்கமின்றிப் படுகொலை செய்துள்ளமையானது,
பாசிச சக்திகளையும் அதற்கான அரச இயந்திரத்தையும் முதலாளித்துவ
நெருக்கடிக்கு எதிராக அணிதிரண்டுள்ள தொழிலாள வர்க்கத்தை
எதிர்ப்பதற்கான தயாரிப்பு ஆகும்.
இவைகளை முழுத் தொழிலாள வர்க்கமும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின்
ஊழல் மிகுந்த அரசியல் கட்டமைப்புக்களுக்கு எதிராக ஒரு
புரட்சிகரப் போராட்டத்திற்கு அணிதிரட்டப்பட வேண்டிய தேவையை
அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
|