WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
பெர்லுஸ்கோனியும்
இத்தாலிய
“இடதும்”
Peter Schwarz
16 November 2011
இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியின் இராஜிநாமாவை
தொடர்ந்து,
பல ஆண்டுகள் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்த செய்தித்தாள்கள்
உட்பட ஏராளமான செய்தித்தாள்கள் அவர் பதவியில் இருந்த
ஆண்டுகளைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன.
இக்கட்டுரைகள்
“17
இழக்கப்பட்டுவிட்ட ஆண்டுகளைப்”
பற்றிக் குறிப்பிட்டு,
பில்லியன் செய்தி ஊடகப் பேரரசர் நாட்டின் அறநெறி,
அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரிவுகளுக்கு இழைத்த தீமைகளைக்
கூறியுள்ளன.
ஆனால் எவ்வாறு பெர்லுஸ்கோனி மூன்று அரசாங்கங்களுக்கு தலைமை
வகிக்க முடிந்தது,
மொத்தம் அதிகாரத்தில்
10
ஆண்டுகளுக்கு இருக்க முடிந்தது என்பது பற்றிய விளக்கம் ஏதும்
காணப்படவில்லை.
Süddeutsche
Zeitung,
ல்
எழுதியுள்ள ஸ்டீபன் கோர்னீலியஸ் ஒரு கோமாளியின்
சாதுர்யத்திற்கு தாழ்ந்த வாக்காளர்கள் பற்றிக் குறிப்பிட்டு
“திசைதிருப்புவதற்கான
தேவை மற்றும் எளிமைப்படுத்தல்”
ஆகியவைகளில் ஆர்வம் காட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால்
“அரசியலோ
கடினமானது,
சிக்கல் வாய்ந்தது.”
இத்தகைய அறிக்கை வெற்றுத்தனம் என்பது மட்டுமின்றி,
அரசியல் செயற்பாட்டின் உந்துதலையும் கொண்டுள்ளது.
பொருளாதார வல்லுனரும் முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையருமான
மரியோ மோன்டியின் புதிய
“தொழில்நுட்பவாத”
அரசாங்கத்தை நியாயப்படுத்த இது நன்கு பொருந்தும்.
இந்த ஜனநாயகத்தன்மையற்ற கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கம்,
அரசாங்கக் கருவி மற்றும் நடைமுறைக் கட்சிகள் மூலம் தன்னை
இருத்திக் கொண்டது,
கோர்னிலியிஸ் அழைக்கும்
“திசைதிருப்பும்
மக்கள் விருப்பத்திற்கு”
எதிராக,
நிதியச் சந்தைகளின் ஆணைகள் மூலம் செயற்படுத்தப்படும் சிக்கன
நடவடிக்கைகளைச் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரே
நோக்கத்திற்காக நிறுவப்பட்டுள்ளது.
வாக்காளர்களை இழிந்த முறையில் பேசுவது மட்டுமே
பெர்லுஸ்கோனியின் இத்தாலிய அரசியலில் கிட்டத்தட்ட இரு
தசாப்தங்கள் இருந்த மையப்பங்கை விளக்கிவிட முடியாது.
முதலில் அத்தகைய கருத்து இத்தாலிய வணிக நலன்கள் மற்றும்
வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து அவர் பெற்றிருந்த ஆதரவைத்
தவிர்த்துப் பேசுகிறது.
ரஷ்ய தலைவர் விளாடிமிர் புட்டின் மற்றும் பிரிட்டிஷ் பிரதம
மந்திரி டோனி பிளேயர் ஆகியோர் அவருடைய நண்பர்கள்,
உடன்பாட்டினர் குழாமில் இருப்பவர்கள்.
முன்னாள் ஜேர்மனியச் சான்ஸ்லர் ஹெல்முட் கோஹ்ல் மற்றும்
தற்பொழுதைய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோரும் இவருடைய
Forzas Italia
ஐரோப்பிய மக்கள் கட்சியில் சேர உதவினர்.
பெர்லுஸ்கோனியின் சொந்தச் செய்தி ஊடகப் பேரரசு,
பொதுவான ஊழல் நலிந்த அரசியல் அமைப்புமுறை மற்றும் முன்னாள்
பிரதம மந்திரியின் மறைமுகத் தொடர்புகள் எனக் கூறப்படுவோர்
அனைவரும் அவருடைய அரசியல் வெற்றிக்கு பங்களிப்பு அளித்தவர்கள்
ஆவார்கள்.
ஆனால் பெர்லுஸ்கோனியின் ஏற்றத்தில் மிக முக்கியமான காரணி,
நாட்டின் உத்தியோகபூர்வ
“இடது”
ஆனது எதிர்ப்பாக காட்டிய செயலற்றத்தன்மை,
கோழைத்தனம் மற்றும் முடிவிலாக் காட்டிக் கொடுப்புக்கள்
ஆகியவையே.
வேறு எந்த ஐரோப்பிய நாடும் இத்தனை அரசியல் ஏற்ற இறக்கங்களையும்
வெகுஜன எதிர்ப்புக்களையும் கடந்த
20
ஆண்டுகளில் அனுபவித்ததில்லை.
ஆனால் ஒவ்வொரு முறையும்,
“இடது”
கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ்
இருப்பதற்கு உதவின,
பெர்லுஸ்கோனி அதிகாரத்தைத் தக்க வைக்க உதவின.
1992
ம் ஆண்டு இத்தாலியைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக
ஆண்டுவந்த கட்சிகள் ஊழல் சகதியில் சிக்கிச் சரிந்தன.
கிட்டத்தட்ட
3,000
முக்கிய வணிகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியலைச் சேர்ந்தவர்கள்
காவலில் வைக்கப்பட்டனர்.
கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் உடைந்து போயினர்.
–சோசலிஸ்ட்
கட்சி கலைக்கப்பட்டது,
அதன் தலைவர் பெட்டினோ க்ராக்ஸி நாட்டை விட்டு ஓடிப்போனார்.
ஊழலினால் பாதிக்கப்படாத ஒரே கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியானது
1990ல்
ஏற்கனவே தீவிரமாக வலதிற்கு மாறிவிட்டது;
கம்யூனிச பெயரைக் கைவிட்டு அதன் பெயரை ஜனநாயக இடது என்றும்
மாற்றிக் கொண்டது.
1993ம்
ஆண்டு நாட்டின் அரசியல் நெருக்கடியின் உச்சக்கட்டத்தில்,
அது இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்தடவையாக
அரசாங்கத்தில் பங்கு பெற்றது;
இத்தாலிய மத்திய வங்கித் தலைவர் கார்லோ அஜெக்லியோ சியாம்பி
தலைமையில் நிறுவப்பட்ட வல்லுனர்கள் அரசாங்கத்தில் சேர்ந்தது.
அரசாங்கத்தில் ஈடுபட்டிருந்த மற்றைய கட்சிகள் இழிவிற்குட்டபட்ட
கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் சோசலிஸ்ட்டுக்களும் ஆகும்.
முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சி எஞ்சியிருந்த இத்தாலிய அரசியல்
நடைமுறையுடன் கூட்டுச் சேர்ந்தது,
பெர்லுஸ்கோனி அதிகாரத்தில் ஏற்றம் பெற அரங்கு அமைத்தது.
கட்டமைப்புத்துறை மற்றும் செய்தி ஊடக முயற்சியாளர்,
பரந்த ஊழலுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட செல்வக்கொழிப்பு
உடையவர்,
இத்தாலிய வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் அவதூறில் இருந்து
வெற்றியாளராக வெளிப்பட்டார்.
பெர்லுஸ்கோனியின் போர்சா இத்தாலிக் கட்சி,
அவருடைய செய்தி ஊடகம் மற்றும் வணிகப் பேரரசின் ஒரு பிரிவைப்
போல் செயல்பட்டது,
1994ம்
ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றது.
இதன்பின் பெர்லுஸ்கோனி அவருடைய முதல் அரசாங்கத்தை நவ பாசிச
இத்தாலி சமூக இயக்கம்
(Movimento Sociale Italiano)
மற்றும் இனவெறி வடக்குக் கழகத்துடன் சேர்ந்து அமைத்தார்.
ஆனால் பெர்லுஸ்கோனி இத்தாலிய தொழிலாள வர்க்கத்தைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளவில்லை.
அவர் தன்னுடைய முன்மாதிரியான மார்கரெட் தாட்சரைப் பின்பற்றி,
இத்தாலிய சமூக முறையை உடைக்க முற்பட்டபோது,
மில்லியன் கணக்கானவர்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்து
நாட்டை முடக்கினர்.
அவருடைய கூட்டிணி முறிந்தது;
ஏழே மாதங்களில் பெர்லுஸ்கோனி பதவியை இராஜிநாமா செய்யும்
கட்டாயத்திற்கு உட்பட்டார்.
மீண்டும் இடது ஜனநாயகவாதிகள் வல்லுனர்கள் அரசாங்கம் ஒன்றிற்கு
ஆதரவைக் கொடுத்தனர்;
இம்முறை அது சியாம்பையைப் போல் மத்திய வங்கிக்குப் பல ஆண்டுகள்
தலைமை தாங்கி,
பெர்லுஸ்கோனியின் கீழ் நிதி மந்திரியாகவும் இருந்த
லாம்பெர்ட்டோ டினியின் தலைமையில் அமைந்தது.
1996ம்
ஆண்டு புதிய தேர்தல்களுக்கு பின்னர்,
இடது ஜனநாயகவாதிகள் ரோமனோ பிரோடியின் மையவாத-இடது
அரசாங்கத்திற்கு ஆதாரமாயினர்.
பிரோடியோ ஒரு பொருளியல் வல்லுனராகவும் முன்னாள் கிறிஸ்துவ
ஜனநாயகவாதியும் ஆவார்.
பிரோடி அரசாங்கம் கடுமையான வரவு-செலவுத்
திட்ட ஒருங்கிணைப்பு முறையைக் கையாண்டது,
யூரோவை அறிமுகப்படுத்தியது.
இக்காலக்கட்டத்தில்
PRC (Communist
Refoundation party)
எனப்பட்ட கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷன் கட்சியினர் பெருகிய முறையில்
முக்கிய பங்கு வகித்தனர்.
இடது ஜனநாயகவாதிகளைப் போலவே,
PRC
யும்
1990ல்
கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளிப்பட்டது;
ஆனால் தன் பெயருடன்
“கம்யூனிஸ்ட்”
என்பதைத் தக்க வைத்துக் கொண்டது.
இது விரைவில் ஒரு புகழிடத்தை விரும்பிய அனைத்து குட்டி
முதலாளித்துவ
“இடது”
குழுக்களுக்கு பாலைவனச் சோலைபோல் ஆயிற்று.
ஒரு கட்டத்தில்
PRC
ஐரோப்பிய போலி இடதுகள் முழுவதாலும் போற்றப்பட்டது,
மற்ற இடது கட்சிகளுக்கு முன்மாதிரியென மதிக்கப்பட்டது.
PRC
பெருகிய சமூக தீவிரமயமாதலின் சூழ்நிலையில் செல்வாக்கு
வளர்ச்சியுற்றது.
1996ம்
ஆண்டு அது மொத்த வாக்குகளில்
8
சதவிகிதத்தைப் பெற்றது.
ஆனால் அதன் பிரதிநிதிகள் தங்களை டினி மற்றும் பிரோடி
அரசாங்கத்திற்கு தாழ்த்திக் கொண்டு,
அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு உதவினர்.
PRC
1998ல்தான்
பிரோடிக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டது;
பெருகும் சமூக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தன் செல்வாக்கை
இழந்துவிடக் கூடும் என்ற அச்சத்தில் இது நடைபெற்றது.
இதன்பின் பிரோடி இராஜிநாமா செய்தார்,
இடது ஜனநாயகவாதி மாசிமோ டி’அலேமா
அரசாங்கத் தலைவரானார்.
ஐந்து ஆண்டுகள் பிரோடி மற்றும் டி’அலேமாவின்
கீழ் சிக்கன நடவடிக்கைகள் என்பது பெர்லுஸ்கோனி மீண்டும்
அதிகாரத்தைக் கைப்பற்றப் பாதை அமைத்தன.
2001ல்
அவர் தேர்தலில் வெற்றிபெற்று,
முதல் தடவையாக முழு ஐந்து ஆண்டு பதவிக் காலத்திற்கும் பதவியில்
இருக்க முடிந்தது.
மீண்டும் வெகுஜன எதிர்ப்புக்கள் கிளம்பின—இதில்
மூன்று மில்லியன் மக்கள்
2003ம்
ஆண்டு ரோமிற்கு ஈராக் போரை எதிர்த்து ஆர்ப்பாட்ட அணிவகுப்பும்
அடங்கும்.
ஆனால்,
PRC
மற்றும் தொழிற்சங்கங்கள் குறுக்கிட்டு வெகுஜன இயக்கம்
அரசாங்கத்திற்கு ஆபத்து கொடுக்காமல் உறுதிப்படுத்தின.
2006ம்
ஆண்டு பெர்லுஸ்கோனி ஓர் இழந்த சக்தியாகிவிட்டார் என்று
தோன்றியது.
தேர்தலில் மிகப் பெரிய அளவில் தோல்வியுற்றார்;
பிரோடி மீண்டும் பதவிக்கு வந்து,
இடது ஜனநாயகவாதிகள் முதுகெலும்புபோல் இருந்த அரசாங்கம்
ஒன்றிற்குத் தலைமை தாங்கினார்.
இம்முறை
PRC
ஆனது பிரோடியின் கொள்கைகளுக்குப் பாராளுமன்றத்தில் வாக்களித்தன
என்பது மட்டும் இல்லாமல்,
அவருடைய அமைச்சரவையிலும் சேர்ந்து ஒரு மந்திரிப் பதவியையும்
வகித்தது.
இரண்டாவது பிரோடி அரசாங்கம் முதல்முறையைக் காட்டிலும் நச்சு
நிறைந்த வகையில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டது.
ஓய்வூதியங்களில் ஆழ்ந்த வெட்டுக்களை அது சுமத்தி,
ஆப்கானிய போரைத் தொடர்ந்து,
நாட்டில் இருந்த அமெரிக்க இராணுவத் தளத்தை பெரும் மக்கள்
எதிர்ப்பை பொருட்படுத்தாமல் விரிவாக்கமும் செய்தார்.
இரண்டு ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தபின்,
பிரோடி மிகச் செல்வாக்கு இழந்த நிலையில்,
பெர்லுஸ்கோனி ஒரு திடீர் தேர்தலில் வெற்றி பெற முடிந்ததுடன்,
அதிகாரத்திற்கு மூன்றாம் முறையாக வந்தார்.
இப்பொழுது,
வரலாறு மீண்டும் அதேபோல் நடக்கும் என்றுதான் தோன்றியது.
பெர்லுஸ்கோனி அரசியல் அளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட
சர்வதேச நிதியச் சந்தைகள் மற்றும் இத்தாலிய வணிக
அமைப்புக்களால் இராஜிநாமா செய்யப்பட நேர்ந்தது;
ஏனெனில் வெட்டுக்களைப் போதிய உத்வேகத்துடன் அவர்
செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை அவைகளுக்கு இல்லை.
இப்பொழுது தங்களை ஜனநாயகவாதிகள் என்று அழைத்துக் கொள்ளும் இடது
ஜனநாயகவாதிகள் மீண்டும் வல்லுனர்கள் அரசாங்கம் ஒன்றை ஆதரிக்க
முடிவெடுத்துள்ளனர்;
அது ஓய்வூதியங்கள்,
ஊதியங்கள்,
சமூக நலன்கள் அரசாங்க நலன்கள் ஆகியவற்றைக் கடுமையாகக்
குறைக்கும் உறுதியைக் கொண்டுள்ளது.
இந்த அமைப்புக்களின் அரசியல் திவால்தன்மை அவற்றின் தலைவர்களே
அதை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாக உள்ளது.
நீண்டகாலம்
PRC
யின் முக்கிய உறுப்பினரும் இப்பொழுது அபுலியா பிராந்தியத்தின்
தலைவராகவுமுள்ள நிச்சி வென்டோலா இத்தாலிய இடது
“வெளிப்படையான
நம்பிக்கைத்தன்மை அற்ற நெருக்கடியில் உள்ளது”
என்று அறிவித்தார்;
இது
“கருத்துக்கள்,
பார்வை,
புதிய அரசியல் வடிவங்கள் ஆகியவை அற்ற”
நிலையில் உள்ளது;
இதன் விளைவு
“முழு
அரசியல் முடக்கம்”
என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இம்முறை ஆபத்து பெர்லுஸ்கோனி மீண்டும் வருதல் என்று
மட்டும் இல்லை.
சமூகத் தாக்குதல்கள்,
மோன்டி அரசாங்கத்தால் திட்டமிடப்படுபவை,
1930களின்
மிகப் பெரிய சர்வதேச பொருளாதார நெருக்கடி என்ற பின்னணியில்
காணப்பட வேண்டியவை,
அரச கருவியின் ஆதரவு என்ற தளத்தைக் கொண்டுள்ளது;
பாராளுமன்றத்தில் உறுதியற்ற பெரும்பான்மையை தளமாகக்
கொண்டுள்ளது;
முற்றுலும் பெரும் உறுதியற்ற தன்மையைக் கொண்டுள்ளது.
தொழிலாள வர்க்கம் ஆரம்ப முயற்சியை எடுக்கத் தவறினால்,
இந்த
“தொழில்நுட்பவாத
அரசாங்கம்”
ஒரு வெளிப்படையான சர்வாதிகார ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும்.
இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் தொழிலாளர்கள் தங்கள் அரசியல்
உரிமைகள் மற்றும் சமூக நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரே பாதை
அரசியல் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு,
சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய
கட்சியைக் கட்டமைப்பதுதான்.
இந்த இலக்கை ஒட்டி,
பழைய தொழிலாளர்கள் கட்சிகள்,
தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் திவால்தன்மை,
மத்தியதர வர்க்க
“இடதில்”
உள்ள அவற்றின் போலி இடது சோசலிச நட்பு அமைப்புக்களின்
சீர்குலைவு ஆகியவைகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்
கொள்ளுவது மிகவும் முக்கியமாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும்
உலக சோசலிச வலைத் தளம்
ஆகியவை தொடர்ச்சியாக இந்த அமைப்புக்களின் பங்கிற்கு எதிராக
எச்சரித்து வந்துள்ளன.
PRC
ஐரோப்பாவிற்கு முன்மாதிரி என ஏனையவைகள் பாராட்டியபோது,
நாங்கள் அதன் பிற்போக்குத்தனப் போக்கை நிரூபிக்க முயன்றோம்.
உடனடியான பணி இத்தாலியிலும் ஐரோப்பா முழுவதும் அனைத்துலகக்
குழுவின் பிரிவுகளைக் கட்டமைப்பதுதான். |