சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The unravelling of the European Union

ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய ஐயப்பாடுகள்

Peter Schwarz
14 November 2011

use this version to print | Send feedback

யூரோவின் முடிவும் ஐரோப்பிய ஒன்றியம் சிதைதல் என்பதும் ஓராண்டிற்கும் குறைவான காலத்திற்கூட பொதுவாக நினைத்துப்பார்க்க முடியாத கருத்துக்களாகத்தான் இருந்தன. இப்பொழுது அவைதான் ஐரோப்பிய அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத்துக்களாக உள்ளன.

 

ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் சமீபத்தில் பாராளுமன்றத்தில் எச்சரித்தார்: “யூரோ தோல்வியுற்றால், ஐரோப்பாவும் தோல்வியடையும்.” இதேபோன்ற எச்சரிக்கைகள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியாலும் கொடுக்கப்பட்டுள்ளன. எப்பொழுதுமே யூரோவைப் பற்றி அவநம்பிக்கைப் பார்வையை கொண்டுள்ள பிரிட்டிஷ் செய்தி ஊடகம் என்று மட்டும் இல்லாமல் ஐரோப்பிய சார்பு ஏடுகளான பிரான்சின் Le Monde, ஜேர்மனியில் Die Zeitare போன்றவையும்கூட ஐரோப்பிய பொது நாணயம் தோல்வி அடையக்கூடும் என்ற நிலைப்பாட்டை ஒதுக்கவில்லை.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ அத்தகைய நிகழ்வின் பொருளாதார விளைவுகளை மிக இருண்ட முறையில் சித்திரித்துள்ளார். யூரோப் பகுதி சரிவது ஒரு பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும்; அது உடனடியாக ஐரோப்பிய பொருளாதாரத்தின் மதிப்பில் பாதையைத் தகர்த்துவிடும், கண்டத்தையே 1930 களில் நிலவியது போன்ற மந்த நிலையில் ஆழ்த்திவிடும் என்று அவர் அறிவித்தார்.

ஆனால் மேர்க்கெல், சார்க்கோசி மற்றும் பரோசோ ஆகியோர் அத்தகைய பேரழிவைத் தகர்ப்பதற்காகக் கூறும் மாற்றீடும் சிறிதும் குறைந்த தன்மை இல்லாத பேரழிவைத்தான் கொடுக்கும். சமூக வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டின் மீதும் நிதியச் சந்தைகளின் சர்வாதிகாரம் நிறுவப்பட வேண்டும் என்ற அளவிற்கு அது உள்ளது. கிரேக்கத்திலும் இத்தாலியிலும் நடைபெற்றுவரும் சமீபத்திய நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. இந்த இரு நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தெரிந்தெடுக்கப்படும் வல்லுனர்கள் அடங்கிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுகிறது; அவற்றிற்கு எந்தவித ஜனநாயக நெறித்தன்மையும் கிடையாது. அவற்றின் பணிகள் முன்னோடியில்லாத சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதின் மூலம் மக்களுடைய வாழ்க்கைத் தரங்களை சிதைப்பதாகும்.

உண்மையில், சிக்கன நடவடிக்கைகள் மூலம் யூரோவைக்காப்பாற்றுவது”, ஐரோப்பிய சிதைவைப் பாதுகாப்பது என்பது எதிரிடையானவை அல்ல, அதே அடிப்படைநோக்கம் கொண்ட இணையான அரசியல் மூலோபாயங்கள்தாம். பிரஸ்ஸல்ஸில் நடந்த சமீபத்திய உச்சிமாநாடு இரண்டின் போக்கையும் நிர்ணயித்தது. கிரேக்கத்திற்கும், இத்தாலிக்கும் அது தண்டனை வகையிலான சிக்கன நடவடிக்கைகளை ஆணையிட்டு, கிரேக்க வரவு-செலவுத் திட்டத்தைமுக்கூட்டின்” – ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகட்டுப்பாட்டிற்குத் தாழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் இது கிரேக்கத்தை யூரோப் பகுதியில் இருந்து வெளியேற்றிவிடவில்லை.

மேர்க்கெலுடைய சான்ஸ்லர் அலுவலகம் ஏற்கனவே அத்தகைய நடவடிக்கையின் நிதிய உட்குறிப்புக்கள் பற்றிய ஆய்வுகளைத் தயாரித்துள்ளது; ஒரு நாடு யூரோப்பகுதியை விட்டு நீங்கினால், மற்றவை பெருமளவு வெளியறப்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மற்றொரு தவறான போக்கு பிரஸ்ஸல்ஸ் உச்சிமாநாட்டினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 17 யூரோ நாடுகளின் நிதிய, பொருளாதாரக் கொள்கைகள் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்டும் என்னும் அதன் முடிவு, ஒருவித பொருளாதார அரசாங்கத்தை அமைப்பது என்பது யூரோப் பகுதிக்கு வெளியே உள்ள 10 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை ஒதுக்கி விடும். ஐரோப்பாவை ஜேர்மனி மற்றும் பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மையப் பகுதி என்றும் மற்றொரு செயலற்ற தொகுப்பு என்று பிரிப்பதும் தயாரிப்பில் உள்ளன. குறிப்பாக, லண்டன் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராகத் தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தீர்க்கமுடியாத சங்கடத்தை எதிர்கொள்கிறது. யூரோ தோல்வியுற்றால், ஐரோப்பிய ஒன்றியம் முறிந்துவிடும். ஆனால் யூரோ ஒரு மையத் தொகுப்பு ஐரோப்பாவால், ஜேர்மனி அல்லது ஜேர்மனி-பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு உயிர்த்து வைக்கப்பட்டிருந்தால், அதுவும் ஐரோப்பாவின் சிதைவிற்கு வழிவகுக்கும். இரு வழிவகைகளிலும், விளைவு ஐரோப்பா பெரும் சிதைவுறுதல்தான்; மீண்டும் கடந்த நூற்றாண்டுகளில் தோற்றுவிக்கப்பட்ட தேசிய மோதல்கள் வழிவகைதான் திரும்பிவரும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதைவை மார்க்ஸிஸ்ட்டுக்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே எதிர்பார்த்தனர். 1920 களில் ஐரோப்பா ஒன்றுபடுத்தப்படுதல் ஒரு உடனடித் தேவை என்று கருதிய லியோன் ட்ரொட்ஸ்கி, அக்கருத்தைப் பற்றிப் பல கட்டுரைகளை வெளியிட்டார். முதலாளித்துவ அடித்தளத்தில் ஐரோப்பாவை ஒன்றுபடுத்த இயலாது என்று அவர் சுட்டிக் காட்டினார்; ஏனெனில் முதலாளித்துவத்தில் சொத்துடைமை பிரிக்க முடியாமல் தேசிய-அரசுடன் பிணைந்துள்ளது. தொழிலாளர வர்க்கத்துடன் மோதலில் நிற்கும், சர்வதேசப் போட்டியாளர்களுடன் போட்டியில் நிற்கும் முதலாளித்துவம் தன் வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்குத் தேசிய அரசின் தேவையைக் கொண்டுள்ளது; அது இல்லாமல் முதலாளித்துவம் தொடர்ந்து இருக்க முடியாது.

 

1923ல் பிராவ்தாவில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், ட்ரொட்ஸ்கி எழுதினார்: “அரசிற்குள் மற்றும் வெர்சாயில் சுமத்தப்பட்டுள்ள சுங்கவரி எல்லைகளுக்குள் ஐரோப்பா பொருளாதார அளவில் வளர்ச்சியைப் பெறமுடியாது. இந்த எல்லைகளை அகற்றும் கட்டாயத்திற்கு ஐரோப்பா உட்படுகிறது அல்லது முழுப் பொருளாதாரச் சரிவு என்னும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஆனால் ஆளும் முதலாளித்துவம் ஏற்றுள்ள வழிவகைகள் அது தோற்றுவித்துள்ள எல்லைகளையே கடப்பது என்பது, இருக்கும் குழப்பத்தை அதிகரித்துள்ளதுடன், சிதைவை விரிவுபடுத்துகிறது.

 

1989ம் ஆண்டு கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் தட்டுத்தடுமாறி நிற்கையில், செழிப்பான ஐரோப்பிய முதலாளித்துவமானது ஐரோப்பா பற்றிய போலித் தோற்றங்கள் பரந்த அளவில் கூறப்பட்ட நேரத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் ஐரோப்பியத் தேர்தல் பிரகடனத்தில் எழுதியது: “ஐரோப்பிய ஒற்றைச் சந்தை முறை ஐரோப்பிய ஐக்கியம் என்ற பொருளைக் கொடுத்துவிடாது. முற்றிலும் மாறாக, இது மிகச் சக்தி வாய்ந்த ஐரோப்பிய பெருநிறுவனங்களுக்கு ஒரு அரங்கைத் தோற்றுவிக்கிறது; இவை ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கான தங்கள் போராட்டத்தைப் புதுப்பிப்பதற்காக  ஏற்கனவே இரு உலகப் போர்களை இந்த நூற்றாண்டில் நடத்தியுள்ளன. இது முதலாளித்துவக் குவிப்பு மற்றும் ஏகபோக உரிமை என்னும் ஒரு புதிய அலையுடன் இணைந்துள்ளது, தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகளை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லுகிறது.”

தற்போதைய நிகழ்வுகள் இந்த ஆய்வை முழுமையாக உறுதிசெய்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஐரோப்பா, பொருளாதார வகையில் ஒருங்கிணைப்பில் முன்னேற்றம் கண்டது அசாதாரண வரலாற்றுச் சூழலின் விளைவு ஆகும்ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகம் வர்க்கப் போராட்டத்தை அடக்கியது, மற்றும் அமெரிக்காவின் பெரும் பொருளாதார சக்தி ஆகியவை ஆகும்; இவை போரினால் நாசமுற்ற ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு மார்ஷல் திட்டத்தை அளித்து, டாலரை உலக இருப்பு நாணயம் என்றும் நிறுவின. பனிப்போர்க் காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பொது முன்னணி அமைத்ததும் மேற்கு ஐரோப்பியச் சக்திகள் ஒன்றாக இணைந்திருக்க உதவியது.

ஆனால் மிகச் சக்தி வாய்ந்த பொருளாதார தேசிய அரசு கூட ஒரு நீடித்த, செயற்படக்கூடிய வடிவமைப்பை உலகப் பொருளாதாரத்தின் முற்போக்கு வளர்ச்சிக்கு அளிக்க முடியாது. அமெரிக்கா, உலக முதலாளித்துவத்தை தன் அரவணைப்பு, மேலாதிக்கம் ஆகியவற்றின்கீழ் மறுகட்டமைத்த முயற்சி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் சக்தி வாய்ந்த போட்டியாளர்களின் எழுச்சிக்கும் அதன் சொந்தச் சரிவிற்குமேதான் வழிவகுத்துள்ளது.

ஆனால் முரண்பட்டுள்ள தேசிய நலன்கள் ஒருபொழுதும் கடக்கப்படவில்லை. மாறாக ஐரோப்பிய ஒருமைப்பாடு என்னும் வழிவகை பொதுவாகத் தொடர்புடைய அனைத்துத்தரப்பினரின் நலன்களை ஒட்டித்தான் வளர்ச்சியுற்றது; ஜேர்மனிக்கு ஏற்றுமதிச் சந்தைகளுக்கு அணுகும் வழிவகை எளிதாகக் கிடைத்தது; தன்னுடைய மரபார்ந்த ஜேர்மனிய எதிரியைக் கட்டுப்படுத்த பிரான்சிற்கு ஒரு வழிவகை கிடைத்தது; பிரிட்டனுக்கு அதன் பேரரசின் மடிவிற்குப் பின் ஐரோப்பிய சந்தையை அணுகும் வாய்ப்பு கிடைத்தது; அதே நேரத்தில் அது சிட்டி ஆப் லண்டனின் சிறப்புப் பங்கையும் தக்க வைத்துக் கொண்டது. இப்பொழுது அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவு மற்றும் சர்வதேச நிதிய நெருக்கடி ஆகியவை ஐரோப்பாவில் தேசிய விரோதங்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஒன்றுபட்ட ஐரோப்பா தேவை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ் வாதிடுபவர்கள் பல நேரமும் அமெரிக்காவுடன் ஒற்றுமையைக் காட்ட விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா என்பது இரு புரட்சிகளின் விளைவு ஆகும் —18ம் நூற்றாண்டின் சுதந்திரப் போர் மற்றும் 19ம் நூற்றாண்டின் உள்நாட்டுப்போர் என்பவைகள். இவை இரண்டுமே மில்லியன் கணக்கான மக்களுக்கு ஊக்கம் கொடுத்த முற்போக்குக் கருத்துக்களால் உந்துதல் பெற்றன மக்களுடைய இறைமை மற்றும் அடிமைமுறை அகற்றப்படுதல்.

இதற்கு மாறாக ஐரோப்பிய ஒன்றியத் திட்டம் ஒருபொழுதும் தடையற்ற முறையில் பண்டங்களின் சுற்றோட்டம் மற்றும் மூலதனச் சுற்றோட்டம் என்பவற்றை தவிர உயர்ந்த நோக்கத்தைக் கொண்டதில்லை. இது நிலக்கரி மற்றும் எஃகுச் சமூகத்துடன் தொடங்கியது, அதன் உச்சக்கட்டத்தை ஒற்றைச் சந்தை முறையிலும், பொது நாணய முறையிலும் அடைந்தது. 2005ல் இதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது வெளிப்படையாயிற்று; அப்பொழுது பிரெஞ்சு மற்றும் டச்சு வாக்காளர்கள் ஐரோப்பிய அரசியலமைப்பின் வரைவுத் திட்டத்தை நிராகரித்தனர்; ஏனெனில் அது வலதுசாரித் தன்மையையும் நவ தாராள சார்பையும்தான் கொண்டிருந்தது.

சர்வதேச நிதிய நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியம் அதில் வசிக்கும் மக்களின் அடிப்படை நலன்களுடன் பொருந்தா தன்மையை அனைவரும் காணும் வகையில் அம்பலப்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாய முறையிலான, முற்போக்குத்தன்மை உடைய மாற்றீடுகளை அனுமதிக்கவில்லை. யூரோவிற்கும் ஒரு தேசிய நாணயத்திற்கும் இடையேதான் தெரிவு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தேசிய இறைமைக்கும் இடையே தெரிவு என்பது பிற்போக்குத்தன மாற்றீடுகளுக்கு இடையே ஒரு தெரிவாகும் நிதிய மூலதனத்தின் நேரடிச் சர்வாதிகாரமா அல்லது கண்டத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் அதன் மறைமுகமான சர்வாதிகாரமா என்பதே அது.

உண்மையான மாற்றீடு முதலாளித்துவ ஐரோப்பாவிற்கும் மற்றும் சோசலிச ஐரோப்பாவிற்கும் இடையேதான் இருக்கிறது. தற்போதைய நெருக்கடி சமூகப் புரட்சி அல்லது போரில் சரிதல், மந்தநிலை, சர்வாதிகாரம் என்ற அப்பட்டமான மாற்றீடுகளைத்தான் காட்டுகிறது.

நிதியச் சந்தைகளின் இரும்புப் பிடியை முறிக்காமல், வங்கிகள், பெருநிறுவனத் தொகுப்புக்கள், தனியாரின் பெரும் சொத்துக்களை பறிமுதல் செய்து அவற்றை முழுச் சமூகத்தின் சேவைக்காக எடுத்துக் கொள்ளாமல், தீர்வு ஏதும் கிடையாது. ஐரோப்பாவின் எல்லைக் கோடு என்பது கிரேக்கர்களுக்கும் ஜேர்மனியர்களுக்கும், போர்த்துகீசியர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும், அல்லது அயர்லாந்துக்காரர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் என்று இல்லை. அக்கோடு என்பது நெருக்கடிக்கு விலை கொடுக்கக் கட்டாயப்படுத்தப்படும் தொழிலாள வர்க்கத்திற்கும், தன்னையும் தனக்கு ஐரோப்பிய ஒன்றியம், தேசிய அரசாங்கங்கள் மற்றும் நடைமுறைக் கட்சிகளில் எடுபிடிகளாக இருப்பவர்களையும் தொடர்ந்து செழித்துக் கொள்ள விரும்பும் நிதியப் பிரபுத்துவத்திற்கும் இடையேதான் உள்ளது.