WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள
கிரேக்க
அரசாங்கம்
தொடர்ந்த
வெட்டுக்களுக்கு
By Christoph Dreier
15 November 2011
வெள்ளியன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர்,
கிரேக்கத்தின் புதிய பிரதம
மந்திரி லூகாஸ் பாப்படெமோஸ் தன்னுடைய அரசாங்கம் அவருக்கு முன்
பதவியில் இருந்த ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் பிற்போக்குத்தன,
மிகவும் செல்வாக்கற்ற வெட்டுத் திட்டத்தை முக்கிய வங்கிகளின்
ஆணையின் பேரில் தொடர இருப்பதாக தெளிவுபடுத்தினார்.
பாராளுமன்றத்தில் தான் நிகழ்த்திய முதல் உரையில் பாப்படெமோஸ்
அவருடைய அரசாங்கத்தின் முக்கியப் பணி
“[அக்டோபர்
மாதம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய]
உச்சிமாநாட்டின்
முடிவுகளைச் செயல்படுத்தி,
அம்முடிவுகளுடன் பிணைந்துள்ள பொருளாதாரக் கொள்கைகளையும்
செயல்படுத்துவதாகும்”
என்று அறிவித்தார்.
குறிப்பாக அவர் வேலை வெட்டுக்கள்,
பொதுத்துறையில் ஊதியக் குறைப்புக்கள்
மற்றும் திறமையான தொழில்களில் கட்டுப்பாடுகளை அகற்றுவது
குறித்து அவர் விவாதித்தார்.
இது அக்டோபர்
20ம்
திகதியன்று பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட நடவடிக்கைகளைக்
குறிக்கிறது;
ஆனால் அவைகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை;
ஆனால் ஐரோப்பிய பிணை எடுப்பு நிதியில் இருந்து கடைசி 8
பில்லியன் யூரோக்களைப் பெறுவதற்கு இவைகள் தேவை என்று
பாப்படெமோஸ் குறிப்பிடுகிறார்.
இந்தப் பணம் இல்லாவிடின்,
கிரேக்கம் டிசம்பர் நடுவில் திவாலாகிவிடக்கூடும்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒரு முன்னாள் துணைத் தலைவரான
பாப்படெமோஸ் தான்
“நம்முடைய
ஆற்றல்களில் சர்வதேச சமூகம் மீண்டும் நம்பிக்கையைப் பெறலாம்”
என்பதை உறுதிப்படுத்த உள்ளதாக அறிவித்தார்.
முக்கிய நோக்கம் ஐரோப்பிய
ஒன்றியத்திற்குள்ளேயே இருந்து யூரோவை கிரேக்க நாணயமாக
தொடர்ந்து வைத்திருப்பதாகும்.
அவர் கூறினார்:
“யூரோவில்
எமது உறுப்பினர் தன்மை நிதிய உறுதிப்பாட்டிற்கு உத்தரவாதம்
என்பதுடன் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான சரியான சூழலைத்
தோற்றுவிக்கிறது.
யூரோவில் நாம் உறுப்பு
நாடாக இருப்பது மட்டுமே நமக்கு ஒரே தேர்வு.”
ஐரோப்பிய பிணை எடுப்பு நிதிக்கு பொறுப்புக் கொண்டுள்ள சர்வதேச
நாணய நிதியம்,
ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி என்னும்
மூக்கூட்டின் பிரதிநிதிகள் பலமுறையும் தொடர்ந்து கடன்
பெறுவதற்கும்,
யூரோப் பகுதிக்குள்
நிலைத்திருப்பதற்கும்,
கிரேக்கம் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த
வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இக்காரணத்திற்காகத்தான் முக்கூட்டு பாப்படெமோஸ் அரசாங்கத்தை
இருத்தியுள்ளது.
அவைகள் சமூக ஜனநாயக
PASOK,
கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகம் மற்றும் தீவிர வலது
LAOS
ஆகியவை ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை கட்டமைக்க வேண்டும்,
அது ஒரு
தொழில்நுட்பவாதியின் தலைமையில் இருக்க வேண்டும்,
எந்தவித ஜனநாயக நெறியும் தேவையில்லை என விரும்பின.
தன்னுடைய முன்னுரிமைகளை பாப்படெமோஸ் தெளிவாக்கியுள்ளார்:
வெட்டுக்களை செயற்படுத்தி,
அடுத்த தவணைக் கடன் பெறுவதை உறுதி செய்தபின்,
அவர் இன்னும் உடன்பாடுகளைக்
காண முக்கூட்டின் அதிகாரிகளுடன் பேச்சுக்களைத் தொடங்குவார்.
இதற்கான திட்டங்களின்
விவரங்கள் அடுத்த திங்களன்று அறிவிக்கப்படும்;
அப்பொழுதுதான் பாராளுமன்றத்தின் செயற்பட்டியலில் 2011
வரவு-செலவுத்
திட்டம் உள்ளது.
புதன்கிழமையன்று பாராளுமன்றம் புதிய அரசாங்கத்தின் மீது ஒரு
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்.
பாப்படெமோஸ்,
தற்போதைய மற்றும் வருங்கால சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த,
PASOK
ஐ பெரிதும் நம்பியிருப்பார்;
இந்தக் கட்சிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டை ஆண்டு வந்தது.
கிரேக்கத்தின்
17
அமைச்சரகங்களில்
13
அதனுடைய பொறுப்பில்தான் விடப்படும்.
இவற்றுள் நிதி அமைச்சரகமும் உள்ளது;
இது கடந்த இரு ஆண்டுகளாக
சிக்கன நடவடிக்கைகளுக்காக மிகவும் தொடர்ச்சியாகவும்,
இரக்கமற்றும்
வாதிடுபவர்களில் ஒருவரான எவாஞ்சலோஸ் வெனிஜிலோஸின் பொறுப்பில்
இருக்கும்.
PASOK
மற்றய
முக்கிய அமைச்சரகங்களின் கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது;
அவற்றின் வரவு-செலவுத்
திட்டங்கள் கணிசமாகக் குறைக்கப்படும்;
ஆண்ட்ரீயஸ் லவர்டோஸ் சுகாதாரத் துறையைத் தக்க வைத்துக்
கொண்டுள்ளார்;
இத்துறையில்தான் அவர்
36
சதவிகித வரவு-செலவுத்
திட்டக் குறைப்புக்களை
2011ல்
செயல்படுத்தினார்;
அன்னா டயமன்டோபௌலௌ கல்வித்துறை
அமைச்சராகிறார்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமான பிணைப்பைக்
கொண்டுள்ளதால் அரசாங்கம்
PASOK
ஐப் பெரிதும் நம்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தொழிற்சங்கங்கள் சமூகநலச் செலவு
வெட்டுக்களைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியமான பங்கைக்
கொண்டுள்ளன;
அவற்றினால் இயன்றமட்டும் வெகுஜன எதிர்ப்பை நோக்குநிலை பிறளச்
செய்து வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை பாதுகாப்பான
திசைகளில் செலுத்தின.
LAOS
ஐப் புதிய அரசாங்கத்தில் சேர்த்தது,
தொழிலாள வர்க்கத்தை வன்முறையில் அடக்குதல் என்பதற்கான புதிய
அரசாங்கத்தின் நேரடி அச்சுறுத்தல் ஆகும்;
மேலும் சர்வாதிகார ஆட்சி வகைகள் வருவதற்கான நடவடிக்கைகளின்
அடையாளமும் ஆகும்.
LAOS
பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்கின்றனர். 1974ல்
இராணுவ ஆட்சிக் குழுவின் சரிவிற்குப் பின்னர் இப்பொழுதுதான்
ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி அரசாங்கத்தில் இருக்கிறது.
LAOS
2000ம்
ஆண்டில் முன்னாள்
ND
பிரதிநிதியும் இழிவுற்ற செமிடிய எதிர்ப்பாளருமான ஜோர்ஜ்
கரட்ஜபெரிசினால் நிறுவப்பட்டு தீவிர வலதுசாரி மற்றும்
கிரேக்கத்திலுள்ள பாசிச உணர்வுகளின் குவிப்பு மையமாக ஆயிற்று.
கட்சியின் நிறுவன அறிக்கை இராணுவத் தலைவர்கள் மற்றும் தேவாலய
அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவினால் முடிவுகள் எடுக்கப்பட
வேண்டும் என்று கோரியுள்ளது—இது இராணுவ ஆட்சி
தேவை என்பதை அதிகம் மறைக்காத அழைப்பு ஆகும்.
கட்சியின் மிக வலதுசாரிப் பிரிவில் வோரிடிஸ்
தொடர்புபடுத்தப்படுகிறார்.
1980
களில் அவர் எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களைச் சுத்தியலால்
தாக்கியதால்
“சுத்தியல்
வோர்டிஸ்’’
என்று இகழ்வாகச் சுட்டிக்காட்டப்பட்டார்.
அப்பொழுது அவர்
1974
வரை கிரேக்கத்தை ஆண்ட இராணுவ ஆட்சிக் குழுவின் உறுதியான
ஆதரவாளராக இருந்தார்.
பிரான்சின் நவ பாசிச தேசிய முன்னணியுடன் நெருக்கமான
தொடர்புகளைக் கொண்டிருந்த ஹெலினிக் முன்னணி என்னும் கட்சியைக்
கட்டமைக்கும் முயற்சியில் பலமுறை தோல்வி அடைந்தபின்,
வோர்டிஸ் தன்னுடைய இயக்கத்தை இன்னும் வெற்றிகரமாக நடந்து வந்த
LAOS
கட்சியில் கரைத்துக் கொண்டார்.
ND
யின் தலைவர்,
தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான சர்வதே அழைப்புக்களை
ஆரம்பத்தில் எதிர்த்து,
முன்கூட்டிய தேர்தல்கள் மூலம் பதவிக்கு வரலாம் என நம்பினார்;
ND
பாப்படெமோஸுக்கு குறைந்தபட்ச ஆதரவைத்தான் தரும் என்பதைத்
தெளிவாக்கியுள்ளார்.
“இந்த
இடைக்கால அரசாங்கம் அதன் பணியில் வெற்றிபெற வேண்டும் என
நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால் எத்தனை நாட்கள் அது நீடிக்கும் என்பதும் எங்களைப்
பொறுத்துத்தான் உள்ளது.
தற்காலிகமான என்று நாங்கள் கூறும்போது தற்காலிகமான என்ற
பொருளில்தான் கூறுகிறோம்”
என்றும் அவர் தெரிவித்தார்.
ND
ஆனது ஏதென்ஸ் இன்னும் கடன்களைப் பெறுவதற்கு ஈடாக சர்வதேச
கடன்கொடுப்பவர்கள் கோரும் புதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு
ஆதரவாக வாக்களிக்காது என்றும் சமரஸ் கூறினார். “8
பில்லியன் யூரோக்கள் கடன் தவணையைத் தடுக்காமல் இருப்பதற்காக
நாம் இந்தப் புதிய இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு
கொடுக்கிறோம் என்ற கூட்டு அறிக்கையில் கையெழுத்திட வேண்டும்
என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அத்தகைய அறிக்கைகளில் நான் கையெழுத்திட மாட்டேன்.”
தொழிலாள வர்க்கத்தின் மீது சமூகநலக் குறைப்புக்களைச்
சுமத்துவதற்கு முழுப் பொறுப்பையும்
PASOK
தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் என்று
ND
நம்புகிறது போலும்;
இதையொட்டி வெகுஜனவாத வலதுசாரி,
தொழிலாளர் விரோதக் கொள்கைகளில் இருந்து
ND
கேடயப் பாதுகாப்பைப் பெறும்.
ND
வரவு-செலவுத்
திட்டக் குறைப்புக்களுடன் நேரடி இலக்கு கொண்டிராத பாதுகாப்பு,
வெளியுறவு அமைச்சரகங்களின் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளது.
PASOK
யின் முடிவான இராணுவத்தின் மீதான காட்டுப்பாட்டை வலதுசாரியிடம்
ஒப்படைப்பது என்பது பெரும் அரசியல் முக்கியத்துவம் உடையது;
அதுவும் இராணுவ சர்வாதிகார
ஆட்சி என்ற ஒரு மரபைக் கொண்ட நாட்டில் இது மிகவும் தெளிவானது
ஆகும்.
இம்மாதம் முன்னதாக,
முன்னாள் பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ (PASOK)
ஒருக்கால் இராணுவ ஆட்சி எதிர்பாராமல் மாறிவரக்கூடும் என்ற
வதந்திகளுக்கு இடையே,
ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதிகளை பதவி நீக்கம் செய்திருந்தார்—அவர்கள்
முந்தைய
ND
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர்;
இப்பொழுது புதிய பாதுகாப்பு மந்திரியான
ND
யின் டிமிட்ரிஸ்
அவரமோபௌஸ் இந்த நடவடிக்கையை மீண்டும் மாற்றும் நிலையில்
உள்ளார்.
இத்தகைய ஆழ்ந்த பிளவுற்றுள்ள,
செல்வாக்கற்ற அரசாங்கத்தின் கொள்கைகள் பெருகிய பொருளாதாரச்
சரிவுச் சூழ்நிலையில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த
எதிர்ப்பைத்தான் தூண்டும்.
கடந்த வெள்ளியன்று வெனிஜெலோஸ் பற்றாக்குறை இந்த ஆண்டு மொத்த
உள்நாட்டு உற்பத்தியில்
9
சதவிகிதம் இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளார்;
இதையொட்டி இன்னும் அதிக
சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
அக்டோபர் மாதம் வந்த ஐரோப்பிய ஒன்றிய மீட்புப் பொதி 7.6
சதவிகிதம் என்ற வகையில் கணக்கிடப்பட்டது.
தொழிற்சங்கங்களும்
“இடது”
கட்சிகள் என அழைக்கப்படுபவையும்
—PASOK
க்கு அவை கொடுத்த ஆதரவினால் தீவிர சமரசத்திற்கு உட்பட்டவை—
இந்த ஆபத்தான போக்குகளுக்கு எதிராக தீவிர எதிர்ப்புக்கள்
மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கைகளை தொழிலாள வர்க்கத்தினரிடையே
தூண்டி அவைகள் வெகுஜன இயக்கமாக மாறிவிடுமோ என்ற பெரும்
அச்சத்தில் உள்ளன.
இதுவரை அவைகள் அதிக குவிப்பற்ற குறைந்தப்பட்ச
நடவடிக்கைகளைத்தான் அறிவித்துள்ளன.
தனியார்துறை
GSEE
தொழிற்சங்கம்
2012
ஆண்டு வரவு-செலவுத்
திட்டம் விவாதிக்கப்பட இருக்கையில் இன்னும் தேதி
குறிப்பிடப்படாத ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்த உள்ளது.
இதேபோன்ற பல முந்தைய வேலைநிறுத்தங்களைப் போலவே,
இது எதையும் மாற்றாது,
தொழிலாளர்களுக்கு மனத் தளர்ச்சியைத்தான் கொடுக்கும்.
இச்சூழ்நிலையில் புதிய அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
சர்வதேச நாணய நிதியத்தின் நேரடியான,
இடைவிடாக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்புரிய வேண்டியிருக்கும்.
முக்கூட்டில் இருந்து ஓர்
ஆதாரம் ராய்ட்டர்ஸிடம் முக்கூட்டின் ஆய்வாளர்கள் அடுத்த வாரத்
தொடக்கத்தில் ஏதென்ஸுக்கு வருகை புரிந்து,
புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தும்,
அதையொட்டி அரசாங்கம் கொடுக்க
வேண்டியவற்றிற்கு உறுதியளித்தால் ஐரோப்பிய மீட்புப் பொதியின்
அடுத்த தவணை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று
கூறினார்.
ஜேர்மன் அரசாங்கம் புதிய அரசாங்கத்தின் மீது தன் அழுத்தத்தை
அதிகரித்துள்ளது.
ஜேர்மனிய ஏடான
Spiegel
ல் வந்துள்ள சனிக்கிழமை தகவல்படி,
ஜேர்மன் அரசாங்கம் யூரோப் பகுதியில் இருந்து கிரேக்கத்தை
சாத்தியமான வகையில் வெளியேற்றப்படக்கூடிய தயாரிப்புக்களை
நடத்திவருகிறது.
பேர்லின் பல
சூழ்நிலைக்கேற்ப தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது;
இது ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பில் இருந்து ஸ்பெயின்
மற்றும் இத்தாலி சரிவு,
அதைத்தொடர்ந்து கிரேக்க தேசிய நாணயம் மறுபடியும்
அறிமுகப்படுத்தவதால் ஏற்படுத்தக்கூடிய பேரழிவு தரும்
பாதிப்புக்கள் ஆகியவை உள்ளன.
மறுபடியும்
அறிமுகப்படுத்தப்பட்டால்,
ட்ராஷ்மா அதன் மதிப்பை வியத்தகு அளவில் இழக்கக்கூடும்;
தேசியக் கடன்கள் உயரும்;
ஏராளமான நிறுவனங்கள் திவாலாகும்;
வேலையின்மை வானளவாக அதிகரிக்கும்.
|