World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Once again on Obama and Wall Street

மீண்டும் ஒருமுறை ஒபாமாவும் வோல் ஸ்ட்ரீட்டும்

Barry Grey
11 November 2011
Back to screen version

அமெரிக்க அரசியலின் இழிந்த தரங்களினால்கூட, ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னை மக்கள் தீர்ப்பு மன்றத்தின் நடுவர் என்று கூறிக்கொண்டும், வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்புக்களை தன் மறு தேர்தல் பிரச்சாரத்திற்கு பின்னால் திசை திருப்பும் முயற்சியும், அவநம்பிக்கைத்தன்மை மற்றும் நேர்மையற்றதன்மையின் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன.

அமெரிக்க ஆளும் வர்க்கமானது அமெரிக்க மக்கள் மிகப் பெரிய அளவிற்கு வெகுளித்தனம் உடையவர்கள், கூட்டு மறதியினால் அவதியுறுகின்றனர் என்ற முன்கருத்தை ஒட்டிச் செயல்படுகின்றனர் என்பதற்கு இது மற்றுமொரு நிரூபணம் ஆகும்.

பொதுக் கருவூலத்தில் இருந்து நிதிய உயரடுக்கிற்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மிகப் பெரிய நிதி மாற்றத்திற்குஅம்மாற்றத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை-- பொறுப்புக் கொண்டுள்ள ஒரு நிர்வாகம் மூன்று ஆண்டுகளாக பதவியில் இருப்பதும் பெருமந்த நிலைக்குப் பின் நிலவும் மிக மோசமான வேலைகள் நெருக்கடியைத் தீர்க்க எத்தீவிர நடவடிக்கைகளை எடுக்க மறுக்கும் நிலையிலும், இதே காலத்தில் வறுமையும் சமூக இழப்புக்களும் மிகப் பெரிய தன்மையைக் கொண்டு, பெரு நிறுவன இலாபங்களும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் ஊதியங்கள் பெரிதும் கொழுத்த நிலையிலும், ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் இப்பொழுது தங்களை வேலைகளுக்கும், சமூக நீதிக்கும் ஆதரவு கொடுப்பவர்கள் என்று காட்டிக் கொள்ள முற்படுகின்றனர்.

இத்தகைய பகுத்தறிவிற்கு ஒவ்வாத தோற்றம், கோல்ட்மன் சாஷ்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், முன்னாள் ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினரும், நியூ ஜெர்சியின் கவர்னருமான ஜோன் கோர்சைன் இயக்கத்திலுள்ள, ஐரோப்பியக் கடன் நெருக்கடியில் வோல் ஸ்ட்ரீட் ஊக வணிக நிறுவனம், MF Global  அரசியல் தொந்தரவு கொடுக்கக் கூடிய வகையில் சரிவுற்றுள்ளதால், சமரசத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 633 மில்லியன் டொலர் அளவிற்கு வாடிக்கையாளர்களின் நிதிகளுக்கு இன்னும் கணக்குத் தரப்படவில்லை.

கோர்சைனுடைய உத்தியோகப்போக்கானது இயக்குனர் குழுவிற்கும் அரசாங்கப் பதவிக்கும் இடையே மாறிவர உதவும் சுழலும் கதவு மற்றும் ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் இரண்டையும் இணைக்கும் நெருக்கமான உறவுகள் ஆகியவற்றின் உருவகமாக உள்ளது. பல மில்லியன்களைக் கொண்ட இந்த வணிகர்/அரசியல்வாதி, இப்பொழுது வாடிக்கையாளர்களின் நிதிகளைத் திருடியது பற்றிய குற்ற விசாரணையில் உள்ளார்; இவர் ஒபாமாவின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு ஒரு முக்கிய நிதி திரட்டுபவர் ஆவார். இந்த ஆண்டு தன்னுடைய ஆடம்பர மான்ஹட்டன் இல்லத்தில் ஒபாமாவின் முதல் நிதிதிரட்டும் விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.

வருமான ஏணியில் மிக உயர்மட்ட 0.1 சதவிகிதத்தில் இருக்கும் நிதிய ஒட்டுண்ணிகளின் உருவகமாக கோர்சைன் உள்ளார்; இவர்களுடைய மோசடிதான் உலகப் பொருளாதார நெருக்கடியைத் தூண்டியது; இவர்கள்தான், ஒபாமா மற்றும் உலகம் முழுவதுமுள்ள அரசாங்கத் தலைவர்களின் உதவியினால், தாங்களே தோற்றுவித்த சமூகப் பேரழிவில் இருந்தும் இன்னும் கூடுதலான செல்வச் செழிப்பு உடையவர்களாக தங்களை ஆக்கிக் கொண்டனர்.

கோர்சைன் அவதூறு ஒபாமாவையும் போலி ஜனரஞ்சக முயற்சிகளை செப்டம்பரிலிருந்து தொடர்வதைத் தடுக்கவில்லை; அமெரிக்க வேலைகள் சட்டத்தை அப்பொழுதுதான் அவர் அறிவித்தார். அவருடைய நிர்வாகத்தின்வேலைகளைத் தோற்றுவிக்கும் நடவடிக்கைகளை போலவே, இதுவும் ஒரு பெருநிறுவனச் சார்புடைய வணிகவரி வெட்டுக்கள், பிற பின்னோக்கிச் செல்லும் நடவடிக்கைகளின் பொதி ஆகும்; இதில் முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் ஊதிய வகையில் வரிவிதிப்பில் வெட்டுக்கள் உள்ளன; அவை சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளை நிதியைக் கரைத்துவிடும். ஒபாமா முன்வைத்துள்ள பற்றாக்குறைக் குறைப்பு நடவடிக்கைக்கான 4 டிரில்லியன் டொலர்கள் நிதிக்கான சட்டம் இயற்றப்படுவதில் இதுவும் அடங்கியுள்ளது; அதேபோல் பெருநிறுவனங்களுக்கும் செல்வந்தர்களுக்கும் வரிகளைக் குறைக்கும் வரிச்சீர்திருத்தமும் இதில் அடங்கும்.

குடியரசுக் கட்சியினர் சட்டவரைவைத் தடுத்துவிடுவர் என்ற கருத்தில், ஒபாமா அவருடையநாம் காத்திருக்க முடியாது என்னும் சாலைக் காட்சியைத் தயாரித்தார்; இதில் அவர் பல நகரங்களில் அறிவிப்புக்களைச் செய்கிறார்; அவைகள் பெயரளவு நிர்வாக நடவடிக்கைகள் ஆகும்; அவசரமான சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பவை என்று கூறப்படும்; இதில் வீடுகள் முன்கூட்டி விற்பனைக்கு வருவதைத் தடுத்தல், மாணவர் கடன் ஆகியவை அடங்கியுள்ளன. உண்மையில், ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் அனைத்துமே தங்கள் இலாபங்களை ஊடுருவாமல் இருக்கும் என்று வங்கிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டவைதான்.

இத்தகைய செயல்களில் மிகச் சமீபத்தியது செவ்வாயன்று நடந்தது; அன்று ஒபாமா, பென்சில்வானியாவில் பிலடெல்பியா புறநகரான Yeadon ல் Head Start மையத்தில் பேசினார். “சீர்திருத்தம் என்ற பெயரிலும்பொறுப்பேற்றல் என்னும் முறையிலும், ஒபாமா ஒரு புதிய சட்டத்தை அறிவித்தார்; இது அரசாங்கத்தின் தரங்களுக்கு ஏற்ப இல்லை என்னும் காரணத்தை ஒட்டி, Head Start திட்டத்தில் நாடு முழுவதும் நிதிகளைக் குறைத்துவிடும். நூற்றுக்கணக்கான பள்ளிகளை மூடி, நூறாயிரக்கணக்கான ஆசிரியர்களை வேலைநீக்கம் செய்தசீர்திருத்த செயற்பட்டியல் என்று அழைக்கப்பட்ட திட்டத்தின் விரிவாக்கத்தைத்தான் இது பிரதிபலிக்கிறது.

திங்களன்று வாஷிங்டன் போஸ்ட்  ஒரு கட்டுரையை வெளியிட்டது (“In Obama’s Tenure, a Resurgent Wall Street”) என்று; இது நிதியப் பிரபுத்துவம் தன்னை இன்னும் செல்வக்கொழிப்பு உடையதாக ஆக்கிக் கொள்ளுவதற்கு ஒபாமாவின் வெள்ளை மாளிகை காட்டும் தளர்வற்ற குவிப்பு பற்றி உண்மைகளை உயர்த்திக் காட்டுகிறது. இக்கட்டுரை குறிப்பிடுவதாவது:

 “ஒபாமாவின் கீழ் மிகப் பெரிய வங்கிகள்--100 பில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துக்களைக் கொண்டவைஅவற்றின் மொத்த சொத்துக்களை கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதிகரித்துவிட்டன; அவற்றின் இலாபங்கள் நெருக்கடிக்கு முந்தைய காலத் தரங்களுக்கு மீண்டுவிட்டன.

வோல் ஸ்ட்ரீட்டிலுள்ள முதலீட்டு நிறுவனங்கள்சுயாதீன நிறுவனங்கள், வங்கிகளின் பாதுகாப்புப் பத்திரங்கள் பிரிவுகள்குறைந்தபட்சம் 83 பில்லியன் டாலர்கள் இலாபங்களை கடந்த இரண்டரை ஆண்டுகளில் அடைந்துள்ளன; இது புஷ் நிர்வாகத்தின் முழு எட்டு ஆண்டுக் காலத்திலும் அவைகள் பெற்றதைவிட 77 பில்லியன் டாலர்கள் அதிகம் ஆகும்.

பாங்க் ஆப் அமெரிக்கா, சிட்டிகுரூப் மற்றும் வெல்ஸ் பார்கோ ஆகியவை அடங்கிய மிகப் பெரிய வங்கிகள் இந்த ஆண்டின் முதல் பாதியாண்டில் 34 பில்லியன் டாலர்கள் இலாபங்களைப் பதிவு செய்துள்ளன; இது 2007ல் இதே காலத்தில் அவைகள் பெற்ற இலாபத்திற்குக் கிட்டத்தட்ட ஒப்பாக உள்ளது; வேறு எந்த ஆண்டிலும் இதே காலத்தில் பெறப்பட்ட இலாபத்தைவிட அதிகம் ஆகும்.

நியூ யோர் நகரத்தில், கடந்த ஆண்டு சாரசரி வோல் ஸ்ட்ரீட் ஊதியம் 16.1 சதவிகிதம் உயர்ந்து 361,330 டாலர்கள் என்று ஆயிற்று; இது நகரத்தில் ஒரு தனியார் துறை ஊழியரின் சராசரி ஊதியத்தைவிட ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.

இக்கட்டுரை பிணை எடுக்கப்பட்ட வங்கிகள் அரசாங்கம் கொடுத்த நிதியை வைத்துத் தங்கள் முதலீட்டு இலாபங்களைக் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அதிகமாக்கியதைக் காட்டும் ஆய்வுகளை மேற்கோளிடுகிறது; அவைகள் நுகர்வோர்களுக்கு கடன் கொடுக்க மறுக்கின்றன, மாறாக அவற்றை மிக ஆபத்தான, ஆனால் இலாபம் நிறைந்த ஊகப் பந்தயங்களுக்குப் பயன்படுத்துகின்றன.

ஒபாமா ஏன் இதுவரை தன்னுடைய பிரச்சாரத்திற்கும் ஜனநாயக தேசியக் குழுவிற்கும் அதிக நிதியை நிதிய நிறுவன ஊழியர்களிடம் இருந்து அனைத்து குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் மொத்தத்தில் பெற்ற நிதியை விட அதிகம் பெற்றார்--15.6 மில்லியின் டாலர்கள்என்பதை இந்த உண்மைகள் விளக்க உதவுகின்றன.

வோல் ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்களுக்கு பரிவுணர்வை அவர் வெளிப்படுத்துவதாக கூறுகையில், ஒபாமா தொடர்ந்து நிதிய மாபியாவிற்காகத்தான் பாடுபடுகிறார். ஆயினும்கூட, ஒபாமாவிற்கு ஆர்வத்துடன் ஆதரவு கொடுக்கும் நியூ யோர்க் டைம்ஸ்  புதனன்று (“Letting the Banks Off Easy”) என்னும் ஒரு கட்டுரையை வெளியிடும் கட்டாயத்திற்கு உட்பட்டது; அதில் ஓர் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்கு நிர்வாகம் பரபரப்புடன் செயல்படும் தன்மை குறித்துக் குறைகூறப்பட்டுள்ளது; வீடுகள் முன்கூட்டிய விற்பனைகளில் வங்கிகளின் செயற்பாடு குறித்து முழு மீறல்கள் இருப்பதை ஒட்டி மாநில அரசாங்கங்கள் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது இதில் தடுக்கப்படுகிறது. இதற்கு ஈடாக வங்கிகள் பெயளவிற்கு 25 பில்லியன் டாலர்கள் கூட்டாகப் பணத்தை அளிக்கும்.

இத்தகைய உடன்பாடு திறமையுடன் வங்கிகளின் மற்ற குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய வழக்குப் பதிவுகளையும் தடுத்து விடும்; அவற்றில் அடைமானப் போலிகள், ஏமாற்றுத்தனமாக அடைமானம் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை விற்றல் ஆகியவையும் அடங்கும்; இத்தகைய செயல்கள்தான் துணை முக்கிய அடைமான பொன்சி திட்டத்தின் இதயத்தானத்தில் இருந்தன; அதன் சரிவுதான் தற்பொழுதைய உலக நெருக்கடியை ஏற்படுத்தியது.

மாநில நிர்வாகங்களை வெள்ளை மாளிகை கண்டிக்கிறதுஇதில் நியூ யோர்க், கலிபோர்னியா மற்றும் டிலாவரும் அடங்குகின்றன; இவை வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஒபாமா நிர்வாகம் ஒப்புக் கொண்ட உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டன.

ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடத்தில், அதே போல் குடியரசுக் கட்சியினரிடத்திலும், தொழிலாள வர்க்கமும், பெருநிறுவன ஆதிக்கத்திற்கு எதிராகவும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும் போராடுபவர்கள் அனைவரும் சற்றும் அயராத ஒரு விரோதியைக் காண்கின்றனர்; அவர்கள் நிதியத் தன்னலக் குழுவிற்கு வளைந்து கொடுக்கும் கருவி போல் செயல்படுகின்றனர். நிதிய உயரடுக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொண்டுவர முடியாது; ஏனெனில் இது அந்த உயரடுக்கினால் தோற்றுவிக்கப்பட்ட பணியாள் ஆகும். இப்பொழுது செய்யவேண்டிய பணி தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமாக அணிதிரட்டப்பட்டு, முதலாளித்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது ஆகும்; அதேபோல் சமத்துவத்திற்குத் தளமாகவும் சமூகத் தேவைகளைத் திருப்தி செய்வதற்கு ஒரு தளமாக இருக்கும் சோசலிசத்தை நிறுவுதலும் ஆகும்.