WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
ஐரோப்பிய வங்கிகளின் அபிமானத்திற்குரியவர் கிரேக்க
அரசாங்கத்திற்குத் தலைவராகிறார்
By Stefan Steinberg
11 November 2011
ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் துணைத்
தலைவர் லூகாஸ் பாப்படெமோஸ் வியாழனன்று கிரேக்கக் கூட்டணி
அரசாங்கத்திற்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டார்;
இந்தவாரம் நிதியச் சந்தைகள்,
சர்வதேச நாணய நிதியம்
(IMF)
மற்றும் முக்கிய ஐரோப்பிய நிறுவனங்களின் ஒருங்கிணைந்த
அழுத்தங்களைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சர்வதேச
நிதியச் சந்தைகள் புதிய அரசாங்கத் தலைவர் நியமனத்தில்
கிரேக்கத்தின் புரட்டு குறித்து அதிருப்தியைக் குறிக்கும்
வகையில் அலையென விற்பனை செய்தன.
பாப்படெமோஸ் புதிய பிரதமராக அதிகாரத்தை பெறுவார் என்ற
அறிவிப்பை தொடர்ந்து ஜனாதிபதி காரோலோஸ் பாபௌலியஸ் உடனடியாகச்
சந்தைகளைச் சமாதானப்படுத்த முற்பட்டார்.
வியாழனன்று புதிய நிர்வாகத்தின் முன்னுரிமை கிரேக்கத்தின் கடன்
உடன்பாடுகளை,
யூரோப்பகுதி மற்றும்
IMF
உடன்
விசுவாசமாகச் செயற்படுத்தும் என்ற உறுதிமொழி கொடுத்த அறிக்கையை
அவர் வெளியிட்டார்.
சர்வதேச நிதியின் நிலைப்பாட்டில் இருந்து,
பாப்படெமோஸ் தன் புதிய பணிக்கு அப்பழுக்கற்ற சான்றுகளைக்
கொண்டுள்ளார்.
1980களின்
நடுப்பகுதியில் இருந்து
1990
கள்
நடுப்பகுதி வரை பாப்பாடெமோஸ் கிரேக்க வங்கியின் தலைமைப்
பொருளாதார வல்லுனராக செயலாற்றினார்.
அதன்
பின் அவர்
1994ல்
வங்கியின் தலைவரானார்.
இப்பதவியை அவர்
2002
வரை
வகித்து,
யூரோப்
பகுதியில் உறுப்பினராவதற்கு நாட்டின் தயாரிப்புக்களையும்
மேற்பார்வையிட்டார்.
அதன் பின்னர் பாப்படெமோஸ் கிரேக்க
வங்கியிலிருந்து விலகி,
ஐரோப்பிய மத்திய வங்கியின் துணைத் தலைவர் பதவியில்
2010
வரை
இருந்தார்.
கடந்த
ஆண்டில் அவர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் அரசாங்கத்திற்கு
ஆலோசகராகப் பணியாற்றினார்.
அமெரிக்காவில் பயின்ற அவர்,
குறுகிய காலத்திற்கு போஸ்டனிலுள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின்
மூத்த பொருளாதார வல்லுனராகவும் இருந்தார்.
அவருடைய வங்கிச் சக ஊழியர்களால் லூகாஸ்
பாப்படெமோஸ் ஒரு பாதுகாப்பான கைகளை உடையவர் என்று
கருதப்படுகிறார்—முக்கிய
நிதிய நிறுவனங்களில் இருந்து நேரடியாக ஆணைகளைப் பெற்றுக்
கொள்வார் என்று.
IMF
தலைவர்
Christine Legarde
கிரேக்கத்திலும் இத்தாலியிலும் கூடுதலான
“அரசியல்
தெளிவு”
தேவை
என்று அழைப்புவிடுத்த சில மணி நேரங்களுக்குள் பாப்படெமோஸ்
நியமனம் வந்தது.
வெளியேறும் பிரதம மந்திரி பாப்பாண்ட்ரூ,
கன்சர்வேடிவ் எதிர்க்கட்சித் தலைவர் அன்டோனிஸ் சமரஸ் மற்றும்
தீவிர வலது
LAOS
கட்சித் தலைவர் ஜியோர்ஜோஸ் கரட்ஜபெரிஸ் ஆகியோரின் உடன்பாட்டின்
விளைவாக இந்நியமனம் வந்துள்ளது.
ஏதென்ஸில் ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்
ஆளும்
PASOK
நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகம் ஆகியவற்றின்
உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத் தலைவர் பிலிப்போஸ்
பெட்சல்நிகோஸ் வேட்புத்தன்மையை எதிர்த்த அளவில் தேக்கம்
அடைந்து நின்றது;
பிலிப்போஸ் பாப்பாண்ட்ரூவிற்கு மிக நெருக்கமானவர் என்று
கருதப்பட்டார்.
பாப்படெர்மோஸ் தன்னுடைய கோரிக்கைகளையும்
முன்வைத்துள்ளார்.
புதிய
தேர்தல்களுக்காக குறிக்கப்பட்டுள்ள பெப்ருவரி
19க்குப்
பின்னரும் அவர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க அனுமதிக்கப்பட
வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய
ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் தன்னுடைய பரந்த கூட்டணிச்
சக்திகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்,
அது
சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவும் என்றும் பாப்படெமோஸ்
கூறியுள்ளார்.
தீவிர
வலதுசாரி தேசிய
LAOS
கட்சி
புதிய ஆட்சிக்கு ஆதரவைக் கொடுப்பதற்கு எச்சலுகைகள் கொடுக்கப்பட
இருக்கின்றன என்பது பற்றி இப்பொழுது தெரியவில்லை.
கடந்த சில நாட்களின் நிகழ்வுகளிலிருந்து
வெளிப்படையாகத் தெரிவது,
பாப்படெமோஸ் நியமனம் உடனடியாக உதவியை கிரேக்கம் பெறுவதற்கும்,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
IMF
இல்
இருந்து புதிதாக
130
பில்லியன் யூரோ மீட்புப் பொதியைப் பெறுவதற்கும் ஒரு
முன்னிபந்தனை என்பதாகும்.
பாப்படெமோஸின் நியமனம் எதிர்பார்த்தபடி கிரேக்க
மற்றும் சர்வதேச வணிக,
நிதிய
அமைப்புக்களால் வரவேற்கப்பட்டது.
வியாழனன்று,
ஏதென்ஸின் பங்குச் சந்தைக் குறியீடு
3.17
சதவிகிதம் உயர்ந்தது;
கிரேக்க வங்கிகள்
10.2
சதவிகிதம் உயர்வு பெற்றன.
Hellenic Federation of Enterprises
ன்
தலைவரான டிமிட்ரிஸ் டஸ்கோலௌபௌலோஸ் வியாழனன்று
“தேசத்தை
மீட்க இருப்பது”
என்று
அவர் குறிப்பிட்ட புதிய நிர்வாகம்,
“கிரேக்கப்
பொருளாதாரம் சீரடையக் கடைசி நம்பிக்கை ஆகும்”
என்று
அறிவித்தார்.
ஐரோப்பிய வணிகம் மற்றும் நிதிய வட்டங்களின்
கருத்தைப் பிரதிபலித்து,
பிரஸ்ஸல்ஸிலுள்ள ஐரோப்பிய சர்வதேச அரசியல் பொருளாதார மையத்தின்
தலைவரான பிரெட்ரிக் எரிக்சன்,
ப்ளூம்பெர்க்கிடம் கூறினார்:
“அவர்
ஒரு திறைமை மிக்க,
சிந்தனைகள் நிறைந்த வங்கியாளர்,
கிரேக்க அரசியலிருந்து போதுமான தொலைவில் இருப்பதால் கிரேக்க
கட்சி அரசியல்களின் ஊழல்களுக்கு உயரே நிற்பவர் என்று
கூறமுடியும்.”
ஆனால் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியும்
(KKE)
பல
போலி இடது குழுக்களின் தொகுப்புமான சிரிசாவும் பேச்சுக்களில்
பங்கு பெறவில்லை;
பாப்படெமஸ் நியமனத்தைக் கண்டித்துள்ளன.
கடந்த
இரு ஆண்டுகளாக இரு அமைப்புக்களும் கிரேக்கத் தொழிலாள வர்க்கம்
அணிதிரண்டு எழுந்துவிடாமல் பார்த்துக் கொள்வதிலும்,
ஆளும்
PASOK
அரசாங்கம் கடுமையான,
தண்டனை
போன்ற சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு
தேவையான அரசியல் சூழ்நிலையை உருவாக்குவதிலும்,
முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.
ஒரு பொறுப்பான அரசியலமைப்பின் வழி நிற்கும்
கட்சி என்று தன் சான்றுகளை நிரூபிக்கும் வகையில்,
சிரிசா
10
நாட்களுக்கு முன் பாப்பாண்ட்ரூ எடுத்த முடிவான கிரேக்கத்தின்
ஆயுதப் படைத் தலைவர்களை அகற்றியது குறித்து இராணுவத்திற்கு
விசுவாசத்தை உறுதிமொழியாகக் கூறியது.
இராணுவ
ஆட்சி ஏற்படக்கூடிய உண்மை வாய்ப்பை நிராகரித்து,
இந்த
அமைப்பு அரசாங்கத்தின் முடிவு
“அரசியல்
நெருக்கடி காலத்தில் தன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்
அதிகமாக அரசியல்மயமாக்கப்பட்ட ஆயுதப் படைகளைத் தோற்றுவிக்க அது
விரும்புகிறது என்ற தோற்றத்தைக் கொடுக்கிறது”
என்றார்.
கிரேக்க பங்குச்சந்தைகள் சற்றே மீட்சி
பெற்றாலும்,
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது.
வியாழனன்று வெளிவந்த சமீபத்திய வேலையின்மை பற்றிய
புள்ளிவிவரங்கள்,
நாட்டின் வேலை நெருக்கடியின் உண்மையான பரப்பைக்
குறைமதிப்பிற்கு உட்படுத்துபவை,
மிக
அதிக உயர்வைக் காட்டின;
இது
18.4%
என
உயர்ந்துள்ளது.
வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம்
907,953
என்று
முந்தைய மாதத்தைவிட
10.7%
அதிகம்
ஆயிற்று.
15ல்
இருந்து
24
வயதிற்குள் இருக்கும் இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம்
43.5%
என்று
பெரிதும் உயர்ந்துவிட்டது;
இது
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் இரு மடங்கு ஆகும்.
கிரேக்கப் பங்குகள் வியாழனன்று சற்றே
புத்துயிர்ப்புப் பெற்றாலும்,
ஐரோப்பிய,
அமெரிக்கச் சந்தைகள் பெரிதும் மங்கிய நிலையில்தான் இருந்தன.
இது
கடன் நெருக்கடியின் மையத்தானம் கிரேக்கத்திலிருந்து பெரிய
ஐரோப்பிய நாடுகளுக்கு,
குறிப்பாக இத்தாலிக்கு,
மாறிச்
சென்றுள்ளது பற்றிய பெருகிய கவலைகளைப் பிரதிபலிக்கிறது.
கிரேக்கத்தில் ஒரு தொழில்நுட்பவாதியை பதவியில்
இருத்தியபின்,
நிதிய
வட்டங்கள் இப்பொழுது இத்தாலிய வங்கியாளரும் முன்னாள் ஐரோப்பிய
ஒன்றிய போட்டிப் பிரிவு ஆணையளருமான
Mario Monti
இத்தாலியில் விரைவில் அரசாங்கத்தின் புதிய தலைவராக
நியமிக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.
இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியா பெர்லுஸ்கோனி புதனன்று தான்
இராஜிநாமா செய்ய இருப்பதாகவும்,
ஆனால்
உடனடியாக இல்லை என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சந்தைகள் இத்தாலிய
அரசாங்கத்தின் கடன் பத்திரங்களின் வட்டிவிகிதங்களை
7%க்கும்
மேல் உயர்த்தின.
ஐரோப்பாவில் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கப்
பிரிவுகள்
“அரசியல்
சார்பு இல்லாத”
தொழில்நுட்பவாதிகளைப் பதவியில் இருந்த ஆர்வம் காட்டுகின்றன.
பாப்படெமோஸும் மோன்டியும் வங்கிகளின் ஆணைகளைச்
செயல்படுத்துவதில் உறுதி பூண்டவர்கள் என்று கருதப்படுவதால்தான்
துல்லியமான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்;
அதே
போல் அவர்கள் உள்நாட்டு அரசியல் வட்டங்களில் இருந்து
தொலைதூரத்தில் இருப்பவர்கள்,
போதுமான அளவிற்கு ஜனநாயக வழிவகைகள் குறித்து இகழ்வுணர்வு
உடையவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆயினும்கூட,
அவர்கள் நியமனம் ஆழ்ந்த நெருக்கடியைக் குறைக்க ஏதும் செய்யாது;
ஏனெனில் சமீபத்திய தகவல்களின்படி,
நெருக்கடி கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்இருக்கிறது.
இத்தாலிய முதலீட்டாளர்கள்
80
பில்லியன் யூரோக்களை நாட்டிலிருந்து ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்
மாதங்களில் வெளியேற்றினர்,
இது
அரசாங்கம் திவாலாகும் என்பதை எதிர்கொள்ளும் வகையில் இருக்கிறது
என்று
Banca Italia
கூறியுள்ளது.
கிரேக்க முதலீட்டாளர்கள் சமீபத்திய மாதங்களில் ஐரோப்பிய
“பாதுகாப்பான
உறைவிடங்களுக்கு”
250
பில்லியன் நிதியை மாற்றியுள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பியத் தலைவர்கள் பெரும் பரபரப்புப்
பெட்டியைத் திறந்துவிட்டனர் என்று சமீபத்தில்தான் முக்கிய
நிதியப் பண்டிதர்கள் புகார் கூறினர்;
முதலில் கிரேக்கப் பிணையெடுப்பில் தனியார் துறையின் ஈடுபாடு
வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்;
இரண்டாவதாக,
யூரோப்
பகுதியில் இருந்து கிரேக்கம் ஒருவேளை விலக்கப்பட வேண்டும்
என்று ஊகித்த முறையில்.
கடந்த வாரங்களில் இந்த விவாதங்கள்
நடத்தப்பட்டுள்ள பரப்பு,
நிதிய
விமர்சகர்
Noriel Roubini
எழுதியுள்ள சமீபத்திய கட்டுரையில் குறிப்பைக் காண்கிறது.
பைனான்சியல்
டைப்ஸில்
இத்தாலியின் நிதிய இடர்கள் அதன் பொதுக் கடன்களைத் தீர்க்க
மிகப் பெரிய அளவிற்கு ஐரோப்பிய மூலதனத்தை உட்செலுத்தினாலும்
தீராது என்று
Roubini
முடிவுரையாகக் கூறியுள்ளார்.
“அதன்
மிகப் பெரிய நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு,
வெளிப்
போட்டித்தன்மை இல்லாதநிலை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி,
பொருளாதாரச் செயல்கள் மோசமாகச் சரிந்து கொண்டிருக்கும்
நிலையில்,
இத்தாலியும் மற்ற சுற்றுவட்டத்தில் உள்ள நாடுகளைப் போல் நிதிய
ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும்,
தேசிய
நாணயத்திற்குத் திரும்பிச் செல்லவேண்டும்”.
அத்தகைய நடவடிக்கை
“யூரோப்
பகுதியை சிதைத்துவிட உதவும்”
நிலையைத் தூண்டிவிடும் என்பதையும் ஒப்புக்கொள்ள
Roubini
கட்டாயத்திற்கு உள்ளாகிறார்.
இதற்கிடையில் புதனன்று வந்த தகவலான சில நாடுகளை
யூரோப் பகுதியில் இருந்து அகற்றுவது குறித்து தீவிர விவாதங்கள்
உள்ளன என்பதை பிரெஞ்சு,
ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் வியாழனன்று
உத்தியோகபூர்வமாக நிராகரிக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.
|