WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
இத்தாலி
இத்தாலியில் அரசாங்க மாற்றத்திற்கு ஐரோப்பிய
ஒன்றியம்
அழுத்தம் கொடுக்கிறது
By Peter Schwarz
12 November 2011
கிரேக்கத்தின் முன்னுதாரணத்தைத் தொடர்ந்து,
இத்தாலியும் வெகு விரைவில் ஒரு தொழில்நுட்பவாதிகளின்
அரசாங்கத்தினால் ஆளப்படக்கூடும்;
இதைச்
சர்வதேச வங்கிகள் நியமிக்கும்.
பிரதம
மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி சனி மாலையில் மந்திரிசபைக்
கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்;
அதில்
அவர் தன்னுடைய இராஜிநாமாவை அறிவிக்கலாம்.
அரசியல் அளவில் சார்பு இல்லாத பொருளாதாரவல்லுனரும் முன்னாள்
ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளருமான மரியோ மோன்டி அவருக்குப்பின்
பிரதமராகும் அபிமானியாக உள்ளார்.
செவ்வாய் மாலை இத்தாலியப் பாராளுமன்றம்
ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ள சிக்கன நடவடிக்கைளை ஏற்றுவிட்டால்
தான் இராஜிநாமா செய்ய இருப்பதாக பெர்லுஸ்கோனி அறிவித்தார்.
ஆனால்
அதற்காக ஒரு தேதியை அவர் குறிப்பிடவில்லை.
நிதியச் சந்தைகள் இத்தெளிவற்ற அறிக்கையினால் திருப்தி
அடையவில்லை;
புதன்கிழமை இத்தாலியப் பத்திரங்களின் மீதான வட்டிவிகிதங்கள்
7
சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தன;
இது
அரசாங்கக் கடன்களுக்கு மறு நிதி உதவியளிப்பதைக் கிட்டத்தட்ட
இயலாதது என ஆக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அழுத்தத்தை
முடுக்கிவிட்டது.
ஐரோப்பிய பிணை எடுப்பு நிதி
EFSF
ன்
தலைவர் க்ளாஸ் ரெக்லிங் ஐரோப்பிய செய்தித்தாள்களுக்கு கொடுத்த
பேட்டி ஒன்றில் அந்நாட்டில்
“ஒரு
செயல்படும் அரசாங்கம் மிக விரைவில் தேவைப்படுகிறது”
என்றார்.
“சந்தைகளைச்
சமாதானப்படுத்துவதில் ஏற்கனவே இத்தாலி காலம் கடந்து நிற்கிறது”
என்று
அவர் எச்சரித்தார்.
இதன்பின் இத்தாலிய பாராளுமன்றம் விரைவான
நடவடிக்கை மூலம் சிக்கனப் பொதியை ஏற்கத் தான் தயாராக
இருப்பதாகத் தெரிவித்தது.
இப்பொதியில் பொதுத்துறை வேலைக் குறைப்புக்கள்,
தொழிலாளர் சந்தையில் இருக்கும் கட்டுப்பாடுகள் அகற்றப்படுதல்,
சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் ஆகியவை அடங்கும்.
இன்னும் அதிக வெட்டுக்கள் வருவதற்கு இந்நடவடிக்கைகள் ஒரு
முன்னோடிதான் என்று வல்லுனர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வெள்ளியன்று செனட் சிக்கனப் பொதியை
156
ஆதரவு
12
எதிர்ப்பு என்ற வாக்குக் கணக்கில் ஒப்புக்கொண்டது.
சனிக்கிழமை மன்ற பிரதிநிதிகள் சபையும் இதேபோல் ஒப்புதல்
கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது
பெர்லுஸ்கோனியின் இராஜிநாமாவிற்கு வழிவகுக்கும்;
அடுத்த
வாரமே விரைவில் ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படலாம்.
அரசாங்கம் கலைத்து மாற்றப்படுவதற்குப்
பின்னணியில் இருக்கும் உந்துதல் ஜனாதிபதி ஜியோர்ஜியோ
நாபோலிடனோவிடம் இருந்து வருகிறது.
சமீப
காலத்தில் அவர் பலமுறை அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் கோரும்
கொள்கைகளை செயல்படுத்தும்படி வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச அரசாங்க அதிகாரிகள் அவரை பேச்சுக்களில் அபிமானப்
பங்காளியெனக் கருதுகின்றனர்.
சமீபத்திய கான்
G20
மாநாட்டில்,
ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் இத்தாலியப் பொருளாதார
நிலைமை குறித்து நாபோலிடனோவுடன் ஆலோசனையை குறிப்பாக
மேற்கொண்டிருந்தார்.
இப்பொழுது நாபோலிடனோ அனுபவிக்கும்
முக்கியத்துவத்திற்கு ஒரு வரலாற்று விந்தை உள்ளது.
86
வயதான
இவர்
1945ல்
இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்;
அந்த
நேரத்தில் நேட்டோ சக்திகளின் அழுத்தத்தை ஒட்டி,
இத்தாலியின் மிகப் பெரிய கட்சியாக இருந்தபோதிலும்,
இக்கட்சி பலமுறை அரசாங்கத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் இப்பொழுது இந்த மூத்த
ஸ்ராலினிச செயலரை நிதியச் சந்தைகளின் ஆணைகளுக்கு இத்தாலி
அடிபணிவதை உத்தரவாதம் அளிக்கச் செய்ய நம்பியுள்ளன.
ஜனாதிபதி என்னும் முறையில் நாபோலிடனோ பெயரவு
அலங்காரக் கடமைகளைத்தான் கொண்டிருந்தார்.
ஆனால்
நெருக்கடிச் சூழலில் அவர் முக்கிய பங்கைச் செலுத்துகிறார்;
ஏனெனில் அவர் பாராளுமன்றத்தை கலைக்கவும் முடியும்,
தன்
விருப்பப்படி ஒரு புதிய அரசாங்கம் அமைக்க வேட்பாளரைத் தெரிந்து
எடுக்கவும் முடியும்.
சமீபத்திய நாட்களில் நாபோலிடனோ பாராளுமன்றக்
கலைப்பு என்பதை அச்சுறுத்தலாகப் பயன்படுத்தி இடைக்கால
அரசாங்கம் அமைப்பதற்கு ஆதரவை நாடியுள்ளார்.
மையவாத-இடது
கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி
மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகக் குழுக்கள் பலவற்றில் இருந்து
வெளிப்பட்ட ஜனநாயகக் கட்சி,
புதுத்
தேர்தல்களுக்கு அஞ்சுகிறது என்று அவர் அறிவார்.
இவை
அனைத்தும் செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவைக்
கொடுக்கின்றன,
ஆனால்
ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பகிரங்கமாக அதற்கு வாதிட
விரும்பவில்லை.
இதைத்தவிர,
ஒரு
தேர்தல் பிரச்சாரம் என்பது சிக்கன நடவடிக்கைகளைச்
செயல்படுத்துவதைத் தாமதப்படுத்தத்தான் செய்யும் என்று அவர்கள்
காரணம் காட்டுகின்றனர்.
ஒரு தொழில்நுட்பவாத அரசாங்கத்திற்கு மரியோ
மோன்டி தலைமை தாங்கும் வாய்ப்பையும் நாபோலிடனோதான்
எழுப்பியுள்ளார்.
புதன்கிழமையன்று அவர் மோன்டியை தன் அரசியல் நம்பகத்தன்மையை
வலுப்படுத்துவதற்காக மோன்டியை ஆயுட்கால செனட் உறுப்பினராக
நியமித்தார்.
68
வயதான
மோன்டி பரந்த அளவில் சர்வதேச தொடர்புகளைக் கொண்டுள்ளார்.
பிரஸ்ஸல்ஸின் சிந்தனைக் குழுவான
BRUEGEL
ன்
தலைவராக அவர் இருந்தார்.
அதைத்தவிர,
பில்டர்பேர்க் மாநாட்டில் வாடிக்கையாகக் கலந்து கொள்ளுகிறார்;
இந்த
அமைப்பு மேற்கு ஐரோப்பிய,
அமெரிக்க அரசியல்,
நிதி,
பொருளாதாரம்,
இராணுவம் மற்றும் செய்தி ஊடகத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை
வாடிக்கையான ஆலோசனைகளுக்கு அவ்வப்பொழுது ஒன்றாகக் கொண்டு
வருகிறது.
இவர் அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில்
பயின்றார்;
பல
இத்தாலிய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியராக
பணியாற்றியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் என்னும் முறையில் அவர்
1995ல்
இருந்து
2004
வரை
இரு முக்கிய துறைகளுக்கு இயக்குனராக இருந்தார்:
உள்
சந்தைகள்,
போட்டித்தன்மைத் துறைகள் என.
போட்டித்தன்மை ஆணையர் என்ற முறையில் அமெரிக்க மென்பொருள்
பெருநிறுவன மைக்ரோசாப்ட் மற்றும் ஜேர்மனிய வோல்க்ஸ்வாகன்
குழுவிற்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்துப் பெரும் புகழ்
பெற்றார்.
மோன்டியின் தலைமையில் ஒரு தொழில்நுட்பவாத
அரசாங்கத்திற்குப் பாராளுமன்ற பெரும்பான்மையை நாபொலிடனோ
பெறமுடியுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மிக
அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள எதிர்க்கட்சியான ஜனநாயகக்
கட்சி தன் ஒப்புதலைக் கொடுத்துள்ளது;
இதைத்தவிர பல சிறிய மையவாதக் கட்சிகளும் ஒப்புதல் கொடுத்துள்ளன.
ஆனால்,
பெர்லுஸ்கோனியின்
PDL (People of Freedom--சுதந்திரத்திற்கான
மக்கள் இயக்கம்)
பிளவைக் கொண்டுள்ளது:
சில
உறுப்பினர்கள் ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு
கொடுக்கின்றனர்;
மற்றவர்கள் புதிய தேர்தல்கள் வேண்டுமெனக் கோருகின்றனர்.
மோன்டி
தலைமையிலான அரசாங்கத்திற்கு தன் ஆரம்ப எதிர்ப்பை
பெர்லுஸ்கோனியே கைவிட்டுவிட்டார்—குறைந்தபட்சம்
உத்தியோகபூர்வமாக என்றாலும்.
“பின்
பாசிஸ்ட்டுக்கள்”
அமைப்பின் தலைவரான
Gianfranco Fini
மோன்டியை
“நெருக்கடியைத்
தீர்க்க சரியான நபர்”
என்று
கூறியுள்ளார்;
புதுத்
தேர்தல்களை நிராகரித்துள்ளார்—அவை
“தெரியாத
இடத்தில் பாய்தலுக்கு ஒப்பாகும்”
என்று
கூறுகிறார்.
தன்னுடைய கட்சியை
2009ல்
PDL
உடன்
பினி இணைத்துள்ளார்;
ஆனால்
அதன்பின் பெர்லுஸ்கோனியுடன் கருத்து வேறுபாடுகளைக்
கொண்டுள்ளார்.
பெர்லுஸ்கோனியின் கூட்டாட்சி பங்காளிக்
கட்சியான வடக்குக் கழகம்
(Northern League),
மோன்டிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
கழகத்தின் தலைவர் உம்பர்ட்டோ போசி கூறினார்:
“எதிர்த்தரப்பில்
மீண்டும் இருப்பது நல்லதே;
நாங்கள் எதிர்த்தரப்பில் இருப்போம்.”
இந்த
வலதுசாரி,
ஜனரஞ்சகக் கொள்கையைக் கூறும் கட்சி சிக்கன நடவடிக்கைகளுக்கு
எதிரான பரந்த சீற்றத்தில் ஆதாயம் அடையலாம் என நம்புவது
வெளிப்படை.
குடி
உரிமைகள் கட்சியும் முன்னாள் அரசாங்க வக்கில் அன்டோனியோ டி
பீயட்ரோவின் தலைமையில் உள்ளதும் முன்கூட்டிய தேர்தல்கள் தேவை
எனக் கூறியுள்ளது.
1990களில்
தொழில்நுட்பவாதிகளின் அரசாங்கங்கள் என்று அழைக்கப்பட்டவற்றுடன்
இத்தாலி ஏற்கனவே கசப்பான அனுபவங்களைக் கொண்டுள்ளது.
பெரும்
ஊழல்களை ஒட்டி பழைய கட்சி முறை உட்வெடிப்பைக் கண்டபின்,
மத்திய
வங்கித் தலைவர் கார்லோ அஜெக்லியோ சியாம்பி அத்தகைய அரசாங்கம்
ஒன்றின் தலைமையை
1993ல்
ஏற்றார்.
அவருக்குப் பின்
1994ல்
பாராளுமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்ற சில்வியோ பெர்லுஸ்கோனி
தன் முதல் நிர்வாகத்தை அமைத்தார்.
ஆனால் சமூகநலக் குறைப்புக்களுக்கு பெரும்
எதிர்ப்பைத் தொடர்ந்து பெர்லுஸ்கோனியின் அரசாங்கம்
நிலைகுலைந்தது.
அவருக்குப் பதிலாக மற்றொரு தொழில்நுட்பவாத அரசாங்கம் பதவிக்கு
வந்தது;
அதற்கு
லம்பர்ட்டோ டினி,
மைய
வங்கியின் தலைவராக சியம்பிக்குப் பின் பொறுப்பேற்றவர்,
தலைமை
தாங்கினார்.
டினி
அதிகாரத்தில்
16
மாதங்கள் இருந்தார்.
சியம்பி மற்றும் டினியின் அரசாங்கங்கள்
இரண்டும் முழுப் பாராளுமன்ற இடதின் ஆதரவை நம்ப முடிந்தது;
அதையொட்டி அவை பெரும் இகழ்ச்சிக்கு உட்பட்டன.
இது
தோற்றுவித்த சூழலை ஒட்டி பெர்லுஸ்கோனி மீண்டும்
2001ல்
அதிகாரத்திற்கு வர முடிந்தது;
2008லும்
பழையபடி அதிகாரத்திற்கு வர முடிந்தது.
மோன்டி தலைமையில் இருக்கும் அரசாங்கம் அதன்
அரசியல் முன்னோடிகளைவிட அதிகமாகத்தான் செயலாற்றும்.
எந்தவித ஜனநாயக சான்றுகளும் இல்லாத நிலையில்,
அத்தகைய அரசாங்கம் சர்வதேச சந்தைகளின் ஆணைகளைச் செயல்படுத்தும்;
அதே
நேரத்தில் மையவாத-இடது
கட்சிகள்,
தொழிற்சங்கள் அவற்றின் போலி இடது நட்பு அமைப்புக்கள்
ஆகியவற்றின் ஆதரவை நம்பியிருக்கும்.
மலையெனக் குவிந்துள்ள
1.9
டிரில்லியன்
(மொத்த
உள்நாட்டு உற்பத்தியில்
120%)
என்ற
நாட்டின் கடன் உள்ள நிலையில்,
பரந்த
சமூக அடுக்குகளின் வாழ்க்கைத் தரங்களைக் கடுமையாகக்
குறைப்பதின் மூலமே இதைச் செய்ய முடியும்—தற்பொழுது
கிரேக்கத்தில் நடப்பதைப் போல்.
அதன் கொள்கைகளுக்கு ஆழ்ந்த வெகுஜன எதிர்ப்பு
உள்ள நிலையில்,
மோன்டியின் தலைமையிலான அரசாங்கம் மிக உறுதியற்ற தன்மையைக்
கொண்டிருக்கும்.
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வெளிப்படையான சர்வாதிகார
நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு இடைக்காலக் கட்டத்தைத்தான்
பிரதிபலிக்கும்.
வெள்ளி வெளியிட்ட தலையங்கத்தில் ஐரோப்பாவின்
முக்கிய வணிக நாளேடான
பைனான்ஸியல்
டைம்ஸ்,
“தேர்ந்தெடுக்கப்படாத
தொழில்நுட்பவாதியை நியமனம் செய்வது உயர் இலக்கிற்கு உகந்தது
அல்ல”
என்று
எச்சரித்துள்ளது.
கிரேக்கத்திலும் இத்தாலியிலும்,
“பழைய
நடைமுறையின் அரசியல் உயரடுக்கு,
ஒரு
தொழில்நுட்பவாதியின் கீழ் அரசாங்கக் கூட்டணியை நடத்துவது
என்பது பெரும் தவறாகிவிடும்,
ஆழ்ந்த
வேர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பது அற்புதச்செயல் என்றுதான்
போய்விடும்…
இரு
அரசாங்கங்களும் கழைக்கூத்தாடித்தனக் கயிற்றில் நடப்பது
போல்தான் செயல்பட்டு உள்நாட்டு அரசியல் மற்றும் சந்தைகளின்
நம்பகத்தனைமையைப் பூர்த்தி செய்யமுடியும்….
“புதிய
தலைவர்கள் மக்கள் ஆதரவின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை
உணர வேண்டும்”
என்று
பைனான்ஸியல்
டைம்ஸ்
முடிவுரையாக தெரிவித்துள்ளது.
ஆனால் எங்கிருந்து ஆளும் வர்க்கம் மக்களின்
பரந்த தட்டுக்களின் வாழ்க்கையை அழிப்பதை நோக்கம் கொண்ட ஒரு
கொள்கைக்கு
“மக்கள்
ஆதரவைப்”
பெற
முடியும்?
இக்காரணத்தினால்,
முதலாளித்துவத்தின் சில பிரிவுகள் வெளிப்படையாக ஒரு வலதுசாரி
அல்லது பாசிச ஜனரஞ்சக இயக்கம் நடத்தச் சிந்திக்கின்றன.
முழு
உத்தியோகபூர்வ
“இடதின்”
ஆதரவுடன் ஒரு தொழில்நுட்பவாத அரசாங்கத்தை அமைப்பதில் இருந்து
விளையும் மிகப் பெரிய ஆபத்து,
அத்தகைய இயக்கத்திற்கு தோற்றத்தை தருவதற்குத் துல்லியமான
செழிப்பு நிலத்தைக் கொடுக்கும் என்ற உண்மைதான். |