சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : இத்தாலி

Italian Prime Minister Berlusconi announces his resignation

இத்தாலியப் பிரதம மந்திரி பெர்லுஸ்கோனி தன் இராஜிநாமாவை அறிவிக்கிறார்

By Marianne Arens and Peter Schwarz
10 November 2011
use this version to print | Send feedback
 

செவ்வாய் மாலை இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி தன் இராஜிநாமாவை அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை இத்தாலியப் பாராளுமன்றம் ஏற்கும் வரை அவர் பதவியில் தொடர்ந்திருக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த வழிவகை சில வாரங்கள் பிடிக்கலாம். La Stampa செய்தித்தாளிடம் பெப்ருவரி மாதம் திட்டமிடப்பட்டுள்ள வருகின்ற பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று பெர்லுஸ்கோனி கூறினார்.

பெர்லுஸ்கோனி இராஜிநாமாவிற்கு உடனடிக் காரணம் அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துவிட்டதுதான். செவ்வாயன்று 2010ம் ஆண்டிற்கான நிதி அறிக்கை வாக்கெடுப்பில் 630 எம்.பி.க்களில் 308 பேரே ஆதரவாக வாக்களித்தனர்; இது முழுப் பெரும்பான்மைக்கு தேவையானதை விட எட்டு வாக்குகள் குறைவாகும். 2008 ஆண்டு வசந்தகாலம் நடந்த தேர்தலுக்குப் பின் அரசாங்கம் 344 இடங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தது.

எப்படியும் ஆண்டு அறிக்கை செவ்வாயன்று ஏற்கப்பட்டது; எதிர்க்கட்சிகள் வாக்களிக்காமல் போனதால் இது நடந்தது.

இத்தாலியில் பலராலும் பெர்லுஸ்கோனியின் இராஜிநாமா நிம்மதியுடன் வரவேற்கப்பட்டுள்ளது. சமீபத்திய மாதங்களில் அவருடைய கொள்கைகளுக்கு எதிராக நூறாயிரக்கணக்கானவர்கள் எதிர்த்திருந்தனர்; அவருடைய கட்சி தொடர்ச்சியாக பிராந்தியத் தேர்தல்களில் தோற்றுவிட்டது; ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பில் 75 சதவிகிதம் விடையிறுத்தவர்கள் தங்கள் எதிர்ப்பைத்தான் தெரிவித்திருந்தனர். ஆனால் அவருடைய இராஜிநாமாவிற்கு வழிவகுத்த முன்முயற்சி பாராளுமன்ற எதிர்ப்பில் இருந்து வரவில்லை; மாறாக சர்வதேச நிதியச் சந்தைகள், ஐரோப்பிய ஒன்றியம், இத்தாலிய முதலாளிகள் சங்கங்கள் மற்றும் அவருடைய சொந்த அரசியல் முகாம் ஆகியவற்றில் இருந்து வந்தது.

சமீபத்திய மாதங்களில் பெர்லுஸ்கோனி பெருகிய அழுத்தத்தின் கீழ் வந்துள்ளார்; ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியம் கோரிய சிக்கன நடவடிக்கைகளை அவர் போதிய கடுமையான தன்மையில் செயல்படுத்த இயலவில்லை. வணிகத் தலைவர்கள், வங்கியாளர்கள், கடன்தர நிர்ணய நிறுவனங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஆகியோர் அவர் இராஜிநாமா செய்து ஒரு புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர்.

பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் விதி அடுத்த சில மணி நேரங்களில் முடிவெடுக்கப்பட வேண்டும், பாராளுமன்றத்தில் அடுத்த சில நாட்களில் முடிவெடுக்கப்பட வேண்டும் என்று Confindustria முதலாளிகள் குழுவின் தலைவர் எம்மா மார்சிகக்லியா உரத்த குரலில் முழக்கமிட்டார். ஆடம்பர பாத அணிச் சின்னமான Tod ன் உரிமையாளரான Diego Della Valle, ஒரு முழுப்பக்க விளம்பரத்தை முக்கிய செய்தித்தாள்களில்அரசியல்வாதிகளே: போதும் நீங்கள் செய்துவருவது!” என்ற தலைப்பில் வெளியிட்டார்.

போப் பதினாறாம் பெனிடிக்ட் கூட தலையிட்டு, ஜனாதிபதி ஜியோர்ஜியோ நாபோலிடனோவிற்கு அனுப்பிய தந்தி ஒன்றில் இத்தாலியில்ஒரு அறநெறிப் புதுப்பித்தல் தேவை என வலியுறுத்தியிருந்தார்.

பெர்லுஸ்கோனியின் சுதந்திரத்திற்கான மக்கள் கட்சியின் (PdL) பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து இராஜிநாமா செய்தனர்; அவருடைய கூட்டணிப் பங்காளிகளும் அரசாங்கத்தின் தலைவருக்கு எதிராக நடந்து கொண்டனர். Lega Nord என்னும் வடக்குக் கழகத்தின் தலைவரான Umerto Bossi, பெர்லுஸ்கோனிபதவியில் இருந்து விலகி அரசாங்கப் பொறுப்பை PdL தலைவர் Angelino Alfano விடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிந்தையவர் பெர்லுஸ்கோனியை விட 34 ஆண்டுகள் இளையவர்.

நிதியச் சந்தைகளும் பங்குச் சந்தைகளும் நில அதிர்வு கண்டறியும் கருவி போல் பெர்லுஸ்கோனி விருப்பங்கள் பற்றிய வதந்திகளை எதிர்கொண்டன. அதிகாரத்தில் இருக்கப் போவதாக அவர் குறிப்புக் காட்டியபோது, சந்தைகள் சரிந்தன. இராஜிநாமா செய்வதாகத் தெரிவித்தபோது, அவை பெரும் ஏற்றத்தைக் காட்டின. இராஜிநாமா அறிவிப்பிற்குச் சற்று முன்பு, இத்தாலிய அரசாங்கப் பத்தாண்டுப் பத்திரங்கள் மீதான வட்டி விகிதங்கள் 6.7 சதவிகிதம் என்று மிகப் பெரிய உயர்வைக் கண்டன. 1999ல் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இது மிக அதிக உயர்வு ஆகும்.

ஆனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நிதியச் சந்தைகள் புதன்கிழமை தீவிரமாகச் சரிந்தன; பெர்லுஸ்கோனி வெளியேறுதல் இன்னும் பல வாரங்கள் தாமதப்படலாம் என்று இருப்பது இதற்கு ஓரளவு காரணமாக இருக்கலாம்.

யூரோப் பகுதியில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமும், உலகில் ஏழாவது பெரிய பொருளாதாரமுமான இத்தாலி, கிரேக்கத்துடன் இப்பொழுது ஐரோப்பிய கடன் நெருக்கடியின் இதயத்தானத்தில் உள்ளது.  நாட்டின் கடனான 1.9 டிரில்லியன் யூரோக்கள் என்பது ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பின் (EFSF) திறனை விட மிக அதிகம் ஆகும். பல நாட்களாக இத்தாலிய அரசாங்கத்தின் பத்திரங்கள் மீதான கடன் விகிதங்கள் அச்சுறுத்தும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. தான் கடன் வாங்கியவர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இத்தாலியால் முடியவில்லை என்றால், அதன் அரசாங்கத் திவால்தன்மை முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் அச்சுறுத்தும்.

கடந்த மாதம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், பெர்லுஸ்கோனி மிகக் கடுமையான சிக்கனத் திட்டத்தைச் செயல்படுத்துமாறு பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டார். வங்கிகளைத் திருப்தி செய்வதற்காக, இத்தாலி ஓய்வூதிய வயதை உயர்த்துதல், கூடுதல் வரிகளை வசூலித்தல், சமூகநலப் பணிகளை வெட்டுதல், அரசாங்க சொத்துக்களை தனியார்மயம் ஆக்குதல், சட்டபூர்வ வேலைப் பாதுகாப்பு விதிகளை அகற்றுதல், பொதுத்துறை ஊதியங்களைக் குறைத்தல், ஏராளமான அரசாங்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்தல் ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்று கோரப்பட்டது.

கூடியிருந்த தலைவர்கள் இச்சிக்கன நடவடிக்கைகளை பெர்லுஸ்கோனி செயல்படுத்துவார் என்று தாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை இரகசியமாக ஒன்றும் வைத்திருக்கவில்லை. இத்தாலியின் வரவு-செலவுத் திட்டக் கொள்கை பற்றிக் கேட்கப்பட்டதற்கு ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியும் ஒரு வசைப்பாங்கான முறையில் நகைத்தனர்.

இந்த மாதம் கானில் நடைபெற்ற G20 உச்சிமாநாடு இத்தாலியை IMF ன் கண்காணிப்பின் கீழ் இருத்தியது. இத்தாலிய அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்துவது பற்றிய அறிக்கையை IMF க்கு ஒவ்வொரு மூன்று மாதமும் அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும்.

சர்வதேச நிதியச் சந்தைகள் மற்றும் இத்தாலியப் பெருவணிக நலன்களின் பிரதிநிதிகள் பெரும் சிக்கன நடவடிக்கைகளையும் விரைவில் அரசாங்க மாற்றத்தையும் கோரியநிலையில், உத்தியோகபூர்வ இத்தாலிய எதிர்க்கட்சி மக்கள் அணிதிரள்வு ஏற்படுவதைத் தடுக்க முற்பட்டது. அரசாங்க மாற்றத்துடன் தொடர்புடைய அரசியல் உறுதிப்பாடற்ற தன்மை அரசியல் நிகழ்வுகளில் பொதுமக்கள் நேரடித் தலையீட்டிற்கு வகை செய்யக்கூடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. எனவே அது அத்தகைய நிகழ்வை எப்படியும் தடுக்க முற்படுகிறது.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் சரிவில் வேர்களைக் கொண்டுள்ள, மிகப் பெரிய எதிர்க்கட்சியான ஜனநாயகவாதிகள் (PD) நடந்து கொள்ளும் முறை விந்தையான வடிவங்களைக் கொண்டது. செவ்வாயன்று அக்கட்சியினர் வேண்டுமென்றே பெர்லுஸ்கோனியை வீழ்த்துவதில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர். பிரதிநிதிகள் மன்றத்தில் வாக்களிக்காமல் இருந்த வகையில் அவர்கள் அரசாங்கத்தின் ஆண்டு அறிக்கை ஏற்கப்படுவதை அனுமதித்தனர். அவர்கள் பெர்லுஸ்கோனிக்கு எதிராக வாக்களித்து ஒரு தோல்வியைக் கொடுத்திருந்தால், அவர் உடனடியாக இராஜிநாமா செய்திருக்க வேண்டும்.

வாக்கெடுப்பிற்குப் பின் PD தலைவரான Pier Luigi Bersani நேரடியாக பெர்லுஸ்கோனியை விளித்து அவர் உடனடியாகத் தானே இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற வகையில், “இந்த நடவடிக்கையை நீங்கள் செய்யமால் இருக்க முடியுமா என நான் சவால் விடுகிறேன் என்றார்.

ஜனநாயகக் கட்சியினர் முன்கூட்டிய தேர்தல்களை தவிர்க்க விரும்புகின்றனர்; இதற்குக் காரணம் அரசியல் அதிர்வுகள் இருக்குமென அவர்கள் அஞ்சுவதுதான்; மேலும் தேர்தல் வெற்றிவாய்ப்பு தங்களுக்கு அதிகம் இல்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர். நிபந்தனையற்ற முறையில் அவர்கள் IMF, EU ஆகியவற்றின் ஆணைகளுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்; சிக்கனத்தைத் தவிர வேறு எதையும் வாக்காளர்களுக்கு அவர்கள் கொடுப்பதற்கில்லை. செவ்வாய் மாலை பெர்சனி வெளிப்படையாகப் பாராளுமன்றத்தில்நாட்டிற்கான பொறுப்பில் தன் பங்கை எடுத்துக் கொள்ளத்தயார் என்று கூறினார்.

கடந்த சனிக்கிழமையன்று ரோமில் பியாசா சான் ஜியோவன்னியில் நடந்த அணிவகுப்பு ஒன்றில் பெர்சனி ஏற்கனவே மற்ற கட்சிகளுடன் இணைந்து அடுத்த அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதாக ஒப்புக் கொண்டுள்ளார். அவருடைய சக மூத்த ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளாகபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹோலண்ட், ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் சிக்ரன் காப்ரியல் ஆகியோர் இருக்கின்றனர். CGIL எனப்படும் மிகப் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவரான Susanna Camusso வும் உடன் இருந்து, பெர்லுஸ்கோனிஇத்தாலி மீண்டும் ஒரு சுயாதீன காபினெட்டைப் பெறுவதற்கு பெர்லுஸ்கோனி இராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.

ஜனாநாயகக் கட்சியினர் நிதியச் சந்தைகள் கோரும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்குத் தொழில்நுட்ப வல்லுனர் அடங்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பதை விரும்புகின்றனர். அவர்கள் 68 வயதான பொருளாதாரப் பேராசிரியரும் ஐரோப்பிய ஒன்றிய முன்னாள் ஆணையாளருமான மரியோ மோன்டி புதிய அரசாங்கத்தின் தலைவராக வருவதற்கு ஆதரவு கொடுக்கின்றனர்; இத்திட்டத்திற்கு இரு கட்சிகளின் ஆதரவும் உள்ளன.

பெர்லுஸ்கோனி உண்மையில் இராஜிநாமா செய்தால், ஒரு புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முன்முயற்சி 86 வயது ஜனாதிபதி ஜியோர்ஜியோ நாபோலிடானோவிடம் இருக்கும்; இவரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்தான். இவர் முந்தைய கூட்டணி அரசாங்கத்தின் செயல்களைப் புதிய தலைமையுடன் தொடரலாம், ஒரு இடைக்கால அல்லது தொழில்நுட்பவகையிலான அரசாங்கத்தை அமைக்கலாம் அல்லது 2012 வசந்த காலத்தில் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.

அதுவரை பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் தலைவர் என்னும் முறையில் தனக்குப் பின் பதவிக்கு வருபவருக்குத் தயாரிப்புக்களை நடத்தலாம். ஜனநாயகவாதிகளைப் போல் இல்லாமல், அவர் முன்கூட்டிய தேர்தல்களுக்கு வாதிடுகிறார்; ஏற்கனவே 41 வயதான Angelino Affano வை தனக்குப் பின் பதவிக்கு வருபவர் என்று அறிவித்துள்ளார்.

சிசிலியைச் சேர்ந்த அல்பானோ 2008ல் இருந்து 2010 வரை பெர்லுஸ்கோனி அரசாங்கத்தின் நீதி மந்திரியாக பணிபுரிந்து, இப்பொழுது ஆளும் PdL கட்சிக்குத் தலைமை தாங்குகிறார். நீதித் துறை மந்திரி என்ற முறையில் அவர் அவருடைய பெயரில் வந்துள்ள ஒரு சட்டத்திற்குப் பொறுப்பாகிறார்; இது பெர்லுஸ்கோனிக்கு அவர் அதிகாரத்தில் இருந்தபோது செய்தவற்றிற்கு சட்டபூர்வ விதிவிலக்குகளை அளிக்கிறது. இச்சட்டம் பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

அல்பானோ மாபியாவுடன் தொடர்புகள் கொண்டுள்ளதாக வதந்திகள் உள்ளன. 1996ல் அவர் ஒரு மாபியா எஜமானரின் மகளுடைய திருமணத்தின்போது, மணப்பெண்ணின் தந்தைக்கு முத்தம் கொடுத்தாற்போல் காணப்பட்டார்.

பெர்லுஸ்கோனி தனக்குப் பின் யார் வருவார் என்பதை நிர்ணயிக்கும் நிலை அவருடைய இராஜிநாமா அறிவிப்பைத் தொடர்ந்து சற்றே ஏற்றம் பெற்ற சந்தைகளை மீண்டும் சுழலச் செய்யப் போதுமானதாக இருந்தது. புதனன்று இத்தாலிய அரசாங்கப் பத்திரங்கள் மீதான கடன் விகிதங்கள் ஒரு புதிய உயர்ந்த அளவான 7 சதவிகிதத்திற்கு மேல் என்று எட்டின.

முன்னாள் இடது கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷன் (PRC) மற்றும் அதில் இருந்து வந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள்தேசிய ஒருமித்த உணர்வு என்னும் கொள்கைக்கு ஆதரவு கொடுக்கின்றனர்; மேலும் நாட்டின் தொழிலாளர்களின் இழப்பில் இத்தாலிய பொருளாதாரம் புதுப்பிக்கப்படுவதையும் நாடுகின்றனர்.

PRCயின் தலைவரும்இடது கூட்டணியின் தலைவருமான Paolo Ferrero இரு முக்கிய அரசியல் முகாம்களையும் குறைகூறி, அவை மக்களைப்படுகொலை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவருடைய கோரிக்கைகள் உண்மையில் சார்க்கோசி மற்றும் மேர்க்கெல் முன்வைத்த கோரிக்கைகளுடன் இணைந்துதான் இருக்கின்றன; இதில்நிதிய ஊகத்தைத் தடுத்தல்”, வணிக மற்றும் ஊகத்திற்கான வங்கிச் செயற்பாடுகள் பிரிக்கப்படல், நிதிய நடவடிக்கைகளின் மீது வரி, நிதியச் சந்தைகளில்குறைந்த விற்பனை என அழைக்கப்படுவதைத் தடுத்தல் ஆகியவை அடங்கும்.

2006ல் இருந்து 2008 வரை ரோமனோ பிரோடி தலைமையில் இருந்த அரசாங்கத்தில் சமூகநல மந்திரியாக பெரெரோ இருந்தார். அவர் பதவியில் இருக்கும்போது, பெரெரோ சமூகநலச் செலவுகள் குறைப்புக்கள், ஓய்வூதியமுறையின் மீது தாக்குதல், ரோமாக்களை அகற்றுவது, மற்றும் லெபனான், ஆப்கானிஸ்தானில் இத்தாலிய இராணுவத் தலையீடுகளுக்கு ஆதரவு ஆகியவற்றைக் கொடுத்திருந்தார்.

ஒரு பேட்டியில் முன்னாள் PRC தலைவரும் புக்லியாவின் ஆளுனருமான  Nichi Vendola, “இத்தாலியப் பிரச்சினையை நாம் சமாளிக்க வேண்டும், இது மிகப் பெரிய கடன், குறைந்த வளர்ச்சி என்ற வகையில் வெளிப்பட்டுள்ளது என்றார். “ஒரு புதுவகை ஆலிவ் மரக் கூட்டு தேவை என்றார், அதாவது, பிரோடி அரசாங்கம் மறுபடியும் பதவிக்கு வரவேண்டும் என.

ஜனாதிபதி நாபாலிடனோவை ஒருஒளிவழிகாட்டி என விவரித்து அவருடைய சொற்களைக் கேட்பதற்கு எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார் வெண்டோலா. தேவையானல் வலதுசாரிச் சக்திகளுடன் ஒத்துழைக்கத் தான் தயார் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். “பெர்லுஸ்கோனியிடம் இருந்து மிகத் தொலைவில் நான் இருந்தாலும், பெரும்பான்மையினர் அவருடன் ஒத்துழைக்க முடியும் என்று நம்புகிறேன் என்றார் வெண்டோலா. புக்லியாவில் அவர் பிராந்திய PdL மந்திரி Raffaele Fitto உடன் உடன்பாட்டைக் கொண்டுள்ளார். “எப்பொழுதும் நிரந்தரமாக ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பது போல் நாம் வாழக்கூடாது என்று வெண்டோலா சேர்த்துக் கொண்டார்.

தங்களைஇடது என அழைத்துக் கொள்ளும் இத்தகைய அரசியல்வாதிகள்தான் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்கள் மீது முன்னோடியில்லாத தாக்குதல்கள் என்று நிதியச் சந்தைகளின் ஆணைகளுக்கு ஒப்புக் கொள்கின்றனர். தொழிலாள வர்க்கம் அணிதிரண்டு எழுந்து அரசியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதுதான் அவர்களுடைய முக்கியமான விருப்பம் ஆகும்.