சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

IAEA dossier heightens danger of war against Iran

IAEA கோப்பு ஈரானுக்கு எதிரான போர் என்னும் ஆபத்தை உயர்த்திக் காட்டுகிறது

Peter Symonds
10 November 2011

use this version to print | Send feedback

சர்வதேச அணுச் சக்தி  அமைப்பு (IAEA) செவ்வாயன்று வெளியிட்டுள்ள ஈரானின் அணுசக்தித் திட்டம் பற்றிய அறிக்கை அமெரிக்கா மற்றும் அதனுடைய நட்பு நாடுகளின் கோரிக்கையில் எழுதப்பட்ட உயர்மட்ட அரசியல் ஆவணம் ஆகும்; இது தெஹ்ரானுக்கு எதிரான பொறுப்பற்ற ஆக்கிரோஷப் பிரச்சாரத்திற்கு அரங்கு அமைக்கிறது. இந்த தொகுப்புக்கள் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் 2002ல் ஈராக் மீதான குற்றம் சார்ந்த படையெடுப்பை நியாயப்படுத்துவதற்குக் கூறப்பட்ட நயமற்ற அரைகுறை உண்மைகள், பொய்கள், திரிப்புத் தயாரித்தல்கள் எனத் தயாரிப்புக்கள் நடந்ததைத்தான் நினைவூட்டுகின்றன.

ஈராக் போரினால் தோற்றுவிக்கப்பட்ட மிகப் பெரிய மக்களின் நம்பிக்கையற்ற தன்மையைக் கடக்கும் வகையில் அமெரிக்கா பல ஆண்டுகளாக ஈரான் அணுவாயுதங்களைக் கட்டமைக்க முற்படுவதற்கானசான்றுகள் உள்ளன என்னும் அதன் ஒப்புதல் முத்திரையை வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகிறது. சமீபத்திய IAEA அறிக்கையிலுள்ள தகவல்களின் பெரும்பகுதியில் புதிதாக ஏதும் இல்லை; ஆனால் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய  உளவுத்துறைப் பிரிவுகளால் கடந்த தசாப்தம் முழுவதும் ஐ.நா.பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள்தான்.

அக்டோபர் 2009ல், IAEA இரகசிய ஆவணம் ஒன்று, மேற்கத்தைய ஏஜென்சிகள் கொடுத்த உளவுத் தகவல்களை சுருக்கிஈரானின் அணுத் திட்டத்தில் ஒருவேளை இருக்கக் கூடிய  இராணுவப் பரிமாணங்கள் என்ற தலைப்பில் எழுதப்பட்டு நியூ யோர்க் டைம்ஸிற்கு கசியவிடப்பட்டது. அப்பொழுது IAEA ன் இயக்குனராக இருந்த மஹ்மத் எல்பரடேய் சந்தேகத்திற்கு உரிய பொருளுரை கொண்டிருந்த அந்த ஆவணத்தை வெளியிட மறுத்ததால் வேண்டுமென்றே அம்முயற்சியைக் கடப்பதற்கான கசிவாக இருந்தது.

2002ல் ஈராக் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்னும் அமெரிக்கப் பொய்யை எல்பரடேய் அப்பட்டமாக மறுத்ததால், வாஷிங்டனின் தீரா விரோதத்தைத்தான் சம்பாதித்துக் கொண்டார்.

டிசம்பர் 2009ல் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இறுதியாக எல்பரடேய்க்குப் பதிலாக இன்னும் வளைந்து கொடுக்கக் கூடிய IAEA இயக்குனராக யுகியுவா அமனோவை அப்பதவியில் இருத்தின. விக்கிலீக்ஸ் பின்னர் வெளியிட்ட தகவல் ஆவணத்தின் கூற்றுப்படி அமனோவே ஒரு உயர்மட்ட அமெரிக்கத் தூதரிடம்ஒவ்வொரு மூலோபாய முடிவிலும் தான் அமெரிக்க அரசாங்கத்திற்கு உடன்பாடு கொள்வதாகவும், அது உயர்மட்ட நியமனங்களில் இருந்து ஈரானின் அணுவாயுதத் திட்டம் எனக் கூறப்படுபவற்றைக் கையாள்வது வரை இருக்கும் என்றும் விளக்கியிருந்தார்.”

அமானோவின் சமீபத்திய அறிக்கையின் முக்கிய இணைப்பு ஆவணம், “ஈரானின் அணுவாயுதத் திட்டத்தில் ஒருவேளை இருக்கக் கூடிய இராணுவப் பரிணாமங்கள் என்பது கூடுதல் சான்றுகள் ஏதும் இல்லை என்னும் வகையில்தான் குறிப்பிடத்தக்கது ஆகும்.

இக்குற்றச்சாட்டுகளுக்கு மையமாக இருப்பது IAEA க்கு அமெரிக்கா 2005ம் ஆண்டு ஒரு அணுகுண்டு கட்டமைப்பதின் கூறுபாடுகள் பற்றிஆய்வுகள் நடந்தன என்று அழைக்கப்பட்ட ஒரு தகவல் கொடுக்கப்பட்டது ஆகும். ஈரானிய ஆவணங்கள் என்று கூறப்பட்ட 100 பக்கங்கள் கொண்ட இத்தகவலின் ஆதாரம் அமெரிக்க உளவுத்துறை பெற்ற ஒரு மடிக்கணனியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் ஆகும்.

இந்த ஆவணங்கள் போலித் தயாரிப்புக்கள் என்று ஈரான் அறிவித்துள்ளது; அவற்றின் மூலச் சான்றுகளோ மடிக்கணனியோ IAEA விடம் கொடுக்கப்படவில்லை. 2009ல் இந்து செய்தித்தாளிடம் பேட்டி கொடுத்த எல்பரடேய் மடிக்கணனி ஆதாரத்தைக் கொண்ட ஆவணங்கள் பற்றியமுக்கிய நம்பகத்தன்மைப் பிரச்சினை உள்ளது என்று அறிவித்தார்.

இஸ்ரேலிய அல்லது அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளால் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஒட்டித் தன் வாதத்தை நிர்ணயிப்பதில் அமானோவிற்கு மன உளைச்சல் இல்லை என்பது தெளிவு. உண்மையில், வெற்றுப் பகட்டுத்தன சொல்லாட்சி இருந்தபோதிலும், அவருடைய அறிக்கை ஈரானிய எதிர்ப்புக்களைப் பொருட்படுத்தாத வெளிப்படையான கொள்கைரீதியான ஆவணம் ஆகும்; பெயரிடப்படாத உறுப்பு நாடுகளின் உளவுத்துறைகள் அளித்துள்ள தகவல்கள் நல்ல தன்மை உடையவை ஏன ஏற்றுள்ளது ஆகும்.

எனவே அவருடைய முடிவுகள் மிகவும் எச்சரிக்கைத் தன்மை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது: 2003க்கு முன்னதாக ஈரான்அணுவாயுத வெடிப்புக் கருவி  தயாரிப்பிற்குப் பொருந்திய நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது, “அவை முறையான கட்டமைப்பைக் கொண்டவை”, “சில செயற்பாடுகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளன.

தற்காலிகம் என்றாலும்கூட, இறுதிக்கட்ட சொற்றொடரிலுள்ள சொல்லாட்சி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளைப் பற்றிக் குறைகூறுகிறது; அவைதான் 2007ல் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளின் கூட்டு மதிப்பிட்டின் முடிவுரையை மாற்றுவதற்காக வலியுறுத்தப்பட்டவை; அதாவது ஈரானிய அணுவாயுதத் திட்டங்கள் 2003ல் முற்றுப்பெற்றுவிட்டன என்பதை.

தனக்கு முன் பதவியில் இருந்த ஆட்சியைப் போன்றே, ஒபாமா நிர்வாகத்திற்கும் ஒரு வளைந்துகொடுக்கும், ஊழல் மிகுந்த, திறனாயாத செய்தி ஊடகத்தை ஒரு தசாப்தத்திற்கு முன் நடைபெற்ற குறைந்தப்பட்ச நடவடிக்கையை ஒரு தவிர்க்க முடியாத அணு ஆபத்து என்று பரபரப்புடன் காட்டும் என்பதை நம்பலாம் என்று நன்கு அறிந்துள்ளது. இந்த வழிவகைதான் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது; இதையொட்டி சிறிதும் பொறுப்பற்ற கட்டுரைகள் சர்வதேச செய்தி ஊடகங்களில் IAEA அறிக்கையைப் பயன்படுத்தி ஈரான் ஒரு அணுவாயுதத்தை தயாரிக்கும் நிலையில் கிட்டத்தட்ட உள்ளது என்று வந்துள்ளன.

ஈராக் தொடர்பாக நடந்தது போலவே, ஈரானிய பேரழிவு ஆயுதங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களும் தெஹ்ரானுக்கு எதிரான ஆக்கிரோஷப் போருக்கு அப்பட்டமான போலிக்காரணங்கள் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை; அத்தகைய நடவடிக்கைகளில் இன்னும் அதிகப் பொருளாதாரத் தடைகளுடன் இறுதியில் இராணுவத் தாக்குதலும் அடங்கியுள்ளன. செய்தி ஊடக விமர்சகர்கள் பிராந்திய அமைதிக்கு ஈரான் அச்சுறுத்துல் என்று கண்டிப்பவர்கள், எனவே கடுமையான நடவடிக்கை தேவை என்று கூறுபவர்கள், கடந்த தசாப்தத்தில் மத்திய கிழக்கில் ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடக்கிய இரு நாடுகளான அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் என்பதைப் புறக்கணிக்கின்றனர். மேலும் அணுவாயுதங்களைப் பெறுவதற்கு ஆர்வம் உடையதாக ஈரான் உள்ளது என்று கண்டிக்கும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய நட்பு நாடுகள்பாக்கிஸ்தான், இந்தியா, எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேல்கொண்டுள்ள பெரும் அணுவாயுதக் கிடங்கு பற்றி அவர்கள் முற்றிலும் பாசாங்குத்தனமாக மௌனம் சாதிக்கின்றனர்.

ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தும் அமெரிக்கப் பிரச்சாரமானது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் முக்கிய எரிசக்திச் செழிப்புள்ள பகுதிகளில் மேலாதிக்கம் பெற விரும்பும் வாஷிங்டனின் விழைவினால் உந்துதல் பெறுகிறது. பாக்தாத் ஆட்சியைக் கவிழ்த்தபின் தெஹ்ரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தை புஷ் நிர்வாகம் கைவிடும் கட்டாயத்திற்கு உட்பட்டது; ஏனெனில் அமெரிக்க இராணுவம் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இராணுவச் சகதிக்குள் சிக்கிவிட்டது. ஆனால் அமெரிக்காவானது ஈரானில் அதன் ஆட்சி மாற்றத்திற்கான திட்டத்தை ஒருபொழுதும் கைவிடவில்லை; ஈரானின் இஸ்லாமியத் தலைவர்கள் சமாதான சமரசத்திற்கு முயற்சிகள் செய்தாலும்கூட, அந்நாட்டை வாஷிங்டன் தன் மேலாதிக்கத்திற்கு முக்கிய தடை என்று கருதுகிறது.

 ஆழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடி வாஷிங்டனை புதிய, இன்னும் பொறுப்பற்ற இராணுவ தீர நடவடிக்கைளுக்கு இழுக்கிறது; இது அதன் போட்டி நாடுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துதல், குறிப்பாக சீனாவை மற்றும் உள்நாட்டின் வெடிப்புத்தன்மை உடைய சமூக அழுத்தங்களில் இருந்து திசைதிருப்புதல் என்னும் இரு நோக்கங்களைக் கொண்டது. லிபியாவில்வெற்றி அடைந்துள்ளதன் புத்துணர்வை ஒட்டி, திரிப்போலியில் ஒரு வாடிக்கை ஆட்சியை நிறுவியதை அடுத்து, அமெரிக்க அரசியல் நடைமுறையின் சில பிரிவுகள் ஏற்கனவே ஈரானை அடுத்த இலக்காக அடையாளம் கண்டுள்ளன.

 இந்தக்கட்டத்தில், ஒபாமா நிர்வாகம் இராணுவத் தாக்குதலுக்குப் பதிலாக இன்னும் கூடுதலான பொருளாதாரத் தடைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது; மற்ற நாடுகள் அந்த அளவிற்குத் தயக்கம் காட்டவில்லை. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட கருத்துக் கட்டுரை ஒன்று செவ்வாயன்று பொருளாதாரத் தடைகளைப் பயனற்ற விருப்பத்தேர்வு என உதறித்தள்ளி, “உண்மையான விவாதம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளதுஅதாவது அணுவாயுதம் கொண்ட ஈரானை அனுமதிப்பதா, அல்லது இராணுவச் சக்தியைப் பயன்படுத்தி அதை நிறுத்திவிடுவதா என. கட்டுரை தான் பிந்தைய போக்கை விரும்புவதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈரானுக்கு எதிரான போர் பற்றிய உந்துதலுக்கு லிபியப் போரில் ஒரு அமெரிக்க நேட்டோ காலனித்துவ அமெரிக்க இராணுவவாதத்திற்கு முழுச் சகோதரத்துவ தாராளவாதிகள், போலி தீவிரமுடையோர்களும் தங்கள் ஆதரவை ஏற்கனவே கொடுத்துள்ளன என்பது வசதியாக உள்ளது. “ஜனநாயகத்திற்காக ஈரானுக்கு எதிரான போர் என்பதற்கான பிரச்சாரத்திற்கு அரசியல் தளம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது; அப்பொழுது கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் இடது அமைப்புக்களும் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த பசுமை இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தன; அந்த இயக்கம் ஈரானின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றும் வகையில் வாஷிங்டனுடைய நலன்களுக்கு இன்னும் வளைந்து கொடுக்கும் ஒரு எதிர்த்தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

ஈரானுக்கு எதிரான இப்படிப் பெருகும் அச்சறுத்தலைத் தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்க்க வேண்டும்; அப்பிராந்தியத்தை உண்மையான ஆபத்து சூழ்ந்து கொள்ளும் அபாயத்தை இப்போக்கு கொண்டுள்ளதுஅது பெரும் தீய விளைவுகளைக் கொடுக்கும் ஒரு சர்வதேச மோதலைத் தூண்டிவிடும் தன்மையை உடையது. மேலும், முந்தைய எதிர்ப்புக்களில் இருந்து அரசியல் படிப்பினைகள் பெறப்பட வேண்டும்எல்லாவற்றிற்கும் மேலாக 2002ம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போருக்கு எதிராக உலகளாவிய, முன்னோடியில்லாத பெரும் ஆர்ப்பாட்டங்களில் இருந்துஇராணுவாதம் வெடித்துப் புறப்படுவதைத் தவிர்ப்பதற்கு நடந்ததில் இருந்து.

முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது எத்தகைய தீவிர அழுத்தம் கொடுத்தாலும் போருக்கான உந்துதலை நிறுத்த முடியாது. மாறாக, இப்பொழுது தேவைப்படுவது சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சுயாதீன அரசியல் இயக்கத்தைக் கட்டமைப்பதுதான். இத்திட்டம் போருக்கு மூல காரணமான இலாப அமைப்புமுறையை அகற்ற வேண்டும் அத்தோடு முதலாளித்துவ பந்தமாகவுள்ள தேசிய அரச அமைப்புமுறையானது வரலாற்று ரீதியாக காலாவதியான பிரிவாகவுள்ளதை அகற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.