சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spain’s M-15 protests continue

ஸ்பெயினின் M-15 எதிர்ப்பார்ப்பாட்டங்கள் தொடர்கின்றன

By our reporters
30 May 2011

use this version to print | Send feedback

Puerta del Sol
Puerta del Sol
சதுக்க எதிர்ப்பு முகாமின் ஒரு காட்சி

ஸ்பெயினின் மட்ரிட்டிலுள்ள முக்கிய Puerta del Sol சதுக்க ஆக்கிரமிப்பு வார இறுதியிலும் தொடர்ந்தது. எதிர்ப்புக்கள் அடுத்த வாரமும் தொடர இருக்கின்றன. இச்சதுக்கம் முன்னாள் அஞ்சல் அலுவலக கட்டிடத்திற்கு எதிரே உள்ளது. இப்பொழுது இது மட்ரிட் பிராந்திய அரசாங்கத்தின்  மக்கள் கட்சித் (PP) தலைவர் எஸ்பெரன்சா அகுயிரின் அலுவலகம் ஆகும்.

ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமையன்று மட்ரிட்டின் அண்டைய கம்யூன்கள், அண்மைப் பகுதிகளிலும் 120 கூட்டங்களாகக் குழுமினர். இவர்களுள் கிட்டத்தட்ட 800 பேர் தலைநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்

ஞாயிறன்று ஆயிரக்கணக்கானவர்கள் Puerta del Sol இல் கூடினர். எதிர்ப்பாளர்கள்போதும்!”, “இவர்கள் ஓயப்போவதில்லை”, “மாதம் 600 யூரோக்கள் ஊதியம் என்பது பயங்கரவாதம்போன்றவற்றை அடங்கிய கோஷ அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

வெள்ளியன்று பார்சிலோனாவின் 120 பேர் காயப்படுத்தப்பட்ட, முக்கிய சதுக்கத்தில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பை ஸ்பெயின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE) அரசாங்க வன்முறை பொலிஸ் மிருகத்தனமான முறையில் நசுக்குதல் என்ற பெருகிய அச்சுறுத்தலை எதிர்கொண்டும் இந்த எதிர்ப்புக்கள் தொடர்கின்றன.

Puerta del Sol லை சுற்றியுள்ள கட்டிடங்களில் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பதாகைகள் நிறைந்து உள்ளன. அவற்றுள் ஒன்று கூறுகிறது, “மட்ரிட், ஸ்பெயின் புரட்சியின் தலைநகர்”. சதுக்கத்தில் உள்ள மெட்ரோ நிலையத்தின் நுழைவாயிலில் தொங்கவிடப்பட்டுள்ள ஒரு பதாகை நாட்டின் பிரச்சினைகளில் பாதி ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை சிறையில் தள்ளினால் முடிவிற்கு வரும் என அறிவித்தது.

Sunday
ஞாயிறு பிற்பகலில்
Puerta del Sol இல் ஒரு கூட்டம்

சதுக்கத்தின் மையப் பகுதியில் நூற்றுக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவர்கள் வறிய இளைஞர்களுடன் சேர்ந்து உள்ளனர். இந்த முகாம்களில் பலதரப்பட்ட உட்பிரிவுகள் பல குழுக்களை கொண்டுள்ளனசில பெண்ணுரிமை, சுற்றுச் சூழல், அரசியலமைப்பு சட்டம் ஆகியவை பற்றி எடுத்துரைக்கின்றன. ஒரு நூலகமும் உள்ளது. பல சமூகவியல் கோட்பாடுகளைப் பற்றிய புத்தகங்கள் உள்ளன. இந்தச் சிறு கடைகளில் அரசியல் கட்சிகளுடைய பிரதிநித்துவம் இல்லை. மே 15 (M-15) அமைப்பாளர்களின் பிரதிநிதிகள் ஸ்பெயினில் வெகுஜன எதிர்ப்புக்கள், முன்னதாக இந்த ஆண்டு எகிப்திலும் துனிசியாவிலும் நடந்த புரட்சிகர எழுச்சிகள் ஆகியவை தொடர்புடைய இலக்குகளைக் கொள்ளவில்லை என வலியுறுத்தினர்எகிப்து போல் இல்லாமல் ஸ்பெயினில்ஜனநாயகம்உள்ளது, எனவே மக்கள் அரசியல் வழிவகையை செல்வாக்கிற்கு உட்படுத்த முடியும் என வலியுறுத்தினர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர் Puerta del Sol முகாமின் செய்தித் தொடர்பாளரான Mariane Martinez ஐ பேட்டி கண்டார். “இது அரசாங்கத்தை அழிப்பதற்கான போராட்டம் இல்லை. அரசாங்கம் மக்கள் குரலைக் கேட்க வேண்டும் என்பதற்கான போராட்டம்என்றார் அவர்.

இதற்கு முற்றிலும் மாறான வகையில் அரபு எதிர்ப்பாளர்கள் குழு ஒன்று முகாமிற்குள்அரபு உலகமும் [Puerta del] Sol ம் ஒரே மாதிரியான போராட்டத்தை கொண்டிருக்கின்றனஎன்ற பதாகையை ஏந்தி வந்தனர். பதாகைகள், “பார்சிலோனா மட்டும் இதில் தனியே இல்லைஎனக் கூறியது. இக்குழுவிற்கு முகாமின் பிரதிநிதிகளிடம் இருந்து முறையான வரவேற்பு ஏதும் அளிக்கப்படவில்லை.

M15 இயக்கத்தின் தலைவர்கள் தாங்கள் பெறும் ஊக்கம் மத்திய கிழக்கு அல்லது வட ஆபிரிக்காவின் புரட்சிகர எழுச்சியில் இருந்து இல்லை என்றும், தங்கள் எதிர்ப்பு இயக்கம் ஐஸ்லாந்து வங்கிகளின் சரிவிற்குப் பின் வந்தவை என்றும் கூறுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Banner
Puerta del Sol
இல் அரேபிய மக்களின் ஆர்ப்பாட்டம் ஒன்று

இரு முக்கிய கட்சிகளுக்கும் வெகுஜன எதிர்ப்பாளர்கள் தெளிவான விரோதப் போக்கைக் கொண்டிருந்தாலும், M-15 தலைவர்களின் கூறப்படாத முன்கருத்து, அதாவது ATTAC போன்ற பூகோளமய எதிர்ப்பு அமைப்பின் வேர்களைக் கொண்டது, PSOE ஆனது PP ஐ விட முற்போக்கானது, அரசியலளவில் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாதது என்பதான அடிப்படையைக் கொண்டதாகும். ஊழலுக்கு எதிராக செயல்பட PSOE க்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமே அன்றி, அதிகாரத்திற்கான போராட்டம் தேவையில்லை என்றே அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

உண்மையில் எதிர்ப்பை நசுக்குவதற்கு PSOE மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை இராணுவம் மற்றும் பொலிஸ் அடக்குமுறையை பயன்படுத்தி சுமத்துகிறது. பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் PP ஒரு முன்கூட்டிய தேர்தல்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் PSOE வின் சிக்கன நடவடிக்கைகளுக்குத் தன் ஆதரவை உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

எதிர்ப்புக்களின் மற்றொரு கூறு முன்னாள் இடது குழுக்கள் ஏதும் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது ஆகும். ஏனெனில் அவை அரை உத்தியோகபூர்வ தலைவர்களுக்கு தங்களை தாழ்த்திக் கொண்டு முழு ஆதரவையும் PSOE க்கு பொது மன்னிப்புக் கொடுப்பதில் நிலைப்பாடு கொண்டுள்ளனர். ஒரு பிரதிநிதி விளக்கியதுபோல், இக்கட்சிகள் M15ன்கட்டுமானங்களைவலுப்படுத்துவதற்கு உதவ முன்வந்துள்ளன.

அரசாங்கத்திற்கான இந்த ஆதரவு PSOE வலதிற்கு இன்னும் மாறுவதற்கான தயாரிப்பைக் கொண்டிருக்கையில் வந்துள்ளது. கட்சியின் தலைமை துணைப் பிரதம மந்திரி ஆல்ப்ரெடோ பெரஸ் ருபல்காபாவை அடுத்த தலைவராக இப்பொழுதுதான் தேர்ந்து எடுத்துள்ளது. இந்த நியமனம் இப்பொழுது கட்சியின் பேரவைக் கூட்டத்திற்கு ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்படும்.

ருபல்காபா கடந்த டிசம்பர்/ஜனவரி மாதம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கினார். கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஊதியக் குறைப்புக்கள், கூடுதல் பணி நேரங்கள் சுமத்தப்பட்டதற்கு எதிராக கிளர்ச்சி நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இராணுவப் படைகளால் வேலைக்கு செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ருபல்காபா தொழிலாளர்கள் மீது குற்றவிசாரணை நடத்தப்பட்டு சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரினார். பிராந்திய PP அரசாங்கத்தின் தலைவரான எஸ்பெரன்ஸா அகுரியிடமும் விவாதங்களை மேற்கோண்டார். எஸ்பெரன்ஸா அகுரி கடந்த கோடையில் PSOE ஆதரவுடன் வேலைநிறுத்தம் செய்திருந்த மட்ரிட் மெட்ரோ தொழிலாளர்களுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதாக அச்சுறுத்தினார். இப்பொழுது பூர்ட்டா டெல் சொல் முகாம்களைக் கலைக்க பொலிஸ் நடவடிக்கையை கோருகிறார்.