WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
துனிசியா
Tunisian interim prime minister visits France ahead of G8 summit
துனிசிய இடைக்கால பிரதம மந்திரி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பிரான்சிற்கு செல்லுகிறார்
By
Kumaran Ira
27 May 2011
மே
17-28ல்,
துனிசிய இடைக்காலப்
பிரதம மந்திரி பெஜி கைட் எசெப்சி பிரான்சிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு
அங்கு பிரதம மந்திரி பிரான்சுவா ஃபிய்யோன் மற்றும் ஜனாதிபதி நிக்கோலோ
சார்க்கோசியுடன் விவாதங்கள் நடத்தினார்.
ஒரு மாதகால
பரந்துபட்ட
எதிர்ப்பிற்கு பின்
ஜனவரி மாதம் ஜைன் எல் அபிடைன் பென் அலியின் சர்வாதிகாரம் அகற்றப்பட்ட பின் இதுதான்
ஒரு துனிசிய பிரதமர் பிரான்சிற்கு வருவது முதல் தடவையாகும்.
வட
பிரான்சில்
Deauville ல் மே
26, 27 திகதிகளில்
நடக்க உள்ள G8
உச்சிமாநாட்டில்
துனிசியா பங்கு பெறுவதற்கு முன்கூட்டியே எசெப்சியின் இந்த வருகை ஏற்பட்டுள்ளது.
G8 க்குச் சுழற்சி
முறையில் தலைமை வகிக்கும் பிரான்ஸ்,
எகிப்து மற்றும்
துனிசியாவை “அரபு
வசந்தம்”
என்று அழைக்கப்படும்
கூட்டம் ஒன்றில் பங்கு பெற அழைத்துள்ளது;
இது
“அரபு உலக ஜனநாயக
மாற்றத்திற்கு”
வருவதை வரவேற்பது
எனக் கூறப்படுகிறது.
மே
19 அன்று
G8 நாடுகள்
துனிசியாவிற்கு
$10 பில்லியன்
பொருளாதார உதவியை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அல் அரேபியா தகவல் கொடுத்துள்ளது.
வட
ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் போராட்டங்கள் தொடர்கையில்,
பெரும் சக்திகள்
அப்பகுதியில் நடைபெறும் புரட்சிகர நிகழ்வுகளை நெரிக்கும் முயற்சியில் அங்குள்ள
தேசிய ஆளும் உயரடுக்குகள் மற்றும் அரசாங்க சார்பு தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து
ஈடுபட்டுள்ளன.
இப்பின்னணியில்
எசெப்சியின் வருகை அப்பகுதிகளில் ஏகாதிபத்திய செயற்பட்டியலை மீண்டும் எப்படி
உறுதிப்படுத்துவது என்பதைத் தவிர்க்கமுடியாமல் கவனத்தில்
கொண்டிருக்கும்.
வங்கிப்
பிணை எடுப்புக்களுக்கு பொழியப்பட்ட டிரில்லியன்களுடன் ஒப்பிடுகையில் மேற்குசக்திகள்
உறுதியளிக்கும் நிதி உதவி மிகவும் குறைந்தவையாகும்.
கடந்த மாதம்
பிரான்ஸ் 350
மில்லியன் யூரோக்களை
துனிசியாவிற்குக் கடனால பிரெஞ்சு வளர்ச்சி அமைப்பின் மூலம் உறுதிமொழி கொடுத்துள்ளது.
தன்னுடைய மே
19ம் திகதி
“அரபு வசந்தம்”
பற்றிய உரையில்,
அமெரிக்க ஜனாதிபதி
பாரக் ஒபாமா $2
பில்லியன் தனியார்
முதலீட்டு நிதியை எகிப்து மற்றும் துனிசியாவிற்கு அறிவித்தார்.
நோபல் பரிசு
பெற்ற கொலம்பியா பல்கலைக்கழக
Joseph Stiglitz,
பிரெஞ்சுப் பொருளாதாரப் பேராசிரியர்
Jean-Louis Reiffers,
மற்றும் பாரிஸ்
VIII
பல்கைக்கழகத்தின்
Olivier Pastre
ஆகியோரும் அடங்கிய
சர்வதேசப் பொருளாதார
வல்லுனர்கள் வெளியிட்ட துனிசியாவிற்கு ஆதரவாக
$20 முதல்
$30 பில்லியன்
கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை
இது உட்குறிப்பாக
நிராகரிப்பது ஆகும்.
அவர்கள் உயர்
தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சிக்காக இந்நிதியம் பயன்படும் என்றும்,
குறிப்பாக
குறைவூதியங்களை கொண்டுள்ள அத்துறைக்கு,
துனிசியாவில் ஒரு
“தொழில்நுட்ப,
தொழில்துறை தளத்தை”
கொடுக்கும் என்றும்
நம்பினர்.
மே
18ம் திகதி
சார்க்கோசி எலிசே ஜனாதிபதி அரண்மனையில் எசெப்சியை வரவேற்றார்.
துனிசிய தலைவரைச்
சந்தித்தபின்,
சார்க்கோசி
“துனிசியாவில்
ஏற்படும் மாற்றம் பற்றிய தன் தெளிவான விருப்பத்தை”
உறுதி செய்தார்.
“பிரான்ஸ்
துனிசியாவிற்கு எல்லாத் துறைகளிலும் ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பாக சமூக,
பொருளாதரப்
பிரிவுகளுக்கு அளிக்கும் என்றும்”
அவர் கூறினார்.
மே
17ம் திகதி
ஃபிய்யோன் எசெப்சியைச் சந்தித்தார்.
துனிசியப்
பிரதமரிடம் அவர்,
“பிரான்ஸ்
துனிசியாவில் நடக்கும் அரசியல் மாற்றத்திற்கு முழு ஆதரவு கொடுக்கிறது என்றும் அது
முற்றிலும் வெற்றிகரமாக இருக்கும் என நம்புவதாகவும்”
தெரிவித்தார்.
பிந்தைய
பேச்சுக்கள் முக்கியமாக இருதரப்பு உறவுகளில் குவிப்பைக் காட்டியது.
“துனிசியாவின்
முக்கிய பங்காளியாகத் தொடர்வதை”
பிரான்ஸ்
விரும்புகிறது என்று ஃபிய்யோன் அறிவித்தார்.
மூன்று
முன்னுரிமைகளை அவர் கோடிட்டுக் காட்டினார்:
சட்டத்தின் ஆட்சி,
பொருளாதார வளர்ச்சி
மற்றும் மக்கள் சமூகம் உறுதிப்படுத்தப்படல்-அதாவது
துனிசிய அரசாங்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் பல சமூக இயக்கங்கள் மற்றும்
“இடது”
எதிர்ப்புக்
குழுக்களுடன் கொண்ட பிணைப்புக்களை.
இப்பிந்தைய
அமைப்புக்கள்,
தொழிற்சங்கத்துடனும்
அரசாங்க அதிகாரத்துவங்களுடனும் நெருக்கமாக தொடர்பு கொண்டவை,
பிரான்சின் புதிய
முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி
(NPA) யினால் ஆதரவு
பெறுபவை.
இப்பொழுது அவை பென்
அலியின் அடக்குமுறைக் கருவியின் எஞ்சிய பகுதிகளுக்கு ஒரு போலியான ஜனநாயக
மூடிமறைப்பை
கொடுக்கின்றன.
குடியேற்றப்
பிரச்சினையும் எசெப்சியுடன் விவாதிக்கப்பட்டவற்றுள் முக்கியமானது ஆகும்.
“பிரான்ஸும்
துனிசியாவும் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக ஒன்றாக இணைந்து போராட வேண்டிய
தேவையை”
ஃபிய்யோன் வலியுறுத்தினார்.
வட
ஆபிரிக்காவில் வெகுஜன எதிர்ப்பு வெடித்ததில் இருந்து ஆபிரிக்காவில் இருந்து
குடியேறுபவர்களின் வருகை,
குறிப்பாக
துனிசியாவில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை இத்தாலியில் இறங்குவது
அதிகமாகிவிட்டது.
பிரான்சிற்கும்
குடியேறுபவர்கள் வந்துவிடுவரோ என்ற அச்சத்தில்,
இத்தாலி
குடியேறுபவர்களுக்கு தற்காலிக வசிக்கும் உரிமையை
வழங்கியவுடன்
பிரான்ஸ்
இத்தாலியுடன் எல்லைக் கட்டுப்பாடுகளை
மீண்டும்
ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இது
Schengen உடன்பாட்டை
மீறியது ஆகும்.
அந்த உடன்பாடு
எல்லையற்ற ஐரோப்பாவை தோற்றுவித்திருந்தது.
பிரெஞ்சு அரசாங்கம்
சமீபத்தில் துனிசியாவில் இருந்து குடியேறுபவர்களை பெரும் விரோதப் போக்குடன்
நடத்துகிறது.
அவர்களுக்கு எதிரான
சோதனைகளை பாரிஸ்,
மார்சய் ஆகிய
நகரங்களில்
நடத்துகிறது.
கடந்த வாரம்
பிரெஞ்சு உள்துறை மந்திரி
Claude Gueant
துனிசியாவிற்கு சென்று பாதுகாப்பு,
குடியேற்றப்
பிரச்சினைகளைக் குறித்து விவாதித்தார்.
காப்சாவில் ஒரு
இராணுவப் பயிற்சி நிலையத்தை நிறுவும் திட்டத்தை அவர் முன்வைத்தார்.
அந்த இடம்
2008ல் ஒரு பெரிய
சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நடந்த இடம் ஆகும்.
அதில் பல
தொழிலாளர்கள் பென் அலியின் படைகளால் கொல்லப்பட்டிருந்தனர்.
குடியேற்றம்
பற்றி
Guent கூறினார்:
“குடியேறுதல் பற்றி
துனிசியா பிரான்ஸுடன் ஒத்துழைக்க வேண்டும்.
சட்டவிரோதமாக தன்
பகுதிக்குள் துனிசிய குடியேறுபவர்கள் வருவதை பிரான்ஸ் எதிர்க்கிறது.
ஏனெனில் ஒரு நபர்
பிரான்சில் கூடுதலாக இருக்கிறார் என்றால் அது சமூகச் செலவுகள்,
பாதுகாப்பு,
கற்பித்தல்
ஆகியவற்றில் கூடுதல்
செலவு என்று ஆகும்”
இக்கருத்து
துனிசியாவில் இருந்து குடியேறுபவர்களுக்கு
Gueant ன் விரோதப்
போக்கை வெளிப்படுத்துவது மட்டும் இல்லாமல்,
முழு பிரெஞ்சு
மக்களின் சமூக உரிமைகளுக்கும் பிரெஞ்சு நடைமுறை கொண்டுள்ள விரோதப் போக்கையும்,
துனிசிய புரட்சிகரப்
போராட்டங்கள் பற்றி வெளிப்படையான
விரோதப் போக்கினை
தீர்மானிக்கும்
அடிப்படை வர்க்க அச்சை
காட்டுகின்றது.
ஃபிய்யோன்
மற்றும் சார்க்கோசி ஒரு ஜனநாயக மாற்றத்திற்குக் கொடுக்கும் பாராட்டு என்பது
பாசாங்குத்தனம் மற்றும் வெற்று வார்த்தைஜாலங்களாகும்.
பல தசாப்தங்களாக
பிரான்சின் ஆளும் உயரடுக்கு வட ஆபிரிக்காவிலுள்ள அதன் முந்தைய காலனிகளில்
உள்ள சர்வாதிகார
ஆட்சிக்களுக்கு ஆதரவைக் கொடுத்து வருகிறது.
இதில் துனிசியாவில்
இருந்த பென் அலியின் ஆட்சியும் உட்பட்டிருந்தது.
அகற்றப்பட்ட
எகிப்திய சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரிக்கிற்கும் ஆதரவு கொடுத்திருந்தது.
ஜனவரி
14 அன்று பென் அலி
விலகியபின்,
பிரான்ஸ் அவருடைய
ஆட்சியின் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறை சக்தி பரந்து பயன்படுத்தியது பற்றிய
அனைத்துக் குறைகூறல்களையும் நிறுத்தி வைத்திருந்தது.
துனிசிய சர்வாதிகாரி
ஓடிவிடுவதற்கு மூன்று நாட்கள் முன்புதான் அப்பொழுது பிரான்சில் வெளியுறவு
மந்திரியாக இருந்த
Kichele Alliot-Marie
பென் அலியுடைய ஆட்சிக்கு
எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு பிரான்சின்
“பாதுகாப்புப்
பிரிவு சிறப்புத்திறன்
பயிற்சி கொடுப்பதாக”
கூறினார்.
பின்னர் அவர்
அதுவும் குறிப்பாக பென் அலியின் சகாக்கள் அவருக்கு ஆடம்பரமான நல்வரவுகளை,
விருந்துகளை
எதிர்ப்புக்களின் ஆரம்பத்தின்போது இலவசமாக அளித்தனர் என்ற தகவல் வெளிப்பட்ட பின்
இராஜிநாமா செய்யும்
கட்டாயத்திற்கு உட்பட்டார்
.
பிரெஞ்சு
வானொலியான
Europe1 ல் பேசிய
எசெபி பிரெஞ்சு அரசியல் ஆளும்தட்டிடம்
ஆதரவு தருமாறு
முறையிட்டார்: “துனிசியாவிற்கு
ஊக்கம் தேவை.
ஒரு ஜனநாயக வழிவகையை
நிலைநிறுத்த அது முயல்கிறது.
அதற்கு தேவையான
கூறுபாடுகள் அனைத்தையும் அது கொண்டுள்ளது.”
பென் அலி ஆட்சிக்கு
எதிரான வெகுஜன எதிர்ப்புக்கள் தொடங்கியபோது பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள தன்மையை
பற்றிக் கேட்கப்பட்டதற்கு,
எசெபி இழிந்த
தன்மையுடன் விடை கூறினார்:
“நான்
வருங்காலத்தைக் காண விரும்புகிறவன்.
நான் வருவதற்கு முன்
என்ன நடந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது.”
உண்மையில்,
பென் அலியின்கீழ்
இருந்த கொள்கைகளைத்தான் பிரான்ஸ் தொடர்கிறது;
அவர் தடையற்றசந்தை
நடவடிக்கைகளை செயல்படுத்தினார்.
அவை சமூக
சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பெரிதும் அதிகப்படுத்தின;
அதையொட்டி வெகுஜன
தொழிலாள வர்க்க எதிர்ப்பு தூண்டப்பெற்றது.
சற்றே மாறுபட்ட
சாரத்தில்,
பிரெஞ்சு
ஏகாதிபத்தியம் இப்பொழுது அதே சமூக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது.
அதையொட்டி துனிசிய
தொழிலாளர்கள் சர்வதேச நிறுவனங்களால் சுரண்டப்படுவதையும் விரும்புகிறது.
100,000க்கும்
மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு இருத்தியுள்ள
கிட்டத்தட்ட
1,250 பிரெஞ்சு
நிறுவனங்கள்
இப்பொழுது
துனிசியாவில் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம்
பிரெஞ்சு வணிகக் கூட்டமைப்பான
MEDEF துனிசிய
முதலாளிகள் சங்கமான
UTICA உடன்
பேச்சுக்களை நடத்தியது.
அக்கூட்டம்
முக்கியமாக துனிசியாவில் பிரெஞ்சு முதலீடு பற்றிக் குவிப்பைக் காட்டியது.
பென் அலி
அகற்றப்பட்டதில் இருந்து,
இடைக்கால
அரசாங்கத்தின்
பிற்போக்கு
தன்மையைத்தான் நிகழ்வுகள் காட்டியுள்ளன.
சமீபத்தில் புதிய
அரசாங்கம் நாடெங்கிலும் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு அலையை அடக்கியது.
தகவல்கள்படி,
கிட்டத்தட்ட
1,400 பேர் அரசாங்க
எதிர்ப்புக்களை தொடர்ந்து கடந்த இரு வாரங்களில் கைது செய்யப்பட்டனர்.
இவற்றுள்
8 பேர்மீது கொலை
வழக்கு, 62
பேர் மீது பிறரை
தாக்கியது,
வன்முறை
பயன்படுத்தியது என்ற வழக்குகள் உள்ளன.
(see “Tunisian regime imposes curfew amid protests over coup threat <http://wsws.org/articles/2011/may2011/tuni-m09.shtml>”).
இவருடைய
வருகையின்போது எசெப்சி பிரெஞ்சு அதிகாரிகளுக்கு அரசியல் அமைப்பு மன்றத்திற்காக
ஜூலை
24ல் தேர்தல்
நடக்கும் என்று உறுதியளித்தார்.
இது ஒரு புதிய
அரசியலமைப்பு எழுதப்படுவதைக் கண்காணிக்கும்;
தேர்தல்கள்
“தொழில்நுட்ப
சிக்கல்களினால்”
தாமதிக்கப்படலாம்
என்று தெரிவித்த தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பெருகும்
வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்புக்கள் பற்றி சமீபத்திய வாரங்களில்
தகவல்கள் வந்துள்ளன.
மிக சமீபத்தில்
பிரிட்டிஷ் எரிவாயுக் குழுமம்,
துனிசியாவின் மிகப்
பெரிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனம்,
வேலைகள் கோரும்
எதிர்ப்பாளர்கள் நிறுவனத்தின் நாட்டின் தெற்கே ஆலையில் முற்றுகையிட்டதாக
தெரிவித்துள்ளது.
துனிஸ் ஏயர்
நிறுவனமும் துனிசியா உணவு விடுதி நிறுவனம் தொழில் நிறுத்தங்கள்,
உள்ளிருப்புப்
போராட்டங்கள் என துனிஸ் மற்றும் பிற விமான நிலையங்களில் ஏற்பாடு செய்தபோது
ஊழியர்கள் வெளிநடப்பினால் பாதிப்பு வந்ததை தொடர்ந்து பணியை நிறுத்தியது.
துனிசிய
தொலைத்தொடர்பும் வேலைநிறுத்த நடவடிக்கைகளினால் முடங்கிப் போயிற்று.
இது வெளிநாட்டு
முதலீட்டாளர்களை அச்சறுத்தியது.
சந்தேகத்திற்கு இடமின்றி,
தேர்தலை
ஒத்திவைக்கும் திட்டம் பெருவணிக நலன்களை ஒட்டி
முக்கிய சக்திகள்
மற்றும் நிதியச் சந்தைகளுடன் ஆலோசனை நடத்தியபின்தான் முன்வைக்கப்பட்டது.
இவை நாடு முழுவதும்
பெருகிய முறையில் வேலைநிறுத்த நடவடிக்கைகள் நடத்தல் தேர்தல் நடத்துவதற்கு உறுதியற்ற
தன்மையைக் கொடுத்துவிடும் என அஞ்சின.
இவ்வகையில்
Jefferies உலகப்
பாதுகாப்பு பத்திரங்கள் மற்றும் முதலீட்டு வங்கிக் குழுவின் மூலோபாய ஆலோசகர்
ரிச்சார்ட் செகல்,
ராய்ட்டர்ஸிடம்
கூறினார்: “ஆனால்
சந்தைகள் சிறு தாமதங்களை மன்னித்துவிடும்,
உண்மையில் அதை
விரும்பக்கூடச் செய்யும்.”
என்றார்.
“புதிய தேர்தல்கள்
நடத்துவதற்கு நாடு போதுமான நேரத்தைக் கொண்டிருக்கவில்லை;
எனவே
தொழில்நுட்பரீதியான தாமதம் என்பது புரிந்துகொள்ளக் கூடியதே”
என்றும் சேர்த்துக்
கொண்டார். |