World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

G8 summit: major powers discuss how to contain “Arab Spring”

G8 உச்சிமாநாடு முக்கிய சக்திகள் அரபு வசந்தத்தை எப்படி அடக்குவது என விவாதிக்கின்றன

By Bill Van Auken
27 May 2011
Back to screen version

பிரான்சில் வியாழனன்று மேற்குநாடுகளின் ஆதரவு உடைய ஆட்சிகளுக்கு எதிரான வெகுஜன எழுச்சியான அரபு வசந்தம் (எழுச்சி)” என அழைக்கப்படுவதை எதிர்கொள்ளுதல் பற்றிய விவாதத்துடன்  G8  உச்சிமாநாடு ஆரம்பித்தது.

இரு நாள் கூட்டம் முதலாளித்துவத்தின் தீவிரமாகியுள்ள உலகளாவிய நெருக்கடி  நிழலில் நடக்கிறது. இதில் ஐரோப்பாவின் நாடுகளின் கடன் நெருக்கடி மற்றும்  இப்பொழுது $14 டிரில்லியனைக் கடந்துவிட்ட பெரிதும் விரிவாகிவிட்ட அமெரிக்கக் கடனும் அடங்கும்.

உச்சிமாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் ஐரோப்பியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஏற்பட்டுள்ள நிதிய நெருக்கடிகளைஉறுதியுடன்எதிர்கொள்ளுவர் என்ற உறுதிமொழிகளையும் அடக்கியுள்ளது. அதே நேரத்தில் ஒபாமா நிர்வாகம்தெளிவான, நம்பகத் தன்மை உடைய இடைக்கால நிதிய ஒருங்கிணைப்பு வடிவத்தையும் உருவாக்கவேண்டும்என்றும் அது அழைப்புவிட்டு்ள்ளது.

இவ்விரண்டிலும் இதன் பொருள் அட்லான்டிக்கிற்கு இரு பக்கத்திலும் தொழிலாளர்கள்மீது மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவது என்பதாகும். இது தவிர்க்க முடியாமல் வெகுஜன எழுச்சிகளையும் எதிர்ப்புக்களையும் ஏற்கனவே ஸ்பெயின், கிரேக்கம் இன்னும் மற்ற நாடுகளில் படர்ந்தவற்றைப் போல் தூண்டிவிடும்.

G8 இன் இராஜதந்திர ரீதியிலான வெற்றுத்தனமான வார்த்தைகளும் மற்றும் பொது நோக்கத்திற்கான விருப்பமும் என்ற கருத்துக்கள் இருந்தாலும், சமீபத்திய உச்சிமாநாடு முக்கிய மேற்கு முதலாளித்துவ சக்திகள் செப்டம்பர் 2008ல் இருந்து உலகப் பொருளாதாரத்தை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள நிதிய நெருக்கடிக்கு ஒரு ஒருங்கிணைந்த பிரதிபலிப்பை  காணமுடியாத நிலையைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

ஒபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய கவலைகளில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பலவீனமான உறுப்பினர்களை பீடித்துள்ள கடன் நெருக்கடி யூரோவின் மதிப்பைக் குறைக்கிறது, அது அமெரிக்க முதலாளித்துவத்தின் ஏற்றுமதி வருமானங்களை அதிகரிக்கும் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்கிறது என்பது ஆகும்.

இச்சூழ்நிலையின்கீழ், ஆரம்ப நாளன்று பெயரளவிற்கு அரபு வசந்தத்திற்குஆதரவு தருவதற்கான ஒரு பெரிய உதவித் திட்டத்தின் மீதான கவனம் மற்றும் மத்திய கிழக்கில்ஜனநாயகத்தின் வளர்ச்சிக்குஊக்கம் தருவது என்பது முற்றிலும் பொருந்தாத் தன்மையைத்தான் கொண்டுள்ளது. ஆனால் உண்மையில் எந்த உறுதியான  புதிய உதவி பற்றிய நிதி உதவித் தொகைகளும் வெளிப்படவில்லை. G8 ன் கடந்த கால வரலாற்றைக் கருத்திற் கொண்டால், கொடுக்கப்படும் உறுதிமொழிகள் செயல்படுத்தப்படமாட்டா என்பது தெரியும்.

உதவித்திட்டம் என்று அழைக்கப்படுவதின் முக்கிய நோக்கம் அரபு உலகில் நடக்கும் எழுச்சிகளை இன்னும் கூடுதலான வகையில் மேற்கின் மூலதனத்தை அந்நாடுகளில் ஊடுருவச்செய்வதும் மற்றும் அமெரிக்கா, மேலை ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சிகளுக்கு முட்டுக் கொடுப்பது என்றும், அதே நேரத்தில் வெகுஜன எழுச்சிகளை அடக்குதல் என்பதாகத்தான் உள்ளது.

உச்சிமாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டவர்களுள் துனிசியா மற்றும் எகிப்து நாடுகளின் பிரதம மந்திரிகளான பெஜி கெட்ய் எல் செப்சி மற்றும் எசம் ஷரப் ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஜேன் எல் அபிடைன் பென் அலி மற்றும் ஹொஸ்னி முபாராக் ஆட்சிகள் இந்த ஆண்டு முன்னதாக வீழ்ச்சியுற்றதை அடுத்து அதிகாரத்திற்கு வந்தனர்.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக துனிசிய தொழிற்துறை மந்திரி சையத் அய்டி அவருடை அரசாங்கம் G8 தலைவர்கள் துனிசியாவிற்கு மட்டும் கிட்டத்தட்ட $25 பில்லியன் மதிப்புடையபெரிய ஆதரவுத் திட்டத்தை முன்வைப்பர் என நம்புவதாகக் குறிப்பிட்டார். இது எகிப்திற்கும் துனிசியாவிற்கும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொகையில் ஒரு பகுதியாகும்.

G8 அங்கத்துவ நாடுகள் துனிசியா மற்றும் எகிப்திற்கு ஒதுக்கப்பட உள்ள நிதியப் பொதிகளில் பெரும்பகுதி சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மூலம்தான் செயல்படுத்தப்படும் என்று வலியுறுத்தியுள்ளன; மேலும் இவை பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்துடன் பிணைந்திருக்கும்.

உலக வங்கித் தலைவர் ரோபர்ட் ஜோய்லிக் வியாழன் அன்று இரு நாடுகளும்கிட்டத்தட்ட $6 பில்லியன்வரை வங்கியில் இருந்து புது நிதிய உதவியாக, அவற்றின் பொருளாதாரங்கள்நவீனப்படுத்தப்படுவதில்உள்ள  முன்னேற்றத்தைப் பொறுத்து எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் குழுவின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் இயக்குனரான டேவிட் லிப்டன் வாஷிங்டன் சர்வதேச நாணய நிதியம்தான் அப்பிராந்திய பொருளாதாரங்களுக்கு உதவியளிப்பதற்கு நம்பியுள்ளதாகக் கூறினார். அவர் சர்வதேச நாணய நிதிய  திட்டங்கள்எகிப்து மற்றும் துனிசியா ஒரு குறுகிய காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனத்திற்கெடுக்கும்என்றார்.

முன்னதாக அமெரிக்கா எகிப்திற்கு முக்கியமாக வழங்கப்படவுள்ள $2 பில்லியன் உதவிப் பொதியை அறிவித்தது. இது அமெரிக்க அரசாங்கத்திற்கு $3 பில்லியனுக்கு மேலாக கடன்பட்டுள்ளதுடன் மேலும் மொத்தத்தில் $35 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களைக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் இப்பகுதியில்ஜனநாயகத்திற்கான மாற்றத்திற்குஒரு புதிய உதவியாக ஒரு அற்பத் தொகையான $175 மில்லியனை கொடுக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வெளிநாட்டு உதவித்திட்டங்களுக்கு இந்த மொத்தப் பணம் நான்கு ஆண்டுகளில் பிரித்துக் கொடுக்கப்படும். ஜேர்மனியும் இதேபோன்ற தொகையை உறுதிபடுத்தியுள்ளது. அதுவும் பல ஆண்டுகள் பிரித்துக் கொடுக்கப்படும்.

முக்கியச் சக்திகளின் தலைவர்கள் இந்த கஞ்சல்தனமான தொகைகளைப் பற்றிப் பெரிதாகக் கூறியதுடன்அரபு வசந்தகாலத்திற்குதங்கள் ஆதரவைக் கொடுப்பதாகவும் பாசாங்குத்தனக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

பிரான்சில் நடந்த உச்சிமாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன் ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பாராளுமன்றத்தில் துனிசியா மற்றும் எகிப்தில்ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பெறுவதற்குத் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்துள்ளவர்களுக்குஜேர்மனி ஆதரவு அளிக்கும் என்பது ''தானே விளங்கக்கூடிய விடயம்தான்'' என்றார். G8ல் உள்ள மற்ற தலைவர்களிடம்ஆரம்ப அரசியல்ரீதியான முன்னேற்றம் பொருளாதார உறுதியற்ற தன்மையினால் ஆபத்திற்குட்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இருப்பதாகவும் கூறினார்.

மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய வங்கி (European Bank for Reconstruction and Development -EBRD) மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் பொருளாதாரங்கள் முன்னேற்றுவிக்க இயக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பாக மேர்க்கெல் தெரிவித்தார்.

EBRD 1991ல் சோவியத் ஒன்றியத்தில் தகர்ப்பு மற்றும் அப்பகுதி முழுவதும் ஸ்ராலினிச ஆட்சிகள் கலைப்பைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பியப் பொருளாதாரங்களில் முதலாளித்துவ நேரடி முதலீட்டை இயக்குவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது. குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு மற்றும் அரசாங்கச் சொத்துக்கள் விரைவில் விற்பனை செய்யப்பட்ட நிலையைப் சாதகமாக பயன்படுத்துவதற்காக வெளிநாட்டு மூலதனம் இப்பகுதியில் குவிக்கப்பட்ட வழிவகையாக இருந்தது. ஆனால் செப்டம்பர் 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகப் அப்பிராந்தியத்தை பாதுகாப்பற்றதாகச்செய்துள்ளது. அப்பொழுது இதே பகுதிகளில் இருந்து வெளிநாட்டு மூலதனம் வெளியேறியது தேசியப் பொருளாதாரங்களின் சரிவிற்கு வழிவகுத்தது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் உச்சிமாநாட்டில் தன் அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள் இன்னும் தீவிரமயப்படுவதை தடுக்கும் வகையிலும் இப்பகுதியில் இருந்து மேற்கு ஐரோப்பாவிற்கு மக்கள் இடம் பெயர்வதைத் தடுக்கவும் ஆதரவு தேவை என்றார்.

தன்னுடைய பங்கிற்கு ஒபாமா நிர்வாகம் வெளிவிவகாரச் செயலர் ஹிலாரி கிளின்டன் மற்றும் நிதி மந்திரி டிமோதி கீத்னர் கையெழுத்திட்ட  கடிதம் ஒன்றை உச்சிமாநாட்டிற்கு அனுப்பி வைத்தது. அதில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள்ஒரு வரலாற்றுத் தன்மை உடைய வாய்ப்பு என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது G8 வெறும் உதவி என்றில்லாமல் வர்த்தகத்திலும் மற்றும் உதவி மட்டுமல்லாது முதலீடுகளிலும்'' கவனம் காட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் முக்கிய இலக்குகள்நிதிய உறுதிப்பாட்டை முன்னேற்றுவித்தல்”, “அவற்றின் சந்தைகளை பிராந்திய, உலகப் பொருளாதாரங்களுடன் இணைத்தல்ஆகியவற்றை அடக்கியிருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

வாஷிங்டன் துனிசியா மற்றும் எகிப்தில் அமெரிக்கா மற்றும் அதன் முக்கிய நட்பு நாடான இஸ்ரேல் ஆகியவற்றின் நலன்களைக் பாதுகாக்கத் தொடரும் ஆட்சிகளைத் தோற்றுவித்தல் என்பதாகும். அத்துடன் அந்நாடுகளின் பொருளாதாரங்கள் அமெரிக்கத் தளமுடைய சர்வதேச நிறுவனங்களின் இலாப நலன்களுக்குத் அடிபணியவைக்கவேண்டும், அந்நாடுகளில் சமூகப் புரட்சி என்றும் அச்சுறுத்தல் திட்டமிட்டு நசுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

பாதுகாப்புப் பிரிவுகளால் உறுதிப்படுத்தப்படும் இரு நாடுகளிலும் துனிசிய, எகிப்தியப்  ஆட்சிகள் முறையாக அரசியல் எதிர்ப்பு, ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவற்றை நசுக்கி வருகின்றன. இன்று கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில்சீற்ற தினம்” (“Day of Rage”) என அழைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெகுஜன ஆர்ப்பாட்டம், இராணுவத்தின் கைது செய்யும் போக்கு, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்தல் மற்றும் அரசாங்கத்தின்மீது அது கொண்டு இரும்புப் பிடி ஆகியவற்றைக் கண்டிக்க உள்ளது.

வாஷிங்டன் மற்றும் அதன் மேற்கு ஐரோப்பா நட்பு நாடுகளால் முன்னெடுக்கப்படும்தடையற்ற சந்தைகொள்கைகள்தான் இந்த ஆண்டு வெகுஜன எழுச்சிகளுக்கு எரியூட்டிய சமுக சமத்துவமின்மை மற்றும் பெரும் வேலையின்மை ஆகியவற்றிற்குப் பொறுப்பான கொள்கைகளை விரிவாக்கம் செய்வதற்கு காரணம் ஆகும்.

உச்சிமாநாட்டின் ஆரம்ப நாளில் வாஷிங்டனின் நீண்டகால ஆதரவாளரான யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே 33 ஆண்டுகள் பதவியில் இருந்தபின் அந்த வறிய நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியாக பதவிவிலக வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டதைக் கேட்டது. சிரிய ஆட்சி அதன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது; ஆனால் ஜனாதிபதி பஷர் அல் அசத் பதவி விலக வேண்டும் என்று கோரப்படவில்லை.

அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைப் பிரிவிற்குத் தளத்தைக் கொடுத்துள்ள பஹ்ரைனில் அந்நாட்டு மக்களின் வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தை ஆளும் முடியரசு நசுக்குவதற்குக் கட்டவழித்துள்ள வன்முறை பற்றி G8 மௌனமாக உள்ளதுடன், எதிர்ப்புக்கள் நசுக்கப்படுவதற்கும் அமெரிக்காவின் ஆதரவைக் கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை பெருகிய முறையில் அழிவு மற்றும் உயிரிழப்புக்களை வட ஆபிரிக்க நாடான லிபியாவில் ஏற்படுத்தும் வகையில் குண்டுத் தாக்குதல்களை மூன்றாம் மாதமாகத் தொடர்கையில், அந்நாடு பற்றியும் கூட்டு அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

போர் ஆரம்பிப்பதற்கு முன் பிரான்ஸ்பொதுமக்களை பாதுகாத்தல்என்ற பெயரில் ஒரு இராணுவ தலையீட்டிற்கு ஆதரவு என்னும் வகையில் G8 மந்திரிகள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை இயற்ற முற்பட்டு, அதில் தோல்வி அடைந்தது. பின் ரஷ்யா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபைத் தீர்மானம் கேர்னல் முயம்மர் கடாபி ஆட்சியின் குடிமக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் செயல்களுக்கு எதிரானதேவையான நடவடிக்கைகளுக்குஒப்புதல் கொடுப்பதில் இருந்து வாக்காளிக்காமல் விலகி விட்டன.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, பிரான்ஸும் பிரிட்டனும் ஏகாதிபத்திய தலையீட்டின் அளவு விரிவாக்கப்படுவதற்காக தாங்கள் தாக்கும் ஹெலிகாப்டர்களை அனுப்புவதாகக் கூறின. அதே நேரத்தில் நேட்டோ போர் விமானங்கள் லிபியத் தலைநகரான திரிப்போலியில் பெரும் குண்டுவீச்சுக்களை இரவுகளில் தொடர்ந்து நடத்தின.

அமெரிக்க நேட்டோ தலையீடு லிபிய எண்ணெய், எரிவாயுத் தொழிலில் தன் நலன்களுக்கு ஒரு நேரடி அச்சுறுத்தல் என்று காணும் ரஷ்யா இக்குண்டுவீச்சுக்கள் .நா. தீர்மானங்களை மீறியவை என்று கண்டித்துள்ளது. அதன் இராஜதந்திர முனைப்பை அது முடுக்கிவிட்டு, லிபிய ஆட்சி மற்றும் வாஷிங்டன் நேட்டோவினால் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ள எழுச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களின் பிரதிநிதிகளைச் போர் நிறுத்தம் ஏற்பாடு செய்வதற்காக சந்தித்தது.

லிபியப் போரில், அமெரிக்கா மற்றும் மேலை ஐரோப்பிய சக்திகளுடைய உண்மையான நோக்கங்கள் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. தங்கள் பொருளாதாரங்களில் ஆழ்ந்த நெருக்கடியைக் குறைக்கும் வகையில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க எண்ணெய் வளம் உடைய பிராந்தியங்கள் மறுகாலனித்துவ முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவை.