World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Rightwinger Banerjee becomes West Bengal’s new chief minister

இந்தியா வலதுசாரி பானர்ஜி மேற்கு வங்க புதிய முதல் மந்திரியாகிறார்

By Arun Kumar and Deepal Jayasekera
25 May 2011
Back to screen version

வலதுசாரி, வங்காள பிராந்தியவாத திருணாமூல் காங்கிரஸின் (TMC) தலைவர் மமதா பானர்ஜி இந்தியாவின் நான்காம் அதிக மக்கள் தொகையுடைய மாநிலமான மேற்கு வங்கத்தின் முதல் மந்திரியாக கடந்த வெள்ளியன்று பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்ட்டார். ஏப்ரல் மற்றும் மே மாதத்  தொடக்கத்தில் நடந்த தேர்தல்களில், TMC மாநிலச் சட்டப் பேரவையில் மிக அதிகப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, கடந்த 34 ஆண்டுகளாக மாநிலத்தை ஆண்டுவந்த ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைமையாலான இடது முன்னணியைப் படுதோல்வி அடையவும் செய்தது.

மொத்த வாக்குகளில் 48% ஐப் பெற்ற TMC யும் அதன் நட்புக் கட்சியுமான காங்கிரஸும் (இந்தியக் கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய பங்காளி), 294 இடங்கள் உள்ள மாநில சட்டப் பேரவையில் 226 தொகுதிகளைக் கைப்பற்றின. இடது முன்னணி 62 இடங்களையும் மொத்த வாக்குகளில் 42% ஐயும் பெற்றது; இது 2006ல் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் இருந்து 7 சதவிகிதப் புள்ளிகள் சரிவு ஆகும்.

TMC தலைமையிலான கூட்டணியின் வெற்றியை பெருவணிகம் பாராட்டியுள்ளதுடன், மேற்கு வங்கத்திலும் இந்தியா முழுவதும் அரசியலை ஒரு வலதுபக்கம் தீவீரமாக தள்ளும் ஒரு வாய்ப்பாக இதைக் காண்கிறது. ஆனால் தேர்தல்கள் முடிவுகள் ஒன்றும் முதலாளித்துவ மறுகட்டமைப்பிற்கு என்பது ஒருபுறம் இருக்க, பானர்ஜிக்கு ஒரு ஒப்புதல் என்று கூடக்கூற முடியாது. மாறாக இவை இடது முன்னணி அரசாங்கத்தின் தானே உறுதியாக மேற்கொண்டமுதலீட்டாளர்-சார்புகொள்கைகள், அதன் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் ஊழல் ஆகியவை நிராகரிக்கப்பட்டதின் விளைவாகும்.

அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட அன்றே, பானர்ஜி TMC யில் இருந்து இன்னும் 25 மந்திரிகள், காங்கிரஸ் கட்சியில் இருந்து 2 மந்திரிகள் எனக் கொண்ட மந்திரிசபையை அமைத்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கி்ய முற்போக்குக் கூட்டணியில் (UPA) இளம் கட்சியாக உள்ள TMC யின் பானர்ஜி இந்தியாவின் இரயில்வே மந்திரி பதவியை மேற்கு வங்க அரசாங்கத்தின் தலைமைப் பதவியை எடுத்துக் கொள்ளுமுன் இராஜிநாமா செய்தார்.

உயரடுக்கு வணிக வட்டாரடங்கள் மற்றும் பெரியநிறுவனச் செய்தி ஊடகத்தினுள் பரந்த முறையில் எதிர்பார்த்தபடி, நீண்டகாலமாக FICCI எனப்படும் இந்திய வணிக, தொழில்துறை அமைப்பின் பொதுச் செயலளாரும் புதிய தாராளவாதச் சீர்திருத்தங்களுக்கு உரத்துக் குரல் கொடுப்பவருமான அமித் மித்ரா மேற்கு வங்கத்தின் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

மித்ராவை பானர்ஜி நியமித்தது தன்னுடைய அரசாங்கம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஆணையிடுவதைச் செயல்படுத்த நம்பப்படலாம் என்பது பற்றிய தெளிவான அடையாளம் ஆகும். மித்ரா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர் சி.எம்.பச்சாவட்டை வெள்ளியன்று சந்தித்து மாநிலத்தின் நிதி நிலைமை பற்றிப் பரிசீலனை செய்தார். சந்திப்பு முடிந்தபின் நிலைமைநன்றாகவே இல்லைஎன்று குறைகூறினார்.

அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது பானர்ஜி இடது முன்னணி அரசாங்கம் மாநிலத்தைத் திவால் தன்மையில் தள்ளிவிட்டது என்று குற்றம் சாட்டினார். இவ்வம்மையாரின் அரசாங்கம் இப்பொழுது மிருகத்தனமாக சமூகநலச் செலவுகளை நிதிய ஒழுங்கு, பொருளாதார வளர்ச்சி, “கம்யூனிஸ்ட் ஊழலைதகர்த்தல் ஆகிய பதாகைகளின்கீழ் செயல்படுத்தும் என்றார்.

இவருடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் பார்த்தா சாட்டர்ஜி, வணிகம், தொழில்துறை, பொது  நிறுவனங்கள், தொழிற்துறை  மறுகட்டமைப்பு ஆகிய அமைச்சரகங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பதற்கான மிகவும் முக்கியமான துறைகள் ஆகும்.

தன்னுடைய பொறுப்பின் கீழ் பானர்ஜி ஒன்பது துறைகளைக் கொண்டுள்ளார்: உள்துறை, நிலம், நிலச்சீர்திருத்தம், தகவல் மற்றும் கலாச்சார விஷயங்கள், சுகாதாரம், குடும்ப நலம், விவசாயம், மலைப்பகுதி விஷயங்கள், சிறுபான்மையினர் பிரிவு, மத்ராஸா (முஸ்லிம் சமயப் பள்ளிகள்) கல்வி, அரசாங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் எரிசக்தி ஆகியவையே அவை.

தன்னிடமே உள்துறை அமைச்சரகத்தைக் கொண்ட நிலையில், பானர்ஜி மாநில அரசாங்க அடக்குமுறைச் சக்திகள்மீது நேரடிக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார். தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் அவருடைய அரசாங்கத்தின் பொருளாதார மறுகட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு வெடிக்கும் என்பதை அவர் நன்கு அறிவார். பெருவணிகமும் ஏராளமான பழங்குடி மக்கள் இருக்கும் பல மாநிலங்களில் ஒரு மாவோயிச தலைமையிலான எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரைத்தான்  நம்பியுள்ளது.

பிரபல இந்திய வணிகத் தலைவர்கள் பானர்ஜி முதல் மந்திரியாகப் பதவி ஏற்றுள்ளதைப் பற்றிப் பெருமகிழ்ச்சி எய்தியுள்ளனர். தொழிலதிபர் சாம் பிட்ரோடா தான்இந்நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகக்கூறினார். டாட்டா ரையர்சன் நிறுவன நிர்வாக இயக்குனர் சாண்டிபன் சக்ரவர்த்தி, TMC-காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவது என்பதுமிகச் சிறந்த மாறுதல்இது மாநிலத்துக்கும் தொழிலுக்கும் நன்மை விளைவிக்கும்.” என்றார்.

டாட்டா இயக்குனர் கொடுத்துள்ள அறிக்கை குறிப்பிடத்தக்க வகையில் முக்கியமானது ஆகும். மக்கள் எழுச்சியை அடுத்து சிங்கூர்ப் பகுதியில் இருந்து ஒரு கார் ஆலைத் திட்டத்தை டாட்டா திரும்பிப் பெற வேண்டியதாயிற்று. அத் திட்டத்திற்காக இப்பொழுது வெளியேறிவிட்ட  இடது முன்னணி அரசாங்கம் கட்டாயப்படுத்தி நிலத்தை எடுத்துக்கொண்டதற்கு எதிரான அந்த எழுச்சியில் TMC பங்கு பெற்றிருந்தது. இந்தப் போராட்டங்களில் TMC யின் ஈடுபாடு அரசாங்கத்திற்கான எதிர்ப்பைப் தனக்குசாதகமாக பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதுதான் என்பதை பெருவணிகம் அறியும்.

தன்னுடைய முதல் மந்திரிசபை கூட்டத்தை அடுத்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பானர்ஜி தன் அரசாங்கம் சிங்கூரில் உள்ள விவசாயிகளுக்கு டாட்டா திட்டத்திற்காக முந்தைய இடது முன்னணி ஆட்சி அபகரித்திருந்த  1000 ஏக்கர்களில் 400 ஏக்கர் நிலைத்தை மீண்டும் திருப்பித்தரும் என்றார். சிங்கூர் நிலத்தில்எஞ்சியுள்ள 600 ஏக்கர்நிலத்தில் உற்பத்தி நிலையத்தை நிறுவ டாட்டா குழுவரவேற்கப்படுகிறதுஎன்று பானர்ஜி அறிவித்தார்.

மேற்கு வங்கத் தேர்தல்களில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் அனுபவித்த தோல்வி மிகவும் வலதுபுறம் நோக்கி அரசாங்கம் பாய்ந்தது பற்றிய தொழிலாளர்கள், கிராமப்புற மக்களுடைய எதிர்ப்பின் விளைவுதான்.

நீண்ட காலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் கோட்டையாக இருந்த தொழில்துறை மற்றும் தொழிலாள வர்க்க கொல்கத்தா புறநகர் மக்களின் ஆதிக்கம் நிறைந்த ஹௌரா மாவட்டத்தில், இடது முன்னணி அனைத்து 16 பேரவைத் தொகுதிகளையும் இழந்தது. நந்திகிராம் விவசாயிகள் போராட்டத் தளமாக கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலும் இடது முன்னணி தலைதூக்க முடியவில்லை. 2007ம் ஆண்டு இடது முன்னணி அரசாங்கம் பல முறையும் பொலிஸ் மற்றும் CPM குண்டர்களின் வன்முறையைப் பயன்படுத்தி விவசாயிகள் நிலங்களை அபகரித்தது. அந்தநிலம் ஒரு இந்தோனிசிய தளம் கொண்ட சர்வதேச நிறுவனம் சிறப்புப் பொருளாதாரப் பகுதியில் செயல்படுவதற்காக அபகரிக்கப்பட்டது. அரசு முடுக்கிய இந்த வன்முறையில் குறைந்தபட்சம் 22 விவசாயிகள் இறந்து போயினர்.

மக்களுடையமாற்றத்திற்கான விருப்பம்தான்தங்கள் தோல்விக்கு வழிவகுத்தது என்று ஸ்ராலினிச தலைவர்கள் கூறியுள்ளனர். மேலும் பல ஆண்டுகளாக இடது அதிகாரத்தில் இருந்ததின் விளைவாக மக்களுக்கும் இடது முன்னணி தலைவர்களுக்கும் இடையேஇடைவெளிஏற்பட்டுவிட்டதும் ஒரு காரணம் என்று கூறினர்.

இடது முன்னணித் தலைவரும் CPM தலைவருமான பிமன் போஸ் கூறினார்: “இடது கட்சிகளுடைய தோல்வியின் பின்னணியில் உள்ள காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும். ஒரு ஆரம்ப மதிப்பீட்டில் இருந்து மக்களுடைய உணர்வை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை எனலாம்; அவர்கள் மாற்றம் வேண்டும் என்ற கோஷத்திற்கு இசைவு கொடுத்து விட்டனர். இதே முறையில் CPM இன் பொதுச்செயலர் பிரகாஷ் காரத்மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பியுள்ளனர்என்றார்.

இவை பரிதாபத்திற்கு உரிய சுய திருப்தி அறிக்கைகள்தான். தங்கள் வலதுசாரி முதலாளித்துவக் கொள்கைகள் ஆழ்ந்த முறையில் நிராகரிக்கப்பட்டதை ஸ்ராலினிசவாதிகள் மூடி மறைக்கப் பார்க்கின்றனர். ஏனெனில் அவர்கள் அக்கொள்கைகளைத்தான் தொடர்ந்து செயல்படுத்த முற்படும் நோக்கம் உடையவர்கள்.

மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் இரக்கமற்ற முறையில் உலக முதலாளித்துவத்திற்காக இந்தியாவைக் குறைவூதியத் தொழிலாளர் பிரிவு மூலம் உற்பத்தி செய்யும் நாடாக மாற்ற வேண்டும் என்ற இந்திய முதலாளித்துவத்தின் வேலைத்திட்டத்தை தொடர்ந்தனர். பெருவணிகத் திட்டங்களுக்காக விவசாயிகளின் நிலன்களை அது அபகரித்து, “நலிவுற்றபொதுத்துறை நிறுவனங்களை மூடி, முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகைகள் கொடுத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களின் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாகவும் ஆக்கினர். தேர்தல் தோல்வியை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவுத் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அரசாங்கம் முதலாளிகள் தொழிலாளர்களின் தரங்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயன்படுத்துதல் குறித்து இருந்த தடைகளை ஆகியவற்றை வீசி எறிய அனுமதித்தது என்றார். “நீண்ட காலமாகதொழிலாளர் நலச் சட்டங்கள் மேற்கு வங்கத்தில் தக்க முறையில் செயல்படுத்தப்படவில்லை.”

CPM மற்றும் இடது முன்னணி ஆகியவை, அவை கூறுவது போல் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகளின் கட்சிகள் அல்ல. இவை இந்திய தேசிய முதலாளித்துவத்தின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பானர்ஜிக்குவிசுவாசமான எதிர்க்கட்சியாகநடந்து கொள்ளுமோ என்ற அவர்கள் அறிவிப்பில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் ஏற்கனவே வரவிருக்கும் TMC காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராகத் தவிர்க்க முடியாமல் வரும் எதிர்ப்பை அடக்கும் வகையில் செயல்படுவர் என்றும் கூறிவிட்டனர்.

தங்கள் மேற்கு வங்கக் கோட்டையில் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தோல்வியுற்றது பல இடது முன்னணிப் பங்காளிகளிடையே, குறிப்பாக CPM இல் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வேறுபாடுகள் உத்தியோகபூர்வ அரசியலில் ஸ்ராலினிச செல்வாக்கை நப்பவைக்க எந்த வலதுசாரிப் போக்கு உகந்ததது என்பது பற்றியதாகும்.

வெளியேறும் மேற்கு வங்க முதல் மந்திரி புத்ததேப் பட்டாச்சார்ஜி  CPM தலைமையில் இருந்து இராஜிநாமா செய்வார் என்று செய்தி ஊடக ஊகங்கள் நிறைய இருந்தனஇவர் மே 18  CPM அரசியல்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாததும் இந்த ஊகத்தை ஓரளவு தூண்டிவிட்டது. CPM ன் பொதுச் செயலர் பிரகாஷ் காரட், தானும் பதவியை விட்டு விலகக்கூடும் என்று கூறிய செய்தி ஊடகத் தகவல்களை உதறித்தள்ள நேர்ந்தது; பட்டாச்சார்ஜி விலகுகிறார் என்பதை அவர் மறுத்தார். காரட்டின் கருத்துப்படி, மேற்கு வங்கத்தில் உள்ள கடுமையான நிலையினால்பட்டாச்சார்ஜி கூட்டத்திற்கு வர முடியவில்லை. இது TMC குண்டர்களால் CPM தொண்டர்கள்மீது சுமத்தப்பட்ட வன்முறை பற்றிய குறிப்பு ஆகும்.

எவ்வாறு இருந்தாலும், CPM இன் தேசியத் தலைமைக்கும் கட்சியின் மேற்கு வங்கப் பிரிவிற்கும் இடையே, இடது முன்னணியின் வெளிப்படையான முதலாளித்துவ எதிர்ப்பாளர்கள்பால் கொண்டுள்ள தகவமைவை ஒட்டித் தீவிர கருத்து வேறுபாடுகள் நீண்ட காலமாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான்.

பட்டாச்சார்ஜியும் CPM ன் மேற்கு வங்கப் பிரிவும் பல காலமாகவே ஜூலை 2008 முடிவான காங்கிரஸ் கட்சித் தலைமையிலான UPA அரசாங்கத்திற்கு ஆதரவை விலக்கிக் கொள்வது பற்றி எதிர்த்தனர் என்பது தெரிந்ததே; இது இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் செயல்படுத்துவது குறித்து இருந்தது. நான்கு ஆண்டுகளாக இடது முன்னணி சிறுபான்மை UPA வை அதிகாரத்தில் நீடிக்க வைத்து, அதே நேரத்தில் அது அதற்கு முன்பு பதவியில் இருந்த BJP தலைமயிலான அரசாங்கத்தின் கொள்கையில் இருந்து அதிகம் மாறுபட்டிராத கொள்கைகளைத்தான் செயல்படுத்திவருவதாகவும் கூறிவந்தது.

காங்கிரஸ் மற்றும் TMC க்கு இடையே ஒர் தேர்தல் கூட்டு ஏற்படுவதை தடுப்பதற்காக காங்கிரஸ் தொடர்ந்து ஆதரிக்கப்பட வேண்டும் என்று மேற்கு வங்க CPM விரும்பியது; அதே நேரத்தில் இடது அரசாங்கம்ஸ்திரப்பாடுஎன்ற பெயரில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதும் நிரூபிக்கப்படும் என்று கருதியது.

மேற்கு வங்கத்தில் மிக அதிக தொகுதிகளை ஒரு TMC- காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றிருந்த 2009 தேசியத் தேர்தல்களைத் தொடர்ந்து, CPM இன் போட்டிப் பிரிவுகள் தாங்கள் TMC ஐ விட நம்பிக்கையான பங்காளிகளாக இருப்போம் என்று காங்கிரஸ் கட்சித் தலைமையை நம்ப வைக்க ஒன்று சேர்ந்திருந்தன. இந்த வலதுசாரி முறையீட்டின் மையமாக இருந்த கருத்து CPM மற்றும் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கம் மாவோயிச தலைமையிலான பழங்குடி எழுச்சிக்கு எதிராக UPA அரசாங்கம் தொடுத்த இராணுவத் தாக்குதலான Operation Green Hunt க்குக் கொடுத்த முழு ஆதரவாகும்.

மாவோவிஸ்ட்டுக்கள் இந்தியாவின்மிகப் பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்என்று பிரதம மந்திரி மன்மோகன் சிங் குறிப்பிட்டதற்கு தங்கள் ஆதரவை பலமுறையும் ஸ்ராலினிஸ்டுகள் அறிவித்தனர். அதே நேரத்தில் TMC ஐயும் மமதா பானர்ஜியையும் நந்திகிராம் மற்றும் பல இடது முன்னணி எதிர்ப்புப் போராட்டங்களில் மாவோயிஸ்ட்டுக்களுடன் சேர்ந்து செயல்படுவதாகச் சாடினர்.

இடதில் இருந்து அதிகாரத்தை பற்றுவதற்காக பானர்ஜி, ஜனரஞ்சகவாத  வேஷத்தை போட்டுக்கொண்டார். மாவோயிஸ்ட்டுக்கள் மற்றும் பிற குட்டி முதலாளித்துவஇடதுசக்திகள் TMC இனை முற்போக்கான மாற்றத்திற்குஒரு கருவி என்று உயர்த்துவதற்கு அவருக்கு உதவின.

இப்பொழுது பானர்ஜியின் உபாயம் வெற்றி பெற்ற அளவில், பெருவணிகம் தாங்கள் எதிர்பார்க்கும் வலதுசாரிக் கொள்கைகளைக் கோடிட்டுக் காட்ட அதிக நேரத்தை வீண்டிக்கவில்லை. அவருடைய அரசாங்கம் இதைச் செயல்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். இவ்வகையில் மே 23ம் திகதி India Today கட்டுரை ஒன்று, “தீதியின் வரவிருக்கும் போர்என்ற தலைப்பில் (தீதி என்பது செய்தி ஊடகம் பானர்ஜிக்குக் கொடுத்த செல்லப்பெயர் ஆகும்) கூறுகிறது: வெற்றியைக் கையாள்வது என்பது எப்பொழுதுமே ஒரு பெரிய பணி ஆகும்; இவர் சிதைந்த நிலையில் உள்ள மாநிலத்தில் அதிகாரத்தை ஏற்றுள்ளார். இதன் மோசமான நிதி நிலைமை அதிகம் செய்வதற்கு இடமின்றி உள்ளது.” “வரிகளில் பெரும் அதிகரிப்பு, ஊதியங்கள், சமூகநலச் செலவுகளில் பெரும் குறைப்புக்கள்இல்லாமல் அரசாங்கம்வரவும் செலவும் சீராக இருக்கும்என்ற உறுதியைக் காப்பாற்ற முடியாது.

தற்போதைய UPA அரசாங்கத்திலும், இதற்கு முன் இருந்த BJP தலைமையிலான அரசாங்கத்திலும் ஒரு மந்திரி என்ற முறையில் தனியார்மயம் ஆக்குதல் மற்றும் சமூகநலக் குறைப்புக்களுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் பானர்ஜி நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளார்.

மாவோயிஸ்ட்டுக்களுடன் நெருங்கிப் பழகியதைப் பொறுத்த வரை, இவர் இனிமேல் எப்படி நடந்து கொள்வார் என்பது பற்றி பிரமைகளும் தேவையில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது பானர்ஜி மாவோயிஸ்ட்டுக்களிடம் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ள முயன்றார். பல முறையும் அவர்களும் CPM உம்சகோதரர்கள்”, மேற்கு வங்க மக்களுக்கு எதிராக இணைந்து செயல்படுகின்றனர் எனக்கூறினார்.

நீண்டகாலமாகவே குறைந்த தன்மையுடைய உள்நாட்டுப் போர் CPM க்கும் மாவோவிஸ்ட்டுக்களுக்கும் நடைபெற்று வருகிறது. பல மாதங்களாக மாவோவிஸ்ட்டுக்கள் மேற்கு வங்கத்தின் உழைக்கும் மக்களை பானர்ஜிக்கும் அவருடைய TMC க்கும்  ஆதரவு கொடுக்குமாறும் அதனால்சமூக பாசிச CPM” தோற்கடிக்கப்பட முடியும் என்றும் கூறிவந்தனர்.

இது அபத்தம் என்றாலும், பானர்ஜி CPM, மாவோயிஸ்ட்டுக்கள் இருவரையும் நண்பர்கள் என்று விளித்திருப்பது உறுதியான அரசியல் அர்த்தத்தை கொண்டுள்ளது. தனியார்மயமாக்கலை நியாயப்படுத்துதுல், CPM இன்ஊழலைஎதிர்க்க சமூகநலச் செலவுக் குறைப்புக்களை செய்தல் ஆகியவற்றை அவர் செய்ய இருக்கையில், அவர் கிராமப் புறங்களில் அடக்கு முறையை நியாயப்படுத்துவதற்குமாவோயிச வன்முறைஎன்பதை இழுத்துக் கொள்வார்.