WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
லிபியப் போரும் அமெரிக்க
ஜனநாயகமும்
24 May
2011
Patrick Martin
Use
this version to print | Send
feedback
லிபியாவிற்கு எதிரான அமெரிக்கப் போருக்க காங்கிரசின் ஒப்புதலை பெறுவதற்கான
60 நாட்கள்
சட்டப்பூர்வ காலக்கெடுவை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஒபாமா நிர்வாகம்
கடந்துசெல்ல விட்டுவிட்டது.
மே
20, வெள்ளியன்று
இக்காலக்கெடு முடிந்துவிட்டது;
ஆனால் அமெரிக்கச்
செய்தி ஊடகத்திலோ உத்தியோகபூர்வ அரசியல் வட்டங்களிலோ இதைப் பற்றி எக்குறிப்பையும்
காண்பதற்கில்லை.
1973ம்
ஆண்டு War Powers
Act (யுத்த அதிகார
தீர்மானம்)
காங்கிரசால் இயற்றப்பட்டது;
இது வியட்நாம்
போரின் தோல்விக்கிடையே,
ரிச்சார்ட்
நிக்சனின் தடுப்புரிமையை மீறி நிகழ்ந்தது.
இதன் நோக்கம்
வருங்கால ஜனாதிபதிகள் முடிவற்ற அறிவிக்கப்படாத போர்களை சட்டமன்றத்திற்கு பொறுப்போ
அதிகப் பொறுப்போ இல்லாமல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கம் உடையது.
இச்சட்டத்தின் கீழ்
போரை அறிவிப்பதற்கு அமெரிக்க அரசியலமைப்பில் பிரத்தியேக அதிகாரம்
கொடுக்கப்பட்டுள்ளது.
60
நாட்கள் வரை தன்
விருப்புரிமை மூலம் இராணுவ வலிமையைப் பயன்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை
அளிக்கிறது-இதுவே
ஜனாதிபதி அதிகாரத்தில் பெரும் விரிவாக்கம் ஆகும்.
ஆனால் காங்கிரஸ்
இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் தரவில்லை என்றால் மொத்தம்
90 நாட்களுக்குள்
படைகள் திரும்பப் பெற வேண்டும்.
1980ல்
நீதித்திறையில் சட்ட ஆலோசகர் அலுவலகம் இச்சட்டம் அரசிலமைப்பு நெறியுடன்
இயைந்துள்ளது,
எந்த நிர்வாகமும்
இதை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முற்படவில்லை என்ற முடிவிற்கு வந்தது.
முக்கிய
துருப்புக்கள் பயன்படுத்தப்பட்ட
1990-91
பாரசீக வளைகுடாப் போரில்
நடந்தது போல்,
மற்றும்
ஆப்கானிஸ்தான் ஈராக்கில்
2001, 2003ல்
நடந்தது போல் போரினை அறிவிப்பதற்கு ஒரு பிரதியீடாக ஜோர்ஜ் எச்.டபுள்யூ
புஷ் மற்றும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் ஆகிய இருவரும் தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதன்
மூலம் காங்கிரஸின் ஒப்புதலை நாடினர்.
1999
கொசோவோப் போரில்,
90 நாள்
முடிவதற்குள் 78
நாட்களில் சேர்பியா
மீது குண்டு வீசியதன் மூலம்
War Powers Act
செயல்படுத்தப்படுவதில்
இருந்து தப்பித்தார் கிளின்டன்.
மேலும் காங்கிரஸ்,
போருக்கு ஒப்புதல்
கொடுக்கவில்லை என்றாலும்,
சேர்பியப் போருக்கான
நிதியுதவியை முதல்
60 நாட்களிலேயே
ஒப்புதல் கொடுத்தது.
2007ல்
புஷ் நிர்வாகத்தின் ஈராக் போர் பற்றிய ஒருதலைப்பட்ச அணுகுமுறை பற்றி மிகவும் குறை
கூறியிருந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளர்
Boston Globe
இடம் ஒரு பேட்டியில்
பின்வருமாறு கூறியிருந்தார்:
“அரசியலமைப்பின்படி
ஜனாதிபதிக்கு நாட்டின் மீது உண்மையான அல்லது தவிர்க்க முடியாமல் வரக்கூடிய
அச்சுறுத்தலைத் தடுத்தல் என்ற நிலையின்போது தவிர மற்றபடி,
ஒருதலைப்பட்சமாக
இராணுவத் தாக்குதலுக்கு ஒப்புதல் கொடுக்கும் அதிகாரம் கிடையாது.”
அவர்தான்
வேட்பாளர் ஒபாமா;
அப்பொழுது அமெரிக்க
செனட்டில் உறுப்பினராக இருந்தார்.
ஆனால் ஜனாதிபதி
ஒபாமா போர் நடத்துவதற்கு
அவருடைய
அதிகாரத்தின்மீது உள்ள சட்டபூர்வ தடைகள் அனைத்தையும் பகிரங்கமாக மீறுகிறார்.
மே
18ம் தேதி
ஒபாமாவிற்கு 6
குடியரசு செனட்
உறுப்பினர்கள் ஒரு கடிதம் எழுதி,
வரவிருக்கும்
60 நாள்
கெடுபற்றியும் மேற்கோளிட்டனர்;
“சட்டபூர்வமாக
நீங்கள் லிபியாவில் அமெரிக்க நாட்டின் இராணுவத் துருப்புக்களை பயன்படுத்துவது
குறித்த War
Powers Resolution
படி, 60நாட்கள்
காலக்கெடுவின் இறுதி நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது.
கடந்த வாரம்கூட
உங்கள் நிர்வாகம் அமெரிக்க இராணுவப் படைகள் காலவரையற்று ஈடுபடுத்தப்படும் என்ற
குறிப்பைக் காட்டியது.
எனவே உங்களுக்கு
நீங்கள் War
Powers Resolution
உடைய தேவைகள்படி இணங்கி நடக்கப் போகிறீர்களா எனக் கேட்பதற்கு இக்கடிதத்தை
எழுதுகிறோம்.”
உயர்மட்ட
ஜனநாயக,
குடியரசு மன்ற,
செனட்
உறுப்பினர்களுக்கு விடையிறுக்கும் வகையில் ஒபாமா அவர்களை லிபியாவிற்கு எதிராக
நடக்கும் போருக்கு இசைவு கொடுத்து ஒரு காங்கிஸ் தீர்மானத்திற்கு ஆதரவு தருமாறு
அழைத்தார்.
ஆனால்
War Powers Act
இம்மோதலுக்குப் பொருந்தும் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.
உண்மையில்
1973 சட்டத்தைப்
பற்றிக் கடிதம் ஏதும் குறிப்பிடவில்லை.
மாறாக,
லிபியாவிற்கு எதிராக
நடக்கும் போரில் அமெரிக்காவின் பங்கு பற்றி குறை்த்துக்காட்டும் வாதத்தைத்தான்
ஒபாமா முன்வைத்துள்ளார்.
அவர் குறிப்பிடுவது:
“ஆனால் ஏப்ரல்
4 ஐ ஒட்டி அமெரிக்கா
லிபிய இராணுவ நடவடிக்கைகளின் பொறுப்பை நேட்டோவிற்கு மாற்றிவிட்டது,
அமெரிக்கத் தொடர்பு
இப்பொழுது கூட்டணியின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுத்தல் என்றே உள்ளது.”
அமெரிக்கப்
பங்கு
“நேட்டோ தலைமையிலான
செயற்பாட்டிற்கு மறைமுகமான ஆதரவைக் கொடுப்பது,
அதில் உளவுத்துறை,
தளவாட ஆதரவு மற்றும்
தேடுதல்,
மீட்டலில் உதவி ஆகியவை
அடங்கியிருக்கும்”
மற்றும் லிபிய
வான்வழிப் பாதுகாப்பு முறைகளைத் தாக்குவதற்கு விமானங்களைப் பயன்படுத்தல்,
“ஆள் இல்லாத
விமானங்களின் துல்லியமான தாக்குதல்களும் அடங்கும்.”
குறிப்பாக
ஒரு அமெரிக்க அதிகாரி அட்மிரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸ் நேட்டோ தளபதியாகப்
பணியாற்றுகையில் இது ஒரு அப்பட்டமான வார்த்தையாடலாகும்.
அமெரிக்க இராணுவம்
லிபியாவிற்கு எதிரான ஒரு போரில் வெளிப்படையாக ஈடுபட்டுள்ளது.
இதில் ஏராளமான லிபிய
படையினரும் மற்றும் குடிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் போர்
விமானங்களும் ஆளற்ற பிரிடேட்டர் ட்ரோன்களும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் லிபிய
இலக்குகள்மீது தாக்குலைத் தொடர்கின்றன.
மேலும்,
மார்ச்
21ம் தேதி லிபியா
மீது முதல் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டபின்,
ஒபாமா காங்கிரஸிற்கு
ஒரு கடிதம் எழுதி அதில் இராணுவ ஈடுபாடு பற்றி உத்தியோகபூர்வ தகவலையும்
கொடுத்திருந்தார்.
War Powers Resolution
தீர்மானத்திற்கு இணங்க
“காங்கிரஸிற்கு
முழுமையாகத் தகவல் கொடுக்க வேண்டும் என்னும் என் முயற்சிகளில் ஒரு பகுதியாக
இத்தகவல் வழங்கப்படுகிறது''.
காங்கிரஸின்
ஜனநாயக,
குடியரசுக் கட்சி
உறுப்பினர்கள் இவ்வகையில் போர் அதிகாரங்கள் சட்டம் ஒதுக்கப்பட்டதை விரும்பியும்
விரும்பாமலுமே ஏற்றனர்,
அல்லது வெளிப்படையாக
அதற்கு ஒப்புதலைக் கொடுத்தனர்.
2008ல் ஒபாமாவிற்கு
போட்டியாளராக இருந்த செனட்டர் ஜோன் மக்கெயின்,
“எந்த ஜனாதிபதியும்
போர் அதிகாரங்கள் சட்டத்தின் அரசிலமைப்பு நெறியை அங்கீரித்தது இல்லை,
நானும் அப்படித்தான்.
எனவே எந்தக்
காலக்கெடுவினாலும் நான் கட்டுண்டதாக நினைக்கவில்லை.”
என்று அறிவித்தார்.
சில
காங்கிரஸ் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் நிர்வாகம் போர் நடத்தும் முறை பற்றிக்
குறை கூறினர்.
ஆனால் அவை போதுமான
ஆக்கிரோஷத்தைக் கொண்டிருக்கவில்லை.
ஏனெனில் கடாபி
ஆட்சியை அகற்றுவது போன்ற தலையீட்டின் மூலோபாய இலக்குகள் போதுமான முறையில் விளக்கிக்
கூறப்படவில்லை என்றனர்.
ஜனாதிபதி
அவர் விருப்பம் போல் போர் தொடுக்கும்
“உரிமை”
பற்றி இரு
கட்சிகளும் ஆதரவு கொடுத்திருப்பது அமெரிக்காவில் ஜனநாயக வழிவகைகள் எந்தத் தீவிர
அளவிற்கு வலிமை இழந்துவிட்டன என்பதை நிரூபிக்கின்றது.
நிர்வாகப் பிரிவு
அமெரிக்க இராணுவப் படைகள் தான் விரும்பும் வகையில்போருக்கு அனுப்புகிறது.
ஒரு போர்ப்
பிரகடனத்தைக்கூட பெறவில்லை.
அந்த அதிகாரம்
அரசியலமைப்பின் விதி
2, உட்பரிவு
8ன் படி சட்டமன்றப்
பிரிவிற்குத்தான் உண்டு.
ஆனால் புதிய
வியட்நாம் வகையிலான போர்களைத் தடுக்கும் வகையிலான
1973 போர்கள் பற்றி
சட்டத்தில் உள்ள விதிகளையும் ஏற்கவில்லை.
மிக
முக்கியமான துறையில் நிர்வாகத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தடுப்பு முறை
சரிவுற்றுள்ளது என்பது நீடித்த வரலாற்று நிகழ்வுப்போக்கின் ஒரு பகுதியே ஆகும்.
வெளிநாடுகளில்
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு உலகம் முழுவதையும் தாக்கும் இராணுவ சர்வாதிகாரியாக
மாற்றப்படுகிறது.
மற்ற எல்லா
நாடுகளும் இணைந்து கொண்டுள்ள துருப்பு எண்ணிக்கை,
தாக்கும் திறன்
ஆகியவற்றை விட அதிகமானவற்றை கொண்டுள்ளது.
உள்நாட்டில்
கட்டமைக்கப்படும் ஒரு பொலிஸ் அரசாங்க அமைப்பு தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளுக்கு
எதிராக இயக்கப்படுகிறது.
மேலும்,
லிபியாவிற்கு எதிராக
போர் நடத்துவது என்னும் ஒபாமாவின் முடிவின் ஜனநாயக விரோதத் தன்மை போரின்
பிற்போக்குத்தன,
கொள்ளை முறைக்கு
சான்றாகத்தான் உள்ளது.
அமெரிக்கத்
துருப்புக்கள்,
போர்க்கப்பல்கள்,
விமானங்கள் மற்றும்
ஏவுகணைகள் அமெரிக்க மக்களைக் காப்பாற்ற இயக்கப்படவில்லை,
லிபிய மக்களை
நசுக்கி,
அங்குள்ள எண்ணெய்
இருப்புக்கள்,
மூலோபாயப் பகுதிமீது
கட்டுப்பாட்டைக் கொள்ள மற்றும் வட ஆபிரிக்கா,
மத்திய கிழக்கிலுள்ள
மக்கள் அனைவரையும் மொத்தமாக அச்சுறுத்துவதற்கு
பயன்படுத்தப்படுகின்றன.
உலக சோசலிச
வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர்
உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்,
மத்திய கிழக்கு,
ஆபிரிக்கா மத்திய
ஆசியா ஆகியவற்றில் இருந்து அனைத்து அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டுத்
துருப்புக்கள் திரும்பப் பெற வேண்டும்,
அனைத்து அமெரிக்க
இராணுவத் தளங்களும் மூடப்பட வேண்டும்,
பாதிக்கப்பட்டுள்ள
நாடுகளில் இருக்கும் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக பில்லியன்கணக்கான டாலர்கள்
வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றன.
ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான வெகுஜன இயக்கத்தைக் கட்டமைப்பதற்கு தொழிலாள
வர்க்கத்தினை நோக்கி திரும்புதல் தேவை.
சர்வதேச சோசலிச
அரசியல் வேலைத்திட்டத்தின் அடித்தளத்தில் ஒரு வெகுஜன தொழிலாளர் இயக்கம்
கட்டமைக்கப்பட வேண்டும்.
இது சமரசத்திற்கு
இடமின்றி இரு ஏகாதிபத்திய அரசியல் கட்சிகளான குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக்
கட்சிக்கும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பை காட்டவேண்டும். |