சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama affirms “ironclad” support for Israel

இஸ்ரேலுக்கு இரும்புக் கவசம் போன்ற உறுதியை ஒபாமா மீண்டும் வலியுறுத்துகிறார்

Bill Van Auken
23 May 2011

Use this version to print | Send feedback

மத்திய கிழக்கு சார்பான பெரிதும் அர்ப்பணிக்கப்பட்ட அமெரிக்கக் கொள்கைகள் பற்றிய உறுதியாகக் கூறும் வகையில் ஞாயிறன்று வலதுசாரி சியோனிச செல்வாக்குக் குழுவான AIPAC எனப்படும் அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகாரங்கள் குழுவிடம் பேசிய ஜனாதிபதி பாரக் ஒபாமா இஸ்ரேலுக்கு வாஷிங்டனின் நிபந்தனையற்ற ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

AIPAC யில்அரபு வசந்தம்என்று அழைக்கப்பட்ட உரையை ஆற்றிய மூன்று நாட்களுக்கும், இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நேடன்யாகுவிடம் வெள்ளை மாளிகையில் பேச்சுக்களை நடத்திய இரு நாட்களுக்குள்ளும் வந்துள்ளது.

ஒன்றாகப் பொருத்திப் பார்க்கையில் இந்த மூன்று நிகழ்வுகளும் இரு தசாப்தங்களாக இருந்த துனிசிய, எகிப்திய சர்வாதிகாரங்களை அகற்றி அரபு உலகின் பெரும்பகுதியில் மக்களைத் தெருக்களுக்கு அழைத்து வந்துள்ள வரலாற்றுத் தன்மை மிகுந்த மக்கள் எழுச்சிகளுக்கு இடையே, வாஷிங்டன் இப்பகுதியில் இஸ்ரேலுடன் அதன் மூலோபாய உடன்பாடு என்ற நங்கூரம் பாய்ச்சிய வகையில் எதிர்ப்புரட்சிக் கொள்கையில் உறுதியாக உள்ளது தெரியவருகிறது.

ஒபாமாவின் உரை மற்றும் நேடன்யாகு அதை இகழ்ச்சியுடன் எதிர்கொண்டதைப் பற்றிய செய்தி ஊடகத் தகவல்கள் இரண்டுமே அமெரிக்க ஜனாதிபதி கூறிய பின்வரும் ஒரு சொற்றொடரில் மையம் கொண்டுள்ளன: “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் எல்லைகள் 1967 ஐ ஒட்டி இரு பகுதியும் ஏற்கும் சில மாற்றங்களை மட்டுமே தளமாகக் கொள்ள வேண்டும் என்று நாம் நம்புகிறோம்.”

நேடன்யாகு பகிரிங்கமாக ஒபாமாவிற்கு மூக்குடைப்புத் தரும் வகையில் வெள்ளை மாளிகையில்எல்லைகளுக்குமீண்டும் திரும்புதல் என்பது இஸ்ரேலைபாதுகாப்பற்றதாகச் செய்துவிடும்என்று அறிவித்தார். நிர்வாகத்தின் குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர்கள் ஒபாமாஇஸ்ரேலியர்களை பஸ்ஸின் கீழ் தூக்கி எறிந்துள்ளார்அல்லது முதுகில் குத்திவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

AIPAC யில் ஒபாமா ஆற்றிய உரை இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு விடையிறுக்கும் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. AIPAC செல்வாக்குக் குழு, நிதிச்செல்வாக்கு இருந்தும் இஸ்ரேலுக்குள் உள்ள ஒரு வலதுசாரி சிறுபான்மையினரின் கருத்துக்களை மட்டுமே பிரதிபலிபலிப்பதுடன்அமெரிக்காவில் உள்ள யூதர்களில் அதைவிட மிகச் சிறிய  எண்ணிக்கையைத்தான் பிரதிபலிக்கிறது.

இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாடு இரும்பு கவசம் போன்றது ஆகும்என்று அவர் அறிவித்தார்; இச்சொற்றொடர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, குடிமக்களைப் படுகொலை செய்தல் ஆகியவற்றிற்கு வாஷிங்டனின் இடைவிடா ஆதரவைக் காட்டும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 2006ல் லெபனானில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள், காசாவில் 2008-2009ல் கொல்லப்பட்டவர்கள் மற்றும் வாடிக்கையாக ஆக்கிரமிப்புப் பகுதிகளில் அன்றாட வன்முறையில் கொல்லப்படுவோர் ஆகியவர்கள் அடங்குவர்.

தன்னுடைய நிர்வாகமும் குடியரசு, ஜனநாய மாநில அரசாங்கங்கள் அமெரிக்கா முழுவதும் முக்கியமான சமூக நலத்திட்டங்களை கத்தி கொண்டு வெட்டுகையில், இஸ்ரேலின் இராணுவத்திற்கு ஆதரவைக் கொடுக்க நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் எப்பொழுதும் கிடைக்கும் என்று ஒபாமா பெருமை கூறிக்கொண்டார்.

கடுமையான நிதிய இடர்கள் இருந்தபோதிலும், நாம் வெளிநாட்டு இராணுவங்களுக்கு நிதியளிப்பதை மிக உயர்ந்த தரத்தில் இருத்தியிருக்கிறோம்என்று இஸ்ரேலின் புதியஇரும்பு மாடம் ராக்கெட்-எதிர்ப்பு முறைக்கான நிதியைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி ஒபாமா வலியுறுத்தினார்.

“1967 எல்லைகள்பற்றிய தன் தாக்குதலுக்குரிய கருத்தைப் பற்றி ஒபாமா, தன்னுடைய திட்டத்தில்குறிப்பிடத்தக்க வகையில் முதல் தடவையாக ஏதும் கூறப்படவில்லைஎன்று நியாயப்பாட்டுடன் வலியுறுத்தினார்.

அந்த எல்லைகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டும் எனத் தான் கூறவில்லை, ஆனால் பேச்சுக்கள்இருதரப்பும் ஒப்புக்கொள்ளக்கூடிய மாற்றங்களைத்தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அதையொட்டி காசா, மேற்குகரை, கோலன் குன்று, கிழக்கு ஜெருசலம், 1967ல் சினாய் ஆகியவற்றில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பிதற்கு முன்பு இருந்தவேறுபட்ட எல்லைஏற்படக்கூடும் என்று ஒபாமா வலியுறுத்தினார்.

நிலப்பகுதியில் தற்பொழுதுள்ள புதிய மக்கட்தொகை நிலையை எந்தப் புதிய உடன்பாடும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்என்றார் அவர்.

இந்தமக்கள் தொகை நிலைஎன்னும் வெகுளித்தனச் சொல், பாலஸ்தீனிய நிலம் இடையறாமல் திருடப்பட்டு ஆக்கிரமிப்புப் பகுதிகளில் சியோனிச குடியிருப்புக்கள் கட்டப்படுவதைக் குறிக்கின்றன. இவை மேற்குக்கரை என்று இருந்ததில் திறமையுடன் 40% இனை  விழுங்கிவிட்டன. எஞ்சியுள்ள பகுதி இஸ்ரேலின் இனப்பாகுபாட்டுச் சுவர், குடியேற்றங்கள், பாதுகாப்புச் சாலைகள் ஆகியவற்றால் பிரிவுற்று ஒபாமாவின்இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் மாற்றங்கள்ஆகியவை ஒரு நிலைத்திருக்கக்கூடிய, இறைமை பெற்ற பாலஸ்தீன நாட்டைத் தோற்றுவித்தல் என்பதைக் கேலிக்கூத்தாக்கி விட்டன.

கடந்த சில நாட்களாக ஒபாமாவின் அறிக்கைகளில் அப்பட்டமாகக் காணப்படாமல் இருப்பது இஸ்ரேல் சட்டவிரோதக் குடியேற்றங்கள் கொள்கையை நிறுத்த வேண்டும் என்று ஏதும் கூறப்படாததும் ஆகும்.

இஸ்ரேலின் அப்போதைய வெளியுறவு மந்திரி Tzipi Livni 2007ல் அப்பட்டமாக விளக்கியிருந்த இஸ்ரேலிய மூலோபாயத்தை வசதிப்படுத்தும் வடிவமைப்பாகத்தான் வாஷிங்டனின் கொள்கை உள்ளது. “இஸ்ரேலியக் கொள்கை இன்னும் கூடுதலான நிலத்தை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாள் முடிவிலும் எடுத்துக் கொள்ளுதல்; இதையொட்டி நாம் அது இயலாது, நாம் ஏற்கனவே நிலத்தைக் கொண்டுள்ளோம், பாலஸ்தீனிய நாட்டைத் தோற்றுவிக்க முடியாது என்று கூறுவோம்என்றார் அவர்.

சமாதான வழிவகை என்று அழைக்கப்படுவது மீண்டும் ஒபாமாவால் வலியுறுத்தப்பட்டது; இது இரு தசாப்தங்களாக உள்ள இராஜதந்திர  போலித்தனம் ஆகும். இது பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்களை நியாயப்படுத்தும் நோக்கம் கொண்டதுடன்மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கைத் தந்திரங்களுக்கு வசதி அளிக்கிறது.

இந்த மோசடித்தன வழிவகை பாலஸ்தீனிய தேசியவாதத் தலைமையின் ஒத்துழைப்பினால், மஹ்முத் அப்பாஸ் தலைமையிலுள்ள பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஒத்துழைப்பினால் சாத்தியமாகின்றது. ஒரு குறுகிய பாலஸ்தீனிய உயரடுக்கின் நலன்களை, சலுகைகளைக் பாதுகாப்பதற்கு நாட்டை அடைய விரும்பும் முயற்சிக்காக பாலஸ்தீனிய மக்களின் ஒவ்வொரு அடிப்படைச் சமூக, ஜனநாயக உரிமைகளைக் கைவிடுவதற்கும் இது உடன்படுகிறது

இஸ்ரேலிடம் அமெரிக்கா கொண்டுள்ள மனப்பாங்கு அப்பகுதி முழுவதும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதுடன் பிணைந்துள்ளது.

அனைவருக்கும் பொதுவான உரிமைகள்”, “தனிநபரின் சுய உரிமை நிர்ணயம்”, “ஜனநாயகத்திற்கு மாற்றம் என்ற வனப்புரைகளுக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்கும் எதிர்ப்புரட்சி மூலோபாயத்தை தொடர்கிறது, மேலும் அப்பகுதியில் மூலோபாய எரிசக்தி இருப்புக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை பாதுகாக்கவும் விழைகிறது.

இந்த நோக்கத்துடன் அது நேட்டோ மூலம் ஒரு நவகாலனித்துவ போரை லிபியாவில் நடத்துகிறது. சவுதிஅரேபியா மற்றும் பரந்த வகையில் அப்பகுதி முழுவதிலும் வளைகுடா நாடுகளில் தங்கள் பகுதிகளில் சமூக எழுச்சிகளை அடக்குவதற்கான பிற்போக்குத்தன முடியாட்சி அரசுளுக்கு ஆதரவைத் தருகிறது

இந்த மூலோபாயத்தை அமெரிக்கா இஸ்ரேலின் நெருக்கமான ஒத்துழைப்புடன் நடத்துகிறது. இஸ்ரேலோ வாஷிங்டனுடன் இணைந்து எகிப்தின் முபாரக், துனிசியாவின் பென் அலி ஆகியோரின் சர்வாதிகாரங்களுக்கு அவை வீழ்ச்சி அடையும் வரை உறுதியான பாதுகாப்பைக் கொடுத்து வந்தது. இந்த இரு நாடுகளிலும் இஸ்ரேலுடைய உதவியுடன் அமெரிக்கா மக்களின் புரட்சிகரப் போராட்டங்களை நசுக்கப் முனைவதுடன், வெளிநாட்டு, உள்நாட்டு மூலதனத்தின் நலன்களைக் பாதுகாப்பதற்கு இராணுவ, முதலாளித்துவஜனநாயகவாதிகள்கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில் இருக்கும் புதிய ஆட்சிகள் நிலைப்பதற்குப் பாடுபடுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் முதல் தடவையாகபாலஸ்தீனிய மக்களுக்கு, அரபு உலகிற்கு மற்றும் இஸ்ரேலுக்கே முன்வைக்க முடியாத ஒபாமாவின் தன்மை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுத் தன்மை வாய்ந்த வீழ்ச்சியை காட்டுகிறது. இது இப்பொழுது புதிய போர்கள் மற்றும் பேரழிவுகளுக்குத்தான் வழிவகுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இஸ்ரேலை பொறுத்தவரை, ஒபாமாவின் உரைக்கு நேடன்யாகுவின் தீர்க்கமான பிரதிபலிப்பு, இஸ்ரேலிய மக்களின் மிகுந்த வலதுசாரிப் பிரிவினரிடையே உணர்வுகளை தொடர்ந்து வளர்த்துத் தூண்டும் முயற்சி ஆகும். இஸ்ரேலில் எப்பொழுதும் ஒரு உறுதியற்ற தன்மை மற்றும் அரசியல் நெருக்கடி என்ற அச்சம் உள்ளது. இங்கு இந்த ஆண்டு சமூக எழுச்சிகளால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் இருப்பதை விட சமூக சமத்துவமின்மை அதிகமாகும்.

கடந்த ஆறு மாதங்களாக இப்பகுதியில் பரவிக் கொண்டிருக்கும் வரலாற்றுத் தன்மை நிறைந்த போராட்டங்கள் உள்ள நிலை, உலக முதலாளித்துவ முறையின் தீர்க்க முடியாத நெருக்கடியால் எரியூட்டப்படுவது, தவிர்க்கமுடியாமல் மத்திய கிழக்கில் எஞ்சியுள்ள பகுதிகளிலும் கூடுதல் வெடிப்புக்களை ஏற்படுத்தும். இதில் ஆக்கிரமிப்புப் பகுதிகளும் இஸ்ரேலுமே அடங்கும்.

புதிய புரட்சிகரத் தலைமையை கட்டமைத்தல் மிகவும் முக்கியமான தேவை ஆகும். அது சோசலிசம் மற்றும் சர்வதேசிய முன்னோக்கைத் அடித்தளமாகக் கொண்டு முதலாளித்துவத்திற்கு எதிராக யூத, அரபுத் தொழிலாளர்களை ஒரு பொதுப் போராட்டத்தில் ஐக்கியப்படுத்த வேண்டும். மேலும் மத்திய கிழக்கு சோசலிசக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக ஒரு ஜனநாயக, மதசார்பற்ற நாடு தோற்றுவிக்கப்பட அது உதவ வேண்டும்.