World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Tens of thousands protest throughout Spain, defying government ban

அரசாங்கத் தடையை மீறி ஸ்பெயின் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By Alejandro López
21 May 2011
Back to screen version

மாட்ரிட்டின் Puerta del Sol ஐ பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளதுடன், மற்றும் ஸ்பெயின் முழுவதும் 162 சிறு நகரங்களிலும், பெருநகரங்களிலும் வேலையின்மை, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் வங்கிகளுக்கும் பெருவணிகத்திற்கும் மட்டுமே சேவைசெய்யும் ஓர் அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக முக்கிய சதுக்கங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இப்பொழுதே உண்மை ஜனநாயகம்” (“Real Democracy Now”) என்று அழைப்புவிடுத்த ஆர்ப்பாட்டங்கள் M-15 இயக்கம் என்றும் அழைக்கப்படுகின்றன. அத்தினம் முதலில் சமூக இணையங்கள், இணைய தளக் குழுக்கால் முதலில் அழைப்பு விடப்பட்டது. இதற்கு இளம்தொழிலாளர்கள், மாணவர்கள், வேலையற்றோர் மற்றும் ஸ்பெயினின் உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகள் ஆகியவற்றிடம் பாரிய ஆதரவு இருந்தது.

மாட்ரிட் தேர்தல் குழு ஞாயிறன்று நடக்க இருக்கும் நகரசபை மற்றும் வட்டாரத் தேர்தல்களுக்கு முன்னதாக ஆர்ப்பாட்டங்களை தடை செய்திருந்தாலும், அவற்றை மீறி ஆறாம் நாளாக ஆர்ப்பாட்டங்கள் வெள்ளியன்றும் தொடர்ந்தன.

வியாழன் இரவு, ஸ்பெயினின் மத்தியத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அன்று நாடுமுழுவதும் ஊர்வலங்களுக்கு தடைவிதித்து ஒரு தீர்மானத்தை இயற்றியது. ஞாயிறு நகரசபை மற்றும் வட்டார அரசாங்கங்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதால்  சனிக்கிழமையை தேர்தலுக்கு முந்தைய “பிரதிபலிப்பு நாள் என்று குறிப்பிடப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 5 வாக்குகள் எதிராக 4 வாக்குகள், ஒருவர் வாக்களிக்கவில்லை என்ற முறையில் நிறைவேற்றப்பட்டது. சனிக்கிழமை எவ்வித ஆர்ப்பாட்டமும் கூடாது என்று இது வெளிப்படையாகத் தடை செய்கிறது; “பிரதிபலிப்பு நாளன்று பிரச்சார நடவடிக்கை அல்லது தேர்வுப் பிரச்சாரம் எதுவும் கூடாது என்று நம் சட்டம் கூறுகிறதுஎன அது அறிவித்துள்ளது. தேர்தல் தினத்தைப் பொறுத்த வரை சட்டம்வாக்களிப்பதை எப்படியும் தடுத்துவிடும் நோக்கம் கொண்ட குழுக்கள் அமைத்தலைத் தடுக்கிறது; மேலும் வாக்குச்சாவடிகளின் அருகே தடையற்ற வாக்களிக்கும் சுதந்திரத்தில் தலையிடுதல், வலியுறுத்தல் போன்றவற்றைச் செய்யக்கூடிய எவரையும் தடைக்கு உட்படுத்துகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

மற்ற உள்ளூர் தேர்தல் நடத்தும் குழுக்களும் இதைப் பின்பற்றி செவில் மற்றும் கிரனாடாவில் முகாம்கள் நிறுவதல், ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல் ஆகியவற்றைத் தடைசெய்துள்ளன.

Puerta del Sol ல் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு சிறு கூடார நகரத்தை நிறுவி அதைச் சூழ்ந்துள்ளனர். இங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய தடை பற்றிய செய்தியை எகத்தாளத்துடனும் சீழ்க்கை அடித்தும், “நாம் நகரமாட்டோம்என்று கோஷமிட்டும் வரவேற்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தடை பற்றிய சட்டபூர்வத் தன்மை தெளிவாக இல்லை. ஸ்பெயினில் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசியலமைப்பு நீதிமன்றம், பிரதிபலிப்பு தினத்தன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமையை, வாக்காளர்கள் மீது அவற்றின் செல்வாக்குதொலைவில் இருக்கும்என்றால் அனுமதித்துள்ளது. அன்டலூசியா உயர்நீதிமன்றம் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் ஒரு ஆர்ப்பாட்டம் 2010 தேர்தல்கள் தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக தடைக்குட்படுத்தப்பட்டபோது, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வாக்களிக்கும் உரிமை மீறப்படலாம் என்றசாத்தியப்பாடு மட்டுமே ஒன்றுகூடும், ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளை ஒடுக்க போதாது  என்றும் இத்தீர்மானம் அறிவித்தது.

தன்னெழுச்சியாக மே 15 இயக்கத்தில் பங்கு பெற்றவர்கள் ஆரம்பத்தில் இருந்தே தாங்கள் ஸ்பெயினுடைய முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தின்மீதும் விரோதப் போக்கைக் கொண்டுள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் தேர்தல் குழுக்கள் கூறுவது போல் அவர்கள் ஒன்றும்பிரச்சாரமோ”, “வாக்களிக்கும் உரிமையைத் தடைக்கு உட்படுத்தவோமுயலவில்லை என்றும் கூறிவிட்டனர்.

எந்த எதிர்ப்பும் பத்து நாட்கள் முன்னறிவிப்புக் கொடுத்த பின்னர்தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அப்பொழுதுதான் அதற்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கும் என்றும் ஸ்பானிய சட்டங்கள் கூறுகின்றது. ஆனால் எதிர்ப்பாளர்கள் தாங்கள் ஆர்ப்பாட்டம் எதற்கும் அழைப்பு விடவில்லை என்றும் ஸ்பெயினின் அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையை மட்டுமே நடைமுறைப்படுத்துவதாக வலியுறுத்தியுள்ளனர்.

மிகவும் வலிமையுடன் அடக்குவது என்பது அரசாங்கம் மற்றும் அது சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பைத் தூண்டிவிடும் என்று கணிசமான முறையில் ஆளும் வட்டங்களுக்குள் தளர்ச்சி உள்ளது. மாட்ரிட் தேர்தல் குழுவிற்குள்ளேயே குறைந்த பெரும்பான்மை என்பது ஆர்ப்பாட்டக்காரர்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி உள்ள பிளவுகளைத்தான் பிரதிபலிக்கிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக வந்த ஐந்து வாக்குகள் வலதுசாரி Partido Popular (மக்கள் கட்சி-PP) தேர்ந்தெடுத்தவர்களிடம் இருந்து வந்தது. தீர்மானத்தை எதிர்த்த வாக்குகள், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதவர்கள் ஆகியவை ஆளும் PSOE எனப்படும் ஸ்பெயினின் சோசலிச தொழிலாளர் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் இருந்து வந்தது.

தேர்தல் குழுவின் தலைவர் புதன் கிழமை ஆர்ப்பாட்டங்கள் சட்ட விரோதமானவை, ஆனால் தன்னுடைய முடிவு எவரையும் கட்டுப்படுத்தாது என்று அறிவித்தார். 500 கலகப்பிரிவுப் பொலிசார் மாட்ரிட் முக்கிய சதுக்கத்தை ஒட்டிய சாலைகளில் நிறுத்தப்பட்டனர்; ஆனால் சதுக்கத்திற்குச் செல்லுபவர்களின் அடையாள அட்டைகளைச் சோதித்து சதுக்கத்திற்கு செல்வது சட்டவிரோதம் என்று கூறியதுடன் தங்கள் பொறுப்பை நிறுத்திக் கொண்டனர். ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சியின் உள்துறை மந்திரி பெரஸ் ருபல்காபாபிரச்சினைகளைத் தீர்க்கத்தான் பொலிசார் உள்ளனரே ஒழிய, தோற்றுவிக்க அல்லஎன்றார்.

ஜனாதிபதி ஜோஸே சப்பாதேரோ, “நீதித்துறை மந்திரி தேர்தல் குழுத் தீர்மானத்தை ஆய்வு செய்கிறார். அதன் விளைவுகளையும் இச்சனிக்கிழமை என்ன நடக்கிறது என்பதையும் நாங்கள் பார்க்க உள்ளோம். அரசாங்கமும் உள்துறை மந்திரியும் புத்திசாதுரியமாகவும்சிறப்பான முறையிலும் செயல்படுவர். பரிசீலனை நாளை மதித்தல், உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தல் என்பதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.” என்றார்.

அமைதியான எதிர்ப்பை வன்முறை பயன்படுத்திக் கலைத்தால் பின்னடைவைக் கொடுத்து இயக்கத்திற்கு வலிமை தரும் என்ற அச்சத்தில் (அப்படித்தான் எகிப்தில் தஹ்ரிர் சதுக்கத்தில் நடந்தது) ருபல்காபா, சப்பாதேரோ இருவரும் பொலிஸ் தலையிடுமாறு பகிரங்கமாக இன்னும் உத்தரவிடவில்லை.

அப்படி இருந்தும்கூட, பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்று தகவல்கள் வந்துள்ளன.பார்ஸிலோனாவில் வேலையின்மையில் உள்ள கட்டிடக் கலைஞர் மிகுவேல் பிரிட்டனின் சானல் 4 செய்திப்பிரிவிடம் சாதாரண உடையில் இருந்து பொலிசார் நகரத்தின் Plaza de Catalunya வில் முகாமிட்டிருந்தவர்களைத் தாக்கினர் என்றார்.

அவர்கள் சாதாரண உடை உடுத்துகின்றனர், பல நேரமும் பல எதிர்ப்பாளர்களைப் போலவே உடுத்துகின்றனர், தங்கள் டி-சட்டைகளில் எதிர்ப்புக் கோஷங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் முகாம்களைத் தகர்க்கின்றனர், மக்களை எழுப்பி சதுக்கத்தில் இருந்து அகற்றுகின்றனர்.

நகர மறுத்தபோது தாங்கள் கைத்தடிகளால் தாக்கப்பட்டதாகச் சில எதிர்ப்பாளர்கள் கூறினர்.”

ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த இப்பொழுதே உண்மை ஜனநாயகம் மாட்ரிட்டில் அரசாங்கப் பாதுகாப்புப் பிரிவுகள்மிக வன்முறையாகநடந்து கொண்டனர் என்றனர்.

ஓர் அறிக்கையில், “மிருகத்தனமான பொலிஸ் அடக்குமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்; காயமுற்றோருடன் எங்கள் ஒற்றுமை உணர்வைப் பகிர்ந்து கொள்கிறோம், அதேபோல் எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாமல் அமைதியான ஆர்ப்பாட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தவர்கள்  நியாயமற்றுக் காவலில் வைக்கப்பட்டவர்களை உடனடியாக எக்குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறோம்.” என்று குழு கூறியுள்ளது.

எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், சப்பாதேரோ ஒரு பேட்டி அளித்தார்; அதில் அவருடைய அரசாங்கம் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகள் இன்னும் மிருகத்தனமான குறைப்புக்களை அளிக்கும் கிரேக்க மாதிரியிலான பிணை எடுப்பைத் தடுக்கத் தேவை என்றும் கூறினார். அதேபோல் வங்கிகளை பிணைஎடுப்பு பற்றியும் ஆதரவாகக் கூறினார். “நாங்கள் வங்கிகளுக்கு நிதி கொடுத்துள்ளோம்; ஆனால் அதற்காக வட்டி, கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வங்கிகளிடம் இருந்து 3,300 மில்லியன் யூரோக்களைச் சம்பாதித்துள்ளோம். குடிமக்களுடைய பணம், பொதுப் பணம் வங்கிகளுக்குச் செல்லவில்லை

உண்மையில், சப்பாதேரோ ஐரோப்பாவிலேயே மிகவும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைத் திட்டத்தைத்தான் சுமத்தியுள்ளார். 15 பில்லியன் யூரோக்கள் செலவுக் குறைப்புப் பொதிகளாக உள்ளன. இதில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 15 சதவிகிதக் குறைப்புக்கள், ஓய்வூதியம் பெறும் வயதுத்தகுதி 65ல் இருந்து 67 ஆக உயர்த்தப்படல் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் எஞ்சியிருப்பதைத் தவிர்க்கும் புதிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்விப்பிரிவில் வெட்டுக்கள் வட்டார அரசாங்கங்களால் சுமத்தப்பட்டுள்ளது இவற்றைத் தவிர ஆகும். கட்டலோனியா போன்ற இடங்களில் வெட்டுக்கள் கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 10% ஐப் பிரதிபலிக்கின்றன.

இதற்கிடையில் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 20%க்கும் அதிகமாக உள்ளது; 25 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களுக்கு இது 45% ஆகும்.

சமீபத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது செல்வாக்கைப் பெறுவதற்கு PSOE முயல்கிறது, ஆனால் அதில் வெற்றி பெறவில்லை. மாட்ரிட்டின் வட்டார அரசாங்கத் தேர்தல்களில் PSOE வின் வேட்பாளரான தோமஸ் கோமஸ்  அமைப்பாளர்களில் ஒருவருடன் தொடர்பு கொண்டு முக்கிய சதுக்கத்தில் தனக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதைக் கண்டறிய முற்பட்டார். அவர் வரவுள்ளார் என்பதை ஒலிபெருக்கியின் அமைப்பாளர்கள் கூறியபோது ஏளன ஒலிகள் பெரிதாக எழுந்தன.

வலதுசாரி செய்தி ஊடகத்தின் ஆதரவைக் கொண்ட மக்கள் கட்சிசட்டவிரோதஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. PP யின் பொதுச்செயலாளர் Maria Dolores de Cospedal,  “ஸ்பெயின் மக்களுக்கு பிரதிபலிப்பு தினம் உத்தரவாதம் அளித்துள்ளபடி இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் உரிமை கொண்டவர்கள்என்றார்.

மாட்ரிட் வட்டார அரசாங்கத்தின் தலைவரான Esperanza Aguirre ஒரு படி மேலே சென்று ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னணியில் PSOE தான் உள்ளது என்றார். மார்ச் 2004 ல் மாட்ரிட் மீதான குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மக்கள் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த தன்னியல்பான இயக்கத்தைப் போல்தான் இதுவும் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தீர்மானம் இயற்றப்பட்டபின்னும் ஆயிரக்கணக்கானவர்கள் சதுக்கத்தில் குழுமினர்; “மக்கள் குரல் ஒன்றும் சட்டவிரோதம் அல்ல”, “நெருக்கடிக்கு நாங்கள் விலைகொடுக்க மாட்டோம்”, “தேர்தல்களுடன் இது முடிந்துவிடாது”, “இடது எங்கே உள்ளது? அடிப்படையில் வலதுபக்கம்தான் உள்ளதுஎன்ற கோஷங்களையும் எழுப்பினர்.

ஒற்றுமையுணர்வை வலியுறுத்தும் பேரணிகள் ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் ஸ்பெயின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டன. இவற்றுள் மிகப் பெரியவை பிரான்சில் பாரிஸ், இத்தாலியில் ரோம் மற்ற நகர்கள், ஆர்ஜென்டீனாவில் புவனர்ஸ் அயர்ஸில் உள்ள Plaza del Mayo ஆகியவற்றில் நடைபெற்றன.