WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஸ்பெயின்
ஆளும் சோசலிஸ்ட் கட்சி
தேர்தல் தோல்வியைத் தழுவுகையில் ஸ்பெயினில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
By Paul
Mitchell
23 May 2011
Use
this version to print | Send
feedback
மாட்ரிட்டின்
Puerta del Sol
மற்றும் ஸ்பெயினில் கணக்கிலடங்கா பல பெருநகரங்கள்,
சிறு நகரங்களிலுள்ள
மையங்கிலும் அரசாங்கத் தடை இருந்தபோதிலும்கூட,
பல்லாயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.
ஞாயிறன்று
ஸ்பெயினில் நடைபெற்ற வட்டார,
நகரசபை தேர்தல்கள்
ஜோஸே லூயி சப்பாதேரோவின் ஸ்பெயின் சோசலிச தொழிலாளர் கட்சி
(PSOE)
அரசாங்கத்திற்கு பெரும் தோல்வியைக் கொடுத்தன.
PSOE
இன் தோல்விக்கான முக்கிய
காரணம்,
இத் பொருளாதார
நெருக்கடியுடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தால் சுமத்தப்பட்ட பாரிய சமூகவெட்டு
நடவடிக்கைகளாகும்.
ஆரம்ப தேர்தல்
முடிவுகள் அக்கட்சி
28 % வாக்குகளுக்கு
குறைவாகவே பெற்றுள்ளதை காட்டுகின்றன.
PSOE
உடைய ஆதரவுச் சரிவில்
பெரும் ஆதாயம் பெற்றது அதன் முக்கிய போட்டிக் கட்சியான வலதுசாரி
Popular Party (PP)
ஆகும்.
இது
38% வாக்குகளைப்
பெற்றது.
தொழிலாள வர்க்கத்தின்மீதான
தாக்குதலுக்கு PP
யும் ஆதரவைக்
கொடுக்கிறது.
நாட்டின் இரண்டாம்
பெரிய நகரமான பார்ஸிலோனாவிலும்
PSOE தன்
கட்டுப்பாட்டை 30
ஆண்டுகளில் முதல்
தடவையாக இழந்துள்ளது.
அங்கு கட்டலான்
தேசிவாதிகள் அடங்கிய ஒரு கூட்டணி அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
“இந்த
முடிவுகள் இன்றையத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி தெளிவாகத் தோற்றுவிட்டதைக்
காட்டுகின்றன”
என்று ஞாயிறன்று
சப்பாதேரோ கூறினார்.
ஏதோ
PSOE அரசாங்கத்தின்
கொள்கைகள் ஸ்பெயினின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொண்டுள்ள பேரழிவு தரும்
நிலைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாதது போல் தோல்விக்கு அவர் பொருளாதார
நெருக்கடியைக் குறைகூறினார்.
.
சமூக
இணையங்களும்,
இணைய தளக்
குழுக்களும் முதலில் அவை அழைக்கப்பட்ட தேதியை ஒட்டி
M-15 இயக்கம் என்று
அழைக்கப்பட்டதினால் தேர்தல்கள் மங்கிப் போயின.
இயக்கம் பெரும்
விடையிறுப்பை இளந்தொழிலாளர்கள்,
மாணவர்கள்,
வேலையின்மையில்
வாடுபவர் மற்றும் ஸ்பெயினின் தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடம் இருந்து
கொண்டது.
அமைப்பாளர்கள் தேர்தலை
தொடர்ந்தும் எதிர்ப்புக்களை தாங்கள் தொடர்வதாகக் குறிப்புக் காட்டியுள்ளனர்.
பல தேர்தல்
குழுக்கள் மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தால் நேற்றைய தேர்தலுக்கு முன்பு
எதிர்ப்புக்கள் தடைக்கு உட்பட்டிருந்தன.
“பிரதிபலிப்பு தினம்”
என்று
குறிக்கப்படும் தேர்தல் தினத்திற்கு முந்தைய
24 மணி நேரத்தில்
கட்சி அரசியல் நடவடிக்கை ஏதும் கூடாது என்று ஸ்பெயினின் சட்டம் தடைக்கு
உட்படுத்தியுள்ளது.
இது
M-15 இயக்க
எதிர்ப்புக்களை உட்படுத்தவில்லை.
ஆனால் தடைக்கு ஒரு
போலிக்காரணமாக இருந்தது.
இதுவரை
PSOE அரசாங்கம்
தடையைச் செயல்படுத்த பொலிசை அனுப்பவதில் ஈடுபடவில்லை.
ஆனால் பொலிஸ்
மிரட்டல் மற்றும் வன்முறை பற்றித் தகவல்கள் வந்துள்ளன.
தேர்தலுக்குப் பின்னும் தொடர இருக்கும் என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ள
“சட்டவிரோத”
முகாம்களை
அகற்றுவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்த்தரப்பு வலதுசாரி மக்கள் கட்சி
(PP) கோரியுள்ளது.
பெரும்பாலான
ஆர்ப்பாட்டக்காரர்கள்
“நெருக்கடியினால்
குறிப்பாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களை
“los indignados-சீற்றமுற்றவர்கள்”
என்று
குறிப்பிடப்படுகின்றனர்.
ஸ்பெயினில்
18 முதல்
25 வயதிற்குள்
இருப்பவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வேலையற்றுள்ளனர்.
இது ஐரோப்பிய
ஒன்றியச் சராசரியை விட இரு மடங்கு ஆகும்.
இவர்களில்
பெரும்பாலானவர்கள் தற்காலிக ஒப்பந்தங்கள் மூலம் வார இறுதி வேலைகளைத்தான் பெற
முடிகிறது.
ஆனால்
குடும்பங்கள் மற்றும் மூத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகிய முறையில்
மாட்ரிட்டிலும் பார்ஸிலோனா,
வலென்சியாவிலும்,
செவில்,
சரகோசா,
பில்பாவோ ஆகிய
நகரங்களிலும் வேலையின்மை,
அரசாங்க சிக்கன
நடவடிக்கைகள் மற்றும் வங்கிகள்,
பெருவணிகம்
ஆகியவற்றிற்கு மட்டுமே பணிபுரியும் அரசியல் முறை ஆகியவற்றை எதிர்த்து
ஆக்கிரமிப்புக்களில் சேர்ந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றோர் ஸ்பெயினின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள்
மீதும் தாங்கள் விரோதப் போக்கு உடையவர்கள் என்று கூறியுள்ளனர்.
வார இறுதியில்,
அவர்கள் ஸ்பெயினின்
இரு முக்கிய கட்சிகளான
PSOE, PP
இரண்டிற்குமே வாக்களிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினர்.
Puerta
del Sol
ஒரு பெரிய பேரவைபோல்
விளங்குகிறது;
தேர்தலுக்குப் பின்
என்ன செய்வது என்பது பற்றிய பல விவாதங்கள் நடைபெறுகின்றன.
சிலர் ஆக்கிரமிப்பு
நிரந்தரமாக இருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்;
இயக்கம் மாட்ரிட்
முழுவதும் மக்கள் பேரவைகளைத் தோற்றுவித்து பரந்தமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும்
என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
உணவு வழங்குதல்,
சட்ட விவகாரங்கள்
மற்றும் தொடர்புகளைக் கவனிப்பதற்கு சில குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன.
Puerta
del Sol
பேரவை
16 கோரிக்கைகள்
அடங்கிய பட்டியல் ஒன்றை ஏற்றுள்ளது.
இதில் தேர்தல் முறை
ஜனநாயகப்படுத்தப்படல்,
வீடுகள்,
சுகாதாரப்
பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் பிரகடனப்படுத்தப்படுதல்,
வங்கிகள் மற்றும்
வணிகங்கள்மீது கூடுதலான அரசாங்கக் கட்டுப்பாடு,
இராணுவச் செலவுகள்
குறைக்கப்படுதல்,
தனியார்மயமாக்கப்பட்ட பொது நிறுவனங்கள் மீண்டும் தேசியமயமாக்கப்படல் ஆகியவை
அடங்கியுள்ளன.
அலெஜாண்ரோ
என்னும் எதிர்ப்பாளர்
BBC இடம்,
“இது நம் நிலையை
மாற்றும் என நம்புகிறேன்.
முறையான வேலைகள்,
வருங்காலம்,
ஒரு கௌரவமான ஊதியம்,
வாழ்வில் கூடுதலான
வாய்ப்புக்கள்,
வீடு அடையும்
வாய்ப்பு,
அடிமை போல் இல்லாமல்
வீட்டைப் பராமரித்தல்,
இன்னும் குறிப்பாக
நல்ல வாழ்க்கத் தரம் பெறுதல் ஆகியவற்றைப் பெற எங்களுக்கு உரிமை உண்டு.”
என்றார்.
கார்லோ
கோமஸ் கூறினார்:
“ஸ்பெயினில் உள்ள
இரு பெரும் கட்சிகளில் ஒன்றிற்கு வாக்குப் போடுவதைத் தவிர எங்களுக்கு வேறு
விருப்புரிமை இல்லை.
இவற்றின் கொள்கைகள்
அநேகமாக ஒன்றாகத்தான் உள்ளன.
எந்தப்
பிரச்சினையையும் அவை தீர்க்க முடிவதில்லை.
இது ஒரு ஊழலின் கூடு
போல் உள்ளது.
எங்களுக்கு சோர்வு
ஏற்பட்டுவிட்டது.
சுருங்கக் கூறின்,
செயல்படும் ஒரு
ஜனநாயகத்தை நாங்கள் விரும்புகிறோம்.
ஒரு மாறுதலை
விரும்புகிறோம்.”
மிலேனா
அல்மாக்ரோ கார்ஸியா,
“இந்த
எதிர்ப்புக்கள் வேலையின்மையை பொறுத்து மட்டும் இல்லை.
ஸ்பெயினில் நிலவும்
நியாயமற்ற அரசியல் நிலைமை பற்றியும் இது கருத்தில் கொண்டுள்ளது.
அடுத்த தேர்தல்களில்
நாடு முழுவதும் ஊழல் குற்றச்சாட்டிற்குட்பட்டவர்களில்
100 பேருக்கும்
மேலாக வேட்பாளராக அனுமதிக்கும் அரசியல் நிலைமைக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம்
செய்கிறோம்”
என்று கூறினார்.
ஆர்ப்பாட்டங்களும் தேர்தல் முடிவுகளும் பெரும்பாலான மக்களுடைய நலன்கள்,
உணர்வுகள்
ஆகியவற்றிற்கும் ஸ்பெயினிலும் ஐரோப்பா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு
கொடுக்கும் நிதிய உயரடுக்கு ஆணையிடும் கொள்கைகளுக்கும் இடையே உள்ள பெரும் பிளவை
அம்பலப்படுத்தியுள்ளன.
ஆர்ப்பாட்டங்களுக்குப் பின் உள்ள ஒழுங்கமைக்கும் சக்திகள் அரசியல்சார்பற்றவை என்று
கூறினாலும்,
அவற்றிற்கும் ஒரு
அரசியல் முன்னோக்கு உள்ளது.
அதாவது,
வெகுஜன
ஆர்ப்பாட்டங்களே அரசியல் முறையை மாற்ற முடியும் என்பதுதான் அது.
இது தவறு ஆகும்.
ஐரோப்பிய கடன்
நெருக்கடி ஒரு புதிய கட்டத்தை நெருங்குகையில்,
ஆளும் வர்க்கம்
இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த உறுதி கொண்டுள்ளது.
அவை பெருகிய
முறையில் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள் தகர்க்கப்படுதலை ஏற்படுத்தும்.
PSOE
அரசாங்கம் ஏற்கவே ஐரோப்பா
முழுவதிலும் இல்லாத மிகக் கடுமையான மிருகறத்தனத் திட்டங்களைச் சுமத்தியுள்ளது.
இதில் சமூகநலச்
செலவு திட்டங்களில்
15 பில்லியன் யூரோ
பொதி வெட்டு அடங்கும்.
அரசாங்க ஊழியர்களின்
ஊதியங்களில் 5
முதல்
15 சதவிகிதம் வரை
குறைப்புக்கள்,
ஓய்வூதியங்கள் மீதான
தாக்குதல்கள்,
தொழிலாளர்
பாதுகாப்புச் சட்டங்களில் சீர்திருத்தம் ஆகியவை இதில் அடங்கும்.
இன்னும்
ஆழ்ந்த வெட்டுக்களைக் கட்டாயப்படுத்தும் ஒரு பகுதியாக,
நிதியச் சந்தைகள்
ஸ்பெயினின் வட்டி விகிதங்களை ஜனவரி மாதத்திற்குப்பின் மிக அதிக தரத்திற்கு
உயர்த்தியுள்ளன.
பொதுச் செலவுகளில்
மூன்றில் ஒரு பங்கிற்கு பொறுப்பான வட்டார அரசாங்கங்கள் சுகாதாரப் பாதுகாப்பு,
கல்வி இன்னும் பிற
அடிப்படை பொதுப் பணிகளில் வெட்டுக்களை செயல்படுத்தியுள்ளன.
இந்த வாரம் புதிதாக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வட்டார அரசாங்கங்கள் முன்பு வெளியிட்டதைவிட அதிகமான கடன்
அளவுகளை வெளிப்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.
இவை இன்னும்
சிக்கனம் என்பதற்கான அழுத்தங்களைத்தான் அதிகரிக்கும்.
இந்து
உந்துதலை எதிர்ப்பதற்கு,
தொழிலாள வர்க்கம்
அதன் சொந்த போராட்ட அமைப்புக்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கடந்த வார
எதிர்ப்புக்களில் குறிப்பிடத்தக்க வகையில் கலந்துகொள்ளாதவை உத்தியோகபூர்வ
தொழிற்சங்கங்கள் ஆகும்.
இவை
PSOE உடன்
நெருக்கமாக உழைத்து கடந்த ஆண்டு வெடித்த வெகுஜன எதிர்ப்பைக் கலைத்து வெட்டுக்களை
சுமத்த உதவின.
பொருளாதார
கூட்டுழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு
(OECD) கொடுத்துள்ள
தகவல்கள்படி இத்தொழிற்சங்கங்கள் மொத்தத் தொழிலாளர் தொகுப்பில்
14
சதவிகிதத்தைக்கூடப் பிரதிபலிக்கவில்லை.
ஒரு
போராட்டத்தை முன்னெடுக்க சுயாதீன தொழிலாளர் குழுக்களை கட்டமைத்து தொழிலாள
வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் வேலையற்ற இளைஞர்களுடன் ஐக்கியப்படுத்த
தொழிலாளர்கள் முயல வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக சமரசத்திற்கு இடமில்லாத,
புரட்சிகர,
சர்வதேச
முன்னோக்கின் அடிப்ப்டையில் ஒரு புதிய அரசியல் கட்சி கட்டமைக்கப்பட வேண்டும்.
இது ஒன்றும் வெறும்
ஆர்ப்பாட்டம் பற்றிய பிரச்சினை அல்ல.
ஸ்பெயின்,
ஐரோப்பா முழுவதும்,
மற்றும் சர்வதேச
அளவில் பொருளாதாரத்தை சோசலிச மாற்றத்திற்கு உட்படுத்துவதற்குப் போராட வேண்டிய ஒரு
புதிய தலைமைக் கட்டமைக்கும் பிரச்சினை ஆகும். |