சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The serious questions raised by the Dominique Strauss-Kahn affair

டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் விவகாரம் எழுப்பும் முக்கிய வினாக்கள்

David North and David Walsh
19 May 2011

Use this version to print | Send feedback

பிரெஞ்சு நிதியியலாளரும் அரசியல்வாதியுமான டொமினிக் ஸ்ட்ராஸ்கான் நியூயோர்க்கில் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டிருப்பதும், அவர் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டிருப்பதும் நீண்டகால தாக்கங்களை கொண்ட ஒரு பிரச்சனைக்குரிய நிகழ்வு ஆகும்.

ஸ்ட்ராஸ்கான் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் ஆவார். இது உலக முதலாளித்துவ நிதிய அமைப்பில் பெரும் சக்தி வாய்ந்த நிறுவனம் ஆகும்; அவர் அந்நாட்டின் முக்கிய பெருவணிகக் கட்சியான பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியில் முக்கியமான நபராவார். 2012 ஜனாதிபதி வேட்பாளாராக தன்னை அறிவித்துக் கொள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது; பிரான்சில் நடைபெறும் கருத்துக் கணிப்புக்கள் அவர் தன் போட்டியாளர்களான ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் தீவிர வலதுசாரித் தலைவர் தேசிய முன்னணியின் Martine Le Pen ஆகியோரைவிட முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

வர்க்க நிலைப்பாடு, சிறப்புரிமை மற்றும் சமூகப்பார்வை ஆகியவற்றில் ஸ்ட்ராஸ்-கான் உலக சோசலிச வலைத் தளம் எதிர்க்கும் அனைத்தின் உருவகமாக உள்ளார். ஆனால் அவரும் ஒரு மனிதர்தான், ஜனநாயக உரிமைகளை உடையவர். அதில் சட்டபூர்வ விசாரணை, நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்பட வேண்டும் என்ற கருத்து ஆகியவை உள்ளன. அவருடைய கைது மற்றும் இந்நிகழ்வு பற்றி அமெரிக்க செய்தி ஊடகத்தில் வரும் தகவல்களில் இருந்து இந்த முன்கருத்து நடைமுறையில் இல்லையோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம்சாட்டுபவர் ஆகியோரைத் தவிர (அத்துடன் ஒருவேளை வேறு நலன்களுடைய பெயரிடப்படாத தரப்பினர் இருக்கலாம்) நாமோ அல்லது வேறெவெருமோ ஞாயிறன்று மன்ஹாட்டனில் சொபிடெல் ஓட்டலில் ஸ்ட்ராஸ்-கானின் சிறப்பு அறையில் என்ன நடந்தது என்பதை சரியாக அறியோம். பொதுமக்களுக்குக் கிடைக்கும் தகவல் அனைத்தும் நியூயோர்க் நகர பொலிஸ்துறை, பாதிக்கப்பட்டுள்ளவரின் வக்கீல் கூறும் கருத்துக்கள் மற்றும் செய்தி ஊடகம் ஆகியவற்றில் இருந்துதான் வெளிப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஆதாரம் உடையவை எனக் கூறுவதற்கில்லை.

இதுகாறும் எவரும் திரு.ஸ்ட்ராஸ்-கான் இது பற்றி என்ன கூறுகிறார் என்பதைக் கேட்கவில்லை. மாறாக அவர், திட்டமிட்ட அவமானப்படுத்தப்படல், மனிதத் தன்மையற்றவராக சித்திரக்கப்படுதல் என்பதற்குத்தான் உட்படுத்தப்பட்டுள்ளார்; “கைகளில் விலங்குபூட்டப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்படுதல்போன்ற இழிந்தவற்றைக் காட்டுதல். இதன் வெளிப்படையான நோக்கம் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என நீதிமன்றம் கூறுவதற்கு முன்பே பொதுமக்கள் மனதில் குற்றம் சாட்டப்படுபவரை குற்றவாளியாக்குவதாகும்.

கற்பழித்தல் என்பது மிக இழிந்த குற்றம் ஆகும்; இக்குற்றம் செய்தவர் எவராயினும் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் உண்மையில் மறுக்கமுடியாத, பாலியல் தவறு என்ற குற்றம் அயராமல் அமெரிக்காவில் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் இலக்கு வைக்கப்பட்டுள்ள தனிபர்களை அழித்துவிட பயன்படுத்தப்படுகிறது என்பது வெட்கரமானதானதும் மறுக்கமுடியாதுமான விடயமாக உள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே வழக்கும் உடனே நினைவிற்கு வருகின்றது.

கற்பழித்தல் மற்றும் வேறுவடிவிலான பிற குறைந்த பாலியல் தவறு என்ற குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களுக்காக  பயன்படுத்தப்படுகின்றன என்பது ஸ்ட்ராஸ்-கான் ஒரு சதியினால் பாதிக்கப்பட்டவர் என்று அர்த்தப்படாது. ஆனால் மிகுந்த கவனமான விசாரணைக்கு முன்னால், அவர் எடுக்கும் முடிவுகள் தொலைதூர அரசியல், நிதிய விளைவுகளைக் கொண்ட ஸ்ட்ராஸ்-கான் ஒரு பொறியில் நன்கு வீழ்ந்துவிட்டார் என்பதை உதறித்தள்ளுவதற்கு எதையும் எளிதில் நம்பும் தன்மையை ஒருவர் கொண்டிருக்க வேண்டும்.

எவருக்கு இலாபம் (Cui Prodest?) என்னும் பழைய வினாதான், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரை அகற்றுதல், ஒருவேளை வருங்கால பிரெஞ்சு ஜனாதிபதியாக வரக்கூடியவரின் அரசியல் வாழ்வைத் தகர்த்தல் என்பவை ஏற்படக்கூடிய வழக்கில் இறுதி விளைவு என்பதுதான் உடனடியான விளைவாக இவ்விசாரணையில் இருந்து எழக்கூடும். திரு.ஸ்ட்ராஸ்-கான் ஒரு அமெரிக்கச் சிறைக்கு அனுப்பப்படுவதால் எவருக்கு ஆதாயம் கிடைக்கும்? உறுதியாக இத்தகைய வினாவைத்தான் The Count of Monte Cristo என்னும் புத்தகத்தை எழுதிய பெரும் பிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்சாந்தர் டுமா எழுப்பியிருப்பார்.

ஆனால் நியூயோர்க் டைம்ஸின் ஆசிரியர்களிடையே அத்தகைய ஆர்வம் காணப்படவில்லை. மாறாக, சாக்கடைச் செய்தி அளித்தல் என்பதற்குக் காட்டும் மற்றொரு உதாரணத்தில், நேற்று இச்செய்தித்தாள் Maureen Dowd, Stephen Clarke, Jim Dwyer ஆகியோர் எழுதிய மூன்று கட்டுரைகளை வெளியிட்டது. இவை ஸ்ட்ராஸ்-கான் அவமானப்பட்டதில் களிப்படைபவர்கள், கற்பழித்தல் குற்றச்சாட்டை அதில் உள்ள உண்மை பற்றி வினாவிற்கு இடமில்லை என்பது போல் கருதுபவர்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தன் வாசகர்களை தூண்டும் வகையில் எழுதியுள்ளனர். இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் முறையான சட்ட வழிவகை பற்றிய வாசகர்களின் அறியாமை மற்றும் மட்டமான உணர்வுகள் ஆகியவற்றிற்கு அழைப்புவிடுபவையாக இருக்கின்றன. இக்கட்டுரைகளின் இழிந்த தன்மை திரு.கிளார்க் தன் கட்டுரைக்கு எழுதிய ''மிக மோசமான வயதான ஆண்கள்'' என்ற தலைப்பில் வெளிவருகிறது.

இந்த மூன்றில் மிக மட்டமானது Maureen Dowd ஆல் கொடுக்கப்படுகிறது. டைம்ஸில் நீண்டகாலமாக கட்டுரையாளர் என்ற முறையில் அவர் இழிந்த பாலியல் உணர்வுகளை தூண்டியதற்கு கணக்கிலடங்கா உதாரணங்களை கொடுத்துள்ளார் (கிளின்டன்-லெவின்ஸ்கி ஊழல் தொடர்பாக அவர் எழுதியவற்றை வாசகர்கள் கருத்திற்கொள்ளலாம்). இவை அனைத்தும் அவரின் கட்டுப்பாடற்ற அகநிலைவாத கீழ்மட்டமான தன்மையின்  அருவருப்பானதன்மையால் நிரம்பியிருந்தன.

இன்னும் சமீபத்தில் அவருடைய கவனத்தை ஸ்ட்ராஸ்-கான் வழக்கு பற்றித் திருப்புவதற்கு முன் Dowd, ஒசாமா பில் லேடன் சட்டத்திற்குப் புறம்பாகக் கொலை செய்யப்பட்டதைக் களித்து எழுதியிருந்தார் (“நாம் அமெரிக்கர்களாக நம்மை மீண்டும் உணரச் செய்த வெற்றி”). அவருடைய மே 17ம் தேதிக் கட்டுரையில் -“சக்திவாய்ந்த, பழங்காலத்தியதுஎன்பதை Dowd “! அவள் அதை விரும்பினாள். மிக மோசமாக விரும்பினாள். அதைத்தான் ஒவ்வொரு கடினமாக உழைக்கும், தெய்வத்திற்குப் பயப்படும், இளம் விதவையும் டைம்ஸ் சதுக்க ஓட்டலில் தன்னுடைய இளவயது மகளை காப்பாற்றுவதற்கு சிறு தொழில் செய்யும், தன்னுடைய குடியேற்ற அந்தஸ்தை நியாயப்படுத்தவும், அமெரிக்கா அளிக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்த விழைபவரும் விரும்புவர்-ஒரு வெறித்தன, பழகிய பாதையில் சுருக்கம் விழுந்த வயதான கொடூரன் குளியறையில் இருந்து நிர்வாணமாக வெளிப்பட்டு அவள் மீது பாய்ந்து, அவளை அறையைச் சுற்றி குகையில் வாழ்ந்த மனிதன் வகையில் இழுத்துச் செல்லுவதை.”

இந்த இழிந்த பத்தி எந்தச் சான்றை தளமாகக் கொண்டுள்ளது? Dowd இடம் உள்ள தகவல் என்ன? குற்றம் சாட்டப்பட்டவரை அவர் பேட்டியாவது கண்டிருக்கிறாரா? பொலிசிடம் குற்றவாளி எனக்கருதப்படுபவர் என்ன கூறினார் என்பதையாவது Dowd அறிவாரா? டைம்ஸ் கட்டுரையாளரைப் பொறுத்தவரை, குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதப்பட வேண்டும் என்ற கருத்து நினைப்பிலேயே இல்லை. மாறாக ஸ்ட்ராஸ்-கான் நிரபராதி என்ற கருத்தைக் கூறினால் சீற்றம் அடைகிறார்; இன்னும் மோசமாக எவரேனும் அவரைப் பொறியில் மாட்டியிருப்பர் என்ற கருத்தினால் பெரும் சீற்றம் அடைகிறார். Dowd எழுதியுள்ள பாலியல் தவறு பற்றி குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும் இருப்பது போலவே குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் இழைத்துள்ளார் என்ற கருத்துதான் நடைமுறை முன்கருத்தாக ஏற்கப்பட்டிருக்கிறது.

Dowd தொடர்கிறார்: “ஸ்ட்ராஸ்-கானின் பிரெஞ்சு ஆதரவாளர்கள் கிறுக்குத்தனமாக சதித்திட்ட கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். இவை பாக்கிஸ்தானியர்கள் ஒபாமாவைப் பற்றிக் கூறுவது போல் உள்ளது. சிலர் சார்க்கோசியின் சக்திகள் ஏற்பாடு செய்திருந்த தேன் அடையில் விழுந்து பாதிக்கப்பட்டவர் என்று கூறுகின்றனர். ஸ்ட்ராஸ்-கானுக்குச் சக்தி வாய்ந்த விரோதிகள் உள்ளனர், அவரைப் பொறியில் அகப்பட்டுக் கொள்ளுமாறு செய்ய முடியும், குறைந்தபட்சம் இந்த விவாகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்ரீதியாக அவரை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட முடியும் என்று நினைப்பது பைத்தியக்கராத்தனமா? அந்த சாத்தியப்பாட்டை விலக்கிவைப்பது என்பது அரசியல்ரீதியாக அபத்தமானது மட்டுமல்ல, திறைமையுடன் அது விசாரணையின் முக்கிய பகுதியை மூடிவிடுகிறது. அவரைப் பொறியில் தள்ளுவதற்கு எவரேனும் ஆர்வம் காட்டுவர், திறன் உடையவர் உள்ளனரா என்று விசாரணையாளர்கள் ஸ்ட்ராஸ்-கானைக் கேட்க மாட்டார்கள் என்று எவரேனும் நம்ப முடியுமா? அல்லது அவர்மீது குற்றம்சாட்டுபவரின் தொடர்புகளை பற்றி விசாரணையாளர்கள் கவனிக்க மாட்டார்களா? தற்போதைய அவதூறை எந்த அளவிற்கு சக்தி வாய்ந்த கூறுபாடுகள் பயன்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்ள புதன்கிழமை வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின்சிறையிடப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதிய தலைவர் மீது அழுத்தங்கள் அதிகரிக்கின்றன'' என்ற தலைப்பில் வந்துள்ள முதல் பக்கக் கட்டுரையைப் படித்தால் போதும். இக்கட்டுரை ஒபாமா நிர்வாகம்சர்வதேச நாணய நிதியம் டொமினிக் ஸ்ட்ராஸ் கானை அதன் தலைவர் என்ப்திலிருந்து மாற்றுவதற்கு வலுவான அடையாளம் காட்டியுள்ளது; அவருடைய பணியில் அவர் இனி திறமையுடன் செயற்படமுடியாதுஎன்று கூறுகிறது. ஸ்ட்ராஸ்-கானின் கைது அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு அரசியல் வாய்ப்பாகக் காணப்படுகிறது என்பது தெளிவு.

இந்த வழக்கு பற்றிய தன்னுடைய முதல் பகிரங்கக் கருத்துக்களில் அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர், “சர்வதேச நாணய நிதியத்தில் இரண்டாம் உயர் அதிகாரியான அமெரிக்கர் John Lipsky யை நிர்வாகக் குழு இன்னும் முறையாக அங்கீகரிக்க வேண்டும்; இவர் திரு. ஸ்ட்ராஸ்-கான் கைதுசெய்யப்பட்டதில் இருந்து இந்நிலையில் இடைக்காலத்திற்கு பதவியில் தொடர்வார்என்று கூறியுள்ளார்.

ஸ்ட்ராஸ்-கானுக்குப் பதிலாக மற்றொருவர் வருவது என்பதில் முக்கிய கொள்கை பற்றிய தாக்கங்கள் இருக்கும் என்பது தெரிந்ததுதான். ஏற்கனவே ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தொடர்ந்து பதவிக்கு வர இருப்பவர் பற்றி கசப்பான பூசல் உள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் கருத்துப்படி ஐரோப்பியர்கள் சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவியைத் தொடர்ந்து வகிக்க விரும்புகின்றனர். “ஆனால் அமெரிக்கா அமைப்பில் ஒற்றை மிகப் பெரிய பங்குதாரர் என்னும் முறையில் இதன் விளைவு பற்று முடிவெடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்.”

Maureen Dowd, ஸ்ட்ராஸ்-கானுக்குப் பதிலாக வேரு ஒருவர் நியமிக்கப்பவதில் உள்ள முக்கிய நலன்களைப் பற்றிக் குறிப்பாக தெரிவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் நியூ யோர் டைம்ஸில்  மேலிடத்தில் உள்ளவர்கள் ஒன்றும் கள்ளம் கபடம் அற்றவர்கள் அல்லர். செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியர் Bill Keller அமெரிக்க அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்துதான் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிய தகவலை அளிக்கிறார் என்பது நிறுவப்பட்ட உண்மை ஆகும். இந்த வழக்கை பொறுத்தவரை, Dowd மற்றும் பிறரின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் தன்மை உடைய கட்டுரைகள் ஸ்ட்ராஸ் கான் இராஜிநாமா செய்யவேண்டும் என்று உள்ள அழுத்தத்திற்கு கணிசமான பங்களி்க்கின்றன.

ஸ்ட்ராஸ்-கான் கைது செய்யப்பட்டது மற்றும் அமெரிக்கச் சட்டத்தை செயல்படுத்தும் பிரிவு அவரை செய்தித்தாள் புகைப்படக்காரர்களுக்கு முன்பு கைவிலங்கு இட்டு அழைத்துச் சென்றது பற்றி பிரான்சில் உத்தியோகபூர்வ பொதுமக்கள் கருத்து உளைச்சல் கொண்டுள்ளது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த அதிர்ச்சி அமெரிக்காவில் சமீபத்திய தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் பற்றி எந்தளவிற்கு ஐரோப்பியர்கள் குறைவாக அறிந்துள்ளனர் என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

வலதுசாரிச் செய்தியாளரும் மெய்யியலாளருமான Bernard Henry Lévy ஸ்ட்ராஸ்-கான் அயோக்கியத்தனமாக நடத்தப்பட்டது பற்றிய சட்டபூர்வத்தன்மை பற்றி புகார் கூறுகிறார்; அவர் மீது தாக்குதல் நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளார்என்று கூறும் அவர், “இந்த கைவிலங்கு இடப்பட்ட மனிதர், முகம் 30 மணி நேரக் காவல், வினாவிற்கு உட்படுத்தப்பட்டது ஆகியவற்றால் இறுகிய முகத்தைக் கொண்ட காட்சியை முழு உலகமும் கண்டுகளிக்க எதுவும் அனுமதிக்கவில்லைஎன்று கூறுகிறார்.

ஆனால் Lévy போன்ற நபர்கள் அமெரிக்காவில் உள்ள சமூக நிலைமைகள் பற்றித் தங்கள் கண்களை மூடிக்கொண்டுவிட்டனர்.  அவர்கள்தடையற்ற சந்தைபற்றிய பிரச்சாரத்தில் அந்த அளவிற்கு மயங்கியுள்ளனர். 2.2 மில்லியனுக்கும் மேலான மக்கள் ஸ்ட்ராஸ் கான் போலவே அவர்களில் பெரும்பாலானவர்கள் கொடூரமாக நடத்தப்பட்டனர். இப்பொழுது அமெரிக்கா என்று அழைக்கப்படும் தீயகனாவில் மனித உரிமைகள் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றிக் கவனிக்க அக்கறை காட்டவில்லை.

அமெரிக்கநீதித்துறையின்தீய, பழிவாங்கும் தன்மை, சில புகழ்பெற்ற நபர்கள் அதன் பிடிகளில் சிக்கும்போதுதான் வெளிச்சத்திற்கு வருகிறது என்பதுதான் இதில் வருந்தத் தக்க உண்மையாகும்.

Dowd மற்றும் அவரைப் போன்ற மற்றவர்களும் ஏழைகள், நலிந்தவர்களைக் காப்பவர்கள் என்று காட்டிக் கொள்வது முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். அமெரிக்கர்கள்ஸ்ட்ராஸ் கான் வழக்கில் செல்வம், வகுப்பு, சலுகை ஆகியவை பொருட்படுத்தப்படாமல் நீதி வழங்கப்படும்என்பதில் பெருமையடையலாம் என்று கட்டுரையாளர் கூறுகிறார். மேலும், “ஒரு பணிப்பெண், உலகிலேயே சக்தி வாய்ந்த நபர்களுள் ஒருவர் மீது அவர் நெறியற்றவர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும்போது கௌரவத்துடன் நடத்தப்படுகிறார், கேட்கப்படுகிறார் என்பது அமெரிக்கா பற்றிய ஊக்கம் தரும் ஒரு நிகழ்வாகும்என்று அவர் எழுதியுள்ளார்.

என்ன அபத்தம்! அன்றாட வாழ்வில் பணிப்பெண்களும் பிறஉதவிப்பணியார்களும்'' Dowd ஒரு பகுதியாகவுள்ள உயர்மட்ட மத்தியதர வர்க்கத்தினரின் கண்களில் தெரிவதில்லை.

Lévy போன்ற நபர்கள் கவலையை எழுப்பியுள்ளனர்; ஆனால் பிரெஞ்சு ஆளும்தட்டு கோழைத்தனத்துடன் இதை எதிர்கொண்டுள்ளது; அல்லது நிக்கோலோ சார்க்கோசியைப் பொறுத்தவரை ஒரு சாத்தியமான போட்டியாளர் அகற்றப்பட்டுவிட்டார் என்று காணப்படுகிறது. இது குறுகியகால அரசியல் கணிப்பீட்டை அடித்தளமாகக் கொண்டது.

பிரான்சிலும் ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா ஒரு குற்றவியல் அமைப்பாக நடந்து கொள்ளும் முறையைப் பொறுத்தவரை, ஓர் அச்ச உணர்வு மற்றும் மிரளுதல் என்ற உண்மையான கூறுபாடு சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. வாஷிங்டன், CIA கொலைகாரர் Raymond Davis மார்ச் மாதம் ஒரு பாக்கிஸ்தானிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி அதை அடையவும் செய்தது. ஒரு அமெரிக்க முக்கிய அரசியல் நபர் ஸ்ட்ராஸ்கான் நியூயோர்க்கில் எந்த விலக்கீட்டுரிமையும் இல்லாமல் நடத்தப்பட்டதுபோல் பாரிஸில் நடத்தப்பட்டிருப்பார் என்று எவரேனும் கற்பனைகூடச் செய்ய முடியுமா?

ஸ்ட்ராஸ் கான் விவகாரம் சில முக்கிய வினாக்களை எழுப்பியுள்ளது. உலக சோசலிச வலைத் தளம் நிரபராதி என தீர்ப்புக் கூறப்படும் வரை கொள்ள வேண்டிய இயல்புநிலை மற்றும் பிற அடிப்படை ஜனநாயக உரிமைகளை வலியுறுத்துகிறது. அவர் ஏன் பிணை எடுப்பில் வெளியே விடுவிக்கப்படக்கூடாது என்பதற்கு நம்பகத்தன்மையான காரணம் ஏதும் இல்லை. அரசியல் இடதுகளில் ஸ்ட்ராஸ்-கானின் விதியைப் பற்றிப் பொருட்படுத்தாதன்மை அல்லது அவருடைய தனிச்சொத்து, அரசியல் பாவங்களுக்கான நியாயமான தண்டனை என்று வரவேற்க வேண்டும்  என்று மூடத்தனமாக நம்புபவர்கள் ஜனநாயக உரிமைகளின் முக்கியத்துவம் பற்றி ஏதும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள். மேலும் சோசலிச நம்பிக்கைகள் ஒன்றும் அற்ப பழிவாங்கும் குணத்தைத் தளமாகக் கொண்டவை அல்ல என்பதை குறிப்பிட்டுக்காட்டுவதும் பிரயோசனமானது.

ஒரு திறமையாக வாதிடும் வக்கீல், மன்னிப்பு உடன்பாடு ஒன்றை ஏற்க வேண்டும் என்ற பாரிய அழுத்தத்தை மதியாத ஒருவர் உண்மையை நன்கு கண்டறியப் பாடுபடுவார் என்று உறுதியாக நம்புவோமாக. அதிகாரிகளைப் பொறுத்தவரை, அவர்கள் அரசியல் இலக்குகளினால் உந்துதல் பெற்றிருந்தால், ஸ்ட்ராஸ்-கானின் அரசியல் நிலைப்பாடு தகர்க்கப்பட்டுவிட்டது என்ற பணி முடிந்துவிட்டதுஎன்பது போல்தான் இருக்கும்.

வழக்கு பற்றி வெளிவந்துள்ள உண்மைகளில் ஒருவர் கவனம் காட்டும்போது, நிச்சயமாக இன்றைய நிலைவரை முழு விவகாரம் பற்றியும்காரணகாரியமான சந்தேகத்திற்குஅப்பால் இதுபற்றி மிகத் தீவிர வினாக்கள் எழுப்பப்படலாம் என்பதற்கு போதுமான காரணம் உள்ளது .