சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Strauss-Kahn resigns as IMF chief, indicted in New York

IMF தலைவர் பதவியை ஸ்ட்ராஸ் இராஜிநாமா செய்கிறார் நியூ யோர்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்

By Patrick Martin 
20 May 2011

Use this version to print | Send feedback

நியூ யோர் நகரத்தில் விரைவாக நடந்த நிகழ்வுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் புதன் பிற்பகுதியில் அவருடைய பதவியை இராஜிநாமா செய்தார். அதன் பின் அவர் ஜூரிகள் அடங்கிய மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் பாலியல் தாக்குதலின் 7 வது விதிகளையொட்டி குற்றச்சாட்டப்பட்டு, வியாழக்கிழமை 1 மில்லியன் டொலர் ரொக்கப் பணத்திற்கு பிணை கொடுக்கப்பட்டார். வெள்ளியன்று ஸ்ட்ராஸ் கான் விடுவிக்கப்பட உள்ளார், அதன் பின் அவர் 24 மணி நேர வீட்டுக் காவலில் இருப்பார்.

மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பான செய்தி ஊடகச் செயல்களுக்கு இடையே இவை நிகழ்ந்தன. கிட்டத்தட்ட 100 நிருபர்கள் நீதிமன்றத்தில் குழுமியிருந்தனர். ஜூரி (நடுவர்கள்) பெட்டிக்கு அருகே கூட நிறைந்தனர். ஒரு நீதிமன்றத்தில் எந்த சான்றும் அளிக்கப்பட்டு சோதிக்கப்படுமுன் எல்லாக் குற்றங்கள் மீதும் அமெரிக்க செய்தி ஊடகம் ஸ்ட்ராஸ் கான் குற்றவாளி என்று அறிவித்துள்ள நிலையில் இதுவும் பொருத்தம்தான் போலும்.

அவருடைய இராஜிநாமாவை அறிவித்து ஒரு சுருக்கமான அறிவிப்பை ஸ்ட்ராஸ் கான் வெளியிட்டார். அதில் பாலியல் தவறுகள், பாலியல் வல்லுறவு முயற்சி ஆகியவை மறுக்கப்பட்டுள்ளன. IMF ல் இருந்து அந்த நிறுவனத்தின் நலனுக்காகத் தான் விலகுவதாகவும், “என் வலிமை, நேரம் மற்றும் என் ஆற்றல் அனைத்தையும் நான் நிரபராதி என நிரூபிக்க விரும்புவதாலும்இவ்வாறு செய்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் அழுத்தத்திற்கு இந்த இராஜிநாமா ஒரு நேரடி விடையிறுப்பு ஆகும். நிதி மந்திரி டிமோதி கீத்னர் செவ்வாயன்று கிட்டத்தட்ட ஸ்ட்ராஸ் கான் அகற்றப்பட வேண்டும் என்று கோரி, “IMF ஐ அவர் நடத்தும் நிலையில் இல்லை என்பது வெளிப்படைஎன்று கூறியிருந்தார்.

ஸ்ட்ராஸ்-கானின் இராஜிநாமா அவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு ஒரு திறமையான நிபந்தனை போல் தோன்றியது. ஞாயிறன்று மன்ஹாட்டன் நீதிபதி ஒருவர் அவருக்குத் துவக்கத்தில் ஜாமீன் (பிணை எடுப்பு) கொடுக்க மறுத்தார். ஏனெனில் அரசாங்க வக்கீல்கள் கருத்துப்படி பிரான்ஸில் ஒரு பல மில்லியன் சொத்துக்களை அவர் கொண்டுள்ளார், மற்றும் அமெரிக்கா அந்நாட்டுடன் கைதிகளைப் பெறுவதில் ஒப்பந்தம் இல்லை என்று கூறப்பட்டது, ஸ்ட்ராஸ்-கான் தப்பி ஓடக்கூடிய இடர் உண்டு என்றும் கூறப்பட்டது.

முந்தைய ஜாமீன் விசாரணையின்போது, தலைமை உதவி மாவட்ட வக்கீல் Daniel Alonso ஸ்ட்ராஸ்-கானை திரைப்பட இயக்குனர் ரோமானிய போலன்ஸ்கியுடன் ஒப்பிட்டார். அவர் 1970 களில் குறைந்த வயதுடைய ஒரு பெண்ணுடன் பாலுறவு கொண்டது பற்றிய சிறைத் தண்டனையை தவிர்ப்பதற்கு தப்பி ஓடிவிட்டார். 2009 கடைசியில் போலன்ஸ்கி ஸ்விட்சர்லாந்தில் காவலில் வைக்கப்பட்டு, பல மாதங்கள் ஒரு அமெரிக்கப் பிடி ஆணையைக் காட்டி ஒரு மூன்று தசாப்த வழக்கில் சிறையில் இருந்தார். இறுதியில் ஸ்விட்சர்லாந்து அதிகாரிகள் அவரை அமெரிக்காவிற்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

IMF ன் நிர்வாக இயக்குனர் ரிக்கேர்ஸ் தீவு சிறையில் தனி அறையில் மூன்று இரவுகள் அடைத்து வைக்கப்பட்டார். ஆனால் இராஜிநாமா செய்த சில மணி நேரத்திற்குள் ஜாமீன் கொடுக்கப்பட்டது. நியூ யோர்க்கின் அரசாங்கத் தலைமை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் ஒபஸ் 1 மில்லியன் டொலர் ரொக்கம், மற்றும் 5 மில்லியன் டொலர் காப்பீட்டுப் பத்திரம் ஜாமீனில் வெளிவரத் தேவை என்று கூறினார். பின் ஸ்ட்ரான் கான் மன்ஹாட்டனில் அவருடைய மனைவி வாடகைக்கு எடுத்துள்ள அடுக்கு வீடு ஒன்றில் இருக்க வேண்டும் என்றும், 24 மணி நேரமும் வீட்டுக் காவலில் இருப்பார் என்றும், ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் மின்னணு முறையில் மேற்பார்வை இருக்கும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த ஜாமீன் முடிவிற்கு முன்னதாக, நியூ யோர்க் நகர அரசாங்க வக்கீல்கள் ஒரு நடுவர் குழு 42வது தெருவிலுள்ள ஆடம்பர ஹோட்டலான சோபிடல் நியூ யோர்க்கில் ஒரு பெண் ஊழியர் மீது பாலியல் தாக்குதல் நடந்ததையொட்டி 7 வது விதிகளின் கீழ் ஸ்ட்ராஸ்கான் மீது குற்றம் சாட்டியுள்ளனர் என்று அறிவித்தனர். தண்டிக்கப்பட்டால், ஸ்ட்ராஸ் கான் அவற்றுள் சில விதிகளின்படி கிட்டத்தட்ட 25 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும்.

நடுவர் குழு இரகசியமாக முடிவெடுத்திருக்கையில், ஜாமீன் மீதான விசாரணை பொது அரங்கில் நடைபெற்றது. உதவி மாவட்ட அரசாங்க வக்கீல் ஜோன் மக்கோனல், அலோன்சோ மற்றும் பாலியல் குற்றப்பிரிவின் தலைவர் லிச பிரியல் ஆகியோர் இதை நடத்தினர். எந்த ஜாமீனும் கூடாது என்று மக்கோனல் வாதிட்டார். முந்தைய குற்றப் பதிவு ஏதும் இல்லாத ஒரு நபர் மீது, கொலைக்குற்றம் இல்லாத ஒரு வழக்கில், இது ஒரு அசாதாரண நிலைப்பாடு ஆகும்.

உதவி மாவட்ட அரசாங்க வக்கீல், ஸ்ட்ராஸ் கான் மன்ஹாட்டன் ஹோட்டலில் இருந்து தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்ட தினத்தன்றுஅசாதாரண அவசரத்தைக் காட்டி வெளியேறினார்என்று கூறினார். அவரோ தன்னுடைய மகளுடன் நீண்ட நேரம் உணவருந்திக் கொண்டிருந்தார். இதன் பின் பிரெஞ்சு அரசியல்வாதி JFK விமான நிலையத்திற்கு காரில் சென்று, ஒரு வாரம் முன்னதாக அவர் பதிவு செய்திருந்த விமானப் பயணத்தில் தாயகத்திற்கு திரும்பச் செல்லவிருந்தார். அவர் விட்டுச் சென்ற கைபேசியை தேடுமாறும் அவர் ஹோட்டல் நிர்வாகத்திற்குக் கூறியிருந்தார். அதன் பின் தான் இருக்கும் இடத்தையும் அவர்களுக்குத் தெரிவித்தார். சட்டத்திலிருந்து தப்பி ஓடுவதாகக் கூறப்படும் நபர் பொதுவாக இத்தகைய செயல்களை செய்யமாட்டார்.

ஸ்ட்ராஸ் கான் ஹோட்டல் சிறப்பு அறையில் நடந்த விவரங்கள் முன்னாள் IMF அதிகாரிக்கும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டவருக்கும் மட்டுமே தெரியும் என்ற நிலையில், அமெரிக்க அதிகாரிகள் இந்த வழக்கை கையாளும் முறை, செய்தி ஊடகம் இது பற்றித் தெரிவிக்கும் தகவல்கள் ஆகியவை ஜனநாயக உரிமைகள் பிரச்சினைகள் பற்றிக் கணிசமான வினாக்களை எழுப்புகின்றன. இதைத்தான் உலக சோசலிச வலைத் தளம் நேற்று எழுதியிருந்தது. (See:“The serious questions raised by the Dominique Strauss-Kahn affair”.)

IMF தலைமையிலிருந்து ஸ்ட்ராஸ் கான் இராஜிநாமா செய்தது அவருக்கு பதில் பதவிக்கு வருவது பற்றிய ஆழ்ந்த போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போட்டி முதலாளித்துவ முகாம்களுக்கு இடையேயுள்ள விரோதத் தன்மையின் உயர்ந்த அளவை சுட்டிக் காட்டுகிறது. அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கொண்டுவருவதற்கு உந்துதல் கொடுத்த சக்திகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான உணர்வுகளின்படி, இவை சர்வதேச நிதிய நிறுவனங்களின் செயற்பாட்டை நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்துபவைஒரு அமெரிக்கர் உலக வங்கிக்கு எப்பொழுதும் தலைவராக இருப்பார், அதே நேரத்தில் ஒரு ஐரோப்பியர் IMF க்கு எப்பொழுதும் தலைவராக, ஒரு அமெரிக்க துணைத் தலைவருடன் இருப்பார்.

ஸ்ட்ராஸ் கானின் இராஜிநாமாவுடைய உடனடி விளைவு அவருடைய அமெரிக்கத் துணை அதிகாரியும் பொருளாதார வல்லுனருமான ஜோன் லிப்ஸ்கி இடைக்கால நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டது ஆகும். இது தற்காலிகமாக அமெரிக்காவிற்கு அதிகாரம் கொடுத்துள்ளதற்கு ஒப்பானது என்றாலும் லிப்ஸ்கி ஆகஸ்ட் 31ல் இருந்து தான் திட்டமிட்டுள்ள ஓய்வு பெறுதலை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் டேவிட் லிப்டன் லிப்ஸ்கிக்குப் பதில் பதவி ஏற்கலாம் என்று ஒபாமா நிர்வாகம் பரிசீலித்துள்ளதாக தெரிய வருகிறது. இன்னும் முக்கியமான போட்டி ஸ்ட்ராஸ் கானுக்குப் பதில் யார் வருவார் என்பதில்தான் உள்ளது. மற்றொரு பிரெஞ்சு வேட்பாளர் நிதி மந்திரி கிறிஸ்டின் லகார்ட்க்கு ஆதரவாக ஐரோப்பிய சக்திகள் அணிதிரண்டு நிற்கின்றன.

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் இந்த விவாகாரம் பற்றி தன்னுடைய முதல் கருத்துக்களைக் கூறுகையில், ஐரோப்பா IMF ல் அதன் முக்கிய பங்கைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். IMF ன் 24 பேர் அடங்கிய நிர்வாகக் குழு பல நாடுகள் கொடுக்கும் நிதி நன்கொடைகளின் பரிமாணத்தையொட்டி வாக்குகளை அவர்கள் போடுவர் என்ற நிலையில் உள்ளது. நிர்வாகக் குழுவிலுள்ள அமெரிக்கா மற்றும் எட்டு ஐரோப்பிய சக்திகள் மொத்த வாக்குகளில் 50 சதத்திற்கும் மேலாகத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன.

லகார்டுக்கு மாற்றீடு பற்றிய செய்தி ஊடக ஊகங்கள் துருக்கியின் முன்னாள் நிதி மந்திரி கெமல் டெர்விஸ் மீது குவிப்புக் காட்டுகின்றன. இது ஐரோப்பா பற்றிய வரையறையை அதிகப்படுத்தும்துருக்கி ஒரு நேட்டோ உறுப்பினர் என்றாலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டுத் தன்மைக்கு அது கொடுத்துள்ள விண்ணப்பம் மற்ற நாடுகளுடன் பிரான்சினால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு துருக்கிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவது என்பது கிரேக்கத்துடனான உறவுகளைப் பாதிக்கும். ஏனெனில் IMF பிணை எடுப்புக்களில் மிக அதிகமான ஒன்றான பிணை எடுப்பை இப்பொழுது அது பெற்று வருகிறது.

BRIC நாடுகள் (பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா) என அழைக்கப்படுபவற்றிடையேயும் பேச்சுக்கள் நடைபெறுகின்றன. இவை ஒன்றாக கிட்டத்தட்ட 35 சதவிகித வாக்குகளைக் கொண்டுள்ளன. இரு முக்கிய சர்வதேச அமைப்புக்களின் மீது ஐரோப்பிய, அமெரிக்க ஏகபோக உரிமை இருப்பதை இவை சவாலுக்கு அழைக்கக் கூடும். ஆனால் பிரிக் நாடுகள் IMF ல் இந்த இரு உயர்மட்ட பதவிகளுக்கு பொது வேட்பாளர் பற்றி இன்னமும் உடன்பாடு காணவில்லை.

போட்டியிடும் முதலாளித்துவ முகாம்கள் அதிகாரத்திற்காக அப்பட்டமாகப் போரிடுவதுடன் உலக நிதிய நெருக்கடியை தீர்ப்பதற்கு கூறப்படும் வழிவகைக் கொள்கைகளும் முரண்பாடுகளை கொண்டுள்ளன. ஸ்ட்ராஸ்-கான் குறைந்தபட்சம் இரு கருத்துக்களில் வாஷிங்டனுடன் மோதலில் இருந்தார். வியாழக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியதுபோல், அமெரிக்க நிதி அமைச்சரக அதிகாரிகள் வாதிட்டதற்கு மாறாக சீனா பற்றி அவர் மிருதுவான நிலைப்பாடு தேவை என்றார். “மோதல் ஏற்படும் சொல்லாட்சி பயன்படுத்தப்படாமல், ஒரு நீண்ட காலத் திட்டத்தில் சீனா எப்படி அதன் வளர்ச்சி வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் குவிப்புக் காட்ட வேண்டும்என்று அவர் கருதினார்.

அதே நேரத்தில் ஐரோப்பிய நிதிய நெருக்கடியில் அவர் ஆக்கிரோஷமாக தலையிட்டு, கிரேக்கம், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல்லிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிணை எடுப்புக்களுக்கு உதவினார். வாஷிங்டன் போஸ்ட்டின் நிதியப் பிரிவுக் கட்டுரையாளர் Steven Pearlstein கருத்துப்படி, “அவர் கைது செய்யப்பட்டபோது, ஸ்ட்ராஸ்-கான் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் பேச்சுக்கள் நடத்துவதற்காக, கிரேக்கத்திற்கு ஒரு கடன் மறு கட்டமைப்பு பற்றி விவாதிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஐரோப்பிய மத்திய வங்கியுடையதைப் போல் IMF ன் உத்தியோகபூர்வ கருத்து எந்த ஐரோப்பிய பகுதி நாட்டையும் அதன் கடனை மறு கட்டமைக்க அனுமதிப்பது புதிய உலக நிதிய நெருக்கடியைத் தூண்டிவிடும். ஏனெனில் முதலீட்டாளர்கள் பொறுப்பற்று விரைந்து செயல்பட்டு தங்கள் அனைத்து ஐரோப்பிய பத்திரங்களையும் சந்தையில் விற்கத் தொடங்கி, ஏராளமானவை சந்தையில் குப்பை போல் வருவதால் திவால்தன்மைக்கு வகை செய்துவிடும்என்பதாகும்.

உடனடியான கொள்கை வேறுபாடுகள், பூசல்கள் இவற்றிற்கு அப்பால், ஸ்ட்ராஸ்-கான் வாஷிங்டனின் உலக முக்கிய இருப்பு நாணயம் என்ற டாலரின் பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு ஆதரவு தருகிறார் என்று கருதியது. பெப்ருவரி மாதம் நிகழ்த்திய உரை ஒன்றில் அவர் Special Drawing Rights என்னும் சிறப்பு நிதி எடுக்கும் உரிமைகள் தேவை என்றார். இவை IMF கொடுக்கும் கடன்கள், டாலர், ஸ்டெர்லிங், யூரோ மற்றும் யென் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டிருக்கும். அதேபோல் சீன யுவான் இன்னும் பிறஎழுச்சி பெறும் சந்தைகளின்நாணயங்களையும் கொண்டிருக்கும். SDR விரிவாக்கம் செய்யப்படுவது டாலருடன் இணைந்துஉலக வணிக விலைகள் மற்றும் நிதியச் சொத்துக்களுக்கு ஒரு சமமான மதிப்பைக் கொடுக்கும் நாணயங்களையும் தரும் என்று கூறியிருந்தார்.
 

கட்டுரை ஆசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்:

Economic summits marked by great power divisions and concerns over class conflict

Global currency, trade conflicts dominate IMF meeting