World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistani, NATO forces clash amid rising US-Pakistani tensions

அமெரிக்க பாக்கிஸ்தானிய உயரும் அழுத்தங்களுக்கு இடையே பாக்கிஸ்தானிய நேட்டோப் படைகள் மோதுகின்றன

By Keith Jones 
18 May 2011
Back to screen version

செவ்வாயன்று வடக்கு பாக்கிஸ்தானில் வடக்கு வஜீரிஸ்தான் வான் பகுதியைக் கடந்து பாக்கிஸ்தானிய தரைப் படையினர் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள்  நடத்திய தாக்குதலில் இரண்டு பாக்கிஸ்தானிய படையினர்கள் காயமுற்றனர். பாக்கிஸ்தானுக்குள் அதனுடைய ஹெலிகாப்டர்கள் நுழைந்தன என்பதை நேட்டோ மறுத்தது. ஆனால் தாக்குதலுக்கு உட்பட்டபோது வடக்கு வஜீரிஸ்தான் பக்கம் சுட்டதாக ஒப்புக் கொண்டது.

பாக்கிஸ்தானிய இராணுவம் நேட்டோவிடம் தான் ஒருவலுவான எதிர்ப்பைபதிவு செய்துள்ளது என்றும், பாக்கிஸ்தானிய இறைமை மீதான சமீபத்திய மீறலை எதிர்த்த துருப்புக்களின் நடவடிக்கைகளுக்குத் தான் ஆதரவு கொடுக்கிறது என்பதையும் தெளிவாக்கியது.

நேற்றைய எல்லை மோதல் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகளில் மிக ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையே வந்துள்ளதுஅந்த நேரத்தில் வாஷிங்டன் காபூலிலுள்ள தாலிபன் ஆட்சியுடன் உறவுகளை முறித்துக் கொண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு உபகரண ரீதியான ஆதரவு அளிக்காவிட்டால், பாக்கிஸ்தான் மீது குண்டுத் தாக்குதல் நடத்திஅதைக் கற்காலத்திற்குத் திருப்பிவிடும்என்று அச்சுறுத்தியது.

தற்போதைய நெருக்கடி ஒசாமா பின் லேடனைப் படுகொலை செய்வதற்கு மே 2ம் தேதி பாக்கிஸ்தான் நிலப்பகுதிக்குள் ஆழ உட்சென்று அபோத்தாபாத்தின் மீது ஒருதலைப்பட்ச தாக்குதலை அமெரிக்கா நடத்தியதால் தூண்டுதல் பெற்றுள்ளது. அந்த நடவடிக்கையில் பாக்கிஸ்தான் இறைமையை மீறுவதற்காக பாக்கிஸ்தான் இராணுவம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் அதைத் தாக்கும் திட்டங்களும் இருந்தன.
கடந்த வார இறுதியில், பாக்கிஸ்தானிய பாராளுமன்றம் ஒருமனதான மே 2 தாக்குதல் மற்றும் தற்பொழுது நடைபெற்று வரும் பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்க பிரிடேட்டர் தாக்குதல்கள் ஆகியவற்றை கண்டித்து ஒரு தீர்மானத்தை இயற்றியதுடன் அதன் இறைமை மீது வருங்காலத்தில் ஊடுருவல்கள் இருந்தால் பாக்கிஸ்தான் அவற்றை எதிர்க்கும் என்றும் கூறியது
.

பாராளுமன்றம் 11 மணி நேரக் கூட்டம் மூடிய கதவுகளுக்குப் பின் நடத்திய மறுநாள் இத்தீர்மானம் இயற்றப்பட்டது. முதல் நாள் கூட்டத்தில் பாக்கிஸ்தானின் முக்கிய இராணுவ உளவுத்துறை அமைப்பான ISI ன் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அஹ்மத் ஷூஜா பாஷா மே 2 தாக்குதல் மற்றும் அமெரிக்க-பாக்கிஸ்தானிய உறவுகள் பற்றி நீண்ட நேரம் பேசியிருந்தார். உயர்மட்ட இராணுவ அதிகாரிகளால் பாஷா சூழப்பட்டிருந்தார். அவர்களுள் பாக்கிஸ்தானிய படைகளின் தலைவரான ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் காயானியும் இருந்தார்.

மூடிய கதவுகளுக்குப் பின் நடந்த கூட்டத்தில் பங்கு பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் அவர் CIA தலைவர் லியோன் பானெட்டாவுடன்உரக்கப் பேசிய மோதலில்ஈடுபட்டார் என்று கூறினர்.

பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாக்கிஸ்தானுக்குள் CIA பிரிடேட்டர் தாக்குதல்களை நடத்தலாம் என்ற முறையான ஒப்பந்தம் உள்ளது, இருந்தது என்பதை பாஷா மறுத்தார். ஆனால் பெரும்பாலான தாக்குதல்கள் CIA கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பாக்கிஸ்தானிய விமானத் தளங்களிலிருந்து நடத்தப்பட்டன என்பதை ஒப்புக் கொண்டார். வினாக்களுக்கு பதிலளிக்கையில் அவர், பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்திருந்த F16 ஜெட்டுக்களால் டிரோன்களைச் சுட்டு வீழ்த்த முடியும் என்றும் கூறினார்.

பாக்கிஸ்தானிய உயர் தட்டினர் ஆறு தசாப்தங்களாக இராணுவ-மூலோபாய பங்காளித்தனத்தை கொண்ட அமெரிக்காவை பல முறையும் தவிர்க்க முடியாமல் பாக்கிஸ்தானை காட்டிக் கொடுத்ததற்காக பாஷா கடுமையாகத் தாக்கிப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

பின் லேடனைக் கொல்ல வழிவகுத்த சட்டவிரோத முயற்சியைப் பொறுத்தவரை, பாஷா அது பாக்கிஸ்தானின் மதிப்பைக் குறைத்து அவமானப்படுத்துவதற்காக நடத்தப்பட்டஅதிரடி நடவடிக்கை ஆகும் என்றார்.

இந்தியாவுடன் ஒரு இராணுவ மோதலுக்கான இடர்களை தாக்குதல் எழுப்பியுள்ளது என்பதையும் அவர் தெளிவாக்கினார். பாக்கிஸ்தானுக்குள் அபோத்தாபாத் வகையிலான தாக்குதலை தான் நடத்த முடியும் என்று இந்திய இராணுவம் பெருமை அடித்துக் கொண்டது பற்றியும் அவர் கருத்தில் கொண்டுள்ளார்.

பாக்கிஸ்தானின் மிகச் செல்வாக்கு உடைய நாளேடான டவுன் கருத்துப்படி, பின்னர் பாஷா, ஒரு நெருக்கடித் திட்டம் நடைமுறையில் உள்ளது, இந்தியாவிற்குள் இலக்குகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. “அவற்றைப் பற்றி ஒத்திகைகளும் நடத்தியுள்ளோம்என்று கூறினார்.

பின் லேடன் பாக்கிஸ்தானில் வசித்து வந்தார், பல ஆண்டுகள் அபோத்தாபாத் கோட்ட நகரத்திற்குள்ளும் இருந்தார் என்ற வெளிப்பாட்டைக் கொடுத்துள்ள பின் லேடன் விவகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தி கடந்த ஏழு ஆண்டுகளாக பாக்கிஸ்தானின் பஷ்டுன் பழங்குடிப் பகுதிகளில் அது நடத்திவரும் எதிர்ப் புரட்சிப் போரை விரிவாக்க இஸ்லாமாபாத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. இது ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளதற்கு வந்துள்ள எதிர்ப்பை அடக்க உதவும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இப்போர் ஆயிரக்கணக்கான குடிமக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. பெரும் குண்டுவீச்சு தாக்குதல்கள் மற்றும் கார்பெட் குண்டுத் தாக்குதல்கள் நூறாயிரக்கணக்கான மக்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து ஓடிவிடும் நிலைக்குத் தள்ளி, பாக்கிஸ்தானிய இராணுவப்-பாதுகாப்புப் படைகளின் சக்தியை நிலைப்படுத்தவும் உதவியுள்ளது.

 

பாக்கிஸ்தானில் பின் லேடனைக் கொன்ற மே 2 தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அதிகாரிகளுக்கு  தாலிபன் மற்றும் அல் குவெய்டா தலைவர்களை வேட்டையாடிக் கொல்ல பாக்கிஸ்தானை கட்டாயப்படுத்துவதற்கு இப்பொழுது கூடுதலான ஆற்றல் கிடைத்துள்ளது. இதையொட்டி அமெரிக்கா ஆப்கானிய போரைக் கூட முடித்துக் கொள்ளலாம்என்று மே 12ம் தேதி  நியூ யோர்க் டைம்ஸ்  எழுதியுள்ளது.

கடந்த திங்களன்று செனட்டர் ஜோன் கெர்ரி பாக்கிஸ்தானுக்குச் சென்று, ஒபாமா நிர்வாகத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அளித்தார்இவற்றைச் செயல்படுத்த அச்சறுத்தல்களும் இருந்தன. அவற்றுள் பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆண்டு நிதி உதவி 3 பில்லியன் டொலர் இராணுவ, சிவிலிய உதவிகள் குறைக்கப்படும் என்பதும் அடங்கியிருந்தது. காபூலில் அமெரிக்க ஆதரவைக் கொண்ட கைப்பாவை அரசாங்கத்தில் தாலிபன் பிரிவுகளையும் சேர்ப்பதற்கான பேச்சுக்களில் இஸ்லாமாபாத்தும் சேர்ந்துகொள்ளலாம் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதேபோல் ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்கு குறைந்த வரம்பைக் கொண்டிருக்கும் என்பதை வாஷிங்டன் பொறுப்பேற்கும்.

அமெரிக்க-பாக்கிஸ்தானிய பிளவுகள் அகற்றப்படாவிட்டால் ஏற்படக்கூடியஆழ்ந்தவிளைவுகுளைப் பற்றியும் கெர்ரி பேசினார். அமெரிக்காவிற்கு திரும்பியபின், பாக்கிஸ்தானிய தலைவர்கள் ஒபாமா நிர்வாகத்தின் கோரிக்கைகள் சிலவற்றைச் செயல்படுத்த ஒப்புக் கொண்டனர், ஆனால் இதன் முழுத் தன்மை பற்றியும் தன்னால் கூற இயலாது என்றார். “இவற்றுள் சில நமக்கு மூலோபாய வகையில் மிகவும் முக்கியம், ஆனால் அவை பகிரங்கமாக விவாதிக்கப்படுவதற்கு இல்லை.”

இஸ்லாமாபாத் மீது அழுத்தத்தைத் அமெரிக்கா தக்க வைத்துக்கொள்ளலாம், அல்லது விரிவாக்கம் கூடச் செய்யப்படலாம் என்பதை கெர்ரி தெளிவுபடுத்தினார். “இந்த உறவு நான் நடத்திய கூட்டங்களைத் தொடர்ந்து வரும் அறிக்கைகள் மூலமோ சொற்களாலோ அளக்கப்பட முடியாது. அவை செயற்பாட்டின் மூலம்தான் அளக்கப்பட முடியும்என்று கெர்ரி அறிவித்தார்.

பாக்கிஸ்தானியத் தலைவர்கள்உருப்படியான”, “துல்லியமான”, “அளவுபடுத்தக்கூடியநடவடிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர், பலவற்றில் இணைந்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்று கெர்ரி கூறினார். அதாவது, அமெரிக்க, பாக்கிஸ்தானிய சக்திகளுக்கு இடையே கூடுதலான ஒத்துழைப்பு இருக்கும். “அவர்களுடன் என்ன நடக்கிறது என்பதை நாம் துல்லியமாகத் தெரிந்து கொள்ளவோம், விரைவிலேயே.”

அமெரிக்கா நீண்ட காலமாகவே பாக்கிஸ்தானிய இராணுவம் ஹக்கானி வலையமைப்பின் தாயகமான  வடக்கு வஜீரிஸ்தான் மீது படையெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இது ஒரு தாலிபனுடன் இணைந்த இஸ்லாமியப் போராளி அமைப்பு ஆகும். நீண்டகாலமாக பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் பிரிவினருடனும் முன்னதாக CIA உடனும் உறவுகளைக் கொண்டு இருந்தது. அமெரிக்க அதிகாரிகள் இப்பகுதிகளுக்கு அப்பாலும் பிரிடேட்டர் ட்ரோன் தாக்குதல்களை விரிவாக்குவது பற்றி விவாதித்தனர். குறிப்பாக க்வெட்டாவை சுற்றித் தாக்குதல்கள் நடத்துவது பற்றி. அந்நகரத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் உள்ளனர். இது தாலிபன் வெளிநாட்டிலுள்ள தலைமையின் தாயகம் எனக் கூறப்படுகிறது.

அபோத்தாபாத் தாக்குதல் நடந்த இரு வாரங்களில் வாஷிங்டன் திமிர்த்தனமாக பாக்கிஸ்தானிய புகார்களை, டிரோன் தாக்குதல்களின் சட்டத்தன்மை பற்றிப் புறக்கணித்து வந்துள்ளது. தாக்குதல்கள் தொடரும் என்று அவர்கள் கூறிவருவதாடு மட்டும் இல்லாமல், CIA அவை நடப்பதைக் கூடுதலாக்கவும் செய்துவிட்டது.

இஸ்லாமாபாத் மீது அழுத்தம் கொடுப்பதற்கு அமெரிக்காவிடம் பல வழிவகைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றுள் சற்றும் முக்கியத்துவம் குறையாதது IMF இடம் இருந்து இன்னும் நிதிய ஆதரவு என்று நாட்டிற்குள்ள பெரும் தேவையாகும். பாக்கிஸ்தானிய இராணுவம் அமெரிக்காவை குறைகூறினாலும், தன்னுடைய நிலைப்பாடு, சலுகைகள் ஆகியவை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கொண்டிருக்கும் பல தசாப்த கூலித்தன உறவுகளுடன் பிணைந்துள்ளது என்பதை அது அறியும்.

ஆனால் பாக்கிஸ்தானிய உயரடுக்கு அதன் பூகோள அரசியல் நிலைப்பாடு ஆசியாவில் அமெரிக்கா கொண்டுள்ள மூலோபாயத்தால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளதையும் காண்கிறது. காபூலில் தாலிபான் ஆட்சியை இஸ்லாமாபாத் கைவிட நேர்ந்தது. இது பாக்கிஸ்தானின் மறைமுக ஆட்சியாக இருந்தது. இதையொட்டி இதன் நிரந்தர விரோதியான இந்தியா தன் செல்வாக்கை ஆப்கானிஸ்தானில் அதிகரிக்க வகை ஏற்பட்டுள்ளது.

இன்னும் பரந்த முறையில் அமெரிக்கா இந்தியாவுடன்பூகோள மூலோபாயபங்காளித்தனத்தை நிறுவியுள்ளது, சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் என்பது, பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருந்த  சமபலநிலையை மாற்றிவிட்டது. இவை இரண்டும் தெற்கு ஆசிய நாடுகளில் அணுவாயுதங்களைக் கொண்ட நாடுகள் ஆகும். அமெரிக்கா இந்தியாவிற்கு உலக அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஒரு பிரத்தியேகமான நிலைப்பாட்டை அளித்துள்ளது. இதையொட்டி இந்தியா சிவிலிய அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெற முடியும், அதன்மூலம் ஆயுத வளர்ச்சிக்குத் தேவையான அணுத்திட்டத்தில் குவிப்புக் காட்ட முடியும். இதற்கிடையில் வாஷிங்டன் பாக்கிஸ்தானை அணுசக்தியைத் தீண்டக்கூடாத நாடு என நடத்துகிறது. எரிசக்தித் தேவையுடைய நாட்டிற்கு ஈரானிய இயற்கை வாயுவைக் கொண்டுவரும் குழாய்த்திட்டம் கட்டமைக்கப்படுவதையும் தடைக்கு உட்படுத்தியுள்ளது.

அமெரிக்க அழுத்தத்தை முகங்கொடுக்கும் வகையில் பாக்கிஸ்தானிய அதிகாரிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க-நேட்டோ போர் இயந்திரத்திற்குத் தேவையாள அளிப்புக்களை கொடுப்பதற்கு முக்கால் பகுதி வழித்தடம் பாக்கிஸ்தானை நம்பினால்தான் அமெரிக்காவால் முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நெருக்கமான, நீண்ட கால உறவுகள் இஸ்லாமாபாத்திற்கும், பெய்ஜிங்கிற்கும் இடையே இருப்பதையும் பாக்கிஸ்தானிய தலைவர்கள் பெருக்குகின்றனர். பாக்கிஸ்தானிய அரசாங்க அதிகாரிகள் சீன பாக்கிஸ்தானின் உறவுகள்அனைத்துக் காலத்திலும்தொடரும், சீனா பாக்கிஸ்தானின்மிகச் சிறந்த நட்பு நாடு என்று பல முறையும் அழைத்துள்ளனர். அதே நேரத்தில் பாக்கிஸ்தானிய இறைமையை அப்பட்டமாக மீறிய செயல்தான் அபோத்தாபாத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் என்று குறைகூறியதில் கிட்டத்தட்ட ஒரே ஒரு தலைநகராக பெய்ஜிங்தான் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செவ்வாயன்று பாக்கிஸ்தானியப் பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி சீனாவிற்கு 4 நாள் பயணத்தை மேற்கொண்டார். கடந்த வாரம் முக்கிய எதிர்க் கட்சியின் தலைவரான நவாப் ஷரிபும் சீனாவைப் புகழ்ந்தார்: “வரலாற்றில் நெருக்கடியான இந்தக் கட்டத்தில், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாக்கிஸ்தானுக்கு துணை நிற்கவில்லை என்று நான் கூறுவேன்.”

வாஷிங்டனோ அல்லது இஸ்லாமாபாத்தோ அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கும் இடையேயுள்ள பிற்போக்குத்தன பங்காளித்துவத்தை முறிக்க விரும்பவில்லை. ஆனால் அமெரிக்க அயராமல் ஆப்கானிஸ்தானை அடிமைப்படுத்தும் அதனுடைய போரை பொறுப்பற்ற முறையில் விரிவாக்கும்போது, எண்ணெய் வளமுடைய மத்திய ஆசியாவில் தனக்குச் சிறப்பிடத்தைப் பெற முயலும்போது, எழுச்சி பெறும் சீனாவை எதிர்க்க இந்தியாவுடன் கூடுதல் நட்பு கொள்கையில், நிகழ்வுகள் எளிதில் கட்டுப்பாட்டை மீறிவிடக் கூடும்.