சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan’s President Zardari visits Moscow

பாக்கிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரி மாஸ்கோ பயணம்

By Niall Green 
19 May 2011

Use this version to print | Send feedback

பாக்கிஸ்தான் ஜனாதிபதி அசிப் அலி ஜர்தாரி கடந்த வாரம் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக ரஷ்யாவிற்கு சென்றிருந்தார். இப்பயணத்தின்போது, பாக்கிஸ்தானிய மக்கள் கட்சியின் (PPP) தலைவர், இராணுவ மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு, பொருளாதாரத் திட்டங்கள் பற்றிய விவாதங்களை ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் மற்றும் கிரெம்ளினிலுள்ள மூத்த தலைவர்களுடன் நடத்தினார்.

கடந்த கோடையில் ரஷ்ய சுற்றுலாத் தலமான சோசியில் நடந்த உச்சிமாநாட்டிற்குப் பின்னர் இந்த மூன்று நாள் பயணம் வந்துள்ளது. அப்பொழுது மெட்வடேவ் ஆப்கானிஸ்தான், டாஜிகிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுடன் ஒரு கூட்டுப் பாதுகாப்பு அரங்கை நிறுவியிருந்தார். அதன் கூறப்பட்ட நோக்கம் கூட்டாக பாதுகாப்பு, பொருளாதாரத் திட்டங்களை மேற்கொள்வது என்று இருந்தது. அப்பொழுது முதல் நான்கு நாடுகளும் ஒரு புதியபட்டுப்பாதைரஷ்யாவிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை போடுவதற்கு உறுதி கொண்டுள்ளன. இதில் எண்ணெய், இயற்கை எரிபொருள் மற்றும் மின்சக்தி ஆகியவை ஏற்றுமதி செய்யப்படும்.

ரஷ்ய-பாக்கிஸ்தானிய உறவுகளில் ஜர்தாரியின் வருகை உயர்ந்த இடத்தைக் கொண்டுள்ளது. வரலாற்றளவில் இவை நெருக்கமாக இருந்ததில்லை. சோவியத் ஒன்றியம் பனிப்போர்க் காலத்தில் இந்தியாவிற்கு ஆதரவு கொடுத்த நிலையில், பாக்கிஸ்தான் அமெரிக்க, சீன ஆதரவைப் பெற்று இருந்தது. இஸ்லாமாபாத் மற்றும் மாஸ்கோவிற்கும் இடையேயுள்ள உறவுகள் 1980களில் குறைந்த மட்டத்தை அடைந்தன. கிரெம்ளின் அதிகாரத்துவம் அப்பொழுது அதனுடைய நட்பு ஆட்சியைக் காபூலில் முட்டுக் கொடுத்து நிறுத்த ஒரு போரை மேற்கொண்டிருந்தது. பாக்கிஸ்தானும் அமெரிக்காவும் முஜாஹிதீன் எழுச்சி போராளிகளுக்கு காபூல் ஆட்சிக்கு எதிராக ஆதரவைக் கொடுத்தன.

பாக்கிஸ்தான் தலைமை மற்றும் கிரெம்ளின் இரண்டிற்கும் மைய முக்கியத்துவம் ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அமெரிக்க-நேட்டோ போர் ஆகும். பாக்கிஸ்தான் ஒரு முக்கிய அமெரிக்க நட்பு நாடாக இருந்தாலும், அமெரிக்க பாக்கிஸ்தானிய உறவில் பெருகிய பிளவுகள் வந்துள்ளன. இது ரஷ்யாவிற்கு ஜர்தாரி பயணிக்கு முன் அபோத்தாபாத் என்னும் பாக்கிஸ்தானிய நகரத்தில் ஒசாமா பின் லேடன் படுகொலை செய்யப்பட்டதில் தீவிர வெளிப்பாட்டைக் கண்டது.

அல் குவேய்டா தலைவர் கொலை செய்யப்பட்டது, பாக்கிஸ்தானின் இறைமை மீறப்பட்ட வகையில், பாக்கிஸ்தானின் தேசிய இராணுவ உயர்கல்விக் கூடத்தைக் கொண்டுள்ள கோட்டை நகரம் ஒன்றில் பாக்கிஸ்தானிய அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்குத் தெரியாமல் நடைபெற்றது. அமெரிக்கச் சிறப்புப் படைகளின் பின் லேடான் மீதானதாக்குதல்எளிதில் கட்டுக்கு அடங்காமல் போயிருக்கக் கூடும், அமெரிக்காவையும் பாக்கிஸ்தானையும் நேரடி மோதல் ஒன்றில் இராணுவ வகையில் மோதச் செய்திருக்கும் திறனைக் கொண்டு இருந்தது.

பாக்கிஸ்தானிய பிரதம மந்திரி யூசுப் ராசா கிலானி, PPP கட்சியைச் சேர்ந்தவர், அபோத்தாபாத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அவருடைய அரசாங்கம் இனி இதேபோன்ற ஊடுருவலை வருங்காலத்தில் பொறுத்துக் கொள்ளாது என்ற எச்சரிக்கை கொடுத்தார். “முழு ஆற்றலுடன் அத்தகைய ஊடுருவலை எதிர்க்கும் உரிமையை பாக்கிஸ்தான் கொண்டுள்ளதுஎன்று கிலானி பாராளுமன்றத்தில் கூறினார். “எவரும் எம் தேசம் மற்றும் இராணுவப் படைகளின் நம் புனித தாய்நாட்டைக் காக்கும் உறுதிப்பாடு ஆகிய திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது.”

இஸ்லாமாபாத்தும் வாஷிங்டனும் CIA முகவர் ரேமண்ட் டேவிஸ் பற்றி கடுமையான பூசலில் ஈடுபட்டிருந்தன. அவர் லாகூர் தெருக்களில் இரு பாக்கிஸ்தானியர்களை கொன்றிருந்தார். ஆனால் குற்ற விசாரணையிலிருந்து அமெரிக்காவினால் பாதுகாக்கப்பட்டார். பாக்கிஸ்தானிய உளவுத்துறை டேவிஸ் வழக்கிற்கு பதிலடியாக பாக்கிஸ்தானிலுள்ள CIA நிலையத் தலைவரின் பெயரைக் கசிய விட்டது.

பாக்கிஸ்தானுக்குள் அதனுடைய இராணுவ ஊடுருவல்களுக்காகவும் அமெரிக்காவை குறைகூறும் கட்டாயத்திற்கு இஸ்லாமாபாத் தள்ளப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் பிரிடேட்டர் ட்ரோன் வான் தாக்குதலினால் முக்கியமாக குடிமக்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதில் வெகுஜன சீற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த முக்கிய நிகழ்வுகளுக்குப் பின்புலத்தில் இஸ்லாமாபாத் மற்றும் வாஷிங்டனுக்கு இடையேயான அழுத்தங்கள் இப்பிராந்தியத்தில் அதனுடைய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகள் அதனுடைய முக்கிய போட்டி நாடுகளான ரஷ்யா, சீனா இழப்பில், தூண்டுதல் பெறுகின்றன.

ஆப்கானிஸ்தானில் வாஷிங்டன் நடத்தும் காலனித்துவ போர் பென்டகனுக்கு ஆசியாவின் இதயத்தானத்தில் நிரந்தரக் கோட்டை ஒன்றை அளிக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்இது முன்னாள் சோவியத் ஒன்றியம், தெற்கு ஆசியா மற்றும் சீன எல்லையில் உள்ளது. பிராந்தியம் முழுவதும் இங்கிருந்து செல்வாக்கை செலுத்த முடியும். இது பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தானில் கொண்டிருந்த செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, இஸ்லாமாபாத் மற்றும் பல இஸ்லாமியவாதிகள் மற்றும் போராளிக் குழுக்களை ஆப்கானிஸ்தானிலுள்ள வலை அமைப்பு உறவுகளை அச்சுறுத்தியுள்ளது.

நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், வாஷிங்டன் அப்பிராந்தியத்தில் பாக்கிஸ்தானின் பிராந்தியப் போட்டி நாடான இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. புது டெல்லி அதனுடைய அணுசக்தித் தொழிலை வளர்த்துக் கொள்ள உதவும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது நட்புக் கொண்டுள்ள முறையில் சீனாவிற்கு எதிராக ஒரு கூட்டை வெல்ல முயல்கிறது. சீனாவோ பாக்கிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு ஆகும்.

ஆனால் மாஸ்கோ அமெரிக்கா மீது அபோத்தாபாத் தாக்குதலுக்காக பாக்கிஸ்தானின் பொதுச் சாடலுடன் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. மாறாக கிரெம்ளின் மற்றும் ரஷ்ய செய்தி ஊடகம் கொலை வழி பற்றி அமெரிக்காவை பாராட்டின. உத்தியோகபூர்வமாக ரஷ்யா வெளிநாடுகளில் இருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதற்கு ஆதரவைக் கொடுக்கிறது.

வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கடந்த வாரம் ஒரு பேட்டியில் பின் லேடனை அமெரிக்கக் கடற்படை சீல்கள் கொன்றதற்கு முழு ஆதரவை மாஸ்கோ அளிப்பதாகக் கூறினார். “செப்டம்பர் 11, 2001க்குப் பின் ஐ.நா. பாதுகாப்புச் சபை அமெரிக்கா ஐ.நா. விதி 51ன்படி சுயப் பாதுகாப்பு உரிமையை ஏற்றது. இந்தச் சுயப்பாதுகாப்பு உரிமை எந்தத் தடைக்கும் உட்பட்டதில்லைஎன்று லாவ்ரோவ் Moskovskie Novosti  இடம் ஜர்தாரி ரஷ்யாவிற்கு வருகையில் கூறினார்.

இஸ்லாமாபாத்தின் தயவை கிரெம்ளின் நாடுகையில், ரஷ்ய ஆளும் உயரடுக்கு அப்பிராந்தியத்தில் அதனுடைய மூலோபாய நலன்களையும் ஆக்கிரோஷமாகத் தொடர்கிறது. இது வடக்கு காகசஸ் பகுதியில் பிரிவினைவாத இஸ்லாமியவாத போராளிகளுடன் மோதல்களில் ஈடுபட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் முன்னாள் சோவியத் குடியரசுகளான தெற்கு காகசஸ் மற்றும் மத்திய ஆசியாவில் உள்ளன.

முன்னாள் சோவியத் குடியரசான டாஜிகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 3,000 படையினர்களை மாஸ்கோ அனுப்ப திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒரு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி ராய்ட்டர்ஸிடம் 2014ல் ஆப்கானிஸ்தானிலிருந்து முக்கிய நேட்டோ வெளியேற்றம் வந்தால் அதிகார வெற்றிடத்தை நிரப்ப திட்டமிட்ட இராணுவ நிலைப்பாடு மேற்கோள்ளப்படும் என்றார். “சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுற்று 20 ஆண்டுகளுக்குப் பின்னும் மாஸ்கோ மத்திய ஆசியாவை அதன் நலன்களின் மண்டலம் என்றுதான் காண்கிறது, இஸ்லாமியவாத வன்முறை அல்லது ஹெரோயின் கடத்தலில் எழுச்சி என்பது முக்கியமான முஸ்லிம், எண்ணெய், எரிவாயு உற்பத்திப் பகுதியில் சமநிலையைச் சீர்குலைக்கலாம் என்ற கவலை உள்ளது.”

முஸ்லிம் பயங்கரவாதிகள் அல்லது போதை மருந்து கடத்தல் பற்றிய கவலைகளையும் தாண்டி, கிரெம்ளின் மத்திய, தென் ஆசியாவில் எரிசக்தி கொழிப்புடைய பகுதியில் அமெரிக்க மேலாதிக்க முயற்சிகளை ஈடு செய்ய உறவுகளை வளர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் முற்படுகிறது. ரஷ்யா, வாஷ்டனின் முயற்சியை எதிர்ப்பதில் முக்கிய கூறுபாடு SCO எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பை அமைப்பு ஆகும்.

2011ல் நிறுவப்பட்ட SCO ரஷ்யா, சீனா ஆகியவற்றின் கூட்டுத் தலைமையில் உள்ளது. இதில் காஜக்கிஸ்டான், கிர்கிஸ்தான், டாஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை உள்ளன. இந்தியா, ஈரான், பாக்கிஸ்தான் ஆகியவை நோக்கர் அந்தஸ்தைக் கொண்டுள்ளன. இது பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பிற்கு ஆதரவு கொடுக்கிறது. உறுப்பு நாடுகள் சமீப ஆண்டுகளில் முக்கிய இராணுவப் பயிற்சிகளை செய்துள்ளன. செப்டம்பர் 2010ல் SCO 5,000 இராணுவ துருப்புக்கள் அடங்கிய காஜக்ஸ்தான் போர் விளையாட்டுக்களை நடத்தியது.

ஜர்தாரியின் பயணத்தின்போது, முதல்தடவையாக மெட்வெடேவ் SCO வில் சேர வேண்டும் என்னும் பாக்கிஸ்தான் வேண்டுகோளுக்கு பகிரங்கமாக ஆதரவு கொடுத்தார். இஸ்லாமாபாத்தின் சீன நட்பு நாடுகளும் பாக்கிஸ்தான் உறுப்பு நாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன.

ரஷ்யாவும் சீனாவும் SCO வை ஆப்கானிய போருக்குபிராந்திய தீர்வு எனப்படுவதின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதற்கு ஆதரவைக் கொடுக்கின்றன. இது நேட்டோ அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டால், அந்த அமைப்பை நாட்டின் பாதுகாப்புப் பங்கைக் கொள்ள விழைகிறது.

அத்தகைய SCO பங்கு ஆப்கானிஸ்தான் மற்றும் முழுப் பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ முயற்சிகளின் முழு உந்துதலுக்கும் எதிராக இருக்கும். ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து ஆக்கிரமித்ததே யூரேசியப் பகுதியில் அதன் அதிகாரத்திற்கு சவால் விடுக்க போட்டி சக்தி அல்லது நாடுகளின் முகாம்கள் வெளிப்படுவதை தடுப்பதற்குத்தான். மத்திய ஆசியாதான் மத்திய கிழக்கிற்கு அடுத்து, உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் எரிவாயுக் குவிப்பைக் கொண்டுள்ளது. இது அதனுடைய பூகோள-அரசியல் சமச்சீர் நிலைக்கு மிகவும் முக்கியமானதாகும். ரஷ்ய பாக்கிஸ்தானிய உறவுகள் ஆழப்படுவதில் கவலை கொள்ளும் நாடு அமெரிக்கா மட்டும் இல்லை, இந்தியாவும்தான். மாஸ்கோவிற்கு ஜர்தாரி பயணிக்கத் தொடங்குகையில் The Hindu எழுதியது: “ரஷ்ய-பாக்கிஸ்தானிய உறவுகள் சமீபத்தில் வியப்படைய வைக்கும் இயக்கத்தைக் கொண்டுள்ளன…. பாக்கிஸ்தான் இப்பொழுது மத்திய, தெற்கு ஆசியாவில் இன்னும் கூடுதலான பங்கைக் கொள்ளவேண்டும் என்னும் ரஷ்ய முயற்சிகளில் மைய அரங்கைக் கொண்டுள்ளது. மாஸ்கோ ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க தலைமைக் கூட்டணிகள் பின்வாங்கப்படுதலை எதிர்நோக்கியுள்ளது.”

ஜர்தாரியின் ரஷ்ய பயணத்தின் முக்கிய கூறுபாடு இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள பொருளாதார உறவுகளில் வளர்ச்சி ஆகும். அதன் பயணத்தின் கடைசி நாளில் ஜர்தாரி ரஷ்ய வணிகத் தலைவர்களை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சந்தித்தார். இக்கூட்டத்தில் அவர் பாக்கிஸ்தானிய உள்கட்டுமானத் திட்டங்களில் ரஷ்ய முதலீட்டிற்கு ஊக்கம் கொடுப்பதில் பெரிதும் குவிப்பைக் காட்டினார்.

பாக்கிஸ்தானின் வணிகத் தலைநகரான கராச்சியின் சகோதரி நகரம் என்று ஜர்தாரி வருகையைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆக்கப்பட்டுள்ள St.Petersburg ல் வணிகப் பிரமுகர்களிடம் உரையாற்றுகையில், ஜர்தாரி எஃகுத் தொழில்துறை, புதிய எண்ணெய், எரிவாயுக் குழாய்த்திட்டங்கள், இரயில்வேக்கள், மின்சாரத்துறை ஆகியவற்றில் முதலீட்டிற்காக அழைப்பு விடுத்தார். “உங்களுக்காகக் கதவுகளைத் திறந்து வைக்க முடியும். வணிகர்கள்தான் இரு நாடுகளுக்கும் இடையேயுள்ள நெருக்கமான வணிக உறவுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என்று ஜர்தாரி கூறினார்.

பாக்கிஸ்தானிய ஜனாதிபதி தன்னுடைய வணிகக் கூட்டத்தினருக்கு ரஷ்ய பாக்கிஸ்தானிய பலவீனமான உறவுகளின் சகாப்தம் முடிந்து விட்டது, நம்பிக்கையற்ற தன்மையில் ஆழ்ந்திருக்க வேண்டிய தேவை இல்லைஎன்று வலியுறுத்தினார்.