WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
IMF head held without bail on sexual assault
charges
IMF
தலைவர் பாலியல் தாக்குதல்
குற்றச்சாட்டுக்களில் பிணை கொடுக்கப்படாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
By
Alex Lantier
17 May 2011
மன்ஹாட்டன் குற்றவியல் நீதிபதி மெலிசா ஜாக்சன் நேற்று சர்வதேச நாணய
நிதியத்தின்
(IMF) நிர்வாக
இயக்குனரும் பிரான்சின் பெருவணிக சோசலிசக் கட்சியின் முக்கிய நபருமான டொமினிக்
ஸ்ட்ராஸ்கானுக்கு பிணை கொடுக்க மறுத்துவிட்டார்.
குற்றம்சாட்டிய
வக்கீல்கள் ஸ்ட்ராஸ் கான் மீது ஒரு நியூ யோர்க் நகர ஹோட்டலின் ஊழியர் மீது பாலியல்
தாக்குதல் நடத்தியதாகக் கூறியிருப்பதுடன்,
அவர் தப்பி ஓடி
விமானத்தில் சென்றுவிடக்கூடிய ஆபத்து உள்ளது என்ற வாதத்தை நீதிபதி ஏற்றார்.
IMF
தலைவர்,
ஏழு குற்றங்களை
எதிர்கொள்கிறார்.
இவற்றுள் இரண்டு
குற்றம் சார்ந்த பாலியல் செயல்கள் ஆகும்.
ஒரு குற்றம் பாலியல்
வல்லுறவு முயற்சி ஆகும்.
இதற்குக் குறைந்தது
அதிகபட்சமாக 74
ஆண்டுகளும்
3 மாதங்கள் சிறை
தண்டனை விதிக்கப்படலாம்.
ஸ்ட்ராஸ்-கான்
நகரத்தின் முக்கிய ரைக்கர்ஸ் தீவிலுள்ள சிறை வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த மே
20ம் திகதி
நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.
அவர் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
அவருடைய வக்கீல்
Benjamin Brafman
அவர் குற்றவாளி
இல்லை என வாதிடப்போவதாகக் கூறியுள்ளார்.
ஸ்ட்ராஸ் கான்
1 மில்லியன் டொலர்
பிணைப் பணம் கொடுத்து நியூ யோர்க்கில் இருக்கும் அவருடைய மகளுடன் வெள்ளி விசாரணை
வரை இருப்பதாகவும் அதன் பின் அனைத்து பயண ஆவணங்களையும் நீதிமன்றத்திடம்
ஒப்படைப்பதாகவும்
Brafman
கோரியதை
ஜாக்சன் மறுத்துவிட்டார்
ஸ்ட்ராஸ்-கானின்
வக்கீல்கள் அவர்
Sofitel ஹோட்டலை
விட்டு சனி பிற்பகல்
12.28க்கு மகளுடன்
பகல் விருந்து உண்பதற்காக நீங்கிவிட்டதாக—இது
கிட்டத்தட்ட பிற்பகல்
1 மணிக்கு ஊழியரை
தாக்கியதை முரண்பாட்டிற்கு உட்படுத்துகிறது—தெரிவித்துள்ளனர்.
ஆனால் நியூ யோர்க்
பொலிஸ்துறை செய்தித்தொடர்பாளர்
Paul Browne
நடந்ததாகக் கூறப்படும்
நிகழ்வுகள் பிற்பகல்
1 மணி நேரம்
என்பதற்குப் பதிலாக மதியவேளையை ஒட்டியே நடந்திருக்கும் என்றார்.
பிரான்ஸ்
“தன்னுடைய நாட்டவரை
வேறு நாட்டிற்கு அனுப்புவதில்லை”
என்பதைக்
குறிப்பிட்ட துணை மாவட்ட அரசாங்க வக்கீல்
Artie McConnell
ஸ்ட்ராஸ் கான் அமெரிக்காவை
விட்டுத் தப்பியோடக்கூடும் என்று வாதிட்டார்.
“இந்நாட்டில் அவர்
தங்கியிருப்பதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை.
உலகம் முழுவதும்
பரந்த தொடர்பு இணையங்களை அவர் கொண்டுள்ளார்”
என்று அரசாங்க
வக்கீல் கூறினார்.
விசாரணை அறிக்கைகள் ஹோட்டல் அறை ஊழியர் தாக்குதல் குற்றச்சாட்டு
பற்றிய விரிவான தகவலை உறுதிப்படுத்தியுள்ளன என்றும் அரசாங்க வக்கீல்கள் கூறினர்.
ஸ்ட்ராஸ் கானிடம்
இருந்து அவர்கள்
DNA சான்றுகளைச்
சேகரிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
நீதிபதி ஜாக்சன்,
ஸ்ட்ராஸ்கான் சனி
பிற்பகல் பாரிசுக்கு ஒரு ஏயர் பிரான்ஸ் விமானத்தில் ஏறிய பின் காவலில்
எடுக்கப்பட்டார் என்ற உண்மையை மேற்கோளிட்டார்.
இது ஸ்ட்ராஸ் கான்
ஊழியருடன் முரண்பாடு நடந்ததாகக் கூறப்படும் சில மணி நேரம் கழிந்து நடந்துள்ளது.
IMF ன் தலைவருடைய
வக்கீல்,
பிணை கொடுப்பதில்லை என்ற
முடிவினால் “ஏமாற்றம்
அடைந்துள்ளதாகக்”
கூறி,
தங்களுடைய
கட்சிக்காரரின் நிரபராதத் தன்மையை நிரூபிக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினர்.
ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் பிணை எடுப்புக்கள் மற்றும் சமூகநலச்
செலவுக் குறைப்புக்கள் என்று ஐரோப்பாவில் கடனாளி நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை
மேற்பார்வையிட்ட ஸ்ட்ராஸ் கானின் கறை,
பிரான்ஸ் மற்றும்
சர்வதேச அரசியலை ஒரு நெருக்கடியில் தள்ளியுள்ளது.
அடுத்த ஆண்டு
ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார் என
எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
கருத்துக்
கணிப்புக்களிலும் அவர் முன்னணியில் இருந்தார்.
PS
ன் செய்தித் தொடர்பாளர்
Benoît Hamon,
AFP செய்தி
அமைப்பிடம் நேற்று,
“உண்மைகள் தான்
விரைவில் எங்கள் மனப்போக்கை நிர்ணயிக்கும்
…. உண்மைகள்
உறுதியாகத் தெரியாத வரை எங்கள் நிலைப்பாடு மாறாமல் இருக்கும்.
உண்மைகள் விரைவில்
வெளிவந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது”
என்றார்.
ஆனால்
PS நியூ யோர்க்கில்
நடந்த நிகழ்வுகள் பற்றி பெரும் அதிர்ச்சிக்கு உட்பட்டுள்ளது என்பதை அவருடைய
கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டின.
“ஒருபுறத்தில்
அரசியல் கட்சி என்ற முறையில் எங்களுக்கு பிரச்சினை இல்லை,
எனவே
உறுதிப்பாட்டிற்குத் தூணாக இருக்க விரும்புகிறோம்,
எங்கள்
செயற்பட்டியல்,
எங்கள் கூட்டங்கள்
அனைத்தையும் மாறாமல் செயல்படுத்தும்.
மறுபக்கத்தில்
எங்கள் உறுப்பினர்களில் ஒருவர் ஒரு தீவிரச் செயலில் உட்படுத்தப்பட்டுள்ளார்
—
அவர் குற்றவாளி எனக்
கண்டுபிடிக்கப்பட்டால் அப்படித்தான் இருக்கும்.
ஆனால் அவரோ
எப்பொறுப்பும் இல்லை என மறுத்துள்ளார்.”
கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி செல்வாக்கு இழந்துள்ள
நிலையில்,
பிரான்ஸின் குட்டி
முதலாளித்துவ “இடது”
சக்திகள்
PS க்கு தொழிலாள
வர்க்கத்தைப் இணைக்கும் பிற்போக்குப் பங்கைக் கொண்டிருக்கையில்,
ஸ்ட்ராஸ்கான்
மற்றும் நவ பாசிச வேட்பாளர்
Marine Le Pen
இருவரும் 2012
தேர்தல்களில்
முக்கிய வேட்பாளர்களாக வெளிப்பட்டுள்ளனர்.
சர்வதேச செய்தி
ஊடகம் பெருகிய முறையில் ஸ்ட்ராஸ் கான் கைது செய்யப்பட்டுள்ளதானது அவரைப் போட்டியில்
இருந்து அகற்றி லு பென்னுடைய வாய்ப்புக்களை வலுப்படுத்தும் என்று பெருகிய முறையில்
கவலை கொண்டுள்ளது.
I-Télé
தொலைக்காட்சியில் பேசிய
Le Pen, ஸ்ட்ராஸ்
கான் வேட்பாளர் என்னும் முறையில்
“உறுதியாக
மதிப்பிழந்துவிட்டார்”
என்றார்.
“DSK –டொமினிக்
ஸ்ட்ராஸ் கான்—விவகாரத்தின்
சேதம் இடதை வலுவிழக்கச் செய்யும்,
இதில் ஆதாயம் பெறுபவர்கள் ஆளும்
UMP
கட்சியினராக இருக்க மாட்டார்கள்.
மரின் லு பென் சடுதியில் செயல்பட்டு
DSK
ஐ மதிப்பிழந்த பழைய அரசியல் வர்க்கத்தின் அடையாளம் என்று சாடியுள்ளார்.
ஒரு
“வெளியாள்”
என்னும் முறையிலும் அரசியலில் பெண் என்ற முறையிலும் இந்த
இழிசெயலில் இருந்து லு பென் அதிக ஆதாயம் அடைக்கூடும்”
என்று
கார்டியன்
கூறியுள்ளது.
பல பிரெஞ்சு அரசியல்வாதிகள் ஸ்ட்ராஸ் கான் ஒரு சதித்திட்டத்தின்
இலக்கு,
சார்க்கோசி
அரசாங்கம் அதன் முக்கிய போட்டியாளரை இழிவுபடுத்தும் முயற்சி இது அல்லது அவருடைய
IMF தலைவர் என்ற
முறையிலான நிதியக் கொள்கைகளில் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிகாரிகளின் செயலாக
இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பாரிசை
உள்ளடக்கியுள்ள
Ile-de-France
பகுதியின் துணைத் தலைவரான,
PS கட்சிக்குள்
ஸ்ட்ரான் கான் பிரிவில் உறுப்பினராக இருப்பவருமான,
Michèle Sabban
அவருக்கு எதிராக ஒரு
“சர்வதேச
சதித்திட்டம்”
இருந்தது எனத் தான்
நம்புவதாகக் கூறினார்.
வலதுசாரி அரசியல்வாதி
Christine Boutin
ம் இதில் ஒரு
“பொறி”
உள்ளது எனக் கூறும்
வகையில், “இது
IMF இடம் இருந்து
வந்திருக்கலாம்,
பிரெஞ்சு வலதிடம்
இருந்து வந்திருக்கலாம் அல்லது பிரெஞ்சு இடதில் இருந்து வந்திருக்கலாம்”
என்றார்—அதாவது
PS க்குள் ஸ்ட்ராஸ்
கானின் போட்டியாளர்களிடம் இருந்து.
ஆனால் ஸ்ட்ராஸ் கான் கைது விவகாரத்தில் ஒரு மூன்றாவது தரப்பும்
பங்கைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில் எத்தகவலும்
வெளிப்பட்டுவிடவில்லை.
பிரான்சை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியான
UMP
யின் சில
அரசியல்வாதிகள்,
ஸ்ட்ராஸ் கானுக்கு
எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாகக் கூறியுள்ளனர்.
UMP பிரதிநிதி
Jacques Myard
கூறினார்: “இப்பொழுது
உண்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளது,
நாம் உண்மையை
எதிர்கொள்ள வேண்டும்.
சதித்திட்டம்
பற்றிப் பேசுபவர்கள் காரணத்தை நன்கு காட்ட வேண்டும்.
இன்று முகமூடிகள்
சரிந்து கொண்டிருக்கின்றன,
பல தீர்மானமான
விவரங்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன.”
கன்சர்வேடிவ் பிரெஞ்சு அரசியல்வாதி
Bernard Debré
கைது நடந்ததற்குக் காரணம்
ஸ்ட்ராஸ் கான் பலமுறையும் நியூ யோர்க் நகர சோபிடெல்லில் மோதல்களை
எதிர்கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளார்.
“அங்குள்ள ஊழியர்கள்
கலகம் செய்ய இருந்தனர்.
நிர்வாகம் இது
பற்றித் தெரிந்திருந்தது.
ஆனால் இதுவரை ஏதும்
கூற அச்சப்பட்டது.
மற்ற நிகழ்வுகளை அது
மூடி மறைத்துவிட்டது.”
ஜனாதிபதி சார்க்கோசியின் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிக்கை எதையும்
அளிக்கவில்லை.
ஆனால் தன்னை
Debré
கருத்துக்களில் இருந்து
ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளது.
ஒற்றுமைக்கான
மந்திரி Roselyne
Bachelot அவருடைய
கருத்துக்கள்
“உகந்தவை அல்ல”,
“சீராக இல்லை”
என்றார்.
Accor
க்கு உரிமையான
Sofitel--
ஐரோப்பாவில் மிகப் பெரிய ஹோட்டல் குழு—
Debré உடைய
குற்றச்சாட்டுகள் நிர்வாகத்தைப் பற்றிய
“அவதூறான”
கருத்துக்கள் என்று
கண்டனம் தெரிவித்துள்ளது.
அதனுடைய பாரிஸ்
அலுவலகங்களில் இருந்து அது மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது:
“சோபிடெல் நிர்வாகம்
கடுமையான விதிகளைக் கையாள்கிறது.
ஒரு சிறப்பு எண்
குறிப்பிட்ட உண்மைகளைக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவர்களுக்கு எப்பொழுதும்
அளிக்கப்படுகிறது.
இது ஓராண்டாக
நடைமுறையில் உள்ளது….முந்தைய
தாக்குதல் முயற்சிகள் பற்றி நிர்வாகத்திற்கு ஏதும் தெரியாது.”
நிதியச் செய்தி ஊடகமும் ஸ்ட்ராஸ் கான் கைது செய்யப்பட்டுள்ளது
சந்தைகளை அதிர்விற்கு உட்படுத்தும்,
ஏனெனில் அவர் கடனாளி
நாடுகளுக்கு விவாதத்திற்குரிய பிணை எடுப்புக்கள் பற்றிய சர்வதேச உடன்பாட்டை
அடைவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்,
குறிப்பாக ஐரோப்பிய
கடன் நெருக்கடிப் பின்னணியில் என்று கூறியுள்ளது.
போர்த்துக்கல்லிற்கு
78 பில்லியன்
யூரோக்கள் கொடுத்தலிலுள்ள விதிமுறைகள்—ஓய்வூதியங்களில்
ஆழ்ந்த வெட்டுக்கள்,
ஊதியங்கள் மற்றும்
சுகாதாரச் செலவுகளில் பெரும் குறைப்புக்களுக்கு ஈடாக வருவது—ஒப்புக்
கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால்
கிரேக்கத்திற்கு இன்னும் கடன்களை விரிவாக்குவதா பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன.
அங்கு
சமூகநலச்செலவுக் குறைப்புக்கள் நாட்டை பொருளாதார பதட்டத்திற்கு உட்படுத்தியுள்ளது,
கடன்களைத் திருப்பி
கொடுப்பதில் தடை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவிற்குள் இருந்த ஆழ்ந்த பிளவுகளைச் சரிப்படுத்த ஸ்ட்ராஸ்
கான் உதவினார் என்று கூறப்படுகிறது.
ஒரு ஐரோப்பிய
அதிகாரி
பைனான்சியல்
டைம்ஸிடம்
“நிதிய
நெருக்கடியின் போது
IMF ல் ஒரு நல்ல
இயக்குனராகத் தன்னைக் காட்டிக் கொண்டார்.
அவருடைய
நம்பிக்கைகளுக்கு வெற்றிகர ஆதரவைப் பெற்றதுடன் மற்றவர்கள் உடன்படுமாறும் செய்தார்,
இது ஒன்றும் சிறிய
விடயம் அல்ல.”
ஸ்ட்ராஸ் கான் கைது செய்யப்படுமுன் அவர் ஜேர்மனியச் சான்ஸ்லர்
அங்கேலா மேர்க்கலைச் சந்திக்கப் பேர்லினுக்குப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தார்.
முன்னதாக அவர் பிணை
எடுப்புக்களை எதிர்த்திருந்தார்
– அவற்றிற்குப்
பதிலாக நாடுகளை கடன் கட்டமுடியாத நிலைக்குத் தள்ள விரும்பியிருந்தார்.
|