WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
கணனி தொழில்நுட்பம்
Microsoft and the future of Skype
மைக்ரோசாப்டும்,
ஸ்கைப்பின் எதிர்காலமும்
By Mike Ingram
16 May 2011
ஒலி மற்றும்
ஒளிப்பட
இணையவழி
சேவையான
(online voice and video service)
ஸ்கைப்பிற்கு
மைக்ரோசாப்ட்
8.5 பில்லியன்
டாலரை
வழங்கியது
என்ற,
மே
10 செவ்வாயன்று
வெளியான
அறிவிப்பு,
மைக்ரோசாப்டின்
நோக்கங்கள்
மற்றும்
ஸ்கைப்
சேவையின்
எதிர்காலம்
குறித்து
பெரும்
ஊகங்களை
எழுப்பியுள்ளன.
கடந்த
ஆண்டு
860 மில்லியன்
டாலர்
வருவாயில்
7 மில்லியன்
டாலர்
நிகர
இழப்பைக்
கண்ட
ஒரு
நிறுவனம்,
எந்த
மதிப்பீட்டின்படி
பார்த்தாலும்,
இந்த
உடன்படிக்கைக்காக
அதிக
விலை
கொடுத்துள்ளது.
ஸ்கைப்பின்
முதன்மை
பங்கு
வெளியீட்டின்
மதிப்பு,
அந்த
சேவைக்காக
மைக்ரோசாப்ட்
அளித்த
தொகையைவிட
50 சதவீதம்
குறைவாக
மதிப்பிடப்பட்டிருந்தது.
இது
மைக்ரோசாப்டின்
முன்பில்லாத
அளவிற்கு
மிகப்
பெரிய
கையகப்படுத்தலாகும்.
ஆனால்
இது
அந்த
பிரமாண்ட
நிறுவனத்தின்
செல்வவளத்தில்
ஒரு
சிறிய
அளவு
தான்.
சுமார்
220 பில்லியன்
டாலர்
நிகர
மதிப்பை
மைக்ரோசாப்ட்
கொண்டுள்ளது.
மென்பொருள்
அபிவிருத்தியாளர்கள்
நிக்லஸ்
ஜென்ஸ்ட்ராம்
மற்றும்
ஜானுஸ்
ப்ரிஸால்
2003இல்
முதன்முதலாக
ஸ்கைப்
தொடங்கப்பட்டது.
அவ்விருவரும்
அதற்கு
முன்னர்
ஒருமுறையிலிருந்து
மறுமுறைக்கு
நேரடி
கோப்பு-பகிர்வு
சேவையான
(peer to peer file-sharing service) Kazaa
என்பதை
அபிவிருத்தி
செய்திருந்தனர்.
அதே
தொழில்நுட்ப
அடித்தளத்தில்
அமைந்திருக்கும்
ஸ்கைப்,
செலவுமிக்க
சர்வர்
(server)
தொழில்நுட்பத்தில்
முதலீடு
செய்வதற்கு
மாறாக
பயனர்களின்
(user)
கணினியை
முழுமையாகப்
பயன்படுத்திக்
கொள்ளும்
வகையில்
அந்த
சேவையை
அனுமதிக்கிறது.
பாரிய தொலைத்தொடர்பு
நிறுவனங்களின்
உதவியின்றி,
கணினியிலிருந்து
கணினிக்கும்,
பின்னர்
கணினியிலிருந்து
தரைவழி
தொலைபேசிகளுக்கும்
சர்வதேச
அழைப்புகளை
மேற்கொள்ள
அனுமதிக்கும்
அதன்
திறன்
உடனடியாக
அனைவரின்
கவனத்தையும்
ஈர்த்தது.
செப்டம்பர்
2005 வாக்கில்
பதிவு
செய்த
50,000 பயனர்களைக்
கொண்டிருந்த
ஸ்கைப்,
ஏப்ரல்
2006 வாக்கில்
100,000 என்ற
எண்ணிக்கையை
எட்டி
இரட்டிப்பாக்கியது.
இன்று,
ஒரு
மதிப்பீட்டின்படி,
உலகளவில்
170 மில்லியன்
மக்கள்
ஸ்கைப்
பயனர்களாக
உள்ளனர்.
மொத்த
சர்வதேச
தொலைபேசி
அழைப்புகளில்
ஒரு
கால்
பகுதி
ஸ்கைப்பில்
நிகழ்வதாக
கூறப்பட்டது.
ஸ்கைப்பின்
இந்த
பிரமாண்ட
வெற்றி,
அந்த
பயனர்
அடித்தளத்தை
மூலதனமாக்க
அதை
பெருநிறுவனங்களின்
முதல்
இலக்கில்
கொண்டு
வந்தது. 2005இல்
இணையவழியில்
பொருட்களை
ஏலவிற்பனை
செய்யும்
வலைத்
தளமான
eBay, ஸ்கைப்பை
அதன்
ஏலவிற்பனை
சேவைகளோடு
ஒருங்கிணைக்கும்
கண்ணோட்டத்தில்
ஸ்கைப்பை
வாங்கியது.
ஆனால்
ஒருங்கிணைப்பு
ஒருபோதும்
நடக்கவில்லை.
2009இல்
eBay ஸ்கைப்பின்
70 சதவீத
பங்குகளை
ஒரு
முதலீட்டு
குழுமத்திடம்
விற்பனை
செய்தது.
அக்குழுமத்தில்
Netscape, Marc Andreeseen
போன்ற
நிறுவனங்களின்
முன்னாள்
ஸ்தாபகர்களும்
உள்ளடங்குவர்.
அந்த
70 சதவீத
பங்கு
2.75 பில்லியனாக
மதிப்பிடப்பட்டது.
மைக்ரோசாப்டால்
வாங்கப்பட்டிருப்பது,
ஜனநாயகம்
மற்றும்
சுதந்திரமான
கருத்து
பரிமாற்றத்திற்கு
ஒரு
நிஜமான
அச்சுறுத்தலை
முன்னிறுத்துகிறது.
மில்லியன்
கணக்கான
மக்களின்
ஓர்
அத்தியாவசிய
பயன்பாடாக
எது
இருந்ததோ,
அது
இப்போது
உலகின்
மிகப்பெரிய
பெருநிறுவனங்களில்
ஒன்றின்
- தனது
சொந்த
ஏகபோகத்தைத்
தக்கவைக்கும்
ஆர்வங்களில்
தொழில்நுட்ப
அபிவிருத்திகளை
கீழ்ப்படிய
வைப்பதில் சாதனைகளைக்
கொண்டிருக்கும்
ஒரு
நிறுவனத்தின்
கட்டுப்பாட்டில்
உள்ளது.
ஸ்கைப்
தொழில்நுட்பத்தைக்
கொண்டு
மைக்ரோசாப்ட்
எவ்வாறு
இலாபம்
பார்க்க
போகிறது
அல்லது
அந்நிறுவனத்தால்
முன்னர்
வாங்கப்பட்ட
Groove, Placeware, Massive, LinkExchange
மற்றும்
WebTV உட்பட
பல
நிறுவனங்களைப்
போன்றே
(இந்நிறுவனங்கள்
மூடப்பட்டுவிட்டன)
இதுவும்
அதே
வழியில்
போகப்போகிறதா
என்பது
இன்னும்
தெளிவாகவில்லை.
மைக்ரோசாப்ட்
அதன்
மின்னஞ்சல்
சேவையான
Outlook மற்றும்
Exchange Mail Server
ஆகியவற்றில்
ஸ்கைப்பை
இணைப்பதன்
மூலம்,
அந்த
சேவைக்கு
ஒரு
தொகையை
வசூலித்து
அதன்
வியாபாரத்தைப்
பெருக்கும்
என்ற
நம்பிக்கையில்,
ஸ்கைப்பை
அது
அச்சேவைகளுடன்
ஒருங்கிணைக்கும்
என்று
சில
விமர்சகர்கள்
ஊகிக்கின்றனர்.
XboxLive வலையமைப்பில்
நேரடி
ஒளிப்பட
மற்றும்
ஒலிவழி
சேவைகளை
வழங்கி,
அவ்விதத்தில்
ஒரு
பரந்த
வாடிக்கையாளர்
தளத்தைப்
பெற
முடியும்
என்ற
நம்பிக்கையின்
அடிப்படையில்,
அதைப்
பயன்படுத்திக்
கொள்வதற்கான
ஏனைய
வியாபார
சாத்தியக்கூறுகளும்
உள்ளன.
மைக்ரோசாப்ட்
அதன்
MSN உரையாடல்
பரிமாற்ற
(chat) சேவையிலும்,
வியாபார
நிறுவனங்களிடையே
பரவலாக
பயன்படுத்தப்படும்
Netmeeting
சேவையிலும்
அதன்
சொந்த
ஒளிப்பட
மற்றும்
ஒலிவழி
தொழில்நுட்பத்தை
ஏற்கனவே
பயன்படுத்திக்
கொண்டிருக்கின்ற
போதினும்,
ஸ்கைப்பிடம்
இருக்கும்
பெரும்
பயனர்
அடித்தளமே
அதனிடம்
இல்லாமல்
இருக்கிறது.
ஸ்கைப்
மீது
ஏற்பட்ட
மைக்ரோசாப்டின்
ஆர்வமானது,
Netmeeting இற்கு
பதிலாக
ஸ்கைப்
சேவையில்
அதிகரித்திருக்கும்
வெகுஜன
பயன்பாடு
அந்நிறுவனத்தின்
இலாபத்திற்கு
அச்சுறுத்தலை
முன்னிறுத்துகிறது
என்பதோடு
பிணைந்துள்ளது.
ஸ்கைப்
மலிவான
தொலைபேசி
அழைப்புகளையும்,
கணினியிலிருந்து
கணினிக்கு
இலவச
அழைப்புகளையும்
மட்டும்
வழங்கவில்லை,
மாறாக
இப்போது
திரை-பகிர்வு
(screen sharing)
மற்றும்
ஒளிப்பட
கலந்துரையாடல்
(video conferencing)
வசதிகளையும்
வழங்குகிறது.
இது
Netmeeting போன்ற
பயன்பாடுகளுக்கு
ஒரு
கவர்ச்சிகரமான
இலவச
மாற்றாக
அதை
முன்கொண்டு
வந்து
நிறுத்திவிடுகிறது.
ஏற்கனவே
2005இல்
eBay நிறுவனத்தால்
ஸ்கைப்
கையகப்படுத்தப்பட்ட
போதே,
ஸ்கைப்பின்
எதிர்காலம்
குறித்த
கவலைகள்
எழுப்பப்பட்டன.
ஸ்கைப்பின்
அபிவிருத்தியில்
இருந்த
வெளிப்படையற்ற
குணாம்சம்
மற்றும்
திறந்த
தரமுறைகளுக்கு
(open standards)
மாறாக
காப்புரிமையின்கீழ்
பயன்படுத்துதல்
ஆகியவை
கவலைகளாக
இருந்தன.
ஸ்கைப்
ஓர்
இலவசமான
மற்றும்
திறந்த
மாற்றீடாக
இருந்தபோதினும்,
பயனர்கள்
அவர்களின்
ஸ்கைப்
தொடர்புகளை
வேறொரு
பயன்பாட்டோடு
பகிர்ந்து
கொள்ள
வழியில்லாமல்
இருந்தது.
2007இல்
ஸ்கைப்பிற்கு
மாற்றாக
Gizmo திட்டம்
என்றழைக்கப்பட்டது
அதிகளவில்
பிரபலமாக
எழுந்தது.
Gizmo பயன்பாடும்
காப்புரிமையின்கீழ்
இருந்தது
தான்
என்றாலும்,
அது
Session Initiation Protocol (SIP)
மற்றும்
Extensible Messaging and Presence Protocol (XMPP)
போன்ற
திறந்த பரிமாற்ற
தரமுறைகளை
(open transportation standards)
அச்சேவை
பயன்படுத்தியது.
ஸ்கேப்பை
விட
இந்த
பயன்பாட்டில்
ஒரு
கூடுதல்
ஆதாயம்
இருந்தது.
அதாவது,
கலந்துரையாடல்
(conference)
செய்வதற்குரிய
தொலைபேசி
எண்ணைப்
பதிவு
செய்யவும்,
சாதாரண
தொலைபேசியில்
இருந்தோ
அல்லது
ஒரு
கணினியில்
இருந்தோ
கலந்துரையாடலுக்கு
அழைக்கவும்
அதில்
வசதி
இருந்தது.
Gizmo ஒரு
கணிசமான
பயனர்
எண்ணிக்கையைப்
பெற்று,
அவர்களைத்
தக்கவைக்க
தொடங்கிய
உடனேயே,
அது
2009இல்
கூகுளினால்
வாங்கப்பட்டது.
அதை
பின்னர்,
கூகுள்
அதன்
சொந்த
Google Voice
அடித்தளத்திற்காக
இந்த
ஆண்டு
ஏப்ரலில்
Gizmoவை
முடித்துவிட்டது.
ஸ்கைப்பைச்
சாத்தியப்படுத்திய
தொழில்நுட்ப
அபிவிருத்தியானது,
முன்னொருபோதும்
இல்லாத
எல்லைக்
கடந்த
சமூக
தொடர்புகளுக்கு
இட்டுச்சென்ற
கடந்த
இரண்டு
தசாப்தங்களின்
தொழில்நுட்ப
அபிவிருத்திகளோடு
பிணைந்துள்ளது.
இந்த
ஆண்டின்
தொடக்கத்தில்
எகிப்தில்
முபாரக்
ஆட்சிக்கு
எதிராக
எழுந்த
மக்கள்
போராட்டங்களைப்
பரப்புவதில்
Twitter மற்றும்
Facebook போன்ற
சமூக
வலையமைப்பு
கருவிகளோடு
சேர்ந்து,
ஸ்கைப்பும்
ஒரு
காரணியாக
இருந்ததாக
பார்க்கப்பட்டது.
ஸ்கைப்
போன்ற
சேவைகள்
முதலாளித்துவ
பெருநிறுவனங்களால்
இலாபம்
கோருவதற்கு
மட்டும்
இரையாக்கப்படுவதில்லை,
மாறாக
அரசாங்க
தலையீடுகள்
மற்றும்
ஒட்டுமொத்தமாக
அடுக்குமுறைக்கும்
கூட
இரையாக்கப்படுகின்றன.
இந்த
ஆண்டின்
பெப்ரவரியில்
நியூயோர்க்
டைம்ஸ்
எழுதியது, “அமெரிக்க
உளவுத்துறை
(F.B.I.) அதன்
கண்காணிக்கும்
முறைகளோடு
இணங்கச்
செய்யும்
ஒரு
உள்ளார்ந்த
நுட்பத்தில்
அவற்றின்
அமைப்புமுறையை
வடிவமைக்க,
Gmail, Facebook, Twitter, BlackBerry
மற்றும்
Skype போன்ற
இணையவழி
தொலைதொடர்பு
சேவைகளைக்
கோரும்
ஒரு
முனைவிற்காக
பல
ஆண்டுகளாகவே
சத்தமில்லாமல்
இயங்கிவருகிறது.”
அந்த
நாளிதழ்
அமெரிக்க
உளவுத்துறையின்
பொது
குழுவின்
Valerie Caproni ஆல்
குறிப்பிடப்பட்டதை
மேற்கோளிட்டது:
“சமீபத்திய
ஆண்டுகளில்
ஏற்பட்டிருக்கும்
தொலைதொடர்பு
தொழில்நுட்பத்தின்
புரட்சிகர
விரிவாக்கத்தால்,
இணையவழி
தொலைத்தொடர்பு
பற்றிய நீதிமன்ற
உத்தரவுகளைச்
செயல்படுத்தும்
அரசாங்கத்தின்
திறமை
விரைவாக
அதன்
தளத்தை
நழுவவிட்டு
கொண்டிருப்பதை
அரசாங்கம்
காண்கிறது.”
அரசாங்கத்தின் அழைப்பாணைக்கு சத்தமில்லாமல்
இணங்கிபோகும்
மைக்ரோசாப்டின்
நிலைச்சான்று காரணமாக,
புஷ்
நிர்வாகத்தின்
சட்டவிரோத
உள்நாட்டு
உளவு
வேலைகளில்
உதவிய
மற்றும்
2008இல்
ஜனநாயக
கட்சி
கட்டுப்பாட்டில்
இருந்த
செனட்டிடம்
இருந்து
சட்டவிலக்கு
பெற்ற
பெருவியாபார
தொலைதொடர்பு
நிறுவனங்களுக்கு
மாற்றாக,
இந்த
உள்ளார்ந்து
நிலைகுலைக்கும்
மாற்றீடுகள்
மீது
சிறந்த
கட்டுப்பாடுகளை
உருவாக்க
ஒரு
கருவியாக,
இந்த
கையகப்படுத்தலை
FBI வரவேற்கும்
என்பதில்
எந்த
சந்தேகமும்
இல்லை. |