சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  கணனி தொழில்நுட்பம்

Microsoft and the future of Skype

மைக்ரோசாப்டும், ஸ்கைப்பின் எதிர்காலமும்

By Mike Ingram
16 May 2011
Use this version to print | Send feedback

ஒலி மற்றும் ஒளிப்பட இணையவழி சேவையான (online voice and video service) ஸ்கைப்பிற்கு மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலரை வழங்கியது என்ற, மே 10 செவ்வாயன்று வெளியான அறிவிப்பு, மைக்ரோசாப்டின் நோக்கங்கள் மற்றும் ஸ்கைப் சேவையின் எதிர்காலம் குறித்து பெரும் ஊகங்களை எழுப்பியுள்ளன.

கடந்த ஆண்டு 860 மில்லியன் டாலர் வருவாயில் 7 மில்லியன் டாலர் நிகர இழப்பைக் கண்ட ஒரு நிறுவனம், எந்த மதிப்பீட்டின்படி பார்த்தாலும், இந்த உடன்படிக்கைக்காக அதிக விலை கொடுத்துள்ளது. ஸ்கைப்பின் முதன்மை பங்கு வெளியீட்டின் மதிப்பு, அந்த சேவைக்காக மைக்ரோசாப்ட் அளித்த தொகையைவிட 50 சதவீதம் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது மைக்ரோசாப்டின் முன்பில்லாத அளவிற்கு மிகப் பெரிய கையகப்படுத்தலாகும். ஆனால் இது அந்த பிரமாண்ட நிறுவனத்தின் செல்வவளத்தில் ஒரு சிறிய அளவு தான். சுமார் 220 பில்லியன் டாலர் நிகர மதிப்பை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது

மென்பொருள் அபிவிருத்தியாளர்கள் நிக்லஸ் ஜென்ஸ்ட்ராம் மற்றும் ஜானுஸ் ப்ரிஸால் 2003இல் முதன்முதலாக ஸ்கைப் தொடங்கப்பட்டது. அவ்விருவரும் அதற்கு முன்னர் ஒருமுறையிலிருந்து மறுமுறைக்கு நேரடி கோப்பு-பகிர்வு சேவையான (peer to peer file-sharing service) Kazaa என்பதை அபிவிருத்தி செய்திருந்தனர். அதே தொழில்நுட்ப அடித்தளத்தில் அமைந்திருக்கும் ஸ்கைப், செலவுமிக்க சர்வர் (server) தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கு மாறாக பயனர்களின் (user) கணினியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அந்த சேவையை அனுமதிக்கிறது.

பாரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதவியின்றி, கணினியிலிருந்து கணினிக்கும், பின்னர் கணினியிலிருந்து தரைவழி தொலைபேசிகளுக்கும் சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் அதன் திறன் உடனடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செப்டம்பர் 2005 வாக்கில் பதிவு செய்த 50,000 பயனர்களைக் கொண்டிருந்த ஸ்கைப், ஏப்ரல் 2006 வாக்கில் 100,000 என்ற எண்ணிக்கையை எட்டி இரட்டிப்பாக்கியது. இன்று, ஒரு மதிப்பீட்டின்படி, உலகளவில் 170 மில்லியன் மக்கள் ஸ்கைப் பயனர்களாக உள்ளனர். மொத்த சர்வதேச தொலைபேசி அழைப்புகளில் ஒரு கால் பகுதி ஸ்கைப்பில் நிகழ்வதாக கூறப்பட்டது.   

ஸ்கைப்பின் இந்த பிரமாண்ட வெற்றி, அந்த பயனர் அடித்தளத்தை மூலதனமாக்க அதை பெருநிறுவனங்களின் முதல் இலக்கில் கொண்டு வந்தது. 2005இல் இணையவழியில் பொருட்களை ஏலவிற்பனை செய்யும் வலைத் தளமான eBay, ஸ்கைப்பை அதன் ஏலவிற்பனை சேவைகளோடு ஒருங்கிணைக்கும் கண்ணோட்டத்தில் ஸ்கைப்பை வாங்கியது. ஆனால் ஒருங்கிணைப்பு ஒருபோதும் நடக்கவில்லை. 2009இல் eBay ஸ்கைப்பின் 70 சதவீத பங்குகளை ஒரு முதலீட்டு குழுமத்திடம் விற்பனை செய்தது. அக்குழுமத்தில் Netscape, Marc Andreeseen போன்ற நிறுவனங்களின் முன்னாள் ஸ்தாபகர்களும் உள்ளடங்குவர். அந்த 70 சதவீத பங்கு 2.75 பில்லியனாக மதிப்பிடப்பட்டது.    

மைக்ரோசாப்டால் வாங்கப்பட்டிருப்பது, ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான கருத்து பரிமாற்றத்திற்கு ஒரு நிஜமான அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது. மில்லியன் கணக்கான மக்களின் ஓர் அத்தியாவசிய பயன்பாடாக எது இருந்ததோ, அது இப்போது உலகின் மிகப்பெரிய பெருநிறுவனங்களில் ஒன்றின் - தனது சொந்த ஏகபோகத்தைத் தக்கவைக்கும் ஆர்வங்களில் தொழில்நுட்ப அபிவிருத்திகளை கீழ்ப்படிய வைப்பதில் சாதனைகளைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. (பார்க்கவும்: "The Microsoft law suit, software development and the capitalist market ")  

ஸ்கைப் தொழில்நுட்பத்தைக் கொண்டு மைக்ரோசாப்ட் எவ்வாறு இலாபம் பார்க்க போகிறது அல்லது அந்நிறுவனத்தால் முன்னர் வாங்கப்பட்ட Groove, Placeware, Massive, LinkExchange மற்றும் WebTV உட்பட பல நிறுவனங்களைப் போன்றே (இந்நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன) இதுவும் அதே வழியில் போகப்போகிறதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

மைக்ரோசாப்ட் அதன் மின்னஞ்சல் சேவையான Outlook மற்றும் Exchange Mail Server ஆகியவற்றில் ஸ்கைப்பை இணைப்பதன் மூலம், அந்த சேவைக்கு ஒரு தொகையை வசூலித்து அதன் வியாபாரத்தைப் பெருக்கும் என்ற நம்பிக்கையில், ஸ்கைப்பை அது அச்சேவைகளுடன் ஒருங்கிணைக்கும் என்று சில விமர்சகர்கள் ஊகிக்கின்றனர். XboxLive வலையமைப்பில் நேரடி ஒளிப்பட மற்றும் ஒலிவழி சேவைகளை வழங்கி, அவ்விதத்தில் ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஏனைய வியாபார சாத்தியக்கூறுகளும் உள்ளன

மைக்ரோசாப்ட் அதன் MSN உரையாடல் பரிமாற்ற (chat) சேவையிலும், வியாபார நிறுவனங்களிடையே பரவலாக பயன்படுத்தப்படும் Netmeeting சேவையிலும் அதன் சொந்த ஒளிப்பட மற்றும் ஒலிவழி தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற போதினும், ஸ்கைப்பிடம் இருக்கும் பெரும் பயனர் அடித்தளமே அதனிடம் இல்லாமல் இருக்கிறது.   

ஸ்கைப் மீது ஏற்பட்ட மைக்ரோசாப்டின் ஆர்வமானது, Netmeeting இற்கு பதிலாக ஸ்கைப் சேவையில் அதிகரித்திருக்கும் வெகுஜன பயன்பாடு அந்நிறுவனத்தின் இலாபத்திற்கு அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது என்பதோடு பிணைந்துள்ளது. ஸ்கைப் மலிவான தொலைபேசி அழைப்புகளையும், கணினியிலிருந்து கணினிக்கு இலவச அழைப்புகளையும் மட்டும் வழங்கவில்லை, மாறாக இப்போது திரை-பகிர்வு (screen sharing) மற்றும் ஒளிப்பட கலந்துரையாடல் (video conferencing) வசதிகளையும் வழங்குகிறது. இது Netmeeting போன்ற பயன்பாடுகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான இலவச மாற்றாக அதை முன்கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது

ஏற்கனவே 2005இல் eBay நிறுவனத்தால் ஸ்கைப் கையகப்படுத்தப்பட்ட போதே, ஸ்கைப்பின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுப்பப்பட்டன. ஸ்கைப்பின் அபிவிருத்தியில் இருந்த வெளிப்படையற்ற குணாம்சம் மற்றும் திறந்த தரமுறைகளுக்கு (open standards) மாறாக காப்புரிமையின்கீழ் பயன்படுத்துதல் ஆகியவை கவலைகளாக இருந்தன. ஸ்கைப் ஓர் இலவசமான மற்றும் திறந்த மாற்றீடாக இருந்தபோதினும், பயனர்கள் அவர்களின் ஸ்கைப் தொடர்புகளை வேறொரு பயன்பாட்டோடு பகிர்ந்து கொள்ள வழியில்லாமல் இருந்தது.   

2007இல் ஸ்கைப்பிற்கு மாற்றாக Gizmo திட்டம் என்றழைக்கப்பட்டது அதிகளவில் பிரபலமாக எழுந்தது. Gizmo பயன்பாடும் காப்புரிமையின்கீழ் இருந்தது தான் என்றாலும், அது Session Initiation Protocol (SIP) மற்றும் Extensible Messaging and Presence Protocol (XMPP) போன்ற திறந்த பரிமாற்ற தரமுறைகளை (open transportation standards) அச்சேவை பயன்படுத்தியது. ஸ்கேப்பை விட இந்த பயன்பாட்டில் ஒரு கூடுதல் ஆதாயம் இருந்தது. அதாவது, கலந்துரையாடல் (conference) செய்வதற்குரிய தொலைபேசி எண்ணைப் பதிவு செய்யவும், சாதாரண தொலைபேசியில் இருந்தோ அல்லது ஒரு கணினியில் இருந்தோ கலந்துரையாடலுக்கு அழைக்கவும் அதில் வசதி இருந்தது. Gizmo ஒரு கணிசமான பயனர் எண்ணிக்கையைப் பெற்று, அவர்களைத் தக்கவைக்க தொடங்கிய உடனேயே, அது 2009இல் கூகுளினால் வாங்கப்பட்டது. அதை பின்னர், கூகுள் அதன் சொந்த Google Voice அடித்தளத்திற்காக இந்த ஆண்டு ஏப்ரலில் Gizmoவை முடித்துவிட்டது.    

ஸ்கைப்பைச் சாத்தியப்படுத்திய தொழில்நுட்ப அபிவிருத்தியானது, முன்னொருபோதும் இல்லாத எல்லைக் கடந்த சமூக தொடர்புகளுக்கு இட்டுச்சென்ற கடந்த இரண்டு தசாப்தங்களின் தொழில்நுட்ப அபிவிருத்திகளோடு பிணைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் எகிப்தில் முபாரக் ஆட்சிக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்களைப் பரப்புவதில் Twitter மற்றும் Facebook போன்ற சமூக வலையமைப்பு கருவிகளோடு சேர்ந்து, ஸ்கைப்பும் ஒரு காரணியாக இருந்ததாக பார்க்கப்பட்டது. ஸ்கைப் போன்ற சேவைகள் முதலாளித்துவ பெருநிறுவனங்களால் இலாபம் கோருவதற்கு மட்டும் இரையாக்கப்படுவதில்லை, மாறாக அரசாங்க தலையீடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக அடுக்குமுறைக்கும் கூட இரையாக்கப்படுகின்றன.

இந்த ஆண்டின் பெப்ரவரியில் நியூயோர்க் டைம்ஸ் எழுதியது, “அமெரிக்க உளவுத்துறை (F.B.I.) அதன் கண்காணிக்கும் முறைகளோடு இணங்கச் செய்யும் ஒரு உள்ளார்ந்த நுட்பத்தில் அவற்றின் அமைப்புமுறையை வடிவமைக்க, Gmail, Facebook, Twitter, BlackBerry மற்றும் Skype போன்ற இணையவழி தொலைதொடர்பு சேவைகளைக் கோரும் ஒரு முனைவிற்காக பல ஆண்டுகளாகவே சத்தமில்லாமல் இயங்கிவருகிறது.” 

அந்த நாளிதழ் அமெரிக்க உளவுத்துறையின் பொது குழுவின் Valerie Caproni ல் குறிப்பிடப்பட்டதை மேற்கோளிட்டது: சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் புரட்சிகர விரிவாக்கத்தால், இணையவழி தொலைத்தொடர்பு பற்றிய நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தும் அரசாங்கத்தின் திறமை விரைவாக அதன் தளத்தை நழுவவிட்டு கொண்டிருப்பதை அரசாங்கம் காண்கிறது.”

அரசாங்கத்தின் அழைப்பாணைக்கு சத்தமில்லாமல் இணங்கிபோகும் மைக்ரோசாப்டின் நிலைச்சான்று காரணமாக, புஷ் நிர்வாகத்தின் சட்டவிரோத உள்நாட்டு உளவு வேலைகளில் உதவிய மற்றும் 2008இல் ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டில் இருந்த செனட்டிடம் இருந்து சட்டவிலக்கு பெற்ற பெருவியாபார தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மாற்றாக, இந்த உள்ளார்ந்து நிலைகுலைக்கும் மாற்றீடுகள் மீது சிறந்த கட்டுப்பாடுகளை உருவாக்க ஒரு கருவியாக, இந்த கையகப்படுத்தலை FBI வரவேற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

This author also recommends:

US Senate moves to grant immunity to telecoms complicit in illegal wiretapping