WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
இஸ்ரேலிய துருப்புக்கள் ஆயுதமற்ற பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களை எல்லைகளில் சாகடிப்பு
By
Patrick O’Connor
16 May 2011
நேற்று
இஸ்ரேலிய படையினர்கள் குறைந்தபட்சம்
15 பாலஸ்தீனியர்களை
கொன்றதுடன் இன்னும் பலரையும் காயப்படுத்தினர்.
இது சிரியா,
லெபனான் மற்றும்
காசாவில் எல்லைப் புறச்சாவடிகளில் எதிர்ப்பாளர்களை அடக்குகையில் நிகழ்ந்தது.
இந்த எதிர்ப்புக்கள்
சியோனிச அரசு தோற்றிவிக்கப்பட்டு
63 வது ஆண்டுகள்
நிறைவைக் குறிக்கும்போது நடந்தன.
இஸ்ரேலியப்
பாதுகாப்புப் படைகளினால்
(IDF)
பாலஸ்தீன குடிமக்கள்
சமீபத்தில் படுகொலைக்கு உட்பட்டது,
இஸ்ரேலிய
அரசாங்கத்தின் திமிர்த்தன சட்டவிரோத நடவடிக்கைகளை மீண்டும் நிரூபிக்கிறது.
ஒபாமா நிர்வாகத்தின்
லிபியாவின் குண்டுத்தாக்குதலுக்கு
“மனிதாபிமான”
போலிக் காரணத்தையும்
நிலைமை அம்பலப்படுத்துகிறது.
நேட்டோ
நடத்தும் போர்,
அரசாங்கப் படைகளால்
ஆயுதமற்ற குடிமக்கள் கொல்லப்படும் நிலைமையில் இருந்து பாதுகாக்கத் தேவை என்று
கூறப்படுகிறது—ஆனால்
வாஷிங்டன் மத்திய கிழக்கில் அதன் மிக நெருக்கமான நட்பு நாட்டின் கொலைகாரச்
செயல்களுக்கு எவ்வித எதிர்ப்பையும் எழுப்புவதில்லை.
இதற்குத்தான் பல
பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயுதங்களையும் நிதி உதவிகளையும்
அளிக்கிறது.
நேற்றைய
ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட சரியான இறப்பு எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.
பல எண்ணிக்கைகள் பல
செய்தி ஊடகங்களால் கொடுக்கப்பட்டுள்ளன.
அசோசியேட்டட் பிரஸ்
கருத்துப்படி லெபனியப் பாதுகாப்பு அதிகாரிகள் எல்லையில் லெபனிய பக்கத்தில்
10 பேர்
கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.
ஒருவர் இஸ்ரேலிய
ஸ்னைப்பர் ஒருவரால் காசாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றவர்கள்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட கோலான் ஹையிட்டுக்களில் ஆயுதமற்ற
எதிர்ப்பாளர்கள் கூட்டம் ஒன்று சிரிய எல்லையைக் கடந்து மஜ்டல் ஷம்ஸ் கிராமத்திற்கு
செல்லுகையில் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல்
1948ல்
நிறுவப்பட்டதின் ஆண்டு நிறைவை மே
15 குறிக்கிறது.
ஆனால் பாலஸ்தீனிய
மக்களைப் பொறுத்த வரை இது
“பேரழிவு”
அல்லது அல்-நப்காவைத்தான்
குறிக்கும்.
சியோனிச அரசு தற்கால
வரலாற்றில் கட்டாயப்படுத்தப்பட்ட மிகப் பெரிய குடியேற்றம் ஒன்றை தூண்டிவிட்ட
பயங்கரவாத நடவடிக்கையின் மூலம் நிறுவப்பட்டது.
கிட்டத்தட்ட
700,000
பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் அல்லது தப்பி ஓடினர்.
அவர்களுடைய
சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன.
மீண்டும் தங்கள்
வீடுகளுக்குச் செல்லும் உரிமையை அப்பொழுது முதல் மறுக்கப்பட்ட நிலையில்,
இப்பொழுது
கிட்டத்தட்ட 4.5
மில்லியன் அகதிகளும்
அவர்களுடைய வம்சாவளியினரும் லெபனான்,
சிரியா,
ஜோர்டான் மற்றும்
ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான அகதிகளும் அவர்களுடைய ஆதரவாளர்களும் நேற்று உலகம் முழுவதும்
எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இவர்கள் சமூக இணைய
தளங்கள் மூலம் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர்.
குறிப்பாக இளம்
பாலஸ்தீனியர்கள் துனிசியா,
எகிப்து மற்றும் பிற
அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள எழுச்சிகளால் ஊக்கம் பெற்றுள்ளனர்.
ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள பகுதிகளுக்குள்,
பல்லாயிரக்கணக்கான
மக்கள் தெருக்களில் ஆர்ப்பரித்தனர்.
பலரும்
1948ல் தாங்கள்
இழந்த குடும்ப வீடுகளின் சாவிகளைத் தூக்கியபடி நின்றனர்.
நேற்று இஸ்ரேல் ஒரு
24 மணிநேரம்
மேற்குக் கரை முழுவதும் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவைச் சுமத்தியது.
இது பல கடக்கும்
இடங்கள்,
சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை
மூடிவிட்டது.
எதிர்ப்பாளர்களுக்கும் இஸ்ரேலிய துருப்புக்களுக்கும் இடையே ஹெப்ரோன்,
வல்லஜே மற்றும்
ஜெருசெலத்தில் மோதல்கள் ஏற்பட்டன.
காசா எரெஸ் கடக்கும்
பகுதியில் குறைந்தபட்சம்
15 ஆயுதமற்ற
குடிமக்கள் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டினால் காயமுற்றனர்.
IDF “எச்சரிக்கை
குண்டுகளை”
போடுவதாக விளக்கியது.
அதில் இயந்திரத்
துப்பாக்கிச் சூடு மற்றும் டாங்க் குண்டுகள் எதிர்ப்பாளர்களுக்கு அருகே இருந்த
திறந்தவெளிகளில் போட்டப்பட்டதும் அடங்கும்.
ஒரு கண்ணிவெடியை
புதைக்க முற்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பாலஸ்தீனியர்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
எகிப்தில்
ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எகிப்திய
பாதுகாப்புப் பிரிவினர் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் பூசப்பட்ட எஃகுத்
தோட்டாக்களைச் சுட்டபோது
100க்கும்
மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
அவர்கள்
கட்டிடத்தைத் தாக்க முயன்றபோது இது நடந்தது என்று கூறப்படுகிறது.
அல்
ஜசீரா
கருத்துப்படி
குறைந்த பட்சம்
20 பேர் கைது
செய்யப்பட்டனர்.
மிக மோசமான
வன்முறை தெற்கு லெபனிய கிராமமான மரோன் அல்-ராசில்
நடைபெற்றது.
அங்கு ஆயிரக்கணக்கான
மக்கள் ஒரு எல்லை வேலிக்கு அருகே கூடியிருந்தனர்.
எதிர்ப்பாளர்கள்
முள்வேலியில் கொடிகளைப் பறக்க விட்டதாகவும்,
பாட்டுக்கள்
பாடியதாகவும் கூறப்படுகிறது.
சில இளைஞர்கள்
எல்லைக்கு அப்பால் கற்களை வீசினர்,
அதன்பின் இஸ்ரேலிய,
லெபனிய படையினர்கள்
சுடத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.
லெபனிய
துருப்புக்கள் ஆரம்பத்தில் எச்சரிக்கை வெடிகள் போட்டனர்.
ஆனால் அவையும்
கூட்டத்தில் விழுந்தனவா என்பது பற்றித் தெளிவாகத் தெரியவில்லை.
இஸ்ரேலிய
துருப்புக்கள்தான் கொலைகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல்
2006ல் அந்நாட்டின்
மீது படையெடுத்தபின் லெபனான் மீது இந்த மோசமான வன்முறைத் தாக்குதல் நடந்துள்ளது.
சிரிய
எல்லையில் நேற்று இறந்தவர்களில் மஜ்டல் ஷர்ம்ஸ் கிராமத்தை மறுபடியும் எடுத்துக்
கொள்ளும் இஸ்ரேலிய நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர்.
ஒரு தகவலின்படி,
எல்லைக் கொடிகளையும்,
கோஷ அட்டைகளையும்
அசைத்தபடி கடந்த
200
எதிர்ப்பாளர்களில்
100 பேருக்கும் மேல்
இஸ்ரேலியத் தாக்குதலில் காயமுற்றனர்.
இது பொறுப்பற்ற
வன்முறை பயன்படுத்தப்பட்டதைத்தான் நிரூபிக்கிறது.
தாக்குதலுக்கு முன்பு கிராம மக்கள் எதிர்ப்பாளர்களை வரவேற்றனர்.
Independent, “உள்ளூர்
மக்கள் ஊடுருபவர்களை வீரர்களைப் போல் வரவேற்றனர்,
பாலஸ்தீனிய கொடிகளை
அசைத்தும்,
பாடிக்கொண்டும்
அவர்கள் முக்கிய சதுக்கத்தை அடைந்தபோது அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்”
என்று எழுதியுள்ளது.
எதிர்ப்பாளர்களில் ஒருவரான
35 வயது முகம்மத்
உம்ரான்,
சிரியத் தலைநகர்
டமாஸ்கசிலுள்ள யார்மௌக் அகதிகள் முகாமில் இருப்பவர்,
Washingon Post இடம்
பேசினார்: “இனி
நாங்கள் இதைப் பொறுத்திருக்கமாட்டோம்.
நாங்கள் திரும்பும்
உரிமையைக் கோருகிறோம்.
நாங்கள் எதற்கும்
அஞ்சவில்லை”
என்று விளக்கினார்.
இஸ்ரேலிய
பிரதம மந்திரி பென்ஜமின் நேடன்யாகு வன்முறைக்கு வெளிப்படையான ஆதரவைக் கொடுத்தார்:
“இஸ்ரேலியப்
பாதுகாப்புப் படையினருக்கு பெரும் நிதானத்துடன் செயல்புரிய வேண்டும் என்று
உத்தரவிட்டிருந்தேன்.
ஆனால் நம் எல்லையில்
ஊடுருவல்களை தடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன்”
என்று அவர்
அறிவித்தார். “நம்
எல்லைகள்,
இறைமையைக் காப்பதில் நாம்
உறுதியாக உள்ளோம் என்பதை அனைவரும் அறிய வேண்டும்.”
பாதுகாப்பு மந்திரி
எகுட் பாரக்கும் இதே போல்,
“IDF இஸ்ரேலின்
இறைமையைப் பாதுகாக்க வேண்டும்,
அதில் அது வெற்றி
அடைந்துள்ளது”
என்று
வலியுறுத்தினார்.
உண்மையில்
இஸ்ரேல்
1967ல் சிரியாவின்
கோலன் ஹைட்ஸின் மீது படையெடுத்து பின்னர் அப்பகுதியைச் சட்டவிரோதமாக இணைத்துக்
கொண்டது.
இப்பகுதி மீது இதன்
“இறைமை”
சர்வதேச அளவில்
அங்கீகரிக்கப்படவில்லை.
நேடன்யாகு
அரசாங்கம் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் நப்கா எதிர்ப்புக்கள்
“தூண்டுதல்கள்”
என்றும் இவற்றில்
“ஈரானின் கைரேகைகள்
உள்ளன”
என்றும் குற்றம்
சாட்டியுள்ளன.
சிரிய அரசாங்கமும்
லெபனானின் ஹெஸ்போலாவும் குற்றம் சாட்டப்பட்டன.
“சிரிய
ஆட்சி வேண்டுமென்றே சர்வதேசக் கவனத்தை இஸ்ரேலுக்கு எதிராகத் தூண்டிவிடும் வகையில்
தங்கள் குடிமக்கள் மீது நடத்தும் மிருகத்தனத் தாக்குதலைத் திருப்ப முற்படுகின்றது”
என்று இஸ்ரேல்
இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கேணல் அவிடல் லீபோவிச் கூறினார்.
இக்குற்றச்சாட்டுக்கள் நெருக்கடிக்கு வாடிக்கையாக இஸ்ரேல் அரசாங்கம் காட்டும்
தன்மையுடன் பொருந்தியிருக்கிறது—அதாவது
அழுத்தங்களை அதிகரித்து ஈரானுடன் போருக்கான முரசை முழங்குதல் என.
இஸ்ரேலிய
இராணுவம் சிரிய எல்லையில் எப்படி ஒரு சிறு ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்களால்
செயலற்றுப் போனது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நப்கா ஆண்டு நிறைவு
பற்றிய எதிர்ப்புக்கள் பகிரங்கமாகத் தயாரிக்கப்பட்டன.
இஸ்ரேலிய பாதுகாப்பு
அதிகாரிகள் பெரும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தனர்.
சில நாட்களுக்கு
முன்பு,
ஒரு இராணுவ அதிகாரி,
இஸ்ரேலிய செய்தி
ஊடகத்தால் மேற்கோளிடப்பட்டவர்,
விளக்கினார்:
“கடைசிக் கணத்தில்
விடையிறுப்பை தயாரிப்பதற்கோ அல்லது வியப்பிற்கு உட்படுத்தப்படுவதையோ நாங்கள்
விரும்பவில்லை.”
ஆயினும்கூட
சிறு எண்ணிக்கையில்தான் இஸ்ரேலிய துருப்புக்கள் முக்கிய சிரிய எல்லைச் சோதனைச்
சாவடிகள் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.
இஸ்ரேல் அரசாங்கம்
மற்றும் இராணுவத்திற்குள்ளேயே சில கூறுபாடுகள் பேசாமல் இருந்து வன்முறைத்
தாக்குதலுக்கான சூழலை உருவாக்க முற்பட்டனரா,
அதையொட்டி இஸ்ரேல்
இறைமை குறித்து அச்சுறுத்தல் வரக்கூடும் என்ற அச்சம்,
வெறிப் பிரச்சாரத்தை
தூண்ட முற்பட்டனவா என்ற வினா எழுகிறது. |