சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Financial chaos sounds a warning

நிதியியல் குழப்பங்கள் ஒலிக்கும் ஒரு எச்சரிக்கை

Nick Beams
14 May 2011
Use this version to print | Send feedback

கடந்த வாரம் உலக சந்தைகளில் பாவனைப்பண்டங்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. பைனான்சியல் டைம்ஸ் இதை "சகாப்த முறிவாக", அதாவது லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவிற்கு பின்னர் ஏற்பட்ட மோசமான விற்றுத்தள்ளலாக அதை விவரித்திருந்தது. இந்த வார சந்தைகள் மீண்டும் உயர்வில் இருந்தன. அடுத்த வாரம் என்னவாக இருக்கும், யாருக்குத் தெரியும்? மற்றொரு விற்றுத்தள்ளலாகவோ, வங்கியியல் பொறிவாகவோ, ஒரு நாட்டின் கடனைத் திரும்ப செலுத்த இயலாத நிலைமையாகவோ, ஓராண்டிற்கு முன்னர் சந்தை ஒருசில நிமிடங்களில் சுமார் 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்தபோது, வோல் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட இன்றுவரைக்கும் விளக்கப்படாத "திடீர் பொறிவின்" இன்னுமொரு சம்பவமாகவோ, அல்லது முற்றிலும் எதிர்பார்க்க ஏதோவொன்றாகவோ இருக்கலாம்?       

முன்னொருபோதுமில்லாத அளவிற்கு சர்வதேச நிதியியல் சந்தைகளில் காணப்படும் நிலையற்றதன்மை ஓர் எச்சரிக்கை ஒலியை எழுப்பிக் கொண்டிருக்கிறது. அது உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் இரண்டு அடிப்படை உட்கூறுகளைக் குறித்துக் காட்டுகிறது: அதாவது, 1. செப்டம்பர் 2008இல் உலகளாவிய நிதியியல் நெருக்கடிக்கு களம் அமைக்க அடித்தளமாக இருந்த எந்த முரண்பாடுகளும் தீர்க்கப்படவில்லை; 2. “அவரவரே அவரவருக்கு உதவி; முன்னால் வருபவருக்கே முன்னுரிமை,” என்ற முழக்கத்தின்கீழ் பிரதான அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கைகள் அவற்றின் சொந்த தேசிய நலன்களுக்காக செயல்படுகின்ற நிலையில், அவற்றின் கொள்கைகள் அதிகளவில் முரண்பாடுகளுக்குள் வந்து கொண்டிருக்கின்றன.  

மே 5இல் ஏற்பட்ட பண்டங்களின் விலை வீழ்ச்சி எண்ணெய்யினால் ஊக்குவிக்கப்பட்டதாகும். வர்த்தகர்கள் எதை ஒரு "பயங்கரமான" வீழ்ச்சியென்று குறிப்பிட்டார்களோ, அந்த சம்பவத்தில் எண்ணெய் விலைகள் 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்தன. இதன்விளைவாக ஏற்பட்ட விற்பனை போட்டியில், உலகின் மிகப்பெரிய பண்டங்களுக்கான தனியஸர் நிதிய நிறுவனம் Clive Capital 400 மில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்தது. இவ்விழப்பில் பெரும்பான்மை ஒரேநாளில் ஏற்பட்டவையாகும். ஆனால் நிர்வாகம் அதன் வாடிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், நிதிநிறுவன நிர்வாகத்தின் இழப்பு எண்ணெய் சந்தையை எது "நிர்மூலமாக்கியதோ", அதனால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.     

வேறு எவராலும் கூட ஒரு பதிலைக்கூட முன்வைக்க முடியவில்லை. சாத்தியமான ஒரு விளக்கத்தை உறுதிப்படுத்திய பின்னர், பைனான்சியல் டைம்ஸ் மே 6இல் வெளியிட்ட அதன் ஒரு தலையங்கத்தில், முன்வைக்கப்பட்ட தத்துவம் சரியாக இருக்கலாம் என்ற போதினும், “அது அதன் நேர் எதிராகவும் இருக்கக்கூடும்,” என்று அது குறிப்பிட்டது. “எல்லா திசையிலிருந்தும் நாம் விலை ஏற்ற இறக்கங்களை விளக்குகிறோமோ அது நாம் உண்மையிலேயே அவற்றை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.” என்று அது முடித்துக்கொண்டது.

வீழ்ச்சிக்கான உடனடி காரணம் எதுவாக இருந்தபோதினும், உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் நிலைமுறிவே இந்த கொந்தளிப்பின் அடித்தளத்தில் இருக்கும் காரணமாக உள்ளது.

அமெரிக்க டாலரின் மதிப்பு எல்லா முக்கிய செலாவணிக்களுக்கு எதிராகவும் வீழ்ச்சி அடைந்ததே, கடந்த ஆண்டில் ஏற்பட்ட பண்டங்களின் விற்பனை அதிகரிப்பிற்கு பின்னால் இருந்த முக்கிய காரணிகளில் ஒன்று. இது ஏனைய பிரதான முதலாளித்துவ சக்திகளுடனான உறவுகளில் அமெரிக்காவின் பொருளாதார நிலைப்பாட்டில் ஏற்பட்ட நீண்டகால வீழ்ச்சியையும், மற்றும் அமெரிக்க மத்திய வங்கிகள் கூட்டமைப்பு பின்தொடரும் கொள்கைகளையும் இரண்டையும் பிரதிபலிக்கிறது. அமெரிக்க மத்திய வங்கி அமெரிக்க வங்கிகளுக்கு பூஜ்ஜியத்திலிருந்து 0.25 சதவீதத்திற்கு இடையிலான வட்டிவிகிதத்தில் நிதித்தொகைகளை அளிக்கிறது. ஆனால் பணவீக்கம் 2 மற்றும் 3க்கு இடையில் இருக்கின்ற நிலைமைகளின்கீழ், வங்கிகள் வாங்கும் பணத்திற்கான வட்டிவிகிதம் எதிர்விகிதத்தில் இருக்கும் என்பதையே இது குறிக்கிறது.  

இந்த பணம் தொழில்துறை விரிவாக்கத்திற்காக முதலீடு செய்யப்படுவதில்லை, மாறாக பண்டங்கள் மற்றும் ஏனைய சந்தைகளில் நிதி ஊகவணிகத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த கொள்கை அமெரிக்க வங்கியல் மற்றும் நிதி அமைப்புகளுக்கு பெரிதும் ஆதாயமளிக்கின்ற போதினும், ஏனைய அரசாங்கங்களும், மத்திய வங்கிகளும் விலைவாசி உயர்வுகளால் ஏற்படும் பணவீக்க உயர்வு விளைவுகளையும் மற்றும் அவற்றின் பொருளாதாரங்கள் மீது உயர்ந்துவரும் செலாவணி மதிப்புகளின் பிற்போக்குத்தனமான தாக்கங்களையும் எதிர்கொள்ள முயலும் போது, உலகளாவிய பொருளாதாரத்தில் அது நாசகரமான பேரழிவாக இருக்கும்.

அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பை நேரடியாக பெயரிட்டு கூறாமல், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, நாணய கொள்கை குறித்து வங்கி கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட காலாண்டு அறிக்கையால் முன்னிறுத்தப்பட்டிருக்கும் உலகளாவிய பொருளாதார அபாயங்களை குறிப்பிட்டது. அது குறிப்பிட்டதாவது: குறைந்த வட்டிவிகிதம், மற்றும் "நாணய கொள்கையுடன்மிகவும் ஒத்துப்போகும் இயல்புடைய  தகவமைப்பில்" பண்டங்களின் விலையுயர்வென்பது "பொருளாதார நடவடிக்கையைக் குறைத்துவிடும்" என்பதோடு, “பணவீக்க உயர்வை எதிர்ப்பார்ப்பதற்கும் வித்திடும்." மத்திய வங்கிகள் விடையிறுப்பைக் காட்டுவதைத் தாமதப்படுத்தினால், அங்கே "பணவீக்க எதிர்ப்பார்ப்புகள் இன்னும் அதிகமாகக்கூடும்.” அதைத் தொடர்ந்து "கொள்கை தாமதமாக சீர்செய்யப்பட்டால் வளர்ச்சியும் கூர்மையாக குறைந்துவிடும்.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணவீக்க சுழற்சி ஒரு வெடிப்பில் போய் முடியும் என்பதோடு ஓர் உலகளாவிய பின்னடைவிற்கும் களம் அமைக்கும்.       

அமெரிக்க நாணய கொள்கை மட்டுமே உலகளாவிய கொந்தளிப்பின் ஒரே ஆதாரமல்ல. மற்றொன்று, “மெதுமெதுவாக உருகும் பனிப்பாறை" என்று சமீபத்தில் விளக்கப்பட்ட ஐரோப்பிய பிராந்தியத்தில் நிகழ்ந்துவரும் நெருக்கடியாகும்.

பண்ட சந்தைகளின் மீது ஏற்பட்ட கடந்த வார வீழ்ச்சியானது, கிரேக்க பிணையெடுப்பின் மீது ஏற்பட்ட ஒரு புதிய நெருக்கடியோடு சேர்ந்திருந்தது. அது (கிரீஸ்) ஐரோப்பிய மண்டலத்தை விட்டு நீங்க தயாராகி வருவதாக Spiegel online குறிப்பிட்டது. அந்த செய்தி பலமாக மறுக்கப்பட்டது. ஆனால் அத்தகையதொரு நகர்வின் விளைவுகளைக் காட்டியிருந்த ஒரு ஜேர்மன் கருவூல ஆவணத்திலிருந்து அந்த இதழ் மேற்கோள்களை எடுத்துக்காட்டியது.   

கிரேக்க நிதியியல் அமைப்புமுறையில் ஆழமடைந்துவரும் பிரச்சினைகளும், அத்துடன் விளிம்பிலுள்ள பொருளாதாரங்கள் என்றழைக்கப்படும் ஏனைய இரண்டு பிணையெடுக்கப்பட்ட பொருளாதாரங்களான போர்ச்சுக்கல் மற்றும் அயர்லாந்தும் ஓர் ஆண்டிற்கு முன்னரே தொடங்கப்பட்ட நிதியியல் முறைமைகளின் தோல்வியை எடுத்துக்காட்டுகின்றன. 'நிதியியல் முரண்பாட்டு காலக்கட்டத்திற்குப் பின்னர், கிரேக்க பொருளாதாரம் மீண்டெழும் என்றும், அரசாங்கம் அதன் நிதியியல் தேவைகளுக்காக சர்வதேச சந்தைகளுக்குத் திரும்பும் என்றும்' அந்த சூழல் அப்போது முன்னிறுத்தப்பட்டது. ஆனால் ஓர் ஆண்டு போய்விட்டது, நிலைமை இன்னும் மோசமான நிலைமைக்குத் தான் சென்றுள்ளது: அதாவது, கிரேக்க கடன் அளவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 160 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது; வேலைவாய்ப்பின்மை உயர்ந்து கொண்டே போகிறது; பொருளாதாரம் முரண்பாட்டில் உள்ளது என்பதுடன் Standard and Poor's நிறுவனத்தால் அதன் கடன் சமீபத்தில் இன்னும் கீழே பட்டியலிடப்பட்டதன் விளைவாக, அது சர்வதேச சந்தைகளில் துல்லியமாக உறைந்து போயுள்ளது.

கடன் நெருக்கடிக்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க முடியாத யூரோ-பிராந்திய நாடுகளின் இயலாமையில், அவற்றிற்குள் நிலவும் ஆழ்ந்த பிளவுகள், குறிப்பாக பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான பிளவும் ஒரு முக்கிய காரணியாகும்

கிரேக்கத்திற்கோ  அல்லது ஏனைய நாடுகளின் கடன்களுக்கு   "மறுகட்டமைப்பு" இல்லை என்ற அடித்தளத்தில் கொள்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது பிரதான வங்கிகளை இழப்பிற்கு இட்டுச் செல்லும் என்பதோடு லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவைத் தொடர்ந்து ஏற்பட்ட போக்குகளைப் போன்ற அதேவகையிலான ஒரு நிதியியல் நிலைமுறிவிற்கும் கூட இட்டுச் செல்லக்கூடும். இதன்விளைவாக, ஒருவிதமான பொன்ஜி திட்டம் (Ponzi scheme) கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி வங்கி கடன்கள் சுழற்சி அடிப்படையில் செய்யப்பட்டு, புதிய கடன்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

ஆனால் இத்தகையதொரு முறையைக் காலவரையின்றி தொடர முடியாது. ஒரு குறிப்பிட்ட புள்ளியில், ஒருநாடுகளின் நிர்பந்திக்கப்பட்ட மறுகட்டமைப்பு மற்றும் வங்கி பொறிவுகளின் தொடர் அலை" என்று பைனான்சியல் டைம்ஸால் அழைக்கப்பட்டதோ அந்த நிலைக்கே அது இட்டுச்செல்லும்

நிதியியல் சந்தைகள் நீண்டகாலத்திற்கு முன்னரே தேசிய எல்லைகளைக் கடந்து வளர்ந்துவிட்டுள்ளன என்பதோடு எந்த அரசாங்கத்தின் அல்லது அரசாங்க குழுக்களின் மற்றும் நெறிமுறை ஆணையங்களின் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டு, உலகளாவிய வலையில் ஒரு சிக்கலான உள்தொடர்புகள் மூலமாக செயல்பட்டு வருகின்றன என்ற உண்மையே இந்த கொந்தளிப்பின் அடித்தளத்தில் தங்கியுள்ளது.

இந்த அமைப்புமுறையில் உள்ள குழப்பம், கம்யூனிஸ்ட் கட்சி  அறிக்கையில் மார்க்ஸ் எழுதிய கருத்துக்களையே நினைவூட்டுகிறது: “நவீன முதலாளித்துவ சமூகம், உற்பத்தியில், பரிவர்த்தனையில் மற்றும் சொத்துடைமைகளில் கொண்டுள்ள அதன் உறவுகளோடு, இத்தகைய பிரமாண்ட உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை சாதனங்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு சமூகம், பாதாள உலகத்திலிருந்து தனது மந்திரத்தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற்போன மந்திரவாதியின் நிலையில் இருக்கக் காண்கிறோம்.”

இந்த குழப்பமும், நூறு மில்லியன் கணக்கான மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இன்னும்-அதிகரித்து கொண்டே போகக்கூடிய சமூக பேரழிவும், இலாப அமைப்புமுறை வேரூன்றியுள்ள தேசிய-அரசு அமைப்புமுறையும், இலாப அமைப்புமுறையும் தூக்கியெறியப்பட வேண்டுமென்பதையே எடுத்துக்காட்டுகின்றன. சந்தையின் குருட்டுத்தனமான பகுத்தறிவற்றதன்மையை பகுத்தறிவான விதிகளுக்கு ஏற்ப உலகளாவிய பொருளாதாரத்தின் நனவுப்பூர்வமான நிர்வாகத்தாலும், மனித தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஜனநாயகரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார திட்டமிடுதலினாலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் சர்வதேச சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக மட்டுமே அதை எட்ட முடியும்.