சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Einstein’s theory of gravity confirmed by NASA probe

ஐன்ஸ்டீனின் ஈர்ப்புவிசை தத்துவம் நாசா ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது

By William Whitlow
13 May 2011
Use this version to print | Send feedback

NASA

சார்பியல் பொது தத்துவம் என்று அறியப்படும் ஐன்ஸ்டீனின் ஈர்ப்புவிசை தத்துவம், பிரமிப்பூட்டும் துல்லியத்துடன் நாசாவின் Gravity Probe-B (GP-B) ஆய்வின் மூலமாக இரண்டு வழிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது[1]. சிறப்பாக அபிவிருத்தி செய்யப்பட்ட நான்கு கைரோஸ்கோப்புகளைக் (gyroscopes) கொண்டிருக்கும் ஒரு செயற்கோள், வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் மீது கடந்துசெல்லும் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுவட்டப்பாதைக்குள் நிறுத்தப்பட்ட போது, அந்த ஆய்வுத்திட்டம் 2004இல் தொடங்கப்பட்டது.

Geodetic விளைவு மற்றும் frame dragging விளைவு என்றழைக்கப்படும் ஐன்ஸ்டீன் தத்துவத்தின் இரண்டு கணிப்புகளை அந்த GP-B ஆய்வு அளவிடுகிறது. Geodetic விளைவு என்பது புவிஈர்ப்பு நிறையால் வெளியும்(space), காலமும்(time) எந்தளவிற்கு "வளைக்கப்படுகிறது" என்பதாகும். புவிஈர்ப்பு நிறை என்பது தத்துவத்தைப் பற்றிய தொழில்நுட்பமல்லாத விளக்கங்களிலேயே பரிச்சயமான ஒன்றாகும். ஐன்ஸ்டீன் முதன்முதலில் அவருடைய பொது தத்துவத்தை வெளியிட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1918லேயே ஆஸ்திரேலிய இயற்பியலாளர்கள் ஜோசெப் லென்ஸ் மற்றும் ஹன்ஸ் திரிங் ஆகியோரால் frame dragging விளைவு கண்டறியப்பட்ட போதினும், அது வெகுவாக பிரபலமற்ற ஒன்றாக உள்ளது. பூமியின் சுழற்சியால் இழுக்கப்படும் போது அவ்விடத்தில் உள்ள வெளி மற்றும் காலத்தில் இந்த விளைவு ஏற்படுகிறது.

frame dragging விளைவு ஒருவிதத்தில் ஒத்திசைவால் ஏற்படுவதாகும். இதில் ஒரு சுழலும் மின்னேற்றம் (rotating electric charge) மின்காந்தத்தை உருவாக்குகிறது. சிலநேரங்களில் "ஈர்ப்புவிசை காந்த விளைவு" என்று அழைக்கப்படும் இது, இயற்கையில் ஒரு புதிய ஆற்றலை, அதாவது ஈர்ப்பு-காந்த ஆற்றலை (gravimagnetic force) உருவாக்குவதாகவும் கூட கருதப்படுகிறது.

GP-B குழுவின் முன்னணி விஞ்ஞானியான ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பிரான்சிஸ் எவெரெட், விளக்கப்படத்துடன் பின்வருமாறு விவரித்தார்: பூமி தேனில் மூழ்கியிருப்பதைப் போல கற்பனை செய்து பாருங்கள். அந்நிலையில் அது சுழல்கிறதென்றால், அதைச் சுற்றியுள்ள தேனும் சுழல்கிறது. இதே தான் வெளி மற்றும் காலம் ஆகியவற்றோடும் நிகழ்கிறது.

பூமியால் வெளியும், காலமும் பாதிக்கப்படாமல் இருக்கும் விதத்தில், GP-Bஇன் கைரோஸ்கோப்புகள் ஒரே திசையில் சுழன்று கொண்டிருக்கும் விதத்தில், ஒரு தொலைதூர நட்சத்திரத்தை நோக்கியிருக்கும் ஒரு தொலைநோக்கியோடு GP-Bஇன் கைரோஸ்கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதினும், பூமியின் ஈர்ப்புவிசையின் காரணமாக அவை மிகச் சிறியளவில் சாய்ந்துள்ளன என்று ஐன்ஸ்டீனின் தத்துவம் கணிக்கிறது. GP-Bஇன் இந்த சாய்வின் அளவு ஐன்ஸ்டீன் தத்துவத்தின் தத்துவார்த்த கணிப்புகளோடு ஒப்பிடப்படுகிறது.

பூமி-சந்திரன் அமைப்புமுறையின் போக்கை ஆராய்ந்ததன் மூலமாக முன்னதாக geodetic விளைவு அளவிடப்பட்டிருந்தது. சூரியனைச் சுற்றிவரும் பூமி-சந்திரன் அமைப்புமுறையை சார்பியல் பொது தத்துவம் சுமார் 1 சதவீத துல்லியத்துடன் ஆராய்ந்து கண்டறிந்திருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் GP-B முடிவுகள், அதைவிட நூறு மடங்கு மிகவும் துல்லியமானவை; அதாவது 0.01 சதவீதம் துல்லியமானவையாகும்.

Frame dragging விளைவு மிகவும் சிறியளவில் தான் நிகழ்கிறது என்பதால், இதற்கு முன்னர் அது ஒருபோதும் நேரடியாக அளவிடப்படவில்லை. GP-B அளவீட்டின் துல்லியம் ஐன்ஸ்டீனின் கணிப்பிலிருந்து 4.9 சதவீதம் வேறுபடுகிறது.

இந்த துல்லியம் போதாதென்றாலும் கூட, அளவிடும் கோணங்களை GP-B ஆய்வு சார்ந்துள்ளதாக அதனால் வலியுறுத்தப்படுகிறது. அதாவது இதன் மூலமாக geodetic விளைவிற்காக ஒரு கோணத்தின் 1.8 ஆயிரம் மடங்கிற்கும், frame dragging விளைவிற்காக ஒரு கோணத்தில் 11 மில்லியன் மடங்கிற்கும்  கைரோஸ்கோப்பின் சாய்வை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதாவது frame dragging விளைவைக் கொண்டு, இவ்வகையில் ஒரு கால் மைல் தூரத்திலிருந்து ஒருவரின் ஒரு தலைமுடியின் தடிமனைப் பார்ப்பதற்கு சமமாகும்.

இவ்வாய்வு, 2004இல் தான் முறையாக தொடங்கப்பட்டது என்றாலும் கூட, முதன்முதலாக நாசாவால் 1963இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், அவர்களின் வரலாற்றில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றாகும். சார்பியலை பரிசோதிக்க கைரோஸ்கோப்புகளைப் பயன்படுத்தும் இந்த யோசனை, 1959-60இல் இயற்பியலாளர்களால் முன்மொழியப்பட்டது.

துல்லியத்தை இந்தளவு உயர்த்தும் விதத்தில் இந்த ஆய்வை எடுத்துச்செல்ல, அதற்கிடைப்பட்ட நான்கு தசாப்தங்களில் ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுள்ளன.

கைரோஸ்கோப்புகள் மிகச் சரியாக நீள்வட்ட வடிவத்தில் துல்லியமான படிகத்தால் (quartz) செய்யப்படுகின்றன. அவை இதுவரை உற்பத்தி செய்யப்பட்டிராத கோள வடிவிலான பொருட்களாகும். அவை எந்தளவிற்கு இலகுவானவை என்பதற்கு சில குறிப்புகளைக் காட்ட வேண்டுமானால், அவற்றை பூமியின் அளவிற்கு பெரிதாக்கி பார்க்கலாம் என்பதை கற்பனை செய்து பாருங்கள். பூமியின் மேற்பரப்பில் இருக்கும் மிகப் பெரிய மலைகள் அல்லது பள்ளத்தாக்குகள், அவற்றில் எட்டடி உயரத்தில் (2.4 meters) அல்லது ஆழத்தில் தெரியும்

இராணுவ விமானம் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும் பூமியை அடித்தளமாக கொண்ட சிறந்த கைரோஸ்காப்புகளை விட 10 மில்லியன் மடங்கு மிகவும் துல்லியமாக விளங்கும் விதத்திலும், தோற்றப்பாட்டளவில் அவற்றின் சுழற்சி அச்சிலிருந்து விலகிச் செல்லாத வகையிலும் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கைரோஸ்கோப்பின் அச்சு திசையையும் (axis direction) அளவிடும் சென்சார்கள், நியோபியம் (niobium) எனும் அதிவீரியகடத்தும்திறன் (superconducting) கொண்ட உலோகத்தின் ஒரு மெல்லிய படலத்தால் பூசப்பட்டிருக்கும் குவார்ட்ஸ் மேற்தளத்தைச் சார்ந்துள்ளது. இந்த நியோபியம் உலோக படலம் அது சுழலும் போது ஒரு காந்தபுலத்தை உருவாக்குகிறது. எவ்வித தடையும் இல்லாமல் கடக்கிடமுடியாத தூரத்திற்கு மின்சாரம் செல்லக்கூடிய அளவிற்கு இத்தகைய அதிவீரியகடத்தும்திறனானது, முற்றிலும் பூஜ்ஜியத்திற்கு மேலாக 1.8 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையில் நிகழ்கிறது. இந்த விளைவை எட்டுவதற்காக GP-B விண்கலம், இத்தகைய குறைந்த வெப்பநிலையில் அதன் திட்ட-ஆயுள்காலம் முழுமைக்கும் தேவைப்படும் திரவ ஹீலியத்தால் நிரப்பப்பட்ட 650-கேலியன் தெர்மோஸ் புட்டியால் (thermos bottle) உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், இது பொறியியலில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

அதிவீரியகடத்தும்திறன் கொண்ட நியோபியத்தைக் கொண்ட ஒரு வளையம் கைரோஸ்கோப்பைச் சுற்றியுள்ளது. கைரோஸ்கோப் அதன் அச்சிலிருந்து மிக சிறியளவில் நகர்ந்தாலும் கூட, அந்த வளையத்தினுள் மின்சாரம் பாயும். பின்னர் அந்த மின்சாரம் SQUID மேக்னேடோமீட்டர் (Superconducting Quantum Interference Device magnetometer) என்றழைக்கப்படும் ஒரு சிறப்பு சாதனத்தால் அளவிடப்படுகிறது. இந்த மேக்னோடோமீட்டர் அளவீடு காந்தபுலங்களுக்குள் மிகச் சிறியளவில் பூமியின் காந்தபுலத்தில் பத்து ட்ரியலினில் ஒரு பங்கு அளவிற்கு (1/10,000,000,000,000) மாறுகிறது. இது இயல்நிகழ்வாக கைரோஸ்கோப்புகளின் மிகச்சிறிய சாய்வையும் கூட அளக்க உதவுகிறது.

GP-Bஇல் அபிவிருத்தி செய்யப்பட்ட ஏனைய பல நுட்பங்கள், Cosmic Background Explorer (COBE) திட்டம் போன்ற நாசாவின் ஏனைய திட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிரபஞ்சத்தில் பின்புல கதிர்வீச்சை அளவிடும் COBE திட்டம், பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த பெருவெடிப்பு தத்துவத்திற்கு ஆதரவான ஆதாரங்களை அளித்தது. GP-Bஇன் நுட்பங்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஏனைய பல பிரிவுகளிலும் பயன்படுத்தப்படவிருக்கின்றன.

அதை எவெரெட்  சுருக்கமான பின்வருமாறு குறிப்பிடுகிறார்: இந்த திட்டத்திற்குப் பின்னாலிருக்கும் பல தசாப்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பூமியிலும், வான்வெளியிலும் ஒரு நீண்டகால மரபைக் கொண்டிருக்கும்." 

ஐன்ஸ்டீன் பொது தத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான முக்கியத்துவம் என்ன? நிச்சயமாக அது ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் மேற்கொண்டும் அதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை தான். ஆனால் GP-B ஆய்வு அத்தத்துவத்தின் முக்கிய உட்கூறுகளை மிகவும் உயர்ந்த துல்லியத்துடன் உறுதிப்படுத்தி உள்ளது என்பது தான் அவ்வாய்வின் முக்கியத்துவமாகும்.

இது விஞ்ஞானரீதியாகவும், பொதுப்படையாக தத்துவார்த்தரீதியிலும் மேம்பட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நியூட்டன் நம்பியதைப் போல வெளி மற்றும் காலம் என்பது கடவுள் அளித்ததோ அல்லது மெய்யியலாளர் இமானுவேல் கான்ட் குறிப்பிட்டதைப் போல மனித அறிவால் கட்டமைக்கப்பட்டதோ அல்ல என்ற கருத்துருவை ஐன்ஸ்டீன் தத்துவம் அடித்தளமாக கொண்டுள்ளது. வெளியும், காலமும் ஜடத்தின் அடிப்படை பண்புகள் என்ற சடவாத கருத்தின் அடிப்படையில் ஐன்ஸ்டீன் தம்மைத்தாமே நிறுத்தி இருந்தார். அவருடைய சார்பியல் பொது தத்துவம், ஓரிடத்திலுள்ள வெளியும், காலமும் சடம் அளவைப் பொறுத்துள்ளது என்பதையும், இரண்டுமே அதனதன் (GP-B மற்றும் பூமி) இடத்திற்கேற்ப, மிகச் சிறியளவில், பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள சடத்தாலும், தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. வெளி மற்றும் காலம் குறித்த அந்த சடவாத கருத்து மிகச் சிறப்பாக GP-B திட்டத்தாலும், நிரூபிக்கப்படாத அனேக கருத்துவாத கருத்துருக்களின் அடிப்படையில் இருக்கும் வெளி-காலம் குறித்த ஏனைய தத்துவங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

GP-B ஆய்வு உயர்ந்த அளவிலான துல்லியத்தை எட்டியுள்ளதால் அது ஐன்ஸ்டீன் தத்துவத்தின் வரம்புகளைப் பரிசோதிக்க விஞ்ஞானிகளை அனுமதிக்கும் என்பதால், விஞ்ஞான பார்வையிலிருந்து, அவ்வாய்வு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அந்த தத்துவம் எந்தளவிலான வரம்பிற்குள்" (tolerances) உண்மையைக் கொண்டுள்ளது என்பதைத் தீர்மானிக்கும் எதிர்கால ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளால் இதைக்கொண்டு ஆலோசிக்க முடியும்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட  GP-B திறனாய்வில்  GP-B இயற்பியலாளர் ஜோன் மெஸ்டெர் அளித்த குறிப்புகள்: ஈர்ப்புவிசை குறித்த நம்முடைய தற்போதைய தத்துவம், சார்பியலின் பொது தத்துவமே ஆகும். அது பிரபஞ்சகாந்தப்புலத்தின் (cosmos) கட்டமைப்பைக் குறித்த நம்முடைய புரிதலில் பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது. தற்போது, ஐன்ஸ்டீனின் ஈர்ப்புவிசை தத்துவம் இயற்கையின் ஏனைய மூன்று ஆற்றல்களுக்கு (அதாவது வலுவான ஆற்றல், பலவீனமான ஆற்றல் மற்றும் மின்காந்த ஆற்றல்) வெளியில் நிற்கிறது. இவற்றை "The Standard Model” என்றழைக்கப்படும் ஓர் ஒருங்கிணைந்த கட்டமைப்பிற்குள் விளங்கப்படுத்த முடியும். இயற்கையின் அனைத்து நான்கு ஆற்றல்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் இன்றைய நாளில் ஐன்ஸ்டீனிடமிருந்து இயற்பியலாளர்களை விலக்கி வைத்துள்ளது. தத்துவங்களை உயர்ந்த துல்லியத்தில் பரிசோதிப்பதென்பது, அந்த தத்துவங்களின் காலமதிப்பை வரையறுக்கவும் அல்லது அவை எவ்விடத்தில் உடைகின்றன என்பதை எடுத்துக்காட்டவும் உதவும்.” 

 ஐன்ஸ்டீன் தத்துவத்தைக் குறித்த ஓர் ஆழ்ந்த புரிதல், தொழில்நுட்ப அபிவிருத்தியில் ஆழமான நடைமுறை தொடர்பைக் கொண்டிருக்கும். மலைகள் ஏறும் போதோ அல்லது வாகனம் ஓட்டும் போதோ ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் குளோபல் பொசிஷனிங் அமைப்புமுறையில் (GPS) சார்பியலின் பொது தத்துவம் ஏற்கனவே ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அது நவீன தொழில்துறை உற்பத்தி மற்றும் வினியோகத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. GPS தொழில்நுட்பம், பூமியின் மேற்பரப்பில் 10 மீட்டருக்குள் துல்லியமான இடத்தைக் காட்டக்கூடியதாகும். தற்போது அது பரவலாக பாரவூர்திகளிலும், விமானங்கள் மற்றும் கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பயன்பாடு சார்பியல் பொது தத்துவத்தின் ஒரு பயன்பாட்டைச் சார்ந்துள்ளது

GPS சார்ந்திருக்கும் 24 செயற்கைகோள்களும், அவற்றின் நேரத்தில் மிகத் துல்லியமாக 20 முதல் 30 நேனோ நொடிகளுக்குள் (1 நேனோநொடி என்பது ஒரு நொடியில் 1 பில்லியனாகும்) பொருந்தி இருக்க வேண்டும். செயற்கைகோள்களில் உள்ள நேரகணக்கிகள் (clocks) பூமியிலுள்ள நேரக்கணக்கிகளை விட சற்றே வேகமாக (ஒருநாளைக்கு 45 மைக்ரோநொடிகள் என்ற வேகத்தில், 1 மைக்ரோநொடி என்பது ஒரு நொடியில் 1 மில்லியனாகும்) இயங்கும் விதத்தில் சார்பியல் பொது தத்துவம் கணக்கிடுகிறது. செயற்கைகோள்களில் உள்ள நேரம் இந்த சிறிய அளவைத் திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது GPS வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பிழைகள் மிக வேகமாக நாளொன்றுக்கு 10 கிலோமீட்டர் என்ற விகிதத்தில் அதிகரித்துவிடும்.

GP-B திட்டம் விஞ்ஞானம் குறித்து ஒட்டுமொத்தமாகவே கூட சில முக்கியமான விபரங்களை நமக்கு அளிக்கிறது. விஞ்ஞானம் முற்றிலுமாக தனிநபர்களின் மேதைமையின் அடிப்படையில் வளர்வதாக ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது. விஞ்ஞான அபிவிருத்தி குறித்த இந்த திரிக்கப்பட்ட கருத்துரு, சமூகவியலாளர் தாமஸ் குஹ்னின் படைப்புகளால் கூடுதலாக பலப்படுத்தப்பட்டது. புதிய தத்துவங்களை அபிவிருத்தி செய்த தலைச்சிறந்த தனிநபர்களின் வேலைகளால் விஞ்ஞானம் காலத்திற்கேற்ப முறையான மாற்றங்களுக்கு உட்பட்டதாக அவர் வாதிட்டார். ஆனால் GP-B திட்டம் எதைக் காட்டுகிறதென்றால், விஞ்ஞானம் ஒரு சமூக முயற்சி என்பதையும், அது தொழில்நுட்ப வளர்ச்சிகளின் நெருங்கிய உறவுகளில் அபிவிருத்தி அடைகிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. ஐன்ஸ்டீன் போன்ற தனிப்பட்ட மேதைகளின் வேலைகளும், அவர்களின் பங்களிப்புகளும் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமானவையே என்றாலும், அவை அவர்கள் பயின்றுவந்த மற்றும் அவர்கள் அவர்களின் சிந்தனைகளை எதற்கு எதிராக பரிசோதித்து வந்தார்களோ அந்த ஒட்டுமொத்த விஞ்ஞான கலாச்சாரத்தைச் சார்ந்துள்ளது. விஞ்ஞான கலாச்சாரத்தை உருவாக்குவதென்பது தலைமுறைகளின் பணியாகும்; அது புத்திசாலிகளின் வேலையல்ல. மாறாக அது உட்பார்வைகளிலிருந்து தனிமைப்பட்டிருக்கும் அல்லது ஒருங்கிணைந்த ஆய்வு முடிவுகளில் இருந்து தனிமைப்பட்டிருக்கும்.

 GP-B திட்டமென்பது, சார்பியல் குறித்த நம்முடைய தற்போதைய புரிதலை எட்டுவதற்கு 50 ஆண்டுகளாக விவாதத்திலும், மோதல்களிலும் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் வேலைகளின் ஒரு வெளிப்பாடாகும். இவர்களுக்கு முன்னால் ஐன்ஸ்டீன் செய்ததைப் போலவே, இவர்களும் தொழில்நுட்பத்தின் அபிவிருத்திகளைச் சார்ந்துள்ளனர். இவர்களின் வேலைகள் இவ்வகையில் பிரபஞ்சத்தைக் குறித்த நம்முடைய புரிதல் ஆழமடைகையில் தொழில்நுட்பத்தின் மேற்படி அபிவிருத்திக்கு அடித்தளம் அமைத்து அளிக்கிறது. விஞ்ஞான வளர்ச்சிகள், தொழில்நுட்ப அபிவிருத்திகள் மற்றும் சடம் குறித்த தத்துவார்த்த மற்றும் மெய்யியல் புரிதல் ஆகியவற்றிற்கு இடையில் ஒரு சிக்கலான தொடர்பு நிலவுகிறது. இந்த பிரச்சினையை டிரொட்ஸ்கி கலாச்சாரமும், சோசலிசமும் என்பதில் விளக்குகிறார்: [2

 “கலாச்சாரம் தொழில்நுட்பத்திற்கு உந்துதல் அளிக்கிறதா அல்லது தொழில்நுட்பம் கலாச்சாரத்தை உந்துகிறதா?- எனக்கு முன்னால் இருக்கும் குறிப்புக்களில் ஒன்று இந்த கேள்வியை எழுப்புகிறது. இது ஒரு கேள்வியைத் தவறான வகையில் எழுப்புவதாகும். தொழில்நுட்பம் கலாச்சாரத்திற்கு எதிராக நிறுத்தப்படக்கூடாது; அது கலாச்சாரத்தின் மூல காரணமாக இருக்கிறது. தொழில்நுட்பம் இல்லாமல் கலாச்சாரம் இல்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கலாச்சாரத்தை முன்னோக்கி உந்திச் செல்கிறது. ஆனால் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எழுச்சி பெறும் விஞ்ஞானமும், பொது கலாச்சாரமும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்குச் சக்தி வாய்ந்த ஊக்கத்தைக் அளிக்கின்றன. ஆகவே, இங்கே ஓர் இயங்கியல் இடைத் தொடர்பு உள்ளது.

GP-B திட்டம் இந்த கோட்பாட்டின் ஒரு உள் அங்கமாக உள்ளது.

Notes:

1. http://www.nasa.gov/mission_pages/gpb/

2. Leon Trotsky, Culture and Socialism, 1927