WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
As
opposition leader meets Obama officials at White House
NATO
air raid kills Libyan civilians in Brega
வெள்ளை
மாளிகையில் எதிர்ப்புத் தலைவரை ஒபாமா அதிகாரிகளைச் சந்திக்கையில்
நேட்டோ
வான் தாக்குதல் பிரேகாவில் லிபிய குடிமக்களை கொல்கிறது
By
Bill Van Auken
14 May 2011
பெங்காசியை
தளமாகக் கொண்ட தேசிய மாற்றுச் சபையை
(NTC) வெள்ளை
மாளிகையில் வெள்ளியன்று அதிகாரிகளை சந்தித்துக் கொண்டிருக்கையில்,
அமெரிக்கா மற்றும்
நேட்டோ லிபியத் தலையீட்டை விரிவாக்கின.
வெள்ளை
மாளிகையில் சந்திப்பு நடந்த அன்றே,
லிபிய அரச
தொலைக்காட்சி ஒரு நேட்டோ வான் தாக்குதல் கிழக்குக் கடலோர பிரேகா நகரத்தில்
குறைந்தபட்சம் 16
பேரைக்கொன்று
மற்றும் ஒரு 40
பேரைக்
காயப்படுத்தியதாக அறிவித்தது.
ஜமஹிரியா
தொலைக்காட்சியிடம் பேசிய ஒரு சாட்சியின்படி வான்தாக்குதல் ஒரு விருந்தினர்
மாளிகையையும் தரைமட்டமாக்கியது.
“அங்கு முஸ்லிம்
ஷேக்குகள் (மதத்
தலைவர்கள்)
மத விழா ஒன்றை
நடத்தி வந்தனர்.”
தொலைக்காட்சித் தகவலில் மூடப்பட்ட ஒன்பது சடலங்களின் காட்சி காட்டப்பட்டது.
இதற்கு
முதல் நாள் ஒரு நேட்டோ வான் தாக்குதல் லிபியாவின் கேணல் முயம்மர் கடாபியின்
வளாகத்தைத் தாக்கியது.
லிபிய அரச செய்தி
அமைப்புக்கள் 6
பேர் இத்தாக்குதலில்
கொல்லப்பட்டனர்,
10 பேர் காயமுற்றனர்
என்று தெரிவித்துள்ளன.
ஏப்ரல்
30 அன்று நேட்டோ
வான் தாக்குதல் அவர் தங்கியிருந்த வீட்டைத் தாக்கியதற்கு பின் முதல் தடவையாக
லிபியத் தொலைக்காட்சியில் கடாபி தோன்றிய சில மணி நேரங்களில் இத்தாக்குதல்
நடைபெற்றது.
அதில் அவருடைய
மகனுடன் மூன்று இளம் பேரக்குழந்தைகளும் இறந்து போயினர்.
சமீபத்தியத்
தாக்குதல் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் படுகொலை மூலம்
“ஆட்சி மாற்றம்”
என்னும் கொள்கையைத்
தொடர்வதை காட்டுகின்றது.
NTC
யின்
“பிரதம மந்திரி”,
“வெளியுறவு மந்திரி”
என்று
இருவிதத்திலும் குறிக்கப்படும் மஹ்முத் ஜிப்ரில் எழுச்சியாளர்கள் அதிக நிதி,
ஆதரவு மற்றும்
ஆயுதங்களை முக்கிய ஏகாதிபத்திய சக்திகளிடம் பெறுவதற்காக நடத்தும் திட்டத்தின் ஒரு
பகுதியக வாஷிங்டனுக்கு வந்திருந்தார்.
ஒரு தடையற்ற
சந்தை ஆதரவுப் பொருளாதார வல்லுனரான ஜிப்ரில்,
பிட்ஸ்பேர்க்
பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற,
2007ல் இருந்து
லிபியாவின் தேசியப் பொருளாதார வளர்ச்சிக் குழுவில் பணி புரிந்தார்.
தனியார்மயமாக்குதல்,
பொருளாதாரத்
“தாராளமயம்”
மற்றும் வெளிநாட்டு
முதலீட்டிற்குப் பெரும் ஆதரவளித்தார்.
விக்கிலீக்ஸ்
வெளியிட்டுள்ள
2009ல் ஒரு இரகசிய
அமெரிக்க ராஜதந்திரத் தகவல் ஆவணத்தில் இவர்
“அமெரிக்க
முன்னோக்கை “அடையக்கூடிய”
தீவிர
செல்வாக்குடையவர்”
என்று இனம்
காணப்பட்டுள்ளார்.
வாஷிங்டனுக்கு இவருடைய பயணம்
NTC க்கு
தலைவராகவுள்ள முஸ்தாபா அப்துல் ஜலீல்—பெப்ருவரி
வரை கடாபி அரசாங்கத்தில் நீதித்துறை மந்திரியாக இருந்தவர்—பிரிட்டிஷ்
பிரதம மந்திரி டேவிட் காமெரோனையும் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேகையும் லண்டலில்
சந்தித்து நிதியுதவி,
ஆயுதங்களைக் கேட்ட
மறு நாள் நிகழ்ந்தது.
அக்கூட்டத்திலிருந்து
“பேராபத்து இல்லாத
ஆயுதங்கள்”
தொகை
குறிப்பிடப்படாத நிதி ஆதரவிற்கான உறுதிமொழிகளுடன் ஜலில் திரும்பினார்.
மேலும் லண்டனில் ஒரு
அலுவலகத்தைத் திறக்கும்படி
NTC க்கு அழைப்பும்
விடுக்கப்பட்டது.
பிரான்ஸ்,
இத்தாலி
அரசாங்கங்களைப் போலவே காமெரோன் அரசாங்கமும் ஏற்கனவே பெங்காசிக்கு இராணுவப்
பிரிவினரை அனுப்பி அங்குள்ள
“எழுச்சியாளர்களுக்கு”
பயிற்சியும்
ஆலோசனையும் கொடுக்கிறது.
வாஷிங்டனில்
அவருடைய பயணத்தின் நோக்கம்
NTC தான்
“லிபிய மக்களின்
சார்பாகவுள்ள ஒரே பிரதிநிதித்துவ அமைப்பு”
என்ற அமெரிக்க
அங்கீகாரத்தைப் பெறுவதாகும் என்று ஜிப்ரில் கூறினார்.
இதுவரை பிரான்ஸ்,
இத்தாலி மற்றும்
கட்டார் ஆகியவைதான் முறையாக கடாபி ஆட்சிக்கான அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்று அதை
பெங்காசி சபைக்கு அளித்துள்ளன.
அமெரிக்க
அங்கீகாரத்தைப் பெறுவதின் முக்கியத்துவம் ஜிப்ரிலினால் தெளிவாக விளக்கப்பட்டது.
கடாபி ஆட்சிக்கு
எதிராகச் சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளினால்,
அமெரிக்க நிதிய
நிறுவனங்களில் சேமிக்கப்பட்டுள்ள
34 பில்லியன் டொலர்
லிபியச் சொத்துக்களை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது.
TNC இப்பணத்தைப்
பயன்படுத்த விரும்புகிறது.
தூதரக அங்கீகாரம்
இல்லாமல் சட்டபூர்வமாக இத்தொகை மாற்றப்பட முடியாது என்பதை அது நன்கு அறியும்.
வெள்ளை
மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே முறையான அங்கீகாரத்தை தற்பொழுது வாஷிங்டன்
கொடுப்பதாக இல்லை என்ற குறிப்புக்காட்டி அத்தகைய நடவடிக்கை ஒரு
“முன்கூட்டிய
செயலாகிவிடும்”
என்றார்.
வாஷிங்டனில்
ஜிப்ரிலைச் சந்திக்க இருந்தவர்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோம் டோனிலோன்,
துணை அரச செயலர்
ஜேம்ஸ் ஸ்டீன்பேர்க் மற்றும் அமெரிக்க காங்கிரசில் இருந்த சில உறுப்பினர்கள் ஆவர்.
இச்சபை
இப்பொழுது
“மிகத் தீவிர நிதிப்
பிரச்சினையை”
எதிர்கொண்டுள்ளது,
அடுத்த சில
மாதங்களைக் கடப்பதற்கு குறைந்தபட்சம்
3 பில்லியன்
டொலராவது தேவைப்படும் என்று ஜிப்ரில் எச்சரித்தார்.
கடந்த வாரம்
ரோம் நகரில் பேசுகையில் அரச செயலர் ஹில்லாரி கிளின்டன்,
“லிபிய மக்களுக்கு
உதவுவதற்காக”
கடாபி
ஆட்சியின்
முடக்கப்பட்ட சொத்துக்களைப் அமெரிக்கா பயன்படுத்தக்கூடும் என்ற கருத்தை
தெரிவித்திருந்தார்.
உயர்மட்ட
ஜனநாயகக் கட்சி உறுப்பினராக செனட்டின் வெளியுறவுக் குழுவில் இருக்கும் ஜோன் கெர்ரி
இந்த வாரம் முன்னதாகத் தான் பெங்காசி சபைக்கு முடக்கப்பட்ட நிதிகளில் இருந்து ஒரு
பகுதியை மாற்றுவதற்கு ஒப்புதல் கொடுக்கும் சட்ட வரைவை இயற்றிக்கொண்டு இருப்பதாகக்
கூறினார்.
காங்கிரசிலிருந்து ஒப்புதல் பெறுவதற்கு நாட்கள் பிடிக்கும் என்று ஜிப்ரில்
குறிப்புக் காட்டியுள்ளார்.
“நான்கு அல்லது
ஐந்து வாரங்கள் என்பது மிகவும் தாமதமாகிவிடும்.
எங்களுக்கு நேற்றே
இப்பணம் தேவைப்பட்டது,
இன்று அல்ல”
என்றார் அவர்.
வெள்ளியன்று
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் லிபிய,
ஆப்கானிஸ்தான்
போர்களைப் பற்றி விவாதிக்க நேட்டோவின் தலைமைச் செயலர்
Anders Fogh Rasmussen
உம் வந்திருந்தார்.
கூட்டத்திற்கு
முந்தைய தினம்,
Rasmussen, ஜோன்ஸ்
ஹோப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றினார்.
அதில் லிபியாவில்
“கடாபி
சகாப்தத்திற்குப் பின்”
லிபியாவில் நீடித்த
நேட்டோவின் பங்கு பற்றிக் கூறினார்.
நேட்டோவின்
“குறிப்பான வல்லுனர்
தன்மை”
மற்றும்
“பாதுகாப்பு,
இராணுவத் துறைகளில்
சீர்திருத்தம் தேவை”
என்பது பற்றி அவர்
சுட்டிக்காட்டினார்.
கடாபி ஆட்சி
வெற்றிகரமாக அகற்றப்பட்டபின்,
அமெரிக்க
ஆதிக்கத்திற்குட்பட்ட கூட்டு ஒரு நிரந்தர இராணுவ நிலைப்பாட்டை
“ஆலோசகர்கள்”,
“பயிற்சியாளர்கள்”
என்று அழைத்து அங்கு
நிறுவும் என்றார்.
இதற்கிடையில் ரஷ்யா வெள்ளியன்று அறிக்கையொன்றை வெளியிட்டு,
முடக்கப்பட்டுள்ள
சொத்துக்களை வழங்குவதற்கு ஐ.நா.
பாதுகாப்புச் சபை
ஒப்புதல் அளித்தால்தான் முடியும் என்றும்,
மோதலிலுள்ள
பிரிவினரிடையே அத்தகைய நிதிகளை வழங்குதல் பாதுகாப்புச் சபை லிபியா மீது இயற்றியுள்ள
தீர்மானங்களை மீறுவது என்றார்.
இதில் தீர்மானம் எண்.
1973, மார்ச் மாதம்
ஒப்புதல் கொடுக்கப்பட்டதும் அடங்கும்.
இதைத்தான்
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வட ஆபிரிக்க நாட்டிற்கு எதிராக நடத்தப்படும்
வான் போரை சட்டபூர்வமாக நியாயப்படுத்தப் பயன்படுத்துகின்றன என்று அது கூறியுள்ளது.
பாதுகாப்பு
சபையில் தடுப்பதிகாரம் கொண்ட ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா
அத்தீர்மானத்தில் சீனா,
இந்தியா,
ஜேர்மனி மற்றும்
பிரேசிலுடன் இணைந்து வாக்களிக்கவில்லை.
லிபியத்
தலையீடு இரண்டாவது மாத முடிவை நெருங்கிக் கொண்டிருக்கையில்,
நேட்டோ வான்
தாக்குதல்களானது கடாபி ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் படைகளை அமெரிக்க ஆதரவு கொண்ட
பிரிவுகளுக்கு நாட்டின் மீதான கட்டுப்பாட்டை மாற்ற அதிகம் செய்யவில்லை.
தலையீடு
தொடங்குமுன் அது பற்றிச் சில தயக்கங்களை வெளியிட்ட பாதுகாப்பு மந்திரி ரோபர்ட்
கேட்ஸ் வெள்ளியன்று தலையீட்டின் தொடக்கத்திலிருந்து வாஷிங்டன் முறையாக அதன்
கட்டுப்பாட்டை நேட்டோவிற்கு மாற்றும் வரை,
அதாவது மார்ச்
19ல் இருந்து ஏப்ரல்
4 வரை,
அதற்கான செலவுகள்
750 மில்லியன் டொலர்
ஆகியுள்ளன என்றார்.
ஆரம்ப மதிப்பீடுகள்
இது 600
மில்லியன் டொலராக
இருக்கலாம் எனக் கூறியிருந்தன.
வட
கரோலினாவில்
Camp Lejeune ல்
மரைன்களிடம் பேசிய கேட்ஸ் கூறியதாவது:
“நான்கு
மாதங்களுக்கு முன்பு நாம் இன்று லிபியாவில் இருப்போமா என நீங்கள் கேட்டிருந்தால்,
“நீங்கள் என்ன
புகைக்கிறீர்கள்”
எனக் கேட்டிருப்பேன்”
என்றார்.
லிபிய போர்ச்
செலவுகள் பற்றிக் குறிப்பிடுகையில்,
“அடிப்படையில் நாம்
அதையும் செய்துதான் தீர வேண்டும்”
என்றார்.
இதன் விடயம் இவை
பென்டகன் வரவு-செலவுத்
திட்டத்திலிருந்து நேரடியாக வருபவை,
காங்கிரஸ் ஒப்புதல்
கொடுத்துள்ள துணை அவசரக்கால நிதியம் என்று ஈராக்,
ஆப்கானிய
ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்கப் போர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான
பில்லியன் டாலர்களிடம் இருந்து அல்ல என்பதாகும்.
லிபியத்
தலையீட்டில் மூன்றாவது மாதம் வருதல் என்பது ஒபாமா நிர்வாகத்திற்கு அரசியலமைப்பு
பிரச்சினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்போர் அமெரிக்க
காங்கிரசின் ஒப்புதலைப் பெறவில்லை.
அப்படிப்பார்த்தால்,
அமெரிக்க
மக்களுக்குக் கூட தலையீட்டின் காரணங்கள் விளக்கப்படவில்லை.
இயற்றப்பட்ட
போர் அதிகாரங்கள்
1973
தீர்மானத்தீன் கீழ்,
அமெரிக்க
ஜனாதிபதிகள் போர் அறிவிப்பு இல்லாமல்
60 நாட்களுக்கு மேல்
அமெரிக்க இராணுவப் படைகளை அனுப்பவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் காங்கிரசின்
இசைவு இல்லாமல் இராணுவ சக்தியையும் பயன்படுத்த முடியாது.
இந்த
60 நாள் கெடு அடுத்த
வெள்ளியன்று லிபியக் தலையீட்டினால் எதிர்கொள்ளப்படும்.
வியாழனன்று
செனட் வெளியுறவுக் குழுவின் முன்பு காலக்கெடு பற்றி கேட்கப்பட்டதற்கு,
துணை வெளிவிவகாரச்
செயலர் பிரச்சினையைத் தவிர்க்கும் வகையில்,
நிர்வாகம்
“நம் பங்கு பற்றிப்
பரிசீலிக்கிறது,
ஜனாதிபதி நமக்கு
முன்னேற்றத்திற்கு உகந்ததைச் செய்வது பற்றி முடிவுகளை எடுப்பார்”
என்றார்.
நியூ
யோர்க்
டைம்ஸ்
கருத்துப்படி,
லிபியாவில் இராணுவ
நடவடிக்கைகளில் ஒரு தற்காலிக
“நிறுத்தம்”
உத்தரவிடப்படலாம்,
பின் அதைத்
தொடர்ந்து மோதலைத் துவக்கினால்,
ஒரு புதிய
60 நாள் அவகாசம்
இராணுவ நடவடிக்கை பற்றித் காங்கிரஸ் இசைவின்றித் தொடரலாம் என்பது பரிசீலனையில்
உள்ளது.
இத்தகைய
திட்டம் முழு
லிபியத் தலையீட்டின்
குற்றம் சார்ந்த தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
குடிமக்கள்
உயிர்களைக் காப்பாற்ற என்ற போலிக் காரணத்தில் துவங்கிய இத்தாக்குதல் இன்னும்
கூடுதலான குருதி கொட்டுதல்,
அழிவு
ஆகியவற்றைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
போலித்தன
சட்டபூர்வக் காரணங்களுக்குப் பின்னணியில்,
இப்போருக்கான
நோக்கம் திரிபோலியில் இன்னும் வளைந்து கொடுக்கும் தன்மையுடைய ஆட்சியை நிறுவுதல்
ஆகும்.
அந்த ஆட்சி அமெரிக்க,
மேற்கத்தைய
ஐரோப்பியாவைத் தளமாகக் கொண்ட பெரும் எரிசக்தி நிறுனங்களுக்கும் தடையற்ற முறையில்
நாட்டின் எண்ணெய்,
எரிபொருள்
இருப்புக்கள் மீது பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்து,
மத்திய கிழக்கு,
வட ஆபிரிக்க
கொந்தளிப்புப் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புதிய தளத்தையும் அளிக்கும்.
பெங்காசியில் எழுச்சித் தலைமை என்று அழைக்கப்படும் சபை இந்த நவ காலனித்துவ
நடவடிக்கைக்கு முழு நனவுடன் ஒத்துழைக்கும் பகடைக்காய் ஆகும்.
வியாழனன்று
Brookings Institute
ல்
முன்னாள்
CIA மத்திய
கிழக்குப் பகுப்பாய்வாளர் கென்னத் போலக்குடன் பேசிய ஜிப்ரில்
“லிபியாவில்
அமெரிக்காவிற்கும் சுதந்திர உலகிற்கும் பெரும் பணயம் உள்ளது”
என்றார்.
புதிய ஆட்சி
அமெரிக்கத் தலையீட்டின் மூலம் நிறுவப்படுவது
“மற்ற அரபு
புரட்சிகளுக்கு,
எகிப்து,
துனிசியா மற்றும் ஆபிரிக்கா போன்றவற்றிற்கு ஒரு
முன்மாதிரியாக இருக்கும்”
என்றார் அவர் |