சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Pivotal elections in five Indian states

ஐந்து இந்திய மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள்

By Keith Jones
12 May 2011
Use this version to print | Send feedback

கடந்த மாதம் இந்தியாவின் நான்காவது அதிக மக்கள் தொகையை கொண்ட மேற்கு வங்கத்தில் ஐந்து கட்டங்களில் நடந்தது உட்பட, ஐந்து இந்திய மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் இடப்பட்ட வாக்குகள் வெள்ளியன்று எண்ணப்பட உள்ளன.

கிழக்கு இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், மேற்கு வங்கம், தெற்கு இந்திய மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ் நாடு, கூட்டாட்சிப் பொறுப்பிலுள்ள மத்தியப் பகுதியான முன்னாள் பிரெஞ்சுக் காலனித்துவ பிரிவுகள் உட்பட புதுச்சேரி ஆகியவற்றின் அரசாங்கங்கள் பிரச்சனைக்கு உட்பட்டுள்ளன. இந்த ஐந்து அரசாங்கங்களும் கிட்டத்தட்ட இந்தியாவின் 1.2 பில்லியன் மக்களின் ஐந்தில் ஒரு பங்கை ஆட்சி செய்கின்றன.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைமையிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கு இந்த மாநிலத் தேர்தல்கள் முக்கிய சோதனை ஆகும். அதுவோ மே 2009 லோக் சபாத் தேர்தலில் பெற்ற ஐந்து ஆண்டு பதவிக்காலத்தின் நடுப்பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2009-09ல் தீவிரச் சரிவிற்கு உட்பட்ட பின் மீண்டும் 8 சதவிகிதம் உயர்நிலைக்கு ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் விலை உயர்வுகள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை உயர்வுகள், இந்திய மக்களின் முக்கால் பகுதியினரைப் பாதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. இவர்கள் நாள் ஒன்றிற்கு 2 டொலருக்கும் குறைவான பணத்தில்தான் வாழ்கின்றனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து பல ஊழல் அம்பலங்களில் சிக்கியுள்ளது. இவை எந்த அளவிற்கு அரசாங்கம் இந்தியாவின் பெருநிறுவனங்களின் குரலுக்கேற்ப செயல்படுகின்றன என்பதை விளக்க உதவுகின்றன.

காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பங்காளிகளுக்கு தேர்தலானது முக்கியத்துவம் கொண்டிருந்தாலும், அவற்றில் இந்திய, சர்வதேச அக்கறை மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் உள்ள இடது முன்னணி அரசாங்கங்கள் மீது, அதாவது ஸ்ராலினிச இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) அதாவது CPM மீது உள்ளது.

கருத்துக் கணிப்புக்கள், தேர்தல் முடிந்தபின் நடத்தப்பெற்ற கணிப்புக்கள் ஆகியவை பலவும் தடையின்றி 1977ல் இருந்து மேற்கு வங்கத்தை ஆட்சி செய்து வரும் CPM தலைமையிலான இடது முன்னணி திரிணாமுல் காங்கிரஸ் (TMC-அடிமட்டத் தொண்டர்கள் காங்கிரஸ்) தலைமையிலுள்ள ஒரு தேர்தல் முகாமினால் பெரும் தோல்வியை சந்திக்கும் என்று கணித்துள்ளன. காங்கிஸ் கட்சியிலிருந்து பிரிந்துள்ள ஒரு வலதுசாரி வங்காள பிராந்திய அமைப்பான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) முன்னதாக இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (BJP) உடன் உடன்பாட்டைக் கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது இது UPA ல் ஒரு பங்காளிக் கட்சியாக உள்ளது. இதன் தலைவர் கம்யூனிச எதிர்ப்பு வார்த்தைஜாலவாதியான மமாதா பானெர்ஜி இந்தியாவின் இரயில்வே மந்திரியாக உள்ளார்.

காங்கிரஸ் தலைமை இடதை அகற்றுவதற்குக் கொண்டிருந்த ஆர்வத்தின் தன்மை அது TMC யின் ஒருதலைப்பட்ச முடிவான தனக்கே மேற்கு வங்கத்தின் 292 சட்டமன்ற இடங்களை ஒதுக்கிக் கொள்ளும் முடிவிற்கு அடிபணிந்தது. TMC, காங்கிஸிற்கு 60 இடங்களை மட்டுமே ஒதுக்கியது, 2 இடங்களை இந்திய சோசலிஸ்ட்  ஐக்கிய மையத்திற்கு (Socialist Unity Centre of India ) ஒதுக்கியது. இது பெயரளவிற்கு இடதுசாரி எனக்கூறிக்கொள்ளுவது, இதனுடைய கொள்கைப் போக்கு இந்திய தேசியவாதம், ஸ்ராலினிசம், மாவோயிசம் ஆகியவற்றின் கலவை ஆகும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் பானெர்ஜியும் அவருடைய TMC யும் உள்ளூர் மற்றும் தேசிய பாராளுமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கத்தின் வலதுசாரிக் கொள்கைகளின் எதிர்ப்பாளர்கள் என்று காட்டிக் கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. குறிப்பாக அரசாங்கம் விவசாயிகள் எதிர்ப்பை இரத்தம்சிந்திய முறையில் அடக்கியது, சிறப்புப் பொருளாதார பகுதிகள் இன்னும் பிற பெருவணிகத் திட்டங்களுக்காக செழிப்பான விளைநிலத்தை அரசாங்கமே அபகரித்தல் ஆகியவற்றை எதிர்த்து நின்றன.

கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்கு முன்னணிக் கூட்டணியைத் தன் தலைமையில் அதிகாரத்தில் இருத்துவதற்கு அதிக நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸும் அதன் நட்புக் கட்சிகளும் இந்தியத் தேசிய பாராளுமன்றத்தின் கீழ் பிரிவான லோக் சபாவிற்கு நடந்த தேர்தல்களில் 20 தொகுதிகளில் 16 ஐக் காப்பற்றின. ஆனால் சமீபத்திய தேர்தல்கள் மேற்கு வங்கத்தை விட முடிவற்ற தன்மையில் உள்ளன. சிலர் இடதே அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கின்றனர். கடந்த அரை நூற்றாண்டில் ஸ்ராலினிச மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலான அரசாங்கங்கள் மாறி மாறி கேரளாவை ஆண்டு வந்துள்ளன.

CPM மற்றும் அதனுடைய சிறிய இடது முன்னணி நட்பு கட்சியுமான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) இந்திய ஸ்தாபனத்தில் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. எனவே தொழிலாள வர்க்கத்தை அரசியல் அளவில் அடக்குவதில் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தன.

1970களில் இந்தியா தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களால் பெரும் அதிர்விற்கு உட்பட்ட நேரத்தில், இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்து 1975-77 முழுவதும் அவசரகாலநிலையின்போது அரசாங்கத்திற்கு CPI உதவியது. அப்பொழுது அடிப்படை குடியுரிமைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, பல்லாயிரக்கணக்கான அரசாங்க எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் CPM தொழிலாள வர்க்கத்தை பாரதீய ஜனதா கட்சிக்கு அடிபணியச்செய்து வைத்தது. இது ஒரு தற்காலிக முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டணி, பி.ஜே.பியின் முன்னோடி ஜன சங்கத்தை அடங்கியிருந்த ஒரு முகாமாகும்.

1990களில் இந்திய முதலாளித்துவம் தடையற்றச் சந்தைக் கொள்கைகளுக்குத் திரும்பி, இந்தியா உலக முதலாளித்துவத்துடன் முழுவதும் ஒருங்கிணைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கம் சிதைந்து, பாரதீய ஜனதா கட்சி அதனுடைய ஆத்திரமூட்டும் ஹிந்துத்தவ அரசியலாலும் ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகள்  இந்திய உயரடுக்கின் உத்தியோகபூர்வ அரசியலில் இன்னும் கூடுதலான முக்கிய பங்கைவகிக்க ஆரம்பித்தன.

CPM மற்றும் அதன் இடது முன்னணி ஆகியவை முதலாளித்துவத்திற்கு அதன்புதிய பொருளாதாரக் கொள்கையானதனியார் மயமாக்குதல், கட்டுப்பாடுகளை அகற்றுதல், சந்தை முறைகளைக் கொண்டு வருதல் மற்றும் பெருநிறுவனங்களுக்கு வரிக் குறைப்புக்கள் ஆகியவற்றில் முக்கிய உதவிகள் அளித்தன. புது டெல்லியில் பாரதீய ஜனதா கட்சி இல்லாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாகப் பதவியில் இருக்க அவை உதவின. தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் போன்ற பெயரளவு எதிர்ப்பில் கட்டுப்படுத்தின. அதிலும் தாங்களே அரசாங்கம் அமைத்திருந்த மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அவ்வாறு செய்து இரக்கமின்றி முதலீட்டாளர் சார்புக் கொள்கைகளைச் செயல்படுத்தின.

UPA என்பதே ஒரு ஸ்ராலினிச தோற்றுவிப்புத்தான். CPM மற்றும் இடது ஆகியவை பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் எதிர்பாராமல் மக்கள் சீற்றம் பொருளாதாரப் பாதுகாப்பு சமூக சமத்துவமின்மையையொட்டி 2004 தேர்தல்களில் தோல்வியுற்றதையடுத்து அமைக்கப்பட்ட காங்கிரஸ் கூட்டணியில் சேரவில்லை. ஆனால் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்ற கட்சிகள் UPA இல் சேரவேண்டும் என்பதில் முக்கிய நம்பகத்தன்மை கொடுத்தன. முதல் UPA அரசாங்கத்தின் பெயரளவுத் திட்டமான குறைந்தபட்சப் பொதுத் திட்டம் என்பதை இயற்றவும் இவை உதவின-இந்த ஆவணம்தான் புதிய தாராளவாதச்சீர்திருத்தம்ஒருமனிதாபிமான முகத்துடன்செயல்படமுடியும் என்ற போலிக்கருத்திற்கு ஊக்கம் கொடுத்து, வளர்த்து அதன் அடித்தளத்தில் இருந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு மே 2004ல் இருந்து ஜூன் 2008 வரை, இடது முன்னணி காங்கிரஸ் தலைமையிலான UPA விற்கு அதன் பாராளுமன்றப் பெரும்பான்மைக்கு உதவியது. அதே நேரத்தில் CPM மற்றும் UPA அரசாங்கம் அதற்கு முன்பு இருந்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து சமூகப் பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளில் அதிக மாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டது. இறுதியில் காங்கிரஸ் கட்சி இடதுடன் உடன்பாட்டை முறித்துக் கொள்ள விழைந்தது. ஏனெனில் அது இந்திய அமெரிக்க பொது அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த ஆர்வம் காட்டி வாஷிங்டனுடன்உலகளாவிய மூலோபாய பங்காளித்தனத்தைஅடைய முயன்றது.

அப்படி இருந்தும், இந்திய முதலாளித்துவம் ஆர்வத்துடன் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் தங்கள் மேற்கு வங்கக் கோட்டையில் தோல்வி அடைய வேண்டும் என எதிர்பார்க்கிறது. இது அரசியலை தீவிரமாக வலதிற்குத் திருப்பும் வாய்ப்பைக் கொடுக்கும் என்று கணிப்பிடுகிறது.

ஒரு முக்கிய பெருநிறுவன வெளியீடான, Business India வின் தற்போதைய பதிப்பில் UPA அரசாங்கம் இப்பொழுது பெருவணிகத்தின் நீண்டகாலக் கோரிக்கையான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது, ஆலைகள் மூடுவது ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாடுகள் மிகுந்த சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் முன் அட்டை அப்பட்டமாக அறிவிக்கிறது: “தொழிலாளர் துறைச் சீர்திருத்தம்-தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது….மேற்கு வங்கத்தில் எதிர்பார்க்கப்படும் இடதின் தோல்வி போர்க்குணமிக்க கம்யூனிச தொழிற்சங்கங்களை செயலற்றதாக செய்யும். இதுதான் தொழிலாளர்துறைச் சீர்திருத்தங்களுக்கு சிறந்த நேரம்.”

மேற்கு வங்கத்தில் வலதுசாரி  TMC ஆட்சியை எடுத்துக் கொள்ள இருக்கிறது என்பது CPM மற்றும் CPI ஆகியவற்றின் மீதான பெரும் குற்றப்பத்திரிகையாகும். காரணம் இவை தாங்களே முன்னின்றுமுதலீட்டாளர் சார்பு செயற்பட்டியலை நடத்தின, தகவல் தொழில்நுட்பம், அத்துடன் இணைந்த பிரிவுகளில் வேலைநிறுத்தங்கள் தடைக்கு உட்படுத்தப்பட்டன. “நலிந்தபொதுத்துறைப் பிரிவுகளை விற்றன அல்லது மூடிவிட்டன. மேலும் சமூகநலச் செலவுகளைக் குறைத்து அதிக அளவில் வலதுசாரிக் கொள்கைகளைச் செயல்படுத்தின.

கிழக்கு இந்தியாவில் கூடிய பகுதிகளிலும் மற்றும் மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களிலும் பழங்குடி எழுச்சியில் முன்னிலையில் இருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்டுக்கள்), TMC மற்றும் காங்கிரஸ் கட்சி என்னும் வலதுசாரிகள் இடது முன்னணியின் காட்டிக்கொடுப்புக்களால் மக்கள் கொண்ட சீற்றத்தில் இருந்து பயன் அடைவதற்கு உதவிய நிலைமைகளைத் தோற்றுவிப்பதில் ஒரு கருவியாக உள்ளது.

CPM உடையசமூக பாசிசத்தைஎதிர்த்துப் போரிடுவது என்று கூறி, மாவோயிஸ்ட்டுக்கள் பானர்ஜி மற்றும் அவருடைய TMC உடன் சேர்ந்துகொண்டு அவற்றை விவசாயிகள் மற்றும் நந்திக் கிராமம் மற்றும் சிங்கூரில் நடைபெற்ற நில அபகரிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் நட்புக் கட்சியாக ஏற்றனர். இந்த ஆதரவு ஒரு வலதுசாரி என்று அதிகமாகப் பெயர் பெற்ற பானர்ஜிக்கு தன்னை மேற்கு வங்கத்தின் அடக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாப்பவர் என்று நிலைநிறுத்திக் கொள்ள உதவியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் CPI (மாவோயிஸ்ட்டுக்கள்) தலைவர்கள் பலமுறையும் பானர்ஜியைப் பாராட்டி அவர் மாநிலத்தில் முதல் மந்திரியாக வருவதை வரவேற்போம் என்று கூறியுள்ளனர். ஜனவரி மாதம் CPM மேற்கு வங்கத் தலைவர் ஒருவர் செய்தியூடகத்திற்குக் கொடுத்த அறிக்கையில் மாவோயிஸ்ட்டுக்கள் மேற்கு வங்கத் தேர்தல்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுக்க மாட்டார்கள், அதையொட்டி TMC மூலம் இடது தோல்வி அடைவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆனால் கடந்த மாதம் மாவோயிஸ்ட் தலைமை தன் போக்கை மாற்றிக் கொண்டு புறக்கணிப்பு தேவை என்ற அழைப்பை வெளியிட்டது. இம்மாற்றத்திற்கு அது விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை. இந்திய முதலாளித்துவத்தின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு கொண்டுள்ள ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்தல் என்பது அரசியல் அளவில் மிகவும் சமரசத்திற்கு இடம் எனக் கருதப்படும் என்று நினைத்தது போலும். சிலவேளை பானர்ஜி பல முறையும் மாவோயிச எழுச்சியாளர்களுடனும் இணைத்து வன்முறை, கொலையுடன் CPM ஐ அடிக்கடி குற்றம்சாட்டுவது தடுமாறப்பண்ணிவிட்டது போலும்.

எப்படிப் பார்த்தாலும், மாவோயிஸ்ட்டுக்கள் பானர்ஜிக்குஒரு முற்போக்கானமுகமூடியை வழங்கியதன் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது. இந்த முகமூடியை அவர் விரைவில் அரசாங்கத்தை அமைத்தவுடன் உதறிவிடுவார்.

CPM ஐப் பொறுத்தவரை, மாவோயிஸ்ட்டுக்கள் மற்றும் TMC க்கும் இடையேயுள்ள உட்குறிப்பான, சில நேரம் வெளிப்படையான  உடன்பாட்டை எதிர்கொள்ளும் வகையில் இன்னும் வலதிற்கு மாறியுள்ளது. மத்திய அரசாங்கம் மாவோயிஸ்ட்டுக்ளுக்கு எதிராகத் தொடக்கியுள்ள எழுச்சி, எதிர்ப்பிற்கு முழு மூச்சுடன் அது ஆதரவைக் கொடுத்துள்ளது. அதற்கு பச்சை வேட்டை நடவடிக்கை (Operation Green Hunt) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் காங்கிஸிற்குப் பலமுறை TMC ஐ விட இடது நம்பகத்தன்மை உடையது என்பதை அறியவேண்டும் என்றும் அழைப்புவிட்டுள்ளது.

மேற்கு வங்கக் கோட்டையின் இழப்பு CPM ற்கு முக்கிய அரசியல், அமைப்புரீதியான நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. மேற்கு வங்கக் கட்சியின் தலைமை நீண்ட காலமாக தேசிய மட்டத்திலான அதன் தலைமையுடன் ஒத்துப் போகவில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். உதாரணமாக மேற்கு வங்கத் தலைமை 2008ல் UPA  அரசாங்கத்திற்கு ஆதரவைத் திரும்பப் பெறவேண்டும் என்ற முடிவை எதிர்த்திருந்தது.

கேரளாவிலும் CPM வலதுசாரிப் பிரிவிகளுக்கிடையே பிளவடைந்து உள்ளன. தற்போது இருக்கும் 80 வயதான முதல் மந்திரி வி.எஸ் அச்சுதானந்தனுக்கு நடந்த தேர்தல்களில் போட்டியிட ஒரு தொகுதி கொடுக்கப்பட CPM அரசியல்குழு தலையிட்டு உறுதிசெய்தது. CPM மாநில தலைமைப் பதவிப்போட்டிக்கு தனது போட்டியாளரை எதிர்த்து ஊழல் குற்றச்சாட்டுக்களை ஆதரித்துள்ளதால் கேரள CPM இனுள் அச்சுதானந்தன் பலருடன் மனமுறிவுகொண்டுள்ளார். இந்திய செய்தி ஊடகங்களில் அச்சுதானந்தன் ஒரு தீவிர இடதுசாரியாக இடைவிடாமல் காட்டப்பட்டபோதிலும், முதலாளித்துவத்தின் ''புதிய பொருளாதார கொள்கைக்கு'' ஆதரவளித்தது உட்பட  அனைத்து முக்கிய விடயங்களிலும் ஆதரவளித்ததுடன், 4வருடகாலமாக  UPA இற்கு ஆதரவு வழங்குவதிலும் ஏனைய CPM தலைமையுடன் வேறுபாடற்று அணிவகுத்து நிற்கின்றார்.

இந்திய முதலாளித்துவத்தின் கட்சிகளுடன் வலதுசாரி தந்திரோபாயங்களை மேற்கொள்வது என்னும் தங்கள் போக்கிற்கு ஏற்ப, CPM மற்றும் CPI இரண்டும் தமிழ் மாநிலத் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைமையிலுள்ள கூட்டணியில் இளைய பங்காளிகளாகப் போட்டியிடுகின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடைசியாக கடந்த தசாப்தத்தின் முதல் பாதியில் பதவியில் இருந்தபோது, இது தொழிலாள வர்க்கத்துடன் பெரும் வன்முறையான மோதலைக் கொண்டது. பொதுத்துறைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை முறிப்பதற்கு கருங்காலிகளை பயன்படுத்தியதுடன் மற்றும் பெரும் துப்பாக்கிச் சூடுகளையும் நடத்தியது.

தமிழ்நாட்டில், ஸ்ராலினிஸ்டுக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் நிரந்தர விரோதியான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (DMK) மாறி மாறித் தேர்தல் உடன்பாடுகளைக் கொண்ட பின்னணியைத்தான் கொண்டுள்ளது. தற்பொழுது திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் UPA யின் ஒரு பங்காளியாக உள்ளது, காங்கிரஸின் நட்புக் கட்சியாக உள்ளது. ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் CPM அதன் மாநிலச் சட்டமன்றப் பிரிவின் முன்னாள் தலைவர் ஒருவரை திராவிட முன்னேற்றக் கழக மாநில அரசாங்கத்திற்குப் பெரும் பாராட்டுக் கூறியதற்காக கட்சியிலிருந்து வெளியேற்றியது. முன்பு அதே CPM சட்ட மன்ற உறுப்பினர்தான் வெளியேற்றப்படாமல், பதவிக் குறைப்பிற்கு உட்பட்டார். அவர் மாநில தொழிலாளர் மந்திரிக்கு லஞ்சம் கொடுக்க விரும்பிய திருப்பூர் தொகுதியில் ஜவுளி அதிபர்களுக்கும் மந்திரிக்கும் இடையே பல தொழிலாளர் பிரிவு ஒழுங்குமுறைகளை செயல்படுத்தாமல் இருப்பதற்காகத் தரகர் போல் செயல்பட்டது இதற்குக் காரணம் ஆகும்.

செல் தொலைபேசி அலைவரிசையில் இரண்டாவது தலைமுறை விற்பனையையொட்டி எழுந்த ஊழலில் திராவிட முன்னேற்றக் கழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்பொழுது பதவியை இழந்துவிட்ட திராவிட முன்னேற்றக் கழக தொலைத் தொடர்பு மந்திரி மற்றும் தமிழ்நாடு  திராவிட முன்னேற்றக் கழக முதல் மந்திரியின் மகள் இருவரும் குற்றச் சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் அரசாங்கத்தைப் பத்து ஆண்டுகளாக நடத்தும் அஸ்ஸாமில் தேர்தல்களில் ஒரு பெரும்பான்மையற்ற பாராளுமன்றம் வரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.