சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Death squads reportedly assassinating Libyan regime figures in Benghazi

கொலைக் குழுக்கள் லிபிய ஆட்சியின் உறுப்பினர்களை பெங்காசியில் படுகொலை செய்வதாகத் தகவல்கள்

By Patrick O’Connor 
12 May 2011
Use this version to print | Send feedback

நேற்று நியூ யோர்க் டைம்ஸ் பெங்காசியில் முன்னாள் லிபிய அரசாங்கத்தின் உள்துறைப் பாதுகாப்பு உறுப்பினர்களை அலையெனப் படுகொலைக்கு உட்படுவது பற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளது. “இக்கொலைகள் எதிர்ப்பின் கோட்டையான  பெங்காசியிலுள்ள முன்னாள் கடாபி அதிகாரிகளை கொலைக் குழுக்கள் வேட்டையாடிக் கொல்வது போன்ற நிலையை எழுப்பியுள்ளனஎன்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

நாசர் அல்-சிர்மனி, ஹுசைன் கைத் என்னும் இருவரின் சடலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சில நாட்களுக்குள் லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமும் எழுச்சியாளர் என அழைக்கப்படுவோரின் தலைமையிடத்தின் மையமுமான பெங்காசிக்கு வெளியேயுள்ள பண்ணை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டனசிர்மனி அவருடைய கைகளும் கால்களும் கட்டப்பட்ட  நிலையில் காணப்பட்டார். அவர் தலைமீது இரு முறை சுடப்பட்டிருந்தது. முன்னதாக அவர் சந்தைக்குச் சென்றபின் காணாமற்போனதாக அறியப்பட்டிருந்தது. கைத் அவருடைய வீட்டிலிருந்து முகமூடி அணிந்த நபர்களால் இரவில் கடத்தப்பட்டு, பின்னர் நெற்றியில் ஒற்றைத் துப்பாக்கித் தோட்டாக் காயத்துடன் இறந்துகிடந்தார். இருவரும் முயம்மர் கடாபியின் மிருகத்தன உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவில் விசாரணையாளர்களாக இருந்தனர் என்று கூறப்படுகிறது.

 

குறைந்த பட்சம் இதே போன்ற நான்கு தாக்குதல்கள் இப்பொது பெங்காசியில் அதிகாரிகளுடைய விசாரணையின் கீழ் உள்ளன. அதே நேரத்தில் எத்தனை கொலைகள் தெரிவிக்கப்படாமலேயே போய்விட்டன என்பது உறுதியாகக் கூற முடியவில்லை. மாற்றுத் தேசிய சபை (TNC) என்று அழைக்கப்படும் அமைப்பு அதன் பாதுகாப்புப் பிரிவுகள் இதற்குப் பொறுப்பு என்பதை மறுத்துள்ளதுஆனால் நியூ யோர்க் டைம்ஸ்எழுச்சி அதிகாரிகள் பல வாரங்கள் கடாபி விசுவாசிகள் எனக் கருதப்பட்டவர்களைச் சுற்றி வளைக்கச் செலவிட்டுள்ளனர்என்று ஒப்புக் கொண்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கை TNC இப்பொழுது பெங்காசியில் தீவிரமாகவுள்ள கொலைக் குழுக்களுக்குப் பொறுப்பு உடையது என்பதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச செய்தி ஊடகம் எவ்வளவு பேர் கிழக்கு லிபியாவில்சுற்றி வளைக்கப்பட்டனர்”, “எழுச்சித் தலைமையை ஒப்புக்கொள்ளாதவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ளவர்கள் எப்படிக் காவலில் நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றி குறிப்பிடத்தக்க வகையில் மௌனமாக உள்ளது.

 

டைம்ஸின் கருத்துப்படி பெங்காசியில் கொலைக் குழுக்கள் செய்யும் கொலைகளை விசாரிப்பவர்கள்கடாபி ஆட்சியின்போது சிறையில் அடைக்கப்பட்டு இப்பொழுது பழைய கணக்கைத் தீர்ப்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருவேளை தொடர்பு கொண்டிருக்கலாமோ என்பது பற்றி ஆய்வு நடத்துகின்றனர்.”

 

ஆனால் இந்தத் தகவல் இந்த இஸ்லாமியவாத அடிப்படைச் சக்திகள் பொறுப்புக் கொண்டவை எனச் சந்தேகிக்கப்படுகின்றன என்று விளக்கவில்லை. பல அடிப்படைவாதக் குழுக்கள் TNC உடன் இணைந்தவை. இவர்கள் முன்னாள் கடாபி ஆட்சி உறுப்பினர்கள், வெளிநாட்டுக்குச் சென்றுள்ள வணிகர்கள், அமெரிக்க உளவுத்துறைச் சொத்துக்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகின்றனர். முன்பு குவாண்டிநோமோ பேயில் காவலிலிருந்த சிலர் உட்படச் சில இஸ்லாமியவாதப் போராளிகளும் TNC உடைய பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படுவதில் பணிபுரிகின்றனர். நியூ யோர்க் டைம்ஸ் கொடுத்துள்ள சித்திரத்திற்கு மாறாக, இஸ்லாமியவாத துப்பாக்கி ஏந்தியவர்கள் பெங்காசியில் படுகொலை செய்வதற்குக் குழு அமைத்திருந்தால், இது TNC படைகளுடன் அநேகமாக தொடர்பைக் கொண்டிருக்கலாம்.

இந்த நிலைமை மீண்டும் அமெரிக்க-நேட்டோ குண்டுத் தாக்குதல் லிபியா மீது நடத்தப்படுவதற்கான போலிமனிதாபிமானக் காரணத்தை அம்பலப்படுத்துகிறது. வாஷிங்டனும் ஐரோப்பாவிலுள்ள அதன் நட்பு நாடுகளும் கடாபி ஆட்சி வெகுஜனக் கொலைகளை பெங்காசியில் செய்கின்றன என்னும் தோற்றத்தை எழுப்பி எண்ணெய் வளம் உடைய நாட்டில் அவர்களுடைய இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தின. போரின் உண்மை நோக்கம் கடாபியை அகற்றுதல், திரிப்போலியில் ஒரு வாடிக்கை அரசாங்கத்தை இருத்துதல் மற்றும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு ஆகியவற்றில் ஏகாதிபத்தியச் சக்திகளின் பொருளாதார நலன்கள் மற்றும் மூலோபாய நிலைப்பாடு ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய அண்டை எகிப்து, துனிசியா ஆகியவற்றில் நடைபெறும் புரட்சிகர இயக்கங்களுக்கு எதிராக ஒரு செயற்பாட்டுத் தளத்தை நிறுவுதல் என்பவையாகும்.

பெங்காசியில் கொலைக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் TNC க்கும் ஒபாமா நிர்வாகம், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே இன்னும் நெருக்கமாக உறவுகள் வெளிப்பட்டுள்ள நிலையில் வெளிவந்துள்ளன. TNC தலைவர் முஸ்தாபா அப்டெல் ஜலில் கடந்த இரண்டு நாட்கள் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இன்னும் கூடுதல் நிதி, இராணுவ ஆதரவு ஆகியவற்றிற்காகச் சென்றிருந்தார்.

இன்று அவர் பிரிட்டனின் பிரதம மந்திரி டேவிட் காமெரோன், வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் மற்றும் நிதி மந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்ன் ஆகியோரைச் சந்திக்கிறார். நேற்று ஜலில் மற்றும் அலி டர்கோனி—TNC யின்  “நிதி மந்திரி”, அமெரிக்காவில் 1970 களிலிருந்து வசிப்பவர்இருவரும் வாஷிங்டனில் பல ஒபாமா நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தினர். இவர்களுள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டோம் டொனிலன் மற்றும் நிதித்துறை, அரச அலுவலக அதிகாரிகளும் அடங்குவர்.

ஜலிலும் டர்ஹௌனியும் செனட்டர் ஜோன் கெர்ரி மற்றும் செனட் வெளியுறவுக் குழுவின் மற்ற உறுப்பினர்களையும் சந்தித்தனர். பின்னர் கெர்ரி தான் முடக்கப்பட்ட லிபியச் சொத்துக்களை எழுச்சியாளர்கள் எனப்படுவோருக்கு பில்லியன்கணக்கான டாலர்களை மாற்றும் வகையில் திறன் கொண்ட சட்டம் இயற்ற முயலப்போவதாக அறிவித்தார். வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் மே 5ம் தேதி இரண்டாவதுதொடர்புக்குழுஉச்சிமாநாடு இத்தாலியில் நடைபெற்றபோது, முடக்கப்பட்டுள்ள லிபியச் சொத்துக்கள் 30 பில்லியனுக்கும் அதிகமானவற்றில்ஒரு பகுதி” TNC க்கு அளிக்கப்படும் என்றார்.

கெர்ரியின் சட்டம் ஒரு நாட்டினுடைய இறைமைச் சொத்தை போலித்தனச் சட்ட மறைப்பின் மூலம் திமிர்த்தனமாக சட்டவிரோதமாகத் திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

TNC மற்றும் ஒபாமா நிர்வாகத்திற்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள், இப்பணம் கொடுக்கப்படுவது பற்றி நடப்பவை, எழுச்சித் தலைமை எனப்படுவது வெற்றுத்தனமாக வாங்குதல் விற்பனைக்கு உட்படுதல் பற்றிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு திட்டம் TNC யினால் முன்வைக்கப்பட்டது, “ஒரு சர்வதேச நிதியத்தை நிறுவி பணங்கள் பகிர்வை மேற்பார்வையிடும்…..இத்திட்டத்தின் கீழ் நிதிகள் சர்வதேசச் சமூகத்தால் நிர்வகிக்கப்படும், நிதிகள் இறுதியில் சபையினால் திருப்பிக் கொடுக்கப்படும்என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் கொடுத்துள்ளது.

இத்தகைய பல பில்லியன் டாலர் அடைமான உடன்பாடு சந்தேகத்திற்கு இடமின்றி பல இரகசிய விதிகளைக் கொண்டிருக்கும். அவற்றில் முக்கிய மேற்கத்தைய எண்ணெய் நிறுவனங்களுக்கு லிபிய எண்ணெய் அளிப்பது உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கலாம்.

 

நேட்டோ படைகள் சமீப நாட்களில் அவர்களுடைய குண்டுத் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளன. செவ்வாயன்று தொடர்ச்சியான வான் தாக்குதல்கள் திரிப்போலி மற்றும் கடாபியின் சொந்த ஊரான சிர்டே உட்பட நான்கு நகரங்கள் மீது நடைபெற்றன. வாஷிங்டன் போஸ்ட்  “இப்புதிய தாக்குதல் நேட்டோவிற்கும் எழுச்சிப் படைக்கும் இடையே பெருகியுள்ள ஒத்துழைப்பைப் பிரதிபலிப்பது போல் தோன்றுகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளது. “விசுவாசமான படைகளுக்கு எதிரான முன்னேற்றகரத் தாக்குதல்கள் அமெரிக்க பிரிடேட்டர் ட்ரோனின் வான்தாக்குதல் மூலம் ஓரளவு இயன்றதுஎன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக குண்டுத் தாக்குதல்கள் மையங்கள் மீதுகட்டுப்பாட்டைகொள்ளும் நோக்கம் உடையவை என்று நேட்டோ கூறியுள்ளது. இந்த மையங்களின் மீது முந்தைய தாக்குதல்கள் கடாபிக்கு எதிரான படுகொலைத் தாக்குதல்களுக்காக இருந்தன. ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற தாக்குதல் ஆட்சியாளரின் இளைய மகனையும் மூன்று பேரக்குழந்தைகளையும் கொன்றது. நேற்று லிபியச் சர்வாதிகாரி இந்நிகழ்விற்குப் பின் அவருடைய முதலாவது தொலைக்காட்சியில் தோன்றினார்இது சர்வதேசச் செய்தியாளர்கள் தங்கியுள்ள ஒரு திரிப்போலி ஹோட்டலில் பதிவு செய்யப்பட்டது. மற்றொரு தாக்குதல் அங்கு ஏற்படாமல் தடுக்கலாம் என்ற நோக்கத்தோடு.

 

நேட்டோவின் லிபிய நடவடிக்கைகளின் தலைமை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் Claudio Gabellini அபத்தமாக ஒரு செய்தியாளர் மாநாட்டில் செவ்வாயன்றுஉண்மையில் கடாபி என்ன செய்கிறார் என்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லைஎன்றார். ஆனால் நேற்று இத்தாலியப் பாதுகாப்பு மந்திரி Ignazio La Russa உண்மையான செயற்பட்டியலை தவறுதலாக வெளியிட்டார்— “கடாபி ஒரு இராணுவக் கட்டுப்பாட்டு மையத்திற்குள் இருந்தால் ஒரு முறையான இலக்குதான்என்று அவர் கூறியதாக அல் ஜசீரா  தெரிவித்துள்ளது.

மிஸ்ரடாவில் கடாபி எதிர்ப்புச் சக்திகள் மோதலுக்குட்பட்ட நகரத்தின் விமான நிலையம் அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்று கூறியுள்ளன. இது உண்மையானால் அது கணிசமான முன்னேற்றம் ஆகும். ஆனால் அப்பகுதியிலிருந்து சில தகவல்கள் நடக்கும் மோதலை விவரித்துள்ளனஅரசாங்கச் செய்தித்தொடர்பாளர்கள் விமான நிலையம் கைவிட்டுப் போனது என்பதை மறுத்துள்ளனர். ஏப்ரல் தொடக்கத்திலிருந்து கடாபியின் படைகளால் கைப்பெற்றப்பட்டுள்ள ப்ரேகா என்னும் முக்கிய எண்ணைய் துறைமுகத்தின் மீதான கட்டுப்பாட்டிற்காக போர் நடைபெறுகிறது. TNC இன் போராளிக் குழுக்கள் மற்றும் நேட்டோ கட்டுப்பாடு ஆகியவை பெருகிய முறையில் ஒருங்கிணைந்துள்ளதின் தெளிவான அடையாளமாக அல் ஜசீரா கூறுகிறது: “செவ்வாயன்று அவர்களின் தாக்குதலின் போது நகரத்தை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, எழுச்சிப் படைகள் நேட்டோ விமானங்கள் எதிர்த்தாக்குதலில் பங்கு பெற்ற அரசாங்க வாகனங்களைத் தாக்க அனுமதிக்கும் வகையில் பின்வாங்கின.