WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
நேட்டோ
கப்பல்கள்
விமானங்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் ஆபிரிக்க அகதிகளை ஆதரவின்றி இறப்பதற்கு
கைவிட்டிருந்தன
By
Barry Grey
10 May 2011
பிரிட்டனின்
கார்டியன் செய்தித்தாள் திங்களன்று ஒரு விசாரணை அறிக்கையை வெளியிட்டு நேட்டோ
மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளால் லிபியாவிற்கு எதிரான போரின் துவக்க நாட்களில்
அகதிகளை கைவிட்டு இறக்குமாறு விடப்பட்டதை ஆவணப்படுத்தி எழுதியுள்ளது.
அதிகாரிகள் அகதிகள்
கப்பல் மத்தியதரைக் கடலில் திக்கற்றுச் செல்லுவதைப் பார்த்தும் காப்பாற்றும்
நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் ரோமிலுள்ள ஒரு எதித்திரியப் பாதிரியாரைப் பற்றிய
(ஆதவற்றுக்
கைவிடப்பட்ட படகுடன் தொடர்பு கொண்ட கடைசி நபர்களில் ஒருவர்)
குறிப்புக்களை
மேற்கோளிட்டு,
பயணிகள்
பெருங்கடலில் 16
நாட்களில் தத்தளிக்க
விடப்பட்டனர் என்றும் இது இத்தாலிய கடலோரக் காவல் பிரிவிற்கு இதுபற்றி அறிவிப்பு
கொடுக்கப்பட்டும்,
ஒரு இராணுவ
ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தளக் கப்பல் ஆகியவற்றால் பார்க்கப்பட்டும் கூட
நிகழ்ந்துள்ளது என்று செய்தித்தாள் கூறியுள்ளது.
திரிப்போலியில் மார்ச்
25ம் தேதி படகில்
ஏறிய 72
பேரில் ஒன்பது பேர்தான்
லிபியத் தலைநகரத்திற்கு
180 மைல் தொலைவில்
வட மேற்கே உள்ள
Lampedusas என்னும்
இத்தாலியத் தீவுத் துறைமுகத்தை பெரும் போராட்டத்திற்குப் பின் அடைய முடிந்தது.
20 பெண்கள் இரு
குழந்தைகள் உட்பட மற்றவர்கள் தாகம்,
பட்டினி ஆகியவற்றால்
இறந்து போயினர்.
அது படகில் நடந்தது
அல்லது ஏப்ரல் 10ம்
தேதி படகு மிஸ்ரடாவிற்கு அருகே கரைசேர்ந்தபின் நடந்தது.
கார்டியன்
இப்படி
அம்பலப்படுத்தியுள்ளது திங்களன்று ஐ.நா.
அகதிகள் பாதுகாப்பு
அமைப்பான UNCHR
திரிப்போலி கடலோரப்
பகுதியில் 600
மக்களை
ஏற்றிவந்திருந்த கப்பல் ஒன்று வெள்ளியன்று மூழ்கிப் போயிற்று என்று கொடுத்துள்ள
தகவல் வந்த போதே இணைந்து வந்துள்ளது.
அதில் தப்பிப்
பிழைத்தவர்கள் எவரும் இல்லை.
UNCHR
செய்தித் தொடர்பாளர்
Laura Boldrini
வெள்ளிப் பெருவிபத்தை தவிர,
குறைந்த பட்சம்
மூன்று மற்றய படகுகள்,
மொத்தம் பல நூறு
பயணிகளைக் கொண்டவை திரிப்போலியிலிருந்து மார்ச் மாதக் கடைசியில் நீங்கியவை
காணாமற்போனதாக அறிவித்தார்.
ஜனவரி மாதம்
துனிசியாவில் பென் அலி ஆட்சியை அகற்றிய எழுச்சிக்குப் பின்னர்,
கிட்டத்தட்ட
30,000 ஆபிரிக்க
புலம்பெயர்வோர்,
பெரும்பாலும்
துனிசியர்கள்,
ஐரோப்பாவில் தஞ்சம்
நாடுவதற்காக
Lampedusa விற்கு
வந்துவிட்டனர் என்று தெரிகிறது.
மற்றும் ஒரு
10,000 அகதிகள்,
லிபியாவில் பணி
புரிந்து வந்திருந்த பெரும்பாலும் லிபியர்களும் சகாராத் துணைப்பகுதி ஆபிரிக்க
குடியேறியோரும்,
உள்நாட்டுப் போர்
வெடித்ததிலிருந்து திரிப்போலியை விட்டு நீங்கி
Lampedusa பக்கம்
பெப்ருவரி மாதம் சென்றுள்ளனர்.
மார்ச்
19ல் இருந்து
அமெரிக்கா,
பிரான்ஸ்,
பிரிட்டன் மற்றும்
நேட்டோ அவர்களுடைய லிபியாவிற்கு எதிரான போரைத் தொடக்கியதிலிருந்து லிபியாவை விட்டு
இடம்பெயரும் குடியேறுபவர்கள் அலை தீவிரமாகியுள்ளது.
நேட்டோ
மற்றும் ஐரோப்பிய சக்திகள் ஆபிரிக்க தஞ்சம் கோருவோர் எண்ணிக்கைக்கு கொடுக்கும்
விடையிறுப்பு கலப்படமற்ற விரோதப் போக்கும் இனவெறி உணர்வும்தான்.
குறிப்பாக
இத்தாலியும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உள்நாட்டு எல்லைக் கட்டுப்பாடுகளை
மறுபடியும் அறிமுகப்படுத்த வேண்டும்,
ஐரோப்பிய எல்லை
அமைப்பான Frontex
ஐ வலுப்படுத்தி
ஆபிரிக்க அகதிகள் புறத்தே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளன.
இந்நாடுகளிலும்
ஐரோப்பா முழுவதும் அரசாங்கங்கள் குடியேற்ற எதிர்ப்பு உணர்வைத் தூண்டியுள்ளன.
அதையொட்டி தங்கள்
தொழிலாள வர்க்கத்தின் வேலைகள்,
வாழ்க்கைத் தரங்கள்
மீது அவை நடத்தும் தாக்குதல்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கின்றன.
இத்தகைய தீய
கொள்கை முயம்மர் கடாபி ஆட்சிக்கு எதிராக லிபிய குடிமக்களைப் பாதுகாப்பதற்காக
தலையீடு செய்யும் ஒரு மனிதாபிமானச் செயல் என்று கூறப்பட்டு ஏகாதிபத்தியப் போரை
நியாயப்படுத்தும் ஒரு மோசடி ஆகும்.
அமெரிக்க,
ஐரோப்பிய சக்திகள்
மற்றும் நேட்டோ ஆகியவற்றின் லிபிய ஆபிரிக்க மக்களுக்கு எதிரான உண்மையான மனப்பாங்கு
கார்டியனால்
விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் சுருக்கமாகக் காணப்படுகிறது.
திரிப்போலியிலிருந்து மார்ச்
25 அன்று புறப்பட்ட
பயங்கர முடிவை எதிர்நோக்கிய படகில்
47 எதியோப்பியர்கள்,
7 நைஜீரியர்கள்,
5 கானா நாட்டு
மக்கள் மற்றும்
5 சூடானிய
குடியேறியோரையும் கொண்டிருந்தது.
லிபியாவை விட்டு
நீங்கிய பலரும் மற்ற ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.
இவர்கள்
“எழுச்சி”
படையினர் என்று
அழைக்கப்படுவோரால்,
அமெரிக்க,
நேட்டோ ஆதரவைப்
பெற்று வன்முறை பதிலடிக்கு இலக்காக உள்ளனர்.
குண்டுத்
தாக்குதல் அமெரிக்க நேட்டோப் படைகளால் நடத்தப்படுவதற்கு முன் மேற்கத்தைய
அதிகாரிகளும் செய்தி ஊடகத்தினரும் கடாபியை சகாரத் துணைப் பகுதி ஆபிரிக்க
குடியேறியோரை கூலிப்படைகளாகப் பயன்படுத்தி அவருடைய ஆட்சியை எதிர்த்தவர்களை அடக்கப்
பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டினர்.
கிழக்கு நகரமான
பெங்காசியைத் தளமாகக் கொண்ட
“எழுச்சியாளர்கள்”
தங்கள்
கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளில் ஆபிரிக்க குடியேறியவர்கள் மீது கொலைகாரத்
தாக்குதல்களை நடத்தினர்.
திரிப்போலியிலிருந்து படகு புறப்பட்டு இரண்டு நாட்களுக்குள்,
அது எரிபொருளை
இழக்கலாயிற்று,
தீவிர ஆபத்திற்கு
உட்பட்டது.
அகதிகள் படகில்
இருந்து செய்மதி தொலைபேசியைப் பயன்படுத்தி ரோமில் ஒரு எதித்திரியப் பிரிவில்
பாதிரியாராக இருக்கும் அருட்தந்தை மோசஸ் ஜேராயை அழைத்தனர்.
அவர் ஹபேஷியாவில்
அகதிகள் உரிமைகள் அமைப்பு என்பதை நடத்துகிறார்.
ஜேராய் இத்தாலியக்
கடலோரக் காவல்பிரிவுடன் தொடர்பு கொண்டார்.
கார்டியன்
எழுதுகிறது:
“படகு இருக்குமிடம்
திரிப்போலியிலிருந்து
60 மைல்
சுற்றளவிற்குள் என்று குறுகியது.
கடலோரப்பகுதி
அதிகாரிகள் ஜேராயிடம் இதற்கான எச்சரிக்கை எழுப்பப்பட்டுள்ளது என்றும் அனைத்துத்
தொடர்புடைய அதிகாரிகளும் நிலைமை பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளனர் என்றும் உத்தரவாதம்
அளித்தனர்.”
இதைத்
தொடர்ந்து ஒரு இராணுவ ஹெலிகாப்படர்
“இராணுவம்”
என்ற பெயர்
எழுதப்பட்டது படகிற்கு மேலே பறந்தது.
கார்டியன்
கூற்றின்படி விமான ஓட்டிகள் இராணுவச் சீருடை அணிந்திருந்தனர்,
குடிநீர் மற்றும்
பிஸ்கெட் பொட்டலங்களைக் கீழிறக்கினர்.
இதன் பின்
ஹெலிகாப்டர் பறந்துவிட்டது,
எந்த மீட்புப்
படகும் வரவில்லை.
படகுடன்
தொடர்பு கொண்ட ஹெலிகொப்டரை அனுப்பியது எது என்பது பற்றி எந்த நாடும் ஒப்புக் கொள்ள
முன்வரவில்லை.
செய்தித்தாள் ஒரு
இத்தாலியக் கடலோரப் பாதுகாப்புப் பிரிவின் செய்தித்தொடர்பாளர்,
“நாங்கள்
மால்டாவிற்கு அவர்களுடைய தேடுதல் மீட்புப் பகுதியை படகு நெருங்குகிறது என்று
கூறினோம்.
நாங்கள் பின்னர்
கப்பல்களுக்கு படகு பற்றிய எச்சரிக்கையைக் கொடுத்தோம்,
அவை மீட்க வேண்டும்
என வலியுறுத்தினோம்”
என்று கூறியதாகத்
தெரிவித்துள்ளது.
ஆனால் மால்டீஸ்
அதிகாரிகள் படகைப் பற்றி ஏதும் தெரியாது என்று மறுத்துவிட்டனர்.
மார்ச்
27 ஐ ஒட்டி,
படகில் எரிபொருள்
இல்லை,
அது வெள்ளத்துடன் மிதந்து
கொண்டிருந்தது.
செய்மதி
தொலைபேசியில் இருந்த மின்கலங்களும் தீர்ந்துவிட்டன.
எதியோப்பியாவில் இனக் கலவர மோதல்களிலிருந்து தப்பியோடி வந்த
24 வயது அபு
குர்க்கே
கார்டியனிடம்
கூறினார்: “எங்களிடம்
எரிபொருள் தீர்ந்துவிட்டது,
உணவு,
குடிநீர்
தீர்ந்துவிட்டது,
அனைத்தும்
இழக்கப்பட்டுவிட்டன.
கடலில் இனம்
தெரியாமல் மிதந்து கொண்டிருந்தோம்,
வானிலையும் ஆபத்தாக
இருந்தது.”
மார்ச்
29 அல்லது
30 அன்று படகு ஒரு
விமானத்தளம் கொண்ட கப்பலுக்கு அருகே சென்றது
— “இதை
அக்கப்பலில் இருப்பவர்கள் காணாமல் இருந்திருக்க முடியாது என்ற அளவு நெருக்கமாக
சென்றது”
என்று
கார்டியன்
எழுதுகிறது.
பின் அது தொடர்கிறது:
“தப்பிப்
பிழைத்தவர்கள் கூறியபடி,
கப்பலில் இருந்து
இரு ஜெட்டுக்கள் புறப்பட்டு படகிற்கு மேலே குறைந்த உயரத்தில் பறந்தன.
அதே நேரத்தில்
வெளியேறுவோர் மேற் தளத்தில் கையில் இரு பட்டினியில் வாடிய குழந்தைகளை உயரே தூக்கிய
வண்ணம் நின்றிருந்தனர்.
ஆனால் அதற்குப் பின்
எந்த உதவியும் வரவில்லை.
அதையும் விட விமானத்
தளம் கொண்ட கப்பல் அருகே செல்ல முடியாத நிலையில்,
குடியேறுவோர் படகு
வேறுபுறத்தில் சென்றது,
பொருட்கள்,
எரிபொருட்கள் அல்லது
வெளியுலகத் தொடர்பு ஆகியவை இல்லாத நிலையில்,
ஒவ்வொருவராகத்
தாகத்தினாலும்,
பட்டினியினாலும்
உயிரை விட்டனர்.”
அதனுடைய
ஆய்விலிருந்து விமானத்தளக் கப்பல் ஒரு பிரெஞ்சுக் கப்பலான
Charles de Gaulle
என்றும் இது மத்தியதரைக் கடலில்
குறிப்பிட்ட
நாட்களில் பயணித்தது என்ற முடிவிற்கு செய்தித்தாள் வந்துள்ளது.
பிரெஞ்சு கடற்படை
அதிகாரிகள் ஆரம்பத்தில் இப்பகுதியில் கப்பல் இருந்ததை மறுத்தனர்,
ஆனால் பின்னர்
வந்துள்ள செய்தித்தாள் தகவல்கள் அதற்கு மாறான உண்மையைத்தான் காட்டியுள்ளது என்று
அது கூறியுள்ளது.
நேட்டோ
அதிகாரிகளும் அகதிகள் கப்பல் பற்றி ஏதும் தெரியாது எனக் கூறியுள்ளனர்.
செய்தித் தொடர்பாளர்
Carmen Romero
கூட்டணிக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒரே விமானத் தளமுடைய கப்பல் அப்பொழுது
இத்தாலியக் கப்பலான கரிபால்டிதான் என்றார்.
“இக்காலக்கட்டம்
முழுவதும் கரிபால்டி கடலுக்குள்
100 மைல் தொலைவில்
சென்று கொண்டிருந்தது.
எனவே ஒரு நேட்டோ
விமானத் தளம் உடைய கப்பல் படகைக் கண்டுபிடித்துப் பின் புறக்கணித்தது என்று
கூறப்படுவது தவறாகும்”
என்று அவர் கூறினார்.
“நேட்டோக்
கப்பல்களுக்கு தங்கள் பொறுப்புக்கள்,
சர்வதேச கப்பல்கள்
சட்டம்,
உயிர்களைக் கடலில்
காப்பாற்றுதல் பற்றி நன்கு தெரியும்,
ஏற்கனவே அவை கடலில்
நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன.”
என்று அவர் மேலும்
சேர்த்துக் கொண்டார்.
போரில்
பங்கு பெற்றிருந்த பிரெஞ்சு போர்க் கப்பல்கள் உத்தியோகபூர்வமாக நேட்டோ
கட்டுப்பாட்டிற்குப் புறத்தே பங்கு பெற்றதால்,
இது ஒரு தவிர்க்கும்
விடையாகும்.
பிரெஞ்சுப்
படைகளின் தலைமைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர்
Thierry Burkhard
பிரெஞ்சு கடற்படைக் கப்பல் உதவி செய்ய மறுத்தது என்ற தகவலை மறுத்துள்ளார்.
“சார்ல்ஸ் டு கோல்
இத்தகைய படகுடன் எக்கணத்திலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை.
அதே போல் வேறு எந்த
பிரெஞ்சுக் கப்பலும் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை;
அவை இருந்த நிலை
இதற்குக் காரணம் ஆகும்”
என்றார் அவர்.
சர்வதேச
கப்பல் சட்டத்தின்படி இராணுவக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களும் அருகில்
இருந்து வரும் துன்பத்திற்குட்பட்ட படகுகளின் உதவிக்கு வந்து இயன்ற உதவியை அளிக்க
வேண்டும்.
அகதிகள் உரிமைக்
குழுக்கள் இந்த இறப்புக்கள் பற்றி விசாரணை ஒன்றைக் கோரியுள்ளன.
UNCHR செய்தித்
தொடர்பாளர் Laura
Boldrini, “மத்தியதரைக்
கடல் பகுதி
மேற்கின் ஒரு
காட்டுப் பகுதியாக மாறிவிடக்கூடாது.
கடலில் மக்களை மீட்க
முடியாதவர்கள் தண்டனைக்கு உட்படாமல் போகக்கூடாது.”
ரோமிலுள்ள
எரித்திரிய பாதிரியாரான அருட்தந்தை ஜேராய் இன்னும் அப்பட்டமாக,
“பொறுப்பு இங்கு
கைவிடப்பட்டுவிட்டது.
இதையொட்டி
குழந்தைகள் உட்பட
60
இறப்புக்களுக்கும் மேலாக ஏற்பட்டுள்ளது.
இது ஒரு குற்றம்
ஆகும்.
இக்குற்றத்திற்கு தண்டனை
இல்லாமல் போகக்கூடாது,
ஏனெனில்
பாதிக்கப்பட்டவர்கள் ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர்,
சுற்றுலாக்காரர்களோ
அல்லது ஆடம்பரக் கப்பலில் பயணித்தவர்களோ அல்ல”
என்று கூறினார். |