சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Football Federation considers racial quotas

இனவழிரீதியான இட ஒதுக்கீட்டை பிரெஞ்சு கால்பந்துக் கூட்டமைப்பு பரிசீலிக்கிறது

By Antoine Lerougetel 
10 May 2011
Use this version to print | Send feedback

தேசிய கால்பந்து பயிற்சிக் கூடங்களில் இனவழிரீதியான இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்வது பற்றி FFF எனப்படும் பிரெஞ்சு கால்பந்துக் கூட்டமைப்பின் (French Football Federation) தலைமைக்குள் நிகழ்ந்த விவாதங்களில் வெளிப்பட்டுள்ளது, பிரெஞ்சு சமூகத்தில் பல வருடங்களாக உள்ள முஸ்லிம்-எதிர்ப்பு, குடியேறுவோர்-எதிர்ப்புக் கொள்கைகளின் பாதிப்பைத்தான் இது அம்பலப்படுத்தியுள்ளது.

விளையாட்டுத்துறை மந்திரி Chantal Joanno, அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட FFF இன் தேசிய தொழில்நுட்ப இயக்குனர் Francois Blanquart ஐ தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 FFF அதிகாரிகள் நடத்திய ஒரு விவாதத்தின் தொகுப்புரையில் 12 வயதில் இருந்து மிகவும் ஆர்வமும் திறமையுமுடைய இளைஞர்களை தேர்ந்தெடுப்பதில் கூட்டமைப்பு கொண்டிருக்கும் பயிற்சித் தடங்களில் வெளிநாட்டுப் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது, குறிப்பாக ஆபிரிக்காவிலிருந்து, 30 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தலைமை விரும்பியுள்ளதை காட்டியுள்ளது.

பிரான்சின் 20 வயதுடையோர் குழுவின் பயிற்சியாளரான Eric Mombaerts, Clairefontaine பயிற்சி மையத்தில் தளத்தைக் கொண்டுள்ள தேசிய கால்பந்துக் கூடம் நடத்திய சமீபத்திய தணிக்கை பற்றி தன் விடையிறுப்பைக் காட்டியுள்ளார். அந்த மதிப்பீடு பள்ளியிலிருந்து 4 பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பிரெஞ்சு தேசியக் குழுவில் விளையாடியதாகக் காட்டியுள்ளது. மறுபக்கத்தில் அதில் படித்த 26 பேர் மற்ற நாடுகளுக்கு விளையாடுவதற்கு சென்றுள்ளனர்.

தேசியக் குழுவின் மேலாளர் Laurent Blanc வியக்கிறார்: “இது என்னை அதிர்ச்சிக்கு உட்படுத்துகிறது…. மற்றவற்றையெல்லாம் விட.”

Mombaerts கேட்கிறார்: “பிரஜா உரிமையை மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு சிறுவர்கள் மீது வரம்பைக் கொடுக்கிறோம்? உண்டா? இல்லையா? அப்படியானால், நாம் அதை அமைதியாகச் செய்ய வேண்டும்.”

Blanc குமுறலுடன் கூறுகிறார்: “நான் அதற்கு முற்றிலும் ஆதரவு தருவேன்…. என் கருத்தில் நாம் இதை அகற்ற வேண்டும். இதில் இனவெறியோ அது தொடர்பானதோ இல்லை. இளைஞர்கள் தேசியக் குழுவின் சட்டையை 16, 18, 19, 20 … வயதுகளில் அணிந்து, பின் வட ஆபிரிக்கா அல்லது ஆபிரிக்க குழுக்களுக்கு விளையாடும்போது, அது என்னைப் பெரிதும் உளைச்சலுக்கு உட்படுத்துகிறது.”

Eric Mombaerts “அப்படியானால் அது 30 சதவிகிதமாக இருக்கலாமா? கற்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நாடு மாறக்கூடும்.”

Francois Blanquart: “அவ்வளவு இல்லை. பேசப்படாத ஒரு வரம்பை வைத்துக் கொள்ளுவோம், ஒருவித ஒதுக்கீட்டைத் தளமாகக் கொண்டு. உண்மையில் அதுதான் சிறந்தது, ஆனால் உத்தியோகபூர்வமாக அல்ல.”

 

விளையாடும் வாய்ப்புப் பெறக்கூடியவர்களிடம் FFF எப்படி தேசபக்தியை வளர்க்கலாம் என்பது பற்றிய விவாதம் தொடர்ந்தது. அதையொட்டி அவர்கள் தங்கள் பெற்றோர்களின் நாடுகளுக்கு விளையாட விரும்ப மாட்டார்கள் (என்பது மனதில் பதியும்). Olympique de Lions, Olympique de Marseille போன்ற குழுக்கள் இத்தகைய வரம்புகளை முறையாகச் செயற்படுத்துகின்றனர் என்றார்.

Blanc பின்னர் கருப்பு விளையாட்டு வீரர்களின் உடல் கூறுபாடுகள், ஆடும் பாணி பற்றி ஒரு இனவழிக் கொள்கையைக் கூற முற்பட்டார்கருப்பர்கள்உயரமானவர்கள், தசைப்பிடிப்பு உடையவர்கள், வலுவானவர்கள்—12 முதல் 14 வயது வரை பயிற்சிக்காக எடுக்கப்பட வேண்டும். “மற்ற அளவு கோல்களும், நம்முடைய பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றி, வரலாற்றிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளப்பட வேண்டும். ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் என்னிடம், “எங்களுக்கு இத்தகைய பிரச்சினை இல்லை. நாங்கள் கருப்பர்களைத் தேர்ந்தெடுப்பது இல்லை.” பின் அவர் மேலும் கூறினார்: “இந்த விளையாட்டு, இது அறிவுத்திறனை ஒட்டியது, எனவே மற்ற வகை விளையாட்டு வீரர்களும் உள்ளனர்.”

12, 13 வயதுச் சிறார்களுக்குப் பயிற்சி அளிக்கும் Francis Smerecki கோபத்துடன் குறுக்கிடுகிறார்: “இது பாகுபாடு ஆகும்.”

 

பிரான்சின் அண்டை நாடுகளுடனான கால்பந்திற்கு, தேசியத் தொழில்நுட்ப ஆலோசகரான Mohammed Belkacemi நவம்பர் 8 புதன்கிழமை கூட்ட உரைகளை தான் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். “நான் கேட்ட, கூறத்தகாத முறையில் இருந்த உட்பேச்சுக்களின் தன்மையை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக. இப்பதிவை நான் FFF இடம் நவம்பர் 9ம் தேதியே கொடுத்துள்ளேன்.”

Belkacemi இன் நண்பர் ஒருவர் அவர் முந்தைய கூட்ட நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளதாகவும், “அவர் ஒருவர்தான் அவ்வாறு செய்கிறார் என்று இல்லை, ஏனெனில் பல பிரச்சினைகளுக்குரிய விடயங்கள் கூட்டங்களில் பேசப்படுகின்றன.” என Le Parisien  க்கு தெரிவித்தார்.

முன்னாள் தேசியக் குழுவின் தலைவரும் 1998 உலகக் கோப்பையை வென்ற குழுவின் உறுப்பினருமான Lilian Thuram தன் இகழ்வை வெளிப்படுத்தினார்: “தோல் நிறம் பற்றிய எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதிலிருந்து எப்பொழுது மக்கள் வெளிவருவர்? நீங்கள் கருப்பர், விரைவாக ஓடமுடியும்நீங்கள் குறைவான அறிவுடையவர்கள் என்று கூறுவதை மக்கள் எப்பொழுது நிறுத்துவர்?” “சிலர் ஒதுக்கிட்டுமுறைத் திட்டத்தை கூறுகின்றனர் என்றால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்என்றும் அவர் கூறினார்.

 

Blanc இன் இனரீதியான நிலைப்பாடு பிரான்சின் முதலாளித்துவ இடதின்ஆதரவைப் பெற்றது என்பது கணிப்பிற்கு உட்பட்டதுதான். சோசலிஸ்ட் கட்சியின் சமூகப் பிரச்சினைகள் பற்றிய தேசிய செயலாளரான Malek Boutihu Blanc இன் கருத்துக்களை Le Monde  5ம் தேதிப் பதிப்பில் ஆதரித்து, Blanc இனால் குறைந்தபட்சம் பிரெஞ்சு தேசியப் பாடலான Marseillaise ஐ குழுவினால் இசைக்க வைக்க முடிந்தது என்று வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய விடையிறுப்புக்கள் ஜனநாயக விரோத உணர்வுகள் பரவுதல், சமீபத்திய காலத்தில் பிரெஞ்சு அரசியல் உயரடுக்கின் பெரும்பகுதியில் வெளிப்படையான இனவெறி வெளிப்படுத்துதல் ஆகியவற்றைத்தான் பிரதிபலிக்கின்றன. ஏனெனில் அரசாங்கமே இடைவிடாமல் தொழிலாள வர்க்கத்தின் மீதும் பாதிப்பிற்குட்படக்கூடிய சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்களை நடத்துகிறது. பிரான்சின் நீலம், வெள்ளை, சிவப்பு என்னும் தேசிய நிறங்களைப் பற்றி வெற்றுத்தனமாக கோஷங்களை பலமுறையும் கூறுகையில், இவர்கள் அதை உணர்வதுகருப்பு-வெள்ளை-அரபுஎன்ற வகையிலான இன இணைப்பைத்தான். அரசியல்வாதிகளும் செய்தி ஊடக நபர்களும் பெருகிய முறையில் முஸ்லிம்கள், குடியேறியுள்ளவர்களுக்கு எதிராக தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

2003ம் ஆண்டு பொதுப் பள்ளிகளில் இஸ்லாமியப் பெண்கள் தலை மறைப்பை அணிதலைத் தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டதானது தொழிலாள வர்க்கத்தை குடியேறுவோர் எதிர்ப்புக் காட்டும் இனவெறியின் மூலம் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தைத்தான் அதிகரித்துள்ளது.

மறைப்பு அங்கியைத் தடை செய்தலுக்கு முழு பிரெஞ்சு இடதின் ஆதரவும் LCR (NPA உடைய முன்னோடி) உட்பட, இருந்தது. 2005ம் ஆண்டில் புறநகர் இளைஞர்கள் கலகங்கள், மற்றும் 2008ல் இளைஞர்கள் CPE (முதல் வேலை ஒப்பந்தம்) க்கு எதிரான இளைஞர்களின் வெகுஜன இயக்கம் சார்க்கோசியின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம் பெற்றன. அவருக்கு சவாலாக இருந்த சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலீன் ரோயால் சட்டம் ஒழுங்கு மற்றும் இளைஞர்கள், குடியேறுபவர்களை அடக்குதல், கட்டுப்படுத்துதல், தேசிய வெறியைப் பரப்புதல் ஆகியவற்றிலும் போட்டியிட்டார்.

பிரெஞ்சு ஏகாதிபத்திய சோவனிசத்திற்கு எதிராக சேரி இளைஞர்கள் திரண்டது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் பயங்கரவாதத்திற்கு எதிராக செப்டம்பர் 1, 2001 ல் அல் குவேடா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியை தொடங்குகையில் தீவிரமாயிற்று. இதையொட்டித்தான் அமெரிக்காவின் நவ காலனித்துவ படையெடுப்பு ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்து, அதற்கு பிரான்சின் ஆதரவும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது அங்கு 4,000 பிரெஞ்சுத் துருப்புக்கள் உள்ளன.

 

2001ம் ஆண்டு பாரிஸில் Stade de France ல் பிரான்ஸுக்கும் அல்ஜீரியாவிற்கும் இடையே போட்டி நடந்தபோது, ஜோர்ஜ் டபுள்யூ புஷ்பயங்கரவாதத்தின் மீதான போரை” 9/11 தாக்குதல்களுக்கு ஒரு மாதத்திற்குள் தொடக்கியபோது, பிரெஞ்சுத் தேசிய கீதம் வருகை தந்த குழுவினரின் ஆதரவாளர்களால் விசிலடிக்கப்பட்டது. “இடதுமற்றும் வலது அரசியல்வாதிகள் இதைப் பற்றி பெரும் அதிர்ச்சி அடைந்து தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினர். ஆயினும்கூட, Marseillaise ஐ விசிலடித்து இசைப்பது என்பது மக்ரெப்பில் இருந்து வரும் குழுக்களின் வாடிக்கைத் தன்மை ஆயிற்று. இது முன்பு பிரெஞ்சுக் காலனித்துவ பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதையொட்டி வலதுசாரிக் கண்டனங்கள் பிரெஞ்சு செய்தி ஊடகங்களில் எழுந்தன.

மக்ரெபின் பிரெஞ்சு ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு பொதுமக்கள் விரோதத்தை செய்தி ஊடகம் தூண்டிவிட்டது நவ காலனித்துவ உணர்விற்கு பரந்த ஊக்கம் அளிப்பதின் ஒரு பகுதி ஆகும். இதில் பிரெஞ்சுக் காலனி பற்றிய குறைகூறல்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருப்பது தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வெளிவந்தது. இது இறுதியில் லிபியா மீது பிரெஞ்சு அரசாங்கம் தாக்குதல் நடத்தியபோது அச்சூழ்நிலையில் அரசியல் ஸ்தாபனத்தில் எந்தவித எதிர்ப்பும் தோன்றாமல் இருப்பதற்கு உதவியுள்ளது.

அவருடைய போர் மற்றும் சமூகநல வெட்டுக்களுக்கு எதிர்ப்பு என்ற சூழ்நிலையில், தற்போதைய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மக்கள் அதிருப்தியை இன்னும் வன்முறை நிறைந்த இஸ்லாமிய எதிர்ப்பு முறையீடுகள் மூலம் திசைதிருப்ப முற்பட்டுள்ளார். ஜூன் 2009ல் அவர் பர்க்கா எதிர்ப்புக் குழு ஒன்றை நிறுவினார். இதற்கு முழு அரசியல் ஸ்தாபனத்தின் ஆதரவும் இருந்தது. இதையொட்டி இடைவிடாத முஸ்லிம் எதிர்ப்புச் செய்தி ஊடகப் பரபரப்பின் இடையே இந்த ஆண்டு ஏப்ரல் 11ல் இருந்து பர்க்கா அணிதலைத் தடைசெய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜூலை 20, 2010ல் நிகழ்த்திய இழிவான Grenoble உரையில் சார்க்கோசி ரோமாக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட வேண்டும் என்று கூரல் கொடுத்து, சட்டதை பாதிக்கும் குடியேறியவர்கள் பிரெஞ்சு குடிமையுரிமையை இழக்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார்.

 

கடந்த ஆண்டு இந்த இனவெறிப் பிரச்சாரம் பகிரங்கமாக பிரெஞ்சுக் கால்பந்துப் போட்டிகளிலும் வந்தது. தேசியக் குழு ஜூலை 2010ல் தென்னாபிரிக்காவிடம் தோல்வியுற்ற சங்கடம் — FFF க்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஒரு வேலைநிறுத்தத்தை ஏற்படுத்தியது அலையென தொழிலாளர்-எதிர்ப்பு, குடியேறுவோர்-எதிர்ப்பு என்று செய்தி ஊடகங்கள் மற்றும் அரசியல் உயரடுக்குகளிலிருந்து வெளிப்பட்ட தன்மையை எதிர்கொண்டது. விமர்சகர்கள்தொழிலாள வர்க்கப் புறநகர் பார்வைஎன்று இதை இகழ்ந்து அது விளையாட்டுகளிலும் கொண்டுவரப்படுகிறது என்று புலம்பினர்.

வலதுசாரி மெய்யியலாளர் Alain Finkielraut அறிவித்தார்: “பிரெஞ்சுக் குழு, மாபியா நெறியை மட்டுமே அறிந்துள்ள இளைஞர் கும்பல் என்பதாக அச்சுறுத்தும் நிரூபணத்தைத்தான் காண்கிறோம்.”

ஆளும் UMP கட்சியின் இளைஞர் அமைப்பின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் Benjamin Lancar, போக்கிரிகள் மாதம் ஒன்றிற்கு 500,000 அல்லது 1 மில்லியன் யூரோக்கள் பெறுவதற்கு எதிராகப் பேசினார். “1998 குழுவில் விளையாடிய Emmanuel Petit “குழு இஸ்லாமிய மயமாதல்குறித்துப் பேசினார்.

2012 தேர்தல்களுக்கான வரைவுத் வேலைத்திட்டத்தில் PS ஒரு சோவனிச தொடர்பு கொண்ட கருத்தை உதைபந்தாட்டக் குழுவிற்கு எதிராகக் கூறியுள்ளது: “உலகக் கோப்பையின்போது மூன்று வண்ண உடையை அணிந்த இந்த கோடிஸ்வர விளையாட்டுக்காரர்கள் இழிவுடன் தோல்வியை சந்திக்கு முன் ஒரு கால்பந்து வேலைநிறுத்தத்தையும் செய்திருந்தனர். ஆயினும்கூட தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போனஸ் பணம் பற்றி உறுதியாக இருந்தனர்.”

இத்தர்க்கம்தான், இந்த வலதுசாரிச் சூழல்தான், FFF உயர்மட்டத்தில் நிலவும் இனவெறி உணர்வுகளைப் பற்றிய திடீரென்ற வெளிப்பாடுகளைப் பற்றி நன்கு விளக்குகின்றன.