WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Tunisian regime imposes curfew amid protests over coup threat
துனிசிய ஆட்சி, ஆட்சிமாற்ற அச்சுறுத்தல் எதிர்ப்புக்களுக்கு இடையே
ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கிறது
By Niall Green and Kumaran Ira
9 May 2011
துனிசிய
தலைநகரான துனிசில் வியாழன் முதல் ஞாயிறு வரை வட ஆபிரிக்க நாட்டை மேலை ஆதரவு
கொண்டிருந்த சர்வாதிகாரி ஜைன் எல் அபிடைன் பென் அலி ஜனவரி மாதம் வீழ்ச்சியுற்றதில்
இருந்து ஆண்டுவரும் இடைக்கால அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.
சனிக்கிழமையன்று இடைக்கால ஆட்சிக்கு எதிராக பெருகும் எதிர்ப்பை தகர்ப்பதற்காக
சுமத்தப்பட்டிருந்து ஊரடங்கு உத்தரவை எதிர்ப்பாளர்கள் மீறினர்.
ஊரடங்கு உத்தரவு
இரவு 9
மனியில் இருந்து காலை
5 வரை நடைமுறையில்
உள்ளது.
துனிசில்
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தின் இராஜிநாமவைக் கோரி,
குறிப்பாக
இகழ்வுணர்வை பிரதம மந்திரி பெஜி கைட் செப்சி,
உள்துறை மந்திரி
ஹபிப் சிட் ஆகியோருக்கு எதிராகவும் வெளிப்படுத்தினர்.
எதிர்ப்பாளர்கள்
“மக்கள் ஒரு புதிய
புரட்சிக்கு அழைப்பு விடுகின்றனர்”,
“அச்சுறுத்தலைப்
பற்றி அச்சம் ஏதும் இல்லை
–அதிகாரம்
மக்களுக்கே”
என்ற கோஷங்களையும்
எழுப்பினர்.
Sfax,
Kaifouan, Sousse
போன்ற பிற நகரங்களிலும்
எதிர்ப்பு பரவியிது.
ஸபக்ஸ்,
கைரொவன் மற்றும்
மெடலௌயி உட்பட பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது;
இது அமைதியின்மையை
அடுத்து கப்சா மத்திய மாநிலத்தில் உள்ள மூன்று சிறு நகரங்களிலும் நடைமுறையில்
உள்ளது.
துனிசிய
ஆட்சி இந்த எதிர்ப்பை மிருகத்தனமான அடக்குமுறையை கையாண்டு எதிர்கொண்டது.
துனிசில் பொலிசார்
முக்கிய சாலையான
Bourguiba Avenue
வில் கூடிய கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதலைச் செலுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிசுக்கு எதிராக ஏராளமான கற்களை வீசினர்.
பல முறையும்
பொலிசார் எதிர்ப்பாளர்கள்மீது தடியடிப் பிரயோகம் செய்தனர்;
சிறு குழுக்காளகத்
தன்மைப்படுத்தி கூட்டத்தினரை உதைத்து,
அடித்தனர்.
“மக்களுக்கு எதிராக
பொலிசார் நடந்து கொண்டவிதம் மிகத் தீவிரமாகும்”
என்று ஒரு
எதிர்ப்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“இது பென் அலியின்
நாட்கள் மீண்டும் திரும்ப வந்தது போல் உள்ளது”
என்று அவர்
சேர்த்துக் கொண்டார்.
CNN
செய்தி இணையம் இராணுவக் கவச
வாகனங்களும் ஞாயிறன்று முக்கிய உள்துறை அமைச்சரக கட்டிடத்திற்கு முன்
நிலைநிறுத்தப்பட்டது என்று தகவல் கொடுத்துள்ளது.
துனிசிய
இடைக்கால அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை மந்திரி பர்ஹட் ரஜ்ஹி புதன் கிழமை அன்று
பேஸ்புக்கில் இஸ்லாமியக் குழு என்னஹ்டா ஜூலை
24 தேர்தலில்
வெற்றிபெற்றால் “இராணுவ
முறையில் ஆட்சி மாற்றம்”
ஏற்படத்
தயாரிப்புக்கள் உள்ளன என்று எச்சரித்தபின் எதிர்ப்புக்கள் தொடங்கின.
அன்று ஆட்சி துனிசிய
அரசாங்கத்தின் வருங்கால வடிவமைப்புக்கள் பற்றி ஏற்பாடு செய்வதற்கு அரசியலமைப்பு
மன்றம் ஒன்றிற்குத் தேர்தல்கள் நடத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது.
பென் அலியின் கீழ்
தடைக்குட்பட்டிருந்த என்னஹ்டா தெற்கில் ஆதரவைப் பெறக்கூடும்;
அங்கு வறுமையும்,
வேலையின்மையும்
ஆழ்ந்த பெருந்திகைப்பை ஏற்படுத்தியுள்ளன.
பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட வீடியோ காட்சியின் மூலம் ரஜ்ஹி கூறினார்:
“என்னஹ்டா
அதிகாரத்தை எடுத்துக்கொண்டால் ஒரு இராணுவ முறை ஆட்சி மாற்றம் இருக்கும்.”
அவர் மேலும்
கூறினார்: “கடலோரப்
பகுதியில் உள்ள மக்கள்
[முன்னாள் பென்
அலியின் ஆதரவாளர்கள்,
நாட்டின் செல்வம்
கொழிக்கும் பகுதியில் இருப்பவர்கள்]
அதிகாரத்தை விட்டுக்
கொடுக்கும் நிலையில் இல்லை;
அவர்களுக்கு
எதிராகத் தேர்தல்கள் முடிவு இருந்தால்,
இராணுவ முறையில்
ஆட்சி மாற்றம் இருக்கும்.”
ஜெனரல்
ரஷின் அம்மர் தலைமை இராணுவ அதிகாரி என்ற அந்தஸ்த்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளது
அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும் என்று ரஜ்ஹி கூறினார்.
“அடுத்த
தேர்தல்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வென்றால் இப்படி நேரிடும்.”
துனிஸ்
ஆட்சி ரஜ்ஹியின் இந்த அறிக்கையை விரைவில் நிராகரித்தது;
அவரோ ஜனடவரி முதல்
மார்ச் 28
வரை உள்நாட்டு அமைச்சராகப்
பணி புரிந்துள்ளார்;
கூறப்படாத காரணங்களை
ஒட்டி பதவியை விட்டு விலகும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.
அடக்குமுறை
அரசாங்கத்திற்கு ஒரு புதிய முகம் உருவாக்க முனைந்த அவருடைய குறைந்த பட்ச முயற்சிகள்
பாதுகாப்புப் பிரிவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதால் இவ்வாறு நேர்ந்தது.
முன்பு
நீதிபதியாக இருந்த ரஜ்ஹி துனிசாவில் மக்களிடையே ஓரளவு செல்வாக்கை
45 மூத்த உள்துறை
அமைச்சரக அலுவலகர்களை பதவியில் இருந்து அகற்றியது,
பென் அலியின் பழைய
ஆளும் கட்சியை மூடியது,
இரகசியப் பொலிஸ்
பிரிவை மறுசீரமைத்தது ஆகியவற்றிற்காக பெற்றிருந்தார்.
அதிருப்தியாளர்மீது கண்டன வெளிப்பாடு துனிசிய இணைய தள தணிக்கை முறை அமைப்பு
மீண்டும் கொண்டுவரப்பட்டதில் ஏற்பட்டது.
இது பென் அலியின்
வீழ்ச்சிக்கு பின் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த அமைப்பிற்கு
ஒரு புதிய தணிக்கைச் சட்டம் இப்பொழுது அதிகாரத்தைக் கொடுக்கிறது;
துனிசிய செய்தி
வலைத் தளமான வெப்டோ கருத்துப்படி இரகசியாமாக இயற்றப்பட்டுள்ளது.
தணிக்கையாளர்களின்
முதல் செயல் ரஜ்ஹி அறிக்கையை வெளியிட்ட பேஸ்புக்கின் பக்கத்தை அகற்றியது ஆகும்.
துனிஸ்
தெருக்களில் அடக்குமுறை பற்றி வரும் தகவல்களையும் மௌனப்படுத்த ஆட்சி முயன்று
வருகிறது.
உள்ளூர் மற்றும்
சர்வதேச ஊடகத்தில் இருந்து கிட்டத்தட்ட
15 செய்தியாளர்கள்
காவலில் வைக்கப்பட்டு வியாழன் மற்றும் வெள்ளி அன்று நடந்த எதிர்ப்புக்களின் போது
துனிசிய பொலிசால் அடிக்கப்பட்டனர்.
உள்ளூர்
வானொலி நிலையமான கலீமாவில் நிருபராக உள்ள மார்வா ரெகிக்,
அல்
ஜசீராவிடம்
மத்திய துனிஸில் இருந்து நேரடி அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு டஜன்
பொலிஸ் அதிகாரிகளால் தான் தாக்கப்பட்டதாகக் கூறினார்.
“உடல் முழுவதும் தடி
கொண்டு என்னை அடித்தனர்;
தங்கள்
ஹெல்மெட்டுக்களாலும் அடித்தனர்;
என்னுடைய
தலைக்காயங்களுக்கு ஐந்து தையல்கள் போட்டுக்கொள்ள நேர்ந்தது”
என்று சனிக்கிழமை
அன்று அவர் கூறினார்.
இடைக்கால
ஆட்சி எதிர்ப்பிற்கு முகங்கொடுத்துள்ள விதம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப்
போராட்டங்களை அடக்குவதற்கு அது மிக மிருகத்தன வழிவகைகளை கையாளும் என்ற தெளிவான
எச்சரிக்கை ஆகும்.
பென்
அலியின் ஆட்சி விழுந்தபின்,
மக்களை
எதிர்கொண்டுள்ள சமூகப் பிரச்சினைகளின் தளங்களில் உள்ளவை எவையும் தீர்க்கப்படவில்லை;
ஆனால் நாடோ
வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்புக்கள் ஆகியவற்றை ஏராளமாகக்
காண்கிறது.
முதலாளித்துவ
அச்சங்களை வெளிப்படுத்தும் வகையில் சமூக உறவுகள் மந்திரி மஹ்மத் என்னசியர்
விளக்கினார்: “புரட்சிக்குப்
பின் சமூகத் தேவைகளில் தீவிர அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,
சமூக நிலைமை மோசம்
என்பதில் இருந்து மிகவும் மோசம் என்று ஆகிவிட்டது.”
La
Presse
இடம்
அவர் கூறினார்: “புரட்சியில்
இருந்து உள்நாட்டு மற்றும் துனிசிய முதலீட்டாளர்கள் கவலை கொண்டுள்ளனர்;
ஏனெனில் நிலைமை
இன்னும் அமைதியடையவில்லை.
புரட்சிக்குப்
பிந்தைய காலத்தில்
281 நிறுவனங்கள்
செயல்படுவதை நிறுத்திவிட்டன.
வேலைநிறுத்தங்கள்
2010 உடன்
ஒப்பிடும்போது
155 சதவிகிதம்
அதிகரித்துள்ளன.
அவற்றில் பங்கு
பெறுவோர் கடந்த ஆண்டில் இருந்த
53க்குப் பதிலாக
85 சதவிகிதம் என்று
உள்ளனர்.
திடீர் வேலைநிறுத்தங்கள்
85% அதிகமாகிவிட்டன;
ஆனால் கடந்த ஆண்டு
நடந்தவற்றின் எண்ணிக்கையில் இது
19%தான்.
இவை உள்ளிருப்பு
போராட்டங்கள் மற்றும் பணியிடங்களில் நடக்கும் அத்துமீறிய செயல்களை கணக்கில்
கொள்ளவில்லை.
ஆயிரக்கணக்கான
மக்கள் அமைச்சரகத்தை நாடி புரட்சிக்குப் பின் தங்கள் உரிமைகளை கோருகின்றனர்.”
ரஜ்ஹி
பின்னர் தன் கருத்துக்களை பின்வாங்கியபோதிலும்கூட—“அரசியல்
பக்குவம்”
இல்லாமல் வந்தவை,
இராணுவத்திடம்
தனக்கு முழு நம்பிக்கை உண்டு என்ற பொருந்தாத காரணத்தை கூறி—இவை
இடைக்கால ஆட்சியின்மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையைத்தான் அம்பலப்படுத்தியுள்ளன.
ஒரு மாணவர் கூறினார்:
“துனிசியாவில்
ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளன.
ரஜ்ஹி கூறியது
நடப்புக்களுக்கு எரியூட்டிவிட்டது.
புரட்சி இன்னும்
முடியவில்லை.”
ஒரு
எதிர்ப்பாளரான சோனியா பிரிகி ராய்ட்டர்ஸிடம் கூறினார்:
“நாங்கள் இங்கு இந்த
நேர்மையற்ற அரசாங்கம் அகல வேண்டும் என்று கூறிக் கூடியுள்ளோம்.
இப்பொழுது அனைத்தும்
தெளிவாகிவிட்டது.
மக்களுக்கு பணி
புரியும் உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள அரசாங்கத்தை நாங்கள் விரும்புவதால் இந்த
அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.”
எல்லாவற்றிற்கும் மேலாக இந்நிகழ்வுகள் துனிசியாவில் தொழிலாள வர்க்கத்தின்
போராட்டங்களை வழிநடத்த ஒரு கட்சி இல்லாத நிலையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
நடைமுறையில் உள்ள
கட்சிகள் திவால் தன்மை உடையவை,
தொழிலாளர்களிடம்
விரோதப் போக்கைக் காட்டுபவை.
ரஜ்ஹியின்
கருத்துக்கள் குறித்த மக்களுடைய இகழ்வுணர்வு அரசியலமைப்பு மன்றத்தை அமைக்க
மேற்பார்வையிட இடைக்கால ஆட்சியினால் நிறுவப்பட்டுள்ள சீர்திருத்தக் குழுவின்
மோசடித்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
இதில்
UTICA முதலாளிகள்
கூட்டமைப்பின் உறுப்பினர்கள்,
பல மனித உரிமைகள்
குழுக்கள், UGTT
(துனிசிய பொதுத்
தொழிலாளர் கூட்டமைப்பு)
மற்றும்
உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சிகள்,
PDP ஜனநாயக
முன்னேற்ற கட்சி மற்றும் முன்னாள் ஸ்ராலினிச எட்டஜ்டிட் இயக்க உறுப்பினர்கள்
ஆகியோர் உள்ளனர்.
இச்சக்திகள்
தொழிலாள வர்க்கப் போராட்டங்களை அடக்கி அதிகாரத்தில் எப்படியும் நீடிக்க வேண்டும்
என்ற திகைப்புத் தீவிரத்தில் உள்ள ஆட்சிக்கு போலித்தன ஜனநாயக மறைப்பு ஒன்றைத்தான்
கொடுக்கின்றன.
ஆரம்பத்தில் இருந்தே
இது தொழிலாள வர்க்கம் பழைய பென் அலி அரசாங்கக் கருவியின் அதிகாரத்திற்குச் சாவல்
விடும் வகையில் செயல்படுவதை தடுக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டிருந்தது.
இக்குழுவிற்கு சட்டப் பேராசிரியர் பென் அஷோர் தலைவராவார்;
இவர் பிரெஞ்சு
நாளேடு Le
Monde யினால்
பேட்டிக்
காணப்பட்டார்.
குழுவைப் பற்றி
வினவப்பட்டதற்கு அவர் விளக்கினார்:
“இந்த உயர் ஆணையம்
தொடக்கத்தில் ஒரு எளிய அரசியல் சீர்திருத்தக் குழு,
நாட்டை அடக்கிய பழைய
ஆட்சிக்கு உதவிய ஜனநாயக விரோதச் சட்டங்களைத் திருத்துவ என்ற பங்கைக் கொண்டிருந்தது….
ஆனால் புரட்சியை
பாதுகாக்கும் ஒரு குழு,
மக்கள் சமூக
அமைப்புக்கள் கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நிறைந்து தோற்றுவிக்கப்பட்டு
அரசாங்கத்திற்கு ஒருவித ஆலோசனை கூறும் குழுவாகிவிட்டது.”
மார்ச் மாத
நடுவில் மிகத் தீவிரமாக இருந்த இக்குழு
UGTT, PDP, Ettajdid
இன்னும் பலவற்றின்
பிரதிநிதிகளைக் கொண்டது ஆகும்.
இதன் பெயரும் ஒரு
மோசடிதான்.
அரசாங்கத்திற்கு
எதிராக ஒரு புரட்சி மூலம் மக்களை வழிநடத்தும் இலக்கிற்கு பதிலாக உறுப்பினர்கள்
அரசாங்கக் கருவியில் பதவிகளைப் பெறும் ஆர்வத்தைக் காட்டினர்;
பென் அஷோரின்
குழுவில் சேர்ந்ததின் மூலம் இது அடையப்பட்டது.
இக்குழு இரு
குழுக்களின்
“இணைப்பு”
என்று குறிப்பிட்ட
Achour இவை
தனித்தனியே இருந்தால்,
“ஒரு நெருக்கடிக்கு
வழிசெய்திருக்கும்,
இரு அதிகார மையங்கள்
இணையாகச் செயல்படும் நிலையில்,
ஒன்று நடைமுறை
அமைப்பு மற்றொன்று புரட்சிகரக்குழு என்ற வகையில் பிளவுகள் ஏற்பட்டிருக்கும்.”
ஆனால் பென்
அலி ஆட்சியின் அதிகாரத்திற்கு போட்டியிடும் அமைப்புக்களை நிறுவதல் என்பது
உத்தியோகபூர்வ
“எதிர்க்கட்சிகளின்”
மனதில் கடைசி
நினைப்புத்தான்.
மாறாக அவை
உத்தியோகபூர்வ “சீர்திருத்த”
குழுவில்
சேர்ந்துகொண்டனர்;
இது வலதுசாரி
அரசாங்க எந்திரத்திற்கு அரசியல் மறைப்புக் கொடுப்பதுடன்,
தொழிலாள
வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டங்களுக்கு எதிரான திட்டங்களையும் கொண்டுள்ளது.
கட்டுரையாளர்கள்
கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கின்றனர்
|