WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
Threat of war crimes charges levelled against Gaddafi and son
கடாபியும் அவருடைய மகனுக்கும் எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்
என்ற அச்சுறுத்தல்
By
Chris Marsden
9 May 2011hreat
லிபியாவில்
இப்பொழுது பெரும் சக்திகள் நடத்தும் போரில் கேணல் முயம்மர் கடாபி,
அவருடைய மகன்
இன்னும் பிற அதிகாரிகளுக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்படும்
என்னும் அச்சுறுத்தல் இப்பொழுது பெரும் சக்திகள் கையாளும் கருவியாக உள்ளது.
ஐ.நா.பாதுகாப்புச்
சபையிடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வக்கீல்
Luis Moreno-Ocampo
மே 5ம்
திகதி லிபியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக மூன்று கைதுப் பிடி
ஆணைகளை பெற முற்படுவதாக தெரிவித்தார்.
இந்தப் பிடி ஆணைகள்
கடாபியையும் அவருடைய மகன் சைப் அல்-இஸ்லாமையும்
உள்ளடக்கியிருக்கும் என்று பரவலாக் கருதப்படுகிறது.
இன்னும்
குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில் கொலை,
சட்டவிரோதக் காவலில்
வைத்தல்,
கொத்துக் குண்டுகளைப்
பயன்படுத்தியது மற்றும் போர்க் கருவியாக பாலியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியது
ஆகியவையும் அடங்கியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச
குற்றவியில் நீதிமன்றத்தின்
(ICC) நடவடிக்கை
பிரிட்டன் மற்றும் பிரான்சின் தூண்டுதலின் பேரில் வந்துள்ளன.
இவை அமெரிக்காவின்
ஆதரவுடன் கடந்த பெப்ருவரிக் கடைசியிலேயே ஐ.நா.
பாதுகாப்புச் சபை
இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தன.
அதன்பின் லண்டன்,
பாரிஸ் மற்றும்
வாஷிங்டன் ஆகியவை கடாபி-விரோத
எதிர்ப்புக் கூட்டுடன் ஒரு வழக்கும் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச
மனித உரிமை அமைப்பினாலும்
ICC விசாரணைக்கான
தன் ஆதரவை வார இறுதியில் அறிவித்து,
அரசாங்கப் படைகள்
சட்டவிரோதமாக குடிமக்களை
“இடைவிடாமல்,
பொறுப்பற்ற
தாக்குதல்கள் மூலம் கொன்றுள்ளன”
என்று
தெரிவித்துள்ளது.
மொரேனோ-ஒகாம்போ
தன்னுடைய விசாரணையாளர்கள் குறைந்தபட்சம்
500 முதல்
700 குடிமக்கள் வரை
அரசாங்கப் படைகளால் கொல்லப்பட்டனர் என்பதற்கான
“நம்பகம் மிக்க”
மதிப்பீடுகளை
நிறுவியுள்ளதாகக் கூறியுள்ளார்.
எதிர்ப்பாளர்கள்
மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குற்றவிசாரணை நடத்துவது
“முறையாக பல
நகரங்களில் நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது”
என்று கூறிய அவர்
“போர்க் குற்றங்கள்
ஒரு கொள்கைச் செயற்பாடு போல் நடத்தப்பட்டுள்ளன என்பது தெளிவு”
என்றும்
தெரிவித்தார்.
ஆயுதமற்ற
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு
நடத்தியதாகவும்,
பாலியல் பலாத்காரம்,
“வாடிக்கையான
கைதுகள்,
சித்திரவதைகள்,
கொலைகள்,
நாடு கடத்தல்கள்,
கட்டாயமாக காணாமற்
செய்துவிடுதல்,
மசூதிகள்
அழிக்கப்படல்”
ஆகியவையும்
அரசாங்கக் கொள்கையின் கருவிகளாக இருந்தன என்று கூறப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள விசாணையின் பாசாங்குத்தனம் அப்பட்டமாகத்தான் உள்ளது.
திரிப்போலியிலும்
மற்றய குடிமக்கள் வசிக்கும் இடங்களிலும் நேட்டோ சக்திகள்
5,500 முறை
விமானங்களில் பறந்தது,
அவற்றுள்
2,204 தாக்குதல்
நடவடிக்கைகள் ஆகியவை நடந்தேறியதற்கு இடையே இது வந்துள்ளது.
இவ்நடவடிக்கைகளில்
கடந்த வாரம் வேண்டுமென்றே படுகொலை செய்வதற்காக கடாபியின் இல்லத்தை இலக்கு வைத்துத்
தாக்குதல் நடத்தியதும் அடங்கும்.
அத்தாக்குதல் லிபிய
ஆட்சியாளரை அகற்றுவதில் தோல்வி அடைந்தாலும் அவருடைய மகன்கள் ஒருவரையும் பேரர்கள்
மூவரையும் கொன்றது.
தாங்கள் அகற்ற
விரும்பும் ஆட்சிக்கு எதிராக சட்டப்பூர்வ போர்க் குற்றங்களுக்கான விசாரணைகளுக்கு
ஆதரவு கொடுக்கும் வாஷிங்டன்,
லண்டன் மற்றும்
பாரிஸ் ஆகியவையே மாபெரும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளன.
ICC
யின் அறிவிப்பு ரோமில்
லிபியத் தொடர்புக் குழு கூட்டம் நடத்திய அதே நேரத்தில் வந்துள்ளது.
அக்கூட்டத்தில்
அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் வாஷிங்டன் தான் பறிமுதல்
செய்துள்ள லிபியச் சொத்துக்களில்
30 பில்லியன்
டொலரிலிருந்து “ஒரு
பகுதியை”
எதிர்ப்பாளருக்கு கொடுக்க
உள்ளது என்று அறிவித்தது.
இப்போர் இன்னமும் ஐ.நா.
பாதுகாப்பு சபைத்
தீர்மானம் 1973ன்
அடிப்படையில் நடைபெறுகிறது.
“குடிமக்களைப்
பாதுகாப்பதற்கு”
நேட்டோ முயல்கிறது
என்ற போலிக்காரணம் இதற்குத் தளமாக உள்ளது.
இப்போலிக்காரணம் இப்பொழுது பணம் அனுப்புவதற்கு மறைப்புக் கொடுப்பதற்குப்
பயன்படுத்தப்படுவது மட்டும் இல்லாமல்,
நடக்கும்
உள்நாட்டுப்போரில் ஒரு புறத்திற்கு ஆயுதங்களை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சனிக்கிழமையன்று
இத்தாலிய அரசாங்கம் பெங்காசியைத் தளமாகக் கொண்ட எதிர்ப்பு இடைக்காலத் தேசிய சபைக்கு
(TNC) ஆயுதங்கள்
கொடுக்க ஒப்புக் கொண்டதை மறுத்து ஒரு அறிக்கை விடுத்தது.
இது பெங்காசிச்
செய்தித் தொடர்பாளர் அப்டெல்-ஹபிட்
கோகா ரோம் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை அளிக்கத் தயாராக உள்ளது என்ற அறிவிப்பைத்
தொடர்ந்து வந்தது.
ஆனால் வெளியுறவு
மந்திரியின் செய்தித் தொடர்பாளரின் நிராகரிப்பு உண்மையான மறுப்பு அல்ல.
ஏனெனில் அவர்
இத்தாலி எழுச்சியாளர்களுக்கு
“பாதுகாப்பிற்குத்
தேவையான கருவிகளை மட்டுமே”
வழங்க இருப்பதாகக்
கூறியிருந்தார்.
ICC
க்கு ஆதரவு கொடுக்கும்
சக்திகளின் இரட்டைச் செயற்பாடுகள் அமெரிக்க,
ரஷ்யா மற்றும் சீனா
உட்பட ஐ.நா.
பாதுகாப்புச்
சபையில் பல உறுப்பினர்கள் லிபியா பற்றிய நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு
அனுப்புவதற்கு ஆதரவளித்து வாக்களித்த நிலையில் வந்துள்ளது.
ஆனால் இவையே
அந்நீதிமன்றத்தை அங்கீகரிக்கவில்லை.
அமெரிக்க
ஆயுதப் படைகள்,
அரசியல்வாதிகள்
ஆகியோருக்கு பாதுகாப்புக் கோரி ஒபாமா நிர்வாகம் கேட்டிருந்த விதிவிலக்கை பெற்ற
பின்னர்தான் வாஷிங்டன்
ICC விசாரணைக்கு
இசைவு கொடுத்தது.
இந்த விதிவிலக்கு
ICC யில் சேராத எந்த
நாட்டின் குடிமகனும் தன்னுடைய தாய்நாட்டில்
ICC
விசாரணைக்கு
உட்படுத்தப்படக்கூடாது என்று கூறுகிறது.
பாதுகாப்புச்
சபையின் இசைவு பெற்றுள்ள லிபிய நடவடிக்கைகளிலிருந்து விளையும் குற்றங்களுக்கு
இத்தகைய விலக்கு என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரான்சின்
ஐ.நா.
தூதர் கெராட் அரோட்
செய்தியாளர்களிடம் ஒருமனதாக ஏற்கப்பட்ட இந்த விதிவிலக்கை அமெரிக்கா
“ஒரு சிவப்புக் கோடு”,
“செயல் முறிக்கும்
தன்மை உடையது”
எனக் கண்டதாகக்
கூறினார்.
இந்த இரட்டை
நிலைப்பாடு அப்பட்டமானது,
லிபியாவும்
ICC யில் ஒரு தரப்பு
அல்ல.
ஆனால் அதன் அதிகார வரம்பே
விசாரணையை நடத்த அது ஒப்புக்கொண்ட பின்னர் நிராகரிக்கப்பட்டது.
லிபியாவின் துணை
வெளியுறவு மந்திரி கலீட் கைம்
“ஐ.நா.
பாதுகாப்புச்
சபையிடமிருந்து மற்றொரு உண்மை கண்டறியும் குழுவிற்கு”
முழு ஒத்துழைப்பை
அளிப்பதாகக் கூறியிருந்தார்.
ICC
மீண்டும் தன் பங்கை முக்கிய
ஏகாதிபத்திய சக்திகளுக்கு வளைந்து கொடுக்கும் கருவி என்பதைச் செய்துள்ளது.
ICC நிறுவப்படுமுன்
அமெரிக்கா அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரச்சாரத்தை செய்தது.
ஒரு பகிரங்கக்
கடிதத்தில் முன்னாள் வெளிவிவகாரச் செயலர்கள் ஆன ஹென்ரி கிசிங்கர் மற்றும் ஜோர்ஜ்
ஷ்லட்ஸ்,
முன்னாள்
CIA இயக்குனர்
ரிச்சர்ட் ஹெல்ம்ஸ்,
முன்னாள் தேசிய
பாதுகாப்பு ஆலோசகர்
Zbigniew Brzezinski
ஆகியோர்
“நம் நாட்டின்
இராணுவத்தினரை நம் அரசியலமைப்பிற்கு பொருந்தாத வழிவகைகளின் கீழ் செயல்படும் சர்வதேச
விசாரணையாளர் ஒருவரின் பொறுப்புக்கூறாத நிலை அதிகார வரம்பிற்கு அப்பால் பாதுகாப்பாக
வைக்க வேண்டும்”
என்று அழைப்பு
விடுத்திருந்தனர்.
போர்க்
குற்றங்கள் பிரச்சினைகளில் அமெரிக்க தூதரான தூதர் பீரே ரிச்சர்ட் பிராஸ்பர் ஐ.நா.விடம்
ICC பற்றிக்
கூறுகையில், “அத்துடன்
எத்தொடர்பையும் நாங்கள் கொள்ளத்தயாராக இல்லை”
என்றார்.
காங்கிரஸ் ஒரு
தீர்மானம் இயற்றி அமெரிக்க அரசாங்கமும் இராணுவமும் அமெரிக்கக் குடிமக்கள் அதன்
பொறுப்பில் இருந்து விடுவிக்க
“அனைத்து
வழிவகைகளும் கையாளப்பட வேண்டும்”
என்று கூறியது.
அப்பொழுது
முதல்
ICC வாஷிங்டனுக்கு
தன் மதிப்பையும் விசுவாசத்தையும் நல்ல முறையிலேயே நிரூபித்துள்ளது.
ஈராக் போருக்குச்
சற்று முன்னதாக நிறுவப்பட்ட இந்த அமைப்பு,
இன்றுவரை ஆறு
சந்தர்ப்ப நிலைமைகளில்,
அனைத்தும்
ஆபிரிக்காவில்,
விசாரணைகளைத்
தொடக்கியுள்ளது.
ICC
விசாரணை கோருபவர்களின்
முதல் நோக்கம் குற்றவிசாரணை நடவடிக்கை என்னும் அச்சுறுத்தலை காடபிக்கு எதிராகப்
பயன்படுத்தி,
பேச்சுவார்த்தைகள்
மூலம் உடன்பாடு காணக்கூடிய வாய்ப்பை மூடிவிடுவது ஆகும்.
ICC
நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஆபிரிக்க ஒன்றியம் ஆட்சிக்கும் எதிர்ப்பு
TNC க்கும் இடையே
போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வந்ததை நேட்டோ
நிராகரித்தது.
அதேபோல் கடாபியே
முன்வைத்த பல திட்டங்களையும் நிராகரித்தது.
இரண்டாவது
நோக்கம் ஆளும் கருவிக்குள்ளேயே பிளவுகளுக்கு ஊக்கம் அளித்தல் ஆகும்.
அதன் பின்னர் ஆட்சி
மாற்றத்திற்கு வழிவகுத்து,
எதிர்ப்பு மாற்றுத்
தேசியக் குழு,
ஒரு மேற்கத்தைய
சார்பு பதிலீடாகப் பதவியில் இருத்தப்படுவதற்கு உதவும்.
மார்ச்
28ம் தேதி,
போர்க் குற்றங்கள்
பற்றிய விசாரணையை எழுப்பிய பின்,
இங்கிலாந்தின் பிரதம
மந்திரி டேவிட் காமெரோனும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியிடம் ஒரு
கூட்டுக் கடிதத்தை வெளியிட்டனர்.
அதில்
“நாம்
[கடாபியின்]
அனைத்து
ஆதரவாளர்களையும் காலம் கடக்குமுன் நீங்கிவிடுமாறு அழைப்பு விடுகிறோம்”
என்று
கூறப்பட்டிருந்தது.
ICC
விசாரணை எதிர்ப்பாளர்கள்
மீது தாக்குதல் நடத்த
“முன்கூட்டிய
திட்டம்”
இருந்தது என்று கூறப்பட்ட
குற்றச்சாட்டுகளைத் தளமாகக் கொண்டுதான் துவங்கியது.
ஆனால் அவருடைய
அரசியல் விரோதிகளின் விவாதத்திற்குரிய கூற்றுக்களின் அடிப்படையில் நடந்ததாகக்
கூறப்படும் குற்றங்களின் பட்டியல் பெருகிவிட்டது.
பலவற்றிற்கும் தக்க
சான்றுகள் இல்லை.
பாலியல் பலாத்காரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துதல் என்னும் குற்றச்சாட்டுகள் எமன்
அல்-ஒபிடி என்னும் பெண் மார்ச் 28 அன்று திரிப்போலியில் ரிக்சோஸ் ஹோட்டலில்
புகுந்து சர்வதேச செய்தியாளர்களிடம் தான் இரு நாட்கள் காவவில் வைத்து
உதைக்கப்பட்டதுடன் 15 பேரால் கற்பழிக்கப்பட்டதாகவும் கூறியபின் முக்கியத்துவம்
பெற்றது. இவர் இப்பொழுது லிபியாவை விட்டு இராணுவத்திலிருந்து விலகிய ஒரு
அதிகாரியுடைய உதவியுடன் அகன்றுவிட்டார்.
பாலியல் பலாத்காரத்திற்கு மற்றொரு ஆதாரம், அது “உத்தியோகபூர்வக் கொள்கை” என்பதற்கு,
கடாபியின் சக்திகளுடைய டாங்குகள் மற்றும் கார்களில் இருந்து எதிர்ப்பாளர்களால்
கைப்பற்றப்பட்டு எடுக்கப்பட்ட வியாக்ரா மாத்திரைகள் என்ற கூற்று ஆகும். ஐ.நா.வின்
அமெரிக்கத் தூதரான சூசன் ரைஸ் இக்கூற்றை முன்வைத்தார். இது ஏப்ரல் 28ம்தேதி
அல்-ஜசீராவில் ஒரு தகவலாக வெளிவந்தது. அச்செய்தி ஊடகம் கட்டாரிடமிருந்து நிதி உதவி
பெறுகிறது. அதுவோ லிபியாவிற்கு எதிரான போரில் பங்கு பெறும் முக்கிய அரபு நாடு
ஆகும். சக தூதர்களிடம் கடாபியின் படைகள் “ சிப்பாய்களுக்கு வியாக்ராவைக் கொடுத்து
அவர்கள் கற்பழிக்க ஏதுவாயிற்று” என்று கூறினார்.
மற்றய
தூதர்கள் இராணுவத் தலையீட்டிற்கு முக்கியமாக வாதிட்டவற்றில் ஒரு நாட்டின் இக்கூற்று
பற்றி அதிக நம்பகத்தன்மை காட்டவில்லை.
ஆனால்
ICC அவ்வாறு இல்லை.
அரசாங்கச்
சக்திகள் மிஸ்ரடா தாக்குதலின் போது செய்ததாக் கூறப்படும் அத்துமீறல்களும் இதேபோல்
ஐயத்திற்கு உரியவைதான்.
மனித உரிமைகள்
கண்காணிப்புக் குழுவும்
நியூ யோர்க் டைம்ஸும்
கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன என்ற எதிர்ப்புக் கூற்றுக்களைச் சரிபார்க்க
ஆதாரங்களாக மேற்கோளிடப்பட்டுள்ளன.
ஒரு
கொத்துக் குண்டு
நியூ யோர்க் டைம்ஸ்
நிருபரால் “கண்டுபிடிக்கப்பட்டது”.
அது பின்
HRW ஆய்வாளர்களால்
புகைப்படம் எடுக்கப்பட்டு ஆராயப்பட்டது.
அது
MAT 120 mm mortar projectile
என்று அடையாளம் காணப்பட்டது.
இது நடுவானில்
திறந்து 21 “குண்டுகளை”
பரந்த பகுதி மீது
செலுத்தும். HRW
அதன்
புகைப்படக்காரர்களில் ஒருவர் மூன்று மோட்டர்கள் ஏவிய கணைகள் எல்-ஷவக்டா
குடியிருப்புப் பகுதிகள் மீது வெடித்ததைப் பார்த்ததாகவும் கூறியுள்ளது.
பாதுகாப்பாக
கொத்துக் குண்டு ஸ்பெயினில்
2007ல்
தயாரிக்கப்பட்டது என்றும் அது
“மிஸ்ரடா
மருத்துவமனையிலிருந்து
300 மீட்டர்
தொலைவில் விழுந்தது போல் தோன்றியது”
என்றும்
HRW கூறியுள்ளது.
இது ஏன்
“தோன்றியது”
எனக்கூறப்படுவதற்குச் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை.
ICC
அதிகார வரம்பில் நேர்வதற்கோ,
ஏற்பதற்கோ அமெரிக்க
மறுத்துள்ள நிலையில்,
அது மே
2008ல்
11 நாடுகள் ஏற்ற,
ஐ.நா.
முன்வைத்த
தொகுப்புக் குண்டுகுள் மீதான தடை பற்றிய சர்வதேச உடன்படிக்கையிலும் கையெழுத்திட
மறுத்துள்ளது.
கொத்துக்
குண்டு பற்றிய கூற்று
TNC யின்
சந்தேகத்திற்கு உரிய அறிக்கைகளுக்கு இடையே வந்துள்ளது.
குண்டுகள் வார
இறுதியில் சிறிய பூச்சிக்கொல்லி தூவும் விமானங்களைப் பயன்படுத்தி நான்கு பெரிய
எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளின் மீது போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நேட்டோ வான்பகுதி
முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
TNC நடத்த இருக்கும்
தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டும் இக்கூற்று வந்துள்ளது.
வேறு அறிக்கைகளில்
எண்ணெய்த் தொட்டிகள் அழிப்பு ஒரு ஏவுகணையின் மூலம் செலுத்தப்பட்ட கிராட்
ராக்கெட்டுக்களால் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
TNC
யும் மற்றொரு ஆயுதமற்ற
உதவிப் பணியாளரும் ஒரு ஹெலிகாப்டர் அல்லது சில ஹெலிகாப்டர்கள் செஞ்சிலுவை அல்லது
செம் பிறை அடையாளத்தை கொண்டவை வியாழன் மற்றும் வெள்ளியன்று மிஸ்ரடா துறைமுகத்தில்
கண்ணி வெடிகளை வீசப் பயன்படுத்தப்பட்டன என்று குற்றம் சாட்டியுள்ளன.
சீன வண்டிகளைத்
தகர்க்கும் கண்ணி வெடிகளும் மேலிருந்து போடப்பட்டதாக
HRW மற்றும்
Times கூறியுள்ளது.
துறைமுகக்
கண்காணிப்பாளர் மேற்கோளிட்ட ஒரே பாதிப்பு ஒரு குண்டு டிரக் ஒன்றின் கீழ்
வெடித்தபோது இருவர் காயமுற்றனர் என்பதாகும்.
நேட்டோ
இக்கூற்றுக்களுக்கு குறிப்பான ஆதரவைத் தரவில்லை.
லிபிய
அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் மௌசா இப்ராகிம் மிஸ்ரடாவில் கொத்துக் குண்டுகள்
வீசப்பட்டன என்ற கூற்றை நிராகரித்தார்.
செய்தியாளர்களிடம்
அவர், “அதை
அவர்கள் நிரூபிக்கட்டும் என்று நான் சவால் விடுகிறேன்”
என்றார்.
இது லிபியாவின்
நலன்களுக்கு உகந்தது அல்ல என்றும் அவர் வாதிட்டார்.
“இக்குண்டுகளைப்
பயன்படுத்தினால் பல நாட்களுக்கு அதற்கான அடையாளச் சான்றுகள்,
நாட்கணக்கில்,
வாரக்கணக்கில்
இருக்கும்.
எங்கள் நாட்டிற்கு
மொத்தமாக சர்வதேசச் சமூகம் வரவுள்ளது என்று நாங்கள் அறிவோம்.
எனவே இப்படிச்
செய்திருக்க மாட்டோம்.
நாங்கள்
குற்றவாளிகள் என்றாலும் எங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடியது எதையும் செய்திருக்க
மாட்டோம்”
என்றார் அவர்.
கொத்துக்
குண்டுத் தோற்றங்களைப் பற்றி ஸ்பெயின் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ICC
மேற்கோளிட்டுள்ள இறப்பு
எண்ணிக்கை பூசலுக்கு உட்பட்டுள்ளது.
அரசாங்கத் தரப்பில்
குறைந்த நூறுகள்தான் மொத்த இறப்பு எண்ணிக்கை என்றும்
TNC கிட்டத்தட்ட
10,000 பேர்
இறந்துவிட்டார்கள் என்றும் கூறுகின்றனர். |