சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama at Ground Zero

கிரௌண்ட் ஜீரோவில்  ஒபாமா

6 May 2011
Bill Van Auken
Use this version to print | Send feedback

நியூயோர்க் நகரத்தின்கிரௌண்ட் ஜீரோவிற்கு” (வணிக மையங்கள் தகர்க்கப்பட்ட இடத்திற்கு) ஜனாதிபதி பாரக் ஒபாமா வியாழன் அன்று  சிறிய விஜயம் மேற்கொண்டமை மிகப்பிற்போக்குத்தன நோக்கங்களுக்காக ஒசாமா பின்லேடனின் கொலையைப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த பிரச்சார நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

கடற்படை துருப்புகள் (Navy Seals) மற்றும் CIA பாக்கிஸ்தானில் நடத்திய தாக்குதல்கள் ஆயுதமற்ற ஒரு மனிதனை நீதிநெறிக்கு அப்பாற்பட்ட முறையால் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது என்பதை தெளிவாக்கும் அதிக விவரங்கள் வெளிப்பட்டு வருகையில், முழு விவகாரத்திலும் உள்நாட்டு அரசியல் நோக்கங்கள் முக்கிய பங்கைக் கொண்டன என்பதற்கு அதிகரித்துவரும்  அடையாளங்கள் காணப்படுகின்றன.

முடிவுகள் ஏதும் இல்லாத தொடர்ச்சியான போர்கள், நீடித்த பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளில் மாபெரும் சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மக்கள் சீற்றம் பெருகியுள்ளது; இதில் பெரும் பகுதி ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராக உள்ளது. பின்லேடனை கொல்லுவதற்கு எடுத்த முக்கிய முடிவானது ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒபாமாவின் அரசியல் நிலைப்பாட்டிற்கு வலுக்கொடுக்கும் வகையில் பயன்படுத்தப்படலாம் மற்றும் நாட்டு வெறி, இராணுவவாதத்தின்மூலம் மக்கள் சீற்றம் திசைதிருப்பப்படலாம் என்பதாலேயே ஆகும்.

பின்லேடன் கொலை மீதான ஒபாமாவின்வெற்றி ஓட்டம்அமெரிக்க ஜனாதிபதி தன்நீண்ட வடிவிலான பிறப்புச் சான்றிதழை வெளியிட்ட அவமானகரமான காட்சி நடந்து ஒரு வாரத்திற்குள் வந்திருப்பது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல. இரு நிகழ்வுகளிலும், அவருடைய நிர்வாகக் கொள்கைகள் பலவற்றில் இருப்பதுபோலவே, ஒபாமாவின் நடவடிக்கைகள் குடியசுக் கட்சியின் வலது அரசியலுக்கு ஏற்பட நடந்து கொள்வது, அதற்கு மிகத் தாழ்ந்து நடத்தல் என்ற உந்துதலைத்தான் கொண்டுள்ளன.

ஆரம்பத்தில் தன்னுடைய கிரௌண்ட் ஜீரோ பயணத்தை இரு கட்சி விவகாரமாக்க ஒபாமா முயன்று ஜோர்ஜ் புஷ்ஷை அழைக்க முற்பட்டார். அவர்தான் 9/11 நிகழ்வுகளை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு போர்களை தொடக்கவும் ஜனநாயக உரிமைகள்மீது நேரடித் தாக்குதல் நடத்தவும் முற்பட்டவராகும். இதை அவருக்குப் பின் வந்த ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி தொடர்ந்திருப்பதுடன் விரிவாக்கவும் செய்துள்ளார்.

புஷ் மறுத்த பின்னர் ஒபாமா முன்னாள் நியூயோர்க் நகர மேயரான ருடோல்ப் கியுலியானியுடன் பயணித்தார். இக்குடியரசுக்கட்சித் தலைவர், விவாதத்திற்கு உரிய வகையில் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கு இன்னும் கொடூர உருவகம் ஆவார். இவர் ஒபாமாவுடன் நியூயோர் நகரத்தைச் சுற்றி, ஒரு தீயணைப்பு நிலையம், பொலிஸ் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு உடன் சென்று பின்னர் கிரௌண்ட் ஜீரோவையும் அடைந்தார்.

காவல் நிலையத்தில் தன்னுடைய உரையில் ஒபாமா, கியுலியானி உடன் இருப்பதுசாதாரண நேரத்தில் நாம் அரசியல் வேறுபாடுகளைக் கொண்டாலும், நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது நாம் அனைவரும் முதலிலும் முக்கியமானதுமாக அமெரிக்கர்கள் என்பதற்கு தக்க சான்றுஎன்றார்.

என்ன அபத்தம்! கியுலியானி ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அவரை மிகக் கடுமையாகக் கண்டித்து, அவர் பயங்கரவாதத்தின்மீது மிருதுவான அணுகுமுறை கொண்டுள்ளார் என்றும், ஆப்கானிய போரை சரியாக நடத்தவில்லை என்றும் கூறிவருகிறார். பின்லேடனை அப்பட்டமாகப் படுகொலை செய்யலாம் என்று எடுத்த முடிவு அத்தகைய குறைகூறலை திசைதிருப்பும் வகையில் வலதுசாரிகள் கோரும் வழிவகைகளை ஏற்றல் என்ற ஒபாமாவின் விருப்பத்தின் உந்துதலால் நிகழ்ந்தது.

அரசியலமைப்பு நெறிகள் பற்றிய வக்கீலும், ஹார்வர்ட் சட்டப்பரீசீலனை ஏட்டின் முன்னாள் தலைவருமான ஒபாமா அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டம் மற்றும் அரசியலமைப்புக் கொள்கைகள் மீது நடத்தும் தாக்குதலை அதிகப்படுத்திவருகிறார். ஒசாமா பின்லேடன் வழக்கிற்கு பொருந்தும் வகையில் தொடர்ச்சியான பல முன்னோடிகள் நிகழ்வுகள் உள்ளன. அவரைக் கொலை செய்வதுநீதி வழங்கப்பட்டதைபிரதிபலிக்கிறது என்னும் அமெரிக்க நிர்வாகத்தின் கூற்றுக்கள் அரசியல்ரீதியாக இழிந்த தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.

இரண்டாம் உலகப் போர் முடிவிற்குப் பின், அமெரிக்க அரசாங்கம் நாஜிப் போர்க் குற்றவாளிகள் விசாரணையின்றி கொலைக்கு உட்படுத்தமாட்டார்கள் என்று வலியுறுத்தியது. பின்லேடன் கொலையை பொறுத்தவரை அவர் ஒரு போரில் பங்கு பெற்றுள்ளவர், எனவே உடனடியாக கொல்லப்பட்டுவிடலாம் என்ற ஒபாமாவின் நீதித்துறை முன்வைத்துள்ள ஐயத்திற்குரிய கூற்றுக்களின் அடித்தளத்தில் நாஜிக்களையும் விசாரணையின்றி மரணத்திற்கு உட்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் மில்லியன் கணக்கான மக்களுடைய இறப்புக்களுக்கு பொறுப்பு என்ற பங்கைக் கொண்டிருந்த தனிநபர்கள் தொடர்பாக அணுகுகையில் அமெரிக்க அரசாங்கம் அவர்கள் நூரெம்பேர்க்கில் விசாரணைக்கு அழைத்துவரப்பட வேண்டும், அப்பொழுதுதான் ஹிட்லரின் ஆட்சி நடத்திய போர்க்குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும், தீர்வு காணப்படும் என்று வலியுறுத்தியிருந்தது.

நூரெம்பேர்க் கொள்கைகளின் அடிப்படையில் நடந்த அடோல்ப் ஐஷ்மான் மீதான விசாரணை அதேபோன்ற முன்னோடியைத்தான் நிறுவியது. ஆர்ஜன்டினாவில் ஐஷ்மனைக் கைப்பற்றிய இஸ்ரேலிய முகவர்கள் உடனடியாக அவரைக் கொன்றுவிடவில்லை; விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அவரைக் கைதுசெய்தனர்.

பின்லேடனும் உயிருடன் கைப்பற்றப்பட்டிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் வெள்ளை மாளிகையில் இருந்து அவர் அதே இடத்தில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு கொடுக்கப்பட்டு இருந்தது. ஒபாமா நிர்வாகம் அல்குவேடா தலைவர் மீது பயங்கரவாதம், கொலை ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி அவை நீதிமன்றம் ஒன்றில் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை.

அவ்வாறு செய்தல் பின் லேடன் நீண்டகாலம், அமெரிக்க உளவுத்துறைகளுடன் நெருக்கமாக கொண்டிருந்த உறவுகளை அம்பலப்படுத்தும் அபாயத்தை உரு்வாக்கியிருக்கும். இந்த உறவுகள் 1980களில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சியில் இருந்தே தொடங்குகின்றன. மேலும் இது 9/11 நிகழ்வுகள் பற்றி ஒரு சட்ட அரங்கினை எழுப்பக்கூடிய அச்சுறுத்தலையும் கொண்டிருந்தது. அது இரு கட்சிகளும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி மறைப்புக் காட்ட இணைந்து முற்பட்டுச் செய்தவற்றை பாதிக்கும். எந்த அளவிற்கு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அமைப்புக்கள் முன்கூட்டியே பலவற்றை அறிந்திருந்தனர் என்பதையும் வெளிப்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும்.

அதே போல் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் பின் லேடன் பல கூட்டாட்சி சட்டங்களை மீறிய குற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் பொதுநீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா அல்லது இராணுவக் குழுக்கள் முன்னான விசாரணையா என்னும் விவாதத்தை மீண்டும் எழுப்புவதற்கும் ஒபாமா விருப்பம் கொண்டிருக்கவில்லை. இந்த விவாதத்தில் அவர் ஏற்கனவே குவான்டநாமோவில் இராணுவ நீதிமன்ற விசாரணைகளுக்கு உத்தரவிட்டபோது குடியரசுக் கட்சிக்காரரின் பக்கம் சார்ந்துவிட்டார்.

இறுதியாக நீதித்துறைக்கு அப்பாற்பட்ட மரண தண்டனை என்பது அமெரிக்க அரசாங்கத்திற்கு நடைமுறைச் செயலாகிவிட்டது. இது அன்றாடம் பாக்கிஸ்தானிலும் மற்ற இடங்களிலும் ஆளற்ற விமானங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

இப்படி போலித்தனமாக சட்டநெறியாக்கும் செயற்பாடுகள் ஒரே நேரடி அச்சுறுத்தலை முன்வைக்கின்றன. சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் இந்த முறைகள் இறுதியில் அமெரிக்காவிற்குள்ளேயே அமெரிக்க ஆளும் உயரடுக்கினால் விரோதிகள் என்று காணப்படுபவர்களுக்கு எதிராகவும்  பயன்படுத்தப்படும்.

இந்த நீதிக்குப் புறம்பான, பிற்போக்குத்தன கொள்கையை செயல்படுத்துகையில், ஒபாமா செய்தி ஊடகத்தின் முழு ஆதரவையும் கொண்டுள்ளார்; அவை பாக்கிஸ்தானில் நடந்த கொலைகள் பற்றி இழிந்த முறையில் களிப்பை வெளிப்படுத்தியுள்ளன; அதே போல் தாராளவாதிகள் மற்றும்இடதுகளும்ஜனநாயகக் கட்சி ஜனாதிபதிபயங்கரவாதத்தின் மீதான போர்இன் தலைமை என்று தன்னை உயர்த்திக் கொண்டுள்ளமை பற்றி பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளன.

நியூ யோர்க் டைம்ஸ்  தலையங்கமாக எழுதியது: பாக்கிஸ்தானில் ஒரு வளாகத்தில் பின் லேடனைத் தாக்க வேண்டும் என்னும் திரு.ஒபாமாவின் இடர் நிறைந்த, மிகத் தைரியமான முடிவு கடுமையான முடிவுகளை அவரால் எடுக்க முடியாது அல்லது நாட்டினை பற்றி வெளிநாடுகளில் உள்ள கருத்துப் பற்றி முக்கியமாக கவலைப்படுகிறார் என்ற கருத்தை தகர்த்துவிட்டது.”

இதேபோல் Nation’s எரிக் ஆல்டமான் ஒபாமாவின்மிக நிதானமான முடிவெடுத்துச் செயலாற்றும் திறன், செயற்பாட்டில் ஒப்புமையில்லாத தொழில்நேர்த்தியின் தன்மையுடன் இணைந்திருப்பது அமெரிக்காவில் புஷ்ஷிற்குப் பிந்தைய தலைமையில் உள்ள கனிந்த, ஆனால் எஃகு போன்ற உறுதிப்பாடு பற்றி உலக அபிப்பிராயத்தில் உயர வைக்கும்.” என்று கூறியுள்ளார்.

இத்தகைய கருத்துக்கள் முழு சமூக-அரசியல் பிரிவினரும் வலதுசாரிப்பக்கம்  மாறுவதைத்தான் வெளிப்படுத்துகிறது; இதில் மத்தியதர வகுப்பின் சலுகைபெற்ற பிரிவுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பதாகையின்கீழ் திரண்டு நிற்கின்றன.

பெருநிறுவனச் செய்தி ஊடகத்தில் எதிரொலித்து அதிகப்படுத்தப்பட்ட ஒபாமாவின் முயற்சி, தேசிய ஒற்றுமைக்கு உரைகோல் என்று ஒசாமா பின் லேடன் கொலையைக் காட்டுவது, ஆழ்ந்த பிற்போக்குத்தன பொருளுரையைக் கொண்டுள்ளது. சிலர், படுகொலை 9/11க்குப் பின்னர் அதிகம் காணப்பட்டதாக கூறப்பட்ட ஐக்கியத்தை புதுப்பிக்கும் என்று கூறுகின்றனர். ஏதோ பின் லேடனின் கொலை அப் பெரும்சோகத்தை ஒட்டி நடத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களையும் நியாயப்படுத்திவிடும் என்பது போல். இதில் ஆக்கிரோஷப் போர்கள், மில்லியன் மக்களுக்கும் மேலானவற்றைக் கொன்றவையும் அடங்கியுள்ளன.

கிரௌண்ட் ஜிரோவிற்கு ஒபாமா வெற்றி நடைபோட்டது, முதல் அமெரிக்கரான விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் இனை நாசா விண்வெளிக்கு அனுப்பிச் சரியாக 50 ஆண்டுகளுக்குப் பின் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விண்வெளிப்பயணம் சோவியத் ஒன்றியம் முதல் மனிதனான யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பிய முன்று வாரங்களில் நிகழ்ந்ததுடன், மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய CIA இன் அவமானகரமான தோல்வி முயற்சியான பிக்ஸ் வளைகுடா (Bay of Pigs) கியூபா படையெடுப்பிற்குப் பின்னர் வந்தது.

பனிப்போர் நிகழ்வுகள் இருந்தபோதிலும்கூட, அமெரிக்க மக்களின் கற்பனையை விண்வெளிப்  பயணங்கள் ஈர்த்தன. நான்கு நாட்களுக்குப் பின் வாஷிங்டனுக்கு ஷெப்பர்டை வரவேற்ற ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி, விண்வெளி வீரரையும் நாசாவின் விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்களையும்விண்வளி பற்றி மனித அறிவின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பு மற்றும் விண்கலங்கள் விண்வெளிப் பயணத்தில் மனிதனின் திறன் பற்றிய நிரூபணத்திற்கும்பாராட்டுத் தெரிவித்தார்.

அரை நூற்றாண்டு கடந்தபின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுச் சரிவு மற்றும் ஆளும் அமைப்புமுறையின் நீடித்த அரசியல் இழிசரிவின் காரணமாக அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள் என்பதை நோக்கிய தேசியப் பெருமையை ஊக்குவிக்க முயற்சிக்காது படுகொலை செய்யும் குழுக்களின் இழிந்த செயல்களை நோக்கி திரும்பியுள்ளது.