WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
கடாபி
குடும்ப உறுப்பினர்களை வான் தாக்குதல் மூலம் கொலை செய்ததை அமெரிக்கா மற்றும் நேட்டோ
நியாயப்படுத்துகின்றன
By
Barry Grey
3 May 2011
சனிக்கிழமை
இரவு லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் இளைய மகன் மற்றும் மூன்று பேரன்களைக் கொன்ற
வான் தாக்குதல் பற்றிய லிபிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டான கடாபியைக் கொலை செய்யும்
நோக்கம் கொண்ட படுகொலை முயற்சி என்பதை அமெரிக்க,
நேட்டோ அதிகாரிகள்
உதறித்தள்ளிவிட்டனர்.
கட்டிடத்தை
கிட்டத்தட்ட தகர்த்த தாக்குதல் நடந்தபோது கடாபியும் அவருடைய மனைவியும் அங்கு
இருந்தனர்,
ஆனால் தாக்குதலில்
இருந்து தப்பிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.
அவருடைய கடைசி மகன்
சைப் அல்-அரப்
கடாபியும் அதிகமாக ஆட்சியில் ஈடுபடாமல் இருந்தவருமான அவர் கொல்லப்பட்டார்.
இதே போல் அவருடைய
12 மாதத்தில்
இருந்து 4
வயது வரை இருந்த மூன்று
குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க
ஆதரவு பெற்ற
“எழுச்சியாளர்களுடன்”
நடைபெறும்
உள்நாட்டுப் போரில் போர் நிறுத்தம் தேவை மற்றும் வாஷிங்டன்,
நேட்டோ ஆகியவற்றுடன்
பேச்சுவார்த்தைகள் வேண்டும் என்று கடாபி ஓர் உரையைக் கொடுத்த சில மணி நேரத்திற்குப்
பின் இத்தாக்குதல் வந்தது.
முன்பே பல முறையும்
கூறியது போல் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உடனடியாக கடாபியின் முறையீட்டை
நிராகரித்துவிட்டன.
நேட்டோ
சக்திகள்
“இந்நாட்டின்
தலைவரைப் படுகொலை செய்வதற்கு நேரடி நடவடிக்கை எடுக்கின்றன”,
இது சர்வதேச
சட்டத்தை மீறியது ஆகும் என்று லிபிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
லிபிய அரசாங்கத்தின்
செய்தித் தொடர்பாளர் மௌசா இப்ரகிம்,
“இதை உலகம்
கவனத்துடன் ஆராய வேண்டும் என்று கேட்கிறோம்,
ஏனெனில் இப்பொழுது
இங்கு இருப்பது காட்டின் சட்டமாகத்தான் உள்ளது.
இது எப்படி
குடிமக்களைக் காப்பாற்ற உதவும்?”
என்றார்.
திரிப்போலியில் மக்கள் வசிக்கும் பகுதியில் லிபிய ஆட்சியாளரின்
29வயது மகனின்
குடும்ப இல்லத்தின் மீது நான்கு
“துல்லியமாக
இயக்கப்பட்ட”
ஏவுகணைகள்
ஏவப்பப்பட்டன என்று நேட்டோ ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் இக்கட்டிடம்
ஒரு “கட்டுப்பாட்டுத்
தள”
மையம்,
ஐ.நா.
மார்ச்
17 தீர்மானத்தின்
கீழ் முறையான இலக்குத்தான் என்று வலியுறுத்தியது.
அத்தீர்மானம்
“பறக்கக்கூடாத பகுதி”
நிறுவ மற்றும்
குடிமக்களை அரசாங்கத்தின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற
“அனைத்துத் தேவையான
நடவடிக்கைகள்”
எடுக்கப்படலாம்
என்று அனுமதி கொடுத்திருந்தது.
கட்டிடத்தின் இராணுவத் தன்மைக்கு நிரூபணம் என்னும் முறையில் நேட்டோ அதிகாரிகள்
அதில் பதுங்கு குழி கீழே உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் இதில் வியப்பு
ஏதும் இல்லை.
ஏனெனில் கடாபியும்
அவருடைய குடும்பத்தினரும் பல முறை
1969ல் கேணல்
பதவிக்கு வந்தது முதல்
2000 களில்
வாஷிங்டன் மற்றும் ஐரோப்பியச் சக்திகளுடன் சமாதானம் செய்து கொள்ளும் வரை
படுகொலைக்கு இலக்காக இருந்துள்ளனர்.
அப்பொழுது
நான்கு வயதாகி இருந்த சைப் அல்-அரப்
கடாபி அத்தகைய முயற்சி ஒன்றில் தப்பித்திருந்தார்—1986ம்
ஆண்டு அமெரிக்கா திரிபோலியில் ஜனாதிபதி இல்ல வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தியபோது,
அதில் கடாபியின்
தத்து மகள் கொல்லப்பட்டவர்களில் ஒருவரானார்.
மார்ச்
19ம் திகதி அமெரிக்க-பிரிட்டிஷ்-பிரெஞ்சு-நேட்டோப்
போர் தொடங்கிய இரண்டாம் நாளில் இதே வளாகம் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டது.
ஏப்ரல்
25ம் திகதி மீண்டும்
ஜனாதிபதி வளாகம் குண்டுத் தாக்குதலை எதிர்கொண்டது.
முன்னதாக கடந்த
சனிக்கிழமை இத்தாலியுடன் இணைந்து நட்பு நாடுகள் திரிப்போலியில் அரசாங்க வளாகம்
ஒன்றைத் தாக்கின.
அதில் பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான செயற்குழு ஒன்றும் துணை இராணுவ உயரதிகாரிகளின்
அலுவலகங்களும் இருந்தன.
சனிக்கிழமை
இரவு நடந்த மோசமான தாக்குதல் கடாபி பயன்படுத்தும் இடங்களின் மீது நான்காவது முறை
வான்தாக்குதல் நடத்தப்பட்ட இடமாகும்.
கடந்த வாரம் நேட்டோ
தான் இலக்கு கொண்டுள்ள கட்டுப்பாடு மற்றும் நிர்வாக மையங்கள் பட்டியலை விரிவுபடுத்த
இருப்பதாக அறிவித்தது.
இது அதிகம்
மூடிமறைக்கப்படாத இலக்கு வைக்கும் படுகொலைகள் நடத்தப்படும் என்பதற்கு அச்சறுத்தல்
ஆகும்.
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஆறு வார குண்டுத் தாக்குதல்களில்
நூற்றுக்கணக்கான லிபியத் துருப்புக்களும் குடிமக்களும் அழிந்தும் கடாபி ஆட்சியை
அகற்ற முடியவில்லை,
“எழுச்சியாளர்கள்”
எனப்படுவோர்
அரசாங்கச் சார்புடைய சக்திகளுக்கு
எதிராக முன்னேற
முடியவில்லை என்று அறியப்பட்டவுடன் தங்கள் முயற்சிகளை படுகொலையால் குவிப்புக்
காட்டுகின்றன என்பதுதான் உண்மை ஆகும்.
சனி இரவு
வான் தாக்குதல் பற்றி வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
கடாபியின் மகன்
மற்றும் பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டுவிட்டன என்பதை நேட்டோ அதிகாரிகள் ஒப்புக்
கொள்ள மறுத்துள்ளனர்.
பென்டகன் மற்றும்
நேட்டோ ஆகியவை ஞாயிறன்று இந்த இறப்புக்களை உறுதி செய்ய தங்களிடம் சுயாதீனமான
சான்றுகள் இல்லை என்று கூறிவிட்டன.
ஐ.நா.
தலைமைச் செயலர் பான்
கி-மூன்
வான் தாக்குதல்கள் பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஞாயிறு காலை
திரளான லிபியர்கள் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலியத் தூதரகங்கள் மற்றும்
திரிபோலியிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகம்,
ஐ.நா.
அலுவலகங்கள்
ஆகியவற்றைச் சூறையாடினர்.
ஐ.நா.
இதற்கு
விடையிறுக்கும் வகையில் தன்னுடைய எஞ்சியிருக்கும்
12 சர்வதேச அலுவலக
உறுப்பினர்களை நாட்டில் இருந்து அகற்றிக் கொண்டுவிட்டது.
கடாபியின்
மகன் மற்றும் பேரர்களின் கொலைக்கு விடையிறுப்பு கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது
எரிச்சல் தூண்டிவிடப்பட்டுள்ளது ஆகும்.
லிபியாவில் தன்
தூதரை 24
மணி நேரத்திற்குள் நாட்டை
விட்டு நீங்குமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இத்தாலிய வெளியுறவு
அமைச்சரகம் அதனுடைய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட
“இழிந்த தாக்குதல்,
மிக அதிகமானது,
தீயது”
என்று கண்டனம்
தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரச அலுவலக
செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கடாபியின் ஆட்சி திரிபோலியிலுள்ள தூதரகங்களைப்
பாதுகாக்கத் தவறியதின் மூலம்
“மீண்டும் அதன்
சர்வதேசப் பொறுப்புக்களையும் கடமைகளையும் மீறியுள்ளது”
என்றார்.
திங்களன்று
திரிபோலியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சைப் அல்-அரப்
கடாபியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
இதில் கடாபியின் மிக
அதிகம் அறியப்பட்ட மகன் சைப் அல்-இஸ்லாம்
கடாபியும் அவருடைய அரைச் சகோதரருமான மொகம்மதும் உள்ளார்.
குடிமக்கள் பிரேத
வாகனத்தைச் சூழ்ந்து கொண்டு
“பழிக்குப் பழி,
பழிக்குப்பழி
உங்களுக்கு வாங்குவோம்,
லிபியா”
என்று கோஷமிட்டனர்.
அவர்கள்
அணிவகுத்துச் சென்றபோது நேட்டோ போர் விமானங்கள் தலைக்கு மேல் வட்டமிட்டுச் சென்றன.
கடாபியின்
குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் சில பகுதிகளிலிருந்து
எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.
அமெரிக்காவும்
நேட்டோவும் இராஜதந்திர சொல்லாட்சியில் பொய் கூறுகின்றனர் என்று குற்றஞ்சாட்டி,
நேட்டோத்
தாக்குதலானது “லிபியத்
தாக்குதல்கள் திரு கடாபி அவருடைய குடும்பத்தை அழித்துவிடும் நோக்கத்தைக்
கொண்டதில்லை என்னும் கூட்டணி உறுப்பினர்களின் அறிக்கை பற்றி தீவிரச் சந்தேகங்களை
எழுப்பியுள்ளது”
என்று ரஷ்யா குற்றம்
சாட்டியுள்ளது.
ரஷிய
வெளிநாட்டு அமைச்சரகம் ஞாயிறன்று நேட்டோ விகிதத்திற்கு அதிகமான வலிமையைப்
பயன்படுத்தி குடிமக்கள் இறப்பை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றஞ்சாட்டி,
போர்
நிறுத்தத்திற்கு குரல் கொடுத்துள்ளது.
சீன வெளியுறவு
அமைச்சரகம் இத்துடன் சேர்ந்துகொண்டு போர் நிறுத்தம் பற்றிய அதன் முறையீட்டைப்
புதுப்பித்தது.
கடாபி
ஆட்சியுடன் நெருக்கமான உறவுகளை நிறுவியுள்ள சீனா,
ரஷ்யா இரண்டுமே
மார்ச் 17
ஐ.நா.
பாதுகாப்புச்
சபையின் ஐ.நா.
தீர்மானம்
1973 இயற்றிய
வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அத்தீர்மானம்தான்
லிபியா மீது ஏகாதிபத்தியச் சக்திகள் தாக்குதல் நடத்த ஒப்புதல் கொடுத்திருந்தது.
இந்நாடுகளுடன்
வாக்குப் போடாமல் இருப்பதில் பிரேசில்,
இந்தியா மற்றும்
ஜேர்மனியும் சேர்ந்து கொண்டன.
அமெரிக்க-நேட்டோவின்
இலக்கு வைத்த படுகொலை பற்றி அமெரிக்க அரசியல் அல்லது செய்தி ஊடக ஸ்தாபனத்திலிருந்து
கணிசமான எதிர்ப்பு ஏதும் வரவில்லை.
ஜனாதிபதி ஜோர்ஜ்
டபுள்யூ புஷ்ஷிற்கு முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஸ்டீபன் ஹாட்லி
தந்திர உத்திக் கண்ணோட்டத்திலிருந்து வான் தாக்குதலைக் குறைகூறினார்.
கடாபி ஆட்சி
அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக அப்பட்டமான கைப்பாவை அரசாங்கத்தை நிறுவும் இலக்கிற்கு
இது ஊறு விளைவிக்கும் என்று அவர் வாதிட்டுள்ளார்.
CNN
உடைய
“State of the Union”
நிகழ்வில் ஞாயிறன்று பேசிய
அவர், “லிபிய
மக்கள் ஒரு சர்வாதிகாரியை வீழ்த்தினர் என்ற முடிவுதான் வரவேண்டுமே ஒழிய நாம் உள்ளே
நுழைந்து ஒரு சர்வாதிகாரியை அகற்றினோம் என்று வரக்கூடாது….,
உண்மையில் கடாபியே
நாட்டைவிட்டு நீங்க வேண்டும் அல்லது லிபியர்களால் கொல்லப்பட வேண்டுமே ஒழிய
அமெரிக்கரால் அல்ல என்பதைத்தான் நாம் விரும்புகிறோம்”
என்றார்.
முக்கிய
ஜனநாயகக் கட்சி,
குடியரசுக் கட்சி
உறுப்பினர்களும் இதே போன்ற தயக்கமான கருத்துக்களை வெளிப்படுத்தி படுகொலை செய்தல்
உத்தியோகபூர்வ அரசாங்கக் கொள்கை என்பதை வெளிப்படையாக ஆதரித்துள்ளனர்.
குடியரசுக்
கட்சியின் செனட் உறுப்பினர் தென் கரோலினாவின் லிண்சே கிரஹாம்
“Fox News Sunday”
க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில்
“கடாபி எங்கு
சென்றாலும்,
அவர் ஒரு முறையான
இராணுவத் தாக்குதலுக்கு இலக்குதான்”
என்றார்.
அரிசோனாவின்
செனட்டர் ஜோன் மக்கையின்,
செனட்டின் ஆயுதப்
பிரிவுக் குழுவின் மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினர்
CBS
தொலைக்காட்சியின்
“Face the Nation’
நிகழ்ச்சியில் “கடாபியின்
கட்டுப்பாட்டை நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் அதற்காக அவர் இறந்தாலோ,
காயமுற்றாலோ,
அதுவும் உகந்ததே”
என்றார்.
“Fox
News Sunday”
ல் பேசிய ஜனநாயகக் கட்சி
செனட்டர் வட டக்கோடாவின் கென்ட் கொன்ராட்,
“கடாபி அகல வேண்டும்.
பலமுறையும் நான்
அவருடைய அதிகாரத் தூண்களை தாக்குங்கள் என்று கூறியுள்ளேன்….
அவரைத் தொடர்ந்து
பதவியில் இருக்க அனுமதிக்கக் கூடாது”
என்றார். |