World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The killing of Osama bin Laden

ஒசாமா பின் லேடன் கொலை செய்யப்படுதல்

Patrick Martin and Alex Lantier
2 May 2011

Back to screen version

ஞாயிறன்று அமெரிக்க சிறப்புப் படைகள் அல் குவேடாவின் நீண்ட காலத் தலைவரான ஒசாமா பில் லேடனை பாக்கிஸ்தானில் அபோத்தாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதென ஜனாதிபதி பாரக் ஒபாமா அறிவித்தார்.

தேசிய பாதுகாப்பு குறித்து அடுத்த சில நிமிடங்களில் ஒபாமா  ஒரு முக்கிய அறிக்கையை அளிப்பார் என்று முக்கிய செய்தி ஊடகங்கள் தகவல் கொடுத்த ஒரு மணி நேரத்திற்குப் பின் ஒபாமா அமெரிக்க கிழக்கு நேரப்படி இரவு 11.30க்கு அறிக்கையை வெளியிட்டார்.

ஒபாமாவின் அறிக்கை பல முக்கிய வினாக்களுக்கு விடையளிக்காமல் உள்ளது; இது பல புதிய வினாக்களையும் எழுப்பியுள்ளது.

முதலில் ஒபாமா, “பதவி எடுத்துக் கொண்ட சில நாட்களில் நான் CIA இயக்குனர் லியோன் பனேட்டாவிற்கு அல் குவேடாவிற்கு எதிரான நம் போரில் பின் லேடனைக் கொலை செய்தல் அல்லது கைப்பற்றுதலை நம் உயர் முன்னுரிமையாக்க வேண்டும் என்று கூறினேன்; அதே நேரத்தில் நம்முடைய பரந்த முயற்சிகளான பில் லேடனின் இணையங்களைத் தடுத்து, தகர்த்து தோற்கடித்தலையும் தொடர வேண்டும் என்று கூறினேன்.” என்று கூறினார்.

வேறுவிதமாகக் கூறினால், 2001 க்கும் ஜனவரி 2009க்கும் இடையேபயங்கரவாதத்தின் மீதான போரில் பின் லேடனைக் கைப்பற்றுவது அல்லது கொல்லுவது முக்கிய முன்னுரிமையாக இல்லை என்று ஒபாமா விளக்கம் ஏதும் கொடுக்காமல் உட்குறிப்பாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக பின் லேடன் கொல்லப்பட்ட இடம் மிகவும் முக்கியத்துவமானது. அமெரிக்க உளவுத்துறைலேடன் பாக்கிஸ்தானில் ஒரு வளாகத்தினுள் மறைந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது என்று ஒபாமா கூறினார். இதன்பின் ஒபாமா இந்த இடத்தைத் துல்லியமாக அபோத்தாபாத் என்று அடையாளம் கூறினார். இச்சிறுநகரம் பாக்கிஸ்தானின் இராணுவ நடைமுறைகளின் மையமான ராவல்பிண்டியில் இருந்து 40 மைல்களுக்குள் உள்ளது என்று அவர் விளக்கவில்லை; அதில் இருந்து ஒரு சில மைல்களிலேயேதான் நாட்டின் நலைநகரான இஸ்லாமாபாத்தும் உள்ளது என்றும் கூறவில்லை. இது சட்டத்தில் இருந்து தப்பி ஓடும் நபர் பொலிஸ் நிலையத்திற்கு அருகே மறைந்திருப்பதற்கு ஒப்பாகும்.

வளாகத்தின் தன்மைபற்றியும் ஒபாமா விவரிக்கவில்லை. ஆனால் செய்தி ஊடம் இப்பொழுதுஉலகில் மிகவும் தேடப்பட்ட மனிதன்மிக வசதியான இல்லத்தில் வாழ்ந்து வந்ததாகத் தகவல்களைக் கொடுத்துள்ளது. மேலும் அபோத்தாபாத் சிறுநகரம் மூலோபாய முறையில் முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலை N35 யில் உள்ளது; பாக்கிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் காரக்கோரம் நெடுஞ்சாலையில் இது உள்ளது.

மற்றொரு புதிரான குறிப்புரையில் ஒபாமாபாக்கிஸ்தானுடன் நம் பயங்கரவாத எதிர்ப்பிற்கான ஒத்துழைப்பு பின் லேடனிடமும் அவர் மறைந்திருக்கும் வளாகத்திற்கும் நம்மை இட்டுச் செல்ல உதவியுள்ளது.” என்றார்.

பலரும் சந்தேகப்பட்டபடிபின் லேடன் மிகச் சமீபக் காலம் வரை பாக்கிஸ்தான் அரசாங்கம், இராணுவம், உளவுத்துறை அமைப்புக்களின் சக்தி வாய்ந்த பிரிவுகளில் இருந்து உயர்மட்ட பாதுகாப்பை பெற்றுவந்தார் என்பனதுதான் வெளிப்படையான முடிவு ஆகும்.

 “கணக்கிலடங்கா உளவுத்துறை, பயங்கரவாதத் தொழில் நேர்த்தியாளர்கள், இந்த விளைவிற்கு அயராமல் பாடுபட்டவர்களுக்கு நாடு நன்றி செலுத்த வேண்டும் என்று ஒபாமா அழைப்பு விடுத்தாலும், பின் லேடன் கொலையில் முக்கிய காரணம் பாக்கிஸ்தான் அரசாங்கத்தில் நீண்டகாலமாக அவரைக் காப்போரின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்பது மிகத் தெளிவாகிறது. பின்னர் வெளிப்படக்கூடிய காரணங்களை ஒட்டி, பாக்கிஸ்தானிய ஆட்சி பின் லேடனைக் கைவிடுவது என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.

பின் லேடன் வாழ்ந்துவரும் பகுதிகள் பற்றிக் கூறப்பட்ட அசாதாரண தகவல்கள்அல் குவேடாவிற்கு எதிராக அமெரிக்கா நம் குடிமக்கள், நம் நண்பர்கள், நம் நட்பு நாடுகளைப் பாதுகாக்கப் போருக்குச் சென்றுள்ளது என்ற ஒபாமாவின் கூற்றை கேலிக்கூத்தாக்கியுள்ளன. இல்லை, அவ்வாறும் இல்லை.

பயங்கரவாதத்திற்கு மூல கர்த்தா என்று கருதப்படுவபவர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்ஒரு முக்கிய நாடான பாக்கிஸ்தானிய அரசால் பாதுகாக்கப்படுகையில், அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் மிகப் பெரிய இராணுவப் படைகளை நிறுத்தி வருகிறது. ஒபாமா பதவிக்கு வந்தபின் இப்படை மும்மடங்கு பெருகிவிட்டது.

ஒபாமாவின் கருத்துக்களில் எதுவும் பின் லேடன் கொல்லப்பட்டதுஇராணுவத் தலையீட்டு விரிவாக்கம் அயராமல் விரிவாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி ஒரு புறம் இருக்க-- அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் கணிசமான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கவில்லை.

தற்பொழுது அமெரிக்கா ஈடுபட்டுள்ள மூன்று போர்களில்ஆப்கானிஸ்தானில், ஈராக்கில் மற்றும் லிபியாவில்எதுவும் அல்குவேடாவிற்கு எதிரானது அல்லது பின் லேடனைக் கைப்பற்றுவதுடன் தொடர்பு கொண்டவை என்று கூறுவதற்கில்லை. ஈராக்கில் 2003ல் அமெரிக்க படையெடுத்திருந்த ஈரானில் இருந்த சதாம் ஹுசனின் ஆட்சியும், இப்பொழுது அமெரிக்க, நேட்டோப் படைகளால் குண்டுவிச்சிற்கு உட்பட்டுள்ள லிபியாவில் உள்ள முயம்மர் கடாபியின் ஆட்சியும் அல் குவேடாவை எதிர்க்கத்தான் செய்தன. ஆப்கானிஸ்தானில் அல் குவேடா சக்திகள் அரசியல் மற்றும் இராணுவ வகையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல.

ஒபாமாவின் உரை மற்றும் செய்தி ஊடக வர்ணனைகள் பெரிதும் செல்வாக்கிழந்துவிட்ட போர்களுக்கு பொதுமக்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சிதான் என்பது தெளிவாகிறது. அமெரிக்கர்கள் “9/11 ல் நிலவிய ஒற்றுமை உணர்வைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும். சில நேரம் ஆழ்ந்த தன்மையை அது கொண்டிராமல் உள்ளது என்று நான் அறிவேன் என்றார் ஒபாமா. செய்தி ஊடக வர்ணனையாளர்கள் பல முறையும் பின் லேடன் கொலைசெய்யப்பட்டு இருப்பது ஆப்கானிஸ்தானத்தில் போரிடும் வீரர்களின் உற்சாகத்தை மீட்கும், ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டதை நியாயப்படுத்தும் என்று பலமுறையும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு மாபெரும் கொடூரமான குற்றம், செப்டம்பர் 11, 2001 ல் 3,000 பேருக்கும் மேலாகக் கொலையுண்டது, பெரும்பாலானவர்கள் நியூ யோர்க் நகரத்தில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்ப்பில் இறந்தவர்கள், மற்றும் உலகெங்கிலும் நடத்தப்பட்ட பிற குருதி கொட்டிய பயங்கரவாதத் தாக்குதல்களில் இறந்தவர் என்பவற்றுடன் அழிக்க முடியாத வகையில் பின் லேடன் தொடர்புடையவர். ஆனால் 9/11 தாக்குதல்களைத் தொடர்ந்த அமெரிக்க இராணுவவாத வெடிப்பிற்கு அவர் ஒன்றும் காரணம் அல்ல; அவர் பெயர் ஒரு போலிக்காரணம்தான்.

ஒரு முடிவு உறுதியாகக் கூறப்படலாம். பின் லேடன் கொல்லப்பட்டது, ஒரு போலிமனிதராக இருந்து அவர் உதவியபயங்ரவாதத்திற்கு எதிரான போர் அல்லது ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா ஆகியவற்றில் நடைபெறும் ஏகாதிபத்திய போர்களுக்கு முடிவு கட்டாது; இவ்விடங்களில் அமெரிக்க இராணுவ சக்திகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முக்கிய நலன்களுக்கு தேவையான மூலோபாய நிலைப்பாடுகள் மற்றும் எண்ணெய் ஆதாரங்களை கைப்பற்றும் நோக்கத்துடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.