சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Gaddafi family members murdered by US and NATO

கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்கா மற்றும் நேட்டோவினால் கொல்லப்பட்டனர்.

By James Cogan
2 May 2011
Use this version to print | Send feedback

லிபியாவின் தலைவர் முமார் கடாபியின் இளைய மகனும் மூன்று பேரக் குழந்தைகளும் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு அரசியல் படுகொலை நடவடிக்கையாகும். இதற்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனும், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும், இத்தாலியப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுமே நேரடிப் பொறுப்பாளிகளாவர். இவர்கள் தான் சனியன்று இரவு கடாபியும் அவரது குடும்பத்தின் உறுப்பினர்களும் கூடியிருந்த திரிப்போலியில் உள்ள அவரது தனி இல்லத்தின் மீது ஏவுகணைத் தாக்குதலுக்கு ஒப்புதலளித்தனர். 29 வயதான சாயிஃப் அல்-அரப் கடாபி, லிபியத் தலைவரின் இளைய மகனாவார், இவர் லிபிய அரசாங்கத்தின் ஒரு அங்கத்தவராகக் கருதப்பட்டவரில்லை. கொல்லப்பட்ட பேரக் குழந்தைகளின் வயது 12 மாதங்களில் இருந்து 4 வயதுக்குள்ளாகத் தான் இருக்கும் என்று கடாபியின் குடும்ப நண்பர்கள் கூறியுள்ளனர்.

ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, லிபியாவில் நேட்டோவின் இராணுவத் தாக்குதலுக்கான கனேடிய நாட்டுத் தளபதி லெப்டினெண்ட் ஜெனரல் சார்லஸ் பவுச்சார்டு விடுத்த அறிக்கை சம்பிரதாயமாக இருந்ததோடு ஏமாற்றுவித்தையாகவும் இருந்தது: அனைத்து உயிரிழப்புகளுக்காகவும் நாங்கள் வருந்துகிறோம், குறிப்பாக நடப்பு மோதலின் விளைவாகத் துன்பத்தில் சிக்கியிருக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்காக.

அதே அளவு பொய்யுரைக்கும் தனது அறிக்கையில் கேமரூனும், ஒரு மாடி வீட்டுக் கட்டிடம் மீது தாக்குதல் நடத்துவது 1973 ஆம் ஆண்டின் ஐநா தீர்மானத்தின் படி அனுமதிக்கத்தக்கது என்கிற அரசியல் கற்பனையைப் பராமரிக்க முனைந்தார். கடாபியின் போர்-செய்யும் எந்திரத்தைக் குறிவைப்பதன் மூலமாக உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் தான் இந்த ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாய் அவர் கூறினார். அதாவது தாங்கிகளும், துப்பாக்கிகளும், ராக்கெட் லாஞ்சர்களும், அத்துடன் கட்டளைத் தலைமைகளும் தான்.

முகமார் கடாபியைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டில் இருந்து நழுவுவதற்காக தன்னுடைய வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில் கேமரூன் தனிநபரின் இல்லத்தை கட்டளைத் தலைமை எனக் குறிப்பிட்டார். ஒரு தனி நபரைக் குறி வைப்பதென்பது ஒரு படுகொலையே, அது போராகவே இருந்தாலும், அது ஒரு குற்றவியல் நடவடிக்கையாகவே வரையறுக்கப்படும். ஆயினும் கடாபியைக் கொல்வதற்கான முயற்சி லிபியாவுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளால் போர் அறிவிப்பு இல்லாத நிலையில் அல்லது ஒபாமா நிர்வாகத்தால் போர் அதிகார சட்டத்தின் ஷரத்துகள் கையிலெடுக்கப்படாமலேயும் கூட நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க சேர்ச் அறிக்கை (US Church Report)  படுகொலைகள் நிகழ்த்துவதைக் மறுத்து, போட்டி அரசுகளின் அரசியல் தலைமையைப் படுகொலை செய்யும் எந்தவொரு அரசாங்கத்தின் முயற்சிக்கும் அங்கீகாரமளிப்பதென்பது ஒரு குற்றவியல் நடவடிக்கையும் காட்டுமிராண்டித்தனமான கொள்கையும் மட்டுமன்றி அடாவடித்தனமான ஒரு செயலுமாகும் என அமெரிக்கப் புரட்சியின் காலத்தைய அமெரிக்க அரசாங்கத்தின் நெடுங்கால நிலைப்பாட்டுக்குப் புத்துயிர் அளித்து 35 ஆண்டுகள் ஆகி விட்டன. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியைச் ஈடுசெய்ய ஏறக்குறைய இரண்டு தசாப்த காலப் போர் நடந்து முடிந்த பின்னர், இத்தகைய கட்டுப்பாடுகள் தடைகள் எல்லாம் மறுதலிக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவின் தலைமை அரசியல்வாதிகள் எல்லாம் இந்த விஷயத்தின் சட்ட அம்சங்களை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு லிபியத் தலைவரின் படுகொலைக்கு இரக்கமின்றி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றனர். தெற்கு கரோலினாவின் செனட்டரான லிண்ட்சே கிரகாம், திங்களன்று காலையில் ஃபாக்ஸ் நியூஸ் சானலுக்கு அளித்த ஒரு நேர்காணலில், கடாபி எங்கு சென்றாலும் அவர் இராணுவத்தின் நியாயமான இலக்காக இருப்பார் என்றார். இந்தக் கூற்றின் மூலம் அமெரிக்க செனட்டர் கொலையை உத்தியோகப்பூர்வ அரசுக் கொள்கையாக புனிதப்படுத்தி விட்டார்.

கடாபியின் மகன் மற்றும் பேரப்பிள்ளைகளைக் கொலைசெய்த தாக்குதலுக்கு ஏழு  மணி நேரத்துக்கு முன்னதாகத் தான், நேட்டோ விமானம் ஒன்று திரிப்போலியில், போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க லிபியத் தலைவர் ஒரு நேரலைத் தொலைக்காட்சி உரையை ஆற்றிக் கொண்டிருப்பதாகக் கருதிய இலக்குகளின் மீது குண்டுகளைப் பொழிந்திருந்தது. ஏப்ரல் 24 அன்று, நேட்டோ உளவுப் பிரிவு கடாபி நிச்சயமாய் இருப்பதாக நம்பி ஒரு வளாகத்தின் மீது நடத்திய தாக்குதலில் அந்த வளாகம் தூளானதுடன், இதில் மூன்று அப்பாவிகள் பலியானார்கள்.

கடாபியின் மரணம் லிபியாவின் மீது அமெரிக்கா மற்றும் நேட்டோ நடத்தும் போரின் அதிமுக்கியமான இலட்சியமாக ஆகியிருக்கிறது. மார்ச் 19 அன்று தொடங்கிய இந்தத் தாக்குதலின் ஆரம்ப மூலோபாயம் பரிதாபகரமாய் தோல்வியடைந்தது. விமானத் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான லிபியப் படையினரையும் மக்களையும் பலிகொண்டதே தவிர, ஏகாதிபத்திய வட்டங்களின் இரகசிய நம்பிக்கையாக இருந்த, கடாபி ஆட்சியின் வீழ்ச்சியைத் தூண்டவில்லை. களத்தில், கிழக்கு நகரமான பெங்காசியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நேட்டோ ஆதரவு இடைக்கால  தேசியக் குழுவினால் முன்னேறவே முடியவில்லை எனும்போது, கடாபியின் இராணுவப் படைகளைத் தோற்கடிப்பதெற்கெல்லாம் போகவே அவசியமில்லை.   

கடாபி இறந்து விட்டால் எல்லா எதிர்ப்பும் முடிவுக்கு வரும், கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுகின்ற முன்னாள் கடாபியின் அமைச்சர்கள், சிஐஏவின் சொத்துக்களாய் திகழும் நபர்கள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆகியோரின் ஒரு கூட்டம் நாட்டில் சவாலில்லாமல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு விசுவாசமான கைப்பாவை அரசாக சேவை செய்யும் என்று அற்பத்தனமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கையில் தான் பெரும் சக்திகளின் இந்த ஏமாற்றமும் விரக்தியும் பொதிந்திருக்கிறது.

அமெரிக்காவின் அரசியல் மற்றும் இராணுவ ஸ்தாபகத்தைப் பொறுத்தவரை, கடாபியைக் கொல்லும் வக்கிர ஆசையென்பது அமெரிக்க இராணுவத்தால் குறிவைக்கப்படும் ஏராளமான நாடுகளின் தலைவர்களை அது அணுகிய அதே முறையின் வரிசையில் தான் வருகிறது. மிகவும் பழிவாங்கும் தன்மையுடன் தான் இவை அனைத்துமே கையாளப்பட்டிருக்கின்றன.

சிஐஏவின் முன்னாள் சொத்தாக இருந்த பனாமாவின் சர்வாதிகாரியான மானுவேல் நோரியேகா 1989ல் அங்கு அமெரிக்கா ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு, 2007 வரை சிறைக்கைதியாக்கப்பட்டு, பின் இன்னொரு விசாரணைக்காகவும் ஏழு ஆண்டு சிறைத் தண்டனைக்காகவும் பிரான்சுக்கு மாற்றப்பட்டார்.

ஒருசமயம் பெரும் சக்திகளின் விருப்பத்திற்குகந்தவராய் இருந்த ஸ்லோபோடன் மிலோசவிக் யூகோஸ்லேவியா மீதான 1999ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போரை அடுத்து போர்க் குற்றங்கள் சாட்டப்பட்டு தி ஹேக் (The Hague) விசாரணைக் காலத்தின் போதே சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

1990களின் சமயத்தில் எண்ணெய் குழாய்களமைக்க அமெரிக்கா இவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு முனைந்திருந்த தலிபான்களின் மூத்த தலைவரான முல்லா ஓமர் தலைமறைவாக இருக்கிறார். 2001 ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக் காலம் முதலாக இவர் கண்ட இடத்தில் சுடப்பட உத்தரவிடப்பட்டிருக்கும் நபர்களின் பட்டியலில் இருந்து வருகிறார்.

980களில் ஈரான்-ஈராக் போரின்போது அமெரிக்காவால் செயலூக்கத்துடன் ஆதரிக்கப்பட்ட ஈராக்கின் சதாம் ஹுசைன் ஒரு நாடகத்தனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கூட்டத்தில் அடித்துக் கொல்லப்படுகின்ற வகையிலான முறையில் தூக்கிலிடப்பட்டார். அவருடைய மகன்கள் கொலை செய்யப்பட்டு அவர்களது சடலங்கள் பதக்கங்களைப் போல் காட்டப்பட்டன.

கடாபியே அமெரிக்கா மற்றும் அதனுடன் தொடர்புபட்ட உளவு அமைப்புகளால் படுகொலை செய்யப்படுவதான அச்சுறுத்தலின் கீழ் தான் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறார். 1969ல் அவரை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த இராணுவப் புரட்சி நடந்த ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே, அப்போதிருந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஹென்ரி கிஸிங்கர் இரகசிய நடவடிக்கை மூலம் அவரை பதவிநீக்கி விட ஆலோசனையளித்தார். பிரிட்டிஷ் உளவுத்துறை அவரை 1971 ஆம் ஆண்டில் கொலை செய்ய முயற்சித்ததாய் கூறப்பட்டது. ரீகன் நிர்வாகம் 1986ல் அவரது வீட்டின் மீது பெரும் குண்டுமழை பொழிய உத்தரவிட்டது, இதில் ஒரு குழந்தையும் ஏராளமான அப்பாவிமக்களும் பலியானார்கள். பிரிட்டனின் எம்16 விமானம் ஒன்று 1996ல் லிபியத் தலைவரை கொல்ல முயன்றதாகச் செய்திகள் வெளியானது. வெளிவராமல் மறைக்கப்பட்ட இதேபோன்ற நிறைய முயற்சிகளும் ஏராளம்.

2000களில் கடாபியின் ஆட்சி அமெரிக்காவுடன் இணக்கத்தை வளர்த்துக் கொண்டு அவர் அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஒரு பயனுள்ள பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்பு தரும் மனிதராகப் பார்க்கப்பட ஆரம்பித்த பின்னர் அவர் மீதான கொலை முயற்சிகள் இல்லாமல் போயின. இப்போது மறுபடியும் வட ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்கு ஒரு முட்டுக்கட்டையாக அவர் இருப்பதாய் கருதப்பட்டு, அமெரிக்காவின் பரந்த உளவு எந்திரம் அவரை வேட்டையாடுவதற்கும் அவர் உயிரைக் குடிப்பதற்கும் அவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் முரட்டுத்தன்மை மிகப்பெரும் கூறாக அமைந்திருக்கிறது. பயங்கரவாதத்தின் மீது போர் நிகழ்த்துவதாக ஒரு பக்கம் கூறிக் கொண்டு, பெரும் உயிர்ப்பலிகளையும், சித்திரவதை, அடக்குமுறைகளையும், தலைவர்களைப் படுகொலை செய்வதையும் தலைமையேற்று இது செய்து வருவது எளிதில் அணைக்கப்பட முடியாத ஒரு வன்முறை பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்த நிலைமைகள் தான் முன்னெதிர்பார்க்கமுடியாத அத்துடன் மிகப் பயங்கரமான பின்விளைவுகளை உருவாக்கக் கூடிய திக்கற்ற, குழப்பமான பழிக்குபழிவாங்கும் நடவடிக்கைகளுக்கான விளைநிலத்தை உருவாக்குகின்றன.

   

p