WSWS :Tamil : வரலாறு
Elizabeth Taylor and the melodrama of American life in the 1950s and 1960s
எலிசபெத் ரெய்லரும்
1950, 1960 களின்
அமெரிக்க வாழ்க்கையின் சுவை உணர்ச்சி நிறைந்த தன்மையும்
By
David Walsh
31 March 2011
போருக்குப்
பிந்தைய அமெரிக்க திரைப்பட நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான
எலிசபெத் ரெய்லர் தன்னுடைய
79வது வயதில் மார்ச்
23ம் திகதி லொஸ்
ஏஞ்சல்ஸில் உள்ள
Ceders-Sinai
மருத்துவ மையத்தில் அருகே நான்கு குழந்தைகள் இருக்கையில் காலமானார்.
பெப்ருவரி மாதம்
அவர் மருத்துவமனையில் இரத்தச் சேர்க்கை மாரடைப்பு சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டிருந்தார்.
1942ல்
பத்து வயதில் இருந்து திரைப்படங்களில் நடித்து வந்த ரெய்லர்
1950, 1960 களில்
அவர் தயாரித்த தொடர்ச்சியான திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சிறந்த வகையில்
இருந்த இத்திரைப்படங்களில் பல மேலாதிக்கம் கொண்ட அமெரிக்க அறநெறி மற்றும்
மதிப்புக்களின் இயல்பில் இருந்தன அல்லது அத்தகைய இடத்திற்குப் போட்டியிட்டன எனக்
கருதப்பட்டன.
பெரும் குறைபாடுகள்
இருந்த எழுத்துக்களுக்குக்கூட கூடுதலான அறிவார்ந்த தன்மை,
சிறப்பான வெளிப்பாடு
மற்றும் போட்டித்தன்மையுடைய மனித இயல்பு ஆகியவற்றை ரெய்லர் புகுத்தியிருந்தார்.
ஒரு
முக்கியமான தனிநபரின் வாழ்வை நம்முடைய கண்ணோட்டத்தில் ஆராய்வது என்பதற்கு முதலில்
அவர் வாழ்ந்த சகாப்தம் மற்றும் சமூக சூழ்நிலை ஆராயப்பட வேண்டும்.
இது குறிப்பிடத்தக்க
வகையில் ஹாலிவுட் திரைப்பட முறைக்குள் முக்கிய திரைப்பட நடிகர்களுக்கு பொருந்தும்.
எலிசபெத் ரெய்லரின்
திரைப்படங்களைத் திறனாய்வது என்பது அதிக அளவில் அக்குறிப்பிட்ட காலத்தின்
உத்தியோகபூர்வ அமெரிக்க வாழ்க்கை,
கலாச்சாரம்
ஆகியவற்றைத் திறனாய்வது ஆகும்.
லண்டனில்
வாழ்ந்து பணியாற்றி வந்த அமெரிக்கப் பெற்றோர்களுக்கு
1932ம் ஆண்டு
ரெய்லர் பிறந்தார்.
இரண்டாம் உலகப்
போருக்கு சற்று முன்னதாக குடும்பம் அமெரிக்காவிற்கு மீண்டும் வந்து லொஸ் ஏஞ்சல்ஸில்
வசிக்கத் தொடங்கியது.
மூன்று
ஆண்டுகளுக்குப் பின்னர்
There’s One Born Every Minute
என்ற அவரது முதல்
திரைப்படத்தில் எலிசபெத் தோன்றினார்.
1943ல் வெளிவந்த
Lassie Come Home
என்னும் படத்தில் அவர் சிறப்பான அடையாளத்தைக் கொண்டிருந்தார். இப்படம் புகழ்பெற்ற
ஒரு நாயைப் பற்றியது ஆகும். இதில் இவருடைய வாழ்நாள் நண்பராக விளங்க இருக்கும் ரோடி
மக்டோவலும் நடித்திருந்தார்.
ஜேன் அயர்
ரோபர்ட்
ஸ்டீவன்சனின் ஜேன் அயர் என்னும் இன்னும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த
1944ம் ஆண்டு
வெளியிடப்பட்ட படத்திலும் ரெய்லர்
Joan Fontaine
மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக
Rochester ஆக நடித்த
Orson Welles உடன்
நடித்திருந்தார்.
இதில் அவர் லோவுட்
இன்ஸிரியூட்டிலுள்ள இளம் ஜேனின் நண்பரான ஹெலன் பர்ன்ஸ் பாத்திரத்தில் நடித்தார்.
லோவுட்டோ ஒரு கொடூர அறக்கட்டளைப் பள்ளிக்கூடம் ஆகும்;
பள்ளியை நடத்திய,
பக்தி நிறைந்த
மதகுரு திரு ப்ரோக்கிள்ஹர்ஸ்ட்டின்
(ஹென்ரி டானியல்),
ஓரளவு
மிருகத்தனத்தினால் ஹெலன் பர்ன்ஸ் காசநோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்.
இதன் தொடர்ச்சி
மிகவும் உருக்கமானது ஆகும்.
National
Velvet (கிளாரன்ஸ்
பிரௌன், 1944),
Life with Father (1947) — 1880
களில் இருந்த நியூ யோர்க்
நகரத்தைப் பற்றிய மைக்கேல் கர்ட்டிசின் எழுச்சி மிகு படம்,
வில்லியம் பொவல்
மற்றும் ஐரேன் டன்னுடன்)
— மற்றும்
Little Women (1949)
கதை மேர்வின் லேரோயினால்
மாற்றப்பட்டது, ஆகியவற்றிலும் சிறப்பாக நடித்தார்.
Father of the Bide (1950)
மற்றும் அதன் தொடர்கதையான
Father’s Little Dividend (1951)
ஆகியவற்றிலும் மிகத்
தேர்ந்த முறையில் அவர் நடித்தார். இரு படங்களுமே
Vincente Minnelli
ஆல் இயக்கப்பட்டன. இவற்றில் அவர்
Spencer Tracy, Joan Bennett
ஆகியோருடன் இணைந்து
நடித்தார்.
இவை அனைத்துமே அவர்
20 வயதாவதற்கு முன்
நடித்த திரைப்படங்கள் ஆகும்.
அவர்
வாழ்வின் மிகப் பிற்பட்ட பகுதியில் கொடுத்த பேட்டி ஒன்றில்,
தான் ஒரு நடிப்புப்
பாடப் படிப்பைக் கூட பயின்றது இல்லை என்றும் அவருடைய ஆசிரியர்கள் சக நடிகர்களும்
இயக்குனர்களும்,
“திரைத்தளத்தில்
இருந்த மக்களும்தான்”
என்று ரெய்லர்
குறிப்பிட்டார்.
அவருடைய நடிப்பு
“முற்றிலும்
உள்ளுணர்வைத்தான்”
அடிப்படையாகக்
கொண்டிருந்தது என்றும் வலியுறுத்தினார்.
பிந்தைய கருத்து
மிகையானது என்றாலும்,
அதிலும் ஓரளவு உண்மை
உள்ளது. ஏனெனில், தானே கற்றுக்கொண்ட ஒரு நடிகரின் வலிமைகளையும் குறைகளையும் அது
தவிர்க்க முடியாமல் சுட்டிக்காட்டுகிறது என்பதால், தன்னுடைய சொந்த முழு உணர்வுடன்
கூடிய சிந்தனை அல்லது உணர்வினால் ஒரு முக்கிய இயக்கத்தை கொடுத்துத் திரைப்படத்தை
ஆக்கும் தன்மை இல்லாத நிலையில்,
ரெய்லர் நேர்த்தியான
இயக்குனர் மற்றும் பெரும் தேர்ச்சி பெற்ற சக நடிகர்களைத்தான் அதிகம் நம்பியிருக்க
வேண்டி இருந்தது.
சூரியனில்
ஒரு இடம்
அதே
உரையாடலில் ரெய்லர் மற்றொரு வாழ்நாள் நண்பராக வரவிருக்கும் நடிகர் மான்ட்கோமரி
கிளிப்ட்டுடன் நடித்து,
ஜோர்ஜ்
ஸ்டீவன்ஸினால் இயக்கப்பட்ட
A Place in the Sun (1951)
என்னும்
படப்பிடிப்பின்போதுதான்
“நடிப்பைப் பற்றித்
தீவிர அக்கறை கொள்ளத் தொடங்கினேன்”
என்று
குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும்
மேற்கூறப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தால் உறுதியாவது போல்,
இதுவும் ஒரு மிகையான
கூற்று ஆகும். A
Place in the Sun
க்கு முன்னதாக அவர்
“நாய்களுடனும்
குதிரைகளுடனும்தான்”
(லேசி பில்ம்ஸ்,
நேஷனல் வெல்வெட்)
நடித்ததாக ஓரளவு
நகைச்சுவையுடன் வலியுறுத்தினார்.
உண்மையில் அவர்
ஏற்கனவே பல திறமைவாய்ந்த ஹாலிவுட் மூத்த நடிகர்களாக பிரௌன்,
கர்ட்டிஸ்,
லேரோய் ஆகியோருடன்
கதைகள் வெகு கணிசமாக இல்லையென்றாலும்,
நடித்துள்ளார்.
சூரியனில்
ஒரு இடம் உண்மையில்
1949 கடைசிப்
பகுதியில்தான் எடுக்கப்பட்டது;
அப்பொழுது
ரெய்லருக்கு 17
வயதுதான்.
Father of the Bride, Father’s Little Dividend
ஆகியவை முன்கூட்டியே
வெளியிடப்பட்டாலும்கூட,
ஸ்டீவன்ஸின்
தயாரிப்பிற்கு பின்னர் எடுக்கப்பட்டன.
இப்படங்களைப்
பார்க்கும் அடிப்படையில் பிந்தைய தொடர்ச்சியை விட அது சரியாக இருக்கும் எனத்
தோன்றுகிறது;
ஏனெனில் ரெய்லர்
மின்னெல்லி என்பவரின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கும் காலத்தில்
“நடிப்பைத் தீவிரமாக
எடுத்துக் கொள்ள தொடங்கினார்”
என்பது வெளிப்படை.
Father’s
Little Dividend
போன்ற எளிய
திரைப்படத்தில்கூட,
ரெய்லர் டிரேசியுடன்
பல காட்சிகளில் தோன்றியுள்ளார்;
அவை உணர்ச்சி
மிக்கவை,
நல்ல ஓட்டம் கொண்டவை,
அறிவார்ந்த
தன்மையையும் கொண்டவை.
ஆடம்பரச் செருக்கு
நிறைந்த மத்தியதர வர்க்க போருக்குப் பிந்தைய வாழ்க்கையில் கூட மின்னெல்லி ஒரு
குறிப்பிடத்தக்க இயக்குனர் ஆவார்.
டிரேசி-ரெய்லர்
தொடர்காட்சிகளில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று,
இயக்குனர்
உரையாடலுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்,
எந்த அளவிற்கு
சுமுகமாக இணைந்து நடிகர்கள் நடிக்கின்றனர் என்பதாகும்.
இப்படத் தயாரிப்பு
நடைபெறுகையில் கிட்டத்தட்ட
18 வயதாகியிருந்த
ரெய்லர் தன்னடக்கமாகவும் அதே நேரத்தில் அவருடைய வயதிற்கு அப்பாற்பட்ட
முதிர்ச்சியையும் கொண்டிருந்தார்.
எப்படிப்பார்த்தாலும்,
A Place in the Sun
அவருடைய நடிப்பு வாழ்வில் ஒரு திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை.
தியோடார்
ட்ரெசியரின் 1925ம்
ஆண்டு தலைசிறந்த நூலான
An American Tragedy
ஐ பல ஆண்டுகளாகப் படமாக்க
ஸ்டீவன்ஸ் விரும்பியிருக்க வேண்டும் என்பது வெளிப்படை.
இந்தப் புதினம் ஒரு
செல்வந்தக் குடும்பம் ஒரு ஆலையில் வேலை செய்துவந்த பெண்ணை மோசமாக எப்படி
நடத்துகிறது என்பது பற்றிக் கூறுகிறது;
அவன் அந்தப் பெண்
கருவுறச் செய்தபின்,
வசதியான உலகம்,
ஆடம்பரங்கள் நிறைந்த,
ஒரு செல்வம் மிகுந்த,
அழகிய வெறொரு
பெண்ணுடன் உறவைக் கொள்ளும்போது இவளை ஒரு தடையாகக் கருதுகிறான்.
எப்படியும்
வெற்றிபெற்றுவிட வேண்டும் என்றும் அமெரிக்க விழைவு பற்றி பெரும் குறையைக் காணும்
படைப்பு ஆகும் டிரெய்சருடையது.
இது பெரும்
கவனத்துடனும்,
அக்கறையுடன்
படிப்படியாக எழுதப்பட்டுள்ளது,
தவிர்க்க முடியாத
நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன.
நடிகப்
பெற்றோர்களின் மகனான ஜோர்ஜ் ஸ்டீவன்ஸ் திரைத் தொழிலில் ஒரு புகைப்படக் கலைஞராக
ஆரம்பித்தார்;
பல லாரல்,
ஹார்டி
குறும்படங்களில் செயல்பட்டு
1930 களின்
நடுப்பகுதியில் இயக்கவும் தொடங்கினார்.
(Alice Adams, Swing Time, Gunga Din)
இரண்டாம் உலகப் போரின் போது
அவர் படையெடுப்பின் மிக முக்கிய நாட்கள் பற்றிய படத் தொகுப்பை உருவாக்கும்
திரைப்படக் குழுவிற்குத் தலைமை தாங்கினார்;
அதாவது,
D-Day
எனப்படும் நோர்மண்டி
படையெடுப்பு, பாரிஸ் விடுதலை செய்யப்பட்ட தினம்,
எல்பே ஆற்றின் அருகே
அமெரிக்க மற்றும் சோவியத் படைகள் சந்திப்பது,
மற்றும் டாஹோ
(Dachau)
மரண
முகாம்களில் நாஜிக்களுடைய கொடூரங்கள் ஆகிய படப்பிடிப்பாகும்.
ஸ்டீவன்ஸின்
சிறப்பு இராணுவப் பிரிவில் இடதுசாரிகள்,
வருங்காலத்தில்
தண்டனைகுரியவர் பட்டியலில் இடம்பெறவுள்ள எழுத்தாளர் இர்வின் ஷா,
பெரும்புகழ்
பெற்றிருந்த நடிகர்-மேலாளர்
சேர் ஹெர்பெர்ட் பீர்போம் ட்ரீயின் பிரிட்டனில் பிறந்த பேரனும் ஒரு காலத்தில்
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் இருந்த இவன் மொபாட் ஆகியோரும் இருந்தனர்.
A Place
in the Sun
திரைப்படத்தில் பங்கு பெற்ற
பலரால் ஒரு இடதுசாரித் தயாரிப்புத் திட்டம் என்றுதான் காணப்பட்டது.
அதில் இணைத்
தயாரிப்பாளராக இருந்த மோபட்டைத் தவிர,
மற்றொரு
வருங்காலத்தில் தண்டனைகுரியவர் பட்டியலில் இடம்பெற இருக்கும் மைக்கேல் வில்சனும்
இருந்தார்;
இவர்
திரைப்படத்திற்கு இணை வசனகர்த்தாவாக இருந்தார்.
Shelley Winters, Anne Ravere
ஆகிய நடிகர்களும்
நடித்திருந்தனர்;
பிந்தையவர்
1970ல் அவருடைய
கடைசித் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் இதில் நடித்திருந்தார்;
ஏனெனில் இடைப்பட்ட
காலத்தில் கம்யூனிச எதிர்ப்புத் தீவிர வேட்டையாடல்கள் இருந்தன;
இடது கொள்கைகள்
தொடர்புகள் கொண்டிருந்த பலர் பாதிக்கப்பட்டனர்.
டிரெய்சரின்
புனைகதையில் இருந்த பேரச்சம் கொடுக்கும் சக்தி ஸ்டீவன்ஸின் படத்தில் காணப்படவில்லை;
ஆனால் அக்காலத்திய
படிப்பிடிப்பு முறையின் விளைவு அதை அவ்வாறு படம்பிடிக்க அனுமதித்திருக்காது.
நாடகத்தை
“நவீனப்படுத்துதல்”
என்ற பெயரில்
(நூலில் வந்த
நிகழ்வுகள் 1906ல்
நடந்தவை,
ஆனால் அது
குறிப்பிட்டுள்ளபடி
1925ல்தான்
வெளிவந்தது), A
Place in the Sun ன்
திரைப்பட ஆசிரியர்கள்
—இத்தலைப்பும்
மோபட்டினால்தான் கூறப்பட்டது—
காதல் ஈர்ப்பு
மற்றும் பாலியல் ஈர்ப்பைக் கூடுதலாக முன்னே நிறுத்தியிருந்தனர்.
டிரேசியரின்
கதாநாயகன் பணக்காரப் பெண்ணின் தனிப்பட்ட சிறப்புக்கள் மற்றும் சமூகத்தில்
“குறிப்பிடத்தக்க
நிலையில்”
உள்ள வசதியான மக்கள்
கொண்டுள்ள ஒளிமயமான,
வேடிக்கைகள் நிறைந்த
வாழ்வு என்பவை இணைந்த வகைக்காக உந்துதல் பெறுகிறான்.
பெண் மிகவும்
வசீகரமானவள்,
எல்லாவற்றிற்கும்
மேலாக அவள் அத்தகைய வாழ்வைப் பிரதிபலித்து உருவகப்படுத்தி நிற்கிறார்.
உண்மையில் ஓரளவிற்கு
ட்ரெசியிரின் கதாநாயகன் அவளிடம் அத்தனை குணநலன்களையும் உள்ளதாகக் கூறுகிறான்,
ஏனெனில் தான்
வேறுவித வாழ்வைக் கொள்ள வேண்டும் என அவன் தீவிரமாக விரும்புகிறான்.
ஆனால்
நிலைமை ஸ்டீவன்ஸின் படைப்பில் அவ்வாறு இல்லை.
ரெய்லர் இயல்பாகவே
வசீகரத்துடன் ஈர்க்கும் தன்மையைக் கொண்டிருந்ததால்,
இவளைப் பற்றிய
உணர்வின் ஆழ்ந்த தன்மையினால் மட்டுமே கிளிப்ட் பாத்திரம் தன் விதிப்படியான
விருப்புரிமையைக் கொள்கிறான் என்ற முடிவிற்கு நாம் வரக்கூடும்.
இவ்விதத்தில் அதைப்பற்றிய முழு உணர்வு ஒருவேளை இல்லாத நிலையில்,
A Place in the Sun
ன் திரைப்பட ஆசிரியர்களும் இயக்குனரும் ஏற்கனவே போருக்குப் பிந்தைய அமெரிக்கப்
பிற்போக்கு சிந்தனைச் சூழலுக்கு உரிய சலுகைகள் கொடுத்தனர் போலும்.
திரைப்படங்களில்
பொருளாதாரம் உளரீதியான வாழ்வைக் கருத்திற்கொள்ளும்போது பொருளாதாரம் அதிக அளவு
மறைந்துவிடும்;
இது படைக்கப்படும்
படங்களை தீவிர பாதிப்பிற்கு உட்படுத்தும்.
தெரியாமலேயே ரெய்லர்
அத்தகைய மாற்றத்திற்கான கருவிகளில் ஒன்றானார்.
ஆயினும்கூட,
டிரெசியரின்
மூலக்கதையின் முக்கிய வலு தக்கவைக்கப்பட்டுள்ள தன்மைக்கு ஏற்ப,
ஸ்டீவன்ஸ் மற்றும்
பிறரின் பங்களிப்புக்கள் அக்கறைக்குரியது என்னும் விதத்தில்,
A Place in the Sun
பல விதங்களில் ஒரு வலுவான,
முக்கியப் படைப்பாக
உள்ளது.
திரைப்படங்களில் வயதானதிற்குப் பின் இத்தகைய சிறப்பான தொடக்கத்திற்கு பின்னர்
ரெய்லர் பெரும்பாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு சிறிய படங்களுக்குத்தான்
தள்ளப்பட்டார்.
அதில்
குறிப்பிடத்தக்க விதிவிலக்கு ஒருவேளை
Ivanhoe (1952, Richard Thorpe)
எனலாம்.
ரிச்சர்ட்
ப்ரூக்ஸின் Last
Time I Saw Paris (1954)
ம் அது பெரும் வெற்றியைப்
பெறவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
அப்படியும் அதன்
இறுதி மூலம்,
F.Scott Fitzgerald
கதை,
மற்றும் போருக்குப் பிந்தைய
காலத்தில் உணர்வு செயலற்றுப் போகிறது என்ற கருத்து ஆகியவை சில பயனுடைய எதிரொலிகளைக்
கொடுக்கப் போதுமானவையாக இருந்தன.
இப்படத்தில் ரெய்லர்
அவருடைய வயதான 21
ஐ ஒட்டி இருப்பதைவிட
மிகுந்த முதிர்ச்சியைக் காட்டி வசீகரமாக உள்ளார்.
(ரோஜேர் மூருடன்
நடிக்கும் காட்சிகளில் ரோஜேர் மூர் இவரை விட ஐந்து வயது அதிகமானவர் என்றாலும்கூட
படத்தில் மிக இளமையுடன் காட்சியளிப்பது வேடிக்கையானது).
ஜயன்ட்
மற்றொரு
ஜோர்ஜ் ஸ்டீவன்ஸின் தயாரிப்பான
1956ல்
வெளியிடப்பட்ட
Giant ல்
ரெய்லருக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது.
டெக்சாசில் கால்நடை
பண்ணைக் குடும்பத்தின் பல தலைமுறைகள் பற்றிய கதையைக் கூறிய இத்திரைப்படம்
19ம் நூற்றாண்டு
மெக்சிக்கோவில் இருந்து நிலத்திருட்டு பற்றி பல வினாக்களை எழுப்பியது;
மேலும் அமெரிக்கா
மெக்சிக்கர்களை தற்பொழுது நடத்தும் முறை பற்றியும் வினாக்களை எழுப்பியது.
எண்ணெய் வள ஏற்றம்,
அதையொட்டி
பெட்ரோலியத் துறையில் குறிப்பான மாற்றம் ஆகியவை பற்றி
Giant தீட்டிய
சித்திரம் அவ்வளவு நயம்பட இல்லை.
சற்றே கடினமாகவும்,
உழைத்து
அளக்கப்பட்டதாகவும்,
A Place in the Sun
போல் நெருக்கமாகவோ ஆழ்ந்தோ இல்லாவிடினும்
(ஆனால் தியோடர்
ட்ரெய்சரின் இடத்தை எட்னா பெர்பர் எடுத்துக் கொண்டுள்ளார்),
மூன்று மணி நேரத்
திரைப்படம் ஒப்புமையில் தற்கால அமெரிக்க வாழ்வு,
அதன் வேர்களைப்
பற்றி பெரும் குறைகூறலைக் கொண்டிருந்தது.
அடுத்து
ரெய்லர் முன்னாள் ஹாலிவுட் பத்துப் பாதிப்பாளர்,
பின்னர் ஒற்றுத்
தகவல் கொடுத்த இயக்குனர் எட்வர்ட் ட்மிட்ரிக்குடன்
Raintree County
யில் நடித்தார்;
உள்நாட்டுப் போர்
சகாப்தத்தைப் பற்றி அதிகம் நினைவில் இருக்க வேண்டிய தேவையில்லாத திரைப்படம் இது.
துணை நட்சத்திரம்
மான்ட்கோமரி கிளிப்ட், மே
1956ல் ஒரு தீவிர,
உடலழகை மாற்றிய வாகன
விபத்தில் துயருற்றார்
(சம்பவ
இடத்திற்கு ரெய்லர் வந்து அவர் அதிர்ச்சியடையவிடாமல் தடுத்தார் எனக் கூறப்படுகிறது).
இந்நிகழ்வு
கிளிப்ட்டை பெருகிய முறையில் மதுபானம் மற்றும் மாத்திரைகளை நம்பகமாகக் கொள்ள வைத்து,
அதையொட்டி
1966ல் அவர்
முன்கூட்டிய மரணத்தையும் ஏற்படுத்தியது.
1950
களில் ஹாலிவுட்
திரைப்படங்களில் வரலாற்று,
சமூக உட்பார்வைகளின்
தரம் (கட்டாயப்படுத்தப்பட்டு)
சரிந்தது.
இறுதியில்
கேளிக்கைத்துறையில் இடதுசாரி என்று கருதப்பட்டவர்கள் அனைவரும்
குற்றவாளிகளாக்கப்பட்டதாலும்,
கம்யூனிச எதிர்ப்பு
அகற்றுதல் முறைகளின் விளைவினால் எனலாம். இத்துடன் கூட உணர்வு வகை மற்றும்
தொழில்துறையில் ஆடம்பர நிலையில் முன்னேற்றமும் ஏற்பட்டது.
பல ஹாலிவுட்
திரைப்படங்கள் “வாழ்க்கையைவிட
பெரியதாக”
ஒரு புறம் வந்ததற்கும்
திரைப்படத் தயாரிப்பாளர்களின் இடர்களுக்கும் இருந்த உறவுகளைத் தெரிவிக்கின்றன
என்பதுடன்,
மறுபுறத்தில் உண்மை
நிலை வாழ்க்கையை எதிர்கொள்வதில் உள்ள இடர்பாடுகளும் புலனாயின.
வாழ்க்கையின் சில அடிப்படை சமூகப்-பொருளாதார
உண்மைகளை கூறுவது கலையுலகில் ஏற்கத்தக்கது இல்லை என்ற நிலைமையில்,
ஆனால் வாழ்வில்
தீவிரமும் முரண்பாடுகளும் அகன்றுவிடவில்லை என்ற நிலையில்,
உணர்ச்சிபூர்வ
வகையில் சுவையூட்டும் கூறுபாடு என்பது ஒரு விளைவாகக் கூட இருக்கும்.
Douglas Sirk (All That Heaven Allows, Written on the Wind, Imitation of Life)
ஆகியவற்றில்
இடதுசாரியான ஜேர்மனியில் இருந்து குடியேறிய
1950 களின்
சுவையூட்டு உணர்வு கணிசமான கலை மற்றும் சமூகத் திறன் பற்றிய உயர்வுகளையும்
கொண்டிருந்தது.
ரெய்லர்
நடித்த படங்கள் சிர்க்கின் படைப்பில் இருந்து துல்லியமான உட்பார்வைத் தரத்தை
ஒருபொழுதும் அடைந்ததில்லை;
ஆனால் மொத்தத்தில்
அவை அமெரிக்க வாழ்வின் சிக்கல்கள்,
சங்கடங்கள் பற்றி
நினைவிற்கொள்ளத்தக்க நீடித்த கருத்துக்களைத்தான் பிரதிபலித்தன.
தகரக்கூரையில் பூனை
Cat on a
Hot Tin Roof
என்பதின் ரிச்சார்ட்
ப்ரூக்ஸ் கொடுத்த பதிப்பு,
பல நேரம் மடத்தனமாக,
ஒவ்வாத தன்மைகளைக்
கொண்டிருந்தாலும்
(அல்லது
அவற்றினால்தானோ?),
இத்தகைய
முயற்சிகளின் மையத்தில் உள்ளது.
டெனசி வில்லியம்ஸ்
நாடகத்தைத் தளமாகக் கொண்ட இப்படம் பிரிக்
(பால் ந்யூமன்)
மற்றும் மாகி பொலிட்
(ரெய்லர்)
என்னும் இளம்
திருமணமான தம்பதிகள் மணமகனின் செல்வம் படைத்த மிசிசிபி
“பண்ணைக்குச்”
சென்றது பற்றியதில்
குவிப்பைக் காட்டுகிறது.
ஒரு முன்னாள்
நட்சத்திர விளையாட்டு வீரரான ப்ரிக் மதுபானத்திற்கு திரும்பி அவருடைய மனைவியின்
பாலியல் உணர்வுகளை நிராகரிக்கிறார்.
பின் அவர் தன்னுடைய
சிறந்த நண்பரின் தற்கொலைக்கு மனைவிமீது குறைகூறுகிறார்.
இதற்கிடையில் பிறிக்கின் தந்தை
“பெரும் தந்தை’
(பர்ல் ஐவ்ஸ்)
புற்றுநோயினால்
இறந்து கொண்டிருக்கிறார்;
பல குடும்ப
உறுப்பினர்கள்,
பிரிக்கின் சகோதரர்
கூப்பர் (ஜாக்
கார்சன்)
மற்றும் அவருடைய பெரும்
சந்தர்ப்பவாத மனைவியும் சொத்தைப் பிரித்துக்கொள்வதற்கு நிலைப்பாடு கொள்கின்றனர்.
ரெய்லர்
வியக்கத்தக்க வகையில் மாகி பாத்திரத்தின் ஆடம்பரமான,
இழிந்த தன்மையை
வெளிப்படுத்துவதுடன் பொதுவாகவே அனைத்துப் பாத்திரங்களும் காட்சிகளை நகர வைத்தாலும்,
திரைப்படம் அமெரிக்க
வாழ்வு,
குறிப்பாக தென்பகுதியைப்
பற்றி ஏதோ கூறவிரும்புகிறது.
சிவில் உரிமைகள்
இயக்கம் மான்ட்கோமரியின் வகையில் வெடிக்கும் நேரம் அது;
அலபாமாவில் பஸ்
புறக்கணிப்பு
(1955),
அர்கன்சாசில் இன ஒருங்கிணைப்பு நெருக்கடி
(1957) காலம் அது.
ஒரு
பதட்டத்துடனும் சீற்றத்துடனும்
Cat on a Hot Tin Roof
சமூகப் பிற்போக்குத்தனம்,
ஊழல்,
இனவெறி
(உட்குறிப்பின்
மூலமாக என்றாலும்),
ஒப்புமையில் கவனத்தை
ஈர்க்கும் வகையில் குவிப்பைக் கொண்டது.
“Big Daddy”
தன்னுடைய பரந்த வீட்டில் நிலவும்
“பொய்த் தன்மையின்
துர்நாற்றம்”
பற்றி குமுறுகிறார்,
மாகி கூப்பர்
மற்றும் அவருடைய மனைவியையும் பணத்தைக் குவித்தல்,
பேராசை
போன்றவற்றிற்குக் கண்டிக்கிறாள்.
பிரிக் தன்னுடைய
தந்தை உண்மையான மனித உணர்வைக் காட்டுவதற்குப் பதிலாக
“மில்லியன் டாலர்கள்
மதிப்புடைய பொருட்களைத்தான் வாங்கினார்”
என்று
குறைகூறுகிறார்.
என்னுடைய
கருத்தில் இத்திரைப்படம்
Elia Kazan உடைய
A Streetcar Named Desire (1951)
ஐவிட ஆர்வத்தையும்
ஆற்றலையும் கணிசமாகக் கொண்டுள்ளது.
அக்கதை ஒரு
வில்லியம்ஸின் நாடகத்தைத் தழுவியது;
அது மூலத்தோடு
நெருக்கமாக இருந்து தன்னைத்தானே குறைகூறிக்கொள்ளுவதில் அதிக களிப்பு காட்டுகிறது.
சோகம் ததும்பிய
நிலையில் Cat On
the Hot Tin roof
படத்தயாரிப்பின்போது மார்ச்
1958ல்
டேலரின் மூன்றாம் கணவர் மைக் டோட்,
திரைப்பட,
நாடகத் தயாரிப்பாளர்
ஒரு விமான விபத்தில் இறந்து போனார்.
John
O’Hara
வின் புனைகதை ஒன்றைத்
தளமாகக் கொண்ட
Butterfield 8 (Daniel Mann, 1960),
ஒரு தவறாகிவிட்ட அறநெறி
கூறும் படைப்பு ஆகும்;
ஆனால் ஒரு
மன்ஹாட்டன் விலைமாதுவாக ரெய்லர் காட்டும் துடிப்பு,
காதலைக் கண்டு அதன்
சோகமுடிவையும் காணும் பெண்ணாக நடித்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.
லாரென்ஸ் ஹார்வி
இதில் ஒரு செல்வம் படைத்த வணிகராகவும் யேல் பட்டதாரியாகவும் வருகிறார்;
முதலில் ரெய்லரின்
நேசத்தை விலைக்கு வாங்க முற்படுகிறார்.
அவருடைய நண்பர்,
“நீ ஒரு மட்டமான
மனிதன்…
ஒரு மிக இழிந்த,
அழுகிய தகல்,
உன் போக்கின்படி
எதுவும் வராது,
உனக்கு ஏதும்
கிடைக்காது,
நீ அழிந்து போவாய்.”
என்று கூறுகிறார்.
நியூயோர்க்கின்
ஆடம்பரம் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை பற்றித் தீட்டப்பட்டுள்ள சித்திரம்
ஒப்புமையில் இறுக்கமாக உள்ளது.
ஜோசப்
மன்கீவிக்சின்
Cleopatra (1963)
முக்கியமாக அது எடுக்கப்பட்டதற்கான பாரிய செலவிற்காகவும்
(தற்கால டாலர்களில்
300 மில்லியன் மதிப்பு)
ரெய்லர்,
ரிச்சார்ட்
பேர்ட்டன் காதல் துவங்கியதில் அதன் பங்கிற்காகவும் நீடித்த புகழைப் பெற்றது.
அக்காலத்தில்
எடுக்கப்பட்ட பல பெரும் காவியங்களைப் போல் கிளியோபாட்ரா
(நான்கு மணி
நேரத்திற்கும் மேலாக அதன் மீட்பிக்கப்பட்ட பதிப்பில் ஓடுவது),
அதன் மிகை,
கூடுதலாகக் கூறல்
ஆகிய போக்கைக் கொண்டிருந்தது.
ஆயினும்கூட,
புகழ்பெற்ற அரசியின்
ரோமானியர் ஜூலியஸ் சீசருடனான
(ரெக்ஸ் ஹாரிசன்)
மற்றும் மார்க்
ஆன்டனியுடனான (துடிப்பு
நிறைந்த பேர்ட்டன்)
உறவின் நாடகம்,
கிறிஸ்துவுக்கு
முந்தைய நூற்றாண்டில் எகிப்திய சிம்மானசனத்தின்மீது தன்னுடைய உரிமைகளை
முன்னேற்றுவிக்க நடத்தும் போராட்டத்துடன் இணைந்த நிலையில் இன்னமும் கூட உறுதியான
ஈர்ப்பைக் கொண்டுள்ளது.
கணக்கிலடங்காத் திறமை மிகுந்த நடிகர்கள் மார்ட்டின் லாண்டௌ,
ஹ்யூம் க்ரோனின்,
கென்னெத் ஹை,
மக்டோவல் இன்னும்
பிறர் உட்பட,
இருந்தது படைப்பின்
தன்மையை அதிகப்படுத்தியது;
அதேபோல்தான்
அசாதாரணமான அரங்க அமைப்பும் மொத்தக் கலைப் படைப்பும் இருந்தன.
ரெய்லர்
கிளியோபாட்ராவாக
300 அடிமைகளால்
ரோமாபுரிக்கு மூன்று மாடி உயர கறுப்புக் கல் ஸ்பிங்ஸில் அமரவைக்கப்பட்டுத் தள்ளிக்
கொண்டுவருதல் சாதாரணச் செயல் அன்று.
அக்காலத்திய
ஹாலிவுட் படங்கள்,
அவற்றின் விந்தையான
தன்மையில் நிகழ்வுகள் பற்றி உண்மையான நிலையைக் காட்ட விரும்பின அல்லது உண்மை என்று
கருதப்பட்டவற்றைக் காட்ட விரும்பின.
திரைப்படத்
தயாரிப்பாளர்கள் அவர்களுடைய சமகாலத்தியவர்களைவிடக் கூடுதலான வரலாற்று உணர்வைக்
கொண்டிருந்தனர்.
ஆனால்
அவர்களின் துரதிருஷ்டம் ரெய்லரும் பேர்ட்டனும் தற்கால
“புகழ்வாய்ந்த
தம்பதிகளில்”
ஒருவராயினர்.
திருமணமாகி இருமுறை
விவாகரத்து செய்த நிலையில் அவர்களுடைய சொந்த வாழ்வே செய்தி ஊடகத்தினால் பல முறையும்
புதிய தவறான தகவல்கள் கொடுப்பதற்காக அறியப்பட்டன;
இந்நிலை ஆகஸ்ட்
1984ல்
58 வயதில் பேர்ட்டன்
இறக்கும் வரை கிட்டத்தட்ட நீடித்தது.
எப்படிப்பார்த்தாலும்,
இருவரின்
வாழ்க்கைச்சரித நூல்
2010ல்
வெளியிடப்படுவதற்காக வந்திருந்த பேர்ட்டன் ரெய்லருக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு
உட்பட அடங்கியும்,
அவர்கள் உண்மையில்
ஒருவரை ஒருவர் நேசித்தனர்.
ரெய்லர் நூலை
எழுதியவர்களிடம் கூறினார்:
“அவர் மிகவும் கருணை
உடைய,
நகைச்சுவை மிகுந்த,
நயமான தந்தையாக
இருந்தார்.
என்னுடைய குழந்தைகள்
அவரைப் பெரிதும் போற்றினர்.
கவனம் காட்டுதல்,
நேசித்தல்—அதுதான்
ரிச்சர்ட்.
அந்தப் பிணைப்பை
நாங்கள், அவர் கடைசி மூச்சுவரை தொடர்ந்திருந்தோம்.
என் உள்ளத்தில்
மூன்றாம் மற்றும் இறுதித் தடவையாக அவரைத் திருமணம் செய்வேன் என எப்பொழுதும்
நம்பியிருந்தேன்….ரோமில்
இருந்த முதல் கணங்களில் இருந்து நாங்கள் எப்பொழுதும் வெறித்தனமாக,
சக்திவாய்ந்து
காதல்வயப்பட்டிருந்தோம்.”
அவர்களுடைய
திறமையும்,
இகழ்வும் ரெய்லர்
மற்றும் பேர்ட்டனுக்கு
1960 களில் பெரும்
பணத்தைச் சம்பாதித்தன
($88 மில்லியன்
அல்லது இன்றைய மதிப்பில்
$600
மில்லியனுக்கும் மேல்);
ஆனால் திரைப்பட
நிறுவனங்களுக்கு இன்னும் அதிகப் பணத்தைக் கொடுத்தது.
ஒரு ஆதாரத்தின்படி,
கால அவகாசம் தெளிவு
இல்லை என்றாலும்,
“அமெரிக்கத்
திரைப்படத் தொழிலின் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதி…
இவர்களில் ஒருவர்
அல்லது இருவரும் நடித்த படங்களில் இருந்து வந்தது.”
அவர்களுடைய
புகழ்பெற்றவர்கள் என்னும் அந்தஸ்து மற்றும் தொழில்துறைக்கு அவர்களுடைய நிதிய
முக்கியத்துவம் ஆகியவை தோற்றுவித்த அழுத்தங்கள் ஐயத்திற்கு இடமின்றி அவற்றின்
இடர்களைக் காட்டின.
ஒரு வெல்ஷ் நாட்டு
சுரங்கத் தொழிலாளியின் மகனான பேர்ட்டன் தன்னுடைய சொத்து,
வெற்றி பற்றி ஆழ்ந்த
இரட்டைக் கருத்துக்களை உணர்ந்திருக்கக்கூடும்;
கூறப்படாத
குற்றச்சாட்டு (ஒருவேளை
சுயக் குற்றச்சாட்டு)
இங்கு ஒரு பெரும்
பயிற்சி பெற்ற நடிகர்,
ஹாலிவுட்டின்
புகழிற்காக நாடக அரங்கிலோ,
கலைப்படைப்புத்
திரைப்படத்திலோ தீவிரமான பணியைக் கைவிட்டுவிட்டார் என்பதேயாகும்.
வெர்ஜீனியா
வொல்பைப் பற்றி எவர் கவலைப் படுகின்றனர்?
1960களில்
இவ்விருவரும் ஏழு படங்களில் ஒன்றாகத் தோன்றினர்;
The V.I.Ps. (1963), The Sandpiper (1965),
ஷேக்ஸ்பியரின்
The Taming of the Shres (1967).
கிறிஸ்டோபர் மார்லோவின்
டாக்டர் பாஸ்டஸ்
(1967), The Comedians (1967) (டுவலியர்
ஆட்சியின் போது ஹைட்டியைப் பற்றிய கிரஹாகம் க்ரீனின் நாடகத்தைத் தளமாகக் கொண்டது)
மற்றும்
Boom! ஆகியவை இதில்
அடங்கும்.
ஆனால் மிகவும் நினைவிற்
கொள்ளத் தக்கது
Who’s Afraid of Virginia Woolf? (1966)
ஆகும்.
இது மக்
நிக்கோல்ஸால் இயக்கப்பட்டு எட்வர்ட் ஆல்பி நாடகத்தைத் தளமாகக் கொண்டது ஆகும்.
இந்த நன்கு
அறியப்பட்ட படைப்பு,
முதலில்
பிராட்வேயில்
1962ல் நாடகமாக
வந்தது,
ஒரு சனிக்கிழமை நள்ளிரவு-ஞாயிறு
அதிகாலையில் வரலாற்று இணைப் பேராசிரியர் ஜோர்ஜுக்கும்
(பேர்ட்டன்),
ஒரு புதிய
இங்கிலாந்துக் கல்லூரித் தலைவரின் மகளான அவருடைய மனைவி மார்த்தா
(ரெய்லருக்கும்)
இடையே நடந்த
நிகழ்வுகள் பற்றியதாகும்.
இருவரும் மற்றொரு
தம்பதியான நிக் மற்றும் ஹனிக்கு விருந்தளித்தனர்
(George Segal, Sandy Dennis).
மார்த்தா
அளவிற்கு மீறி குடித்து விடுகிறார்,
ஜோர்ஜை
அவமானப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்,
தனியாக
இருக்கும்போதோ அல்லது மற்றவர்கள் முன்போ அவருடைய பல உத்தியோகங்கள் பற்றியும்
உடல்ரீதியான குறைகளைப் பற்றியும்.
ஜோர்ஜ் மார்த்தாவைக்
கொலை செய்வது பற்றிக் கற்பனை செய்கிறார்,
ஒரு கட்டத்தில் ஒரு
துப்பாக்கியைச் சுட்டிக்காட்டிய வகையில்;
அது ஒரு
குடையைத்தான் விரிக்கிறது.
அவள் நிக்குடன்
சரசமாடுகிறாள்,
ஜோர்ஜ் ஹனியுடன்
நடனமாடுகிறார்.
விடயங்கள்
மோசமாகின்றன,
ஒரு சாலையோர
விடுதியில்—அங்கு
நடனமும் குடியும் தொடர்கின்றன.
ஜோர்ஜ்
மற்றும் மார்த்தாவின் மகன் பற்றிய பேச்சு மீண்டும் இரவில் பல நேரமும் வருகிறது.
இறுதியில்தான்
நிக்கும் பார்வையாளர்களும் இந்தத் தம்பதியினர் கூறப்படாத காரணங்களுக்காக
குழந்தையையே கொண்டிருக்கவில்லை என்பது தெரிய வருகிறது.
ஆனால் நடப்போ
கற்பனையான குழந்தை பற்றிய சடங்குத்தனமான,
நச்சுவாய்ந்த
விளையாட்டு ஆகும்.
இத்திரைப்படத்தைப் பொறுத்தவரை பல தொந்தரவு கொடுக்கும் நடக்கவியலாக் கூறுபாடுகள்
நிறைய உள்ளன--அதில்
குழந்தை பற்றி நம்பகத் தன்மை அற்ற விவகாரமும் உள்ளது;
நிக்கோல்ஸ்
நடப்புக்களுக்கு உளரீதியான,
சமுதாய ரீதியான
முக்கியத்துவம் பற்றி அதிகம் அடிக்கோடிட்டுக் காட்டவும் இல்லை.
“வெர்ஜீனியா
வொல்பின் மூன்றாம் பகுதி”
என்று அக்காலத்தில்
திறனாய்வாளர்
Andrew Sarris
எழுதினார் (“மிகச்
சிறந்த நாடகம் வாழ்வது பற்றியும்,
வாழ்வு பற்றி ஒரு
மோசமான நாடகமும்”),
“வெறித்தன
விளையாட்டாக சிதைந்து விடுகிறது”
என்று ஒரு
கட்டுரையில் எழுதியுள்ளார்;
அதில் சிறிது உண்மை
இல்லாமல் இல்லை.
ஆனால்
நாடகத்திலும்,
திரையிலும் சில
உள்ளன;
கௌரவமான வாழ்வு என
அமெரிக்காவில் உள்ளதில் காணப்படும் பாசாங்குத்தனம்,
தவறு,
மற்றும்
வெற்றுத்தனத்தின்மீது அது காட்டும் சீற்றத்தினால்.
உண்மையில் ஆல்பீயின்
நாடகம் உத்தியோகபூர்வமாக அளிக்கப்படும் அமெரிக்கா என்பது பொய்கள்,
போலித்தோற்றங்களில்
வேர்களைக் கொண்டுள்ளது,
ஒருவருடைய சொந்த
வாழ்வு மற்றும் பிறரைப் பற்றிய பொய்கள்,
போலித்தோற்றங்களை
ஒட்டி ஏதேனும் தீர்வு காணப்பட வேண்டும் என்றதில் இவை அகற்றப்பட வேண்டும்.
(ஜோர்ஜ் மற்றும்
மார்த்தா என்னும் பெயர்கள் ஜோர்ஜ் மற்றும் மார்த்தா வாஷிங்டன் என்னும்
அமெரிக்காவின் “நிறுவனத்
தந்தை,
தாய்”
இவற்றைக் குறிப்பதாக
விளக்கம் கூறப்படுகிறது;
ஒரு செவிவழிச்
செய்தியின் படி முந்தையவரால்
“பொய் கூற இயலாது”)
பேர்ட்டனின்
நடிப்பு அபாரமானது.
ரெய்லரிடம்
“பேர்ட்டனுடைய வீரம்
நிறைந்த அமைதி காணப்படவில்லை,
குறிப்பாக அவள்
கேட்டு விடையளிக்க வேண்டிய கணங்களான அபூர்வமான அமைதியான கணங்களில்—அவைதான்
நடிப்பில் தலைசிறந்த தேர்வுகள் ஆகும்.”
ஆனால் ரெய்லர்
பேர்ட்டன் கூடுதல் திறமையுடன் நடித்தார் என்பதை ஒப்புக் கொள்ளுவதில் முதலில்
நிற்பார்;
ஆனால் அவருடைய நேர்மையும்,
நிலைப்பாடும் அதிக
சிறப்பைக் கொண்டவை.
சொல்லப்
போனால்,
15 ஆண்டுகளுக்கு
சற்றும் மேலான காலத்தில்,
ரெய்லர் ஹாலிவுட்
சிறு நட்சத்திரம் என சிறு பாத்திரங்களில்
Love is Better Than Ever, The Girl Who Had Everything
என்பதில் இருந்து
Who’s Afraid of Virginia Woolf?
வில் குறைந்தபட்சம்
அதிருப்தி அளிக்கக்கூடிய,
காயப்படுத்தக்கூடிய
பாத்திரத்தை அளித்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.
உலகில் ஏற்பட்ட
மாறுதல்களும் அமெரிக்காவில் ஏற்பட்ட மாறுதல்களும் இதையொட்டி பலவற்றைக்
குறிப்பிடுகின்றன,
ஆனாலும் கூட….
இதற்கு
மாறாக
1951ல் பேர்ட்டன்
ஸ்ட்ராட்போர்டில் ஷேக்ஸ்பியரின் நான்காம் ஹென்றி முதல் பகுதியில்
“ஒரு திறனாய்ந்து
போற்றப்பட்ட பாத்திரத்தில் பால்ஸ்டாபாக ஆன்டனி க்வேலுக்கு எதிராக நடித்திருந்தார்.”
அக்காலத்திய பெரும்
பிரிட்டிஷ் நடிகர்கள் குழுவில் அவர் ஒரு உறுப்பினராக இருந்தார்—அதில்
ஜோர் கீல்குட்,
மைக்கேல் ரெட்க்ரேவ்,
பால் ஸ்கோபீல்ட்,
அலெக் கினெஸ்,
க்வேல் இன்னும்
பிறர் இருந்தனர்.
அந்த தசாப்தத்தில்
மிக அதிக கலை,
அறிவார்ந்த
தன்மையில் அதிக தூரத்தைக் கடந்தது யார்
–பேர்ட்டனா ரெய்லரா?
ஜூன்
1966ல்
Who’s Afraid of Virginia Wolf
வெளியிடப்பட்ட காலத்தில்
ரெய்லர்,
வியத்தகு முறையில்
34 வயதுதான்.
இது அவருடைய கடைசி
முக்கிய திரைப்படம் ஆகும்.
இதன் பின்னர்
இயக்குனர் ஜசப் லோசியுடன்
(Boom!, Secret Ceremony
என்று
1968ல் வெளியானவை)
இரு படங்களில்
நடித்துள்ளார்;
ஏற்கனவே அவருடைய
வாழ்க்கைப் போக்கின் அதிக ஆர்வம் இல்லாத கட்டத்தில் நுழைந்துவிட்டார். அதாவது
ஜோர்ஜ் ஸ்டீவன்ஸுடன் ஒரு களைப்பான படத்தில்
(The Only Game in Town, 1970)
நடித்தார்;
ஆனால் அதற்குப் பின்
அதிகம் ஒன்றும் இல்லை.
இதற்கான முக்கிய
தவறு ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்புக்களில்தான் உள்ளது. அவை கலையளவில் சிதைந்து,
இறுதியில் பெரும் நிறுவனங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டது.
தன்
வாழ்வின் பெரும்பகுதியை தான் நெருக்கம் என்று உணர்ந்த மக்கள்,
நிலைப்பாடுகளுக்காக
ரெய்லர் செலவழித்தார்.
தகவல்கள் தவறு
இல்லையென்றால்,
கிளிப்ட்,
ராக் ஹட்சன்,
மைக்கேல் ஜாக்சன்
இன்னும் “வெளிநபர்கள்”
என்று அவர்
உணர்ந்திருந்த பலருக்கு அவர் கொண்டிருந்த பிணைப்பு என்பது அதனால் இடர் உற்றவை
என்பது உண்மையாகத்தான் தோன்றுகிறது.
HIV, AIDs
தொடர்புடைய திட்டங்களுக்கு
1984லேயே
அவர் ஊக்கம் அளித்தார்;
அந்த நேரத்தில்
இந்நோய் அதிகம் அறியப்படவில்லை.
1985ல் ஹட்சனின்
இறப்பு அவருடைய உறுதிப்பாட்டை அதிகப்படுத்தியது.
1959ல் யூத
மதத்திற்கு அவர் மாறியது,
இஸ்ரேலிய நாட்டிற்கு
தவறாக,
திறனாயாமல் அவர் கொடுத்த
ஆதரவும்,
குறைந்த பட்சம்
அடக்குமுறையினால் பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள் என்ற அவருடைய உணர்வில் இருந்து
வெளிவந்தது ஆகும்.
எலிசபெத்
ரெய்லரின்
1950, 1960களின்
உடல் உழைப்பில்,
நீண்டகால அமெரிக்க
வாழ்வின் உணர்ச்சி மிகு படைப்பு எனக் கருதலாம்
(அதில் அவருடைய
காதல் அவதூறுகள் பலவும் உண்மை வாழ்வில் நடந்தவையே துணை அமைப்பு போல் ஆயின).
எந்தத்
தனிப்படைப்பும் பெரும் சிறப்பான உட்பார்வை கொண்டது அல்லது முழு வெற்றி அடைந்தது
என்று தனித்து நிற்கவில்லை;
ஆனால் பல
படங்களையும் காண்கையில் ஒரு சித்திரம் வெளிப்படுகிறது
—
ஒருதலைப்பட்சமாக,
சிதைந்த,
மேலோட்டமான
“உளரீதியான”
சித்திரம்
சமூகத்தைப் பற்றியது
(அதாவது பொருளாதார,
சமுதாய வாழ்வின்
உண்மையான உந்து சக்திகளை அது காட்டவில்லை.)
இச்சமூக
உலகில் வசிப்பவர்கள் சுறுசுறுப்புடன் உள்ளனர்,
தங்களை
வெளிப்படுத்திக்கொள்ள பயப்படுவதில்லை,
குறைகூறத் தயக்கம்
காட்டுவது இல்லை;
ஆனால் அவர்கள் ஊழல்,
பேராசை,
கவலை,
முறையோடு நிற்றல்,
இனப்பற்று,
போலி விசுவாசம்,
அந்தஸ்து நாடுதல்,
திருப்தியற்ற
அரிக்கும் தனிப்பட்ட உறவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு மட்டுமே
வெளிப்படையாகத் தெரிந்த வகையில் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் மிக அதிகமான,
ஒழுங்கற்ற
நடத்தையின் மூலம்—மதுவிற்கு
அடிமைத்தனம்,
பலவித அடிமைப்
பழக்கங்கள்,
பாலியலில் ஒழுங்கற்ற
தன்மை,
கற்பனையுலகில் பறத்தல்,
வன்முறை,
பைத்தியக்காரத்தனம்
கூட என.
இச்சித்திரம் மகிழ்ச்சி
கொடுப்பதாக இல்லை,
முற்றிலும் சீராக
இல்லை என்றால்,
இதன் பிழை
திரைப்படங்களிலோ,
தயாரிப்பாளர்களிடமோ
இல்லை.
எலிசபெத் ரெய்லர் போன்ற
முக்கிய நடிப்பவர்களிடமும் இல்லை;
சமூக ஒழுங்கில்தான்
உள்ளது. |