சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The war in Libya and the new scramble for Africa

லிபிய யுத்தமும், ஆபிரிக்காவிற்கான புதிய போட்டியும்

Chris Marsden
29 March 2011
Use this version to print | Send feedback

கேணல் மௌம்மர் கடாபி ஆட்சியின் கடுமையான ஒடுக்குமுறையிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவோம் என்ற தங்களின் வாக்குறுதியைப் பாதுகாப்பதற்காக மிகுந்த அக்கறைகொண்ட அணிகள் ஒன்றுகூடியிருக்கும் ஒரு கூட்டமாக, இலண்டனில் லிபியா மீது இன்று நடக்கும் சர்வதேச மாநாடு குறித்து, ஊடகங்களில் கடமையுணர்வுடன் எழுதப்படும்.

ஆனால் உண்மையில், அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் போஃக்ப் ராஸ்முசென், .நா சபை பொதுச்செயலாளர் பான் கீ-மூன் மற்றும் ஆபிரிக்க ஒன்றிய தலைவர் ஜீன் பிங் உட்பட 40 நாடுகளின் அரசு பிரதிநிதிகள், ஆபிரிக்காவிலேயே மிகப் பெரியதும், உலகளவில் ஒன்பதாவதுமான லிபிய எண்ணெய் வளங்களையும் மற்றும் கடாபிக்குப் பின்னர் லிபிய துண்டாடலின் கொள்ளைப்பொருட்களையும் பிடுங்கித்தின்பதில் பங்கெடுக்கவோ அல்லது அதற்கொரு அரசியல் போர்வையை கொடுக்க கழுகுகளைப் போல அங்கே கூடியுள்ளனர்.

எழுத்துக்களில் எழுதப்படவில்லை என்றாலும் ஒப்பந்தப்படி உண்மையில் அந்த கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலில், ஆட்சி மாற்றத்திற்கான உந்துதலின் அடித்தளத்தளமாக உள்ளது. அது அமெரிக்க உளவுத்துறையாலும் (CIA) மற்றும் அதிகாரத்திலிருக்கும் மேற்கத்திய உளவுத்துறை முகமைகளாலும் நீண்டகாலத்திற்கு முன்னரே தயாரிக்கப்பட்டிருக்கும் எதிர்தரப்பு சக்திகளை ஆட்சியில் அமர்த்தும்.

லிபிய இடைக்கால தேசியக்குழுவின் (TNC) சார்பில் கலந்து கொண்டவர்களில் அதன் உத்தேசிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரியாக, பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Phd) பெற்ற பின்னர் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக பேராசிரியராக இருந்து வந்த மஹ்மொத் ஜிப்ரில் கலந்து கொண்டார். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் ஆலோசனை நிறுவனங்களோடு தொடர்பு கொண்டிருந்ததும், இலண்டன் பொருளாதார பயிலகத்துடன் கூட்டிணைந்திருந்ததுமான கடாபியின் தேசிய பொருளாதார அபிவிருத்தி ஆணையத்திற்கு (NEDB) 2007இல் இருந்து அவர் தலைமையேற்றிருந்தார்.

லிபிய பொருளாதாரத்திற்குள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நுழைவதற்கு NEDB ஒரு முக்கிய நுழைவாயிலாக இருந்து வந்தது. 1973 வரையில் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்துவந்த வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு பொருளாதார பேராசிரியரான அலி தர்ஹௌனி, தேசிய இடைக்கால குழுவின் நிதிமந்திரியாக நியமிக்கப்பட்டார்.

எண்ணெய் கொள்கைகளுக்காக அதன் புதிய கண்காணிப்பு ஆணையமாக லிபிய எண்ணெய் நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பதாக கடந்தவாரம் தேசிய இடைக்கால குழு அறிவித்தது. இது துல்லியமாக லிபிய தேசிய எண்ணெய் நிறுவனத்தை ஓரங்கட்டுகிறது. லிபிய தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சொத்துக்கள் மார்ச் 17இல் .நா. பாதுகாப்பு சபையால் முடக்கப்பட்டன.

இலண்டன் மாநாட்டிற்கு முன்னதாக, கிளிண்டன் ஜிப்ரெல்லுடன் பாரிஸில் ஓர் ஆடம்பர ஹோட்டலில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார். ஜிப்ரெல் கடந்த வாரம் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியையும் சந்தித்தார்.

லிபிய ஏகாதிபத்திய தாக்குதலில் முக்கிய பங்காளர்களாக இருக்கும் அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்ஸூம் எதிர்கால கொள்ளைப்பொருட்களை அவற்றின் கட்டுப்பாட்டில் பெறுவதற்காக ஒன்டோடொன்று போட்டியிட்டு வருகின்றன. இந்த மோதல், இராணுவ நடவடிக்கையை யார் கட்டுப்படுத்துவது என்பதன்மீது ஒரு முரண்பாட்டிற்கு இட்டுச் சென்றுள்ளது. லிபியாவில் குண்டுவீசுவதில் பங்கெடுத்திருக்கும் கூட்டணியில் உள்ள அனைவரும் இதில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்ற பிரான்சின் முறையீட்டை விடுத்து, நேட்டோவின் கண்காணிப்பு இருக்கட்டும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர், அந்த விஷயத்தில் வாஷிங்டனும், இலண்டனும் வெற்றி பெற்றன.

எவ்வாறிருப்பினும், லிபியாவின் மீதான கட்டுப்பாட்டைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் அதிகமாக, பல விஷயங்கள் பணயத்தில் உள்ளன. ஏகாதிபத்திய சக்திகள் மத்தியகிழக்கு மற்றும் ஒட்டுமொத்த ஆபிரிக்கா முழுமையையும் அவற்றின் நோக்கத்தில் கொண்டிருக்கின்றன.

உலகின் முக்கிய எண்ணெய்வள பிராந்தியமாக இருக்கும் மத்தியகிழக்கில் ஏகாதிபத்தியத்திற்கான மூலோபாய முக்கியத்துவம் குறித்து குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஆபிரிக்காவிலும் கணிசமான அளவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவும் பெரிய மதிப்பார்ந்த ஒரு பரிசாக கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் 2008 எரிசக்தி ஆய்வின்படி, 2007இன் இறுதியில் ஆபிரிக்கா 117,481 பில்லியன் பரல்களை அல்லது உலக எண்ணெய்வளத்தில் 9.48 சதவீதத்தைக் கொண்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் உற்பத்தியில் நைஜீரியா, லிபியா, அல்ஜீரியா, எகிப்து மற்றும் அங்கோலா ஆகிய ஐந்து நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவை ஆபிரிக்காவின் மொத்த உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. ஆனால் கபோன், காங்கோ, காமரூன், துனிசியா, பூமத்தியரேகை பிரதேச கயானா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியவையும் எண்ணெய் உற்பத்தி செய்கின்றன. சாட், சூடான், நமீபியா, தெற்கு ஆபிரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆகியவற்றிலும் எண்ணெய்வள ஆய்வுகள் நடந்து வருகின்றன.

ஆபிரிக்க எண்ணெய் உயர்தரமானவை என்பதுடன் அதை எடுப்பதும் சுலபமானதாகும். பெரும்பாலும் கடற்கரைக்கு அண்மையிலான படுகைகளில் இருந்தே அங்கே எடுக்க முடியும் என்பதோடு, அவற்றை ஏற்கனவே இருக்கும் கடற்வழிகள் மூலமாகவே வினியோகிக்கவும் முடியும். 2000ஆம் ஆண்டிலிருந்து உலகின் புதிய கண்டுபிடிப்புகளில் மூன்று மடங்கிற்கும் மேலானவை இந்த கண்டத்திலிருந்து தான் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இப்போது கருதப்படும் எண்ணெய்வளத்தையும் விட இன்னும் அதிகளவில் எண்ணெய்வளத்தைக் கொண்டிருக்கும் ஓர் இடமாகவும் இது இருக்கலாம்.

மேலும் உலக இயற்கை எரிவாயு வளங்களில் 8.22 சதவீதத்தைக் கொண்டிருக்கும் ஒரு இடமாகவும் இது விளங்குகிறது. பாக்ஸைட், கோபால்டு, தொழில்துறை வைரம், பாஸ்பரேட், பிளாட்டினம் மற்றும் ஜிர்கோனியம் போன்ற தரமான உலக கனிமங்களைக் கொண்டிருப்பதில் முதலாவதாகவோ அல்லது இரண்டாவதாகவோ இருக்கிறது. மேலும் கணிசமான அளவிற்கு தங்க படிமானங்களையும் இப்பிராந்தியம் கொண்டுள்ளது.

ஆபிரிக்காவில் அதற்கு சீனாவிடமிருந்து வரும் சவாலைச் எதிர்க்க அமெரிக்க தீவிரமாக உள்ளது. 2010 ஜனவரியிலிருந்து நவம்பர் வரை ஆபிரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் 115 பில்லியன் டாலராக இருந்தது. இது 2009இல் இதே காலகட்டத்தில் இருந்ததையும்விட 43.5 சதவீதம் அதிகமாகும். ஆபிரிக்காவில் சீனாவின் மொத்த முதலீடு 50 பில்லியன் டாலராக உயரும் என்றும், 2015 வாக்கில் இவற்றிற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 300 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் Standard Bank Group கணிக்கிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய BRIC நாடுகள், பொருளாதார கூட்டுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஏப்ரல் மத்தியில் பெய்ஜிங்கில் கூடுகின்றன. இந்த கூட்டம் தென் ஆபிரிக்காவையும் இதில் ஒரு முழு உறுப்பினராக அனுமதிக்க முனையும்.

லிபியா மீதான .நா வாக்கெடுப்பை BRIC நாடுகள் அனைத்துமே புறக்கணித்துள்ளன. அதன்பின்னர், இந்த குண்டுவீச்சு குறித்த சீனா அதன் "கவலையைத்" தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் People's Daily,மனிதாபிமான தலையீடென்பது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் இராணுவ தலையீடு செய்வதற்கான ஒரு மன்னிப்பு மட்டும் தான்,” என்று எழுதியது. “நீதிநியாயத்தினால் உந்தப்பட்டது" என்று கூறுபவர்கள் "ஆழமான அரசியல் மற்றும் பொருளாதார நலன்களால் உந்தப்பட்டுள்ளனர்" என்பதற்கு ஓர் எச்சரிக்கையாக, ஈராக்கில் நடத்தப்பட்ட "இரத்தத்தில் ஊறிய தலையீட்டை அந்த அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியது.

ஐரோப்பிய சக்திகளைப் பொறுத்த வரையில், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தைப் பொறுத்த வரையில், வட ஆபிரிக்காவிலும் மத்தியகிழக்கிலும் மாறிக் கொண்டிருக்கும் அரசியல் பல்வுருவக்காட்சி கருவி (kaleidoscope), வாஷிங்டன்னாலும் பின்னர் பெய்ஜிங்கினாலும் அவற்றின் முன்னாள் காலனித்துவ ஆட்சிப்பிரதேசத்தில் நீண்டகாலமாக அவர்கள் கொண்டிருந்த இரண்டாந்தர பங்கினை குறைந்தபட்சம் ஓரளவிற்காவது கடந்து நிற்க ஓர் அருமையான சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது. மேலும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரிய போராட்டங்களைத் தோற்றுவித்துவரும் மோசமான சமூக பதட்டங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பாரீஸ், இலண்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நெருக்கடியால்-திணறிவரும் ஆட்சிகளுக்கு அரசியல்ரீதியாகவும் இது ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.

அவர்களின் ஏகாதிபத்திய நலன்கள் எங்கெங்கெல்லாம் ஏவுகிறதோ அங்கெல்லாம் இராணுவ தலையீடுகளைச் செய்ய லிபியா ஒரு முன்மாதிரியாக ஆக்கப்பட வேண்டுமென பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு" என்ற அடிப்படையில் .நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தின் ஒரு புதிய நீட்சி, "உலக அரசியலமைப்பின்" மாதிரியில் இப்போது இருக்கிறது என்று கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி தெரிவித்தார்.

இந்த நிமிடத்திலிருந்து சர்வதேச சமூகத்தின் மற்றும் ஐரோப்பாவின் பிரதிபலிப்பு ஒவ்வொரு முறையும் ஒரேமாதிரியாக தான் இருக்கும் என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும், குறிப்பாக ஒவ்வொரு அரேபிய ஆட்சியாளரும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று சார்க்கோசி அறிவித்தார். ஐவரி கோஸ்ட் மற்றும் சிரியாவிற்கு தடைவிதிப்பதன் மூலமாக .நா தலையீடும் செய்யக்கூடுமென்றும் அவற்றின் பெயரை அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹாக் கடந்த வாரம், ரோபர்ட் முர்டோக்கின் Times நாளிதழால் ஆதரவளிக்கப்பட்ட "ஆபிரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகள்" மாநாட்டில் பேசினார். “21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வுகளான 2008 நிதியியல் நெருக்கடி மற்றும் 9/11 சம்பவத்தினையும் வட ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு சம்பவங்கள் ஏற்கனவே தாண்டிச் சென்றுவிட்டன" என்ற அறிவிப்புடன் பேசத் தொடங்கினார்.

இந்த "மிக முக்கியமான சம்பவங்கள் அரேபிய உலகின் எல்லைகளோடு நின்றுவிட வேண்டிய அவசியமில்லை," என்றார். "அவர்களின் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்குரிய பாதையில் தடையாய் நிற்கும்" கடாபி போன்ற "ஏனையவர்கள்" இருக்கும் நாடுகளான சூடான், சிம்பாவே, ஐவரி கோஸ்ட் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளவில் நம்முடைய நிலைப்பாட்டையும், செல்வாக்கையும் கட்டியமைக்க கூடிய, மற்றும் நம்முடைய பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய ஓர் அற்புதமான வெளிநாட்டு கொள்கையை பிரிட்டன் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்ட அவர், "ஆபிரிக்க நாடுகளை" இங்கிலாந்து நலன்களுக்கான ஒரு மூலோபாய பகுதியாக தாம் பார்ப்பதாகவும் வலியுறுத்தினார்.

.நா. பாதுகாப்பு சபையின் 1973 தீர்மானத்தை ஒரு திருப்புமுனையாக மேற்கோளிடுவது சார்க்கோசி மட்டுமல்ல. மேலும்பாதுகாக்கும் உரிமை" (Right to Protect) அல்லது R2P என்றறியப்படும் கோட்பாட்டின் அடிப்படையில் இராணுவ நடவடிக்கைக்கு .நா. சபை அங்கீகாரம் அளித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையால் 2005இல் மட்டும் தான் R2P கையாளப்பட்டது. இந்த தீர்மானம் தேசிய இறையாண்மையைக் கடந்துபொதுமக்களும், பொதுமக்கள் நிறைந்த பகுதிகளும் தாக்குதல் அச்சுறுத்தலின்கீழ் வரும் போது" அவர்களைக் காப்பாற்றும் அடித்தளத்தில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு எங்கெல்லாம் அவற்றிற்குப் பொருத்தமாக இருப்பதாக காண்கின்றனவோ அங்கெல்லாம் யுத்தம் தொடுக்க அவற்றிற்கு இத்தீர்மானம் முழு சுதந்திரம் அளிக்கிறது.

இராணுவ நடவடிக்கையை அனுமதிக்கும் .நா. சட்டவரைவின் 7ஆம் பிரிவின்கீழ் இருக்கும் "அமைதியின் மீது அச்சுறுத்தல்கள்", "தாக்குதல் நடவடிக்கைகள்" குறித்த தீர்மானங்கள், கடந்தமுறை ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் சியாரா லியோனில் (Sierra Leone) நடத்தப்பட்ட தலையீடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டது. ஆனால் பான் கீ-மூன் தம்பட்டம் அடித்ததைப் போல, பொதுமக்கள் மீது ஒரு "தாக்குதல் அச்சுறுத்தல்" உள்ளதாக எடுத்துக்கூற, "வரலாற்று தீர்மானத்திற்கு" லிபியா ஒரு விஷயமாக இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் "ஆபிரிக்காவின் மீது காலனித்துவப் போட்டி" என்பதை நியாயப்படுத்த அந்த காலக்கட்டத்தின் இறுதிப்பகுதியில் ரூட்யார்ட் கிப்லிங்கால் பறைசாற்றப்பட்ட "வெள்ளையர்களின் பொறுப்பு" என்ற தத்துவத்தைப் போலவே, இப்போது "பாதுகாப்பதற்கான உரிமை" அந்த நிலைப்பாட்டுடன் ஏகாதிபத்திய சக்திகளின் ஆயுதமாகி உள்ளது. ஏகாதிபத்திய கைப்பற்றல் மற்றும் ஏகாதிபத்திய சூறையாடல் வெடித்ததன் ஒரு பாகமாக, இத்தாலி ஆக்கிரமித்த பிராந்தியமே பின்னர் லிபியாவாக மாறியது.

லிபியாவில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு .நா. சபை பச்சைக்கொடி காட்டியது. அதையே தான் அது மீண்டும் செய்யும். பிரிட்டனின் பெருமதிப்பார்ந்த அதிபரும், வெளிவிவகார நீதித்துறை செயலருமான கென்னத் கிளார்க் Guardianக்கு கூறியதாவது: “சர்வதேச சட்டத்தில் பெரும்பாலும் நாம் மனிதாபிமான அடிப்படையில் தான் அனைத்தையும் ஏற்படுத்தி உள்ளோம். அதனைக்கொண்டு தனிச்சிறப்புவாய்ந்த விஷயங்களில், சர்வதேச சமூகத்தால் தலையீடு நியாயப்படுத்தப்படலாம்,” என்றார்.

லிபிய தலையீடு, குறைந்தபட்ச செலவுடன் நடத்தப்படும் ஒரு குறுகிய-கால நடவடிக்கை என்ற வாதத்தை இத்தகைய அறிவிப்புகள் பொய்யென எடுத்துக்காட்டுகின்றன. ஐரோப்பாவிலும், சர்வதேச அளவிலும் இராணுவவாதத்திற்கு ஓர் ஆழமான தூண்டுதலை லிபியா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் ஆயுதங்களுக்காக அதிகளவில் பெரும் நிதி ஒதுக்கப்படும். தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னொருபோதும் இல்லாதவகையில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுடன் அதற்கு விலை கொடுக்கப்படும்.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் இதர கட்டுரைகள்:

லிபிய எழுச்சியாளர்களுக்கு ஒரு சிஐஏ தளபதி