WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியாவில் முடிவில்லா போரை நடத்துவது பற்றி கேட்ஸும் கிளின்டனும்
குறிப்புக்காட்டுகின்றனர்.
By
Barry Grey
28 March 2011
கடந்த வார இறுதியில் கடாபி-எதிர்ப்புச்
சக்திகளுக்கு ஆதவாக நடத்தும் தங்களுடைய பெரும் குண்டுவீச்சு நடவடிக்கைகளை அமெரிக்கா
மற்றும் அதனுடைய ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இது லிபியக் குடிமக்களைப்
பாதுகாத்தல் என்பதை நோக்கம் கொண்டு
“வரம்பிற்குட்பட்ட,
மனிதாபிமானத் தலையீடு”
நடத்தப்படுகிறது என்ற
போலிக்காரணத்தை இன்னும் கூடுதலாக அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா,
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்
ஆகியவை லிபிய அரசாங்கத் துருப்புக்கள்,
டாங்குகள்,
தரைப்படைகள் என அஜ்டபியா
முக்கிய போர்க்கள நகரத்தைச் சுற்றியிருப்பவற்றின் மீது
ஏவுகணைகளையும் குண்டுகளையும்
பொழிந்து,
புகையையும் கருகிய உலோகங்களையும்,
சடலங்களையும் விட்டுச்
சென்றுள்ளன.
இது எதிர்ப்புச் சக்திகளை மீண்டும்
சிறு நகரத்தின் மீது கட்டுப்பாட்டை எடுப்பதுடன்,
இன்னும் மேற்கிலுள்ள
Brega, Ras Lanuf
எண்ணெய் வள மையங்களை விரைவில்
ஆக்கிரமிக்கவும் உதவும்.
ஞாயிற்றுகிழமையையொட்டி,
கடாபி எதிர்ப்புச் சக்திகள்
Bin Jawad
சிறு நகரத்தைக் கைப்பற்றின.
ஒபாமா நிர்வாகமும் லண்டன்
மற்றும் பாரிஸிலுள்ள நிர்வாகங்களும் தாங்கள் முன்னர் ஆதரவு கொடுத்திருந்த லிபியச்
சர்வாதிகாரியை அகற்றுவதற்கு முற்படும் சக்திகளின் பக்கத்தில் ஒரு உள்நாட்டுப்
போரில் இராணுவத் தலையீடு செய்கிறோம் என்பதை மறைப்பதற்குப் பெரிதும் பாடுபடுகின்றன.
ஏகாதிபத்திய சக்திகளின் பாரிய வான்சக்தி ஆதரவைத்தான் பெரிதும்
எதிர்ப்பாளர்கள் முற்றிலும் நம்பியுள்ளனர் எனக்குறிக்கும் வகையில்
BBC யின் பென் பிரௌன்
எழுதியுள்ளார்: “ஆனால்
உண்மை என்ன என்றால்,
இந்த மாற்றத்தை வியாழன் மற்றும்
வெள்ளியன்று அஜ்டபியாவிற்குப் புறத்தே பேரழிவு தரும் கூட்டணி வான்தாக்குதல்கள்
இல்லாமல் அவைகளை அடைந்திருக்க முடியாது.
அத்தாக்குதல்கள் டஜன் கணக்கான
கேணல் கடாபியின் டாங்குகள்,
ஆயுதக் கவச வாகனங்கள்,
தரைப்படைத் தளவாடங்கள்
ஆகியவற்றை அழித்துவிட்டன.”
அமெரிக்கத் தலைமையிலான
“கூட்டணி”
எதிர்ப்புச் சக்திகளின்
தாக்குதலை நெருக்கமாக ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறது—அதன்
செய்தித் தொடர்பாளரால் இது உத்தியோகபூர்வமாக மறுக்கப்பட்டுள்ளது என்றாலும்—என்பது
பிரெஞ்சு செய்தி அமைப்பான
AFP யினால் அடிக்கோடிட்டுக்
காட்டப்பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்கள் தாங்கள் முன்னேறிச்
செல்வதை இரவில் கடாபியின் கோட்டையான சிர்டேயிலிருந்து
60 மைல் கிழக்கேயுள்ள
நுபிலியாவில் நிறுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் என்று இச் செய்தி அமைப்பு
கூறியுள்ளது. “ஏனெனில்
கேணல் கடாபியின் துருப்புக்கள் சிர்டேக்குச் செல்லும் பாதையில்
30 மைல் தொலைவில்
நிறுத்தப்பட்டுள்ளன என்பதை அவர்கள் கேள்விப்பட்டுள்ளனர்.
கூட்டணி வான் தாக்குதல்கள் கனரக
ஆயுதங்களை அழிக்கும் வரை அவர்கள் காத்திருப்பர் என்றும் கூறியுள்ளனர்.”
வெள்ளியன்று கூட்டணி
16 டொமஹாக் க்ரூஸ் ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தி 153
வான் தாக்குதல் பறப்புக்களையும்
நடத்தியது என்று பென்டகன் கூறியது.
இந்த வான்தாக்குதல்கள்
சனிக்கிழமையன்று 160
என உயர்ந்தன.
இவற்றுள் அமெரிக்க
AWACS விமானங்கள் ஆதரவுடன்
பிரெஞ்சுப் போர் விமானங்கள் நடத்திய
20 தாக்குதல்களும் அடங்கும்.
அவை ஐந்து லிபிய போர்
ஜெட்டுக்களையும்,
தரையிலிருந்த இரு ஹெலிகாப்டர்களையும்
ஒரு லிபியத் தளத்தில் மிசுராடாவிற்கு சற்றே வெளியே தாக்கின.
லிபியாவின் மேற்குப்
பகுதியிலுள்ள இந்நகரத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கடும் போட்டி நிலவுகிறது.
மேலைத்தேச ஏவுகணை மற்றும் வான்தாக்குதல்கள் கடாபியின் பிறந்த இடமான
சிர்டேயின் மீதும் தலைநகரான திரிபோலி மற்றும் மிசுரடா மீதும் நடப்பதாகத் தகவல்கள்
வந்துள்ளன.
ஆட்சியிலுள்ள அதிகாரிகள்
திரிபோலியிலுள்ள டஜுராப் பிரிவில் குண்டு அல்லது ஏவுகணையினால் தாக்கப்பட்ட ஒரு
வீட்டை நிருபர்களுக்குக் காட்டினர்.
கடாபியின் படையினர்களின் டஜனுக்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள்
அஜ்டபியாவைச் சுற்றிச் சிதறிக் கிடப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அங்கு போர் கடுமையாக நடைபெற்றது.
லிபிய சுகாதார அமைச்சரகத்தில் அதிகாரியாகவுள்ள கலீட் ஒமர் கடந்த
புதன் முழுவதும் கூட்டணியினர் நடத்திய குண்டுத் தாக்குதலில்
114 பேர் இறந்துவிட்டனர்,
445 பேர் காயமுற்றனர் என்று
கூறியுள்ளார்.
ஒபாமா நிர்வாகம் வான் போரினால் ஏற்பட்ட
சிவிலிய அல்லது இராணுவ இறப்புக்களைப் பற்றி எந்த மதிப்பீட்டையும் கொடுக்க மறுத்து,
கடாபி ஆட்சியின் கூற்றுக்களைப்
பொய் என உதறித் தள்ளியுள்ளது.
எழுச்சியாளர்கள் கைப்பற்றிய பகுதிகளில் அரசாங்கத்திற்கு பரிவு
காட்டியவர்களுக்கு கடாபி எதிர்ப்புச் சக்திகள் பதிலடி கொடுத்தது பற்றிக்
கிட்டத்தட்ட அறிக்கைகள் ஏதும் வரவில்லை.
ஆனால் ஒரு
AFP நிருபர் பின் ஜவாட்டில்
கடாபி ஆதரவாளர் எனக்கூறப்படுபவர் ஒருவருடைய வீட்டிலிருந்து புகைப்படலம்
வெளிவந்ததைக் கண்டதாகத் தகவல் கொடுத்துள்ளார்.
தீயநிகழ்வைக் கூறும் வகையில்
இந்த அறிக்கை “அரசாங்கத்
துருப்புக்கள் மக்களின் வீடுகளில் மறைந்து கொண்டிருக்கலாம் என சில எழுச்சியாளர்கள்
அஞ்சினர்”
என்று குறிப்பிட்டுள்ளது.
டஜன் கணக்கான குடிமக்களுடைய கார்களில் குடும்பங்களையும் பொருட்களைச்
சுமந்தவை சிர்ட்டேயை விட்டு தப்பி ஓடி வருவதாக ராய்ட்டர்ஸ் தகவல் கொடுத்துள்ளது.
ஞாயிறன்று செய்திப் பேட்டி நிகழ்வுகளில்,
பாதுகாப்பு மந்திரி ரோபர்ட்
கேட்ஸும் வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டனும் கிட்டத்தட்ட எதிர்க்கும் திறனற்ற
முன்னாள் காலனித்துவ நாட்டிற்கு எதிரான இராணுவ ஆக்கிரோஷத்திற்கான உத்தியோகபூர்வ
போலிக் காரணங்களில் அப்பட்டமாகத் தெரியும் முரண்பாடுகள் பற்றி விளக்கம் அளிக்க
முற்பட்டனர். NBC, CBS, ABC
மற்றும்
CNN ஆகியவைகளில் அவர்கள்
பேசியபோது உத்தியோகபூர்வக் குறிப்புக்கள் ஒருபுறம் இருக்க,
போரானது அதனது காலளவு மற்றும்
நோக்கம் முடியும் வரை நடக்கும் என்ற தன்மையைக் கொண்டுள்ளது என்று குறிப்புக்
காட்டினர்.
ABC
உடைய
“இந்த வாரம்”
நிகழ்வில்,
தொலைக்காட்சியின் நிகழ்ச்சி
நடத்துபவர் ஜாக் டாப்பர், “இந்த
ஆண்டு இறுதிக்குள் பணி முடிந்துவிடுமா?”
என்று கேட்ஸை கேட்டார்.
“இதற்கு எவரும் விடையளிக்க
இயலாது என நான் நினைக்கிறேன்”
என்றார் கேட்ஸ்.
“லிபியா
அமெரிக்காவிற்கு ஓர் உண்மையான,
தவிர்க்க முடியாத அச்சுறுத்தலா”
என்று கேட்ஸ் டாப்பாரால்
வினவப்பட்டதற்கு,
கேட்ஸ்,
“இல்லை,
இல்லை,
இது ஒன்றும் அமெரிக்க தேசிய
நலனுக்கு முக்கியம் இல்லை.
ஆனால் இதில் ஒரு அக்கறை உள்ளது….”
என்றார்.
இந்த பதில் ஒபாமா நிர்வாகம் சட்டவிரோத,
அரசியலமைப்பிற்கு முரணான
வகையில் போரைத் தொடக்கியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இது பற்றி காங்கிரஸுடன் ஆலோசனை
நடத்தவில்லை,
ஒப்புதலும் பெறப்படவில்லை.
நடவடிக்கை பற்றி அமெரிக்க
மக்களுக்கு விளக்கம் கூடக் கொடுக்கப்படவில்லை.
War Powers Act என்பது
ஜனாதிபதிக்கு காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் இராணுவ நவடிக்கை எடுப்பதற்கு
வழிவகுத்துள்ளது.
ஆனால் அது முக்கிய தேசிய நலன்
தொடர்பிற்காக இருக்க வேண்டும் அல்லது நாடு தவிர்க்க முடியாத தாக்குதலை
எதிர்நோக்குகிறது என்றால்தான் செய்யப்பட முடியும்.
போரை இன்னும் நியாயப்படுத்தும் வகையில்,
கேட்ஸ் மனிதாபிமானம் என்னும்
அத்தி இலைக்குப் பின்னுள்ள உண்மையான போர் நோக்கங்களைப் பற்றியும் குறிப்புக்
காட்டினார். “இதில்
மற்றொன்றும் உள்ளது,
ஆனால் அது பரிசீலனைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
இப்பொழுது லிபியாவிற்கு கிழக்கேயும்,
மேற்கேயும் புரட்சிகள் உள்ளன.
லிபியாவில் அனைத்தையும்
உறுதிகுலைக்கும் திறனுடைய நிகழ்வு நடக்கிறது.
இது துனிசிய மற்றும் எகிப்து
புரட்சிகளை ஆபத்திற்குட்படுத்தும் திறனையும் கண்டுள்ளது.
அந்தக் கூடுதலான கருத்துத்தான்
பரிசீலனைக்கு உரியதாகும்”
என்றார் கேட்ஸ்.
துனிசிய,
எகிப்துப் புரட்சிகளைப்
பாதுகாப்பது பற்றி கேட்ஸ் பேசுகையில்,
பென் அலி,
முபாரக் ஆகிய அதனுடைய நீண்ட கால
கைக்கூலிகளைப் பதவியில் இனியும் தக்க வைக்க முடியாது என்ற நிலையில் உள்ளவர்களை
அகற்றவும்,
இராணுவ ஆதரவுடைய ஆட்சிகளுக்கு ஊக்கம்
கொடுக்க அமெரிக்காதான் பதவியில் இருத்த உதவியது என்பது பற்றி அவர் பேசுகிறார்.
இங்கு சற்றே புதிர்த்தன்மையுடன்
கேட்ஸ் லிபியாவில் ஒரு ஆதிக்கத்திற்குட்பட்ட நாட்டை நிறுவும் நோக்கம் பற்றிச்
சுட்டிக்காட்டுகிறார்.
அங்கிருந்து அமெரிக்கா
அப்பிராந்தியத்தில் பெருகிவரும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களை
நசுக்குவதற்கான செயல்களை மேற்கொள்ளமுடியும்.
அமெரிக்க ஆதரவுடைய ஜனாதிபதி ஏராளமான எதிர்ப்பாளர்களைக் கொன்று
நூற்றுக்கணக்கான மற்றவர்களைத் தாக்கிக் கைது செய்துள்ள யேமனில் அமெரிக்க நிலைப்பாடு
பற்றிக் கேட்கப்பட்டபோது,
வாஷிங்டன் ஜனாதிபதி அலி
அப்துல்லா சலேயைத் தொடர்ந்து ஆதரிப்பதாகக் கேட்ஸ் கூறினார்.
இத்தலைவர்களுக்கு ஆதரவு,
ஆனால் கடாபிக்கு எதிரான
வாஷிங்டனின் போர் என்பதைச் சமன்படுத்த அவர் முயலவில்லை.
லிபியச் சர்வாதிகாரி தன் மக்களை
கொல்கிறார் என்ற குற்றச்சாட்டைத்தான் நியாயம் காட்டுகிறார்.
யேமனில் அல் கெய்டாவின் ஒரு கிளை உள்ளது என்பதை மேற்கோளிட்டு,
கேட்ஸ் யேமனில்
“சலேக்குப் பிந்தைய நிலை என்பது
உண்மையான கவலை”
என்றார்.
“ஜனாதிபதி சலே மற்றும் யேமனின்
பாதுகாப்புப் பிரிவுகளிடமிருந்து நமக்கு ஏராளமான பயங்கரவாத எதிர்ப்பிற்கு
ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.
அந்த அரசாங்கம் சரிந்தாலோ,
வியத்தகு முறையில் வலுவற்ற
அரசாங்கம் ஏற்பட்டுவிட்டாலோ,
பின் நாம் யேமனில் கூடுதலான
சவால்களைச் சந்திக்க நேரிடும்….
அது ஒரு உண்மையான
பிரச்சினையாகும்.”
CBS
உடைய
“Face the Nation”
நிகழ்ச்சியில் பேசிய கேட்ஸ் லிபிய அரசாங்கத்தின் கூற்றான மேலைத்தேச
குண்டுவீச்சுக்கள் மக்கள் உயிர்களைப் பறிக்கின்றன என்பதை உதறித்தள்ளும் வகையில்,
“இதில் உண்மை என்னவென்றால்,
நாம் பொறுப்பு எனக்கூறப்படும்
சிவிலிய இறப்புக்களுக்கு எந்தவித சான்றுகளும் கிடைக்கவில்லை”
என்றார் கேட்ஸ்.
எந்த ஆதாரமும் இல்லாமல் கேணல்
கடாபியின் துருப்புக்கள் தங்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்ட சடலங்களை அமெரிக்க
மற்றும் ஐரோப்பியத் தாக்குதல்கள் நடந்த பகுதிக்கு எடுத்துச் செல்கின்றனர்”
எனக்கூறினார்.
இதே நிகழ்ச்சியில் லிபியாவை அமெரிக்கா மற்றும் பிற முக்கியச்
சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் பிரிவினை செய்யலாம் என்னும் கருத்தை கிளின்டன்
நிராகரிக்க மறுத்துவிட்டார்.
நடுவரான பாப் ஷிபர்,
“ஏற்கத்தக்க முடிவு எப்படி
இருக்கும்?
நீங்கள் அவரை அகற்ற விரும்புகிறீர்கள்.
ஆனால் நாடு பிரிவினை அடைதல்,
அல்லது அதுபோல் ஏதேனும்
நடந்தால் உங்களுக்குத் திருப்தியா”
எனக் கேட்டார்.
அதற்கு கிளின்டன்,
“இதுபற்றி கணிப்பதற்கு இன்னும்
காலம் வரவில்லை”
என்று பதில் கூறினார்.
NBC
உடைய
“செய்தியாளர்களைச் சந்தியுங்கள்”
நிகழ்ச்சியிலும் கேட்ஸ் இதேபோல்
கடாபி எதிர்ப்பு சக்திகளுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்கக் கூடாது என்பதை
நிராகரித்துவிட்டார்.
நடுவர் டேவிட் கிரிகோரி,
“அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு
ஆயுதங்களை வழங்குமா”
என்று கேட்டிருந்தார்.
“இக்கட்டத்தில்
அது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”
என்றார் பென்டகன் தலைவர்.
லிபியாவில் அமெரிக்கத் தலையீடு பெருகும் திறன் பற்றியும்,
சமீபத்திய இராணுவ
ஆக்கிரோஷத்தின் உட்குறிப்புக்கள் பற்றியும்,
மற்ற குரல்களும் இன்னும்
வெளிப்படையாக ஒலிக்கின்றன.
சனிக்கிழமையன்று முந்தையதினம்
ஒபாமாவிற்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே நடந்த கூட்டம் பற்றிய கட்டுரை
ஒன்றில்,
வோல்
ஸ்ட்ரீட்
ஜேர்னல்
அந்நாட்டில் அமெரிக்கத் தரைப்படைகள் நிலை கொள்ளுவதும் விவாதிக்கப்பட்ட
பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கலாம் எனக்கூறியுள்ளது.
“இராணுவத்தின்
மனிதாபிமான நடவடிக்கைக்கான ஆதரவுத் திறன் பற்றிய விரிவான பிரச்சினையும் உண்டு.
இதற்கு அமெரிக்கத்
துருப்புக்கள் லிபிய மண்ணில் நிலை கொள்ள வேண்டும் என உள்ளது.
இதற்கு இன்னமும்
விடையளிக்கப்படவில்லை.”
அது மேலும் கூறியது:
“சில நோக்கர்கள் வான்
தாக்குதல்கள் போதுமா என்று கேட்கின்றனர்.
‘பூட்ஸ் கால்களைத் தரையில்
பதித்தால் ஒழிய தீர்வு இல்லை”
என்று ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜே கார்னர் கூறுகிறார்.
அந்தச் சங்கடத்தைத்தான் ஜனாதிபதியும் மற்றவர்களும் உணர்ந்து வருகின்றனர்.”
ஜேர்னலின்
இதே பதிப்பு செனட்
வெளியுறவுக் குழுவின் தலைவரான ஜனநாயகக் கட்சி ஜோன் கெர்ரி எழுதிய கருத்தையும்
கொடுத்துள்ளது.
அவர் அமெரிக்க-நேட்டோத்
தாக்குதல் லிபியாவின் மீது நடத்தப்பட்டுள்ளதை ஒரு முன்னோடி காட்டும் போக்கு,
லிபியாவிற்கு மட்டும் இல்லாமல்
பரந்த உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது என்று பாராட்டியுள்ளார்.
இதேபோன்றவை எனக் கருதப்படும்
மனிதாபிமான நியாங்கள் அப்பகுதியிலுள்ள மற்ற ஆட்சிகளுக்கு எதிராகவும்
பயன்படுத்தப்படலாம் என்று தெரிவித்தார்.
குறிப்பாக ஈரானைச்
சுட்டிக்காட்டி, “உண்மையில்
ஈரானியத் தலைவர்கள் சர்வதேச சமூகம் காட்டும் உறுதி பற்றி கவனமாக கருத்துக் கொள்ள
வேண்டும்”
என்று எழுதியுள்ளார். |