சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A CIA commander for the Libyan rebels

லிபிய எழுச்சியாளர்களுக்கு ஒரு சிஐஏ தளபதி

Patrick Martin
28 March 2011
Use this version to print | Send feedback

கடாபியின் ஆட்சிக்கு எதிராகப் போரிடும் எழுச்சி சக்திகளின் சார்பாகப் பேசும், பெங்காசியை தளமாகக் கொண்ட லிபிய தேசிய சபை அதனுடைய இராணுவ நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்க ஒரு நீண்ட நாளாக CIAக்கு ஒத்துழைக்கும் நபரை நியமித்துள்ளது. முன்பு லிபிய இராணுவத்தில் கேணலாக இருந்த Khalifa Hifter தேர்ந்தெடுத்துள்ளதை வியாழக்கிழமை McClatchy செய்தித்தாளால் தகவல் கொடுக்கப்பட்டது. புதிய இராணுவத் தலைவர் ஞாயிறு இரவு ABC News நிருபரால் பேட்டி காணப்பட்டார்.

பெங்காசிக்கு ஹிப்டர் வந்தது மார்ச் 14ம் திகதி அல் ஜசீராவால் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 19ம் திகதி போருக்குத் தீவிர ஆதரவு கொடுக்கும் பிரிட்டனின் பரபரப்பு ஏடான Daily Mail  பெரும் சிறப்பான சித்திரம் ஒன்றை அவரைப் பற்றித் தீட்டியது. “புரட்சியின் இரு இராணுவ நட்சத்திரங்களில் Hifter ஒருவர் ஆவார், எழுச்சியாளரின் தரைப்படைகளுக்கு சில தந்திரோபாய ஒழுங்கைக் கொடுப்பதற்கு புலம்பெயர்ந்து அமெரிக்காவில் இருந்தவர் சமீபத்தில் மீண்டும் வந்துள்ளார்என விளக்கியுள்ளது. அவருடைய CIA தொடர்புகள் பற்றி நாளேடு ஏதும் குறிப்பிடவில்லை.

ஞாயிறன்று ஹிப்டரின் வாழ்க்கைச் சுருக்கம் ஒன்றை மக்கிளாட்சி செய்தித்தாட்கள் வெளியிட்டது. “புதிய எழுச்சித் தலைவர் கடந்த 20 ஆண்டுகளில் பெரும் பகுதியை வெர்ஜீனியாப் புறநகரில் கழித்தார்என்ற தலைப்பில் இக்கட்டுரை அவர் முன்பு கடாபி ஆட்சியில் உயர்மட்டத் தளபதியாக இருந்தார் என்றும், “1980 களின் கடைசிப் பகுதியில் ஷாட்டில் அழிவைக் கொடுத்த இராணுவ சாகச நடவடிக்கை வரை அவ்வாறு செயற்பட்டார்என்றும் குறிப்பிடுகிறது.

இதன்பின் Hifter, கடாபி-எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுடன் சென்று, இறுதியில் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். பெங்காசியில் தலைமையை எடுத்துக் கொள்ள இரு வாரத்திற்கு முன் திரும்பும் வரை அங்குதான் அவர் வசித்து வந்தார்.

“1990களின் தொடக்கப்பகுதியில், அமெரிக்காவிற்கு வந்ததிலிருந்து Hifter வாஷிங்டன் DC க்கு வெளியே வெர்ஜீனியா புறநகரில் வசித்துவந்தார்என்று McClatchy வாழ்க்கைச் சுருக்கத்தில் முடிவுரையாகக் கூறுகிறது. “தான் வாழ்வதற்குத் தேவையான நிதிக்கு அவர் என்ன செய்தார் என்பது பற்றித் தனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தன் கவனத்தைப் பெரும்பாலும் தன் பெரிய குடும்பத்தைக் காப்பாற்றச் செலவிட்டார்என ஒரு நண்பர் கூறியதாக செய்தி அமைப்பு மேற்கோளிட்டுள்ளது.

இதனுள் அடங்கியுள்ள உட்குறிப்பைக் காண்போருக்கு, இவ்வாழ்க்கைச் சுருக்கம் Hifter ன் பங்கு ஒரு CIA  நடவடிக்கையாளர் என்பது பற்றி அதிகம் மறைக்கப்படாதது பற்றிய குறிப்பு புலனாகும். இல்லாவிடில் லிபிய இராணுவத்தின் முன்னாள் உயர்மட்ட அதிகாரி ஒருவர் எப்படி 1990களின் தொடக்கத்தில் அமெரிக்காவிற்குள், லோக்கர்பி குண்டுவீச்சு நடந்த ஒரு சில ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிற்கு வந்து அமெரிக்கத் தலைநகருக்கு அருகேயே, அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளின் தீவிர உதவி இல்லாமல், வசிக்க முடியும்? உண்மையில் Hifter இரு தசாப்தங்களுக்கு CIA தலைமையகமான Langley யிலிருந்து ஐந்து மைல்கள் தொலைவிலுள்ள வெர்ஜீனியாவின் வியன்னாவில் வசித்துவந்தார்.

Hifter ன் இராணுவ மற்றும் அரசியல் பணியைப் பற்றி செய்தி அமைப்பு நன்கு அறிந்திருந்தது. மார்ச் 26, 1966 Washington Post  ல் வந்துள்ள ஒரு தகவல் லிபியாவின் கடாபிக்கு எதிரான ஆயுதமேந்திய எழுச்சி பற்றி விவரித்து இவருடைய பெயரில் சில எழுத்து மாற்றங்களைப் பயன்படுத்தியுள்ளது. எழுச்சி பற்றிய தகவல் கொடுத்துள்ள சாட்சிகள்இதன் தலைவர் கேணல் Khalifa Haftar, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கொன்ட்ரா வகைக் குழுவைச் சேர்ந்தவர், அது லிபியத் தேசிய இராணுவம் என அழைக்கப்பட்டதுஎன்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

1980 களில் நிக்கராகுவாவிலிருந்து சான்டினிஸ்டாவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் நிதியும் ஆயுதங்களும் கொடுத்தகொன்ட்ராபயங்கரவாதச் சக்திகளுடன் ஒப்புமை காட்டப்பட்டுள்ளது. ஈரான்-கொன்ட்ரா ஊழல், 1986-87 ல் றேகன் நிர்வாகத்தை அதிர்விற்கு உட்படுத்தியது, ஈரானுக்கு சட்டவிரோதமான அமெரிக்க ஆயுதங்கள் விற்பனையை அம்பலப்படுத்தியது. அதில் கிடைத்த நிதியம் காங்கிரஸ் தடையை மீறி கொன்ட்ராக்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டது. காங்கிரஸிலிருந்த ஜனநாயகக் கட்சியினர் ஊழலை மூடிமறைத்து முன்னாள் உளவுத்துறை நடவடிக்கையாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகையில் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அடங்கிய குழு ஒன்றின் அப்பட்டமான சட்டவிரோத நடவடிக்கைகளை றேகன் ஆதரித்தார் என்பதற்காக அவர் மீது பெரிய குற்றவிசாரணை கொண்டுவரப்படுவதைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.

2001ம் ஆண்டு வெளிவந்த Manipulations africaines  என்று Le Monde diplomatique  ஆல் வெளியிட்ட புத்தகம் CIA ன் தொடர்பை இன்னும் பின்னால் 1987க்குக் காட்டுகிறது. அதில் அப்பொழுது கடாபி இராணுவத்தில் கேணலாக இருந்த Hifter, அமெரிக்க ஆதரவுடைய Hissène Habré அரசாங்கத்திற்கு எதிரான ஒரு லிபிய ஆதரவு எழுச்சியில் போராடியபோது கைது செய்யப்பட்டார். இதன்பின் அவர் NLSF என்னும் லிபியத் தேசிய விடுதலை முன்னணிக்கு மாறினார். அந்த அமைப்பு முக்கியமான கடாபி எதிர்ப்புக் குழுவாக  அமெரிக்க CIA ஆதரவுடன் செயல்பட்டிருந்தது. தன்னுடைய சொந்தப் போராளிக் குழுவை அவர் அமைத்து ஒரு பிரெஞ்சு ஆதரவு பெற்றிருந்த எதிர் குழுவான Idriss Deby யினால் 1990ல் Habré தூக்கியெறியப்படும் வரை ஷாட்டில் செயல்பட்டு வந்தார்.

இப்புத்தகத்தின் கருத்துப்படி, “ஷாட்டில் CIA யினால் தோற்றுவிக்கப்பட்டு, நிதியளிக்கப்பட்டு வந்த Haftar குழு, Idriss Déby யினால் அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர், CIA உதவியுடன் மறைந்துவிட்டது.” இப்புத்தகம் டிசம்பர் 19, 1996 காங்கிரஸ் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்றின் குறிப்பை மேற்கோளிட்டு அமெரிக்க அரசாங்கம், LNSF க்கு இராணுவ, நிதி உதவி அளித்து வந்தது என்றும், பல LNSF உறுப்பினர்கள் அமெரிக்காவில் வாழுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் கூறுகிறது.

இணைய தள ஆய்வை மேம்போக்காகச் செய்யும் எவருக்கும் இத்தகவல் கிடைக்கும். ஆனால் இது பற்றி பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்கச் செய்தி  ஊடகம் கொடுக்கும் தகவல்களில் ஏதும் கிடையாது. McClatchy கொடுத்துள்ள ஒரு தகவலில்தான் இது உள்ளது. அதிலும் CIA பற்றிய குறிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. கிழக்கு லிபியாவில்சுதந்திரப் போராளிகளைசுறுசுறுப்புடன் பாராட்டிவரும் தொலைக்காட்சி இணையங்கள் எதுவும் இந்தச் சக்திகள் இப்பொழுது அமெரிக்க உளவுத்துறைகளுடன் நீண்ட காலம் ஒத்துழைத்தவரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன என்பதைத் தெரிவிக்க முயலவில்லை.

அதேபோல் லிபியாவில் அமெரிக்க-ஐரோப்பிய தலையீடு தேவை என்று ஆர்வத்துடன் கோரும் தாராளவாத மற்றும்இடதுசக்திகளும் இதைப்பற்றிக் கருத்திற்கொள்ளவில்லை. ஒபாமா நிர்வாகத்தை அதன் பலவித, போருக்குஆலோசனை கொடுத்தல்அணுகுமுறை பற்றிப் பாராட்டுவதில்தான் அவை தீவிரமாக உள்ளன. இது ஈராக்கில் புஷ் நிர்வாகத்தின் ஒருதலைப்பட்சத் தன்மையான “cowboy” அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக விளக்கப்படுகிறது. விளைவு ஒன்றுதான்மக்கள் மீது இறப்பும், அழிவும் ஏற்படுத்தப்படுகின்றன, ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டின் இறைமையும் சுதந்திரமும் மிதிக்கப்படுகின்றனஎன்பது இந்த ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை.

15 ஆண்டுகளுக்கு முன்புகொன்ட்ரா-வகையிலான குழுவின் தலைவர் என்று பொருத்தமாக விவரிக்கப்பட்ட Hifter ன் பங்கு லிபியப் பெரும் துன்பத்திலுள்ள உண்மையான வர்க்க சக்திகள் பற்றி நிரூபிக்கிறது. ஊழல் நலிந்த கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராகத் ஆரம்பத்தில் எழுச்சியில் எத்தகைய உண்மையான மக்கள் எதிர்ப்பும் வெளிப்பட்டிருந்தாலும், இப்பொழுது எழுச்சி ஏகாதிபத்தியத்தினால் கடத்தப்பட்டுவிட்டது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் லிபியத் தலையீடுஜனநாயகம்”, “சுதந்திரம்ஆகியவற்றை கொண்டுவரும் நோக்கத்தைப் பெற்றிருக்கவில்லை. மாறாக, CIA இன் அதிகாரத்தைக் கொள்ளக்கூடிய கைக்கூலிகளை அதிகாரத்தில் இருத்துவதைத்தான் நோக்கம் கொண்டது. இவர்கள் கடாபியைப் போலவே மிருகத்தானமாகத்தான் ஆட்சி நடத்துவர். அதே நேரத்தில் ஏகாதிபத்திய சக்திகள் நாட்டின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடித்து, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் படர்ந்துவரும் மக்கள் எழுச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைத் தளமாக லிபியாவை மாற்றுவதற்கு அனுமதிப்பர்.