சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Washington seeks NATO cover for protracted war against Libya

லிபியாவிற்கு எதிரான நீடித்த போருக்கு நேட்டோவின் மறைப்பை வாஷிங்டன் நாடுகிறது

By Bill Van Auken
26 March 2011
Use this version to print | Send feedback

அமெரிக்க ஆதிக்கம் கொண்ட கூட்டணிப் போர் குறைந்தபட்சம் இன்னும் மூன்று மாதங்களாவது நீடிக்கும் என்று கணித்துள்ள நிலையில், லிபியாவிற்கு எதிரான அதனுடைய போரை ஒபாமா நிர்வாகம் நேட்டோ கட்டுப்பாட்டிற்கு பெயரளவிற்கு மாற்றுகிறது.

அமெரிக்கத் தலைமையிலான போரை நேட்டோ மறைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான உடன்பாடு வாஷிங்டன் மற்றும் அதடைய கூட்டணி நாடுகளுக்கும் இடையே கடும் கசப்பு மிகுந்த விவாதங்கள் நடந்த நிலையில் வெளிப்பட்டுள்ளது. கூட்டணி நாடுகள் ஒவ்வொன்றும் தன் சொந்த மூலோபாய நலன்களை ஒரு முன்னாள் காலனித்துவ நாட்டிற்கு எதிரான ஏகாதிபத்திய போர் ஒன்றில் தொடர்கின்றன.

அமெரிக்கப் போர்க் கப்பல்கள் மற்றும் 16 தொமஹாக் ஏவுகணைகளை லிபிய இலக்குகள் மீது வீசியும் மற்றும் பெரும்பாலான அமெரிக்ககூட்டணிபோர் விமானங்கள் கூடுதலாக 153 கண்காணிப்பு விமானங்களை அனுப்பி வைத்த 24 மணிநேரம் வெள்ளி காலை முடிவடைந்த நிலையில், பிரஸ்ஸல்ஸிலுள்ள நேட்டோ அதிகாரிகள் லிபியத் தலையீடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று கணிப்பதுடன், போர்க் கால அளவையும் இதற்கேற்ப விரிவுபடுத்தவுள்ள திட்டத்தை வெளிப்படுத்தினர்.

பிரெஞ்சுப் படைகளின் தலைவரும் தாக்குதல்களுக்கு ஒரு விரைவான முடிவு எதிர்பார்க்கலாம் என்ற கருத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். “சில நாட்களில் முடிந்துவிடுமா என்பது பற்றி நான் சந்தேகப்படுகிறேன். இது சில வாரங்கள் ஆகலாம். மாதங்கள் ஆகிவிடாது என நினைக்கிறேன்என்று அட்மைரல் Edouard Guillaud French Info வானொலியிடம் கூறினார்.

இதற்கிடையில் அமெரிக்க-நேட்டோ குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 ஐ நெருங்கிவிட்டது என்று லிபியா தகவல் கொடுத்துள்ளது. திரிபோலியின் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் லிபியத் தலைநகர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் பெண்கள் உட்பட பல குடிமக்களைக் கொன்றுவிட்டதாகக் கூறினர்.

வான் தாக்குதல்களில் உயிரிழந்தோரில் கடாபியின் மகன் கமிஸ் இருந்தார் என்பதை உறுதி செய்யப்பட்டதை, ஒரு பெயரிடப்படாத ஆதாரத்தைக் காட்டி அல்-அரேபியா தொலைக்காட்சி தகவல் கொடுத்துள்ளது. திரிபோலியின் பாப் அல்-அஜிசியா வளாகத்தில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளது.

சமீபத்திய நாட்களில் முயம்மர் கடாபி அரசாங்கத்திற்கு விசுவாசமாகவுள்ள தரைப் படைகளைத் தாக்குவதற்கும் நாட்டின் உள்கட்டுமானத்தை தகர்ப்பதற்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ போர் விமானங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் நோக்கம் பெங்காசியைத் தளமாகக் கொண்டுள்ளஎழுச்சியாளர்கள்எனக் கூறப்படுபவர்கள் தாக்குதலை நடத்துவதற்குப் போதுமான வான்வழி உதவியை அளித்தல் ஆகும். இதன் நோக்கம் கடாபியை வீழ்த்தி மேலைத்தேச அரசாங்கங்கள் மற்றும் முக்கிய மேலைத்தேச எண்ணெய் நிறுவனங்களுக்கு இன்னும் வளைந்து கொடுக்கும் தன்மையைக் கொண்ட ஒரு புதிய ஆட்சியை நிறுவுதல் ஆகும்.

ஆனால்எழுச்சியாளர்கள்இதைச் செய்யமுடியும் ஆற்றல் உள்ளது என்பதற்கான அடையாளம் எதையும் காட்டவில்லை. அவர்கள் மோதலுக்குட்பட்ட கிழக்கேயுள்ள அஜ்டபியா, மேற்கேயுள்ள மிசிசுரடா ஆகிய நகரங்களை அரசாங்க விசுவாசிகளிடமிருந்து கைப்பற்றத் தவறியதுடன், திரிப்போலிக்குச் செல்லும் ஆற்றல் உண்டு என்பதையும் காட்டத் தவறினால், மாற்றுத் திட்டங்கள் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.

ரஷ்ய RIA Novosti செய்தி நிறுவனத்தின் கருத்துப்படி, ரஷ்யாவின் உளவுத்துறைப் பிரிவு ஏப்ரல் கடைசி அல்லது மே துவக்கத்தில் அமெரிக்க-நேட்டோ தரைப்படை நடவடிக்கைகளுக்கான தயாரிப்புக்கள் லிபியாவில் நடத்தப்படுவதற்குத் தயாரிப்புக்கள் உள்ளன என்று அறிந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

பல வகைகளிலும் கிடைக்கும் தகவல்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் தீவிரப் பங்களிப்புடன் நேட்டோ நாடுகள் லிபியப் பகுதியில் தரைப்படைத் தாக்குதல் திட்டத்திற்கு தயாரிக்கின்றனஎன்று ரஷ்ய உளவுத்துறைக்குள் உள்ள பெயரிடப்படாத ஆதாரத்தை மேற்கோளிட்டு செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

அனைத்துக் குறிப்புக்களிலிருந்தும், வான் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் கடாபி ஆட்சியை சரணடைய வைக்கும் முயற்சியில் தோல்வியுற்றால், தரைவழித் தாக்குதல் ஒன்று நடத்தப்படும்என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கைஏப்ரல் கடைசி-மே துவக்கத்தில்நடக்கலாம் என்று தெரிகிறது.

.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் எண் 1973, மார்ச் 17 அன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது: இது குடிமக்களைக் காப்பாற்றும் நோக்கம் உடையதாகக் கூறப்பட்டுஅதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கவும்”, லிபியா மீது ஒரு பறக்கக்கூடாத பகுதியைச் சுமத்தவும் அனுமதி கொடுக்கிறது. ஆனால்லிபியாவில் எந்தப் பகுதியிலும் ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்புப் படைகள் கூடாதுஎன்று குறிப்பாகத் தெரிவிக்கிறது.

ஆனால் மேற்கத்தைய இராணுவ நிலைப்பாட்டின் பகுப்பாய்வாளர்கள் வெளிநாட்டுப் படைகள் மீது தடை என்பது தற்காலிகமாகப் படைகளை நிலைநிறுத்துவதைத் தவிர்க்கவில்லை என வாதிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளியன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், தரையில் பூட்ஸ்களைப் பதிக்காமல் எதிரி மீது தோல்வியை அளிப்பது என்பது வான்வழித் தாக்குதல்களில் அபூர்வம் என்றுதான் வரலாறு காட்டுகிறதுஎன்று எழுதியுள்ளது.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் இருக்கும் ஆட்சிக்குள்ளேயே ஒருவித ஆட்சி மாற்றத்தைத் தூண்டினால் ஒழிய, “ஆட்சி மாற்றத்தைஅடைய வேண்டும் என்று நோக்கத்திற்கு அத்தகைய தலையீடுதான் தேவையாக இருக்கும் என்பதை பெங்காசியைத் தளமாகக் கொண்ட பிளவுகள் நிறைந்த எதிர்ப்புப் படைகளில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழுச்சியாளர்கள் என அழைக்கப்படுவோரின் நிலைப்பாடு பற்றிய தெளிவான, முழுமையான தகவல்கள் ஒன்று வியாழனன்று McClatchy Newspapers ஐச் சேர்ந்த நான்சி யூசுப்பினால் கொடுக்கப்பட்டுள்ளது.

லிபியத் தலைவர் முயம்மர் கடாபியிடமிருந்து திரிப்போலியை கைப்பற்றுவதாக உறுதி கொண்டிருந்த எழுச்சிப் போராளிகள் தங்கள் முன்னோக்கிய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி தங்கள் பகுதிகளை பாதுகாக்க முயல்கின்றனர். தங்களுடைய எதிர்ப்புக் குழுவிற்கு சரியாக தலைமை கொடுக்கவில்லை என்றும், இராணுவம் பிளவுற்றிருப்பதால் இராணுவத் தளபதிகளை அவர்கள் நம்பவில்லை என்றும் கூறுகின்றனர்என்று இவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வராத்திற்கு முன் கடாபியின் படைகள் பெங்காசிக்குள் எளிதில் நுழைந்ததை அடுத்துஆயுதமேந்திய எதிர்ப்பாளர்கள் திரிப்போலி மீது படையெடுத்துக் கைப்பற்றும் என்ற முந்தைய போலி நம்பிக்கைகள் சிதைந்துவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்குக் காரணம் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான கடாபிக்கு பரிவு காட்டுபவர்கள் அவர்களிடையே இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தான் இத்தளர்ச்சியைக் கொடுத்துள்ளதுஎன்று தகவல் தொடர்கிறது. “விசுவாசிகளின் தாக்குதலின்போது சிவிலிய உடைகளில் தங்கள் பெங்காசி வீடுகளிலிருந்து பலர் வெளியே வந்து தெற்கிலிருந்து நகரத்தைத் தாக்கும் கடாபியின் படைகளுடன் இணைந்து செயல்பட்டனர்.”

சமீபத்தில் தன்னைஇடைக்கால அரசாங்கம்என்று அறிவித்துக்கொண்ட பெங்காசியிலுள்ள தேசிய சபைஉபயோகமற்றதுஎன்று பெங்காசி மக்கள் விவரித்துள்ளனர் என்றும் இவர் மேற்கோளிட்டுள்ளார். நகரமே ஒரு உள்நாட்டுப் போருக்குள் மூழ்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

லிபியப் போர் நடவடிக்கைகள் மீது பெயரளவிற்கு கட்டுப்பாட்டை நேட்டோ கொள்ளக்கூடும் என்ற உடன்பாட்டின் துல்லியமான தன்மை பற்றிக்கூட வெள்ளியன்றும் குழப்பம் தொடர்ந்தது. ஆரம்பத்தில் அமெரிக்கத் தலைமையிலான கூட்டணி பறக்கக்கூடாத பகுதியைச் செயல்படுத்தும் திட்டத்தின் பொறுப்பைப் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்பட்டது. ஆனால் லிபியாவின் விமானப் படை மற்றும் அதன் வான் பாதுகாப்பு ஆற்றல்கள் அழிந்துவிட்ட நிலையில் கணிசமான மாற்றத்தை இது ஏற்படுத்திவிடவில்லை.

இது அமெரிக்க இராணுவத்தை ஒரே உண்மையான போர் நடவடிக்கைக்கு நேரடிப் பொறுப்பு கொண்டதாகச் செய்துவிடும். அதாவது லிபிய அரசாங்கத்திற்கு விசுவாசமாகவுள்ள தரைப் படைகளுக்கு எதிராக அமெரிக்க-நேட்டோ போர் விமானங்கள் நடத்தும் குண்டு, ஏவுகணைத் தாக்குதல்கள் என்பதுதான் அது.

நேட்டோ உடனடியாக அனைத்து லிபிய நடவடிக்கைகளின் மீதும் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டு, பறக்கக்கூடாத பகுதிக்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளும் என்பதற்கான உடன்படிக்கை வந்துவிட்டதாக வெள்ளி பிற்பகல் கூறப்பட்டது. கடாபி ஆதரவுடைய தரைப் படைக்களை அழித்தல், அரசாங்க எதிர்ப்பு எழுச்சிக்கு ஆதரவு கொடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட வான் தாக்குதல்கள் பற்றிய விவரமான திட்டங்களும் தயாரிக்கப்படுகின்றன. இதைப்பற்றிய ஆவணம் அடுத்த சில நாட்களில் நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படவுள்ளது.

நேட்டோவிற்குள் கடுமையான விவாதங்கள் நான்கு நாட்கள் நடைபெற்றதையொட்டி இந்த உடன்பாடு வந்துள்ளது. வியாழன் இரவு இதற்காக அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி அலன் யூப்பே, பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் மற்றும் துருக்கியின் வெளியுறவு மந்திரி அஹ்மெட் டவுடோக்லு ஆகியோருக்கு இடையே புதிய சுற்று தொலைப்பேசிப் பேச்சுக்கள் நடைபெற்றன.

துருக்கி மற்றும் பிரான்ஸ் மந்திரிகள் குறிப்பிடத்தக்க வகையில் சீற்றமாகப் பேசியதை இப்பேச்சுக்கள் கொண்டிருந்தன. ஏற்கனவே ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கிய உறுப்புரிமைக்குப் பிடிவாதமாக எதிர்ப்புக் காட்டுவதால் விரோதப் போக்கு கொண்டுள்ள துருக்கிய அரசாங்கம், .நா. தீர்மானத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் பாரிஸில் அவசரமாகக் கூட்டப்பட்ட உச்சிமாநாட்டிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தது.

இராணுவத் தலையீட்டில் ஆவேசமாக முதலில் இறங்கிய பிரான்ஸ், அதன் முந்தைய கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைப்புக் கொள்ளாமல் முதல் வான் தாக்குதல்களைத் தொடங்கியது. ஆனால் முன்னதாக இது, தலையீடு நேட்டோவிலிருந்து சுதந்திரமாக இயக்கும் ஒரு தற்காலிகக் குழுவினால் தான் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இதற்குக் காரணமாக அதிகமாக அரபுப் பங்கு இல்லாதது பற்றியும் அது கூறியது.

லிபியாவின் எண்ணெய் வளங்களுக்கு உரிமை கோரும் தன் சொந்த நலன்களுக்கு ஆதாயமாகத்தான் பிரெஞ்சு அரசாங்கம் தன் தலைமையை உறுதிப்படுத்த முற்படுகிறது என்று துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. துருக்கிய அரசாங்கத்தின் நிலைப்பாடு அரசாங்கச் சார்புடைய Zaman  நாளேட்டில் வந்துள்ள ஒரு தகவலில் பிரதிபலிப்பாகிறது.

அது கூறுவதாவது: “பிரான்ஸ் நடவடிக்கையை ஒரு வலிமையின் அடையாளமாக மாற்ற முற்படுகிறதுஎன்று பகிரங்கமாக துருக்கியத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நடவடிக்கையில் பிரெஞ்சு நோக்கங்களையும் கேள்விக்கு உட்படுத்தி, நேட்டோவிற்கு வெளியேயுள்ள சில பங்காளிகளும் லிபியாவின் தாதுப் பொருள் செல்வத்தின் மீது கண் வைத்துள்ளது பற்றிய சந்தேகங்களையும் எழுப்பியுள்ளனர். இவ்விதத்தில் இராணுவ நடவடிக்கைக்கான எந்தத் திட்டமும் நேட்டோவிற்குள் செய்யப்பட வேண்டும். .நா. தீர்மானத்தில் வகுக்கப்பட்டுள்ள நோக்கங்களுடன் இணைந்த வகையில்தான் அவை இருக்க வேண்டும் என்று துருக்கிய அரசாங்கம் கோருகிறது.”

லிபியாவிலும் அப்பிராந்தியத்தில் மற்ற பகுதிகளிலும் துருக்கி தன் பரந்த வணிக நலன்களைக் கொண்டுள்ளது. அவற்றை பிரான்ஸிற்கு விட்டுக் கொடுக்கும் விருப்பத்தை அது கொண்டிருக்கவில்லை. லிபியக் கடலோரத்தை முற்றுகையிட பல போர்க் கப்பல்களை அது அளித்துள்ளது. ஆனால் லிபிய மக்களுக்கு எதிரான ஆயுதமேந்திய நடவடிக்கை எதிலும் தான் பங்கு பெறாது என வலியுறுத்தியுள்ளது.

வெள்ளியன்று நேட்டோ கட்டுப்பாட்டின் கீழ் இராணுவ நடவடிக்கைகளை கொண்டுவருவது என்ற முடிவு பற்றி எர்டோகன் திருப்தியைத் தெரிவித்தார். “பாரிஸை ஓரம் கட்டுவது தொடங்கிவிட்டது. லிபியாவில் தற்பொழுதைய வழிவகைக்குக் குறிப்பாக இது ஒரு நேரியச் செயல் என நான் காண்கிறேன்என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்க உளவுத்துறையுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான Stratfor ஆனது லிபியா மீது தாக்குதல்கள் நடத்தும்கூட்டணிஎன அழைக்கப்படுபவற்றுள் இருக்கும் மற்றய பிளவுகளையும் சுட்டிக்காட்டுகிறது. “நேட்டோவின் தொடர்பு பற்றி ஏதேனும் ஒருமித்த உணர்வு வராவிட்டால், விமானத்தளங்கள் பற்றிய தன் பங்களிப்பு திரும்பப் பெறப்படும், ஏனெனில் பிறருடைய நடவடிக்கைகளையொட்டி எங்களுக்குப் பாதிப்பு வருவதை நாங்கள் விரும்பவில்லைஎன்று இத்தாலிய வெளியுறவு மந்திரி பிராங்கோ பிரட்டனி கூறினார் என்று Stratfor சுட்டிக்காட்டியுள்ளது. பிராங்கோ-பிரிட்டிஷ் கூட்டணி கடாபிக்குப் பின் உள்ள லிபியாவில் இத்தாலியின் நலன்களைக் குறைத்துவிடும் அல்லது நடவடிக்கையை முடிக்காமல் விட்டுவிடும், இதையொட்டி மத்தியதரைக் கடலுக்கு அப்பால் ஒரு சில நூறு மைல்களுக்குள் ஏற்படும் பெரும்குழப்பத்தை இத்தாலி எதிர்கொள்ள நேரிடும்என்று ரோம் கவலைப்படுகிறது.

Stratfor சுட்டிக்காட்டுவது போல், இந்த ஐரோப்பியச் சக்திகள் அனைத்துமேஅமெரிக்காவைப் பற்றிக் கூறத் தேவையில்லை—“மனிதாபிமானக்காரணங்களுக்காக கடாபி அகற்றப்பட வேண்டும் என்ற முடிவிற்கு வருவதற்கு முன் கடாபியுடன் நெருக்கமாக இருந்து பல பில்லியன் டாலர் மதிப்புடைய எண்ணெய், ஆயுதங்கள் வழங்கல் பற்றிய உடன்பாடுகளை அவருடைய ஆட்சியுடன் ஏற்படுத்தியிருந்தன.

லிபியத் தலையீடு பற்றி பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையேயுள்ள பிளவுகளைச் சுட்டிக்காட்டி, Stratfor கூறுகிறது: “லிபியா மீது போர் தொடுக்கும் பாரிஸ் மற்றும் லண்டனின் நலன்கள் ஒரே மாதிரியானவை அல்ல. இரண்டிற்கும் லிபியாவைப் பொறுத்த வரையில் கனம் வேறு. பிரிட்டனைப் பொறுத்தவரையில் எரிசக்தி சுரண்டப்படலாம் என்னும் உறுதியை லிபியா அளிக்கிறது. “தற்பொழுது வாடிக்கையாளர்-உரிமையாளர் என்ற வலுவான உறவை லண்டன் இந்நாட்டுடன் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதிகாரத்திலிருந்து முயம்மர் கடாபி அகற்றப்பட்டால் அத்தகைய உறவு வளர்க்கப்படலாம். பிரான்ஸைப் பொறுத்தவரை, திரிப்போலி ஏற்கனவே எரிசக்தி ஏற்றுமதி செய்யும் பகுதியாகவும், ஆயுதங்களை வாங்கும் வாடிக்கையாளருமாகும். தலையீட்டில் பாரிஸின் நலன் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயுள்ள அரசியல் பற்றியும் தொடர்புடையது.”

அரசியல் ஸ்தாபனங்களுக்குள்ளும் இராணுவ-உளவுத்துறைப் பிரிவிற்குள்ளும், லிபியத் தலையீட்டின் உண்மையான நோக்கங்கள் பற்றி எந்தக் குழப்பமும் இல்லை. இதுமக்களைக் காப்பாற்றுவதுஅல்லதுமனிதாபிமானம்ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை. இது எண்ணெய், இலாபங்கள் மற்றும் மூலோபாய நலன்களைப் பொறுத்தது. இந்த வழிவகைக்குள் நேட்டோவானது ஆபிரிக்காவில் புதிய போட்டியினால் ஏற்பட்டுள்ள தீவிர ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கருவியாக வெளிப்பட்டுள்ளது.

லிபியாவில் அமெரிக்க இராணுவத்துடன் நேட்டோ கொண்டுள்ள பங்கு ஆப்கானிஸ்தானில் இது இப்பொழுது கொண்டுள்ள பங்குடன் ஒப்பிடப்பட முடியும். ஒபாமா மற்றும் ஹில்லாரி கிளின்டன் அமெரிக்காபின்பக்கம் செல்கிறதுஎன்னும் கூற்று ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கத் தளபதிகள் அமெரிக்கப் படைகள் இன்னும் தொடர்ந்து லிபியா மீதான தாக்குதலில் முக்கிய பங்கைக் கொள்ளும் என்பதைத் தெளிவாக்கியுள்ளனர். நேட்டோவே அமெரிக்க அட்மைரல் ஜேம்ஸ் ஸ்டாவ்ரிடிஸினால்தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

லிபாயாவிற்கு எதிரான போர் நேட்டோத் தலைமையில் அரபு நாடுகளின் ஆதரவில் நடக்கிறது, இதில் அமெரிக்கப் படைகள் ஒருஆதரவு கொடுக்கும் பங்கைத்தான் கண்டுள்ளனஎன்று காட்ட முற்படும் வாஷிங்டனின் நோக்கங்கள் இரு தன்மைகளைக் கொண்டுள்ளன. ஒருபுறத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு ஆப்கானிய மக்கள் காட்டும் எதிர்ப்பை அடக்குவதற்கு 100,000 அமெரிக்கத் துருப்புங்கள் கொண்ட ஒரு போர் நடத்தப்படுகிறது, அண்டைய பாக்கிஸ்தானுடனான வான் தாக்குதல் பெருகுகிறது, மற்றும் 50,000 துருப்புக்கள் இன்னும் ஈராக்கை ஆக்கிரமித்துள்ளன என்ற நிலையில் ஒபாமா நிர்வாகம் ஒரு முஸ்லிம் நாட்டிற்கு எதிராக மற்றொரு போரை அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்துகிறது என்ற உண்மையை மூடிமறைக்கப் பெரும் கவலை கொண்டுள்ளது.

மறுபுறத்திலோ அமெரிக்காவிற்குள்ளேயே மக்கள் எதிர்ப்பு தவிர்க்க முடியாமல் வருவது பற்றியும் கவலை கொண்டுள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் மூன்றில் இரு பகுதியினர் ஆப்கானிஸ்தான் போர் நடத்தத் தேவையற்றது எனக் கருதுவதாகக் குறிப்பிடுகிறது. லிபியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடங்கி ஒருவாரத்திற்குப் பின்னரும், ஒபாமா அமெரிக்க மக்களுக்கு இந்தப் புதிய போரை நியாயப்படுத்தி ஒரு உரைகூட இன்னும் நிகழ்த்தவில்லை. அதேபோல் நடவடிக்கைக்கு காங்கிரசின் ஒப்புதல் வாக்கு பெறவும் அவர் முற்படவில்லை. இது அமெரிக்க அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் ஆகும். இப்பின்னணியில் ஜனநாயகக் கட்சி நிர்வாகம், தனக்குத் தானே,  தன்னையேபடைத்தளபதிஎன்று அழைத்துக் கொண்ட தளத்திலிருந்து புஷ்ஷின் வெள்ளை மாளிகை நடத்திய இராணுவத் தலையீடுகளையும் விட அதிகமாகத்தான் சென்றுள்ளது.