WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
லிபியப்
போர் நேட்டோவில் பிளவுகளை ஏற்படுத்துகிறது
By
Peter Schwarz
24 March 2011
லிபியாவிற்கு எதிரான போர் நேட்டோவிற்குள் ஒரு சூடான மோதலை எரியூட்டியுள்ளது.
பல நாட்கள் நடந்த
பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர்,
இராணுவக் கூட்டின்
28 உறுப்பினர்கள்
லிபியாவிற்கு எதிரான நடவடிக்கையில் கட்டுப்பாட்டு நிலை பற்றி உடன்பாடு கொள்ள
முடியவில்லை.
திங்களன்று போர்
பற்றிய நேட்டோக் குழுக் கூட்டத்திலிருந்து ஜேர்மனிய,
பிரெஞ்சுப்
பிரதிநிதிகள் வெளியேறும் அளவிற்கு மோதல்கள் அதிகரித்தன.
இறுதியில்
ஒரு இரண்டாம் நிலை இராணுவ நோக்கமான லிபியாவிற்கு ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளதை
கடல்வழியே நேட்டோ கண்காணிக்கும் என்ற உடன்பாடு ஏற்பட்டது.
லிபியாவிற்கு எதிரான
போரில் கலந்துகொள்ளாத ஜேர்மனி இதன்பின் மத்தியதரைக்கடல் பகுதியிலுள்ள நேட்டோ போர்க்
கப்பல்கள் தொகுப்பிலிருந்து தன்னுடைய போர்க் கப்பல்களை விலக்கிக் கொண்டது.
போருக்குக்
கட்டுப்பாட்டை நேட்டோ கொள்ளவேண்டும் என்பதற்கு மிக உறுதியான எதிர்ப்பு,
வெவ்வேறு
காரணங்களுக்கு என்றாலும்,
பிரான்ஸ் மற்றும்
துருக்கியிலிருந்து வந்துள்ளது.
போரில் தன்
முக்கியப் பங்கை இழப்பது பற்றிய அச்சம் பிரான்ஸிடம் இருக்கையில்,
பிரெஞ்சு நலன்களின்
மேலாதிக்கம் பெற்றுள்ள நேட்டோவை எதிர்த்து,
ஐ.நா.விற்குக்
கூடுதலான பங்கு வேண்டும் என துருக்கி வலியுறுத்துகிறது.
போருக்கான
தயாரிப்புக்கள் மற்றும் ஆரம்ப இராணுவத் தாக்குதல்கள் இரண்டிலும் பிரான்ஸ் ஒரு
முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
பிரான்ஸுடன் மிக
நெருக்கமான பொருளாதார அரசியல் உறவுகளைக் கொண்டுள்ள எகிப்து,
துனிசிய
சர்வாதிகாரங்களின் வீழ்ச்சி வட ஆபிரிக்காவில் பிரெஞ்சு செல்வாக்கிற்கு பலத்த
அடியாகும்.
லிபிய நிகழ்வுகள்
ஒரு பதில் தாக்குதல் கொடுப்பதற்கு உரிய வாய்ப்பை அளித்தன.
தொடக்கத்திலேயே பிரெஞ்சு அரசாங்கம் பெங்காசியிலுள்ள எதிர்ப்பாளர்களுடன் தொடர்பு
கொண்டு இராணுவத் தலையீட்டிற்கு ஒரு மனிதாபிமான போலிக் காரணத்தை தோற்றுவிக்க
முற்பட்டது.
பிரான்ஸிற்கு
பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் ஆதரவு கிடைத்தது.
இச்சக்திகள்
லிபியாவிற்கு எதிரான போரில் இரு முக்கிய இலக்குகளைத் தொடர்கின்றன:
லிபிய எண்ணெய்
பெறக்கூடுதல் வாய்பைக் கொடுக்கக்கூடிய கைப்பாவை அரசாங்கத்தை அங்கு நிறுவதல்,
மற்றும்
அப்பிராந்தியத்தில் புரட்சிகர இயக்கங்களை நசுக்கி,
அடக்குவதற்கு
தேவையான நடவடிக்கைகளை கொடுக்கும் ஒரு தளம் அமைத்தல் என்பவையே அவைகள்.
அமெரிக்காவின் ஆதரவினால் ஐ.நா.
பாதுகாப்பு சபையில்
ஒரு தீர்மானத்தை இயற்ற பிரான்ஸால் முடிந்தது.
அதையொட்டி அதற்கு
லிபியா மீது தாக்குதல் நடத்தப் பச்சை விளக்கு கிடைத்தது.
போரில் வழிவகைகளும்
இலக்குகளும் இயன்றளவு தெளிவற்று பரந்து இருக்க அமெரிக்கா உதவியது.
மேலும் ரஷ்யா,
சீனா ஆகியவை
தடுப்பதிகாரத்தை பயன்படுத்தாமல் இருக்கவும் அழுத்தம் கொடுத்தது.
முஸ்லீம்
மற்றும் அரபு மக்களுக்கு எதிராக இன்னொரு யுத்தத்தை அமெரிக்கா தலைமை தாங்குவதானது
அரபு உலகத்தில் தனக்கு ஒரு பாதிப்பை தவிர்க்கவும் தனது நாட்டிலேயே காத்திரமான
அரசியல் எதிர்ப்பை முகம்கொடுத்த நிலையில் ஜனாதிபதி ஒபாமா அதற்குமாறாக பிரான்ஸின்
நிக்கோலா சார்க்கோசியிடம் அவருடைய பச்சை விளக்கை காட்டி விட்டுவிட்டார்.
சார்க்கோசி தனது
பங்கிற்கு அவருடைய தேர்தல் கருத்துக் கணிப்பு மிகவும் சாதனையளவில் வீழ்ந்துள்ள
நிலையில் பிரான்ஸில் அவருடைய அரசியல் நிலையை முன்னேற்றுவிப்பதற்கும் மற்றும் ஒரு
வெளிநாட்டு கொள்கையின் பாய்ச்சலுக்கும் இதை பயன்படுத்தலாம் எனவும் சார்க்கோசி
நம்பினார்.
உண்மையில்
அமெரிக்கா தான் போரில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
பிரெஞ்சு விமானங்கள்
முதல் குண்டுத் தாக்குதல்களை நடத்த அனுமதிக்கப்பட்டன.
ஆனால் பெரும்பாலான
ஏவுகணைகள் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் அமெரிக்க கப்பல்கள் மற்றும்
விமானங்களிலிருந்துதான் வந்தன.
நடவடிக்கையின்
பொதுக் கட்டுப்பாடும்,
ஜேர்மனின்
ஸ்ரூட்காட்டிலுள்ள அதன் அமெரிக்க ஆபிரிக்க மத்திய கட்டுப்பாட்டு அலுவலகத்தில்
அமெரிக்காவிடம் தான் இருந்து வருகிறது.
நடவடிக்கையின் தலைமையை நேட்டோவிற்கு மாற்றுவதை ஒபாமா விரும்புகிறார்.
இது எப்படிப்
பார்த்தாலும் அமெரிக்க இராணுவத்தின் மேலாதிக்கத்தின் கீழ்த்தான் உள்ளது.
இதற்கு அவருக்கு
பிரிட்டன்,
இத்தாலி மற்றும்
ஜேர்மனியின் ஆதரவு உள்ளது.
ஆனால் கட்டுப்பாட்டை
நேட்டோவிற்குத் தடுத்துள்ள பிரான்ஸ் அட்லான்டிக் கடந்த கூட்டு அரபு நாடுகளில் அதிக
செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை என்று வாதிடுகிறது.
உண்மையில்
சார்க்கோசி நேட்டோ கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டால் போரின் போக்கு,
விளைவு மீது தன்
கட்டுப்பாடு அகன்று விடும் என அஞ்சுகிறார்.
கட்டுப்பாட்டு அமைப்பு பற்றிய சூடான விவாதங்களின் பின்னணியில் பொருளாதார மற்றும்
புவிசார்-அரசியல்
நலன்கள் உள்ளன.
Globe and Mail
புதன் வெளியிட்ட
கட்டுரையொன்றில்,
ஏகாதிபத்திய
தலையீட்டின் மையத்தானத்தில் இருப்பது லிபியாவின் ஆதாரங்களைக் கொள்ளையடிப்பது தான்
என்று வெளிப்படையாகக் கூறியுள்ளது.
“லிபியப் போர்
தொடங்கிவிட்ட நிலையில்,
லிபியாவின்
சொத்துக்கள் மீதான பொருளாதாரப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது.”
Le Monde
கருத்துப்படி, “மேலைத்தேச
எண்ணெய் நிறுவனங்கள்,
குறிப்பாக ஐரோப்பிய
நிறுவனங்கள்,
லிபிய எழுச்சியில்
கட்டாயமாகப் பங்கு பெற வேண்டும் என்று தள்ளப்பட்டுள்ள நிலையில் வெற்றிபெற்றால்
தோல்வியை விட அதிக இழப்புக்களை பெறக்கூடும்.”
2009ம்
ஆண்டு தனது எண்ணெய்த் தேவைகளின் மொத்தத்தில் பிரான்ஸ்
9 சதவிகிதம்,
இத்தாலி
25 சதவிகிதமாக
லிபியாவிலிருந்து இறக்குமதி செய்தன.
கடந்த ஆண்டு லிபிய
எண்ணெய் ஏற்றுமதிகளில் பாதிக்கும் மேலானவை இத்தாலி,
ஜேர்மனி மற்றும்
பிரான்ஸிக்கு சென்றன.
இத்தாலிய
எண்ணெய் நிறுனவமான
Eni, பிரான்ஸின்
டோட்டல் ஆகியவற்றைத் தவிர,
ஸ்பெயினின் ரெப்சோல்,
ஆஸ்திரியாவின்
OMV, ஜேர்மனியில்
BASF என்னும்
வின்டர்ஷல்லின் துணை நிறுவனம் ஆகியவையும் இந்த மத்தியதரைக் கடல் நாட்டிலிருந்து
செயல்படுகின்றன.
போருக்கு முன்னதாக
இத்தாலியக் குழுமமான
Eni
லிபியாவிடமிருந்து நாள் ஓன்றிற்கு
250,000
பீப்பாய்களைப் பெற்றது.
இது டோட்டல் பெற்றதை
விட ஐந்து மடங்கு அதிகம் ஆகும்.
நேட்டோ
குண்டுத் தாக்குதலில் அதிகாரத்திற்கு வந்துள்ள ஒரு புதிய இடைக்கால அரசாங்கமானது
படையெடுத்துள்ள நாடுகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு எண்ணெய்ச் சலுகைகளை மறு
பங்கீடு செய்யக்கூடும்.
மறுபுறமோ,
கடாபி நாட்டின்
எண்ணெய் நிறுவனச் செயற்பாடுகளை தேசியமயமாக்கி சீனா,
இந்தியா,
பிரேசில் போன்ற
நாடுகளுக்குத் தான் போரில் வெற்றி பெற்றால் சலுகைகளைக் கொடுக்க இருப்பதாக
அச்சுறுத்தியுள்ளார்.
கடாபியை ஆட்சியில்
இருந்து அகற்றுவதில் தோல்வி அடைந்தால்,
போரில் ஈடுபட்டுள்ள
நாடுகள் பெரும் இழப்பை அடையும்.
குறிப்பாக,
இத்தாலியானது
பிரான்ஸின் ஆக்கிரோஷ அணுகுமுறையைக் கசப்புடன்தான் காண்கிறது.
போருக்கு முன் பிரதம
மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி லிபியாவுடன் நெருக்கமான உறவுகளைக் கட்டமைத்து
கடாபியுடன் முறித்துக் கொள்ளுமுன் சற்று தயக்கம் காட்டினார்.
இத்தாலியின்
எரிசக்தித் தேவைகள் பெரிதும் லிபிய எண்ணெய்,
எரிவாயுவை
நம்பியுள்ளன.
லிபியா பல
பில்லியன்களை இத்தாலிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
பறக்கக்கூடாத பகுதியை இத்தாலி தன் விமானங்கள் மூலம் செயல்படுத்திக் கொண்டாலும்,
தன் இராணுவத்
தளங்களை நடக்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதித்திருந்தாலும்,
அது நேட்டோதான்
கட்டுப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
தொடக்கத்திலிருந்தே ஜேர்மனி இராணுவ நடவடிக்கை பற்றித் தயக்கங்களை வெளியிட்டுள்ளது.
ஐ.நா.
பாதுகாப்பு சபையின்
வாக்கெடுப்பில் அது கலந்து கொள்ளவில்லை,
பிரான்ஸிடமிருந்து
தெளிவாகத் தொலைதூரத்தில் நிற்கிறது.
பேர்லின்
நீண்டகாலமாக பிரான்ஸ் அதனுடைய செல்வாக்கை அப்பிராந்தியத்தில் ஜேர்மனியின் இழப்பில்
விரிவடையச் செய்யும் முயற்சிகளை எதிர்த்து வந்துள்ளது.
2008ம் ஆண்டு
சார்க்கோசி ஒரு மத்தியதரைக் கடல் ஒன்றியம் அமைப்பதற்காகக் கொண்டு வந்த திட்டங்கள்
பேர்லினின் கடுமையான எதிர்ப்பிற்கு உட்பட்டன.
2007ம் ஆண்டு
ஜேர்மனிய அரசாங்கம் பிரான்ஸின் வலியுறுத்தலில் ஸாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலையீடு
வேண்டும் என்பதைத் தடுத்துவிட்டது.
இதற்கு
விடையிறுக்கும் வகையில் பாரிஸ் இன்னும் நெருக்கமாக வாஷிங்டன் மற்றும் லண்டன்
ஆகியவற்றின் அழுத்தங்களுக்கு ஏற்பட நடந்து கொள்கிறது.
இப்போக்கு
லிபிய மோதலில் ஒரு புதிய கட்டத்தை அடைந்துவிட்டது.
பேர்லின் மற்றும்
பாரிசிற்கும் இடையேயுள்ள உறவுகள் இரண்டாவது உலகப் போருக்குப் பின் இல்லாத அளவிற்கு
நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளன.
ஒரு மூத்த
பிரெஞ்சுத் தூதர் ஜேர்மனியர்களை பாதுகாப்பு சபையில் பங்குபெறாததற்காக
“மிக அதிக அரசியல்
விளைவுகளை”
ஜேர்மனியர்கள்
சந்திக்க நேரிடும் என்று
Le Figaro
வில் அச்சுறுத்தியுள்ளார்.
தங்கள் பங்கிற்கு
ஜேர்மனிய அரசாங்கப் பிரதிநிதிகள் லிபியப் போர் எதிர்பாரா இடர்களைக் கொண்ட ஒரு
வெறும் தீரச்செயல்தான் என்பதை வலியுறுத்துவதில் களைப்பைக் காட்டவில்லை.
ஜேர்னிய
சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கேலின் அணுகுமுறையும் ஜேர்மனியில் கடுமையான எதிர்ப்பைச்
சந்தித்துள்ளன.
அவருடைய கட்சியான
CDU விலேயே அதிக
பிரிவுகள் மற்றும் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியில்
(SPD) பெரும்
பிரிவுகளும் ஜேர்மனியின் மரபார்ந்த மேலைத்தேச உறவுகளின் இழப்பில் ரஷ்யாவுடன் அதிக
பிணைப்பு என்பது பேரழிவு ஏற்படுத்தக்கூடிய தவறு என நம்புகின்றனர்.
விந்தையான
வகையில்,
மேர்க்கெலும்
அவருக்கு முன்பு பதவியிலிருந்த
SPD தலைவர் கெராட்
ஷ்ரோடர் கொண்ட நிலைமையைப் போல்தான் பெற்றுள்ளார்.
ரஷ்யாவுடன் கூடுதல்
நட்பு என்னும் அவருடைய கருத்திற்கு பெருகிய எதிர்ப்பு இருந்தது.
அதில் அவருடைய
கூட்டணி நட்புக் கட்சியான பசுமைக் கட்சியும் இருந்தது.
இதையொட்டி
2005ல்
SPD- பசுமைக்
கட்சியின் கூட்டு முன்கூட்டியே முறிவிற்கு வந்தது.
மேர்க்கெல்
இப்பொழுது அதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்பது தற்போதைய நிலைமை
சக்திவாய்ந்த பிறநிலைப் போக்குகளின் வெளிப்பாடுதான் என்பதை நிரூபிக்கிறது.
ஐரோப்பாவின் மையப்
பகுதியில் ஜேர்மனியின் நிலை,
உள்நாட்டு எரிசக்தி
ஆதாரங்கள்,
மூலப் பொருட்கள்
இல்லாதநிலை,
அதன் ஏற்றுமதித்
தொழிலின் மிகப் பெரிய தேவைகள் ஆகியவை அதை பிரான்ஸ்,
பிரிட்டன் மற்றும்
அமெரிக்கா போன்றவற்றுடன் மோதலுக்குக் கொண்டுவருகின்றன.
சர்வதேச
பொருளாதார,
நிதிய நெருக்கடி,
பெருகிய உள்நாட்டு
சமூக அழுத்தங்கள் நிறைந்து,
வட ஆபிரிக்கா,
மத்திய கிழக்கு
முழுவதும் மக்கள்
எழுச்சிகள் வெடித்துள்ள எரியூட்டப்பட்ட நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
நேட்டோவில் ஆழ்ந்த பிளவுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த
வேறுபாடுகள் புஷ் ஜனாதிபதி காலத்தில் ஈராக் போரிலிருந்து கணிசமாகத் தீவிரமாகியுள்ளன.
அந்த நேரத்தில் ரஷ்ய
செல்வாக்கைக் கண்டு அச்சமுற்ற கிழக்கு ஐரோப்பா அமெரிக்காவிற்கு நெருக்கமாக மாறியது,
அதே நேரத்தில்
ஜேர்மனியும் பிரான்ஸும் மாஸ்கோவுடன் ஒரு சமரசத்தை விரும்பின.
இப்பொழுது
ஜேர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை பெருகிய முறையில் பழைய மேலைத்தேச நேட்டோ
மைய நாடுகளுடன் மோதலுக்கு வந்துள்ளன.
இத்தாலி,
பிரான்ஸ் மற்றும்
ஸ்பெயின் போன்ற மத்தியதரைக் கடல் நாடுகளைத் தவிர,
மரபார்ந்த
அட்லான்டிக் கடந்த நட்பு நாடுகளான டென்மார்க்,
நோர்வே போன்றவையும்
லிபியப் போரில் பங்கு பெறுகின்றன.
போலந்து,
செக் குடியரசு,
ருமேனியா மற்றும்
பல்கேரியா ஆகியவையும் ஜேர்மனியும் பங்கு பெற மறுத்துவிட்டன. |