WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : ஆபிரிக்கா
:
லிபியா
US-NATO warplanes strike Libyan ground forces
அமெரிக்க-நேட்டோ போர் விமானங்கள் லிபியத் தரைப் படைகளை தாக்குகின்றன
By Bill Van Auken
24 March 2011
கேணல்
முயம்மர் கடாபி ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் தரைப் படைகள் மீது புதனன்று
அமெரிக்கா மற்றும் நேட்டோ போர் விமானங்கள் தங்கள் தாக்குதல் சக்தியை பயன்படுத்தத்
திரும்பின.
லிபியாவில் நடக்கும்
போர் ஒன்றும் மனிதாபிமான அக்கறைகளின் உந்துதலைக் கொள்ளவில்லை,
மாறாக அதனுடைய
எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கே என்பது,
நாட்டின் மீது
மேலாதிக்கம் செலுத்த விழையும் ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களைக் கொண்டது
என்பதற்கு இந்த தந்திரோபாய மாற்றம் மற்றும் ஒரு நிரூபணம் ஆகும்.
போரின்
ஐந்தாவது நாளன்று நடைபெற்ற வான் தாக்குதல்கள் லிபியத் தலைநகரான திரிபோலிக்கு
கிழக்கே
130 தொலைவிலுள்ள
மிஸ்ரடா கடலோர நகரத்தின் மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதும்,
மற்றும் கடாபி
எதிர்ப்பு எழுச்சியின் கோட்டையான பெங்காசிக்கு தெற்கே
100 மைல்கள்
தூரமுள்ள மூலோபாய நெடுஞ்சாலை சந்திப்பான அஜ்டபியா மீதும் கட்டுப்பாட்டை கொள்ளப்
போரிடும் அரசாங்க சார்புடைய சக்திகளை இலக்கு கொண்டிருந்தன.
புதன்கிழமையன்று பிரிட்டனின்
Guardian
எழுதியதாவது:
“கிட்டத்தட்ட
12 மணி நேரம் நடந்த
கூட்டு வான் தாக்குதல்களானது எழுச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறு நகரமான
மிஸ்ரடாவிலிருந்த முயம்மர் கடாபியின் படைகளைக் கிட்டத்தட்ட தகர்த்துவிட்டன.”
நள்ளிரவிற்குப்
பின்னர் தொடங்கிய தாக்குதல்கள் புதன் காலை
11.30 வரை
தொடர்ந்ததாக நகரவாசிகள் கூறினர் என்று செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.
ஒரு முன்னாள்
மருத்துவமனையானது இராணுவத்தின் தலைமையிடமாக பயன்படுத்தப்பட்டது,
குண்டுத்
தாக்குதலில் அநேகமாக அழிந்துவிட்டது.
அருகே இருந்த
விமானப்படை உயர்கல்விக்கூடம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றிற்கும் எதிராகவும்
தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தலைநகரத்தில் பல இடங்கள் மீதான குண்டுவீச்சுக்களும் தொடர்ந்தன.
புதன் இரவு
திரிபோலியில் புதிய வெடிச் சத்தங்கள் கேட்டன.
தாக்குதல்கள்
குடிமக்களைக் கொன்று,
காயமுறச்
செய்ததாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
ஒலித்
தொடர்பின் மூலம் பென்டகன் நிருபர்களிடம்,
மத்தியதரைக்கடல்
பகுதியில் அமெரிக்கக் கடற்படைத் தலைமைக் கப்பலான
USS Mount Whitney
யில் இருந்து பேசிய அமெரிக்கத் தலைமையிலான நடவடிக்கைப் படைகளின் துணை அட்மைரல்
கெராட் ஹ்யூபெர் கூறினார்:
“நாங்கள் தலையிட்டு
நகரங்களிலுள்ள குடிமக்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் கடாபியின் தரைப்படைகள் மீது
அழுத்தம் கொடுக்கிறோம்.”
அஜ்டபியா மற்றும்
மிஸ்ரடா மீது கட்டுப்பாட்டைக் கொள்ள எதிர்ப்புக்களை அரசாங்க சார்புடைய சக்திகள்
தொடரும் வரை,
தாக்குதல்களும்
தொடரும் என்று அவர் கூறினார்.
“ஐ.நா.
பாதுகாப்புச் சபைத்
தீர்மானமான 1973
ஐ கடாபியின்
சக்திகள் கடைப்பிடிக்கின்றனர் என்பதற்கான அறிகுறி எதையும் நாங்கள் காணவில்லை,
எனவேதான் நாங்கள்
அப்படைகள் மீது அழுத்தங்களைத் தொடர்கிறோம்”
என்று ஹ்யூபர்
கூறினார்.
இதற்கிடையில்,
தெற்கு இத்தாலியில்
ஒரு நேட்டோ தளத்திலிருந்து பிரிட்டிஷ் விமானப்படைத் தளபதி ஒருவரான ஏயர் துணை
மார்ஷல் கிரெக் பாக்வெல்,
நிருபர்களிடம்
பேசியபோது,
லிபிய விமானப் படை
“ஒரு அழிக்கும்
திறனுடைய சக்தி”
என்பதிலிருந்து
தகர்க்கப்பட்டுவிட்டது என்றும் நேட்டோ விமானங்கள் நாடு முழுவதும்
“கிட்டத்தட்ட எந்த
எதிர்ப்பையும்”
கொள்ளாமல் செயல்பட
முடிகிறது என்றும் கூறினார்.
நேட்டோ
அதிகாரிகள் கூற்றுப்படி புதன்கிழமையையொட்டி அமெரிக்க,
பிரிட்டஷ்,
பிரெஞ்சு விமானங்கள்
லிபிய இலக்குகளுக்கு எதிராக
300 முறை
பறந்ததாகவும்,
அந்நாடு கிட்டத்தட்ட
162 Tomahawk க்ரூஸ்
ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாகவும்,
இவை அனைத்துமே
கிட்டத்தட்ட அமெரிக்க போர்க் கப்பல்களிலிருந்து ஏவப்பட்டதாகவும் கூறினார்.
புதன்கிழமை நண்பகல்
முடிய 24
மணிநேரத்தில் தாக்குலுக்காக
ஏவப்பட்டவற்றின் எண்ணிக்கை
97 ஆக இருந்தது.
நகர்ப்
பகுதிகளிலுள்ள தரைப்படைகளின் மீது இத்தாக்குதல்களின் தவிர்க்க முடியாத பின்விளைவாக
அமெரிக்க,
பிரிட்டிஷ் மற்றும்
பிரெஞ்சு குண்டுகளால் சாதாரணக் குடிமக்கள் படுகொலை செய்யப்படுவது என்று தான் உள்ளன.
தாக்குதல்கள் தீவிரமாகிவருகையில்,
நடவடிக்கை பெருகிய
முறையில் சர்வதேசக் குறைகூறலை ஈர்த்துள்ளது.
மாஸ்கோவில்
அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸை சந்தித்தபின்,
ரஷ்யப் பாதுகாப்பு
மந்திரி அனடோலி செர்டியுகோவ் உடனடியாகப் போர் நிறுத்தம் வேண்டும் என்று அழைப்பு
விடுத்து அமெரிக்கத் தலைமையிலான படைகள் தங்கள் குண்டுத் தாக்குதல்களினால்
குடிமக்களைக் கொல்கின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.
சிவிலிய
இறப்புக்கள்
“நடைபெற
அனுமதித்திருக்கக்கூடாது,
எங்கள் எதிர்ப்பை
உரிய அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளோம்”
என்றார் அவர்.
ரஷ்ய ஜனாதிபதி
டிமிட்ரி மெட்வெடேவ்,
கேட்ஸுடன் பேசிய
பின்னர் அமெரிக்கத் தலைமையிலான படைகள்
“பொறுப்பற்ற
முறையில்”
வான் தாக்குதல்களை நடத்தி
வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல்
சீனாவும் ஒரு போர்நிறுத்தம் தேவை எனக்கூறியுள்ளது.
“பறக்கக் கூடாத
பகுதியை லிபியாவில் நிறுவுதல் பற்றி ஐ.நா.
தீர்மானம்
குடிமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது”
என சீன வெளியுறவு
அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யு நிருபர்களிடம் கூறினார்.
“இன்னும் அதிக
குடிமக்கள் இறப்புக்களை ஏற்படுத்தும் வகையில் தவறாக வலிமையைப் பயன்படுத்தப்படுவதை
நாங்கள் எதிர்க்கிறோம்.”
ரஷ்யா,
சீனா இரண்டுமே ஐ.நா.
தீர்மான
வாக்கடுப்பில் வாக்குப் போடவில்லை,
பாதுகாப்பு சபையில்
தங்கள் தடுப்பதிகாரத்தைச் செயல்படுத்தவும் மறுத்துவிட்டன.
லிபியக்
கடலோரத்தை முற்றுகையிட போர்க் கப்பல்களை வழங்கி,
கடாபி
பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ள துருக்கிய அரசாங்கமும்
தாக்குதல் பற்றிக் குறைகூறியுள்ளது.
இது துருக்கிய
மக்களிடையேயுள்ள வெகுஜன எதிர்ப்பைச் சமாதானப்படுத்தும் முயற்சி என்பது வெளிப்படை.
போருக்குப்
பின்னணியிலுள்ள உண்மையான உந்துதலைப் பற்றிக் குறிப்பிடும் வகையில்,
துருக்கிய ஜனாதிபதி
அப்துல்லா குல் செய்தியாளர்களிடம் கூறினார்:
“பிரச்சினை
அடிப்படையில் மக்களுடைய சுதந்திரம்,
மற்றும்
அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என்பதாகும்….
ஆனால்
துரதிருஷ்டவசமாக சில நாடுகள் சந்தர்ப்பவாத உந்துதலைக் கொண்டுள்ளன.
நேற்றுவரை
சர்வாதிகாரிகளிடம் நெருக்கமாக இருந்த சில நாடுகள்,
அவற்றைப்
பயன்படுத்தியவை,
இன்று அதிக
சக்திவாய்ந்த நடவடிக்கைகளை எடுப்பது இரகசிய நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களை
எழுப்புகிறது.”
துருக்கியின் பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் செவ்வாயன்று,
“முன்பு இத்தகைய
நடவடிக்கைகளைப் பார்த்துள்ளோம்….உயிரிழப்புக்கள்
பெருகி,
ஆக்கிரமிப்பிற்கு வகை
செய்து,
நாடுகளின் ஒற்றுமைக்குத்
தீவிர அச்சறுத்தல் விளைவிக்கிறது”
என எச்சரித்தார்.
லிபியாவின்
எல்லையிலுள்ள அல்ஜீரியா,
அரபு லீக்கிலும் ஒரு
பகுதியாக இருப்பது,
ஆக்கிரப்பை
நியாயப்படுத்துவதற்கு பறக்கக் கூடாத பகுதி நிறுவப்பட வேண்டும் என அது அழைப்பு
விடுத்தது இடைவிடாமல் மேற்கோளிடப்படுவது,
இத்தாக்குதல்களை
“விகிதத்தை மீறியவை”
என்று கூறியுள்ளது.
லிபியாவில்
தலையிடுவதற்கு மிக முக்கியமானது என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்
கூறிவரும் அரபு ஆதரவைப் பொறுத்தவரை,
இதுவரை அவ்வாறு
ஏதும் ஏற்படவில்லை.
தன்னுடைய
சேவைகளையும் வழங்க முன்வந்துள்ள அரபு லீக்கிலுள்ள ஒரு சிறிய ஷேக் ஆட்சியான கட்டார்
அடுத்த வாரம் பறக்கக் கூடாத பகுதி நிறுவ மொத்தம் மூன்று விமானங்களை அனுப்பும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி
பாரக் ஒபாமா மற்றும் பாதுகாப்பு மந்திரி கேட்ஸ் ஆகியோர் லிபியத் தலையீடு பற்றிக்
கொடுத்துள்ள அறிக்கைகள் வாஷிங்டனை பொறுத்தவரை போரின்
“மனிதாபிமான”
நோக்கங்கள்
திரிபோலியின் ஆட்சி மாற்றம் மற்றும் அமெரிக்கா,
நேட்டோ செல்வாக்கின்
கீழ் ஒரு கைப்பாவை அரசாங்கத்தை அங்கு நிறுவனால் ஒழிய அடையப்பட முடியாது என்பதைத்
தெளிவுபடுத்துகின்றன.
ஐ.நா.
தீர்மானம் சிறிதும்
இது பற்றிக் குறிப்பிடவில்லை.
தன்னுடைய
இலத்தீன் அமெரிக்கப் பயணத்தின் கடைசிப் பகுதியாக சான் சால்வடோரில் பேசிய ஒபாமா
அமெரிக்க-பிரிட்டிஷ்-பிரெஞ்சு
தலையீடு “உடனடியான
பெரும் சோகத்தைத் தவிர்த்துள்ளது”
என்றார்.
கடாபியின் படைகள்
பெங்காசி நகரில் செய்ய இருப்பதான தகவல்களின் அடிப்படையை இது ஆதாரம் கொண்டுள்ளது.
ஆனால் செய்தி ஊடகம்
போருக்கான ஆதரவைத் திரட்டுகையில் ருவண்டாவிற்கு ஒப்பான இனப்படுகொலை கடாபியினால்
அங்கு நிகழ்த்தப்படும் எனக் கூறியது.
அதனது
அடக்குமுறையில் கடாபி ஆட்சியானது மிருகத்தனமாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை
என்றாலும்,
எழுச்சியாளர்
கட்டுப்பாட்டில் இருந்து தன் அதிகாரத்தை மீட்டுள்ள நகரங்களில் அத்தகைய படுகொலைகளை
அது செய்ததற்கு சான்றுகள் ஏதும் இல்லை.
“கடாபி
அதிகாரத்தில் இருக்கும் வரை—அவர்
தன் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு லிபிய மக்களுக்கு தங்கள் கருத்துக்களைச்
சுதந்திரமாக வெளியிடும் வாய்ப்புக் கொடுத்து,
லிபிய அரசாங்கம்
கணிசமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு,
அவர் பதவியிலிருந்து
இறங்கினால் ஒழிய—லிபிய
மக்கள் மீதான அச்சுறுத்தல் திறன் என்பது தொடரத்தான் செய்யும்”
என்று ஒபாமா
தொடர்ந்து அறிவித்தார்.
சாதாரணக்
குடிமக்கள் மீதான தாக்குதல்கள்
“அச்சுறுத்தலை”
நிறுத்த ஐ.நா.
தீர்மானம் இராணுவ
நடவடிக்கையை அனுமதித்துள்ளது.
எனவே ஒபாமா மற்றும்
அவருடைய ஏகாதிபத்திய நண்பர்கள் கருத்துப்படி அவர்களுக்கு கடாபியை அகற்றி,
லிபியாவில் எதுவும்
செய்யலாம் என்பதற்குப் பச்சை விளக்கு கிடைத்துள்ளது.
பரந்த
முறையில் அமெரிக்க மக்களால் எதிர்க்கப்படும் போரின் தலைமையை ஐரோப்பிய சக்திகளுக்கு
வாஷிங்டன் அளித்துவிட்டு அகன்றுவிடும் என்று கூறிய ஒபாமா,
“அவருடைய படைகள்
இழிந்த நிலைக்கு வந்துவிட்டபோதிலும் கூட,
பறக்கக் கூடாத பகுதி
நிறுவப்பட்டபின் கூட,
கடாபி
பொறுத்திருந்து பதவியில் நீடிக்க முயல்வார்”
என்றும்
எச்சரித்தார். “இராணுவ
உபகரணங்கள்”
மற்றும்
“சர்வதேசப்
பொருளாதாரத் தடைகளை”
தொடர்ந்து கடாபியை
அகற்ற அமெரிக்கா பயன்படுத்தும் என்றும் ஒபாமா கூறினார்.
கெய்ரோவில்
பேசிய பாதுகாப்பு மந்திரி கேட்ஸ்,
லிபியப் போர் எத்தனை
காலம் நடக்கும் எனக்கூற முடியாது என்று வலியுறுத்தினார்.
“பாதுகாப்பு சபைத்
தீர்மானம் பறக்கக்கூடாத பகுதி கால வரம்பிற்குட்படுத்தவில்லை.
எனவே தற்பொழுது அது
எப்பொழுது முடியும் என்று கூறமுடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்”
என்றார்.
“அவர்
மக்களுக்குச் செய்யக்கூடிய கொடுமைகள் பற்றிய திறன் அகற்றப்படும் நிலை பெறும் வரை
இதை நாங்கள் மதிப்பீடு செய்வோம்.
ஆனால் எவரும் இந்த
நடவடிக்கை ஒரு வாரம்,
இரு வாரங்கள் அல்லது
மூன்று வாரங்களில் முடிந்துவிடும் என்ற போலித் தோற்றங்களைக் கொண்டிருக்கவில்லை”
என்று கேட்ஸ்
தொடர்ந்து கூறினார்.
அதன்
மக்களுக்கு எதையும் ஒரு அரசாங்கம் செய்யக்கூடிய
“திறன்களை”
அகற்றுவது என்பது
உண்மையில் அதன் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளை அழித்து,
ஆட்சியை அகற்றுவது
என்ற பொருளைத்தான் தரும்.
கேட்ஸ்
கெய்ரோவிற்கு வந்துள்ளதே லிபியாவில் ஏகாதிபத்திய தலையீட்டின் தன்மை பற்றி நன்கு
புலப்படுத்துவதாகத்தான் உள்ளது.
கடந்த மாதம்
அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரியான ஹொஸ்னி முபாரக் எகிப்திய மக்கள்
எழுச்சியின் விளைவாகப் பதவியிலிருந்து வெளியேறியபின்,
எகிப்தியத்
தலைநகருக்கு பயணித்துள்ள இரண்டாவது மிக உயர்மட்ட அதிகாரியாக அவர் உள்ளார்.
முபாரக்கிற்குப் பின்னர் வந்துள்ள இராணுவ ஆட்சியின் கொள்கைகளைப் பற்றிய
திருப்தியையும் கேட்ஸ் தெரிவித்துடன்,
“அமெரிக்க இராணுவம்
மற்றும் எகிப்திய இராணுவத்தின் நீண்டகால உறவின் தளத்திலுள்ள முன்னேற்றமான
உறுதிப்பாட்டின் தேவையை”
வலியுறுத்தியும்,
“கடந்த இரு மாத
நிகழ்வுகளில் எகிப்திய இராணுவம் கொண்டிருந்த ஆக்கபூர்வமான பங்கையும்”
பாராட்டினார்.
அனைத்து
எதிர்ப்புக்கள்,
ஆர்ப்பாட்டங்கள்,
வேலைநிறுத்தங்கள்,
உள்ளிருப்புப்
போராட்டங்கள் என தனியார் அல்லது அரசாங்கத்திற்கு சொந்தமான வணிகங்களை அல்லது
நாட்டின் பொருளாதாரத்தை எவ்வகையிலும் பாதிக்கும் செயல்களைத் தடைக்கு உட்படுத்துவதை
சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது என்று இராணுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அரசாங்கம்
ஒரு ஆணையை வெளியிட்ட அன்று கேட்ஸ் கெய்ரோவிற்கு வந்தார்.
அத்தகைய
நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடும் எவர் மீதும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதற்கும்
ஆணை வகை செய்துள்ளது.
லிபிய
இராணுவ நடவடிக்கைகள் பற்றி ஆளும் ஆயுதப் படைகளின் தலைமைக் குழுவின் தலைவரான பீல்ட்
மார்ஷல் தன்தவி உட்பட பல எகிப்திய அதிகாரிகளிடமும் தான் விவாதிப்பதாக பென்டகன்
தலைவர் கூறினார்.
எகிப்திற்குள் இருக்கும் நிலைமை மற்றும் லிபியப் போர் இவற்றிற்கு இடையேயுள்ள
உறவுதான் இந்த விவாதங்களில் மையமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
கெய்ரோவில் இராணுவ
ஆட்சியானது எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை கடுமையாக அடக்குவதற்கு வாஷிங்டன் முழு
ஆதரவையும் அளிக்கும்.
அதேபோல் ஏற்கனவே
கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆயுதம் கொடுப்பதாகக் கூறப்படும் எகிப்திய இராணுவம்
இன்னும் நேரடியான பங்கை லிபியாவை ஏகாதிபத்திய சக்திகள் அடைவதில் கொள்ளும்.
லிபியாவில்
உயிர்களைப் பாதுகாக்கவும் ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும் தான் தலையிடுவதாகச் சொல்லும்
அமெரிக்கக் கூற்றுக்களின் கோரமான இழிந்த தன்மை மற்றும் பாசாங்குத்தனம் ஆகியவைதான்
கேட்ஸின் கெய்ரோ உரைக் கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
கடந்த வாரம்
ஆயுதமற்ற ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்களைப் படுகொலை செய்து,
நெருக்கடிக் காலப்
பிரகடனத்தை அறிவித்துள்ள அலி அப்துல்லா சலே ஆட்சியைக் கொண்ட யேமன் பற்றிப்
பேசுகையில்,
சர்வாதிகாரியுடன்
வாஷிங்டன் கொண்டுள்ள
“நல்ல நடைமுறை
உறவுகளை”
வலியுறுத்தி,
“அடிப்படையில்
நிலைமை பற்றி நாங்கள் கண்காணித்து வருவோம்.
சலேக்குப் பின் என்ன
என்பது பற்றிய எத்திட்டத்தையும் நாங்கள் தயாரிக்கவில்லை”
என்றார் கேட்ஸ்.
ஆளும்
முடியாட்சி அமைதியான ஆர்ப்பாட்டங்களை டாங்குகள்,
துப்பாக்கிச்
சூடுகள் போன்றவற்றால் முறியடித்த ஆளும் முடியாட்சியுள்ள பஹ்ரைனைப் பொறுத்தவரை,
கேட்ஸ் தான்
சமீபத்தில் அந்த எமிரேட்டிற்குச் சென்றதாகவும்,
அரசாங்கத்திற்கு
அமெரிக்க ஆதரவை வெளிப்படுத்தியதாகவும்”,
“சில பிரச்சினைகளைத்
தீர்க்கும் வழிவகைகளைத் தொடக்குமாறு வலியுறுத்தியதாகவும்”
கூறினார்.
லிபியப்
போர் பற்றித் தன் தெளிவான மூலோபாயத்தை இன்னும் விளக்காத நிலையும்,
எழுச்சியாளர்கள்
அரசாங்கப் படைகளை தோற்கடிக்கும் திறன் உடையவை என்பதில் நம்பிக்கை இல்லாதநிலையும்
வாஷிங்டன் கொண்டுள்ளது என்ற வகையில்,
கேட்ஸும்
கிளின்டனும் இதைக் கூறியுள்ளனர்.
ஆனால் தீவிரமான
இராணுவ அழுத்தங்கள் கடாபி ஆட்சியில் விரிசல்களை ஏற்படுத்தும்,
அதையொட்டி அவர்
படுகொலை செய்யப்படுவார் அல்லது அகற்றப்படுவார் என்று வாஷிங்டன் நம்புகிறது என்றும்
அவர்கள் கருதுகின்றனர்.
“பல
வித விளைவுகள் வரும் வாய்ப்புக்கள் இங்கு உள்ளன”
என்றார் கேட்ஸ்.
“எவரும் அது பற்றிக்
கணித்துக்கூறும் நிலையில் இல்லை.
அவருடைய ஆளும்
வட்டத்திற்குள்ளேயே விரிசல்கள் இருக்குமா அல்லது குடும்பத்திற்குள் பிளவுகள்
இருக்குமா போன்ற பல வாய்ப்புக்கள் உள்ளன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.”
செவ்வாய்
இரவு
ABC தொலைக்காட்சி
பேட்டி ஒன்றில் இதேபோல்
“அவருக்கு
நெருக்கமாக இருப்பவர்கள் உலகில் தங்களுக்குத் தெரிந்தவர்களை ஆபிரிக்கா,
மத்திய கிழக்கு,
ஐரோப்பா,
வட அமெரிக்கா
இன்னும் அப்பாலும் தொடர்பு கொண்டு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
இதில் இருந்து
எப்படி மீள்வது?
அடுத்து என்ன
நடக்கும்?
எனக் கேட்பதாக அரச அலுவலக
தகவல்கள் வந்துள்ளன”
என்றார் கிளின்டன்.
வாஷிங்டன்
பழைய ஆட்சியின் சில கூறுபாடுகளுடன் விவாதிக்கவும்,
கடாபி குடும்ப
உறுப்பினர்களுடன் கூட விவாதிக்கத் தயாராக உள்ளது என்றும்,
எந்த அளவிற்கு அவை
தங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எண்ணெய்
பெருநிறுவனங்களுக்கு தாழ்த்திக் கொள்ளத் தயாராக உள்ளன என்பதையும்,
மற்றும் லிபியாவை
இப்பிராந்தியத்தில்
அமெரிக்க நடவடிக்கைத் தளமாக மாற்ற உடன்படுகின்றன என்பதைப் பொறுத்து உள்ளது என்பதைத்
தெளிவாக்குகின்றன.
கடாபியை
எதிர்க்கும்
“ஜனநாயக சார்புடைய
சக்திகள்”
என்று செய்தி ஊடகம்
குறிப்பவை ஆட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறியவர்களின் மேலாதிக்கத்திற்கு
உட்பட்டவை.
இவர்களுடன்
CIA சொத்துக்களும்
பிற பிற்போக்குத்தன சக்திகளும் இணைந்துள்ளன.
இக்கூறுகள்
புதன்கிழமையன்று ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஒரு அத்தி இலை மறைப்பைக் கொடுக்கும்
வகையில் “இடைக்கால
அரசாங்கம்”
ஒன்றை அமைப்பதாக
அறிவித்துள்ளன.
அதன் தலைமையில்
கடாபி ஆட்சியின் முன்னாள் அதிகாரி மஹ்முஉத் ஜிப்ரில் இருப்பார்.
எதிர்ப்பாளர்கள்
வலியுறுத்திக் காட்டியுள்ளபடி இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றவர் ஆவார்.
பாரிஸில்
கிளின்டனைச் சந்தித்த ஜிப்ரில்தான் முன்னதாக பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசியின் ஆதரவையும் பெற்றிருந்தார்.
தனது ஆறு
நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு புதனன்று வாஷிங்டனுக்கு ஒபாமா
திரும்பினார்.
லிபியாவில் தான்
நடத்தும் போரை நியாயப்படுத்தி அவர் அமெரிக்க மக்களுக்கு இன்னும் ஒரு அறிக்கை கூட
விடவில்லை.
இப்போரோ ஈராக்,
ஆப்கானிஸ்தான்
மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள போர்களுக்கு அடுத்தாற்போல்
வருகிறது.
அதேபோல் இராணுவ வலிமையைப்
பயன்படுத்துவதற்கு காங்கிரசிலிருந்து ஒப்புதல் எதையும் கோரவில்லை.
மக்கள்
ஆதரவு அல்லது பிற அரசியலமைப்பு சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தோற்றத்திலாவது காட்ட
வேண்டும் என்பதைப் பொருட்படுத்தாத்தன்மை ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல.
அதேபோல் இவர்
நாட்டிலிருந்து வெளியே சென்றிருந்ததால் ஏற்பட்டுள்ள நிகழ்வும் இல்லை,
மாறாக போரின்
உண்மைத் தன்மை பற்றிய தரத்தை இது காட்டுகிறது—அதாவது
ஒரு சட்டவிரோத,
அப்பட்டமான முயற்சி
ஏகாதிபத்திய ஆக்கிரோஷத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது,
இதில் அமெரிக்க
ஆளும் உயரடுக்கு மற்றும் அப்பிராந்தியத்திலுள்ள முன்னாள் காலனிகளுடன் இணைந்து
தாங்களே உருவாக்குவதற்கு உதவிய ஒரு உள்நாட்டுப் போரைத் தீவிரப்படுத்த முயல்கிறது.
இது மற்றும் ஒரு
எண்ணெய் வளமுடைய அரபு நாட்டின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளும் முயற்சியாகும். |