WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Notes
on the Egyptian Revolution
எகிப்திய புரட்சி குறித்த
குறிப்புகள்
By
Nick Beams
25 February 2011
சோசலிச
சமத்துவக் கட்சியின்
(ஆஸ்திரேலியா)
தேசியச் செயலரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் ஒரு
உறுப்பினருமான நிக் பீம்ஸின் இந்த அறிக்கை,
பிப்ரவரி
22, 2011
அன்று
சிட்னியில் நடந்த கட்சி உறுப்பினர்களின் ஒரு கூட்டத்தில் வழங்கப்பட்டது.
1.
இப்போது மத்திய கிழக்கு முழுக்க வியாகிபித்துள்ள தொழிலாள வர்க்க எழுச்சி மற்றும்
இளைஞர் எழுச்சியைத் தூண்டிய நிகழ்வான,
ஒரு வேலைவாய்ப்பற்ற துனிசியத் தொழிலாளி தான் அரசினால் நடத்தப்பட்ட விதத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து தன்னைத் தானே எரித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்து வெறும்
இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது என்பதை நம்பத் தான் முடியவில்லை.
விஸ்கான்சன் அபிவிருத்திகள் காட்டுவதைப் போல இந்த இயக்கம் உலகெங்கும் பரவிக்
கொண்டிருக்கிறது.
2.
வர்க்கப் போராட்டம் சர்வதேச அளவில் வெடிப்பதான இந்த நிகழ்வுகள் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளுக்கான ஒரு திட்டவட்டமான நிரூபணமாய் அமைகின்றன.
ஜனவரி
23
அன்று
சிட்னியில் கோடைப் பள்ளியின் நிறைவில்,
பெருகிவரும் பூகோள-அரசியல்
பதட்டங்களுக்கு இடையே நமது கவனம் வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தை நோக்கி
செலுத்தப்பட்டதாய் உள்ளதை வலியுறுத்தி நிறைவு செய்தோம்.
“வரலாறு
முடிந்தது”
என்னும் ஆய்வினை முன்வைத்தவர்களுக்கு எதிராக,
’சர்வதேச
தொழிலாள வர்க்கத்தின் முன்கண்டிராத வளர்ச்சி’
என்கின்ற கடந்த
30
ஆண்டு
காலத்தின் மிகத் தீர்மானமான நிகழ்வுப்போக்கை நாங்கள் சுட்டிக் காட்டினோம்.
தங்களது கோரிக்கைகள் மற்றும் அபிலாசைகளுக்கு நிலவும் அரசியல் அமைப்பிற்குள்ளாக எந்த
வடிகாலையும் காண இயலாதிருக்கும் சக்திகளுக்கு தலைமை கொடுப்பதை நோக்கித் தான் நமது
இயக்கத்தின் முன்னோக்குகள் கவனம்செலுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் தெளிவாக்கினோம்.
இரண்டு நாட்கள் கழித்து,
அதாவது ஜனவரி
25
அன்று,
எகிப்திய புரட்சி தொடங்கியது.
3.
அப்போதிருந்து எழுச்சியானது யேமன்,
பஹ்ரைன்,
லிபியா என மத்திய கிழக்கு நாடுகளெங்கும் பரவியிருக்கிறது.
இஸ்ரேல் அரசாங்கம் உட்பட பிராந்தியத்தின் ஒவ்வொரு ஆட்சியும் நடக்கும் சம்பவங்களை
பயத்துடன் கவனித்து வருகின்றன.
இப்போது இந்த இயக்கம் அமெரிக்காவுக்கும் பரவியிருக்கிறது,
விஸ்கான்சன் மாகாணத்தின் மாடிசனில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று
வருகின்றன.
அமெரிக்க ஆர்ப்பாட்டங்களின் முக்கியத்துவம்,
எகிப்தில்
புரட்சியை உருவாக்கியிருக்கும்
2007-2008ல்
தொடங்கிய உலகப் பொருளாதார நிலைமுறிவுவின் அதே உலகளாவிய பொருளாதார
நிகழ்வுப்போக்குகளில் இருந்து தான் அவை எழுந்தன என்பதில் மட்டுமல்ல.
அமெரிக்காவில் இருக்கும் தொழிலாளர்கள் ஆனாலும் சரி எகிப்திலிருக்கும்
தொழிலாளர்கள் ஆனாலும் சரி அவர்கள் ஒரே உலகளாவிய போராட்டத்தின் பாகமாகத் தான்
இருக்கின்றனர் என்பது நனவுடன் இப்போது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
இது
”எகிப்தியனைப்
போல நட”
மற்றும்
“ஹோஸ்னி
வாக்கர்”
என்றான சில முழக்கங்களில் பிரதிபலிக்கிறது....ஐரோப்பாவில்
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தங்களது
தாக்குதலை அதிகப்படுத்தும் நிலையில் அங்கும் இதேபோன்ற நிகழ்வுகளை அங்கு காண்பதற்கு
அதிகக்காலம் பிடிக்கப் போவதில்லை.
இதனிடையே,
எகிப்தில் ஒரு இளைஞன்,
“விஸ்கான்சன்
தொழிலாளர்களை எகிப்து ஆதரிக்கிறது.
ஒரே உலகம்,
ஒரே வலி.”
என்கிற வாசகங்களைத் தாங்கிய அட்டையைக் கையில் கொண்டிருக்கும் படம் இணையத்தில்
வெளியாகியிருப்பதைப் பார்க்கிறோம்.
1988ல்
வெளியிட்ட நமது முன்னோக்குகளின் தீர்மானத்தில் நாம் விளக்கினோம்:
“வர்க்கப்
போராட்டம் என்பது வடிவத்தில் மட்டுமே தேசியமயமானது,
ஆனால் சாரத்தில் அது ஒரு சர்வதேசப் போராட்டம் என்பதே மார்க்சியத்தின் ஒரு
அடிப்படைக் கூறாக நெடுங்காலமாய் இருந்து வருகிறது.
எவ்வாறாயினும்,
முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால்,
வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேசத் தன்மையைப் பெற்றாக வேண்டும்.”
அந்த முன்னோக்கு நிச்சயமாக உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
4.
தொழிலாள வர்க்கம் சமூகத்தின் மிகச் சக்திவாய்ந்த சமூக சக்தியாக எழுந்துள்ளதே
எகிப்து நிகழ்வுகளின் மிக முக்கிய அம்சமாகும்.
இந்த அபிவிருத்திக்கு இரண்டு பரிமாணங்கள் உள்ளது
-
நீண்ட
கால அம்சம்,
உடனடி அம்சம்.
முதலாவதாக,
எகிப்திய எழுச்சியின் மூலம் குறித்த பதிவுகள்,
ஜனவரி
25
ஆர்ப்பாட்டத்தினை ஒழுங்கமைப்பதில் பல்வேறு எதிர்ப்பு மற்றும் தீவிரவாதக்
குழுக்களின் நடவடிக்கைகளின் மீதும்,
அவர்கள் சமூக ஊடக வலைப்பின்னல்களை பயன்படுத்தியதன் மீதும் கவனத்தைக் குவிப்பதற்கு
முனைகின்றன என்கிற அதே சமயத்தில்,
அவர்களது பிரச்சாரம் கட்டவிழ்ந்த விரிந்த சமூக மற்றும் வரலாற்று உள்ளடக்கத்தில்
மட்டுமே அதன் வெற்றியைப் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த காலகட்டம்,
குறிப்பாக
2004
ஆம்
ஆண்டு முதலான காலகட்டம் எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் ஒரு வளர்ந்து கொண்டே வந்த
இயக்கத்தைக் கண்டிருக்கிறது.
டேவிட் நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தில் பிப்ரவரி
10
அன்று
வெளியான முன்னோக்கில் குறிப்பிட்டவாறு:
“ஜனவரி
கடைசி வாரத்தில் கெய்ரோவில் பரந்த மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குவதற்கு வெகு
முன்பே எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கம் ஆரம்பித்துவிட்டது.
எகிப்திய தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் நிபுணத்துவம் படைத்தவரான பேராசிரியர்
ஜோயல் பெய்னின் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன் படி,
அபிவிருத்தியுற்று வரும் வேலைநிறுத்த அலை
“அரைநூற்றாண்டுக்கும்
அதிகமானதொரு காலத்தில் எகிப்து கண்டிருக்கக் கூடிய மிகப்பெரிய சமூக இயக்கத்தில்
இருந்து எழுந்து கொண்டிருக்கிறது.
2004
முதல்
2008
வரையான
காலத்தில்
1.7
மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள்
1,900க்கும்
அதிகமான வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற எதிர்ப்பு வடிவங்களில் பங்கேற்றனர்.”
5.
2004க்குப்
பின்னர் முபாரக்கினால் பின்பற்றப்பட்டதும் சர்வதேச நாணய நிதியத்தாலும் அதனை
மேற்பார்வை செய்யும் அமெரிக்காவினாலும் உத்தரவிடப்பட்ட ஒரு நிகழ்ச்சிடநிரலான நவ
தாராளவாத தடையில்லா வாணிபக் கொள்கைகளை நோக்கி இன்னும் தீவிரமாய் திரும்பியதற்கான
பதிலிறுப்பாக இந்த இயக்கம் தொடங்கியது.
ஜனாதிபதியின் மகனான கமால் முபாரக்கின் வழிகாட்டுதலின் கீழ்,
இந்த வேலைத்திட்டமானது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரண்டு நிகழ்வுப்போக்குகளைக்
கொண்டிருந்தது:
தனியார்மயத்தை முடுக்கி விடுவது மற்றும் முன்பு அரசு-வசம்
இருந்த தொழிற்துறைகளில் வேலைகளை அழிப்பது;
தொழிலாள வர்க்கத்தை மேலும் வறுமைக்குள் தள்ளுவதோடு அத்துடனேயே செல்வத்தை சமூகத்தின்
உயர் அடுக்குகளுக்கு மறுவிநியோகம் செய்வது.
துனிசியாவின் ஒரு தள்ளுவண்டி விற்பனையாளர் தன்னை எரித்துக் கொண்டது இத்தகைய கோபத்தை
தூண்டியது என்றால் அது வெறுமனே தற்செயல் அல்ல.
அவருடைய துயர நிலை உலகளாவிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
பல தள்ளுவண்டி விற்பனையாளர்கள்
வரவுக்கும் செலவுக்கும் சமநிலையின்றி தங்களுடைய போதாத வருமானத்தை ஈடுகட்டுவதற்காக
கூடுதல் வருவாய் ஈட்ட அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் தான்.
இந்த வறுமையின் அளவு பொருளாதார ஆய்வுகளுக்கான எகிப்திய மையம் ஜூன்
2009ல்
வெளியிட்ட ஒரு ஆய்வின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
குறைந்தபட்ச ஊதிய விகிதம் என்பது தனிநபர் மொத்த தேசிய உற்பத்தியுடன்
தொடர்புபட்டதாய் இருந்த அதே நேரத்தில்,
1984ல்
சுமார்
60
சதவீதமாக இருந்ததில் இருந்து
1991-92ல்
19.4
சதவீதத்திற்கும் பின்
2007ல்
13
சதவீதத்திற்கும் அது சரிவு கண்டிருந்ததை இந்த ஆய்வு கண்டுபிடித்தது.
இந்த விகிதம் உலகின் மிகக் குறைந்த விகிதங்களில் ஒன்றாகும்.
கடந்த காலகட்டத்தில்,
தேசிய வளர்ச்சி அதிகரித்திருக்கிறது,
ஆனால் அதிகரித்த செல்வம் உயர் அடுக்குகளால் பங்குபோட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
2007-2008ல்
உணவுப் பொருள் விலைகள் கூர்மையாய் அதிகரித்து தொழிலாள வர்க்கத்தின் நிலைமை
மோசமடைந்தது.
லேஹ்மேன் பிரதர்ஸ் நிலைக்குலைவிற்குப் பின்னர் விலைகள் ஓரளவு ஸ்திரமடைந்த நிலையில்,
இப்போது அவை மீண்டும் மேலே சென்று கொண்டிருக்கின்றன.
பங்குச் சந்தை விலைகளை மேலே தள்ளுவதற்காக நிதிய அமைப்பிற்குள் பில்லியன்கணக்கான
டாலர்களை வாரியிறைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பின்
கூடியளவு பணத்தை புழக்கத்தில் விடும் கொள்கை
(quantitative easing policy)
என்று
அழைக்கப்படுவதன் பங்களிப்பு இதில் சாதாரணமானதல்ல.
உணவுப் பொருட்கள் மற்றும் பிற கச்சாப் பொருட்களில் ஊக வணிகம் திரும்பியிருப்பது
இந்தக் கொள்கையின் பின்விளைவுகளில் ஒன்று.
6.
தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் புரட்சி ஆரம்பிக்கும் பரந்த உள்ளடக்கத்தினால் மட்டும்
வடிவமைக்கப்படுவதல்ல,
முபாரக் வெளியேற்றத்துக்கு முன்வந்த நாட்களில் அது தீர்மானகரமானதாயும் இருந்தது.
ஜனவரி
25
அன்றான
ஆர்ப்பாட்டங்களின் அளவையும் அதன்பின் ஜனவரி
28
அன்று
நடந்த அதைவிடப் பெரிய ஆர்ப்பாட்டத்தின் அளவையும் கண்டு அதிர்ச்சியுற்ற ஆட்சியின்
முதல் பதிலிறுப்பாக இந்த இயக்கத்தை படைவலிமையைக் கொண்டு நசுக்க முயற்சி
மேற்கொள்ளப்பட்டது.
பிப்ரவரி
2-3
அன்று
குண்டர்களும்,
குற்றவாளிகளும்,
மற்றும் பாதுகாப்புப் படைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டனர்,
ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்த்துப் போராடி அவர்களை தோற்கடித்தனர்.
அதன்பின் புதிதாய் நியமிக்கப்பட்டிருந்த துணை ஜனாதிபதி ஓமர் சுலைமான் இன்னொரு
உபாயத்தை முயற்சித்தார்.
முஸ்லீம் சகோதரத்துவம்
(Muslim Brotherhood)
மற்றும்
முகமது எல்பரேடேயின் மாற்றத்திற்கான தேசியக் கூட்டணி ஆகிய எதிர்க்கட்சிகளின்
பிரதிநிதிகள் பிப்ரவரி
6
அன்று
பேச்சுவார்த்தைகளுக்கு அழைக்கப்பட்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் இயக்கத்தைச் சிதறடித்து விடும் என்பது தான் திட்டமாய்
இருந்தது.
ஆனால் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்
தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக கூறும் அளவுக்கு பேச்சுவார்த்தைகளுக்கு
பரந்த மக்களிடையே எதிர்ப்பு வலுவானதாக இருந்தது.
7.
அதுவரை பிப்ரவரி
28
செவ்வாயன்று நடந்த ஆர்ப்பாட்டம் தான் மிகப் பெரியதாய் இருந்தது.
ஆனால் தஹ்ரிர் சதுக்கத்திற்கு வெளியே கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்
எல்லாம் கட்டவிழ்ந்து கொண்டிருந்தன.
ஏராளமான தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் பிற கோரிக்கைகளை
வலியுறுத்தி தொழிற்துறை நடவடிக்கையை எடுக்கவும் கூடுதலாய் ஒரு அரசியல்
குணாம்சத்தைக் கொண்ட கோரிக்கைகளை முன்னால் கொண்டு வரவும் தொடங்கினர்.
ஜவுளித் துறை,
வங்கிகள்,
இரும்பு எஃகு ஆலைகள்,
சூயஸ் கால்வாய்,
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய தொழில்கள் அனைத்தும் இதில் பங்குபெற்றிருந்தன.
அரசியல்தன்மை பெருகியது இரும்பு மற்றும் எஃகுத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் விடுத்த
ஒரு அறிக்கையில் வெளிப்பட்டது.
அவர்களது கோரிக்கைகள் இவ்வாறு இருந்தன:
1.
ஜனாதிபதியும் மற்றும் ஆட்சியைச் சேர்ந்த அத்தனை ஆட்களும் அடையாளங்களும் உடனடியாகப்
பதவி விலக வேண்டும்.
2.
முந்தைய
ஆட்சியின் அனைத்து அடையாளங்களது மற்றும் ஊழல் நிரூபிக்கப்பட்ட ஒவ்வொருவரது
நிதிகளும்
சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
3.
உயிர்த்தியாகம் செய்தவர்களையும் போராளிகளையும் வழங்கியருக்கக் கூடிய இரும்பு
மற்றும் எஃகுத் தொழிலாளர்கள்,
எகிப்தின் அனைத்துத் தொழிலாளர்களுக்கும்,
ஆட்சியின் மற்றும் ஆளும் கட்சியின் தொழிலாளர்’
கூட்டமைப்பில் இருந்து கிளர்ந்து பிரிவதற்கும்,
அதனைப் பிரித்தகற்றி விட்டு தமது சுயாதீனமான சங்கத்தை இப்போது அறிவிப்பதற்கும்,
வீழ்ச்சியடைந்து ஆளுவதற்கான தனது அத்தனை உரிமைகளையும் இழந்து நிற்கும் ஆட்சியின்
முன்கூட்டிய அனுமதியோ அல்லது சம்மதமோ அவசியமின்றி தங்களது சொந்த சுயாதீனமான
சங்கத்தை சுதந்திரமாக ஸ்தாபிப்பதற்கு தாங்கள் பொதுவாகக் கூடுவதற்குத்
திட்டமிடுவதற்கும் அழைப்பு விடுக்கிறார்கள்.
4.
விற்கப்பட்டு விட்ட அல்லது மூடப்பட்டு விட்ட அல்லது தனியார்மயமாக்கப்பட்டு விட்ட
பொதுத்துறை நிறுவனங்களும் அதேபோல் மக்களுக்குச் சொந்தமான பொதுத்துறையும் பறிமுதல்
செய்யப்பட வேண்டும்,
மக்களின் பெயரில் அத்துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் அத்துடன் தொழிலாளர்கள் மற்றும்
தொழில்நுட்பப் பணியாளர்கள் கொண்ட ஒரு புதிய நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்.
5.
அனைத்து
வேலையிடங்களிலும் உற்பத்தி,
விலைகள்,
விநியோகம் மற்றும் ஊதியங்களைக் கண்காணிக்க
தொழிலாளர்களது’
கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
6.
ஆட்சியின் சம்மதத்திற்கோ அல்லது அதனுடன் பேச்சுவார்த்தைக்கோ காத்திருக்காமல் ஒரு
புதிய அரசியல் சட்டம் அபிவிருத்தி செய்யப்படுவதற்கும் உண்மையான மக்கள் குழுக்களைத்
தேர்ந்தெடுப்பதற்கும் அனைத்துத் துறைகளினது மற்றும் மக்களின் அரசியல் போக்குகளது
பொதுவான ஒரு அவைக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஒரு
பெரும் தொழிலாளர்களது ஆர்ப்பாட்டமானது
2011
பிப்ரவரி
11
வெள்ளியன்று தஹ்ரீர் சதுக்கத்தில் புரட்சியுடன் இணைந்து கொண்டு எகிப்திய
தொழிலாளர்களின் கோரிக்கைகளை அறிவிக்கும்.
புரட்சி
வாழ்க!
எகிப்திய தொழிலாளர்கள் வாழ்க!
எகிப்திய இளைஞர்களின் கிளர்ச்சி
-
மக்களுக்காக மக்கள் நடத்தும் புரட்சி வாழ்க!
பிப்ரவரி
22
அன்று
சுதந்திர தொழிற்சங்கவாதிகளின் பெயரில் ஒரு அறிக்கை பதிவிடப்பட்டது.
”புரட்சி-சுதந்திரம்-சமூக
நீதி மற்றும் புரட்சியில் தொழிலாளர்களின் கோரிக்கைகள்”
என்ற தலைப்பிலான அது இவ்வாறு செல்கிறது:
ஓ ஜனவரி
25
புரட்சியின் நாயகர்களே!
தற்போதைய காலகட்டத்தில் எகிப்து எங்கிலும் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின்
வேலைநிறுத்தங்கள்,
உள்ளிருப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைக் கண்டிருக்கக் கூடிய பல்வேறு
வேலையிடங்களில் இருந்து வரக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தைச்
சேர்ந்தவர்களாகிய நாங்கள்,
வேலைநிறுத்தம் செய்கின்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஐக்கியப்படுத்துவதே சரி
என்றும்,
அப்போது தான் எகிப்து மக்கள் செய்து காட்டியிருக்கக் கூடிய,
உயிர்த்தியாகிகள் இரத்தம் சிந்தியிருக்கக் கூடிய நமது புரட்சியின் இலக்குகளின்
ஒருங்கிணைந்த பாகமாக அவை ஆக முடியும் என்றும் கருதுகிறோம்.
இந்தப் புரட்சியின் சமூக அம்சத்தை மறு உறுதி செய்வதற்கும் புரட்சியால் பலன் பெற
வேண்டிய அதன் அடித்தட்டு மக்களிடம் இருந்து அது பறித்துச் செல்லப்படுவதைத்
தடுப்பதற்கும் தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளை ஒன்றாகக் கொண்டுவருகிற ஒரு
தொழிலாளர்களது வேலைத்திட்டத்தை உங்களுக்கு அளிக்கிறோம்.
ஜனவரி
25
புரட்சிக்கு முன்னதாக நாங்கள் எழுப்பிய அத்துடன் இந்த மகத்தான புரட்சிக்கு
முகவுரையின் பகுதியாக இருந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் இவை:
புரட்சி
பெற்றெடுத்த சமூக நீதிக் கோட்பாட்டை சாதிக்கும் பொருட்டு,
தேசிய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்துவது,
அத்துடன் அதிகப்பட்ச ஊதியங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியங்களுக்குமான இடைவெளியை
அதிகப்பட்சம் குறைந்தபட்சத்தைக் காட்டிலும்
15
மடங்குக்கு மிகைப்படாமல் அமைப்பதன் மூலம் குறைப்பது;
வேலைவாய்ப்பற்றவர்களுக்கான நல உதவிகளை வழங்குவது,
அதேபோல் ஏறும் விலைவாசிக்கு ஏற்றவாறு அதனைத் தொடர்ந்து அதிகரிப்பது.
நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகள் இல்லாமல் சுயாதீனமான தொழிற்சங்கங்களை
அமைப்பதற்கான சுதந்திரம்,
அத்துடன் தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்களுக்கான பாதுகாப்பு.
உடலுழைப்பு வேலை செய்பவர்கள் மற்றும் அலுவலக தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் தொழில்முறைப் பணியாளர்களுக்கு வேலைப் பாதுகாப்பு மற்றும்
வேலைநீக்கத்திலிருந்தான பாதுகாப்பு ஆகியவற்றுக்கான உரிமை.
தற்காலிகத் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதோடு
வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும்.
தொழிலாளர்களை தற்காலிக ஒப்பந்தங்களில் பணியமர்த்துவதற்குக் கூறும் அத்தனை
சாக்குபோக்குகளும் இல்லாதபடி நாம் செய்ய வேண்டும்.
தனியார்மயமாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் மீண்டும் தேசியமயமாக்குவது அத்துடன்
செயலிழந்து போன ஆட்சியின் கீழ் நமது தேசியப் பொருளாதாரத்தையே சிதைத்திருக்கும்
அவப்பெயர் பெற்ற தனியார்மயமாக்க வேலைத்திட்டத்திற்கு ஒரு முழுமையான முற்றுப்புள்ளி
வைப்பது.
நிறுவனங்களை திட்டமிட்டு செயல்திறனில்லாமல் நடத்தி அவற்றை விற்றுத் தள்ளும் வகையில்
அவற்றின் மீது திணிக்கப்பட்ட ஊழல்படிந்த மேலாளர்களை முற்றிலுமாய் நீக்குவது.
ஓய்வு
வயதைக் கடந்தும் ஆலோசகர்களாக தேசிய வருவாயில்
3
பில்லியன் தொகையை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆட்களைக் குறைத்து இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களைத் திறந்து விடுவது.
விலைவாசி ஏறாமல் பார்த்துக் கொண்டு ஏழைகளுக்கு சுமையேற்றாமல் பாதுகாக்க பொருட்கள்
மற்றும் சேவைகளில் விலைக் கட்டுப்பாட்டை அமலாக்குவதற்கு மீண்டும் திரும்புவது.
இப்போது
தோல்வியடைந்த ஆட்சியின் எச்ச சொச்சங்களுக்கும் மற்றும் நிறுவனங்களை விற்று
விடுவதற்கு முன்னதாக அவற்றை நஷ்டத்தில் இயக்குவதற்காக அவற்றில் வேலைகளில்
திணிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்க எதிராக வேலைநிறுத்தம் செய்பவர்கள்,
உட்பட எகிப்தியத் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு,
உள்ளிருப்பு போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கு,
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உரிமை.
இந்தப் புரட்சி சொத்தை நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பதற்கு இட்டுச் செல்லாது போனால்,
இதனால் பயனில்லை என்பது எங்கள் கருத்து.
சமூக சுதந்திரங்கள் இல்லாமல் சுதந்திரங்கள் முழுமையடைவதில்லை.
வாக்களிப்பதற்கான உரிமை ரொட்டித் துண்டுக்கான உரிமையின் மீது இயல்பாகத்
தங்கியுள்ளது.
உற்பத்தி அதிகரிப்புக்கு ஆரோக்கியப் பராமரிப்பு என்பது ஒரு அவசியமான நிபந்தனை ஆகும்.
செல்லரித்துப் போன ஆட்சியின் கீழ் ஊழலின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத்
திகழும் எகிப்திய தொழிற் சங்கக் கூட்டமைப்பைக் கலைப்பது.
அதற்கு எதிரான சட்டத் தீர்ப்புகளை அமல்படுத்தி அதன் நிதியச் சொத்துகளையும்
ஆவணங்களையும் பறிமுதல் செய்வது.
ETUF
மற்றும்
அதன் உறுப்பினர் சங்கங்களின் தலைவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதும்
அவர்களிடம் விசாரணை நடத்துவதும்.
8.
இந்த அறிக்கைகள் குறித்து சொல்வதற்கு இரு அம்சங்கள் இருக்கின்றன.
முபாரக் வெளியேற்றத்தில் தலைமைக் காரணியாக இருந்த தொழிலாள வர்க்க இயக்கத்தின்
சக்தியை இவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
ஆயினும் அரசியல் கோரிக்கைகள் இல்லாதிருக்கும் குணாம்சத்தையும் இவை கொண்டிருக்கின்றன.
தொழிலாளர்கள் அரசியல் அரங்கிற்குள் இப்போது தான் வரத் தொடங்கியிருக்கின்றனர் என்கிற
உண்மையில் இருந்து தான் இந்நிலை எழுகிறது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கு இல்லாதிருப்பது ஒரு பலவீனமே என்பதோடு
தொழிலாளர்கள் போர்க்குணத்துடனான பொருளாதாரப் போராட்டங்களிலும் சுயாதீனமான
தொழிற்சங்கங்களைக் கட்டுவதிலும் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும்
மற்றும் அரசியலை முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவக்
கட்சிகளும் அமைப்புகளும் பார்த்துக் கொள்வார்கள் என்று கருதும் அரசியல் போக்குகளின்
நேரடிச் செல்வாக்கினையும் அது பிரதிபலிக்கக் கூடும்.
9.
இந்தக் கேள்வியில் மேலும் தெளிவுபெற இனிவரும் நிகழ்வுகள் உதவிசெய்யும்.
எப்படியிருந்தபோதிலும் இராணுவத்தின் தலைமைப் பிரிவுகள் மேலிருந்து தலையிடுவது
அவசியம் எனக் கருதியது ஏன் என்பதை இந்த அறிக்கைகள் தெளிவாக்குகின்றன.
எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை,
அதிகாரத்தை சுலைமானிடம் ஒப்படைப்பது அதே சமயத்தில் முற்றுமுதலான அடக்குமுறையை
மேற்கொள்வது ஆகியவை உட்பட முந்தைய சூழ்ச்சிகள் எல்லாம் பயனளிக்கப் போவதில்லை என்பது
தெளிவாகத் தெரிந்தது.
இயக்கம் இடது நோக்கி நகர்ந்து ஆட்சியின் அடித்தளங்களையே தாக்கும் நிலையில் இருந்தது
-
தொலைக்காட்சி அலுவலகங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இருந்தன;
ஜனாதிபதி மாளிகை நோக்கிப் பேரணி நடத்துவதற்கான திட்டம் இருந்தது.
இராணுவத் தலைமைக்கு பின்வரும் கேள்வி எழுந்தது:
இந்த இயக்கத்தை எப்படித் தணிப்பது,
கலைப்பது?
இயக்கத்தை இரத்தத்தில் மூழ்கடிக்க முயலும் வாய்ப்பையும் இராணுவத் தலைமை
பரிசீலித்தது என்பது நிச்சயம்.
ஆனால் அதில் பிரம்மாண்டமான ஆபத்துகள் இருந்தது,
இராணுவத்தின் கட்டாயச் சேர்க்கை தன்மையையும் இராணுவ அதிகாரிகளில் கீழ்ப் பதவிகளில்
உள்ளவர்கள் போராட்டங்களின் கோரிக்கைகளுக்கு அளிக்கும் ஆதரவையும் கணக்கிலெடுத்துப்
பார்த்தால்,
இராணுவத்துக்கும் மக்களுக்கும் மோதல் வந்தால் இராணுவத்தின் சில பிரிவுகள் மக்களின்
பக்கத்திற்குப் போய் விடலாம்.
இந்த யோசனைகள் தான் முபாரக்கை வெளியேற்றுவதற்கு இட்டுச் சென்றது.
பிப்ரவரி
10,
வியாழனன்று அவர் வெளியேறுவதற்கு ஆய்த்தமாக இருந்தார்,
ஆனால்
தனது குடும்பத்தினருடனும்,
சந்தேகமின்றி இராணுவப் பிரிவுகளுடனும் நடத்திய தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப்
பின்னர்,
அவர் பதவி இறங்கவில்லை.
வெளியேற அவர் மறுத்தது இயக்கத்தின் கோபத்தை அதிகமாக்கியது,
அப்போது அவர் வெளியேறுவதற்கு அழுத்தம்கொடுத்துக்கொண்டிருந்த இராணுவத்தின் கன்னை
தலையிட்டு அவரது வெளியேற்றத்தை மேலிருந்து செயல்படுத்தியது.
10.
இந்த நடவடிக்கை முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ எதிர்க்கட்சிக் குழுத்
தலைவர்களின் ஒப்புதலோடு தான் நடந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முபாரக்
வெளியேற மறுத்து மக்கள் இயக்கம் ஒரு கிளர்ச்சிகரத் தன்மையை எடுத்துக் கொண்டிருந்த
சமயத்தில் மாற்றத்திற்கான தேசியக் கூட்டணி அமைப்பின் தலைவரான முகமது
எல்பரேடேய் கூறியதில் அவர்களது நிலைப்பாடு சுருங்கக் கூறப்பட்டது.
“எகிப்து
வெடிப்பைக் காண இருக்கிறது”
என்று அவர் அறிவித்தார்.
“நாட்டைப்
பாதுகாக்க இராணுவம் தலையிட்டாக வேண்டும்”.
தொழிலாள வர்க்கத்தின் ஆழமான இயக்கம் ஆட்சிக்கு மட்டும் அச்சுறுத்தல் அல்ல அது
பாதுகாத்த தனியார் சொத்துடைமைக்கும் தான் என்கிற அம்சமே அவர்களைப் பயமுறுத்தியது.
அபிவிருத்தியுறும் கிளர்ச்சியைத் தலைசீவுவதற்கும் முபாரக்கை நீக்கி விட்டு
ஒட்டுமொத்த ஆட்சியைக் காப்பாற்றுவதற்கும் இராணுவம் தலையிட்டது.
11.
அதிகாரத்தைக் கையிலெடுத்த நிலையில்,
இராணுவம் தனது நிலையை தயார்ப்படுத்திக்கொண்டது. மக்கள் இயக்கம் கலைய வேண்டும்,
வேலைநிறுத்தங்கள் முடிய வேண்டும்,
ஒரு புதிய அரசியல்சட்டம் மற்றும் தேர்தலுக்கு தயாரிப்பு செய்யும் கடமையை செய்யக்
கிளம்புவதற்கு இராணுவம் அனுமதிக்கப்பட வேண்டும். அதன் முன்னோக்கு தெளிவாய்
இருந்தது: மக்கள் இயக்கத்தின் தலையைச் சீவுவதற்கு முதலாளித்துவ மற்றும்
குட்டி-முதலாளித்துவ எதிர்க்கட்சிக் குழுக்களை பயன்படுத்தி அதனைக் கலைத்து
அதன்மூலம் ஒரு அடக்குமுறை மேற்கொள்ளப்படுவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு அது
நோக்கம் கொண்டுள்ளது.
12.
இதுவரையான நிகழ்வுகளைக் கொண்டு உண்மையில் புரட்சி என்பதான ஒன்று அங்கு நடக்கவில்லை
என்பதாக சில தரப்புகளில் முடிவு கூறப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது
Stratfor
உளவு
வலைத் தளத்தின் ஜோர்ஜ் ஃபிரைட்மன் முன்னெடுக்கும் கருத்து. ஃபிரைட்மனை பொறுத்தவரை,
இராணுவத்தின் பிரிவுகள் முபாரக்கை அகற்ற விரும்பின,
இதை ஏற்பாடு செய்வதற்கு அவசியமான நெருக்கடியான நிலையை முபாரக்கிற்கு எதிரான மக்கள்
இயக்கம் அவர்களுக்கு வழங்கியது.
”ஆர்வத்திற்கும்
யதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி”
(“The Distance Between Enthusiasm and Reality”)
என்று
தலைப்பிட்டதொரு கட்டுரையில் அவர் எழுதுகிறார்:
“நாம்
பார்ப்பது என்னவென்றால் முபாரக் போயிருக்கிறார்,
அவர் பணியாற்றிய இராணுவ ஆட்சி தனது அதிகாரத்தை அதிரடியாக அதிகரித்துக் கொண்டு
விட்டது....இந்த இடத்தில்,
என்ன நடக்கப் போகிறது என்பதே நமக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. என்ன நடந்திருக்கிறது
என்பது மட்டும் தான் நமக்குத் தெரிகிறது. முபாரக் பதவியில் இல்லை,
இராணுவ ஆட்சி அப்படியே இருக்கிறது,
அது முன்னெப்போதையும் விட வலிமையாய் ஆகியிருக்கிறது....கடந்த 72 மணி நேரத்தில்
நடந்திருக்கிற யதார்த்தமும் உலகின் பெரும்பகுதி அதற்குக் கொடுக்கும் பொருள்
விளக்கமும் திகைப்பூட்டும் அளவுக்கு வேறுவேறாய் இருக்கின்றன. அதிகாரம் அரசிடம்
இருக்கிறதே அன்றி,
மக்களிடம் இல்லை. எங்கள் கண்ணோட்டத்தில்,
பலர் கூறியதைப் போன்று அதிகாரம் ஒருபோதும் மக்களிடம் இருக்கவில்லை.... ஒரு உண்மையான
புரட்சியில் போலிசும் இராணுவமும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. எகிப்தில்
இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோத முடிவு செய்யவில்லை என்றால் அதன் காரணம்
இராணுவமே அதில் பிரிந்துபட்டிருந்தது என்பதல்ல,
மாறாக முபாரக்கை அகற்றுவது என்கின்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் மையமான கோரிக்கையில்
அது உடன்பட்டிருந்தது என்பதே ஆகும். எகிப்திய ஆட்சியின் சாரமாக இராணுவம் தான்
இருந்தது என்பதால்,
இதனை ஒரு புரட்சியாகக் கருதுவதென்பது விநோதமானது.”
13.
முபாரக் தனது மகன் கமாலை பதவிக்கு வாரிசாக்க முயன்றபோது இராணுவம் அவரை எதிர்க்கத்
தொடங்கியதாக ஃபிரைட்மன் கூறுகிறார்.
ஆளும் எந்திரத்திற்குள்ளாக,
பொருளாதார அபிவிருத்திகளில் இருந்தும் இராணுவத்தின் முக்கியமான பொருளாதாரப்
பாத்திரத்தில் இருந்தும் எழுந்த கருத்துவேறுபாடுகளும் சொல்லப்போனால் மோதல்களும் கூட
நிச்சயமாக இருந்தன.
ஆனால் இந்த பகுப்பாய்வு முற்றிலும் ஒரு பக்கசார்பானதாக இருக்கிறது.
மக்கள் இயக்கத்தின் இயங்குநிலையைப் பொருத்த வரை இது வெறுமனே தஹ்ரிர் சதுக்க மக்களை
மட்டுமே கவனத்தில் வைக்கிறது.
ஆனால் முந்தைய ஐந்து அல்லது ஆறு ஆண்டு காலத்தில்
அபிவிருத்தியுற்றுக் கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்தின் இயக்கமும் அது முபாரக்கிற்கு
எதிரான இயக்கம் தீவிரமடைந்தபோது தொடர்ச்சியான போராட்டங்களாய் வெடித்ததும் அதனினும்
முக்கியமானதாகும்.
எகிப்து துரிதமாக ஒரு ஸ்தம்பித்த நிலைக்கு வந்து கொண்டிருந்தது.
ஒரு பொது வேலை நிறுத்தம் அபிவிருத்தியுறவில்லை ஆனால்
சூழ்நிலை அந்த திசையில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு விடாமல் தடுக்கவும் ஆட்சியைக் காப்பாற்றவும் இராணுவம்
முற்கூட்டியே உள்ளே புகுந்தது.
14.
அதனால் எப்படி இதைச் செய்ய முடிந்தது?
முக்கியமான காரணம் ஒரு புரட்சிகரத் தலைமை இல்லாதது.
எகிப்தில் நாம் கண்டது புரட்சிகரத் தலைமையற்ற புரட்சிகர முன்னோக்கற்ற ஒரு புரட்சிகர
வெடிப்பு.
தொழிலாள வர்க்கம் விடுதலையடைவதென்பது தொழிலாள வர்க்கத்தின் கடமையே தான் என்பதை
மார்க்ஸ் வலியுறுத்தினார்.
அதனால் ஒரு புரட்சிகரக் கட்சி என்பதற்கு எந்த அவசியமும் இல்லையென்றும்
“முன்னணிப்
படை வாதம்”
(”vanguardism”)
என்பதற்கான காலம் எல்லாம் போய் விட்டது என்றும் அனைத்து வகை தன்னியல்புவாதிகளும்
இதற்கு பொருள்விளக்கம் கொடுக்கின்றனர்.
எகிப்தின் அனுபவங்கள் அதற்கு நேரெதிரானதை நிரூபிக்கிறது
-
ஒரு
புரட்சிகர எழுச்சியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் புரட்சிகரக் கட்சி என்பது தான்
தீர்மானகரமான காரணியாக இருக்கிறது.
ஆனால் புரட்சிகரக் கட்சியின் பணியின் வழியாக மட்டுமே தொழிலாள வர்க்கமானது அரசியல்
விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும்,
தனது கடமைகளை வரையறுக்கவும் அவற்றை மேற்கொள்வதற்கு அவசியமான அமைப்புகளை
உருவாக்கவும் முடியும்.
அத்தகையதொரு கட்சி இல்லையென்றால்,
தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் எத்தனை சக்திவாய்ந்ததாக இருந்தாலும் அதன் தலைவிதி
அதன் தலைக்கு மேலான மற்ற சக்திகளால் தான் தீர்மானிக்கப்படுவதாய் ஆகும்.
இதுதான் எகிப்தின் நிகழ்வுகளில் இருந்து இதுவரை எழுந்திருக்கக் கூடிய மத்திய
படிப்பினை ஆகும்.
15.
கெய்ரோவின் நிலைமை
1917ல்
பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யாவை நினைவுக்குக் கொண்டுவருகிறது.
அவசியமான மாற்றங்களுடன்,
லெனின்
1917
ஏப்ரலில் செய்த பகுப்பாய்வை நினைவுகூர்வது பெறுமதியானது:
புறநிலை உண்மைகளை தனிநபர்களையும் இன்னபிறவற்றையும் கொண்டு விளங்கிக் கொள்ளாமல்
வெகுஜன மக்களையும் வர்க்கங்களையும் கொண்டு விளங்கிக் கொள்கின்ற மார்க்சிஸ்டுகளுக்கு
அப்போதைய நிலைமையின் தனித்துவமான தன்மை தான் அப்போதைய தருணத்திற்கான
தந்திரோபாயத்தின் தனித்துவமான தன்மையையும் தீர்மானிக்க வேண்டும்.
நிலைமையின் இந்த தனித்துவமான தன்மை முதலாவதாக
’புரட்சிகர-ஜனநாயக
வாசகங்கள் என்னும் இனிப்பு நீரில் வினாகிரியையும் பித்தவுப்பையும் கலப்பதற்கு’
அழைக்கிறது.
நமது வேலையானது விமர்சனங்களில் ஒன்றாக,
குட்டி முதலாளித்துவ சமூகப் புரட்சிகர மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் தவறுகளை
விளக்குவனவாக,
ஒரு நனவான பாட்டாளி வர்க்க,
கம்யூனிஸ்டுக் கட்சிக் கூறுகளை தயாரிப்பு செய்வதுவும் உறுதியாக்குவதுமாக,
அத்துடன்
‘பொதுவான’
குட்டி-முதலாளித்துவ
நச்சுப் பாதிப்பில் இருந்து பாட்டாளி வர்க்கத்தை குணப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
இது பிரச்சார வேலையைத் தவிர
‘வேறொன்றுமில்லை’
என்பதாய் தோன்றலாம்,
ஆனால் உண்மையில் இது மிக நடைமுறைரீதியான புரட்சிகர வேலை,
ஏனென்றால் ஸ்தம்பித்து நின்று விட்ட,
தானாக வாசகங்களுக்குள்ளேயே சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிற,
தொடர்ந்து
‘நேரத்தை
மட்டும் குறித்துக் கொண்டிருக்கிற’
ஒரு புரட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை,
அதற்குக் காரணம் வெளிப்புறத்தில் இருந்தான தடைகளும் இல்லை,
முதலாளித்துவத்தின் வன்முறையும் இல்லை
(படைவீரர்களாய்
இருக்கும் வெகுஜன மக்களுக்கு எதிராக வன்முறையை செயல்படுத்தப் போவதாய் குச்கோவ்
இன்னும் மிரட்டிக் கொண்டு தான் இருக்கிறார்),
மாறாக மக்களின் அர்த்தமற்ற நம்பிக்கை தான் காரணமாக இருக்கிறது.”
16.
எகிப்தின் சூழ்நிலை வேறு என்பது உண்மையே.
ஆனால் பொதுவான அம்சம் என்னவென்றால்...பரந்த
மக்களிடையே இருக்கும் ஒரு நம்பிக்கையின் காரணமாக
-
அதற்கு
மேல் ஒன்றுமில்லை,
ஏனென்றால் பரந்த நம்பிக்கையின்மை அங்கு இருக்கிறது
-
மக்கள்
இயக்கம் ஒரு ஸ்தம்பிப்பு நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறது,
இராணுவம் சலுகைகள் வழங்கத் தள்ளப்படும் என்பதும் ஒரு கூடுதல் ஜனநாயகமயாமான ஆட்சி
தோன்றும் என்பதுமே அந்த நம்பிக்கை.
ஆனால் ஆட்சியில் செய்யப்படும் ஒரு சில அலங்காரமான மாற்றங்களால் புரட்சி முடிந்து
விட முடியாது ஏனென்றால் அதன் அடிப்படையான உந்துசக்திகள் பொருளாதார நிகழ்முறைகளில்
இருந்து எழுகின்ற தீர்க்கவியலாத வர்க்க முரண்பாடுகளில் வேர் கொண்டிருக்கின்றன.
புதிய ஒழுங்குமைப்பினுள் ஒரு இடம் வேண்டுவது தான் குட்டி முதலாளித்துவ மற்றும்
நடுத்தர வர்க்கப் பிரிவுகள் விரும்பும் ஜனநாயகம்.
ஆனால் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பதன் உள்ளடக்கமே வேறு.
உணவு உரிமைக்கு வழியில்லாத போது வாக்களிக்கும் உரிமையால் என்ன பயன்?
ஒரு வாழத்தக்க ஊதியம்,
செல்வத்தை வருவாய் அதிகமுடையவர்கள் பக்கம் இறைக்கக் கூடிய தனியார்மயமாக்கங்களுக்கு
முடிவு கட்டுவது,
கண்ணியமான வேலைகள் மற்றும் சமூக நிலைமைகளைப் பெறுவது ஆகிய தனது சொந்த கோரிக்கைகளை
முன்னெடுப்பதற்கான திறம் கிட்டுவதே தொழிலாள வர்க்கத்திற்கான ஜனநாயகம் என்பதன்
அர்த்தமாகும்.
இந்தக் கோரிக்கைகள் முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளின் கட்டமைப்புக்குள்ளாக
பூர்த்தி செய்யப்பட முடியாது.
இதன் அர்த்தம் என்னவென்றால் முன்னாலுள்ள பெரும் வர்க்க மோதல்கள் எல்லாம்,
நாம் ஏற்கனவே கண்டிருப்பதைப் போல,
சர்வதேசப் பரிணாமங்களை எடுக்கக் கூடிய போராட்டங்களே.
17.
பல்வேறு
“இடது”
அரசியல் போக்குகளின் பாத்திரத்தை தெளிவுபடுத்துவது இந்தப் போராட்டங்களுக்கான மிக
அத்தியாவசியமான தயாரிப்புகளில் ஒன்றாகும்,
ஏனென்றால் எகிப்திய புரட்சியின் அடுத்த கட்டத்தில்,
அவர்கள் தான் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஒழுங்கிற்கு அடிபணியச் செய்ய
முனையும் அதி முக்கிய பாத்திரத்தை ஆற்றுவார்கள்,
அதன்மூலம் எதிர்ப் புரட்சிக்கான பாதையை திறந்து விடுவார்கள்.
18.
எகிப்திலுள்ள இந்தக் குழுக்களில் மிக முக்கியமானது புரட்சிகர சோசலிஸ்டுகள் குழு.
இவர்கள் சர்வதேச சோசலிசப் போக்கு என்கிற அமைப்புடன் சர்வதேசரீதியாக பிணைப்பு
கொண்டவர்கள்,
இந்த அமைப்பின் மிக முக்கிய கட்சி பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சி
(SWP).
இதனை
ஸ்தாபித்த டோனி கிளிஃப் இன்
“அரசு
முதலாளித்துவ”
போக்கு
(state
capitalist) 1940களின்
இறுதியில் நான்காம் அகிலத்தின் முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் கைதுறந்ததாகும்.
அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிஸ்டு அமைப்பு
(ISO)
என்கின்ற அமைப்பும் ஒரு உத்தியோகபூர்வமான இணைப்பை இனியும் கொண்டிருக்கவில்லை
எனினும் சர்வதேச சோசலிச போக்குடன் அரசியல்ரீதியாக பிணைப்பு கொண்டதாகும்,
.
19.
இந்தப் புரட்சிகர சோசலிஸ்டுகள் பிப்ரவரி
1
அன்று
எகிப்துப் புரட்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டனர்,
இது பிப்ரவரி
6
அன்று
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது முதல் பரவலாய் விநியோகிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
பிரிட்டனில் இருக்கக் கூடிய
SWP
மற்றும்
அமெரிக்காவில் இருக்கக் கூடிய
ISO
ஆகியவற்றின் வலைத் தளங்களிலும் மற்றும் பல இடங்களிலும் இந்த அறிக்கை பிரதானமாய்
இடம் பெற்றிருக்கிறது.
புரட்சியை ஒரு
“மக்கள்
புரட்சி”
என வர்ணிக்கும் இந்த அறிக்கை இதில் தொழிலாளர்கள் இணைய அழைப்பு விடுக்கிறது.
அது இவ்வாறு அறிவிக்கிறது:
“எகிப்தின்
இளைஞர்களும்,
மாணவர்களும்,
தொழிலாளர்களும் ஏழைகளும் தான் இந்தப் புரட்சியின் எஜமானர்கள்.
சமீப காலங்களில்,
உயரடுக்கினர்,
கட்சிகள் மற்றும் அடையாளங்களாய் கூறிக் கொள்வோர் என ஏராளமானோர் புரட்சியின்
மீதமர்ந்து அதனை உரிமையுடைய எஜமானர்களிடம் இருந்து கடத்திச் செல்லப் பார்க்கின்றனர்.”
ஆனால் தட்டிப் பறிப்பவர்கள் நிச்சயமாய் யாராய் இருக்கக் கூடும் என்கிற கேள்வியில்,
இந்த அறிக்கை ஒரு இராஜதந்திர அமைதியைக் கடைப்பிடிக்கிறது.
இவர்களில் முகமது எல்பரேடேய் மற்றும் அவரது மாற்றத்திற்கான தேசியக் கூட்டணி மற்றும்
முஸ்லீம் சகோதரத்துவம் ஆகியன உண்டா?
புரட்சிகர சோசலிஸ்டுகளுக்கு இந்த இரண்டு அமைப்புகளுடனும் உள்ள உறவை ஆராய்ந்தால்
இந்த அமைதிக்கான காரணம் தெளிவாகும்.
20.
இந்த அறிக்கையில் இராணுவம் என்கின்ற அதி முக்கியக் கேள்வியை கையாளுகின்ற இடம் தான்
அரசியல்ரீதியாய் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாய் இருக்கிறது.
“ஒரு
மக்கள் இராணுவம் என்பது புரட்சியைப் பாதுகாக்கும் இராணுவம்”
என்கிற தலைப்பின் கீழ் அவர்கள் எழுதுகின்றனர்:
“’இராணுவம்
மக்களின் பக்கம் இருக்கிறதா அல்லது மக்களுக்கு எதிராய் இருக்கிறதா?’
என்று ஒவ்வொருவரும் கேட்கிறார்கள்.
இராணுவம் என்பது ஒற்றைத் தொகுதியாக இருப்பது அல்ல.
படைவீரர்கள் மற்றும் இளநிலை அதிகாரிகளின் நலன்கள் பரந்த மக்களின் நலன்களோடு
ஒன்றுபட்டதாகும்.
ஆனால் மூத்த அதிகாரிகளோ முபாரக்கின் ஆட்கள்,
அவருடைய ஊழல்,
செல்வம் மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியைப் பாதுகாப்பதற்காக கவனத்துடன் தெரிவு
செய்யப்பட்ட ஆட்கள்.
இது அமைப்புமுறையின் ஒரு ஒருங்கிணைந்த பாகம்.
இராணுவம் இனியும் மக்களின் இராணுவம் அல்ல.
இந்த இராணுவம்
1973
அக்டோபரில் யூத இராணுவத்தைத் தோற்கடித்த இராணுவம் அல்ல.”
“இராணுவம்
நம் பக்கம் நிற்கிறது என்கிற சுலோகங்களால் நாம் முட்டாளாக்கப்பட்டு விடக் கூடாது”
என்று அந்த அறிக்கை தொடர்ந்து எச்சரிக்கச் செல்கிறது.
ஆனால் அந்த அறிக்கை தெளிவாய் சூசகம் செய்வது என்னவென்றால்,
இராணுவத்தின் தலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு அது
1973க்கு
முன் ஆற்றிய பாத்திரத்திற்குத் திரும்புமானால் அது மீண்டும் மக்கள் இராணுவமாக ஆக
முடியும் என்பது தான்.
நாசரின் சுதந்திர அதிகாரிகள் இயக்கத்தின் தலைமையின் கீழான அந்த இராணுவம்
1952ல்
பாரூக் மன்னரின் முடியாட்சியைக் கவிழ்த்து விட்டு அதன்பின் தொழிலாள வர்க்கத்தின்
இயக்கத்தை ஒடுக்கியது.
21.
ஒவ்வொரு புரட்சியும் இராணுவம் என்கிற,
முதலாளித்துவ அரசின் அடித்தளத்தைக் கொண்ட
“ஆயுதம்தரித்த
மனிதர்களின் அங்கங்கள்”
குறித்த கேள்விக்கு முகம் கொடுத்தாக வேண்டியுள்ளது.
இராணுவத்தில் கட்டாயமாய் சேர்க்கப்பட்டவர்களும் இளநிலை அதிகாரிகளும் சமூகத்திற்கு
தலைமை தாங்கி நடத்தும் சமூக சக்தியை தொழிலாள வர்க்கத்தில் காணும் போது தான்
இராணுவம் நொறுக்கப்பட முடியும்.
சுயாதீனமான மக்கள் குழுக்கள்,
தொழிற்சாலைக் குழுக்களை உருவாக்குவது,
தொழிலாள வர்க்கத்தின் பரந்த அமைப்புகள் ஆகியவை எல்லாம் புரட்சிகரப் போராட்டத்தின்
பாதையிலேயே,
சமூகத்தை நடத்தும் பொறுப்பேற்கத் துவங்கவும்,
இந்த முன்னோக்கை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தீர்மானமான பாத்திரத்தை ஆற்றும்.
ஆனால் இதெல்லாம் எகிப்தில் புரட்சிகர சோசலிஸ்டுகளின் நோக்குநிலையாக இல்லை.
அவர்கள் பழைய ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு இராணுவத்தை மக்களை நோக்கித்
திருப்பிய நாசரின் இளநிலை அதிகாரிகளைக் கொண்ட இயக்கத்தைப் போன்ற ஒன்று திரும்ப
நடக்க எதிர்பார்த்திருக்கின்றனர்.
இராணுவத்தை நம்பாதீர்கள்....அதாவது
இப்போதைய அரசியல்வடிவத்திலான இராணுவத்தை.
ஆனால் ஒரு மக்கள் இராணுவம் என்பது வேறு விதமான விடயம்!
இங்கே தான் குட்டி முதலாளித்துவ அரசியல் வர்க்க தர்க்கத்தை நாம் காண்கிறோம்,
இத்தகையதொரு
“மக்கள்
இராணுவ”த்தின்
பாத்திரம் தொழிலாளர் இயக்கத்தை நசுக்குவதாய் இருக்கும்;
நாசருக்குக் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறையைக் காட்டிலும் மிகவும்
மிருகத்தனத்துடன் இது இருக்கும்,
இதற்கு எல்லாவற்றுக்கும் மேலான காரணமாய் இருப்பது என்னவென்றால்,
பரந்த மக்களுக்கு நாசர் அளித்த சலுகைகளை சாத்தியமாக்கிய பொருளாதாரக் காரணிகளும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் சமனப்படுத்திக்
கொள்வதற்கு அவரை அனுமதித்த சர்வதேச சக்திகளிடையேயான உறவும் இனியும் இருக்கவில்லை
என்பதால்.
22.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல,
புரட்சிகர சோசலிஸ்டுகள் அமைப்பு எல்பரேடேய் மற்றும் முஸ்லீம் சகோதரத்துவம் ஆகிய
சக்திகளின் பாத்திரங்கள் குறித்த விடயத்தில் அமைதி காக்கிறது.
இதற்கான காரணத்தை இந்த அமைப்புகளுடன் அவர்கள் கொண்டிருக்கும் உறவு தெளிவாக்குகிறது.
சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில்,
எகிப்தின் அரசியல் நிலைமை குறித்தும் முபாரக்கை எதிர்ப்பதற்கான எல்பரேடேயின் முடிவு
குறித்தும் தொடர்ச்சியான செய்திகளை
ISO
வெளியிட்டது.
ஓமர் கூறியதன் படி,
“நெடுங்காலமாக
வறுமையாலும் அரசியல் ஒடுக்குமுறையாலும் சீரழிந்து கொண்டிருந்த ஒரு நாட்டிற்கு
எல்பரேடேயின் பிரச்சாரம் மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளது”
அத்துடன் மூன்று தசாப்த கால அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் சிதைவுற்றுக்
கொண்டிருந்த வாழ்க்கை நிலைமைகளுக்குப் பின்னர்,
“மில்லியன்கணக்கான
எகிப்தியர்கள் ஆட்சிக்கு சவால் விடும் முகமது எல்பரேடேயின் முடிவால் உற்சாகம்
பெற்றுள்ளனர்.”
எல்பரேடேய் திரும்புவதில் பிறந்த உற்சாகம்
“பல
வருட கால ஏமாற்றங்கள் மற்றும் துன்பங்களின்”
விளைவு,
இவ்வாறு கூறுவதோடு முடிந்து விட்டது.
எல்பரேடேயின் பிரச்சாரத்தைப் பொருத்தவரை,
பெரும்பான்மையான மக்கள் சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் அரசியல் சுதந்திரங்களை
ஒத்த விடயங்களுக்கு தாகம் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ் இது நடந்தது என்றும் இந்த
பொருளாதார மற்றும் அரசியல் யதார்த்தங்களை அவர் பற்றிக் கொள்ள முனைந்தார் என்றும்
ஓமர் குறிப்பிட்டார்.
சுயாதீனமான தொழிற்சங்கவாதிகளுடன் சந்திப்புகள் நடத்தி அவர்
“ஏழை
விவசாயிகள் மற்ரும் தொழிலாளர்களை”
எட்டுவதற்கு முனைந்து கொண்டிருந்தார்,
அத்துடன்
”அவர்களது
குறைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்தார்”,
அத்துடன்
“சர்ச்சைக்குரிய
சமூகப் பிரச்சினைகளையும்”
கையில் எடுத்திருந்தார்.
23.
எல் பரேடேயின்
“சற்று
நடுநிலையான நிலைப்பாடுகளை”
(ஸ்காண்டினேவிய
நாடுகளை ஒத்த ஒரு சமூக ஜனநாயக அமைப்புமுறைக்கு ஆதரவாக)
குறிப்பிட்ட ஓமர்,
அவர் எகிப்து திரும்புவதற்கு எடுத்த முடிவு
“நாட்டில்
அரசியல் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது,
அத்துடன் ஜனநாயக ஆர்வலர்களுக்கும் ஒரு புத்தெழுச்சி பெற்ற தொழிலாள வர்க்க
இயக்கத்திற்கும் தங்களது சொந்த கோரிக்கைகளை கூடுதல் போர்க்குணமுற்ற வழியில் உந்தித்
தள்ளுவதற்கான நம்பிக்கையை அளித்திருக்கிறது”
என்றும் எழுதினார்.
எல்பரேடே சூழ்நிலையை கிளர்ந்தெழச் செய்வதென்பதற்கு அப்பால்,
தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் ஒரு வளரும் இயக்கத்திற்கான பதிலிறுப்பாகத்
தான் அவர் எகிப்துக்குத் திரும்பினார்.
அவரது உத்வேகம் ஒரு இயக்கத்தை உருவாக்குவதில் இருக்கவில்லை,
மாறாக நடந்து கொண்டிருக்கும் இயக்கம் மாற்றத்திற்கான தேசியக் கூட்டணி அமைப்பு
ஆலோசனையளிக்கும் பாதுகாப்பான பாதைகளின் வழியே செலுத்தப்படுகிறதா என்பதை உறுதி
செய்வதில் தான் இருந்தது.
தனது மூன்று பகுதி அறிக்கையின் முடிவில்,
ஓமர்
“இடது”
தனது வலப்பக்க சக்திகளுக்குப் பின்னால் பின்தங்கி விடுகிற அபாயத்தை கடமைக்கென
சுட்டிக் காட்டி,
தத்துவார்த்த தெளிவும் தாராளவாதிகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள்
இரண்டிலிருந்தும் அரசியல்ரீதியாக சுயாதீனப்பட்டு நிற்பதும் முக்கியமானது என்று
வலியுறுத்தினார்.
ஆனால் இன்னொரு அபாயம்
“தீவிர
இடது”
மற்றும் எல்பரேடேயின் ஜனாதிபதி வாய்ப்புக்கு குரல்கொடுக்க கலந்து கொள்ளாமல்
இருப்பது என்கிறார்:
“எல்பரேடேயின்
பிரச்சாரம் ஒரு திவாலான அமைப்புமுறையைக் காப்பாற்றுவதற்கான ஒரு தாராளவாத
முதலாளித்துவ முயற்சி என்று எகிப்திய சோசலிஸ்டுகள் விமர்சிப்பது சரியே என்றாலும்,
பரந்த மக்களின் நெருக்குதலின் கீழ் எல்பரேடேய் குறைந்தபட்சம்
உத்தியோகபூர்வமாகவேனும் தீவிர நிலைப்பாடுகளை,
உதாரணமாக இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவை குறித்த பிரச்சினையில்,
எடுப்பதற்கு தள்ளப்பட மாட்டார் என்று முன்கூட்டித் தீர்மானத்துக்கு வந்து விட
முடியாது.
இது போராட்டத்தில் உள்ள சாதாரண மக்களின் நம்பிக்கைக்கு வலுச் சேர்க்கும்.”
நிகழ்வுகளின் சோதனை மார்க்சியத்தின் வெகுகாலமாய் ஸ்தாபிக்கப்பட்ட பகுப்பாய்வை
ஏற்கனவே உறுதி செய்திருக்கிறது.
பிப்ரவரி
9-11
வரையான
தேதிகளில் மக்கள் இயக்கம் கெய்ரோ,
அலெக்சாண்டிரியா,
சூயஸ் மற்றும் வேறெங்கிலும் வளர்ந்து ஒரு கிளர்ச்சிகர திருப்பத்தைப் பெறத் தொடங்கிய
போது தீவிரமான மக்கள் அழுத்தத்தின் கீழ் எல்பரேடேய் எவ்வாறு பதிலிறுத்தார்?
பிப்ரவரி
10
அன்று
முபாரக் பதவி விலக மறுத்த நிலைக்குப் பின்னர் மக்கள் நெருக்குதல்
அபிவிருத்தியுறுவதை நன்கு அறிந்த நிலையில் எகிப்து வெடிப்பு நிலை காணவிருக்கிறது
என்றும்
“நாட்டைக்
காப்பாற்ற”
இராணுவம் தலையிட வேண்டும் என்றும் எல்பரேடேய் எச்சரித்தார்.
24.
இதேபோன்று எகிப்தில் முதலாளித்துவ எதிர்ப்பின் ஒரு கணிசமான பகுதியைக் கொண்ட ஒரு
அமைப்பான முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பை நோக்கிய எகிப்தின் புரட்சிகர சோசலிஸ்டுகளின்
மனோநிலை அரசியல் முன்னோக்கு குறித்த பிரச்சினைகளில் முக்கிய கேள்விகளை எழுப்புகிறது.
இஸ்லாமிய அமைப்புகள் பாசிஸ்டுகள் என்கிற காரணத்தின் பேரில் அவர்கள் மீதான அரசு
ஒடுக்குமுறையை ஆதரிப்பது என்பது தான்
1980களில்
எகிப்தில் முக்கிய
“இடது”
அமைப்புகளின் நிலையாக இருந்தது.
1928ல்
ஸ்தாபகமான முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு ரஷ்யப் புரட்சிக்குப் பின் மார்க்சிசம்
பெற்று வந்த செல்வாக்கை எதிர்க்கத் தான் முக்கியமாக ஸ்தாபிக்கப்பட்டது.
முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்புக்கு எகிப்திய முதலாளித்துவத்தின் உயரடுக்குகளில்
ஆழமான வேர்கள் உண்டு.
இந்த அமைப்புடன் தொடர்புபட்ட பொருளாதார நிறுவனங்கள் பொருளாதாரத்தின் தனியார்
துறையில்
40
சதவீதம்
அளவுக்கு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
1980களில்
இந்த அமைப்பு பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தைக் காண முடியாத நிலையில் இருந்த
பல்கலைக்கழகப் பட்டதாரிகளையும் மற்ற தகுதியான இளைஞர்களையும்
-
அரசு
நிதி ஒதுக்கீடு வெட்டு இதற்கு முக்கியக் காரணம்
-
தனது
அடிப்படை உறுப்பினர்களில் சேர்க்கத் தொடங்கியது.
நாசர் ஆட்சிக் காலத்து தேசிய அடிப்படையிலான பொருளாதார அபிவிருத்தியின் சகாப்தம்
முடிந்து போயிருந்தது.
1980கள்
“தடையில்லா
வணிக”
நவ தாராளவாத வேலைத்திட்டத்தின் பகுதியாக சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்பட்ட
பொருளாதார மறுசீரமைப்பு திணிக்கப்படுவதைக் கண்டது.
அதிருப்தியும் கோபமும் கொண்டிருந்த இளைஞர்களின் அடுக்கு முந்தைய காலமாய் இருந்தால்
இடதின் பக்கமாய் திரும்பியிருக்கும்,
ஆனால்
ஸ்ராலினிச இயக்கத்தின் சிதைவு மற்றும் உருக்குலைவு மற்றும் முதலாளித்துவ தேசிய
இயக்கத்தின் ஒட்டுமொத்த முன்னோக்கும் நிலைகுலைந்து போனது ஆகியவற்றால் அது இப்போது
முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் முஸ்லீம் சித்தாந்தங்கள் மற்றும் அரசியலை நோக்கித்
திரும்பியது.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,
இஸ்லாமிய அரசியல் குழுக்களின் வளர்ச்சி என்பது ஏழாம் நூற்றாண்டுக்குத் திரும்ப
வேண்டிய ஒரு வார்த்தைகளால் விளக்கமுடியாத உந்துதல் திடீரென இளைஞர்களின் மனதில்
எழுந்தது என அர்த்தமல்ல,
அதற்கு வெகு அப்பாற்பட்டு,
இருபதாம் நூற்றாண்டின் பிற்காலம் மற்றும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஆரம்பக்
காலத்து முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியால் உருவான சமூக மற்றும் அரசியல்
பதட்டங்களின் ஒரு வெளிப்பாடே ஆகும்.
25.
Middle East Report 2007
வசந்த
காலப் பதிப்பில் வெளியான ஒரு அறிக்கையில்,
புரட்சிகர சோசலிஸ்டுகள் அமைப்பின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஹோஸாம் எல்-ஹமாலாவி,
தனது அமைப்பின் நிலைப்பாட்டை விளக்கினார்:
”1980களின்
பிற்பகுதியில்,
ட்ரொட்ஸ்கியத்தால் செல்வாக்கு செலுத்தப்பட்ட எகிப்திய மாணவர்களின் சிறு வட்டங்கள்
ஆய்வு செய்வதற்கென ஒன்று கூடி இறுதியில்
1995
ஏப்ரலில் புரட்சிகர சோசலிஸ்டுகள்’
போக்கு
(Revolutionary Socialists’ Tendency)
என்கிற
அமைப்பாக உருவெடுத்தனர்.
ஸ்ராலினிச இடதுகளுக்கு தனித்து வேறுபட்ட விதத்தில்,
இந்த செயல்வீரர்கள்
‘சில
நேரங்களில் இஸ்லாமியவாதிகளுடன்,
ஒருபோதும் அரசுடன் இல்லை’
என்கின்ற சுலோகத்தை பல்கலைக்கழக வளாகங்களிலும் மற்றவெங்கிலும் தாங்கள் விநியோகித்த
இலக்கியத்தில் முன்வைத்தனர்.
நடைமுறையில் இந்த சுலோகம்
[இது
முதன்முதலில் பிரிட்டிஷ்
SWP
இன்
முன்னணி தத்துவாசிரியரான கிறிஸ் ஹார்மேனால் முன்னெடுக்கப்பட்டது]
‘ஜனநாயகப்
பிரச்சினை’களில்
முஸ்லீம் சகோதரத்துவ மாணவர்கள் கல்வி வளாகங்களில் முகம் கொடுத்த பிரச்சினைகளில்
-
அரசுப்
பாதுகாப்பு அமைப்பானது மாணவர் சங்கத் தேர்தல்களில் இஸ்லாமிய மாணவர்கள்
போட்டியிடுவதை தடைசெய்தபோதும் அல்லது இஸ்லாமிய மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கிய
போதும்
-
அவர்களுக்கு கைகொடுப்பதாய் ஆனது.”
இந்த தொடக்கங்களில் இருந்து ஒத்துழைப்பு அபிவிருத்தியுற்றது:
”1990களில்
நடந்த கல்வி வளாகக் கைகலப்புகள் தொடங்கி
2005-2006
கூட்டு
ஆர்ப்பாட்டங்கள் வரை முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பிற்கும் எகிப்திலுள்ள தீவிர
இடதுகளுக்குமான உறவுகள் நெடுந்தொலைவு வந்திருக்கின்றன.
மாணவர் சங்கங்கள் மற்றும் தொழிற்முறை கூட்டமைப்புகள் போன்று பக்கம் பக்கமாக இரண்டு
போக்குகளும் செயல்படுகிற இடங்களில் மிதமிஞ்சிய குரோதம் மறைந்து விட்டிருக்கிறது,
தந்திரோபாயங்களில் ஒரு சிறு அளவுக்கு ஒருங்கிணைப்பும் கூட இருக்கிறது.”
இந்தக் கட்டுரையுடன் ஆகஸ்டு
14, 2005
அன்று
எகிப்திய ஆட்சியை எதிர்த்து முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பும் புரட்சிகர சோசலிஸ்டு
அமைப்பும் நடத்திய ஒரு கூட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் புகைப்படமும்
இடம்பெற்றிருந்தது.
26.
வேறுபட்ட எதிரெதிர் போக்குகளை ஒன்றாய்க் கொண்டுவருவதில் புரட்சிகர சோசலிஸ்டுகள்
ஆற்றிய முக்கிய பங்கு
ISO
இதழில்
இராணுவத்தின் தந்திரங்களை பகுப்பாய்வு செய்து வெளியான ஒரு கட்டுரையில் வெளிச்சம்
போடப்பட்டிருக்கிறது.
கட்டுரை ஆசிரியர் சொல்கிறார்:
“இப்போது
இராணுவத்தின் தந்திரம்
2006ல்
முதன்முதலாய் கூட்டுச் சேர்ந்த விரிந்த கூட்டணியை நொருக்குவதை நோக்கமாய்க்
கொண்டிருக்கிறது.
இக்கூட்டணியில் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு,
நாசரிய
‘கமரா’
கட்சி,
தொழிற் கட்சி
(இஸ்லாமியக்
கட்சி),
டகாமு கட்சி
[இடது],
புரட்சிகர சோசலிஸ்டுகள் கட்சி....கெஃபாயா....காத்
கட்சி
[ஒரு
தாராளவாதக் கட்சி]....மற்றும்
முகமது எல்பரேடேயின் மாற்றத்திற்கான தேசியக் கூட்டணி ஆகியவை இருக்கின்றன.
’முஸ்லீம்
சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தினர்,
எளிமையாகச் சொன்னால் நவ தாராளவாதத்தின் ஒரு கூட்டாளி”
என்று அடிப்படையமைத்துக் கொண்டிருந்த மார்க்சிஸ்டுகளின் பழைய அடுக்குகளிடம் இருந்த
பிரிவினைவாத மனநிலையை இடதுகள் எடுத்துக் கொண்டிருந்தால் இந்தக் கூட்டணியை நடத்துவது
மிகவும் சிக்கலாக இருந்திருக்கும் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அந்தச் சிக்கலை வெல்வதில் புரட்சிகர சோசலிஸ்டுகள் ஒரு முக்கியமான பாத்திரத்தை
ஆற்றினர்.”
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள இரண்டு முன்னணி
போலி இடது குழுக்களின் ஆதரவுடன்,
புரட்சிகரக் குழுவாய் கூறிக் கொண்ட இது ஒரு முதலாளித்துவ மக்கள் முன்னணியின்
கருவாய் கருதத்தக்க ஒன்றைப் பராமரிப்பதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.
இந்த உருவாக்கத்தின் முக்கியத்துவம் எதிர்க் கட்சிகள் என்றழைக்கப்படுகின்ற தாராளவாத
வப்து,
“இடதுசாரி”
டகாமு,
மற்றும் நாசரித்துகள் இவற்றில் எதற்குமே எந்த அரசியல் நம்பகத்தன்மையும் கிடையாது
என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது
தெளிவாகிறது.
இவையெல்லாம் ஊழலுற்றவையாகவும் பழைய ஆட்சியுடன் தனிப்பட்ட மற்றும் வணிகத் தொடர்புகள்
கொண்டவையாகவும் கருதப்படுபவை.
27.
முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்புக்கான ஆதரவென்பது இஸ்லாமிஸ்டுகளுக்கு எதிரான அரசு
அடக்குமுறையை ஆதரித்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தாராளவாதக் கட்சிகளின் கொள்கையுடன்
முறித்துக் கொள்வதான சரியான முடிவில் இருந்து எழுந்தது என்பது தான் ஹோசாம் எல்-ஹமாலாவி
வைக்கும் அடிப்படையான வாதமாக உள்ளது.
இத்தகையதொரு தர்க்கம் எதுவும் இல்லை.
இதனை இலங்கையில் இருக்கும் நமது சொந்த இயக்கத்தின் வரலாறே தெளிவாய்க் காட்டுகிறது.
1960கள்
மற்றும்
1970களின்
ஆரம்பத்தில்,
கிராமப்புற பகுதிகளில் இருந்தும் மாணவர்களிடையே இருந்தும் அதிருப்தியுற்றிருந்த
இளைஞர்களை ஈர்த்த மக்களி விடுதலை முன்னணியன்
(ஜேவிபி)
வர்க்க அடிப்படை மற்றும் அரசியல் பாத்திரத்தை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின்
(RCL)
பொதுச்
செயலர் கீர்த்தி பாலசூரியா ஆராய்ந்தார்.
ஜேவிபியின் வளர்ச்சி என்பது லங்கா சம சமாஜக் கட்சி
(LSSP)
திருமதி
பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் சேர்ந்ததன் மூலம் நிகழ்த்திய
காட்டிக் கொடுப்பின் நேரடி விளைபொருளாய் இருந்தது.
இது முன்னதாக தொழிலாளர்களது இயக்கத்தின் பக்கம் திரும்பியிருந்த இளைஞர்களின் பரந்த
அடுக்குகளை மாவோயிசம் மற்றும் பிற குட்டி முதலாளித்துவ தீவிரவாதத் தத்துவங்களை
நோக்கியான வேறு திசையில் பார்வையை செலுத்தச் செய்தது.
ஜேவிபியின் அரசியல் மற்றும் வர்க்க அடித்தளங்களை ஆராய்ந்த தோழர் கீர்த்தி,
குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் அது ஒரு பாசிசத் திசையில் திரும்பக் கூடும் என்றும்
தொழிலாளர்’
இயக்கத்தின் மீது நேரடியாகத் தாக்குதல் செய்யக் கூடும் என்றும் முடிவுக்கு வந்தார்.
ஆனால்
1971ல்
ஜேவிபி,
பண்டாரநாயக்காவின் இரண்டாவது கூட்டணி அரசிற்கு எதிராக ஒரு கிளர்ச்சிக்கு முயன்று
அரசின் தாக்குதலுக்குள்ளான போது,
RCL
அந்த
அமைப்பை சமரசமற்றுப் பாதுகாத்ததோடு அதன் தலைவரான ரோஹண விஜேவீராவை விடுதலை செய்யவும்
கோரியது.
இதேபோல
1989
நவம்பரில்,
தொழிலாள வர்க்க இயக்கத்தின் மீதான தாக்குதலுக்கு
படுகொலை மற்றும் பயமுறுத்தல் பிரச்சாரத்தில் இலங்கை ஆட்சி தனது சேவைகளைப்
பயன்படுத்திக் கொண்டிருந்த அச்சமயத்தில்,
அந்த ஆட்சியால் விஜேவீரா கொல்லப்பட்ட போது,
அந்தக் கொலையை
RCL
கண்டனம்
செய்ததோடு இது ஜேவிபியின் சமூக அடித்தளத்திற்கு,
குறிப்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு,
எதிரான தாக்குதலின் ஆரம்பம் என்றும் எச்சரித்தது.
ஆயினும் அதன் வரலாறு முழுவதிலும் இலங்கை ட்ரொட்ஸ்கிசவாதிகள் ஜேவிபிக்கு எதிரான ஒரு
சமரசமற்ற அரசியல் போராட்டத்தை நடத்தி வந்திருக்கின்றனர்,
தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை
முன்வைப்பதின் மூலமாக அதன் பொறுப்புகளில் சிக்குண்டிருந்த இளைஞர்களை உடைத்து வெளியே
கொண்டு வர முனைந்திருக்கின்றனர்.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அபிவிருத்தி செய்வதற்கான போராட்டத்தின்
அடிப்படையிலான இந்த புரட்சிகர முன்னோக்கை நோக்கிய எகிப்திய புரட்சிகர
சோசலிஸ்டுகளின் உயிர்ப்புடனான வர்க்க அடிப்படையிலான குரோதம் தான் அவர்களை முஸ்லீம்
சகோதரத்துவத்துடனும்,
எல்பரேடேயுடனும் மற்ற முதலாளித்துவ எதிர்க்கட்சி சக்திகளுடன் கூட்டணி சேரச்
செய்கிறது.
28.
இந்த நோக்குநிலை ஏதோ தற்சமயமான குழப்பம் அல்லது தவறான கருத்துக்களால் உருவானதல்ல.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் நான்காம் அகிலத்தில் இருந்து உடைத்துக் கொண்டு
சென்ற அத்தனை சக்திகளும் புரட்சிகர மார்க்சிசத்திற்கு எதிராக,
எல்லாவற்றுக்கும் மேலாய் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட நிரந்தரப்
புரட்சித் தத்துவத்திற்கு எதிராக,
நிகழ்த்திய தொடர்ச்சியான போராட்டத்தின் விளைபொருளே இது.
இந்தக் கட்டுரை இங்ஙனம் முடிகிறது:
“இந்த
சமயத்தில்,
தரிர் சதுக்க ஆக்கிரமிப்பு என்பது அநேகமாய் நின்று விடும்.
ஆனால் நாம் இப்போது தரிர் சதுக்கத்தை தொழிற்சாலைகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
புரட்சி முன்செல்கையில் ஒரு தவிர்க்கவியலாத வர்க்கத் துருவப்படல் நிகழும்.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாம் இங்கே நின்றுபோய் விடக் கூடாது.
நாம் எகிப்து மட்டுமல்ல ஒட்டுமொத்த பிராந்தியத்தின் விடுதலைக்குமான சாவிகளைக்
கையில் கொண்டிருக்கிறோம்.
இதுமுதல் கீழிருந்தான நேரடி ஜனநாயகத்தைக் கொண்டு இந்த நாட்டின் மக்களை
வலிமைப்படுத்துகின்ற ஒரு நிரந்தரப் புரட்சியால்.”
ஆனால்
“கீழிருந்தான
நேரடி ஜனநாயகம்”
என்பது தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை உண்மையில் எடுக்கும் போது மட்டுமே சாதிக்கப்பட
முடியும் என்பது எங்குமே விளக்கப்படவில்லை.
இது இல்லாமல்,
“நிரந்தரப்
புரட்சி”க்கு
அழைப்பு விடுவதென்பது அதன் உண்மையான உள்ளடக்கம் இன்றி வெறுமையுடன் இருப்பதோடு,
முதலாளித்துவ கட்சிகளும் அமைப்புகளும் அரசை மறுஒழுங்கு செய்து கொண்டிருக்கையில்
தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் தங்களது பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு மட்டும்
நெருக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுவதாகவே அர்த்தம்.
29.
மூலப் பதிவில்
“நிரந்தரப்
புரட்சி”
எனும் வார்த்தைகளுக்கான இணைப்பு சோசலிசப் புரட்சி மற்றும் ஜனநாயகப் புரட்சி
குறித்து
SWP
இன்
முன்னாள் முன்னணி அங்கத்தவரான ஜோன் ரீஸ் எழுதிய ஒரு நீளமான கட்டுரைக்கு இட்டுச்
செல்கிறது.
“திசைமாற்றப்பட்ட
நிரந்தரப் புரட்சி”
(”Deflected Permanent Revolution”)
என்ற
தலைப்பில்
SWP
இன்
ஸ்தாபகரான டோனி கிளிஃப்
1963
ஆம்
ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையை ரீஸ் ஆமோதிக்கும் விதமாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம்
“மார்க்சிசத்திற்கான
அவரது மகத்தானதும் மிக மூலமானதுமான பங்களிப்பு”
என்கிற அதே சமயத்தில்,
அதிகமாய் சீன மற்றும் கியூபப் புரட்சிகளின் அனுபவத்தின் அடிப்படையில்
”அதன்
பெரும்பகுதியை நிராகரிப்பது”
இப்போது அவசியமாயுள்ளதாக டோனி கிளிஃப் வலியுறுத்தியிருந்தார்.
30.
தாமதமான முதலாளித்துவ அபிவிருத்தியைக் கொண்ட நாடுகளில்,
பழைய சொத்துடைமை வர்க்கங்களுடன் பிணைக்கப்பட்டும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு
அடிபணிந்தும் தனது நிலையைக் கொண்டிருக்கிற அதேசமயத்தில் எழுந்துவரும் தொழிலாள
வர்க்கத்தின் வடிவத்தில் தனது சொந்த சவக்குழி தோண்டுவோரை எதிர்கொள்ளும் நிலையையும்
கொண்டிருக்கின்ற முதலாளித்துவ வர்க்கமானது,
முந்தைய வரலாற்று சகாப்தத்தில் அதன் முன்னோர்கள் சாதித்தவாறு ஜனநாயகக் கடமைகளை
நடத்துவதற்கு முடியாது என்பதை ரஷ்யாவில்
1905
ஆம்
ஆண்டின் புரட்சியின் அனுபவங்களில் இருந்து முதன்முதலில் அபிவிருத்தி செய்ததான
நிரந்தரப் புரட்சித் தத்துவத்தில் ட்ரொட்ஸ்கி விளக்கினார்.
எனவே ஜனநாயகத்தை அடைவது என்பது ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் குட்டி
முதலாளித்துவ வெகுஜனங்களின் இயக்கத்தின் தலைமையில் அமர்ந்து தொழிலாள வர்க்கம்
அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமாக மட்டுமே சாதிக்கப்பட முடியும்.
தனது சொந்த சுயாதீனமான கோரிக்கைகளை எட்ட வேண்டுமென்றால்,
தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து சோசலிச நடவடிக்கைகளை
அமல்படுத்துவதைத் தொடங்க வேண்டியிருக்கும்.
மேலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒன்றுடன் ஒன்று பிணைந்த தன்மையால்
புரட்சியானது ஒரு சர்வதேச அளவில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியிருக்கும்.
31.
கிளிஃப் கூறுவதன் படி,
1917
ரஷ்யப்
புரட்சியில் ட்ரொட்ஸ்கியின் தத்துவம் நிரூபணம் பெற்றது என்ற போதிலும்,
1949
சீனப்
புரட்சியில் மாவோ அதிகாரத்துக்கு வந்ததும்
1959
ஆம்
ஆண்டின் கியூபப் புரட்சியும் இப்போது அந்த தத்துவம் நிராகரிப்பட வேண்டியதிருந்ததைக்
காட்டியது என்கிறார்.
இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலுமே ட்ரொட்ஸ்கி விளக்கியிருந்ததைப் போல முதலாளித்துவ
வர்க்கம் ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை ஆற்றவில்லை,
ஆனால் அதேபோலத் தொழிலாள வர்க்கமும் அப்பாத்திரத்தை ஆற்றவில்லை,
இது இந்த இடைவெளிக்குள் மற்ற சக்திகள்,
தீவிரமயப்பட்ட புத்திஜீவித்தட்டின் பிரிவுகள்,
காலடி எடுத்து வைக்க வழிவகுத்தது.
இந்த அனுபவங்களின் படிப்பினைகளைச் சுருங்க கிளிஃப் இப்படி எழுதினார்:
“எப்போது
ட்ரொட்ஸ்கியின் தத்துவத்தின் மையத் தூணான தொழிலாள வர்க்கத்தின் நிரந்தரமான
புரட்சிகரத் தன்மை சந்தேகத்திற்குரியதாக ஆகிறதோ,
அப்போது அந்த ஒட்டுமொத்தக் கட்டமைப்புமே தூள்தூளாய் நொறுங்கிப் போகிறது.”
32.
கிளிஃபும் சரி பின்வந்த வருடங்களில் அவரைப் பின்பற்றி வந்தவர்களும் சரி இரண்டு
தனித்தனியான கேள்விகளில் வேண்டுமென்றே குழப்பி வந்திருக்கின்றனர்:
ஒன்று தொழிலாள வர்க்கத்தின் புறநிலையான வரலாற்றுரீதியான புரட்சிகரப் பாத்திரம்
பற்றியது,
இன்னொன்று ஒரு குறிப்பிட்ட சமயத்தில் தொழிலாளர்களது இயக்கத்தின் அபிவிருத்தி
பற்றியது.
மார்க்ஸ் தனது புனிதக் குடும்பத்தில்
(Holy family)
விளக்கியதைப் போன்று,
தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம் என்பது முதலாளித்துவ சமூகத்தில் அதன்
இடத்தில் இருந்து தேற்றம் பெறுகிறது.
“இந்த
அல்லது அந்தப் பாட்டாளி,
அல்லது ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கமே கூட அந்த சமயத்தில் எதைத் தனது நோக்கமாய்க்
கருதுகிறது என்பதல்ல பிரச்சினை.
பாட்டாளி வர்க்கம்,
அத்தகைய இருப்பின் விளைவாக,
என்ன செய்யத் தள்ளப்பட்டிருக்கிறது,
என்ன செய்யத் தள்ளப்படும் என்பது தான் கேள்வி.
அதனுடைய நோக்கமும் வரலாற்று நடவடிக்கையும் அதன் சொந்த வாழ்க்கை நிலைமையிலும்
அத்துடன் இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஒழுங்கமைப்பிலும்
இறுதியானதாகவும் வெளிப்படையாகவும் விளங்கப்படுத்தப் பெறுகிறது.”
33.
தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான புரட்சிகரப் பாத்திரம் தொடர்ச்சியாய்
வெளிப்பட்டிராதது என்பது மார்க்சிச முன்னோக்கின் மீது அனைத்து வகை
தாக்குதல்களுக்கும் வழிவகுக்கிறது.
தொழிலாளர் இயக்கத்தில் ஒரு ஸ்தம்பித்த நிலையை எதிர்கொள்ளும் போது எவ்வாறு
சந்தர்ப்பவாதம்,
சோசலிசப் புரட்சியின் வழிமுறைகளை ஏற்க மறுத்து நடைமுறையில் வரலாறு இன்னும்
ஆயத்தமடைந்திராத புதிய வழிகளை செயல்பாட்டில் திணிப்பதற்கான புதிய வழிகளைத் தேடி
அலைந்தது என்பதை
1905
புரட்சியின் தோல்வியைத் தொடர்ந்த பிற்போக்குத்தனத்திற்கான காலகட்டத்தில்
எழுதுகையில் ட்ரொட்ஸ்கி சுட்டிக் காட்டினார்.
மறுபடியும்,
அவசிய மாற்றங்களைச் செய்தால்,
இந்த ஆழ்ந்த பார்வைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில்
அபிவிருத்தியுற்ற சூழ்நிலைக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன.
உலக முதலாளித்துவம் மறுஸ்திரமுற்றதும் தொழிலாள இயக்கம் ஸ்ராலினிச அமைப்புகளால்
செல்வாக்கு செலுத்தப் பெற்றதுமான நிலையில் சந்தர்ப்பவாதிகள் புதிய கூட்டாளிகளான
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பிரிவுகள்,
மாவோயிச சக்திகள்,
விவசாய வர்க்கம்,
தீவிரவயப்பட்ட புத்திஜீவித்தட்டு,
காஸ்ட்ரோயிசம் மற்றும் பலரை காண விரைந்தனர்.
ட்ரொட்ஸ்கிச தத்துவம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை
சுற்றியிருந்தது ஆனால் அது இப்போது கடந்த காலக் கதை ஆகி விட்டது என்பதால் தான்
அத்தத்துவம் நிலைகுலைந்து போனதாக சந்தர்ப்பவாதிகள் கூறிக் கொண்டனர்.
உண்மையில் வரலாறு தான் இறுதி தீர்ப்பை கூறும்.
சீனா
மற்றும் கியூபாவின் அபிவிருத்தி கிளிஃப் மற்றும் அவரது சீடர்கள் கூறி வந்ததைப் போல
ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை மறுப்பதற்கு வெகு அப்பால்,
அத்தத்துவத்தை நிரூபணம் செய்தது.
தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வரவில்லை.
ஆனால் துல்லியமாக அந்தக் காரணத்தினால் தான் ஜனநாயகம் சீனாவிலும் சரி கியூபாவிலும்
சரி எட்டப்பட்டிருக்கவில்லை.
சீனா இப்போது உலக மூலதனத்திற்கு உபரி மதிப்பிற்கான தலைமை ஆதாரவளமாக ஆகியிருக்கிறது,
கியூபாவின் ஆட்சி தன்னை உலக முதலாளித்துவத்தின் சுற்றுக்களுக்குள் மறுஇணைப்பு
செய்து கொள்வதற்குப் பார்க்கிறது.
34.
ரஷ்யப்
புரட்சியின் வரலாறு
என்னும் நூலுக்கான முகவுரையில் ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல,
தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசியமான புரட்சிகரப்
பாத்திரமானது எப்போது மேற்பரப்பிற்கு வருகிறது என்றால்,
“தனிமனிதர்கள்
அல்லது கட்சிகளின் விருப்பத்தில் இருந்து சுயாதீனப்பட்டு,
முழுக்க அசாதாரணமான நிலைமைகள்..............அதிருப்தியில்
இருந்து பழமைவாதத் தளைகளை கிழித்தெறிந்து,
வெகுஜனங்களை கிளர்ச்சிக்குக் கொண்டுவருகிற போது”
மட்டுமே.
அந்த ஒட்டுமொத்த காலகட்டங்களுக்கும்
-
இதன்
நீளம் புற நிலைமைகளால் தீர்மானிக்கப்படுகிறது
-
புரட்சிகரக் கட்சியின் வேலை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய அடுக்குகளை
அரசியல்ரீதியாக தயாரிப்பு செய்வதில் தான் அடங்கியிருக்கிறது.
நாம்
காக்கும் மரபியம்
(The Heritage We Defend)
புத்தகத்தில் டேவிட் நோர்த் அழகாய் விளக்கியதைப் போல,
போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் நான்காம் அகிலத்தைத் தாக்கிய அனைத்து
சந்தர்ப்பவாதப் போக்குகளான பப்லோ,
மண்டேல்,
கிளிஃப் மற்றும் இவர்களது பல்வேறு வாரிசுகளின் முக்கிய குணாம்சமாக இருந்தது
என்னவென்றால்,
புரட்சிகரக் கட்சியை கட்டுவது குறித்த லெனின்-ட்ரொட்ஸ்கியின்
கருத்தாக்கத்தை நிராகரித்தது தான்:
“லெனினுக்கும்
ட்ரொட்ஸ்கிக்கும்,
தனிமைப்படல் எத்தனை கடுமையானதாக இருந்தாலும்,
கட்சியின் அரசியல் நிலைப்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் புறநிலையான வர்க்க
நலன்களின் அடிப்படையில் அமைந்ததாகவும் அத்துடன் அதன் அரசியல் சுயாதீனத்தை தாங்கிப்
பிடிப்பதாகவும் பாதுகாப்பதாகவும் இருந்தாக வேண்டும்.
மகத்தான புரட்சிகர எழுச்சி நிலைமைகளின் கீழ் ஒரு கோட்பாட்டு ரீதியான வர்க்க
நிலைப்பாட்டின் வரலாற்று நீட்சிக்கோடு தொழிலாள வர்க்கத்தின் வாழும் இயக்கத்துடன்
தவிர்க்கவியலாமல் சந்திக்கும் என்பதில் அவர்கள் உச்சமான நம்பிக்கை கொண்டிருந்தனர்.
மேலும்,
இந்த சந்திப்பானது மார்க்சிச வேலைத்திட்ட அடிப்படையில் ஒன்றுசேர்ந்த காரியாளர்களை
அபிவிருத்தி செய்வதன் மூலமாக ஒரு நெடிய காலகட்டத்தில் தயாரிப்பு
செய்யப்பட்டிருந்தது.”
அந்தக் காலகட்டம் இப்போது திறந்து,
நா.அ.அ.கு.
முன்பாக புதிய கடமைகளை முன்வைக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் லெனின்-ட்ரொட்ஸ்கி
முன்னோக்கை மறுதலித்த கட்சிகளும் அமைப்புகளும் இப்போது முதலாளித்துவ வர்க்கத்திற்கு,
புரட்சிகர எழுச்சி நிலைமைகளின் கீழ் அதன் ஆட்சியைப் பராமரிப்பதற்கு அவசியமான புதிய
வகைமுறைகளை வடிவமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.
இது அவர்களின் நோக்கங்கள் குறித்த விடயமல்ல,
எவ்வளவு தான் அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத் தாங்கிப் பிடிப்பதாய்
பிரகடனம் செய்தாலும்
“நிரந்தரப்
புரட்சி”க்கான
அவசியத்தை வலியுறுத்தினாலும்,
அவர்களது அரசியலுக்கு ஒரு புறநிலையான தர்க்கம் உள்ளது.
35.
உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் இருந்து எழுகின்ற நிகழ்வுப் போக்குகளில்
இருந்து தான் எகிப்தியப் புரட்சி எழுந்திருக்கிறது என்பதை விஸ்கான்சன் நிகழ்வுகள்
மிகத் தெளிவாய் எடுத்துக்காட்டுகின்றன,
மேலும் கூடுதலான நிரூபணங்களும் வர இருக்கின்றன.
இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாம் சமூக ஏற்றத்தாழ்வு மேலும் மேலும் அதிகரிப்பதில்
தான் அவற்றின் சமூக வெளிப்பாட்டைக் காண்கின்றன,
அல்லது மார்க்ஸ் மூலதனத்தில் சொன்னதைப் போல,
ஒரு துருவத்தில் செல்வம் திரள்வதுடன் கைகோர்த்த வகையில் எதிர் துருவத்தில் வறுமை
திரள்வது.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக கார்டியன் இதழில் பிப்ரவரி
6
அன்று
வெளியான
“ஏற்றத்தாழ்வு,
வரலாற்றின் புதிய இயங்குநிலை”
(“Inequality, the new dynamic of history”)
என்கிற
தலைப்பிலான ஒரு கட்டுரையில் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார
நிபுணரான கென்னத் ரோஜாஃப்,
உணவுப் பொருட்களின் அதிக விலை,
வேலைவாய்ப்பின்மை,
அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் இவையெல்லாம் எகிப்து அல்லது மத்திய கிழக்கிற்கு மட்டும்
உரியன அல்ல என்று எச்சரித்தார்.
“நாடுகளுக்குள்ளாக,
வருவாய்,
செல்வம் மற்றும் வாய்ப்பு இவற்றிலான ஏற்றத்தாழ்வு சென்ற நூற்றாண்டின் எந்த
சமயத்தைக் காட்டிலும் அதிகமானதாய் இருக்கிறது என்று கூறலாம்.
ஐரோப்பா,
ஆசியா மற்றும் வட அமெரிக்கா எங்கிலும் செயல்திறனை நோக்கிய பெருநிறுவனங்களின்
ஈவிரக்கமற்ற செலுத்தம் அவற்றுக்கு பெரும் இலாபங்களைக் கொண்டு வருவதால் அவை பணத்தால்
கொழிக்கின்றன.
ஆனால் தொழிலாளர்களுக்குரிய பங்கோ குறைந்து கொண்டே செல்கிறது,
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு,
வேலை நேரக் குறைப்பு மற்றும் அதிகரிக்காத ஊதியங்கள் ஆகியவற்றின் புண்ணியத்தால்.”
சமூக சமத்துவமின்மை அதிகரிப்பது தான் புரட்சிக்கான செலுத்து சக்தி என்பதை மார்க்ஸ்
சுட்டிக் காட்டியிருந்ததை ரோஜாஃப் குறிப்பிடுகிறார்,
ஆனால் மார்க்ஸை இனியும் யாரும் கூடிய தீவிரமாய் பொருட்படுத்துவதில்லை என்று கூறி
அவசரகதியில் அவரே ஆறுதல்படுத்திக் கொள்கிறார்.
36.
ரோஜாஃப் கூறுவதெல்லாம் ஒரு பக்கமிருந்தாலும்,
வரலாற்று நிகழ்வுப் போக்கின் மீதான எந்த ஆய்வும்,
சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்கான வழிகாட்டும் முன்னோக்காக உண்மையான மார்க்சிசம்,
அதாவது இன்று நா.அ.அ.கு.
போராடி வருகின்ற அபிவிருத்தி செய்கின்ற வேலைத்திட்டம்,
மீண்டும் திரும்புவதற்கான புற நிலைமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக்
காட்டுகிறது.
நடப்பு சகாப்தத்திற்கும் முதலாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற ஒன்றிற்கும்
இடையிலான ஒற்றுமைகளுக்கு கடந்த காலத்தில் நாங்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறோம்.
வரலாறு மீண்டும் திரும்புவதில்லை,
மாறாக,
மார்க் டுவெயின் குறிப்பிட்டதைப் போல,
அது ஒத்த சந்தம் கொண்டிருக்கிறது.
1870
முதல்
1914
வரையான
காலகட்டத்தை உலகமயமாக்கத்தின் முதல் அலை எனக் குறிப்பிடலாம்.
இது நீண்ட தாக்கங்கள் கொண்ட பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கு இட்டுச்
சென்றது.
அந்தக் காலகட்டத்தில்,
மார்க்சிசம் தனது வேர்களை ரஷ்ய மற்றும் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக
ஊன்றியிருந்தது.
இது தற்சமயமானதல்ல ஏனென்றால் இந்த இரண்டு நாடுகளுமே கணிசமான பொருளாதார
உருமாற்றங்களை அனுபவித்து வந்த அதே சமயத்தில் அதனால் விளைந்த
சமூகப் பதட்டங்களுக்கான வடிகால் ஒரு இறுகிப் போன அரசியல் கட்டமைப்பிற்குள்ளாக
இருக்கவில்லை.
நாம் உலகமயமாக்கத்தின் இரண்டாவது கட்டத்தின் வழியாகக் கடந்து சென்று
கொண்டிருக்கிறோம்,
முந்தைய காலகட்டத்தை விடவும் இன்னும் மிக ஆழமான நகர்வுகளால் இது குறிக்கப்படுகிறது.
ஆனால் அந்த சமயத்தில் ரஷ்யா மற்றும் ஜேர்மனியில் உண்மையாக அன்று இருந்த விடயம் தான்
இப்போது ஒரு உலகளாவிய அளவில் பொருத்தமானதாய் உள்ளது,
அதாவது பரந்த பொருளாதார மாற்றங்களால் உருவாக்கப்பட்ட சமூகப் பதட்டங்கள் நடப்பு
அரசியல் கட்டமைப்புகளுக்குள்
-
அவை
முபாரக் மற்றும் மத்திய கிழக்கின் மற்ற ஆட்சிகள் விடயத்தில் போல சர்வாதிகாரங்களாக
இருந்தாலும் சரி,
அல்லது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள நாடி தளர்ந்த,
ஊழலடைந்த,
புழுஅரித்த நாடாளுமன்ற ஜனநாயகங்கள் ஆயினும் சரி எந்த வடிகாலையும் காண முடியவில்லை.
ஒவ்வொரு நாட்டிலும்,
அது சர்வாதிகாரத்தால் ஆளப்படுவதாயினும் சரி அல்லது ஒரு நாடாளுமன்ற ஆட்சியால்
ஆளப்படுவதாயினும் சரி,
அரசாங்கமானது பரந்த மக்களை வறுமைக்குள் தள்ளுவதற்கான உலக மூலதனத்தின் கோரிக்கைகளை
திணிக்கிற வேலையையே செய்கிறது.
37.
உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய முரண்பாடுகள் தங்களது தங்களது சொந்த
தனித்துவமான வெளிப்பாட்டை ஒவ்வொரு நாட்டிலும் காண்கின்றன,
ஆனால் தெளிவாக இருப்பது என்னவென்றால் ஒவ்வொரு இடத்திலும் அரசியல் போராட்டத்தின்
வடிவங்கள் பெருமளவில் ஒரு வெகுஜனத் தன்மையைப் பெறும்.
ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை அதனை அழிக்க முனையும் அத்தனை சக்திகளுக்கு எதிராகவும்
பாதுகாப்பதற்கான நெடிய போராட்டத்தில் இத்தகைய சூழ்நிலைக்காகத் தான் எமது இயக்கம்
தயாரிப்பு செய்து வந்திருக்கிறது.
இப்போது இந்த நாட்டிலும் சர்வதேசரீதியாகவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய
புரட்சிகரத் தலைமையை அபிவிருத்தி செய்யும் கடமையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம்.
அத்துடன்,
எகிப்தின் நிகழ்வுகள் தெளிவுறக் காட்டுவதைப் போல,
இந்தத் தீர்மானமான கடமை தான் இப்போது எழுந்து கொண்டிருக்கின்ற வெகுஜனப்
போராட்டங்களின் விளைவைத் தீர்மானிப்பதில் மையமான பாத்திரத்தை ஆற்றும். |