WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Nuclear power, private ownership and the profit system
அணுசக்தியும்,
தனியுடைமையும்,
இலாப
அமைப்புமுறையும்
Patrick
O’Connor
24 March 2011
ஒரு
பெரும்
நிலநடுக்கம்
மற்றும்
சுனாமியால்
ஜப்பானின்
வடகிழக்கு
கடற்கரை
நாசமாக்கப்பட்டு
கிட்டத்தட்ட
இரண்டு
வாரங்கள்
கடந்துபோன
பின்னரும்
கூட,
அந்நாடும்
அந்த
பரந்த
பிராந்தியமும்
புக்கூஷிமா
அணுக்கசிவு
பேரழிவின்
அச்சுறுத்தலின்கீழ்
இருந்து
வருகின்றன.
நீருக்கடியில்
பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்த
பெரும்
நச்சுத்தன்மை
கொண்ட
கழிவு
எரிபொருள்
உருளைகளின்
(fuel rods) நிலை
தெளிவாக
தெரியாத
நிலையில்,
குறைந்தபட்சம்
ஒரேயொரு
அணுஉலை
மூலப்பொருட்களில்
இருந்தாவது
ரேடியோ
கதிர்வீச்சு
கசிந்து
கொண்டிருக்கிறது.
கதிர்வீச்சு
பரிசோதனை
செய்யப்படாத
குடிநீரைக்
குடிக்க,
குழந்தைகளை
அனுமதிக்க
வேண்டாமென்று
டோக்கியோவின்
13 மில்லியன்
மக்களை
அதிகாரிகள்
இப்போது
எச்சரித்துள்ளனர்.
புக்கூஷிமா
ஆலையின்
வடிவமைப்பு
மற்றும்
செயல்பாட்டின்
தரக்குறைபாடு
குறித்தும்,
அதை
செயல்படுத்தி
வந்த
பெருநிறுவனமான
டோக்கியோ
எலெக்ட்ரிக்
பவர்
கம்பெனியின்
(TEPCO)
திகைப்பூட்டும்
பாதுகாப்பு
ஆவணங்கள்
குறித்தும்,
ஜப்பானிய
அரசாங்கத்தின்
அவசரகால
விடையிறுப்பின்
அலட்சியம்
குறித்தும்,
அதிர்ச்சியூட்டும்
தகவல்கள்
தொடர்ந்து
வெளிவந்து
கொண்டிருக்கின்றன.
இந்த
இலாபகர
அமைப்புமுறையின்
நாசகரமான
விளைவுகள்
தான்,
ஒவ்வொரு
மட்டத்திலிருந்தும்
வெளிப்படுகின்றன.
ஜப்பானில்,
சர்வதேச
அளவிலும்
கூட,
ஒரு
பாதுகாப்பான
மற்றும்
சுற்றுச்சூழலுக்கு
உகந்த
நிலையான
எரிசக்தி
அமைப்புமுறையின்
தேவை
உட்பட,
மக்களின்
சமூக
தேவைகளானது,
பெரும்
பெருநிறுவனங்களின்
நிதியியல்
நலன்களுக்கு
அடிபணிய
வைக்கப்பட்டுள்ளது.
புக்கூஷிமாவில்
நெருக்கடி
ஏற்பட்ட
ஆரம்பத்திலிருந்தே,
அதாவது
போதியளவிற்கு
இல்லாத
கடற்கரை
பாதுகாப்புசுவர்களை
அடித்துநொறுக்கிவிட்டு,
அணுசக்தி
ஆலைகளின்
அவசரகால
உதவிக்கு
இருந்த
மின்சக்தி
இயந்திரங்களையும்
சுனாமி
சேதப்படுத்திய
போது,
பொதுமக்களின்
பாதுகாப்பு
கைவிடப்பட்டு,
பெருநிறுவன
இலாபங்கள்
குறித்தே
கவனிக்கப்பட்டன.
உலகின்
நான்காவது
மிகப்பெரிய
மின்சக்தி
உற்பத்தி
நிறுவனமான
TEPCO, நிலநடுக்கம்
ஏற்பட்ட
24
மணிநேரத்திற்குள்ளாக,
மார்ச்
12ஆம்
தேதி
அதிகாலையில்
ஆலையின்
ஓர்
அணுஉலையின்மீது
கடல்நீரை
பாய்ச்சுவதற்கு
மாறாக,
மணிக்கணக்கில்
நடவடிக்கையெடுக்க
தாமதப்படுத்தியதுடன்,
மார்ச்
13ஆம்
தேதி
தான்
ஏனைய
அணுஉலைகளில்
கடல்நீரைப்
பாய்ச்ச
தொடங்கியதாக
இப்போது
தெரியவருகிறது.
கடல்நீர்
அணுஉலைகளைத்
துருப்பிடிக்கச்
செய்யும்
என்பதால்,
பெருநிறுவன
செயலதிகாரிகள்
அடிப்படை
முன்னெச்சரிக்கை
முறைமைகளை
எடுக்க
தயங்கினார்கள்.
ஒருவேளை
அந்த
முறைமைகள்
கதிர்வீச்சு
கசிவைத்
தடுத்திருக்கக்கூடும். TEPCO
அதன்
பல
பில்லியன்
டாலர்
மதிப்பிலான
உடைமை
இல்லாத்போவதை
காண
அஞ்சி
காலங்கடத்தியது.
குற்றமிக்க
அலட்சியமாக
இந்த
நடவடிக்கை
இருந்தபோதினும்,
ஜப்பான்
அரசாங்கத்தின்
பிரதம
மந்திரி
நோடொ
கன்,
தொடர்ந்து
TEPCOவையே
அவசரகால
அணுசக்தி
நடவடிக்கைக்கான
பொறுப்பில்
இருக்க
அனுமதித்தார்.
இந்த
முடிவு,
அரசாங்கங்கள்மீது
பெரும்
பெருநிறுவனங்கள்
வைத்திருக்கும்
அசாதாரணமான
அதிகாரத்தின்
ஓர்
ஆழ்ந்த
எடுத்துக்காட்டை
வழங்குகிறது.
இன்று
இந்த
அரசாங்கங்கள்
அவற்றின்
அடிமை
சேவகர்களாக
வெளிப்படையாகவே
சேவை
செய்து
வருகின்றன.
இது
ஏதோ
ஜப்பானுக்கு
மட்டும்
நிகழ்ந்த
ஒன்றல்ல.
எடுத்துக்காட்டாக,
அமெரிக்காவில்,
கடந்த
ஆண்டு
இறுதியில்
மெக்சிக்கோ
வளைகுடாவில்
எண்ணெய்
கலந்த
போது,
ஒபாமா
நிர்வாகமும்
பெரும்
எண்ணெய்
நிறுவனமான
பிரிட்டிஷ்
பெட்ரோலியத்தின்
முன்னால்
மண்டியிட்டது.
அந்த
பேரழிவில்,
புக்கூஷிமாவைப்
போலவே,
அந்த
சுற்றுச்சூழல்
பேரழிவிற்குப்
பொறுப்பான
பெருநிறுவன
குற்றவாளிகளே
அந்த
அவசரகால
நடவடிக்கையை
மேற்கொள்ள
அனுமதிக்கப்பட்டனர்.
TEPCOவிற்கு
ஜப்பானிய
அரசாங்கம்
காட்டிய
மரியாதை,
இன்னும்
பல
முக்கிய
தாமதங்களையும்
ஏற்படுத்தியது.
நிலைகுலைவின்
சாத்தியக்கூறுக்கு
முதல்
அறிகுறிகள்
கிடைத்த
அடுத்தநாள்,
மார்ச்
16 வரையில்,
குளிர்விக்கும்
நடவடிக்கைகளில்
தீயணைப்பு
மற்றும்
இராணுவ
மூலவளங்கள்
முற்றிலுமாக
பயன்படுத்தப்படவில்லை. TEPCO
கேட்டுக்கொள்ளாத்தால்
படைகள்
நகர்த்தப்படவில்லை
என்று
ஓர்
இராணுவ
செய்தி
தொடர்பாளர்
கூறினார்.
1971இல்
நிறுவப்பட்ட
புக்கூஷிமா
ஆலை,
எங்கே
எவ்வாறு
கட்டமைக்கப்பட
வேண்டுமோ
அங்கே
அவ்வாறு
கட்டமைக்கப்படவில்லை
என்பதை
எடுத்துக்காட்டும்
கணிசமான
ஆதாரங்கள்
உள்ளன.
ஜப்பானின்
கிழக்கு
கடற்கரையில்
அமைக்கப்பட்ட
அந்த
ஆலை,
வெறும்
5.7 மீட்டர்
உயர
சுனாமியை
மட்டுமே
தாங்கும்
வகையில்
வடிவமைக்கப்பட்டிருந்தது.
மார்ச்
11இல்,
புக்கூஷிமா
கடற்கரையைத்
தாக்கிய
சுனாமி
15 மீட்டர்
உயரத்திற்கு
அண்ணளவாக
இருந்ததாக
மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த
ஆலையின்
அவசரகால
உதவிக்குரிய
மின்சக்தி
இயந்திரங்கள்
வெள்ளப்பெருக்கு
மற்றும்
திடீர்
கோளாறுகளின்போது
இயங்கும்வகையில்
வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை.
அது
அணுஉலையின்
மையப்பகுதியையும்
(reactor core),
பாவிக்கப்பட்ட
எரிசக்தி
உருளைகளையும்
அதிகமாக
சூடாக்கிவிட்டது.
குளிரூட்டும்
அமைப்புகளில்
கோளாறு
ஏற்பட்டால்
கதிரியக்கம்
சுற்றுச்சூழலில்
கலந்துவிடாமல்
தடுக்க
வேண்டிய
புக்கூஷிமா
ஆலையின்
"மார்க்
1” அணுஉலை
கொள்கலன்கள்
பாதுகாப்பற்று
இருந்ததாக,
முன்னனி
அணுசக்தி
விஞ்ஞானிகள்
மற்றும்
பொறியாளர்களால்
பல
தசாப்தங்களாக
பகிரங்கமாகவே
குறை
கூறப்பட்டிருந்தன.
ஒரு
நிலைகுலைவு
சம்பவம்
ஏற்பட்டால்
மார்க்
1 கொள்கலன்கள்
இயங்காமல்போவதற்கு
90%
வாய்ப்பிருப்பதாக 1980களிலேயே,
அமெரிக்க
அணுசக்தி
நெறிமுறை
ஆணையத்தின்
ஓர்
அதிகாரி
அறிவித்திருந்தார்.
இருந்தபோதினும்
இந்த
கொள்கலன்கள்
ஜப்பானிலும்,
சர்வதேச
அளவிலும்
தொடர்ந்து
பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.
மேலும்
குறைந்தபட்சம்
அடுத்து
இன்னும்
இரண்டு
தசாப்தங்களுக்கு
அவற்றைத்
தொடர்ந்து
பயன்படுத்தவும்
அவை
அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
போட்டி
தேசிய
அரசுகளாக
முதலாளித்துவத்தால்
உலகம்
பிரிக்கப்பட்டுள்ளதன்
நாசகரமான
விளைவுகளோடு,
அணுசக்தி
தொழிற்துறை
சர்வதேசஅளவில்
ஒரு
புறநிலையான
படிப்பினையை
அளிக்கிறது.
இரண்டாம்
உலக
யுத்தத்திற்குப்
பிந்தைய
காலக்கட்டத்தில்,
1930களில்
வாஷிங்டனால்
திணிக்கப்பட்ட
கடுமையான
தடையாணையைத்
தொடர்ந்து,
ஜப்பானிய
ஆளும்
மேற்தட்டு
அது
சார்ந்திருந்த
எண்ணெய்
இறக்குமதியைக்
குறைக்க
போராட
வேண்டியதிருந்தது.
பூமியில்
அதிகளவில்
பூகம்பம்
ஏற்படக்கூடிய
பகுதிகளில்
ஒன்றாக
ஜப்பான்
உள்ளது.
அதனாலேயே
அது,
அணுசக்தி
ஆலைகள்
அமைப்பதற்கு
பாதுகாப்பற்ற
பகுதிகளில்
ஒன்றாகவும்
உள்ளது.
ஆனால்,
அணுசக்தி
மின்சாரத்தைக்
கொண்டு
எரிசக்தியில்
தன்னிறைவு
அடைய
அந்நாட்டின்
முதலாளித்துவம்
முயற்சித்ததால்,
மக்களின்
பாதுகாப்பு
குறித்த
அடிப்படை
கவனிப்புகள்
ஓரங்கட்டப்பட்டன.
அதேநேரத்தில்,
ஜப்பானிய
அணுசக்தி
ஆயுதங்களின்
ஆயுதக்கிடங்கை
தயார்நிலையில்
வைத்திருக்கும்
ஒரு
கண்ணோட்டத்தோடு
வலதுசாரி
தேசியவாத
பிரிவுகள்
அந்த
தொழில்துறையை
ஊக்குவித்தன.
பகுத்தறிவுடன்
திட்டமிட்ட
ஓர்
உலக
சோசலிச
பொருளாதாரத்தில்,
அணுசக்தி
பயன்பாட்டின்
முக்கியத்துவமானது
உலக
மக்களின்
நீண்டகால
நலன்களின்
அடிப்படையிலும்,
பூமியின்
சுற்றுச்சூழல்
அமைப்பின்
அடிப்படையிலும்
அமைந்திருக்கும்.
முன்னனி
அணுசக்தி
விஞ்ஞானிகள்
மற்றும்
எரிசக்தி
வல்லுனர்களின்
விளக்கமான
மற்றும்
புறநிலையான
மதிப்பீட்டின்
அடிப்படையில்,
இந்த
விஷயம்
சாதாரண
மக்கள்
மத்தியில்
பரந்த
விவாதத்திற்குரிய
பொருளாக
மாற்றபட்டிருக்கும்.
பூமியின்
பசுமையைப்
பாதிக்கும்
புகை
வெளியீடுகள்(greenhouse
gas emission)
இல்லாமல்,
மின்சார
உற்பத்தியில்
ஏனைய
புதுப்பிக்கத்தக்க
எரிபொருள்
மாற்றீடுகளைவிட
கணிசமாக
குறைந்த
செலவில்
உற்பத்தி
செய்யக்கூடிய
ஒரு
சக்திவாய்ந்த
மற்றும்
நிலையான
மூலவளமாக
இருப்பதற்கு
அணுசக்தி
மின்சாரம்
பெரும்
சாத்தியத்திறனைக்
கொண்டிருக்கலாம்.
ஆனால்
மிகவும்
சிக்கலான
மற்றும்
அபாயகரமான
பாதுகாப்பு
பிரச்சினைகளும்
இதில்
உள்ளடங்கி
உள்ளது.
அணுசக்தி
மின்சார
உற்பத்தியென்பது
பிரச்சினையல்ல,
மாறாக
எந்த
சமூக
மற்றும்
பொருளாதார
அமைப்புமுறையின்கீழ்
அது
உற்பத்தி
செய்யப்படுகிறது
என்பது
தான்
பிரச்சினையாக
உள்ளது.
அணுசக்தி
மின்சாரம்
தனியார்
பெருநிறுவனங்கள்
மற்றும்
சந்தைகளின்
கட்டுப்பாட்டில்
இருக்கும்
வரையில்,
சுற்றுச்சூழல்
நலன்
மற்றும்
மனிதயின
பாதுக்காப்பு
என்பது
செயலதிகாரிகள்
மற்றும்
பெரிய
பங்குதாரர்களின்
இலாபம்
திரட்டும்
மற்றும்
செல்வம்திரட்டும்
உந்துதலுக்கு
அடிபணியச்செய்யப்பட்டிருக்கும்.
பொதுவுடைமையின்
கீழும்
உழைக்கும்
மக்களின்
ஜனநாயக
கட்டுப்பாட்டின்
கீழும்
மட்டுமே,
அதாவது
சோசலிசத்தின்
கீழே
மட்டும்
தான்
அணுசக்தி
மின்சார
உற்பத்தியின்
பாதுகாப்பும்,
அபிவிருத்தியும்
சிந்திக்கத்தக்கது.
எல்லாவற்றிற்கும்
மேலாக,
அணுசக்தி
தொழிற்துறையின்
எதிர்காலம்
குறித்து
ஒரு
பகுத்தறிவார்ந்த
விவாதம்
இப்போதிருக்கும்
சமூக-பொருளாதார
அமைப்புமுறையின்கீழ்
முற்றிலும்
சாத்தியமில்லை.
சர்வதேசஅளவில்
முக்கிய
அணுசக்தி
பெருநிறுவனங்கள்,
ஊடகங்களிலிருந்தும்,
விஞ்ஞானப்பூர்வ
பயிலகங்கள்
மற்றும்
பல்கலைக்கழகங்கள்
இருந்தும்
மற்றும்
அரசாங்கத்திலிருந்தும்
சம்பளத்திற்கு
கூட்டிவந்திருக்கும்
பிரதிநிதிகளின்
ஒரு
வலையமைப்பைக்
கொண்டுள்ளது.
இலாபத்தைக்
கவனிப்பதும்,
தேசியவாத
போட்டி
நலன்களும்
ஒவ்வொரு
படியிலும்
ஆதிக்கம்
செலுத்துகிறது.
1986
செர்னோபில்
நிலைகுலைவிற்குப்
பின்னர்,
அந்த
பேரழிவு
சோவியத்
ஒன்றியத்தின்
சமூக
மற்றும்
அரசியல்
அமைப்புமுறையின்
தோல்வியை
எடுத்துக்காட்டுவதாக
அமெரிக்க
ஊடகங்களால்
உலகளாவிய
தீர்மானம்
எடுக்கப்பட்டது.
ஆச்சரியப்படுவதற்கு
இடமில்லாத
வகையில்,
அம்மாதிரியான
படிப்பினைகள்
புக்கூஷிமா
பேரழிவிலிருந்து
பெற்றெடுக்கப்படவில்லை.
இப்போது,
ஜப்பான்
பூகம்பம்
மற்றும்
சுனாமிக்குப்
பின்னர்
என்ன
எழும்பியிருக்கின்றது
என்றால்,
அது
முதலாளித்துவம்
பற்றிய
மற்றொரு
கண்டிப்பிற்குரிய
குற்றச்சாட்டாகும்.
பொருளாதாரம்,
சமூக
மற்றும்
சுற்றுச்சூழல்
என
பேரழிவிற்கு
பின்னர்
பேரழிவுற்கு
இந்த
இலாபகர
அமைப்புமுறை
தான்
பொறுப்பாகும்.
சர்வதேச
தொழிலாள
வர்க்கத்தால்
இந்த
அமைப்புமுறை
அவசரமாக
தூக்கியெறியப்படவேண்டியது
ஒருபோதும்
இவ்வாறான
ஒரு
அவசர
தேவையாக
இருந்ததில்லை. |