WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Political lessons of the battle of Wisconsin
விஸ்கான்சன்
போராட்டத்தின்
அரசியல் படிப்பினைகள்
Jerry White
23 March 2011
சுமார்
375,000
ஆசியர்கள்,
செவிலியர்கள்,
நகர தொழிலாளர்கள்
மற்றும் ஏனைய அரசுத்துறை
பணியாளர்களின் கைக்குவரும்
சம்பளத்தில் ஆழ்ந்த வெட்டுக்களைத்
திணித்ததுடன்,
அவர்களின்
கூட்டு பேரம்பேசல் உரிமைகளைப்
பறிக்கவும்,
ஆளுநர்
ஸ்காட் வால்கர் கொண்டுவந்த
"வரவு-செலவு
கணக்கு திருத்த”
சட்டமசோதாவிற்கு
ஒப்புதல் வழங்கவும்,
விஸ்கான்சன் குடியரசு
கட்சியினர் சந்தேகத்திற்கிடமான
சட்டமுறைமைகளைப் பயன்படுத்தி
இன்றோடு இரண்டு வாரங்கள்
ஆகிவிட்டது.
வால்கர்
அந்த
சட்டமசோதாவை சட்டமாக்க
கையெழுத்திட்ட இரண்டு
நாட்களுக்குப் பின்னர்,
அதாவது மார்ச்
11இல்,
மூன்று தசாப்தங்களுக்குப்
பின்னர் அமெரிக்காவில்
தொழிலாள வர்க்க போராட்டத்தின்
மிகப்பெரிய எழுச்சியைக்
கண்டிருந்த விஸ்கான்சனில்,
மாநில மற்றும் தேசிய
தொழிற்சங்கங்கள்,
ஒரு
மாதமாக நடந்து வந்த யுத்தத்தை
நிறுத்தகோரி அழைப்புவிடுத்தன.
பெப்ரவரி மத்தியிலிருந்து
மார்ச் மத்தியகாலம் வரையில்,
நூறு ஆயிரக்கணக்கான
தொழிலாளர்களும்,
இளைஞர்களும்
பாரிய ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபட்டனர்;
ஆசிரியர்கள்
பணியிட நடவடிக்கைகளில்
ஈடுபட்டனர்;
உயர்நிலை
பாடசாலைகள் மற்றும் கல்லூரி
மாணவர்களால் வெளிநடப்பு
நடத்தப்பட்டது;
மாடிசனில்
மாநில தலைமைச்செயலக கட்டிடம்
முற்றுகையிடப்பட்டது.
பொருளாதார
நெருக்கடிக்கு தொழிலாள
வர்க்கத்தை விலைகொடுக்கச்
செய்யும் நோக்கில் ஜனநாயக
மற்றும் குடியரசு கட்சியினர்
செலவினகுறைப்பு முறைகளை
நடைமுறைப்படுத்தியதோடு,
அரசுத்துறை பணியாளர்கள்
மீதான ஒரு நாடுதழுவிய தாக்குதலின்
பாகமாக அந்த புதிய சட்டம்
அவர்களால் கொண்டு வரப்பட்டது.
தொழிலாள வர்க்கத்தின்
எந்த வடிவத்தில் இருக்கும்
ஒருங்கிணைந்த எதிர்ப்பையும்
குற்றமாக்கிக் காட்டும்
முனைவின் ஒரு பாகமாக,
போராட்டங்கள் மற்றும்
கூட்டு பேரம்பேசல் உரிமை
தொழிலாளர்களிடம் இருந்து
பறிக்கப்பட்டுள்ளது.
மார்ச்
9
மாலையில்
அந்த
சட்டமசோதாவிற்கு ஒப்புதல்
வழங்க அவசரஅவசரமாக குடியரசு
கட்சியினர் ஒன்றுகூடிய போது
அம்மாநிலத்தின்
பகிரங்க
கூட்டங்கள் நடத்தும் சட்டத்தை
(Open Meetings law)
அவர்கள்
மீறினார்களா என்பதன்மீது
தீர்ப்பு நிலுவையில் இருப்பதால்,
அந்த சட்டமசோதாவை
நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி
வைக்கும் ஒரு தற்காலிக தடை
உத்தரவை கடந்த வாரம் விஸ்கான்சன்
நீதிபதி டேனி கவுன்ட்
பிறப்பித்தார்.
இதற்கிடையில்,
மாநில,
மாகாணம்
மற்றும் பெருநகராட்சியின்
அமெரிக்க கூட்டமைப்பு
(AFSCME)
மற்றும்
விஸ்கான்சன்
கல்வித்துறை கூட்டமைப்பு
கவுன்சில்
(WEAC)
ஆகிய
மாநிலத்தின் இரண்டு மிகப்பெரிய
சங்கங்களின் உள்ளூர் பிரிவுகள்,
அந்த புதிய சட்டம்
நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே
ஒப்பந்தங்களை நீடித்துக்கொள்ள,
அந்த தாமதத்தைப்
பயன்படுத்திக் கொண்டன.
வால்கரின்
வெட்டுக்களை எதிர்ப்பதற்கு மாறாக,
தொழிலாளர்கள் அவர்களின் மருத்துவநலனுக்காக செலுத்தும் காப்பீட்டு
கட்டணத்தை இரட்டிப்பாக்கவும்,
அவர்களின் ஓய்வூதியங்களுக்கான செலவில் பாதியைத் தொழிலாளர்களே
ஏற்றுக்கொள்ளவும் கோரியிருக்கும் ஆளுநரின் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் அவற்றின்
ஒப்பந்தங்களில் எழுதியுள்ளன. இந்த விட்டுகொடுப்புகளுக்குப் பிரதிபலனாக,
நகர மற்றும் பாடசாலை நிர்வாகங்கள் தொழிலாளர்களின்
சம்பளங்களிலிருந்து சங்க உறுப்பினர் கட்டணங்களை தொடர்ந்து வெட்டிக்கொள்ளவும்
ஒப்புக் கொண்டுள்ளன. தற்போதைய ஒப்பந்தங்கள் காலாவதியான பின்னர்,
இந்த வசதியைப் பயன்படுத்த முடியாதபடிக்கு வால்கரின் சட்டத்தின்கீழ்
இது தடுக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்களின்
விலைகள்,
எரிவாயு,
உயர் படிப்பு மற்றும்
ஏனைய குடும்ப செலவினங்கள்
உயர்ந்திருக்கும் நிலையில்,
இந்த விட்டுக்கொடுப்புகள்
அரசுத்துறை பணியாளர்களின்மீது
முறுக்கிப்பிழியும் ஒரு
தாக்கத்தைக் கொண்டிருக்கும்.
ஏற்கனவே அரசுத்துறை
பணியாளர்கள்,
வால்கருக்கு
முன்பிருந்த ஜனநாயக கட்சி
ஆளுநர் ஜிம் டோய்லெவால்
திணிக்கப்பட்ட,
பல
ஆண்டு சம்பள உயர்வுமுடக்கத்தாலும்
(wage freeze),
கட்டாய
விடுமுறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விஸ்கான்சன் பல்கலைக்கழக
பொருளாதார நிபுணர் ஸ்டீவன்
டெல்லர் கருத்துப்படி,
ஒரு சராசரி தொழிலாளர்
ஆண்டுக்கு சுமார்
$4000
இழப்பைச்
சந்திக்க வேண்டியதிருக்கும்.
பல
விஷயங்களில்,
க்ரீன் பே உட்பட வால்கர்
முறையிட்ட கோரிக்கையையும்விட
ஆழமான வெட்டுக்களுக்கும்
கூட தொழிற்சங்கங்கள் உடன்பட்டன.
அவற்றில் அவை ஆசிரியர்களின்
சம்பள வெட்டுக்களையும்,
அவர்களின் வகுப்பறைகளில்
மாணவர்களின் எண்ணிக்கையை
பெரியளவில் அதிகரிக்கவும்
சம்மதித்தன.
இந்த தண்டனை
ஒப்பந்தங்கள் மாதக்கணக்கில்
நீண்டிருந்த போராட்டம்
முழுவதிலும் தொழிற்சங்கங்கள்
எடுத்த நிலைப்பாட்டுடன்
பொருந்தி உள்ளன.
தொழிற்சங்கங்களால்
ஏற்பாடு செய்யப்படாமல்,
மாறாக,
முக்கியமாக
அவர்களுக்கு வெளியில்
வெடித்தெழுந்த,
எதிர்ப்பெழுச்சிகள்
வெடித்த சில நாட்களுக்குள்ளேயே,
கூட்டு பேரம்பேசல்
உரிமைகளைப் பாதுகாக்கும்
அவர்களின் இழிவான முறையீட்டைச்
செய்து கொண்டு,
AFSCME
மற்றும்
WEAC
தலைவர்கள்,
சம்பளம் மற்றும்
நலன்களில் ஆழமான விட்டுக்கொடுப்புகளை
ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்கள்.
தங்களின்
வேலைகளையும்,
வாழ்க்கைத்தரங்களையும்
பாதுகாப்பதற்காக தங்களின்
பேரம்பேசும் உரிமைகளைப்
பாதுகாக்க பெரும் தீர்மானத்துடன்
தொழிலாளர்கள் போராடி வந்த
வேளையில்,
அவர்களின்
சொந்த அமைப்பு நலன்களை,
எல்லாவற்றிற்கும்
மேலாக,
அவர்களின்
உறுப்பினர் கட்டண வருவாயைக்
காப்பாற்றிக் கொள்வது தான்
அவர்களின் ஒரே கவலை என்பதை
தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள்
தெளிவுபடுத்தினார்கள்.
இதற்கு பதிலீடாக,
“தொழிலாளர்களிடையே
அமைதியை"
ஏற்படுத்துவதிலும்,
பெருநிறுவன மற்றும்
நிதியியல் மேற்தட்டின்
கிரிமினல் நடவடிக்கைகளால்
ஏற்படுத்தப்பட்ட பொருளாதார
நெருக்கடிக்கு தொழிலாளர்களை
விலைகொடுக்கச் செய்ய
கட்டாயப்படுத்துவதில் முழு
ஒத்துழைப்பை வழங்கவும்,
அவர்கள் வாக்குறுதி
அளித்தனர்.
அந்த
போராட்டம்
முழுவதிலுமே,
அப்போராட்டத்தைத்
தணிப்பதிலும்,
எதிர்ப்பு
நடவடிக்கையாக மட்டுப்படுத்தவும்,
அனைத்து விஸ்கான்சன்
தொழிலாளர்களின் ஒரு பொது
வேலைநிறுத்தத்திற்கு
அதிகரித்துவரும் முறையீட்டை
எதிர்க்கவும் சங்கங்கள்
ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளுடன்
இணைந்து வேலை செய்தனர்.
சட்டமசோதாவைக்
கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து
மார்ச்
9ஆம்
தேதி
இரவு மாநில தலைமைச்செயலகத்தில்
ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுதிரண்ட
போது,
அங்கே
ரவுண்டானாவைச் சுற்றி ஒரு
பொது வேலைநிறுத்தத்திற்கான
முழக்கங்கள் எதிரொலித்து
கொண்டிருந்த போது,
அமைதியாக
இருக்க வலியுறுத்திய சங்க
அதிகாரிகள்,
பின்னர்
ஆசிரியர்களையும்,
அரசு
பணியாளர்களையும் அடுத்த நாள்
வேலைக்குத் திரும்புமாறு
அறிவுறுத்தினர்.
வால்கரிடம்
அவர்கள் சரணடைந்ததை மூடிமறைக்கவும்
எதிர்ப்பைச் சிதறடிக்கவும்,
சங்க அதிகாரிகள்
தொழிலாளர்களிடம்,
குடியரசு
கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைத்
திரும்பப் பெறும் ஒரு
பிரச்சாரத்திலும்,
அவர்களுக்கு
மாற்றாக ஜனநாயக கட்சியினரைக்
கொண்டு வரவும் தொழிலாளர்கள்
அவர்களின் முயற்சிகளைத்
திருப்பிக்கொள்ள வேண்டுமென்று
கூறினர்.
வால்கரின்
விட்டுகொடுப்புகள் கோரிக்கைகளிலோ
அல்லது அவரின் வரவு-செலவு
திட்டத்தில் உள்ளடங்கி இருந்த
$15
பில்லியன்
சமூக
செலவின வெட்டுக்களிலோ தங்களுக்கு
எந்த எதிர்ப்பும் இல்லை என்பதை
ஜனநாயக கட்சியினர்
தெளிவுபடுத்தியிருந்த
நிலைமைகளின்கீழ் இது நடந்தது.
உண்மையில்,
வால்கருக்கு
முன்னாள் மாநிலத்தின் வரலாற்றில்
தாங்களே ஆழமான வெட்டுக்களைக்
கொண்டு வந்ததாக ஜனநாயக
கட்சியினரே பெருமையாக
கூறுகிறார்கள்.
தேசிய
அளவில்,
வாகன தொழிலாளர்கள்,
ஆசிரியர்கள்,
மற்றும்
மத்திய அரசு தொழிலாளர்கள்
மீதான தாக்குதலை ஒபாமா நிர்வாகம்
விரிவாக்கி உள்ளது.
பணக்காரர்களுக்கு
வரிவெட்டுக்களை வழங்குவதற்காகவும்,
வோல் ஸ்ட்ரீட்
பிணையெடுப்பிற்கு தொகை
அளிப்பதற்காகவும் சமூ
செலவினங்களைச் சீவ,
அது
குடியரசு கட்சியினருடன்
இணைந்து வேலை செய்து வருகிறது.
கலிபோர்னியா,
நியூ
யோர்க்,
இலினாய்ஸ்
மற்றும் ஏனைய மாநிலங்களில்
உள்ள ஜனநாயக கட்சி ஆளுநர்களும்
அரசு பணியாளர்கள் மீது
தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்
என்பதுடன் சமூக திட்டங்களிலும்
ஆழமான வெட்டுக்களைச் செய்து
வருகிறார்கள்.
குடியரசு
கட்சியினர் சங்கங்களை
முடமாக்கவும்,
ஓரங்கட்டவும்
விரும்புகிற நிலையில்,
ஜனநாயக கட்சியினர்
தொழிலாளர் அதிகாரத்துவத்தின்
உதவியுடன் இத்தகைய தாக்குதல்களை
நடத்த விரும்புகின்றனர்
என்பது தான் வேறுபாடாக உள்ளது.
தொழிலாள வர்க்க
எதிர்ப்பை ஒடுக்குவதில்
சங்கங்களின் சேவைகளுக்கு
கைமாறாக,
ஜனநாயக
கட்சி தொழிலாளர் அதிகாரத்துவத்தின்
சட்டரீதியான நிலைப்பாட்டையும்,
நிதியியல் நலன்களையும்
பாதுகாத்துள்ளது.
அதற்கு
பதிலீடாக,
தொழிற்சங்கங்கள்
ஜனநாயக கட்சிக்கு நிதியையும்,
அவர்களின் தேர்தல்
பிரச்சாரங்களுக்கு ஆட்பலத்தையும்
அளித்து,
கட்சி
எந்திரத்தின் ஒரு முக்கிய
பாகமாக உள்ளிணைந்திருக்கும்.
விஸ்கான்சனின்
அனுபவம்,
தொழிலாள
வர்க்கத்திற்கும் குடியரசு
கட்சிக்கும் இடையில் இருக்கும்
வெறும் சமூக நலன்களின்
முரண்பாட்டை மட்டும்
வெளிப்படுத்தவில்லை,
மாறாக
ஒருபுறத்தில் தொழிலாள
வர்க்கத்திற்கும் மற்றும்
மற்றொருபுறம் தொழிற்சங்கங்களுக்கும்,
பெரு வணிக
கட்சிகளுக்கும் இடையிலான
முரண்பாட்டையும் எடுத்துக்காட்டுகிறது.
தொழிற்சங்கங்களும்,
ஜனநாயகக் கட்சியினரும்
தொழிலாளர்களின் மிக அடிப்படை
தேவைகளுக்கு நேர்எதிரான
நலன்களைத்
துரத்தி
சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு
நாகரீகமான
சம்பளத்திற்கு,
வேலை
பாதுகாப்பிற்கு,
தரமான
பாடசாலைகள்,
மருத்துவ
நலன்கள்,
வீட்டுவசதிக்கு,
மற்றும் சௌகரியமான
பணி ஓய்விற்குரிய தொழிலாளர்களின்
சமூக உரிமைகளை,
இப்போதிருக்கும்
பொருளாதார அமைப்புமுறையோடு
ஒத்துப்போகாது.
அமெரிக்கா
மற்றும் உலக முதலாளித்துவத்தின்
நெருக்கடியானது,
வர்க்க
யுத்த கொள்கைகளில் ஆளும்
வர்க்கம் எந்தமாதிரியான
திருப்பத்தை எடுத்திருக்கிறது
என்பதை அடிக்கோடிடுகிறது.
தொழிற்சங்கங்களும்,
ஜனநாயக கட்சியும்
இந்த தோற்றுப்போன அமைப்புமுறையை
ஆதரிக்கின்றன.
ஆகவே
அதன் நெருக்கடியின் சுமையைத்
தொழிலாளர்களின் முதுகில்
சுமத்த வலியுறுத்துகின்றன.
இதற்கெதிராக போராடுவதற்கு,
தொழிலாள வர்க்கம்
இந்த இலாப அமைப்புமுறைக்கும்,
அதன் அரசியல்
பிரதிநிதிகளுக்கும் எதிராக
ஒரு தொழில்துறை சார்ந்த
மற்றும் அரசியல் போராட்டத்தை
முன்நிறுத்தியாக வேண்டும்.
விஸ்கான்சனில்
மாதக்கணக்கில் நடந்த யுத்தத்தின்
போது,
தொழிலாள
வர்க்கம் போராடும்,
தியாகம்
செய்யும்,
ஐக்கியப்படும்
அதன் முழு திறனையும் தெளிவாக
காட்டத் தொடங்கியது.
வர்க்கப்
போராட்டம் தொழிற்சங்கங்களால்
செயற்கையாக ஒடுக்கப்பட்டு
மூன்று தசாப்தங்களுக்கும்
அதிகமாக போய்விட்ட பின்னர்,
அமெரிக்க தொழிலாள
வர்க்கம் மீண்டும் அதன்
வரலாற்று நிலையை அறிவித்து,
அதன் புரட்சிகர
சாத்தியத்திறனை எடுத்துக்காட்டியது.
ஆனால்,
தொழிலாள வர்க்கம்
அதன் சமூக சக்தியை ஒன்றுதிரட்டுவதற்காக,
தொழிற்சங்கங்களின்
இரும்புப்பிடியை உடைத்துக்
கொண்டு,
தொழிற்சாலைகளிலும்,
வேலையிடங்களிலும்
மற்றும் சமூகங்களிலும் புதிய,
நேர்மையான ஜனநாயக
அமைப்புகளைக் கட்டியெழுப்ப
வேண்டும்.
எல்லாவற்றிற்கும்
மேலாக,
ஜனநாயகக்
கட்சியிடமிருந்து தொழிலாளர்
முறித்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் பெரு-வியாபாரங்களின்
இரண்டு கட்சிகளுக்கும் மற்றும்
அவை ஆதரிக்கும் இந்த முதலாளித்துவ
அமைப்புமுறைக்கும் அரசியல்
மாற்றாக ஒரு பரந்த சோசலிச
இயக்கத்தைக் கட்டியெழுப்ப
வேண்டும்.
|